தாலாட்டுப் பாடவா? தமிழில் தாலாட்டுப் பாடல்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழிப்பாடல்களாகவே வழங்கி வந்து நாம் நம் தாயிடம் இருந்து பெற்ற நம் தாய்த்தமிழ் இலக்கியங்கள்.. தலைமுறைகள் தாண்டிய நம் தாய்மண்ணின் சீதனங்கள்.. நாட்டுப்புறப்பாடல் வலைகளில் தனிய�ொரு இடம் வகிக்கும் இந்தப் பாடல்களில் மண்ணின், மனிதர்களின், இயற்கை அழகின், உறவுகளின் மேன்மை உள்ளிட்ட வாழ்வியல் கருத்துகள் ததும்பி இருக்கும். அந்த வகையில் இத�ோ, என் அம்மா இந்த முறை அமெரிக்கா வந்திருந்தப�ோது அவரைப் பாடவைத்து எழுதிவைத்த தாய்மாமன் பெருமை கூறும் தாலாட்டுப் பாடல்..
அஞ்சனம் மையெழுதி அஞ்சி மாமன் பேரெழுதி க�ொஞ்சுங்கிளி ரெண்டெழுதி க�ொண்டு வந்தான் தாய்மாமன்! ஊருக்கு மேற்க ஒத்தப் பலா மரமாம் தார் உட்டுக் காய்க்கிது தாய்மாமன் வாசலிலே! கண்ணுமணி ப�ொன்னுமணி கந்தர�ோட வேலுமணி வேலெடுத்துப் பூசப்பண்ணு வேடரு ஓம் மாமன்! தங்கமே தாராவே தனிவழியா ப�ோகாதே வன்னி தட்டான் கண்டானா - உன்ன நின்னு வெல கூறிடுவான்!
38 தென்றல்முல்லை
மருதம்பாள் பெரியசாமி
நவம்பர் 2017
வள்ளினா வள்ளி மலையெல்லாம் படருவள்ளி க�ொடிப்படர்ந்த வள்ளிய�ோட நீ கூடப் ப�ொறந்தவன்! நம் தலைமுறைகளிலிருந்து அடுத்த தலைமுறைகளுக்குப் ப�ோகுமா? தெரியாது! அவசியம் ப�ோக வேண்டும்! அவசியக் கடமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய கருவூலங்கள்.. தாய்மொழி பேணுவ�ோம். நம் மண்ணின், வாழ்வியலின் மகிமைகளைக் கூறும் இதுப�ோன்ற நாட்டுப்புறப் பாட வடிவங்களையும் ப�ோற்றிப் பாதுகாப்போம்.
www.washingtontamilsangam.org
