வலைத்தமிழ் பிப்ரவரி, 2020

Page 1

1

பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


KADAMBAVANAM Ethnic Resort & Cultural Centre Madurai Natham road, Parali, Madurai,Tamil Nadu, India. +91 9500954090/94 www.kadambavanam.in Recognized by INCREDIBLE INDIA as "The Best Rural Tourism Project" in Tamil Nadu 2

பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


தமிழ்ச் சமூகம் இன்று வளர்ச்சி பெற்று உலகெங்கும் த�ொழில்துறைகளில் மேல�ோங்கி நிற்பது மிகப்பெரிய மாற்றமாகும். அடுத்த தலைமுறையினர் மேலும் த�ொழில்துறையில் முன்னேறி வேலை க�ொடுக்கும் சமூகமாக மாறுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும். தமிழகத்தைப் ப�ொறுத்தவரை பத்து க�ோடி பேர் வசிக்கும் மிகப்பெரிய மக்கள்தொகை க�ொண்ட சந்தையாக விளங்குவதால் பிறமாநில ந�ோக்கி

வரும்

தீர்வுகாணும் மேலும்,

நிலையில்,

தமிழகத்தில்

த�ொழில்

தமிழ்நாட்டின்

வணிகர்களும், பிறநாட்டுத் த�ொழில்களும் இந்த சந்தையை புதிய

சிந்தனைகளை எந்த

புதிய

கண்டுபிடிப்புகளை

சமூகப்பிரச்சினைகளுக்குத்

ஊக்குவிக்கவேண்டியது

கண்டுபிடிப்பு

சிந்தனை

அவசியமாகிறது.

வெளிவந்தாலும்

அவற்றை

ஆவணப்படுத்தி, அறிஞர் குழுவினர் ஆராய்ந்து த�ொழிலாக மாற்ற உரிய ஆல�ோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், தமிழ்நாட்டில் அவசியம்.

சிறு

முதலீடுகளையும்

கிடைக்கச்செய்யும்

ஒரு

கட்டமைப்பு

தமிழக அரசின் சிறுத�ொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் பலவற்றைப்

பயன்படுத்தி இதை நடைமுறை சார்ந்ததாக மாற்றவேண்டிய அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இதுப�ோன்ற கண்டுபிடிப்பு கண்காட்சிகளை நடத்தி அவற்றைத் த�ொழிலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடவேண்டும்.

ஆங்காங்கே சில அமைப்புகள் இவற்றைச் செய்துவந்தால்,

அதை விரிவுபடுத்தி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் க�ொண்டுசேர்ப்பது அவசியமாகும். த�ொழில்துறை வளர்வது வேலைவாய்ப்பு சிக்கலை ஓரளவு மட்டுமே ப�ோக்கும். முழுமையான தீர்வுக்குக் கிராமத் தன்னிறைவு , சுயச்சார்புத் திட்டங்களை உருவாக்கி விவசாயம், நெசவு , மீன்பிடித்தல், குடிசைத்தொழில்கள் என்று அனைத்திற்கும்

புத்துயிர் க�ொடுப்பது நல்ல பலனை அளிக்கும்.

அரசு, த�ொழிலதிபர்கள், கல்விக்கூடங்கள் இணைந்து வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு ஒரு சரியான நீண்டகாலத் தீர்வுத் திட்டத்தை வகுப்பது இன்றைய அவசியத் தேவையாகும். வாழ்க தமிழ்... மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். அன்புடன்,

ச.பார்த்தசாரதி,

ஆசிரியர்.

Magazine@ValaiTamil.Com

www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020

3


உங்களுக்குத் தெரியுமா? பிறந்தநாளைத் தமிழில் க�ொண்டாடுவ�ோம்..

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன்னாட்டு மாத இதழ்

ஆசிரியர்

ச.பார்த்தசாரதி ஆசிரியர் குழு

சுபா காரைக்குடி

நீண்ட நீண்ட காலம் என்று த�ொடங்கும் தமிழ் பிறந்த நாள் பாடல் மூன்று க�ோடி பேருக்கு மேல் பார்த்து இன்று தமிழக அரசின் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பிலும், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகப் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. QR Code

நியூ ஜெர்சி, அமெரிக்கா

கலையரசி சிவசுந்தரபாண்டியன் மிச்சிகன், அமெரிக்கா

நீச்சல்காரன்

மதுரை, இந்தியா

இரமா ஆறுமுகம் டெலவேர்,அமெரிக்கா

தேவி அண்ணாமலை இலினாயிஸ்,அமெரிக்கா

URL: www.youtube.com/watch?v=6n3tXhytP8I Search “Tamil Birthday Song”

நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்.. நூல்: “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்” வெளியீடு: தமிழியக்கம் இணையத்தில் வாங்க :

www.eStore.ValaiTamil.com

ஆரூர் பாஸ்கர்

ப்ளோரிடா,அமெரிக்கா

முனைவர்.சித்ரா மகேஷ் டெக்சாஸ், அமெரிக்கா

விஜய் சத்யா

வெர்ஜீனியா,அமெரிக்கா

பன்னாட்டு ஆசிரியர் குழு ராஜா வேணுக�ோபால், இரா.ராஜராஜன்,

அமெரிக்கா

இந்தியா

கீதா இரவிச்சந்திரன்,

சிங்கப்பூர்

முனைவர்.பாக்கியலட்சுமி வேணு, விஜய் சிங்,

ஆஸ்திரேலியா

விக்ரம் சதீஷ்,

தமிழில் எழுத்துப் பிழைதிருத்தி பயன்படுத்துகிறீர்களா?

ச�ௌதிஅரேபியா

ஹாங்காங்

பதிப்பாளர்

வலைத்தமிழ்.காம்

www.ValaiTamil.Com To Read all the Magazine: www.Magazine.ValaiTamil.com

Register your interest to get a printed copy at

www.Magazine.ValaiTamil.com

E-Mail: Magazine@ValaiTamil.com www.Youtube.com/ValaiTamil www.Youtube.Com/ValaiTamilTV www.Facebook.com/ValaiTamilMagazine இதழ் வடிவமைப்பு

இரா.அரவிந்தன் Email: Designer@ValaiTamil.com

4

பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


உலகெங்கும் ப�ொங்கல் விழா க�ொண்டாட்டம் உலகெங்கும்

பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநிற்பதுடன், தங்கள் ம�ொழி, கலாச்சாரத்தை மறந்துவிடாமல் அங்குள்ள மக்களுடன் அரசு பிரதிநிதிகளுடன் இணைந்து மகிழ்ச்சியுடனும் மண்

மனம் மாறாமல், தமிழ் உணர்வுடன் “தமிழ்மொழி மற்றும் மரபுத் திங்களாக” தமிழர் திருநாளைப் ப�ொங்கல�ோ ப�ொங்கல் என்று முழக்கமிட்டுக் க�ொண்டாடி பெருமை சேர்க்கிறார்கள். வலைத்தமிழ் பார்வையில் வந்த சில தமிழ்ச்சங்கங்களின் ப�ொங்கல் விழா அறிவிப்புகள்..

சிகாக�ோ தமிழ்ச்சங்கம்

க�ொரியத் தமிழ்ச்சங்கம்

அட்லாண்டா தமிழ்ச்சங்கம் www.Magazine.ValaiTamil.com

நியூஜெர்சி தமிழ்ச்சங்கம்

சார்லட் தமிழ்ச்சங்கம்

பிப்ரவரி 2020

5


மினச�ோட்டா தமிழ்ச் சங்கம்

மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் அமைப்புகள்

பாரதி தமிழ்ச்சங்கம்

தமிழ்ச் சங்கம் ப�ோபால்

தைவான் தமிழ்ச்சங்கம் தமிழ் மக்கள் மன்றம், மாசச்சூசெட்ஸ்

ஜப்பான் தமிழ்ச்சங்கம்

6

பிப்ரவரி 2020

நியூஜெர்சி தமிழ்ப்பேரவை

குவைத் தமிழ்ச் சங்கம்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

www.Magazine.ValaiTamil.com


உங்கெங்கும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழர் திருநாளை "தமிழ்மொழி மற்றும் மரபுத் திங்களாக"

க�ொண்டாடி

மகிழ்கிறார்கள்.. சில நாடுகள்.. மாநிலங்களின் மக்கள் பிரதிநிதிகளின் அறிவிப்புகள்.

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட மரபுத் திங்கள்

ஜனவரி மாதத்தைத் தமிழ் ம�ொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவித்து பெருமைப்படுத்தினார் வடக்கு கர�ோலினா மாநிலத்தின் www.Magazine.ValaiTamil.com

அமெரிக்காவின் மினச�ோட்டா மாநிலத்தில் ஆளுநர் (GOVERNOR) திரு.டிம் வால்ஸ் அவர்கள் கையெழுத்திட்ட ‘தமிழ் ம�ொழி மற்றும் மரபுத் திங்கள்’ -2020

கனடா பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் (TAGDV)

அமெரிக்காவின் டல்லாஸ் கவ்பாய்ஸ் அணியின் தலைமையகமாக மற்றும் அமெரிக்காவின் விளையாட்டுத் துறையில் முன்னணி நகரமாகத் திகழும் பிரிஸ்கோ நகரின் மேயர் திரு.ஜெப் செனி அவர்கள் சனவரி திங்கள் 18 ஆம் தேதியை “ சர்வதேசக் கபடி தினம்” எனப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பிப்ரவரி 2020

7


அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் தமிழ் ம�ொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவிப்பு.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண கவர்னர் திரு.நெட் லாம�ொன்ட் ( MR.NED LAMONT) கையெழுத்திட்ட தமிழ் ம�ொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவிப்பு.

Do you want to GIVE BACK to your Village/Town? Don’t know where to start? No worry! www.eTamilNadu.org is a platform to facilitate and connect experts to guide you. Identify your Panchayat and register TODAY!!. Your Panchayat development is a base for TN and INDIA’s progress. Let’s join hand at Panchayat level to empower the rural with your innovative ideas, knowledge, Time and volunteerism. REGISTER TODAY : www.eTamilNadu.org

8

பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்: திரு.ரவிச்சந்திரன் ச�ோமு, சிங்கப்பூர் பிறந்த ஊர்: வெட்டிகாடு, திருவாரூர் மாவட்டம்.

நேர்காணல்: இரமா ஆறுமுகம்

தமிழக மக்களின் நலனுக்காகச் சிங்கப்பூரிலிருந்து பாதை என்ற அறக்கட்டளை நடத்தி வரும் திரு. இரவிச்சந்திரன் ச�ோமுவுடன் வலைத்தமிழுக்காக ஓர் நேர்காணல். இரமா: வணக்கம் இரவி. புலம் பெயர்ந்து ப�ோனாலும் இன்னும் வேர்களை மறக்காமல் நம் தமிழக மக்களின் நலனுக்காகப் பாதை என்ற அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகிறீர்கள். வாழ்த்துகள். உங்களைப் பற்றிக் க�ொஞ்சம் ச�ொல்ல முடியுமா? இரவி: வணக்கம் இரமா. நன்றி. என் பூர்வீகம் தமிழகத்தில் தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு கிராமம். நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பெற்றோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். நான் தமிழ் வழிக் கல்வி முறையில் அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பைப் பயின்ற பின், கிண்டி ப�ொறியியல் கல்லூரியில் ப�ொறியியல் படிப்பைப் படித்து முடித்து விட்டு பின்பு பணி நிமித்தமாகச் சிங்கப்பூர் வந்தேன். என்னை வளர்த்து விட்ட சமூகத்திற்கு ஏதாவது திருப்பிக் க�ொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. என்னால் இயன்ற அளவு வசதி இல்லாத மாணவர்களின் கல்விச் செலவிற்காகவும், கிராமப்புற மாணவர்கள் கல்வி திட்டங்களுக்காகவும் நிதி உதவி அளித்து வந்தேன். நானும் என் மனைவி கீதாவும் எங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கல்விப் பணிக்காக வழங்குவது என்று முடிவு செய்து அதைச் செயல்படுத்தி வந்தோம்.

www.Magazine.ValaiTamil.com

சில வருடங்கள் சிங்கப்பூரில் பணி புரிந்து விட்டு 1999ல் அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் பணிபுரிய வந்தேன். 2003 ஆம் நியு செர்சியில் நடைபெற்ற தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை க�ொண்ட பல தமிழ் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக என் கல்லூரியில் படித்து எனக்கு ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டி கிரியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் 2001ல் சில நண்பர்களுடன் சேர்ந்து AIMS INDIA FOUNDATION என்ற அமைப்பை இந்திய சமூக மேம்பாட்டிற்காக ஆரம்பித்திருந்தார் . 2003 ஆகஸ்ட் மாதத்தில் நானும் என் நண்பர் வாசுதேவன் ஜ�ோதிலிங்கமும் சேர்ந்து AIMS INDIA FOUNDATION-ன் பாஸ்டன் அத்தியாயத்தைத் த�ொடங்கின�ோம். நானும் என் நண்பர்கள் சிலரும் மாதந்தோறும் 100 டாலர்கள் க�ொடுப்போம். நண்பர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து அந்தப் பணத்தைத் தமிழகத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிடுவ�ோம். தமிழகத்தில் விடியல் அறக்கட்டளையுடன் இணைந்து பல வளர்ச்சிப் பணிகளில் பங்காற்றின�ோம். 2003 ல் இருந்து 2010 வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 25 கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த உதவின�ோம். இதற்கிடையில் 2007ல் மறுபடியும் குடும்பத்துடன் சிங்கப்பூர் திரும்பி

பிப்ரவரி 2020

9


மற்றும் சிங்கப்பூரில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்திப் புத்தக விற்பனை மற்றும் நன்கொடை மூலம் வரும் பணம் அனைத்தையும் கல்விப் பணிகளுக்காக என்னால் இயன்ற அளவு கிராமப்புற மற்றும் ஏழை நன்கொடை அளிக்கிற�ோம் என்று அறிவித்தோம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தனியாக உதவி இதன் மூலம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செய்யத் த�ொடங்கினேன். கிடைத்தது. இந்தப் பணத்தை வைத்து கிராமப்புறக் கல்வி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மற்றும் ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த “பாதை” இரமா: நன்றி இரவி. உங்கள் வாழ்க்கைப் பயணம் என்ற அறக்கட்டளை த�ொடங்கின�ோம். ர�ொம்ப சுவாரசியமாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் மனைவி இரமா: மிகவும் சிறப்பு இரவி. பாதை அறக்கட்டளை மூலம் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றிக் கூற முடியுமா ? விட்டோம். என்னுடன் இணைந்து பணியாற்றிய நண்பர்களும் இந்தியா திரும்பி விட்டனர். இதனால் இந்த முயற்சியில் த�ொய்வு ஏற்பட்டது. நான் மறுபடியும்

இரவி: பாதை மூலம் மன்னார்குடி வடுவூர் பகுதியில் உள்ள 16 அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை சனவரி 5, 2018 ல் வடுவூர் உயர்நிலைப் பள்ளியில் ஒரு விழா நடத்தி இலவசமாக வழங்கின�ோம். இந்த விழாவில் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த ப�ோது கிட்டத்தட்ட 350 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள வடுவூர் ஏரியைத் தூர் வாரி இருபது வருடங்கள் ஆகின்றன என்றும், இந்த ஏரி மூலமாகத் தான் வடுவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குளங்கள் தண்ணீர் பெறுகின்றன என்றும், ஏரியைத் தூர் வாராததால் குளங்களுக்குத் தண்ணீர் வருவதில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசை அணுகி இந்த ஏரியைத் தூர் வாரும் முயற்சியில் வெற்றி பெற்றோம். இதனால் ஊக்கம் பெற்ற கிராமத்து இளைஞர்கள் “நமது கிராமம்” கீதாவும் இதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்ற குழுவை ஏற்படுத்தி வடுவூர் ஏரியிலிருந்து என்று அறிவதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஆரம்பித்த குளங்களுக்குச் செல்லும் முக்கிய கால்வாயைத் பாதை அமைப்பைப் பற்றிக் க�ொஞ்சம் கூறுங்கள். தூர் வார முன்வந்தனர். இதற்கு நாங்கள் முதலில் வெறும் பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கின�ோம். இரவி: நானும் என் மனைவி கீதாவும் வலைப் புதிய தலைமுறை த�ொலைக்காட்சியின் உதவியால் பதிவர்கள். என் சிறு வயது கிராமத்து கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் ரூபாய் நிதி நினைவலைகளையும், கிராமத்து உண்மைக் உதவியுடன் 11 கில�ோமீட்டர் வாய்க்காலை கதைகளையும் என் வலைப் பதிவில் த�ொடர்ந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் தூர் வாருவதைப் எழுதி வருபவன். 2016 ஆம் ஆண்டு நான் எழுதிய பார்த்து அவர்களுக்கு மேலும் நாற்பதாயிரம் ரூபாய் பதிவுகளைத் த�ொகுத்து “வெட்டிக்காடு” என்ற வழங்கின�ோம். இதன் மூலம் 25 குளங்கள் பதினைந்து பெயரில் புத்தகமாக வெளியிட்டேன். அதே ப�ோல் ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதைக் கண்டு கிராம் என் மனைவி கீதாவும் “கீதா கஃபே” என்ற பெயரில் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். புத்தகமாக வெளியிட்டார். இதற்காகத் தமிழகம்

10 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


இதற்கு அடுத்த திட்டமாக, நீர் நிரம்பிய குளங்களைச் சுற்றி மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டி “நமது கிராமம்” இளைஞர்களுடன் இணைந்து “பசுமைத் தீபாவளி 2019” என்று ஐந்து லட்சம் ரூபாயில் திட்டம் தீட்டி வெற்றிகரமாக 2000க்கும் மேற்பட்ட நிழல், மற்றும் பூ மரக்கன்றுகளை

மக்களுக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் ப�ொருட்களை வழங்கின�ோம். கஜா புயல் இரண்டாம் கட்ட நிவாரப்பணியாக வெட்டிக்காடு கிராமத்திலுள்ள இருநூறு விவசாயிகளுக்கும் 800 தென்னம் பிள்ளைகள், 400 மாமரக் கன்றுகள் (ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நான்கு தென்னம் பிள்ளைகள் மற்றும் இரண்டு மாமரக் கன்றுகள்) ஜனவரி 17, 2019 அன்று வழங்கப்பட்டன. அந்த மாமரக் கன்றுகளில் தற்போது மாங்கனிகள் காய்க்கத் த�ொடங்கி விட்டன. இரமா: மிகவும் சிறப்பு என்னென்ன திட்டப் வருகிறீர்கள்?

இரவி. இந்த ஆண்டு பணிகளில் ஈடுபட்டு

இரவி: இந்த ஆண்டு ப�ொங்கலன்று பத்துக் கிராமங்களில் உள்ள எட்டாயிரம் வீடுகளுக்கும் இரண்டு லட்சம் ரூபாயில் ஒரு வீட்டிற்கு இரண்டு பழமரக் கன்றுகளை வழங்கிப் ப�ொங்கல் பண்டிகையை “பசுமைப் ப�ொங்கலாகக்” க�ொண்டாடின�ோம். “நமது கிராமம்” அமைப்பிலுள்ள பத்துக் கிராமங்களின் கல்வி வளர்ச்சி தான் இந்த ஆண்டின் முக்கியத் திட்டம். அதற்காகக் கிராமங்களில் இலவசப் படிப்பகம் (TUITION CENTERS) ஆரம்பிக்கப் ப�ோகிற�ோம். அதற்கு முன்னோடியாக இரண்டு கிராமங்களில் ஏற்கனவே இந்தப் ப�ொங்கல் பண்டிகையன்று இலவசப் படிப்பகங்களை ஆரம்பித்து விட்டோம். இதற்காக ஒவ்வொரு மையத்திலும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்களை நட்டோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூபாய் நியமித்துள்ளோம்.தினமும் மாலை இரண்டு மணி ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நேரம் கிராமத்தினர் வழங்கிய இலவச இடத்தில் இந்த மற்றும் பாதுகாப்புக் கூண்டுகள் வாங்குவதற்காக மையம் செயல் படுகிறது. இருபத்தைந்தாயிரம் ரூபாயும், மற்றும் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க ஒரு இரமா: உங்கள் சமூகப் பணிகளை எடுத்துக் வருடப் பராமரிப்பு செலவிற்கு இருபத்தைந்தாயிரம் கூறியதற்கு மிகவும் நன்றி இரவி. உங்கள் சமூகப் ரூபாயும் வழங்கின�ோம். பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். உங்களைப் ப�ோன்றோர் தான் இந்த உலகில் இன்று இரமா: மிக்க மகிழ்ச்சி இரவி. உங்களின் மற்ற சமூகப் அதிகம் தேவைப்படுகிறார்கள் பணிகளைப் பற்றிக் க�ொஞ்சம் கூற முடியுமா? இரவி: நன்றி இரமா. வலைத்தமிழுக்காக உங்களைச் இரவி: 2018 நவம்பரில் கஜா புயல் வந்த ப�ோது சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. முதல் கட்ட நிவாரண நிதியாகப் பாதிக்கப்பட்ட

www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 11


12 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளர் புனைப்பெயர்: ஜேபி (JB)

பிறந்த ஊர் : திருச்சி வசிக்கும் ஊர்:

ஃப்ளோரிடா, அமெரிக்கா., பணி / த�ொழில்: Senior Database Administrator - IT எழுதிய நூல்கள்:

1. காதலா? கர்வமா?: பதிப்பகத்தார் - SMS Publications , மறு பதிப்புJLine Publications, வெளியிடப்பட்ட வருடம்- மே 2018 நகரத்தின் மாசு தீண்டா அழகிய கிராமத்துப் பைங்கிளியின் விழியில் சிக்குண்டு அடிபணிந்த கர்வமிகு சிங்கத்தின் காதல் கதை இது. தன் தாய்தனை புற்றுந�ோய் என்னும் க�ொடுமைக்கு வாரிக் க�ொடுத்து, மது என்ற அரக்கனுக்கு தந்தையும் அடிமையாக, நரக வாழ்விலிருந்து நகர வாழ்க்கைக்குத் தாய்மாமனுடன் நகரும் அரிவையவள். நாட்டையே தன் க�ொடைக்கீழ் ஆளும் அரசனைப் ப�ோன்று கல்லூரியை தன் விழியசைவில் ஆட்சி செய்யும் முடிசூடா அரசனாக, பேரழகு பேதையாயிருந்தாலும் எனக்குத் துச்சமெனச் சிலிர்த்து நிற்கும் அரிமாவின் வாழ்வில், கல்லூரி வாசல் வழி நுழைகிறாள் பெண்ணவள் கண்டதும் காதலில் மயங்கும் மன்னவன். கர்வமிகு காளை கண்டு மருளும் மான் இவளின் மனதினை வருடியே திருடுகிறான். காதலில் திளைத்த ஜ�ோடிக்குக் காலனாய் வந்தது காதலனின் ‘நான்’ என்ற கர்வம். அகந்தையின் காலடியில் அடிமையானவன், www.Magazine.ValaiTamil.com

காரிகையின் மனம் உணராமல் பிரிகிறான். அவளின்றி அணுவும் அசையாது என்று தேடி வர, அவள�ோ அவனுக்கு மட்டுமே என்ற தன் வாழ்வில் கறையான்களாய் கயவர்கள் அழிக்க வழி தராமல், காலனைத் தேடிச் செல்கிறாள். ஆண் சாவித்திரியென மங்கையவளை இறப்பிலிருந்து காத்து, எமனுக்கும் என்னவளை தரமாட்டேன் என்று முரட்டுக் குழந்தையென எமனை முந்தி அவளைத் தன்னுடன் சேர்த்துக் க�ொள்கிறான். புண்பட்ட மனதுடயவளை அதிரடியாய் மணந்து, வலிமறக்க நேரம் தந்து மருந்தாய் தனை தருகிறான். இதயத்தில் உதிரத்தைக் கசியச் செய்தவனே மருந்தாய் மாறியதில் மங்கையவளின் வலி மறைந்ததா? கர்வத்தினுள் வருடங்கள் பல அடங்கியிருந்த காதல் ஆர்ப்பாட்டமாக வெளி வந்ததா? கர்வத்தின் காதல் தன்னவளின் காதலுடன் மீண்டும் இணைந்ததா? கர்வத்திற்கும் காதலிற்கும் இடையே நடந்து வந்த ஆக்ரோஷமான ப�ோரில், வென்றது காதலா? கர்வமா? 2. மலரினும் மெல்லியவள்!: (த�ொகுதிகள் – 2)

பிப்ரவரி 2020 13


பதிப்பகத்தார் - Notion Press, விநிய�ோகம்SMS Publications, வெளியிடப்பட்ட வருடம்ஆகஸ்ட் 2018 ஆளுமை, அகங்காரம், க�ோபம், ஆக்ரோஷம், உயர்வு மனப்பான்மை என்ற குணங்கள் க�ொண்ட இளம் தொழிலதிபர் ஒருவன் விதி வசத்தால் அமைதியான, ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் என்ற பந்தத்தில் தன்னோடு இணைத்து, வாழ்க்கையின் பாதையைச் சமபங்காகப் பகிர்ந்து வாழ நேர்ந்தால்? கனவிலும் நினையாத காதல் என்ற அழகான நுண்ணுணர்வால் ஈர்க்கப்பட்டு மனைவிக்காக உருகத் துவங்கியவனின் ஆழ் மனதில் அரும்பியிருந்த காதலை வெளிப்படுத்த இயலாது தவித்தவன், தன் மலரினும் மெல்லிய மனையாளிடம் தன் இதயத்தைத் திறந்தானா? விதி தங்களின் மணவாழ்க்கையைச் சூறாவளி ப�ோல் சுழற்றியடித்தாலும், காதலில் திளைத்த இரு உள்ளங்களும் காதலையே மருந்தாக மாற்றி, ஆழ் கடலின் அமைதி ப�ோல் தங்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க, விதி மீண்டும் தன் க�ோரக் கரங்களைக் க�ொண்டு அந்நியன் ஒருவனால், அழகிய இல்லறத்திற்குள் தங்களது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கும் தம்பதியினரின் வாழ்க்கைப் பாதையைச் சிதைக்க நினைத்தால்? ஆக்ரோஷமும், ஆவேசமும், சீற்றமும் ஒருங்கிணைந்த இளம் கணவனின் இருத்ரதாண்டவத்தில் கேடு நினைத்தவனின் தலை எழுத்து மாற்றி எழுதப்படுமா? எத்தகைய இரும்பு மனிதனின் இதயத்தையும் ஊடுருவிச் செல்லும் வலிமை வாய்ந்த காதலை அடிப்படையாகக் க�ொண்ட தன் வாழ்க்கையை அவன் காப்பாற்றுவானா? 3. கணவனே கண்கண்ட எதிரி! (த�ொகுதிகள் - 2) பதிப்பகத்தார் JLine Publications வெளியிடப்பட்ட வருடம்- 2019 குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமே நான் என்று வலம் வரும் நமது துறுதுறு நாயகனின் காளைப் பருவத்தில், புயலாய்ப் பிரவேசிக்கும் மங்கையவளின் கதை இது.. எதிரும் புதிருமான சந்திப்புக்கள் ம�ோதலாய்

14 பிப்ரவரி 2020

உருவாகி இனி சந்தித்துக் க�ொள்ளாதிருப்பதே நலமென்னும் நிலையில், எழுதிச்செல்லும் எனது கைகள் மாறும�ோ என்பது ப�ோல் திருமணப் பந்தத்தில் இணைத்து வைத்து தன் விளையாட்டைத் துவங்குகிறது விதி.. கணவனாய் கை க�ோர்த்திருப்பவனின் அன்பு அல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருக்கும் இதயத்தில், மெல்லியலாளின் காதல் தென்றலாய் வருடத் துவங்கும் நேரம், தெய்வமாகத் த�ொழப்பட வேண்டிய கணவன் எதிரியாய் உருமாறியது ஏன�ோ? நல்லறமாக வேண்டிய இல்லறம் அடங்காத காழ்ப்புணர்ச்சியையும் தீராத வெறுப்பையும் மட்டுமே பாரமாய்ச் சுமந்திருக்கும் கணவனின் இதயத்தினால் மாயையாய் மாறிப் ப�ோனத�ோ? தெய்வமாக இருக்க வேண்டிய கணவன் எதிரியாக மாறிப் ப�ோனதில் வதைபட்டவளின் மெல்லிய இதயத்தில் அரும்பிய காதல், அகங்காரம், சீற்றம் என்ற கட்டுக்களைத் தனக்குள் இட்டிருந்த கணவனின் இதயத்தை வென்றதா? காலனாய் ஊடுருவிய கயவனிடம் இருந்து தீயதில் தங்களின் வாழ்வு சுழன்று சிக்காமல், ச�ொர்க்கமாய்த் தன்னவளை மீட்டெடுத்தானா எதிரியாய்ப் ப�ோன அவளது மணாளன்? ‘கணவனே கண்கண்ட எதிரி!’ கவிதையாய்ச் ச�ொல்லும் இவர்களின் காதலை! 4. குருக்ஷேத்திரம்! (த�ொகுதிகள் - 4) பதிப்பகத்தார் JLine Publications வெளியிடப்பட்ட வருடம்- 2019 த�ொழில் என்ற உலகத்தினுள் வேகத்திற்கு ஒருவன், விவேகத்திற்கு மற்றொருவன் என்று ஆட்சி புரிந்து க�ொண்டிருக்கும் இரட்டைச் சக�ோதரர்களை, ஆளுமை, அபார அறிவாற்றல், ஆக்ரோஷம் என்ற குணங்கள் க�ொண்ட, விவேகத்தையும் வேகத்தையும் ஒருங்கே கலந்து பிறந்திருக்கும் ஒருவன் பகைவர்களாக எண்ணித் த�ொழில் ப�ோர் புரிய நேர்ந்தால்? மறைமுகத் த�ொழில் யுத்தத் தந்திரங்களாலும், அபாயகரமான வியூகங்களாலும் தங்கள் எதிரியைக் குறி தவறாது அடித்து வீழ்த்தி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் க�ொண்டிருக்கும் வேளையில், த�ொழில் பகை குடும்பப் பகையாய் மாறி இரு குடும்பத்தின் இளம்பெண்களையும் பகடையாக்கியதில் விளையும் விபரீத தருணங்களின் க�ோர்வையே இந்தக் கதை.. www.Magazine.ValaiTamil.com


இவர்களின் ம�ோதலால் உண்டான வெப்பத்தால் த�ொழில்துறையே தீயாய் தகிக்கத் துவங்க, வெப்பம் தணிக்க வந்த மூன்று தேவதைகளால் மனம் குளிர்ந்து த�ொழில்துறையில் வெற்றி வாகை சூடி க�ோல�ோச்சிய சூரர்கள் மூவரைப் பற்றியதே இந்தக் குருக்ஷேத்திரம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஆன ப�ோரில் எவ்வாறு அதர்மத்தை ‘அன்பு’ என்ற அம்பினால் தர்மம் வென்றது என்பதை அழகாக, ஆளுமையாகக் கர்ஜிக்கும் மூன்று சிங்கங்களின் வாழ்வின் வழி கூறும் இந்நூல்.. மஹாபாரதக் குருக்ஷேத்திரத்திற்கும் இந்தக் குருக்ஷேத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் பலமான காரணம், ஆற்றலை வெளிப்படுத்தித் தன்னை நிலைநிறுத்தி ஆட்சி புரிதலே.. இரண்டிலும் பெண்ணின் கண்ணீருக்கு நியாயம் கிட்டியது.. அன்பால் ப�ோரிட்டால் தர்மமும் துணை நிற்கும் உன் வெற்றிக்கு என்பதை உணர்த்தும் கதை இந்தக் குருக்ஷேத்திரம்.. 5. உதயேந்திரவர்மன்! (புத்தகங்கள் வெளியீட்டுப் பணியில் உள்ளன) தங்கேதி தேசத்தின் வடக்குப் பகுதியை ஆட்சி புரிந்து வரும் ஷாஸ்ரஸாத் மாயி என்ற க�ொடுங்கோலனால், தெற்கு தங்கேதியை மட்டும் முழுமையாகத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் க�ொண்டு வர இயலவில்லை.. அதற்குக் காரணம் தங்கேதி தேசத்தின் தெற்குப் பகுதியின் மிகப் பெரிய இராஜ்யமான வர்ம இராஜ்யத்தின் அரியாசனத்தில் வீற்றிருக்கும் மாவீரனான விஜயேந்திர வர்மரின் புதல்வன்.. வீரம், இராஜதந்திரம், அறிவுக்கூர்மை என்று அனைத்திலும் அபரிமிதமான ஆற்றல்

அமெரிக்கவாழ்

பெற்றவன், வர்ம தேசத்தின் இளவரசன், உதயேந்திர வர்மன். மனித ரூபத்தில் இருக்கும் அசுரன் என்று பெயர் பெற்ற ஷாஸ்ரஸாத் மாயியிடம் இருந்தும், காமத்தையும் நயவஞ்சகத்தினத்தையும் தனது உடல் ப�ொருள் ஆவி என்றனைத்திலும் கலந்திருக்கும் சிம்ம இராஜ்யத்தின் அரசன் விக்கிரம்ம சிம்மனிடம் இருந்தும், தங்கேதி தேசத்தை எவ்வாறு வர்ம இளவரசன் காத்தான் என்பதைக் கூறுவதே, "உதயேந்திரவர்மன்". எவருக்கும் அடிபணியாத, ஒருவருக்கும் தலைவணங்காத, அறிவு, ஆளுமை, செருக்கு என்ற அனைத்திற்கும் ம�ொத்த உருவமும் நானே என்பது ப�ோல் வலம் வரும் வர்ம இளவரசனை, யுத்தக்களத்தில் ஆண்மகனின் வீரத்திற்குச் சிறிதும் குறைந்தது அல்ல என் தீரம் என்று பறைசாற்றும் வீரமகளான பேரழகு பதுமையான மகிழ்வதனி எங்கனம் வாட்போரில் மட்டுமல்லாமல், காதல் ப�ோரிலும் வீழ்த்துகின்றாள் என்பதைக் காதல் இரசம் ச�ொட்ட விளக்கும் கதை இது. இராஜ தந்திரங்களையும் ப�ோர் வியூகங்களையும் ஆக்ரோஷ யுத்த முறைகளையும், அவற்றுடன் இணைத்து காதல் கணைகளையும் வீசும் இளம் இளவரசனின் அதிரடி ஆட்டமே இந்த உதயேந்திரவர்மன்.. எழுதிக் க�ொண்டிருக்கும் / எழுத நினைக்கும் நூல் / கதைக்களம்: நிலா (லூனா) - சிறு குழந்தைகளின் பாலியல் வன்முறையைப் பற்றிய கருத்துக்களைக் கதைய�ோடு இழைத்துக் கூறு விரும்புகின்றேன். புத்தகங்களைப் பெற: https://www.amazon.in/dp/8194271258?ref=myi_title_dp

தமிழ் எழுத்தாளர்களின்

நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்கள், கிடைக்குமிடம் உள்ளிட்ட விவரங்களுடன் MAGAZINE@VALAITAMIL.COM க்கு அனுப்பிவையுங்கள். www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 15


இருள் கவ்விய இரவில் உடலை வருத்தி நடுக் கும் குளிரில்

கவிதை

கரையும் காகமும் இக்கரை விடுத்து அக்கறை தேடி அக்கரை ப�ோய்விட மேகத்தோடு கேசத்தைத் தாலாட்டி ச�ோகத்தைச் ச�ொல்லி தாகத்தை மறைத்து தாபத்தை தன்னுள் புதைத்து தன் நிழல் தாங்க துணை தேடி தனிமையில் நிற்கும் நாவல் மரம் வானத்தை அளந்த களைப்பில் தலைவன் தூங்கத் தலைதூக் கிப் பார்த்து மலைமேல் தாவி காற்றை ஏணியாக் கி வானத்தில் ஏறிட நின்றிருந்த மரத்தின் நிழலுடை விலகி நீரினில் மிதந்து நீச்சல் அடித்திடும் சிற்றாடை கண்டு

16 பிப்ரவரி 2020

நிலவின் ஒளியில்...

மேற்குக் கரையில்

சில்மிஷம் செய்திட

மாலை

ச�ோலை மலர்களின்

நீராடை ப�ோர்த்தி உறங்கும் சிற்றோடை

சிக் கிய நிழல�ோடு வேலையில்

நிலமகளைக் காக்க சலனமற்று அமைதியாக

சிற்றோடை சிலிர்த்து

அழகில் மயங்கி தன்னழகு காண கண்ணாடி தேடி சலனமற்ற ஓடையில் நிலவ�ோ முகம் பார்க்க நாவல் மரம�ோ நிலவ�ோடு ப�ொறாமை க�ொண்டு காற்றிடம் தூதனுப்பி தென்றலை அழைத்து வர நிலையான நீரில் அலைகள் கிளம்பிடச் சிலையாய்த் தெரிந்த கலையான நிலவு முகம் வளைந்து நெளிந்து கலைந்து தெரிய அசைந்த மரமும் இசைக் கு இணங்கி நர்த்தனம் ஆடியது..!!!!

நிலவின் ஒளியில்…

வாஞ்சி க�ோவிந்த் கேட்டி, டெக்ஸாஸ்

www.Magazine.ValaiTamil.com


(ஜனவரி - 2020) ● தேனி மாவட்டத்தில் ராமசாமி நாயக்கன் பட்டி, உ.அம்மாபட்டி, மேல சிந்தலைசேரி என 15 கிராம ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிக்கக் கூடாது எனக் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் ● பஞ்சாயத்துத் தலைவிகளின் பணிகளில் தலையிடும் கணவன்மார்கள் கண்காணிப்பு. உள்ளாட்சித் தேர்தலில் தேர்வாகியுள்ள பல பெண் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் ஊராட்சிகளில் அவர்களின் கணவனின் தலையீடு இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ● தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் ஐந்து விதமான நிலைக்குழுக்கள் அமைத்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றத் தலைவர்களுக்கு உத்தரவு. ● நெல்லை புத்தகத்திருவிழா பிப்ரவரி 1 முதல் 10 வரை நடக்கவிருக்கிறது. ● சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வந்துள்ளதாகவும், 20 க�ோடி மதிப்பிலான புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ● வாணியம்பாடியில் நடந்த தமிழர் பண்பாட்டு விழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பத்தூர் ஆட்சியர் உறுதியளித்தார். ● தமிழ், சமஸ்கிருதத்தில் தஞ்சைப் பெரியக�ோயில் குடமுழுக்கு.. தமிழில் நடத்தக் க�ோரிய மனு ஐக�ோர்ட்டில் தள்ளுபடி. ● விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மத்திய அரசு ஒப்புதல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் ! என்ற பாவேந்தரின் வரிகளுக்கு உணர்வூட்டியிருக்கிற�ோம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ● அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பித்தது... ● தமிழர்களின் வீரவிளையாட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. 13 காளைகளைப் பிடித்த ராஜா இரண்டாம் இடத்தையும், 10 காளைகளைப் பிடித்த கார்த்திக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ● ரூ.600 க�ோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன். நிலவிற்கு மனிதரை அனுப்பும் ககன்யான் திட்ட ஆய்வுப்பணி த�ொடக்கம் www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 17


● கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.த�ொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா வெற்றி பெற்றுள்ளார். ● முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார். ● சு.வெங்கடேசனுக்குக் கனடாவின் இயல் விருது அறிவிப்பு ● பூச்சிக் க�ொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி ப�ோன்ற மருந்துகளைத் தடை செய்யப் ப�ோவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ●த�ொடர்ந்துஏழாவதாண்டாகலய�ோலாகல்லூரியின்மாற்றுஊடகமையம்வருடம்தோறும்நிகழ்த்தும்வீதிவிருதுகள் திருவிழா ஜனவரி 11 & 12 நாட்களில் நடைபெற்றது ● உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி அதிகத் தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலமும், இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இடம்பெற்றுள்ளன. ● விவசாயிகளைக் கவுரவிக்கும் விதமாக எருதுகள் பூட்டி நிலத்தில் ஏர் உழுவது ப�ோன்ற வடிவில் மாணவ, மாணவிகள், ப�ொதுமக்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை. ● ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுப்ப�ோட்டியை ஊக்குவிக்கும் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி த�ொடங்கி வைத்தார். ● க�ோவையை அடுத்து தஞ்சை விமானப்படைத் தளம் மேம்படுத்தப்பட்டு தற்போது சுக�ோய் விமானங்கள் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ● திடக்கழிவு மேலாண்மை விதிகளைக் கடுமையாக்க வீடுகள் & வணிக நிறுவனங்களில் குப்பைகளைச் சேகரிக்கச் சென்னை மாநகராட்சிக் கட்டணம் அறிவிப்பு. ● டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ராமேஸ்வரம், கீழக்கரை

உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரைத் தகுதிநீக்கம்

செய்துள்ளது. ஏழு பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

18 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் சிவசங்கர் சுப்ரமணியன், நாகசுரக்கலைஞர், க�ொம்பு மரபிசை மையம் வாசிங்டன் டி.சி.

முன்னுரை:

நெடுங்காலமாகத் தமிழை முத்தமிழ் எனச் சான்றோர்

வகைப்படுத்தியுள்ளனர். இடைத்தமிழாக மக்களின் நவரசங்களையும் உணரச்செய்யும் அற்புதக் கலையாக விளங்குவது இசைத்தமிழ். தமிழில் உள்ள முதல் இசை நூலாம் சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழுக்கும் அதனை ஒலிக்கத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகள் பற்றிய குறிப்பு மேல�ோங்கி உள்ளது. சிலப்பதிகாரத்திற்கு ம�ொழியிலக்கணம் தந்து வழிகாட்டிய த�ொல்காப்பியம�ோ நால்வகை நிலத்திற்கு உரிய யாழ் வகை(பண்), அதனுடன் இசைக்கக்கூடிய இசைக் கருவி , இசை எழுத்து, தாள நடை, இசை வர்ணங்கள் என இசை குறிப்புகள் அடங்கிய ஒரு கலங்கரை விளக்காய் திகழ்கிறது.

புன்னை மரத்தில் குழாய் ப�ோல் நீளமாக குடைந்தால் வைரம் ப�ோல வெடிக்காமல் இருக்கும் என அறிந்தவர்கள், நாதசுரக் கருவியினை புன்னை மரத்தில் செய்தனர். சுரபுன்னை என்ற பெயரும் பெற்றது. ஆச்சா மரம் க�ொண்டும் நாதசுரம் செய்யத் த�ொடங்கினர். இன்றும் நாதசுரம் தான் உலகிலேயே மரத்தினால் செய்து அதிக இசைய�ோசை எழுப்பக் கூடிய ஒரே துளைகருவி. பெருவங்கியம்: புறநானூற்றில் பெருவங்கியம் என்றொரு இசைக் கருவி பற்றிய குறிப்பு உள்ளது. வல்வில் ஓரியை பற்றி வன்பரணர் பாடும்போது கண்விடு தூம்பிற் களிற்றுயிர் த�ொடுமின் (புறநானூறு: 152)

கல் நாதசுரம் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை, புதிய இசைக் கருவி கண்டுபிடித்து அவற்றைப் பயன் படுத்துவதில் ஒரு புரட்சியே செய்துள்ளனர். ஒவ்வொரு கருவியையும் ஆராய்ச்சி செய்து, அதனைப் பக்குவப் படுத்தி, மிக உன்னத நிலை அடையச் செய்துள்ளனர். தேவைக்கேற்ப புதிய கருவிகள் உருவாயின, நாடெங்கும் சமயம் பரவிய ப�ொழுது திருவிழா மற்றும் சமயச் சடங்குகளில் மற்றும் வாசிக்கக் கூடிய இசைக் கருவிகளை ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளன. யுத்தக் காலங்களில் பயன்படுத்த, நாட்டுப் புறங்களில் மக்களின் கூத்துக்கும் களியாட்டத்திற்கும் இயைந்த பல்வகை கருவிகள் உருவாயின. இன்று வரை எந்த ஒரு மேற்கத்தியக் கருவிகளினாலும் அதற்கு ஈடு க�ொடுக்க முடியவில்லை.

கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் ..நெடுவங்கியத்தோடே (அகநானூறு 111:8-9,301:16-17)

தூம்பின்

இதில் களிற்றுயிர் என்பது ஆகுபெயர்; கண்விடு தூம்பாகிய களிற்றினது கை ப�ோல் வடிவுடைய பெருவங்கியதை இசைக்கும் ப�ொழுது எனக் க�ொள்ளவேண்டும். இதில் பெருவங்கியம் அல்லது நெடுவங்கியம் என்பது நாகசுரமாகும். வங்கியம் என்பது மூங்கிலுக்கும் இசைக்கின்ற குழலுக்கும் க�ொடுக்கப்பட்ட ப�ொதுப் பெயர். குழலை விட நீண்டு இருப்பதால் நெடுவங்கியம் எனப் பெயர் க�ொண்டிருக்கலாம். ஆதிகாலத்தில் இதனை மூங்கிலில் செய்திருக்கக் கூடும்.

ஆதி தமிழர்கள் மரத்தினைப் பயன்படுத்துவதில் எவ்வளவு நிபுணத்துவம் க�ொண்டிருந்தார்கள் என்பதற்குச் சில உதாரணங்களை இங்குக் காணலாம், பாலமரத்தில் பானை வடிவில் குடையும்போது உடையாமல் இருக்கும் மற்றும் நாதத்தைப் பெருக்குவதில் பலாமரம் பெரும் பங்கு வகிக்கிறது. இதனாலேயே வீணை பலா மரத்தில் செய்தனர். www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 19


காளமேகப் புலவர் இதற்கு முந்தைய நூற்றாண்டில் பாடிய திருவானைக்கா உலா என்னும் நூலில் “சங்கும், குழலும் தடமுரசும்,வங்கியமும்” என்றொரு அடி வருகிறது. இதில் வங்கியும் என்பது நாகசுரமே. சேறைக் கவிராசபிள்ளை(1550-1609) தாம் பாடிய வாட்போக்கிநாதர் உலாவில் வாத்தியங்களைக் குறிப்பிடும்போது நாகசுரத்தைக் குறிப்பிடுவது காணத்தக்கது. தடாரி துடி திமிலை தண்ணுமை கைத்தாளம் விடாத முரசு மணி மேளம்-குடமுழா சங்கு திமிரி தவில்பட-நாகசுர மங்கல கீதமுதல் வாத்தியமும்-ப�ொங்கி எழ இங்கு இவ்வாசிரியர் பல வாத்தியங்களைக் கூறி இறுதியில் நாகசுரம் மங்கல வாத்தியம் அனைத்திற்கும் முதன்மையானது என்றே கூறி முடிக்கிறார். இராசராச மன்னன் தஞ்சை பெரிய க�ோவில் கட்டும் ப�ொழுது ஆடல் மகளிர் மற்றும் இசை வாணர்களுக்கு 400 வீடு கட்டிக் க�ொடுத்தார், அவர்களில் உடுக் கை,வங்கியும்,குழல்,நட்டுவம், கெட்டி மத்தளம் வசிப்போருக்குப் பங்கு பிரிக்கும் ப�ோது வாத்திய மராயனுக்கு முதலில் க�ொடுக்கிறார். இவ்வாத்திய மராயன் என்பவர் நாகசுரம் வாசிப்பவர்களின் தலைவன் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கப்படும் செய்தி. நாகசுர வகைகள் : நாகசுரங்கள் பாரி, திமிரி என்று இரண்டு வகைப் படும். பாரி என்றால் பெரியது என்று ப�ொருள். இதில் மூன்றுக்கடை சுருதி முதல் ஐந்துகட்டை சுருதி வரை வாசிக்க முடியும். இதன் நாதம் கேட்பதற்குக் கம்பிரமாகவும், இனிமைகவும் இருக்கும். விரலின் அசைவினாலும்,ஊதும்போது காற்றை மென்மையாகவும்,அழுத்தமாகவும் செலுத்துவானாலும் ஏழு துளைகளில் இருந்து ஏழு ஸ்வரங்களும் இரண்டரை கட்டை ஸ்தாயி வரையில் வாசிக்கமுடியும். இரட்டை நாகசுரம்: இருவர் சேர்த்து வசிப்பதே இரட்டை நாகசுரமாகும். திரும்பபுரத்துச் சக�ோதரர்கள் தான் முதலில் இதை ஆரம்பித்தது. நாகசுரம் குருகுலமாகக் கற்கப்பட்ட வித்தை. பிரசித்தி பெற்ற இசைவாணர் அனைவரும் அப்படித்தான் கற்றனர். இதற்கான பாடத் திட்டம் ஒன்றும் அப்போது இல்லை. முதன் முதலில் பழனியில், பழனி தேவஸ்தானத்தின் ஆதரவில் ஒரு பள்ளி அமைத்து செம்மையான பாடத்திட்டங்கள் வகுத்து இந்த வித்தையை பண்டைய குருகுல முறையும், புதிய பாடசாலைமுறையும் கலந்து பல ஆண்டுகள் நடத்தி வந்தார்கள்.

20 பிப்ரவரி 2020

நாகசுர அமைப்பு: நாகசுரத்தின் அடிப்பாகத்தில் இசைக்குரிய ஏழு துளைகளும்,ப்ரஹ்மசுரம் என்னும் ஐந்து வேற்றுத்துளைகளும் உண்டு. இதை வாயில் வைத்து வாசிப்பதற்கு சீவாளி என்னும் கருவி தேவைப்படுகிறது. நாகசுரம் ஆச்சா மரம் (HARDWICKIA BINATA) மற்றும் புன்னை (CALOPHYLLUM INOPHYLLUM) மரத்தில் தயார் செய்வார்கள் என முன்னமே பார்த்தோம். மாக்கல்லினால் செய்த நாகசுரம் இருக்கிறதென்று அறிய மிக்க வியப்பாக இருக்கும் .மாக்கல் என்பது மிகவும் மிருதுவான ஒரு கல். இக்கல்லினால் செய்த நாகசுரம் தஞ்சை மன்னராக இருந்த சரப�ோஜி காலத்தில் ஒரு வித்துவானிடம் இருந்தது. இக்கருவி இப்போது டெல்லியில் இருப்பதாகச் ச�ொல்வர். முடிவுரை: ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வாழ்வியல் க�ோட்பாடுகளைக் கடத்த இசைக் கருவிகளும் அதனைச் சார்ந்த இசையும் பயன்பட்டது. உலகிலேயே இசைக்கு இலக்கணம் தந்த முதல் ம�ொழி தமிழ் என்பதை நாம் உணரவேண்டும். இசை இலக்கணத்தைத் தமிழிலிருந்து தெலுங்கு ப�ோன்ற ம�ொழிகளுக்கு ம�ொழிபெயர்க்கும் ப�ோது இசை அறிஞர்கள் வாத்தியக்காரர்களையே நம்பி இருந்தனர். தமிழிசையில் இருந்த சீர், இசை அளவு, அடி, பெரும்பண் என அனைத்து இசை நுணுக்கங்களை நாயனக்காரர்கள் அறிந்திருந்தனர். சமணர்கள், வடமாநிலத்தவர், முகமதியர், ஆங்கிலேயர், ஐர�ோப்பியர் எனத் தமிழர் கண்ட அந்நியப் படையெடுப்பில் புதிய இசைக்கருவிகளை புகுத்தி செவ்வியினை பலமிழக்கச் செய்தப�ோதும் இன்றுவரை தமிழ் இசையினைப் புகழ் குன்றாமல் மக்கள் ரசிக்கும்படி காத்துக்கொண்டிருப்பவர்கள் வாத்தியக்காரர்கள் ஆவார்கள். www.Magazine.ValaiTamil.com


நல்ல தமிழில்

எழுதுவ�ோம் தமிழில்

ஒற்றெழுத்துகள் மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய ப�ொருள் வேறுபாடு உண்டாகும் என்பதைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அந்தக் கட்டுரையின் இறுதியில் “உடல் நலம்பெற நாட்டு மருந்து கடை(ப்)பிடிக்கவேண்டுமா? இல்லை நாட்டு மருந்து(க்)கடை பிடிக்கவேண்டுமா ? “ க�ொஞ்சம் ய�ோசிக்கவும் என்றும் கேட்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு மருத்துவர்கள் பதில் ச�ொன்னால் சரியாக இருக்கும் என்றாலும் அந்தக் கேள்வியில் இருக்கும் நுட்பத்தை வாசகர்கள் புரிந்துக�ொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். அதாவது, மருந்து(க்)கடை – மருந்து விற்கும் இடம். மருந்து கடை- மருந்தைக் கடை ( ஏவல்) – கடை பிடி – கடையைப் பிடி (வாடகைக்கு)- கடைப்பிடிபின்பற்று. அதன் த�ொடர்ச்சியாக இந்த வாரம் தமிழின் சிறப்பம்சமான இரட்டைக் கிளவி மற்றும் அடுக்குத்தொடரில் ஒற்றெழுத்து பயன்பாடு பற்றி பார்ப்போம். இரட்டைக் கிளவி என்றதும் பலருக்கு “சலசல சலசல இரட்டைக்கிளவி, தகதக தகதக இரட்டைக்கிளவி“ எனும் ஜீன்ஸ் படப்பாடல் நினைவில் வந்திருக்கலாம். அந்தப் பாடலினுடாகவே சலசல, தகதக, பளபள என்பது ப�ோன்ற இரண்டாக சேர்ந்து வரும் இரட்டைக் கிளவிச் ச�ொற்களைத் தனியாகப் பிரித்தால் ப�ொருள் இல்லை என்பதைக் கவிஞர் வைரமுத்து ச�ொல்லி இருப்பார். அந்த இரட்டைக் கிளவி ச�ொற்களுக்கு இடையே

ஒற்றெழுத்து மிகாது என்பது விதி. www.Magazine.ValaiTamil.com

ம் யு வி ம் ள கி ரு க் ்டை த�ொட ட இர க்குத் அ டு ஆரூர் பாஸ்கர் ,அமெரிக்கா (AARURBASS@GMAIL.COM)

அதுப�ோல, இரட்டைக் கிளவியைப் பற்றிப் பேசும் இந்த நேரத்தில் அடுக்குத்தொடரைப் பற்றிப் பார்த்துவிடுவதும் சரியாக இருக்கும். இரட்டைக் கிளவி என்றதும் மளமளவென ச�ொல்லிவிடக் கூடிய பலர் அடுக்குத் த�ொடர் என்றதும் திருதிரு என விழிக்க வாய்ப்பிருக்கிறது. அச்சம் தவிர்ப்போம். இன்று இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்துவிடுவ�ோம். முதலில் வேற்றுமை- ச�ொல்ல ச�ொல்ல, மெல்ல மெல்ல என்பது ப�ோன்ற அடுக்குத் த�ொடர் ச�ொற்களைத் தனியாகப் பிரித்தாலும் ப�ொருள் தரும். அதாவது ச�ொல்ல ச�ொல்ல எனும் அடுக்குத்தொடரில் ‘ச�ொல்ல‘ எனும் ச�ொல் தனியாக இயங்கும் ப�ொருளும் தரும். இரட்டைக் கிளவி ச�ொற்களில் அது நடக்காது. ஆனால், அடுக்குத் த�ொடர் ச�ொற்களுக்கு

இடையேயும் ஒற்று மிகாது.

அந்த வகையில் ‘திகுதிகு‘- வும், ‘மெல்ல மெல்ல‘வும் எனக்குப் பிடித்தவை, தமிழில் பேசுவது குறைந்து ஆங்கில வார்த்தைக் கலப்போடு பேசுவது நாகரீகம் எனக் கருதும் இன்றைய சூழலில் அடுக்குத் த�ொடரையும், இரட்டைக் கிளவிகளையும் தினப்பேச்சில் கேட்பது அரிதாகி வருகிறது. அதனால், சமீபத்தில் நீங்கள் கேட்ட ரசித்த இரட்டைக்கிளவி அல்லது அடுக்குத்தொடர்கள் எதாவது இருந்தால் க�ொஞ்சம் பகிருங்களேன். கேட்போம்.

பிப்ரவரி 2020 21


பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுகம் பயிற்சி வகுப்பு திருப்பூர்,நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மைய�ோடு இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது,, பஞ்சாயத்துத் தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் அருள்புரத்தில் நடைபெற்று வரும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுகம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்..

உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் பெற்றார். அவருக்குச் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையில் தலைவர் திருமிகு எம்.ஏ. முஸ்தபா அவர்கள் தலைமையில் வடசென்னைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. மேலும் தமிழக அரசின் விருது பெற்ற தகவல் அறிந்து மலேசிய நாட்டுப் பிரதமர் துறை அமைச்சர் மாண்புமிகு ப�ொன்.வேதமூர்த்தி அவர்கள் அழைத்துப் பாராட்டினார்.

22 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


நல்லோர் வட்டத்தின் சார்பாக தமிழ்நாட்டின் கிராமங்களை

வலுப்படுத்த, சமூக ஆர்வலர்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் சென்னையில் சந்திப்பு

அமெரிக்காவில் ஹார்வார்ட் இருக்கை அமைய ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கிய ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மறைவு.. அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைய தமது பங்களிப்பாக ரூ.5 லட்சத்தைத் தமது ஓய்வூதிய சேமிப்பிலிருந்து வழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்த ஓய்வுபெற்ற தலைமை பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த திரு.ராமசாமி அய்யா அவர்கள் 22-1-2019 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிப்பதுடன், செல்வத்தின் பயனே ஈதல் என்பதை ஒட்டி முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்த இந்த மகத்தான மனிதருக்கு வலைத்தமிழ் தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.

www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 23


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் 2020 புதிய செயற்குழு உறுப்பினர்கள் திருக்குறள் நூலின் மேல் கை வைத்து உறுதிம�ொழி எடுத்தனர்.

தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..

தமிழ்நாடு,

இலங்கைக்கு அடுத்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு தென்னாப்பிரிக்கா. சிங்கப்பூர், மலேசியாவைவிட எண்ணைக்கையில் அங்குத் தமிழர்கள் அதிகம் என்பதும் தமிழ்ப் பெயர்களும், கலாச்சாரமும் அங்கு இன்னும் பின்பற்றப்பட்டாலும், தமிழ் ம�ொழி பேச்சு வழக்கில் இல்லை என்பது பலரும் கவலையுடன் ச�ொல்லிவரும் நிலையில் அதற்குத் தீர்வு ஏற்படாமல் இருந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் முயற்சியில் செயல்திறன் மிக்க தமிழார்வலர், பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முனைவர்.இரா.குறிஞ்சிவேந்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு தென்னாப்பிரிக்கா பயணித்து அங்கு தமிழ்மொழி வளர்ச்சி குறித்த 10 நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்திவந்திருப்பது மிகப்பெரிய த�ொடக்கம். தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ் வளர்ச்சித்துறையின் பேருதவியுடன் டர்பன் நகர் சென்று 90 ஆண்டுகள் பழமை க�ொண்ட மியர்பேங்க் தமிழ்ச்சங்கப்பள்ளியில்

24 பிப்ரவரி 2020

இலக்கிய-இலக்கண-பேச்சுத்தமிழ்-கலைப்பண்பாட்டுப் பயிலரங்கு நடத்தப்பட்டது. தமிழ்ப் பல்கலையிலிருந்து பேராசிரியர் இரா.காமராசு, மைசூர் நடுவண்மொழிகள் நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் முனைவர் சாம் ம�ோகன்லால், பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்கநாதன், தேனாலேயே குரலைச் செதுக்கி இசைத்தெய்வம் வழங்கியுள்ள திருப்புவனம் ஆத்மநாதன் ஐயா, காவிரிக்கரையின் நாட்டுப்புறநாயகர் கலைமாமணி இளங்கோவன், ய�ோகப் பயிற்சியாளர் முனைவர் தங்கபாண்டியன் ஆகிய�ோர் இக்குழுவில் இடம்பெற்றனர். தமிழ் மீது எல்லையில்லா விருப்பம் க�ொண்ட 200 தென்னாப்பிரிக்கத் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் 10 நாட்கள் டர்பனில் நடைபெற்ற இந்தப் பயிற்சி தென்னாப்பிரிக்க -தமிழ்நாட்டு ம�ொழி, கலை, கலாச்சாரம் சார்ந்த உறவின் த�ொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. www.Magazine.ValaiTamil.com


புதுச்சேரி தமிழ்ச் சங்கத்திற்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கிய 55ஆவது திருவள்ளுவர் சிலை

புதுச்சேரி

தமிழ்ச் சங்க வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 55ஆவது திருவள்ளுவர் சிலையைப் புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்

www.Magazine.ValaiTamil.com

டாக்டர் வி.ஜி.சந்தோசம், புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, விஐடி பல்கலைக்கழக வேந்தர் க�ோ.விசுவநாதன் மற்றும் புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து உள்ளிட்ட பலர் கலந்துக�ொண்டனர்.

பிப்ரவரி 2020 25


சிகாக�ோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் க�ொண்டாடப்பட்டது.

சங்க இலக்கியச் சிறுகதைப் ப�ோட்டி - பரிசு 7 லட்சம்

26 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


மாமல்லபுரத்தில் திருவள்ளுவரின் 2051 வது பிறந்தநாளை முன்னிட்டு மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 70 அடி மணற் சிற்பம் விழா

www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 27


புதிமத்தின் 2020- ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முனைவர்.இரவி குணவதிமைந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.. புதிமத்தின் 2020- ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புதுச்சேரியில் சனவரி 18 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் முனைவர்.இரவி குணவதிமைந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.. சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருமலை, புதுவைத் திருக்குறள் மன்றத்தின் நிர்வாகிகள், திரு. லட்சுமி நாராயணன், திரு. கலியன் எதிராசன், திரு. சிவ மாதவன், திரு. செல்வகணபதி ஆகிய�ோர் விருதை வழங்கிக் கெளரவித்தனர்.

சிகாக�ோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது தமிழ்நாடு அரசு வழங்கும் இவ்வாண்டிற்கான தமிழ்த் தாய் விருது சிகாக�ோ தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருதைத் தமிழ்ச்சங்கச் செயற்குழுவின் சார்பில் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.மணி குணசேகரன் மற்றும் துணைப் ப�ொருளாளர் நம்பிராஜன் வைத்திலிங்கம் ஆகிய�ோர் பெற்றுக்கொண்டனர்.

28 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் குழந்தைக்குத் தாலாட்டு, வயலில் நாற்று நடும் ப�ோது நாட்டுப்புறப் பாட்டு எனத் தமிழனின் உணர்வோடு உணர்வாகக் கலந்து விட்ட நமது நாட்டுப் புறக் கலைகளும், கலைஞர்களும் நலிவடைவதை தடுக்கவும் , கலைஞர்களுக்கு வளமான வாழ்க்கை வேண்டும் என்னும் ந�ோக்கோடும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ந�ோக்காடும் வேர்கள் அறக்கட்டளை சார்பாக வாணியம்பாடியில் நடத்தப்பட்ட மூன்று நாள் விழாவில் திருப்பத்தூர் ஆட்சியர் கலந்து க�ொண்டத�ோடு மட்டுமில்லாமல் ஓய்வூதியம் என்ற உயரிய திட்டத்திற்கு உறுதியும் அளித்துள்ளது பாராட்டுக்குரியது.

தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்

திரைகடல் ஓடி திரவியம் தேட வந்த இடத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கடைப்பிடித்து வாழ்வதில் எங்களுக்கு இணை யார்? என்பதுப�ோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் செயலாற்றி வருகின்றனர். அவ்வரிசையில் அண்மையில் நடந்த தைப் ப�ொங்கல் பண்டிகையே சான்று. இங்கிலாந்தில் உள்ள அமைச்சர்கள் கூட நமது பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து ப�ொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக�ொண்டது சிறப்பு.

விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மத்திய அரசு ஒப்புதல் “வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!’ என்ற பாரதியின் வார்த்தை மெய்ப்பட இத�ோ இப்போது சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 29


கீழடி அகழ்வாய்வு அறிக்கை உலகத்தினர் அறிந்துக�ொள்ள வசதியாக 24 ம�ொழிகளில் வெளியிடப்பட்டது.

கீழடியின் மேன்மையை கற்றுத் தெளிய உற்று அறிய தமிழ்ப் பண்பாட்டின் குரலாய் இருபத்துநான்கு ம�ொழிகளில் உயரிய அறிக்கை கீழடி அறிக்கை! தமிழ்ப் பண்பாட்டினை அனைவரும் அறிய இருபத்துநான்கு ம�ொழிகளில் அறிக்கை நூலாக வெளிவந்திருப்பது சிறப்பினும் சிறப்பு.

தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் ● நாகை மாவட்டம் வெள்ளக்குப்பத்தில் ரூ.100

காவிரி-தெற்கு வெள்ளாறு இந்த ஆண்டு இறுதிக்குள் க�ோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும் இணைக்கப்படும் ● வறுமையைக் கணக்கிடுவதற்கு அசையாச் ● 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை முதல்வர் ச�ொத்தின் மதிப்பு ரூ.1 லட்சமாக அளவுக�ோல் வெளியிட்ட நிலையில் அதில் 114 அறிவிப்புகள் உயர்த்தப்பட்டுள்ளது நிறைவேற்றம் ● இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை ● 12,000 கிராமங்களில் ‘’தமிழ் நெட்’’ திட்டம் தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் செயல்படுத்தப்படும் ● கல்லூரி இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து ● அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 க�ோடி தமிழக அரசு ● மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீட்டில் நிதி பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன ● மெட்ரோ ரயில் தடத்தை விமானநிலையத்தில் ● நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாகக் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க ஆய்வு

30 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


செய்யப்படும் ● தாம்பரம் -வேளச்சேரி இடையே 15 கி.மீ. த�ொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் ● மேகதாதுவில் கர்நாடக அணைகட்ட தமிழக அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது ● எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்களின் நலனைத் தமிழக அரசு பேணும் ● காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தைத்

www.Magazine.ValaiTamil.com

தமிழக அரசு நிறைவேற்றும் ● டெங்கு, மலேரியாவைத் தடுக்க மக்களுக்கு விலையில்லா க�ொசுவலைகள் வழங்கப்படும் ● பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6.94 லட்சம் வீடுகள் கட்டப்படும் ● எரிசக்தி உற்பத்தித் திறனில் உலகளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகப் பாராட்டு

பிப்ரவரி 2020 31


த�ொகுப்பு: நீச்சல்காரன் "பஸ்கண்டக்டர் கிட்ட உலகப் ப�ொருளாதாரம் பேசினது வம்பா ப�ோச்சு" "ஏன்?"

ட்

விக்கெ ன ப�ோஸ்டர் ன்று அவரு? எ ர் வீர யார் லட்சக்கணக்கா ய தி ருப் க்கே த் ட் கு ழ் ரு வீ டிச்சு அவு ன் ்தா அ ர அவ ாத்தாளை ராம் வ ன ்ச 4 வி செஞ

உளவு ப ார்க்க நமது நாலு த�ொ ண்டர்க ள் எதிர்க ட்சிக்கு கட்சி மாறுன ாங்களே , சேதி ஏதாவ து உண ்டா?

உண்மை

யில் அ ந்த நாலு பேர் நம்மை உளவு ப ார்க்க வந்தவு ங்களா ம்

"கச்சா எண் ணெய் விலை ஏறிருச் சுனு ச�ொன்னா டிக ்கெட் எடுக்கச் ச�ொல்றாரு"

யர்கள் யக் ்ளை ள ரீபி ்கொ க் க ற டி ட ்ப ப க எ தீர்கள் ்லாமல் டந் ல க பயமி ைக் ? வுனு கப்பல மன்னா வக் கழி து ம் ருத் ம ட்டுட�ோ ன வி சீ இது எழுதி ல லி கப்ப

மன ைவி உண் டியல்ல : ஏங்க கடு ம�ொட்டைக் தாசி கண யா ப�ோ வர்: ம�ொட்டை டுறீங ்க? வேண் ப�ோ டிக்கி

அத

32 பிப்ரவரி 2020

டுறே னு ட்டேன்

ான் .

www.Magazine.ValaiTamil.com


கீச்சுச் சாளரம் நீச்சல்காரன், மதுரை

உலகத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளில் முதன்மையானது, "சந்தேகமும் சர்க்கரை வியாதியும்" #யதார்த்தம்

@ItsJokker

பகையை எளிதில் வளர்க்கும் முதல் ஆயுதம் பணமாகத் தான் இருக்கும்..!! #வழிகாட்டி @RK_offcl ஒரு தடவை கட் பண்ணா "பேச முடியல"னு அர்த்தம்...., ஒவ்வொரு தடவையும் கட் பண்ணா "பேச முடியாது"னு அர்த்தம்...!!! #இன்கம்மிங். @Ramesh46025635 லீவு இல்லையேனு ஒரு கூட்டம், வேலை இல்லையேனு ஒரு கூட்டம், வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது!

@Kannan_Twitz

அவங்க கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைத் தந்த உடனே, டாபிக்கை மாற்றி விடுவார்கள், @Kozhiyaar மேனேஜரும், மனைவியும்!! கிரிக்கெட்ல வெற்றிக்கும், அபார வெற்றிக்கும் என்ன வித்தியாசம்? எதிர் டீம் ஜெயிச்சா வெற்றி, இந்தியா ஜெயிச்சா அது அபார வெற்றி

@shivaas_twitz

நெடுந்தூரப் பயணத்தில் பாதைகள் என்னுடையது கவிதைகள் உன்னுடையது !! கழுவப்பட்ட ப�ொருள் சுத்தம் ஆகிறது. கழுவிய தண்ணீர் கருப்பாகிறது. புறம் பேசுபவர்களும் தண்ணீர் ப�ோலத் தான்.

@viji_twtzz

@GowthamiTta

FOR ADVERTISEMENT AND ENQUIRIES CONTACT: Magazine@ValaiTamil.com www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 33


இசைப்புலவர் இணையதளம் மற்றும் தமிழ்ப்புலவர் மூலநிரல்கள் வெளியீடு

தளத்தின்

கடந்த 10.01.2020 மாலை 04.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில், தமிழுக்கான “தமிழ் விழா” மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதில்,

மென்பொருள் ஆய்வாளரும், மென்பொருள் வடிவமைப்பாளருமான திருமிகு. துரைப்பாண்டி அவர்களின் இசைப்புலவர் தளத்தினை (WWW.ISAIPULAVAR.IN) பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், இந்நாள் உலகத் தமிழ் இணையச் சங்கத்தின் தலைவருமான முனைவர். திருமிகு. ப�ொன்னவைக்கோ ஐயா அவர்கள் வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அடுத்து, அன்னாரின் தமிழ்ப்புலவர் (WWW.TAMILPULAVAR.ORG) தளத்தின் மூலநிரல்கள் அனைத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக (OPEN SOURCE) த.உதயச்சந்திரன் I.A.S (த.நா. த�ொல்லியல்துறை ஆணையர்) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். மேலும், முதன்முதலாகத் தமிழ் எழுத்துருக்கள் (UNICODE)

அதனைத்தொடர்ந்து, ஐயா. திரு.கணியன்பாலன் அவர்கள் எழுதிய “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” எனும் புத்தகத்தினை திரு.க�ோ.பாலச்சந்திரன் I.A.S (பணி நிறைவு) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அதனைப் பெற்றுக்கொண்டு, தமிழ் ம�ொழியுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

அனைத்தும் மக்கள் பயன்பாட்டுக்காக OPEN SOURCE இல் வெளியிடப்பட்டன. த�ொடர்ந்து, திரு. ஆபிரஹாம் பண்டிதரின் பெயர்த்தி முனைவர்.திருமதி.அமுதாபாண்டியன் அவர்களின் “கருணாமிர்தசாகரம்” எனும் சுருக்கத் திரட்டு நூலினை இசைப்பேரறிஞர். முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் ஐயா அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அந்நூலினைப் பெற்றுக்கொண்ட வணிக வரித்துறை இணை இயக்குநர் திரு.பா.தேவேந்திர பூபதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனைத் த�ொடர்ந்து, அரிமளம் பத்மநாபன் ஐயா அவர்களுக்கு அவரது தமிழிசைப் பணிகளைப் பாராட்டி, “தமிழிசைப் பேரறிஞர்” எனும் விருது வழங்கப்பட்டு, ப�ொன்னாடை ப�ோர்த்தி க�ௌரவிக்கப்ப்பட்டார்.

திரு.ஆழி செந்தில்நாதன் ஆற்றினார்.

அவர்கள்

சிறப்புரை

இறுதியாக, திருப்பூர் வழக்கறிஞரும், எழுத்தாளருமான திருமதி.இரா.சுகுணாதேவி. எம்.ஏ.பி.எல்; அவர்களின் நன்றியுரையுடன் தமிழுக்கான “தமிழ் விழா” இனிதே நிறைவு பெற்றது. -திருப்பூர் சுகுணாதேவி

34 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


பச்சை ரோஜா ஏற்காடு இளங்கோ

ரோஜா என்பது உலகின் மிகப் பிரபலமான தாவரங்களில் ஒன்றாகும். பண்டிகை மற்றும் அலங்காரங்களில் ரோஜா மலர்கள் அதிகளவில் பயன்படுகிறது. இது தனிப்பட்ட அழகு வாய்ந்தது. அனைவரையும் கவரும் விதத்தில் வண்ணமும், வாசனையும் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ரோஜா செடிகளை தங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ஒரு பூங்கா என்றால் அங்கு ரோஜா தாவரங்கள் இல்லாமல் இருக்காது. அப்படியே ரோஜா செடியோ, ரோஜா பூவோ இல்லை என்றால் பார்வையாளர்கள் விரக்தியாகப் பேசுவார்கள். பல்வேறு பூங்காக்களில், ரோஜா தோட்டம் என்கிற தனிப்பகுதியே காணப்படும். அதில் பலவிதமான, பல்வேறு நிறங்களில் ரோஜா பூக்கள் மலர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் மகிழ்வார்கள்.

செடி ரோஜா செடிகள் 20 செ.மீ முதல் 1 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. குட்டை ரகங்கள் 20 – 30 செ.மீ உயரம் மட்டுமே வளரும். இவற்றில் கொடி ரோஜாக்களும் உண்டு. ரோஜா (ROSA) என்னும் பேரினத்தில் 300 சிற்றினங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலப்பினங்களும் உள்ளது. இவை ரோசேசி (ROSACEAE) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ரோஜா செடியில் வளைந்த கொக்கி போன்ற முட்கள் உள்ளன. பெரும்பாலான ரோஜா இனத்தின் தாயகம் ஆசியா ஆகும். சில இனங்களின் பிறப்பிடமாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் உள்ளன. இருப்பினும் டாக்ரோஸ் போன்ற சில காட்டு இனங்கள் ஆர்க்டிக் வரை பரவலாக உள்ளன.

மேலும் ஒட்டு முறையிலும் நாற்றுகளைத் தயார் செய்கின்றனர். ரோஜா தாவரங்களைப் பராமரிப்பது எளிது. ஒரு அழகுத் தாவரமாக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரமாகவும் இது விளங்குகிறது.

சீன ரோஜா ரோஜாக்கள் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவில் வளர்க்கப்பட்டு வந்தன. இன்றைக்கு சுமார் 35000க்கும் மேற்பட்ட சாகுபடி ரகங்கள் உள்ளன. நவீன ரோஜா சாகுபடியானது 10 க்கும் குறைவான இனங்களில் இருந்தே நிறுவப்பட்டன. இதில் சீன இனங்களும் அடங்கும். சீனாவின் பழைய இனங்கள் உயர்ந்த அலங்கார மலர்களாகவும், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் மதிப்பு கொண்டவையாகவும் ரோஜாக்களின் வேர்கள் மண்ணில் ஆழமாகச் உள்ளன. அவை முக்கியமான ரோஜா மூலவுயிர் செல்லாது. வருடம் முழுவதும் பூக்கும். சில (GERMPLASMS) வளத்தைக் கொண்டுள்ளது. இனங்களில் மட்டுமே கனிகள் தோன்றும். அதன் உள்ளே 6 முதல் 150 விதைகள் காணப்படும். ரோசா சைனான்சிஸ் (ROSA CHINENSIS) என்பது கலப்பினங்களில் கனிகள் தோன்றாது. ஆகவே இதன் தாவரவியல் பெயராகும். இது மிகவும் பழைய ரோஜா செடிகளைத் துண்டுகளாக நறுக்கியும், ரோசா இனமாகும். இதுவே மீண்டும், மீண்டும் பூக்கும் பதியம் போட்டும் நாற்றுகளை உருவாக்குகிறார்கள். குணம் கொண்டது. மலர்கள் வாசனை உடையவை. www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 35


மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்றுள்ளது. ஆகவே இதை இனப்பெருக்கத் திட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். பச்சை ரோஜா பல வண்ணங்கள் கொண்ட ரோஜா மலர்கள் உள்ளன. இவற்றில் பச்சை ரோஜா (GREEN ROSE) என்கிற ஒரு ரோஜாவும் உண்டு. பச்சை ரோஜா என்பது மிகவும் அரிதானது. இது மற்ற ரோஜாக்களைப் போன்றதே. இதன் மொட்டுகள் மற்ற ரோஜாவின் மொட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் மொட்டு வெடித்தவுடன் பூவானது முழுக்க, முழுக்க பச்சையாகவே காணப்படும். இதழ்கள் அனைத்தும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன.

இதழ்களானது வண்ணங்களைத் தேர்வு செய்தன. பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடப்பதற்காகவே இதழ்கள் வண்ணமாக மாறின. இது தாவரங்களுக்கு நன்மை பயக்கும் பண்பாகும். உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கான இயற்கை தேர்வு (NATURAL SELECTION) இதுவாகும்.

ரோஜா பூக்கள் வண்ணமயமாக இல்லை என்றால் அத்தோட்டம் அழகானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு ரோஜா தோட்டம் முழுவதும் பச்சை ரோஜாக்களாக இருந்தால் நாம் அதை விரும்பி ரசிக்க மாட்டோம். ஆனால் இந்தப் பச்சை ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று திகைப்பூட்டும் பல வண்ண மலர்கள் படிப்படியாகப் பச்சை ஒருவர் பச்சை ரோஜாவின் அருகில் சென்றால் நிறத்திலிருந்து மாற்றம் அடைந்தன (MUTATED) அவருக்கு அச்செடியில் பூக்கள் இருப்பது தெரியாது என்பதைக் காட்டுகிறது. அவை பூச்சிகள், பறவைகள், இலைகளுக்கு இடையே பூக்களும் பச்சை நிறமாக மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமான இருப்பதால் பூ எது என்று தெரியாது. நன்கு உயிரினங்கள், தங்களைத் தவிர்க்க முடியாத வகையில் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே பூக்கள் இலைகளை வண்ணமயமாக மாற்றியமைத்தன. கண்களுக்குத் தெரியும். பல வண்ணங்களில் ரோஜா இப்படி மாறுவதற்குச் சில கோடி ஆண்டுகள் ஆயின. மலர்களைப் பார்த்துப் பழகிய நமக்குப் பச்சை இது பூக்களில் நடந்த பரிணாமம் எனலாம். நிறத்தில் ரோஜாப்பூ என்றவுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஓல்ட் ப்ளஷ் பச்சை ரோஜாவானது அதன் சந்ததியான ஓல்ட் ப்ளஷ் வரலாறு: (OLD BLUSH) என்பதிலிருந்தது வந்தது. அதாவது பச்சை ரோஜாவுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. ஓல்ட் பளஷ் மேற்கத்திய உலகில் காணப்படுகிறது. இது 1743 ஆம் ஆண்டில்தான் முதன் முதலாகத் இது ஐரோப்பாவிற்கு வந்த முதல் ரோஜாவாக ஏற்றுக் தோன்றியது. இது உண்மையான ரோஜாதான். கொள்ளப்படுகிறது. 1752 ஆம் ஆண்டில் டென்மார்க் இது மற்ற இனம் மற்றும் கலப்பின வகையைப் மற்றும் 1793 இல் இங்கிலாந்திலும் பயிரிடப்பட்டது. போன்றதே. ஆனால் இது 18 ஆம் நூற்றாண்டின் இதன் தோற்றத்தைக் கண்டறிந்தால் அது ரோசா மத்திய காலம் வரை பயிரிடப்படவில்லை. இது சைனென்சிஸில் இருந்தே உருவானது எனத் ஒற்றை இதழ்கள் அல்லது காட்டு ரோஜாக்களுடன் தெரிகிறது. நெருங்கிய தொடர்புடைய, ஒரு பழமையான ரோஜாவிலிருந்தே தோன்றியது. ஆனால் மற்ற வகை ஆய்வு ரோஜாக்களின் பூக்களிலிருந்து இது மாறுபட்டுள்ளது. ஒட்டுதல் பரிசோதனை மற்றும் நுண்ணோக்கி இதற்கு அல்லி இதழ்கள் கிடையாது. இதற்குப் புற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதழ்கள் மட்டுமே உள்ளன. புற இதழ்கள் ஒன்றன் ஆர்.என்.ஏ பரிசோதனையும் நடந்தது. அப்போது மீது ஒன்றாக வட்ட வடிவில் அமைந்துள்ளன. இவை ஓல்ட் ப்ளஷ் மற்றும் பச்சை ரோஜா இரண்டிற்கும் அனைத்தும் பச்சை நிறம் கொண்டவை. மரபணுக்களில் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஹோமோலோஜ்களே (HOMOஇதைப் பார்க்கும்போது நமக்கு ஏமாற்றமாகக் LOGS) பூக்களின் துவக்கம் மற்றும் வளர்ச்சியில் கூட இருக்கும். ஆனால் இதன் மூலம் நாம் ஒரு ஈடுபட்டுள்ள மரபணுக்களில் தூண்டுதலை உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். பூக்கள் ஏற்படுத்தியன என்பதைக் கண்டனர். மேலும் பச்சை அதாவது பூக்கும் தாவரங்கள் சுமார் 130 மில்லியன் ரோஜாவின் ஒவ்வொரு அடுக்கிலும் மரபணுக்கள் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. பூக்கள் என்பவை சோதனையைச் செய்தனர். ஏபிசிஇ மலர் உறுப்பு அக்காலத்தில் இலைகளின் மாற்றத்தால் (MODI- அடையாள மரபணுக்களின் மாற்றியமைக்கப்பட்ட FIED) தோன்றியவை ஆகும். அதாவது இலைகள் வெளிப்பாடுதான் பச்சை ரோஜா ஆகும். இது பூ இதழாகவும், இலைக் காம்பு, பூவின் காம்பாகவும் பைலோடி பினோடைப்புடன் (PHLLODY PHENOபரிணாமத்தில் மாற்றம் அடைந்தன. அச்சமயத்தில் TYPE) தொடர்புடையது. பைலோடி (PHLLODY) பூக்கள் யாவும் பச்சை நிறத்திலேயே இருந்தன. பிறகு என்பது அசாதாரணமான குணம் கொண்ட மலர். இதில்

36 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


இலை போன்ற கட்டமைப்புகள் பூ உறுப்புகளைச் சுழல் வடிவமாக மாற்றும். பச்சை ரோஜா வளர்ப்பு பச்சை ரோஜா என்பது ஒரு சாகுபடி (CULTIVER) வகையாகும். இதன் தாவரவியல் பெயர் ரோசா சைனென்சிஸ் விரிடி ஃப்ளோரா என்பதாகும். தற்போது ரோசா விரிடிஃப்ளோரா (ROSA VIRIDIFLORA) என்றே அழைக்கின்றனர். 1743 ஆம் ஆண்டில் தோன்றியது என்றாலும் 1768 இல்தான் பச்சை ரோஜா பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1830 ஆம் ஆண்டில் பெம்பிரிட்ஜ் மற்றும் ஹாரிசன் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்டது. உலகின் பல பகுதிக்கும் பரவியது. நண்பர் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குச் சென்றது. இது ஓரினச் சேர்க்கை (ASEXUAL) தாவரமாகும். மகரந்தம் கிடையாது. ஆகவே இதைக் கலப்பினம் செய்ய முடியாது. மனிதர்களின் கருனையால் துண்டுகளாக

நறுக்கி வளர்க்கப்படுகின்றன. செடியானது 2 முதல் 5 அடி உயரம் வளரும். வருடம் முழுவதும் பூக்கும். பூக்களில் அல்லி இதழ்கள் (PETALS) கிடையாது. புற இதழ்கள் (SEPALS) ஒன்று சேர்ந்து பூவாக மாறியுள்ளன. புற இதழ்களை புல்லி வட்டம் (CALYX) தாங்கிப் பிடித்துள்ளது. மேலும் மகரந்தத்தாள், சூலகம் போன்றவையும் கிடையாது. பூக்கள் ஆப்பிள் பச்சை நிறமானவை. நன்கு முற்றிய நிலையில் பச்சை நிறத்திலிருந்து வெண்கல (BRONZE) நிறத்திற்கு உள்புற இதழ்கள் மாறுகின்றன. இதிலிருந்து காரமான மிளகுத்தூள் வாசனை வெளிப்படுகிறது. இப்பூக்கள் 30 நாட்கள் வரை வாடாமல் இருக்கின்றன. சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. இச்செடிக்கு எளிதில் நோய் வராது. ஆகவே வீடுகளிலும் வளர்க்கலாம்.

ந.செல்லம்மாள் ஜானகிராமன், ஃபார்மிங்டன் ஹில்ஸ்,மிச்சிகன், வட அமெரிக்கா.

நான்கெழுத்துப் புதிர் 1. ஆதியெழுத்து வலியின�ொலி. ஆதியந்தத்தின் உடன்பாட்டில் இல்லை என்பதில்லை. இரண்டற்றது, மனையைச் சுற்றும் மகளிர் சுற்றம். மூன்றைத் தவிர்த்தால் மரத்தில�ொன்று. அனைத்துமானது ஆன்மீகம்! 2. இரண்டில்லாதது சிற்றுண்டி ஒன்று.நான்குமான இடத்தில் வேளா வேளைக்கு வேலைய�ொன்றே வேலை!மூன்றையும் இரண்டையும் மாற்றினால் உறுதி!முதலும் கடையும் கடைந்தால் கடினமே!

ஐந்தெழுத்துப் புதிர் 3. முதலிரண்டும் தெரிந்து

க�ொள்வதின் வினை.முதலும்,

நான்கைந்தும்

இணைந்தால் நமது நாடல்லாத நாடு! இரண்டற்ற மற்றனைத்தும் உணர்வுடன் ஊறிய, ஊரறிந்த கதம்ப உணவ�ொன்று! அனைத்துமானால் பல்துறையிருக்கும் பாடவகை! www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 37


திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். கீழ்க்காணும் பெயரில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, சித்திரைத் புத்தாண்டு விருதுகள், மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் கலைச்செம்மல் விருதுகள்

விருது, தமிழ்ப் விருது, விருது,

நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

38 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


மத்திய

அரசின் சார்பில் இந்த ஆண்டு 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த லலிதா, சர�ோஜா சிதம்பரம், மன�ோகர் தேவதாஸ் ஆகிய�ோருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ சபி மகபூப், ஷேக் மகபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் ப�ொறியியல் துறைகளில் சிறந்து விளங்கிய பிரதீப் தலப்பிலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் புதுச்சேரியைச் சேர்ந்த மன�ோஜ் தாஸுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சார்பில் சமூகசேவகர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் சமூக சேவகர். இவரால் சுமார் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மறுவாழ்வு மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பத்ம பூஷன் விருது 16 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பெறுகிறார்கள். சமூக சேவகருக்கான கலைப்பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த விகே பத்ம பூஷன் விருதை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அதே வேளையில், ஏற்றுமதி முனுசாமி கிருஷ்ண பக்தருக்குப் பத்மஸ்ரீ விருது பெறுகிறார். அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக த�ொழிற்துறை சார்ந்து பதம் பூஷன் விருதை வேனு சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்குப் பத்மபூஷன் ஸ்ரீனிவாசன் பெறுகிறார்.

கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு ஊர்வலமாகக் க�ொண்டுவரப்பட்ட இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு..

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 21,22,23 தேதிகளில் நடக்கவிருக்கும் இரண்டாவது உலகத் தமிழ் திருக்குறள் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கக் கன்னியாகுமரியிலிருந்து தஞ்சைக்கு ஊர்வலமாக இரு திருவள்ளுவர் சிலைகள் க�ொண்டுவரப்பட்டன. இம்மாநாட்டைத் தமிழ்த்தாய் அறக்கட்டளை மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.உடையார்கோயில் குணா அவர்கள் முயற்சியில் சிறப்பாகத் திட்டமிடப்படுகிறது.. திருக்குறள் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள்..

www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 39


ஆர�ோக்கிய

சமையல்

சிறுதானிய கந்தரப்பம்

சமையல் கலைஞர் ஜி.குமரேசன், சேலம்

சாமை அரிசி தேங்காய் பருப்பு த�ோசை

தேவையானவை ● கம்பு அரை கப் ● ராகி அரை கப் ● உளுந்து 100 கிராம் ● துவரம் பருப்பு 50 கிராம் ● வெல்லம் பாகு காய்ச்சி அது தேவையான அளவு ● ஏலக்காய் ஒரு சிட்டிகை ● எண்ணெய் தேவையான அளவு.

தேவையானவை ● சாமை அரிசி ஒரு கப் ● துருவிய தேங்காய் ஒரு கப் ● கடலைப்பருப்பு அரை கப் ● உளுந்து அரை கப் ● வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன் ● பூண்டு நாலு நம்பர் ● காய்ந்த மிளகாய் 5 நம்பர் ● கருவேப்பிலை சிறிதளவு ● உப்பு தேவையான அளவு ● எண்ணெய் தேவையான அளவு ● சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை

செய்முறை

கம்பு ராகி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை மற்றொரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கிரைண்டரில் மைய அரைத்துக் க�ொள்ள வேண்டும். தண்ணீர் சிறிதளவு ஊற்றி கெட்டியான அளவு இருக்குமாறு செய்து க�ொள்ள வேண்டும். பிறகு அதில் காய்ச்சிய வெல்லப்பாகைச் சேர்த்து இட்லி மாவு பதம் அளவிற்குக் கெட்டியாக வைத்துக் க�ொள்ள வேண்டும். அதில் ஏலக்காயும் சேர்த்து, சூடான எண்ணெய்யில் ஒரு கரண்டி அளவு மணவை ஊற்றி கந்தர அப்பத்தைப் ப�ொன்னிறமாகப் ப�ொரித்து எடுக்க வேண்டும்.

40 பிப்ரவரி 2020

சாமை அரிசி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து இருக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் உளுந்து ஆகியவற்றைச் சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். துருவிய தேங்காய் மற்றும் சாமை அரிசி , காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கிரைண்டரில் ஆட்டிக் க�ொள்ளவேண்டும். கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பையும் கிரைண்டரில் ஆட்டிக் க�ொள்ளவேண்டும். இரண்டையும் ஒன்று சேர்த்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாகப் புளிக்க வைக்க வேண்டும். ஜீரகம் , கருவேப்பிலை, க�ொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மாவைத் தயார் செய்து த�ோசைக்கல்லில் ஊற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவேண்டும். க�ொத்தமல்லி துவையல் மற்றும் சின்ன வெங்காயம் சட்னி சுவையாக இருக்கும். குறிப்பு: அரிசியுடன் தேங்காய் சேர்க்கும் ப�ோது தண்ணீரை அளவு பார்த்து ஊற்ற வேண்டும் ஏனெனில் தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே அரிசி அரைப்பதற்குப் ப�ோதுமானதாக இருக்கும். www.Magazine.ValaiTamil.com


உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. இந்தியா

www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 41


வாசிங்டன் டிசி

குவைத்

ச�ௌதி

விடை:

1. ஆலயம்

42 பிப்ரவரி 2020

/

2. அலுவல்

/

3. அறிவியல்

www.Magazine.ValaiTamil.com


"முனைவர் அழகப்பா ராம்மோகன் நினைவு திருக்குறள் ம�ொழிபெயர்ப்பு நூல்கள் த�ொகுக்கும் திட்டம்"

திருக்குறள்

வெளிவந்துள்ள பிறம�ொழி ம�ொழிபெயர்ப்புகளைத் த�ொகுப்பதற்காக வலைத்தமிழ் உருவாக்கியுள்ள திருக்குறள் ஆர்வலர், திரு.இளங்கோ தங்கவேலு தலைமையிலான குழு பல்வேறு நாடுகளின் நூலகங்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழறிஞர்களை த�ொடர்புக�ொண்டு ம�ொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த விவரங்களை திரட்டி நூல்களை சென்னைக்கு அனுப்பிவருகிறது. இம்முயற்சியில் இதுவரை நமக்கு வந்துள்ள ம�ொழிபெயர்ப்பு நூல்கள் : இதுவரை நமக்கு வந்துள்ள ம�ொழிபெயர்ப்புகள்: 1. பிரெஞ்ச் 2. இந்தி 3. மலையாளம் 4. சமஸ்கிரதம் 5.தமிழி (கல்வெட்டு) 6.அரபி 7.க�ொரியா 8. ஜெர்மன் 9. கன்னடம் 10.கிரிய�ோல் www.Magazine.ValaiTamil.com

திருக்குறள் ம�ொழிபெயர்ப்பு நூல்கள் சென்னைக்கு வரத்தொடங்கிவிட்டன. உங்கள் நாடுகளில் , உங்கள் நூலகத்தில், உங்களுக்குத் தெரிந்தவர்களிடம், திருக்குறள் ம�ொழிபெயர்ப்பு நூல்கள் இருந்தால் விவரங்களை பகிர்ந்து உதவுங்கள். த�ொடர்புக்கு: MAGAZINE@VALAITAMIL.COM இதுவரை எத்தனை ம�ொழிகளில் திருக்குறள் ம�ொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை த�ோராயமாக ச�ொல்லிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகம் இனி அத்தனை ம�ொழிபெயர்ப்பு நூல்களையும் ஒரே இடத்தில் கண்களால் காணமுடியும். பிறநாட்டு நண்பர்களுக்கு அவர்களுக்குப் புரிந்த ம�ொழியிலேயே திருக்குறளை பரிசாகக் க�ொடுக்கமுடியும்.

பிப்ரவரி 2020 43


44 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 45


“வலைத்தமிழ் ம�ொட்டு” வாசித்துவிட்டீர்களா? சிறுவர்களுக்கான இதழாக

இவ்வாண்டின்

இதழான இதழை குழு

காலாண்டு மூன்றாவது

"வலைத்தமிழ்

ம�ொட்டு"

வெளியிடுவதில்

ஆசிரியர்

மகிழ்ச்சியடைகிறது.

தலைமுறைக்கு

நம்

தமிழ்

அடுத்த ம�ொழியைக்

கற்றுக்கொடுக்க உந்துசக்தியாக இவ்விதழை வடிவமைத்துள்ளோம்.

தமிழ்ப்பள்ளிகள்

இதை வகுப்பறையில் பயன்படுத்தி உங்கள் கருத்துகளை பெற்றோர்களும் தங்களுக்குத்

எங்களுக்கு , தெரிந்த

எழுதுங்கள்.

ஆசிரியர்களும் சிறுவர்களுக்கு

இவ்விதழைக் க�ொண்டுசேர்க்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிற�ோம். To go to Magazine Home page: www.Mottu.ValaiTamil.com அச்சுப் பிரதி விருப்பத்தைப் பதிவு செய்ய, த�ொடர்புக்கு

mottu@ValaiTamil.com-க்கு

மின்னஞ்சல் அனுப்பவும்.

46 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com


www.Magazine.ValaiTamil.com

பிப்ரவரி 2020 47


48 பிப்ரவரி 2020

www.Magazine.ValaiTamil.com