சந்தியாராகம்

Page 1

சந்தியாராகம்

இரவின் ஆதிக்கத்தில் கருத்துப் ேபாயிருந்த வானம் , மங்கிய ெவளிச்சத்துடன் ெவளுக்க ஆரம்பிக்க அதுவைரயிலான நிசப்தம் ஊர்க் குருவிகளால் கைலய ஆரம்பித்தது. அங்ெகான்றும் இங்ெகான்றுமாய் மின்மினிப் பூச்சிகெளன வீட்டின் முன்புற விளக்குகள் ெவளிச்சத்ைத சிந்திக் ெகாண்டும், பல ெதருக்களில் வாசல் ெதளிக்கும் சத்தங்களும் இனிேத ஆரம்பமாகி இருந்தன .அவ்வளவு ேநரமாய் தூங்கிக்ெகாண்டிருந்த சூரியன் , வட்ட முகத்தில் ெசவ்ெவாளி காட்ட ஆயத்தமாகிக்ெகாண்டிருந்தது. “மணி 6”!! மூன்று நாட்களாய் விஷக் காய்ச்சல் , சீதாலஷ்மிைய பாடாய்படுத்தி இருந்ததால் வழக்கம் ேபால் அன்ைறய தினமும் அவள் வீட்டில் சற்ேற தாமதமாக கதவு திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ேபால் இல்லாமல் இன்று உடலுக்கு சற்ேற ெதம்பு வந்ததால், மகள்கைள எழுப்பாமல் அடுப்பங்கைரயில் பாத்திரங்கைள உருட்டிக் ெகாண்டிருந்தாள். மணித்துளிகள் உருண்ேடாட,

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 1


சந்தியாராகம்

“அடிேய!! சந்தியா!! , தூங்குனது ேபாதாதா!! , உனக்கு? இன்ைனக்கு நாேன எல்லா ேவைலயும் பாத்துக்குேறன், நீ எந்தரிச்சு ஒழுங்கா சீக்கிரம் ெகளம்புற வழியப் பாரு, ெரண்டு நாளு சீக்கிரம் எந்திருச்சதுக்கு , நாலு நாைளக்கு தூக்கமா உனக்கு, என்று இைரந்தாள் . ஏற்கனேவ அடித்த அலாரத்ைத ஆஃப் ெசய்து விட்டு ேபார்ைவக்குள் புகுந்தவளுக்கு, அம்மாவின் சத்தம் ெமாத்தமாய் அவைள எழுப்பிேய விட்டது. ஒட்டிக்ெகாண்ட தன் இறகுகைள , பட்டாம்பூச்சி ெமல்லமாய் விரிப்பது ேபால், மூடிய இைமகளுக்குள் கண்மணிகள் இடவலமாய் நகர, பிைறநிலா ெநற்றி சுருங்கி, தூக்கம் வழிந்த முகத்ைத ேபார்ைவைய விட்டு விலக்கினாள் சந்தியா, ஏம்மா!!! , உனக்கு இந்தக் ெகாலெவறி? , பாவம், பிள்ள தூங்கட்டும்னு ெகாஞ்ச ேநரம் விடுறியா?, 10 மணிக்கு ேபாறதுக்கு இப்ேபாேவ எந்த்ரிக்கனுமா என்ன? என்றவாேற கைலந்து கிடந்த தைல முடிைய சுருட்டி ேஹர் கிளிப்பிங்கில் உள்ேள திணித்து விட்டுக் ெகாண்ேட எழுந்து உட்காந்தாள். “ஆமாண்டி, இன்னும் ெகாஞ்ச ேநரம் ெகாஞ்ச ேநரம்னு, விட்டா, நீ மத்தியானம் வைரக்கும் தூங்குவ, சின்னவள கெரக்ட்டா ஸ்கூலுக்கு அனுப்பனும், கூட மாட ஒத்தாைசயா இருந்தா எனக்கு ேவல சீக்கிரம் முடியும்ல, நான் படுத்துக் கிடந்தாதான், நீ வீட்டு ேவல பாப்பியா,?

“ஐேயா, சீதாலச்சு, அதுக்கு ெசால்லல, எப்பிடியும் ெகாஞ்ச வருசந்தான் உன் கூட இருக்க ேபாேறன் , அதுவர இந்த வீட்டு ேவைலெயல்லாம் ெதாட விடாம என்ன வளத்துடு!!, என்ன சரியா!!”, ெசால்லிக்ெகாண்ேட எழுந்து வந்து,

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 2


சந்தியாராகம்

தன் அம்மாவின் கன்னத்ைதக் கிள்ளிக் விட்டு மீண்டும் படுக்ைகக்கு ெசன்று பாய் தைலயைண சுருட்டி ைவத்தாள் சந்தியா. “இந்த டூத் பிரஷ் எங்கதான் ேபாய் ெதாைலயுேமா, இெதல்லாம் ஒழுங்கா எடுத்து ைவக்க மாட்டியா, சீதாலச்சு நீ, வர வர உனக்கு ேசாம்ேபறித்தனம் ஜாஸ்தி ஆய்டுச்சு!!” நாங்க ேபாட்டது ேபாட்டபடி கிடக்குறத எடுத்து கெரக்டா ைவக்க ேவண்டாமா, என வழக்கம் ேபால் அம்மாைவக் சீண்டிக் ெகாண்ேட சந்தியாவின் விடியல் அன்றும் கலகலப்பாக ஆரம்பித்து விட்டது. கைடசியில் டூத் பிரஷ்ைஷ ேதடிக் கண்டுபிடித்து, பல் விளக்க ஆரம்பித்தாள்!! “ெசால்லுவடி ெசால்லுவ!! , ெதனமும் ேதய்ச்சுட்டு ைவக்குற இடத்துல்ல வச்சாத்தாேன, இஷ்டத்துக்கு தூக்கி எரிஞ்சா, காக்கவா ெகாண்டு வந்து ைகல ெகாடுக்கும்...”உனக்ெகல்லாம் டூத்ப்ரஷ் லாயக்கில்ல, ைகய வச்சு விளக்கி பழகிக்ேகா, ேலட்டா என்திரிச்சுட்டு ேபச்சப் பாரு” குளித்துவிட்டு ஸ்கூல் யூனிபார்மில் ெவளிேய வந்த கயல்விழி , அைதக் ேகட்டு களுக்ெகன்று சிரித்து விட்டு, “என்னக்கா , காலாங்காத்தால அம்மாட்ட சுப்ரபாதம் ேகட்டுட்டு இருக்குறியா,” என நக்கலாய் ேகட்டு விட்டு சின்னதாய் சாமி ேபாட்ேடாக்கள் நிறுத்தி ைவக்கப் பட்டிருக்கும் நடுவீட்டு அலமாரிக்கு வந்து ேசர்ந்தாள்.அதுதான் அவர்களது பூைஜயைற. ஆடம்பரம் இல்லாமல் மூன்று ேபருக்கு ஏற்றார்ேபால் அந்த வீடு, நடுத்தரக் குடும்பத்தின் கஷ்டங்கைள ெசால்லாமல் ெசால்லிக்ெகாண்டு இருந்தது. “ஏய் சின்ன வாலு, பிளஸ்டூ முடிக்கிற வைரதான் உனக்ெகல்லாம் மரியாைத, அதுக்கு அப்புறம் பாரு, உனக்கும் இேததான்!!”, “காக்காலாம் ெகாடுக்காது, என் அம்மா ெகாடுப்பா!!, சரி எனக்கு இதுக்கு ேமல காது ேகக்காது , ேசா , நீ அர்ச்சைன பண்றைத நிறுத்திட்டு உன் ேவைலய பாரு லச்சு, நான் குளிக்க ேபாேறன்”, என சத்தத்ைதக் ெகாடுத்து விட்டு பாத்ரூைம ேநாக்கி நைடேபாட்டாள் சந்தியா.

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 3


சந்தியாராகம்

“அம்மா எனக்கு ேலட் ஆய்டுச்சு பாரு , இன்னுமும் நீ லஞ்ச் ேபக் பண்ணாம இருக்குற , அதற்குள் சின்னவள் கயல்விழியின் குரல் , சிணுங்கலாய் ஒலித்தது. இேதா ஆய்டுச்சுடா கண்ணு, அஞ்ேச அஞ்சு நிமிஷம்தான், ெகாஞ்சம் ெபாறுத்துக்ேகா, இந்த ேகாஸ் மட்டும் ெகாஞ்சம் ெவந்துட்டா, உனக்கு எல்லாம் ெரடி பண்ணிக் ெகாடுத்துடேறன், அதுக்குள்ள நீ சாப்ட்டுக்ேகா, “சரிம்மா!! என குரல் ேகட்க, சூடான ஆவி பறக்கும் இட்லிைய, அவசரத்தில் தாளிக்காத ெவள்ைள ெவேளரன ேதங்காய் சட்னியுடன், எப்ேபாதும் அவள் சாப்பிடும் பூக்ேகாலம் ேபாட்ட தட்டில் எடுத்துக் ெகாண்டு கயல்விழியிடம் வந்தாள் சீதாலஷ்மி. “எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டீல, கயல் கண்ணு, நீ ஸ்கூல்ேபக் எல்லாம் எடுத்து ெரடியா இரு, நான் அஞ்சு நிமிசத்துல ேபானதும் டிபன் பாக்ஸ் ெகாண்டு வர்ேறன்” , ெசால்லிவிட்டு அடுப்பங்கைரக்கு நைட கட்டினாள். ெகாடுத்த நாலு இட்லிகளில் இரண்ைட மட்டும் விழுங்கிவிட்டு , மிச்சத்ைத அடுப்பங்கைர திண்டில் ைவத்து சின்னவள் விட்டு ைக கழுவ ெசன்றாள்.

சிற்சில மணித்துளிகளில் சைமயல் முடிந்ததும் டிபன்பாக்ஸ் மதிய சாப்பாடால் நிரப்பப்பட்டு கயல்விழி ைகக்கு வந்ததும் வாங்கிக்ெகாண்டு கிளம்பினாள். “பாய் ம்மா , பாய் க்கா நான் ேபாய்ட்டு வேரன்” , ெவளிேய ெசன்று ைசக்கிைள எடுத்துச் ெசல்லும் முன் அவள் ெகாடுத்த சத்தம், இங்ேக உள்ேள இருக்கும் லஷ்மிக்கு எட்டவில்ைல என்றாலும், வழக்கம் ேபால், ெசால்ல ேவண்டியைத ெசால்லினாள்,

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 4


சந்தியாராகம்

“பாத்துப் ஜாக்கிரைதயா ேபாம்மா கயல் கண்ணு “!!

ேநற்றிரவு மைழக்கு இன்று காைலயில் பூத்த மலராய், ெசாட்டும் ஈரம் தைரைய நைனக்க, தைல துவட்டிக் ெகாண்ேட சந்தியா, அடுப்பங்கைரக்கு நுைழந்தாள், அதுவைர அவைளப் பின் ெதாடர்ந்த சீயக்காய் வாசம் வாசேலாடு ெதாைலந்து, அடுப்பங்கைர ேகாஸ் ெபாரியலின் வாசம் அவள் மூக்ைக துைளத்தது. “என்னம்மா இன்ைனக்கு ெபாரியல் வாசம், அதிசயமா ஆைளேய தூக்குது , அப்படி என்னத்த ேபாட்டு வச்சிருக்குற“ “அதான் சாப்பிட ேபாறல்ல, கண்டுபிடிச்சுக்ேகா நான் ெபத்த ெசல்வேம, இது இருக்கட்டும், இன்ைனக்கு நீ நல்லபடியா ெசலக்ட் ஆகிடனும், சரியா !!” எத்தைனேயா தடவ ஏமாந்து ேபாயாச்சு, இந்த வாட்டியாச்சும் இந்த வீட்டுக்கு விடிவுகாலம் வரணும்னு சாமியக் கும்பிட்டுட்டு நல்லபடியா இன்டர்வியூக்கு ேபாயி ேவைலயும் ைகயுமா வரணும்”

ஐேயா, அம்மா இதுக்கு முன்னாடி மாதிரி கிைடயாது இந்த இன்டர்வியூ , இதுல உன் ெபாண்ணு ஸ்ட்ராங் , ேசா ..இந்த ேவைலய வாங்கி காட்ேறன் , பாரு நமக்கும் நல்ல ைடம் ஸ்டார்ட் ஆய்டும் ..!! என்னேமாடி!! , எப்பிடியாவது உனக்கு ேவைல கிைடச்சுட்டா , நம்ம கஷ்டம் தீரும், எத்தன நாள் இப்படிேய கடன் வாங்கிேய சமாளிக்க, அதும் இல்லாம அடுத்த மாசம், கடனுக்கு வட்டி ேகட்டு எல்ேலாரும் வந்து வாசல்ல நிக்க முன்னாடி, நாேன ேபாய் ெகாடுத்துடணும், ஒன்னுக்கு ெரண்டு ெபாண்ணா ெபத்துட்டு, அந்த மனுஷன் பாதிேல ேபாய் ேசர்த்துட்டார், சும்மா ேபானாலும் இவ்வேளா கடன ேவற நம்ம தைலல கட்டிட்டு ேபாய்ட்டார். என்ன பண்ண , நம்ம தல விதி , ஆண்டவன் அப்பிடி எழுதிருக்கான்.” என்று குடும்பக் கைதைய ஆரம்பிக்க,

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 5


சந்தியாராகம்

“ஐேயா!!! மறுபடியுமா .. ேபாதும்மா .நிப்பாட்டு.. அதான் ெசால்ேறன்ல இன்ைனக்ேகாட இதுக்கு முடிவு!!..இனியாச்சும் மனசப் ேபாட்டு வருத்திகிட்றத விடு,” “சரி சீக்கிரம் சாப்பாடு ேபாடு.. சாப்ட்டு நான் ெகளம்புேறன்.முதல்ல இந்த டாபிக் விட்டு நீ ெவளில வந்துடு, நான் ெகளம்பும் ேபாது கண்ணுல தண்ணி ைவக்காத..!!” “ஹ்ம்ம் ..பாக்கலாம் ..ெபாழுது சாஞ்சா ெதரியும்ல அந்த ஆண்டவன் என்ன எழுதி இருக்கான் நம்ம வாழ்க்ைகலன்னு”, என்றவாறு..சாப்பாடு அள்ளிைவத்தாள்!! சீதாலஷ்மி, ஒரு நடுத்தரக் குடும்பத்ைத, குடும்பத்தைலவன் இல்லாமல் தனி ஒருத்தியாய் தடுமாறி நிர்வகித்துக் ெகாண்டிருப்பவள். கணவைன ஒரு விபத்தில் பறிெகாடுத்து அதற்கு பின் குடும்ப சூழ்நிைல மிகவும் ெநாடித்து ேபாய் விட, ெவறும் உறவுகள் என்ற ெபயரில் உறவினர்களும் பதினாறாம் நாள் காரியம் முடிந்தவுடன் கழண்டு விட ..ஆரம்பம் ஆனது சிவப்பு நிற வறுைம, திக்குத் ெதரியாமல் தவித்த குடும்பத்திற்கு அவள் கணவன் விபத்தில் இறந்ததால் கிைடத்த இழப்பீட்டு ெதாைக ஓரளவு நடுத்தர வாழ்க்ைக நடத்தும் அளவிற்கு ேபருதவியாய் இருந்தது, எப்படிேயா அந்த ெதாைகயிலும் ேமலும் வங்கிக் கடன்கைள வாங்கியும், மூத்த மகள் சந்தியாைவ, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க ைவத்து விட்டாள். எப்படிேயா தன் மகள் சம்பாதித்து இந்த குடும்பத்தின் நிைல உயரேவண்டும் என்பேத இவளின் கனவு. ேமலும் சின்னவள் படிப்பும் அடுத்து இருக்கிறது, பிளஸ்டூ முடித்தவுடன் அவைளயும் பட்டப்படிப்பு படிக்க ைவத்ேத ஆக ேவண்டும் என்ற முடிவிற்கும் சந்தியா கண்டிப்பாக ஒரு ேவைலயில் ேசர்ந்ேத ஆகேவண்டும். அதுவும் இந்த மாதத்தில். இவளும் சும்மா வீட்டில் இருக்க வில்ைல ஒரு சூப்பர் மார்ெகட்டில் ேவைல பார்க்கிறாள், சம்பளம் ெசால்லிக்ெகாள்ளும் அளவிற்கு ெபரிதாய் இல்ைல என்றாலும் ஓரளவு ேபாதுமானதாய் இருந்தது.

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 6


சந்தியாராகம்

காைல ேவைளயில் இட்லி சாப்பிட பிடிக்காது என்பதால், சாம்பார் சாதம், ேகாஸ் ெபாரியல் தான் சந்தியாவிற்கு இன்ைறய காைல உணவு, இன்டர்வியூ பற்றிய சிந்தைனயிேல அவளும் அம்மாவும் சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். இரண்டு ேபரும் கிளம்ப தயார் ஆனார்கள். அவளது இன்டர்வியூ ேபாகும் கம்ெபனி, லஷ்மி ேவைல ெசய்யும் சூப்பர்மார்க்ெகட் வழி என்பதால், அம்மாவும் மகளும் , அரட்ைட அடித்துக் ெகாண்ேட, அந்த முருகன் ேகாவில் பஸ் ஸ்டாப் வந்து ேசர்ந்தனர்.

மல்லாந்து படுத்ததில் முகத்தில் ெகாஞ்சமாய் சூடு பரவ, சிறிதாய் ேபார்ைவைய விலக்கி பார்த்தான் அர்ஜுன், கண் கூச ைவத்தது ,9.30 மணி ெவயில். அைர கண்ணுடன் பக்கத்தில் இருந்த ெசல்ேபானில் மணிைய பார்க்க, அலறி அடித்து எழுந்து உட்காருகிறான். மறுபடியும் ெசல்ேபானில் பார்ைவ ேபாக நிைறந்து கிடக்கும் குட் மார்னிங் ெமேசஜ்கைள, எக்ஸிட் ெகாடுத்து விட்டு.. படுக்ைகைய சுருட்டிக்ெகாண்டு மாடியில் அந்தபுறம் இருக்கும் அவனது அைறக்குள் ெசல்கிறான்.

“ேடய் !!, சூனியம் பிடிச்சவேன, உன்ட்ட என்ன ெசால்லிட்டு ேநத்து ைநட் படுத்ேதன் , சீக்கிரம் எழுப்பி விடச் ெசான்ேனனா இல்ைலயா!! , இப்ேபா இவ்ேளா ேநரம் தூங்க விட்டு ேவடிக்க பாத்ருக்க” , என்று ேவைலக்கு ெசல்ல கிளம்பித் தயாராக இருந்த, அவனது நண்பன் பாலாைவப் பார்த்துக் கத்தினான் அர்ஜுன்.

“ெசால்லுவடி ெசால்லுவ, எழுப்பலன்னு ...

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 7


சந்தியாராகம்

தண்ணி ஊத்தாத ெகாறதான் , அைதயும் ெசஞ்சிருப்ேபன் , அப்புறம் அதுக்கும் உன்ட்ட எவன் திட்டு வாங்குறது , அதுக்கு இதுேவ ெபட்ெடர்னு தான் விட்டுட்ேடன், ஒரு மனுஷன் இப்படியா தூங்குவான் தட்டி எழுப்பினாலும், ேபாடா ேபா , என்ட சண்ைட ேபாடல்லாம் உனக்கு ைடம் இல்ல, பத்து நிமிஷத்துல ெகளம்பப் பாரு, நான் அந்த கம்ெபனில ஒரு மாதிரி ேபசி வச்ருக்ேகன், உன் வாயக் ெகாஞ்சம் குைறச்சுகிட்டு இன்டர்வியூல ஒழுங்கா பதில் ெசால்லு, மத்தெதல்லாம் நான் பாத்துகிேறன், மவேன இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ், பாத்துக்க” ... என்று பதில் ெசால்லி விட்டு பாலா படிகளில் இறங்க ஆரம்பித்தான் .

ேபாடா, ேடய் ேபாடா!!! ..இப்ேபா அஞ்சு நிமிசத்துல, இந்த அர்ஜுன் எப்பிடி அங்க ேபாய் நிக்கான்னு மட்டும் பாரு என்று பாலாவின் தைல மைறயும் சவால் விட்டு அதில் ெஜயித்தும் விட்டு பஸ்ஸ்டாப் வந்து ேசர்ந்தான். ெசாந்த ஊரில் படித்து முடித்து விட்டு, இப்ேபாது இந்த நகரத்தில் வந்து தங்கி ேவைல ேதடிக் ெகாண்டிருக்கும் தமிழ்நாட்டின் சில ஆயிரக்கணக்கான இைளஞர்களில் அர்ஜுன் ஒருவன், படித்தது கிராமப்புற இன்ஜினியரிங் கல்லூரி என்பதால் , ஆங்கிலம் அவனுக்ேக ெபரிய தைலவலி ெகாடுத்தது, ஓரளவு வசதி இருந்ததால் அவனுக்கு வீட்டில் கஷ்டம் என்ெறல்லாம் இல்ைல, ஊரில் அவனது அப்பா, இரண்டு ெபரிய ைரஸ்மில்கைள ெசாந்தமாக இயக்கிக் ெகாண்டிருப்பவர், படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பதால் இந்தப் ெபரு நகரத்திற்கு வந்தாக ேவண்டிய சூழ்நிைல, ெசன்ைன ேபான்று ெபரிய ெபரிய சாப்ட்ேவர் கம்ெபனிகள் இல்ைலெயன்றாலும் ஓரிரு கம்ெபனிகள் இயங்கிக் ெகாண்டிருப்பதால் இங்ேக வந்து நண்பனுடன் தங்கி ேவைல ேதடுகிறான்.

ஆனால் அங்ேக அவனது ேநரம் ஒரு வைல விரித்திருந்தது.

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 8


சந்தியாராகம்

ெவறும் ேநரம் மட்டுமல்ல , அது அவன் வாழ்ைகையேய திருப்பப் ேபாகும் ெகாண்ைட ஊசி வைளவு என அவனுக்கு ெதரிந்திருக்க வாய்ப்பு இல்ைல.

மீண்டும் இைசக்கும்...

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 9


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.