வலைத்தமிழ் பிப்ரவரி, 2020

Page 14

பதிப்பகத்தார் - Notion Press, விநிய�ோகம்SMS Publications, வெளியிடப்பட்ட வருடம்ஆகஸ்ட் 2018 ஆளுமை, அகங்காரம், க�ோபம், ஆக்ரோஷம், உயர்வு மனப்பான்மை என்ற குணங்கள் க�ொண்ட இளம் தொழிலதிபர் ஒருவன் விதி வசத்தால் அமைதியான, ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் என்ற பந்தத்தில் தன்னோடு இணைத்து, வாழ்க்கையின் பாதையைச் சமபங்காகப் பகிர்ந்து வாழ நேர்ந்தால்? கனவிலும் நினையாத காதல் என்ற அழகான நுண்ணுணர்வால் ஈர்க்கப்பட்டு மனைவிக்காக உருகத் துவங்கியவனின் ஆழ் மனதில் அரும்பியிருந்த காதலை வெளிப்படுத்த இயலாது தவித்தவன், தன் மலரினும் மெல்லிய மனையாளிடம் தன் இதயத்தைத் திறந்தானா? விதி தங்களின் மணவாழ்க்கையைச் சூறாவளி ப�ோல் சுழற்றியடித்தாலும், காதலில் திளைத்த இரு உள்ளங்களும் காதலையே மருந்தாக மாற்றி, ஆழ் கடலின் அமைதி ப�ோல் தங்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க, விதி மீண்டும் தன் க�ோரக் கரங்களைக் க�ொண்டு அந்நியன் ஒருவனால், அழகிய இல்லறத்திற்குள் தங்களது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கும் தம்பதியினரின் வாழ்க்கைப் பாதையைச் சிதைக்க நினைத்தால்? ஆக்ரோஷமும், ஆவேசமும், சீற்றமும் ஒருங்கிணைந்த இளம் கணவனின் இருத்ரதாண்டவத்தில் கேடு நினைத்தவனின் தலை எழுத்து மாற்றி எழுதப்படுமா? எத்தகைய இரும்பு மனிதனின் இதயத்தையும் ஊடுருவிச் செல்லும் வலிமை வாய்ந்த காதலை அடிப்படையாகக் க�ொண்ட தன் வாழ்க்கையை அவன் காப்பாற்றுவானா? 3. கணவனே கண்கண்ட எதிரி! (த�ொகுதிகள் - 2) பதிப்பகத்தார் JLine Publications வெளியிடப்பட்ட வருடம்- 2019 குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமே நான் என்று வலம் வரும் நமது துறுதுறு நாயகனின் காளைப் பருவத்தில், புயலாய்ப் பிரவேசிக்கும் மங்கையவளின் கதை இது.. எதிரும் புதிருமான சந்திப்புக்கள் ம�ோதலாய்

14 பிப்ரவரி 2020

உருவாகி இனி சந்தித்துக் க�ொள்ளாதிருப்பதே நலமென்னும் நிலையில், எழுதிச்செல்லும் எனது கைகள் மாறும�ோ என்பது ப�ோல் திருமணப் பந்தத்தில் இணைத்து வைத்து தன் விளையாட்டைத் துவங்குகிறது விதி.. கணவனாய் கை க�ோர்த்திருப்பவனின் அன்பு அல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருக்கும் இதயத்தில், மெல்லியலாளின் காதல் தென்றலாய் வருடத் துவங்கும் நேரம், தெய்வமாகத் த�ொழப்பட வேண்டிய கணவன் எதிரியாய் உருமாறியது ஏன�ோ? நல்லறமாக வேண்டிய இல்லறம் அடங்காத காழ்ப்புணர்ச்சியையும் தீராத வெறுப்பையும் மட்டுமே பாரமாய்ச் சுமந்திருக்கும் கணவனின் இதயத்தினால் மாயையாய் மாறிப் ப�ோனத�ோ? தெய்வமாக இருக்க வேண்டிய கணவன் எதிரியாக மாறிப் ப�ோனதில் வதைபட்டவளின் மெல்லிய இதயத்தில் அரும்பிய காதல், அகங்காரம், சீற்றம் என்ற கட்டுக்களைத் தனக்குள் இட்டிருந்த கணவனின் இதயத்தை வென்றதா? காலனாய் ஊடுருவிய கயவனிடம் இருந்து தீயதில் தங்களின் வாழ்வு சுழன்று சிக்காமல், ச�ொர்க்கமாய்த் தன்னவளை மீட்டெடுத்தானா எதிரியாய்ப் ப�ோன அவளது மணாளன்? ‘கணவனே கண்கண்ட எதிரி!’ கவிதையாய்ச் ச�ொல்லும் இவர்களின் காதலை! 4. குருக்ஷேத்திரம்! (த�ொகுதிகள் - 4) பதிப்பகத்தார் JLine Publications வெளியிடப்பட்ட வருடம்- 2019 த�ொழில் என்ற உலகத்தினுள் வேகத்திற்கு ஒருவன், விவேகத்திற்கு மற்றொருவன் என்று ஆட்சி புரிந்து க�ொண்டிருக்கும் இரட்டைச் சக�ோதரர்களை, ஆளுமை, அபார அறிவாற்றல், ஆக்ரோஷம் என்ற குணங்கள் க�ொண்ட, விவேகத்தையும் வேகத்தையும் ஒருங்கே கலந்து பிறந்திருக்கும் ஒருவன் பகைவர்களாக எண்ணித் த�ொழில் ப�ோர் புரிய நேர்ந்தால்? மறைமுகத் த�ொழில் யுத்தத் தந்திரங்களாலும், அபாயகரமான வியூகங்களாலும் தங்கள் எதிரியைக் குறி தவறாது அடித்து வீழ்த்தி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் க�ொண்டிருக்கும் வேளையில், த�ொழில் பகை குடும்பப் பகையாய் மாறி இரு குடும்பத்தின் இளம்பெண்களையும் பகடையாக்கியதில் விளையும் விபரீத தருணங்களின் க�ோர்வையே இந்தக் கதை.. www.Magazine.ValaiTamil.com


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.