Skip to main content

Thenral Mullai 2018 Volume 17, Issue 3

Page 1

ñô˜: 15

Þî›: 3

Thenral Mullai A Publication of Tamil Sangam of Greater Washington IN

F¼õœÀõ󣇴 2049

முத்தமிழ் விழா விருந்தினர்கள்

சு. வெங்கடசன்

ஆழி செந்தில்நாதன்

ஜி. பாலசந்திரன்

சுந்தரராஜன்

அறிவுமதி

உல்ரிக் நிக்லஸ்

ஞானசம்பந்தன்

ரேவதி

கே. சுபாசினி

நவம்பர் & 2018

உள்ளே....

தலைவர் மடல் ஆசிரியரிடமிருந்து... தமிழாய்ந்த தலைவனுக்குப் புகழ்ஞ்சலி கீழடி நம் தாய்மடி கணக்கதிகாரம் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தமிழ் விழா தவறு செய்தால்.... க�ோவூர் கிழார் தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியன் தமிழ் இலக்கியத் த�ொடரடைவு தமிழிலக்கியக் கூட்டங்கள் சு. வெங்கடேசன்: கீழடி ஆகழாய்வு இயற்கை வளம் காப்போம் சின்னஞ் சிறு கவிதைகள் பூவுலகின் நண்பர் சுந்தரராஜன் உரை தமிழ்ச்சங்க இன்பச் சிற்றுலாக்கள் தமிழிசையைக் கற்க புதிய வாய்ப்புகள் புத்தம் புது பூமி க�ொடிநாள் வள்ளுவன் தமிழ் மையம் தமிழியக்கம் தமிழர்களின் வாழ்வியல் கண்காட்சி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அறியப்பாடாத தமிழ் ம�ொழி தமிழ் மரபுத் திங்கள் ஏன்? ‍ கூத்துப்பட்டறை நிறுவனர் நா. முத்துசாமி ‍

நவம்பர் 2018 ஐஸ்வர்யா

Volume: 15 Number: 3

- 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 10 - 13 - 14 - 16 - 18 - 22 - 21 - 22 - 24 - 26 - 28 - 31 - 32 - 34 - 36 - 38 - 40 - 42 - 46

 thenral.mullai@gmail.com

அருள்செல்வி

ஆனந்த்

1

ஆத்மநாதன்


2

அக்டோபர்2018 நவம்பர் 2018  thenral.mullai@gmail.com thenral.mullai@gmail.com


தலைவர் மடல்

தலைவர்

இராசாராம் சீனிவாசன் துணைத்தலைவர்

நித்திலச்செல்வன்முத்துசாமி செயலாளர்

அறிவுமணி இராமலிங்கம் இணைச் செயலாளர்

ேஹமப்பிரியா ப�ொன்னுவேல் ப�ொருளாளர்

இந்திராணி இராதாகிருஷ்ணன் இயக்குனர்கள்

க�ொழந்தவேல் இராமசாமி சுவாமிநாதன் நித்யானந்தம் தீபா செந்தில்நாத் ராதாகிருஷ்ணன் சந்திரகுமார் கவிதா சுப்ரமணியம் விஜயகுமார் சத்யமூர்த்தி சீனிவாசன் சண்முகம் பாலாஜி ஜெயக்குமார்

அன்பு நண்பர்களே, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் குழந்தைகள் தினவிழாவில் கலந்து க�ொண்டு நம் குடும்பத் திருவிழாவாகக் க�ொண்டாடி மகிழ்ந்து க�ொண்டிருக்கும் அனைத்துத் தமிழ்ச் ச�ொந்தங்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் எனது அன்பான வணக்கம். குழந்தைகள் தின விழா நம் அனைவரும் மிகச் சிறப்பான க�ொண்டாடும் ஒரு விழா. வாசிங்டன் வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தமிழப் பள்ளிகள் மற்றும் தமிழ் பயிலும் குழந்தைகள் சங்கமிக்கும் பள்ளிகளின் சங்கமாக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சிறப்புடன் நடந்துவருகிறது. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் க�ொள்கிறேன். இந்த வருடம் க�ோடை விடுமுறையை அனைவரும் தமிழ்ச்சங்கத்தின் இன்பச் சுற்றுலா நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பாகக் க�ொண்டாடி நட்பு பாராட்டி உள்ளம் மகிழ்ந்தனர். இதுப�ோன்ற நிகழ்வுகள் நம் தமிழ்க் குடும்பங்களுக்குப் புதிய நண்பர்கள் அறிமுகமாக ஓர் அரிய வாய்ப்பு. நம் பகுதியில் இருக்கும் அனைத்துத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஆசிரியர் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியை, நமது தமிழ்ச்சங்கம் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது. ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் ஒருங்கிணைப்புடன் வெர்ஜீனியா மாகாணத்தில் ஆகஸ்ட் மாதம் ஓர் பயிற்சிப் பட்டறையும், அமெரிக்கத் தமிழ்க் கல்வி கழகத்தின் ஒருங்கிணைப்புடன் மெரிலேண்ட் மாகாணத்தில் செப்டம்பர் மாதத்தில் ஒரு பயிற்சிப் பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் நம் பகுதியில் சிறப்பாகத் தமிழ்ப்பணி ஆற்றும் தன்னார்வத் தமிழ் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அனைத்துத் தமிழாசிரியர்களையும் மனதார வாழ்த்தி அவர்களின் தன்னலமற்ற தன்னார்வப் பணியைப் பாராட்டுகிறேன். மேலும், நம் பகுதியில் இருக்கும் இளைஞர்களையும், இசை ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இளைஞர்களின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான “தமிழர்களின் வாழ்வியல் கல்விக் கண்காட்சி” நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 15 ஆம் நாள், பெத்தஸ்ட்டா, மெரிலேண்ட் மாகாணத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் அமெரிக்கத் தமிழ்க் கல்வி கழகத்தின் சார்பாகச் சிறப்புப் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப் பட்டனர். இந் நிகழ்வு, நம் இளைய�ோர்களைத் தமிழ் ம�ொழி மற்றும் பண்பாடு சார்ந்து அமெரிக்க மண்ணில் வளர்வதற்கான வழிகாட்டும் முயற்சி. மேலும், நம் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் கேரள மக்களின் உணர்வில் பங்களிக்கும் விதமாக, கேரள மாநிலத்தில் ஏற்பட்ட செய்வதற்கு இயலாத வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நிதி திரட்டி, வாசிங்டன் வட்டாரக் கேரளா சங்கத்திடம் நிதி வழங்கியது. நமது அண்டை மாநிலங்களுடன் நட்பினைப் பாராட்டி புலம்பெயர்ந்த இந்திய மக்களின் ஒற்றுமையை நாம் நிலைநாட்டி வருகிற�ோம். கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நிதி வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர் வரும் 2019ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் சனிக்கிழமை, வால்டர் ஜான்சன் உயர்நிலைப்பள்ளி, பெத்தஸ்டா மெரிலேண்ட்ல் ப�ொங்கல் விழா வெகு சிறப்பாக க�ொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு சிறப்பு விருந்தினர்களுடன், நம் தமிழ் இலக்கியம், ம�ொழி, கலை, பண்பாடு மற்றும் விருந்தோம்பல் ப�ோற்றும் வகையில் ஒரு மாபெரும் விழாவாகக் க�ொண்டாட உள்ளோம். அவ்விழா சிறப்படைய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். 2019 ப�ொங்கல் விழா பற்றிய உங்களின் மேலான கேள்விகள் மற்றும் கருத்துப் பறிமாற்றத்திற்கு President@washigtontamilsangam.org என்ற மின்னஞ்சல் வாயிலாக என்னைத் த�ொடர்பு க�ொள்ளவும் தமிழ்ச் சங்க உறுப்பினராக இல்லாதவர்களுக்கு நீங்கள் எடுத்துச் ச�ொல்லி நம் பகுதியில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் நம் சங்கத்தின் பெருமைமிகு உறுப்பினராக ஆக்குவதில் உங்களின் உதவியை வேண்டுகிறேன். தாங்கள் க�ொடுக்கும் ஆதரவே நாம் மேலும் சிறப்பாகப் பணியாற்ற ஏதுவாக அமையும். உறுப்பினராக http://www.washingtontamilsangam.org/members என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். இது நமது தமிழ் சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!! வாழ்க தமிழ்! வளர்க நம் ஒற்றுமை!! நன்றி. வணக்கம் உங்கள் நண்பன், இராசாராம் சீனிவாசன்

தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

3


அன்புடையீர் வணக்கம். தமிழ்ச்சங்க உறுப்பினர்களை இலையுதிர் காலத் தென்றல் முல்லை இதழின் வழியாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழாவை, வரலாற்றுச் சிறப்பான நிகழ்வாக நடத்தி முடித்து விட்டு, இன்று குழந்தைகள் விழாவைக் க�ொண்டாடுகிற�ோம். விடுமுறை முடிந்து தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தன்னார்வத் த�ொண்டாற்றும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பணி சாலச்சிறந்து; பெற்றோர்கள் க�ொடுக்கும் ஊக்கமே நம் குழந்தைகளின் தமிழ்க் கல்வி சிறக்க வழிக�ோலும். நம் தமிழ்ச்சங்கம், அமெரிக்கன் தமிழ்க் கல்விக் கழகத்தோடு இணைந்து நடத்திய தமிழாசிரியர்கள் பயிற்சிப்பட்டறை ஒரு சிறப்பான செயல்பாடகும். உ று ப் பி னர்க ளி ட மி ரு ந் து தென்ற ல் மு ல்லை இ த ழை வளப்படுத்தும் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. குறைகளையும் நிறைகளையும் thenral.mullai@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டுகிற�ோம். உங்கள் படைப்புகளைத் தென்றல் முல்லைக்கு அனுப்பித் தர வேண்டுகிற�ோம். இலக்கியப் படைப்புகள், கவிதைகள், தமிழ்ச்சங்கச் செயல்பாடுக்ளோடு நாட்டு நடப்பு செய்திகளும் இவ்விதழ் வருகிறது. மேலும் வரும் ப�ொங்கல் இதழில் 'கேள்வி பதில்' பகுதியும் சேர்க்கலாம் என்றிருக்கிற�ோம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தும் 2019 உலகத் தமிழாய்ச்சி மாநாட்டு மலருக்கு நீங்கள் படைப்புகள் அளிக்க விரும்பினால் www.iatrnew.org அல்லது https://www.icsts10.org என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். நம் பகுதியில் நடக்கும் தமிழ் இலக்கியக் கூட்டங்களில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிற�ோம். பல்வழி அழைப்பிலும் பல் இலக்கியக் கூட்டங்கள் நடந்து வருகிறது. இலக்கியக் கூட்ட அறிவிப்புகள் தமிழ்ச்சங்கச் செய்தி மடலில் வெளியிடப்பட்டு வருகிறது. பார்வையாளர்களாக மட்டும் உங்களை அழைக்கவில்லை; நீங்களும் கலந்து உரையாற்றலாம். இலக்கியச் ச�ொற்பொழிவாற்ற இந்தத் தளங்களை நீங்கள் மேடைகளாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, அக்டோபர் 28 ஆம் தேதி நடந்த "அறியப்பாடாத தமிழ்மொழி" நூலாய்வுக் கூட்டத்தில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் விஜயகுமார் சத்தியமூர்த்தி, கவிதா சந்திரசேகரன், ல�ோகநாதன் இராமசாமி, பன்னீர்செல்வம் இராஜமாணிக்கம், கிருத்திகா பிரவீன்பாபு, செந்தில்முருகன் வேலுசாமி, பிரியா கிருஷ்ணராஜ், வா. மு. சே. தமிழ் மணிக்கண்டன் ஆகிய�ோர்கள் சிறப்பாக நூலாய்வு குறித்து சிறப்பாக உரையாற்றினர். தமிழ் என்பது ஒரு ம�ொழி மட்டுமல்ல; ஒரு உன்னத இனத்தின் பெயர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்,’ என விரிந்து பரந்த ந�ோக்கம் க�ொண்டது. சீரிளமைத் திறம் குன்றாக செம்மொழி நமதென்று பெருமை க�ொள்வோம். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத சங்கே முழங்கு,’ என்ற பாவேந்தரின் அறை கூவல�ோடு நம் தமிழ்மொழியை முன்னெடுத்துச் செல்வோம். அன்புடன்

நாஞ்சில் இ. பீற்றர்

முதன்மை ஆசிரியர், தென்றல் முல்லை ஆசிரியர்க் குழு

4

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


தமிழாய்ந்த தலைவனுக்குப் புகழஞ்சலி

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிட்ட இரங்கல் செய்தி

பன்முகத் திறமை க�ொண்ட கலைஞர் அவர்கள் இன்று விடைபெற்றார். த மி ழ க மு த ல ்வ ர ா க ஐ ந் து மு றை யு ம் , சட்டமன்ற உறுப்பினராக 13 முறை த�ோல்வியே தழுவாத மக்கள் பணிசெய்து தமிழ்நாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்தார் என்பதை அறிந்து வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் அதிர்ச்சியடைகிறது . தமிழ்ச்சங்கத்தின் ச ார்பா க ஆ ழ ்ந்த இ ர ங்கல ை தெரிவித்துக்கொள்கிறது.. க டி ன உ ழை ப் பி ன் அ டையா ள மா ய் , எ ழு த்தா ள ர ா க , பேச்சா ள ர ா க , வ ச ன க ர்த்தா வ ா க , ப த் தி ரி கையா ள ர ா க , இ லக் கி ய வ ா தி யா க , ச மூ க ப் ப�ோராளியாக, தலைவராக பன்முகத்திறமை க�ொண்ட தனித்துவம் பெற்றவர். கலைஞர் அவர்கள். தன் 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானவர், 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார். பெண்களுக்குச் ச�ொத்தில் சம உரிமை என பல்வேறு புரட்சிகாரமானத் திட்டங்களுக்கு வித்திட்டவர்.. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 21 நாடகங்களை எழுதியிருக்கிறார். பத்து சமூக நாவல்களையும், 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அ வ ர் ப ணி யாற் றி ய ப டங்க ளி ன் எண்ணிக்கை 69. அவரது அளவற்ற உழைப்பு இளம் தலைமுறையினர் கற்க வேண்டிய ஒன்றாகும்.

க ல ை ஞ ர் க ரு ண ா நி தி அ வ ர்க ளி ன் மறை வி ற் கு வ ா சி ங ்ட ன் வ ட ்டா ர த் த மி ழ ்ச ்சங்க ம் ஆ ழ ்ந்த இ ர ங்க ல ்களை தெரிவித்துக்கொள்கிறது. - இராஜாராம் சீனிவாசன், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு த்த மி ழ் அ றி ஞ ர் க ல ை ஞ ர் தி ரு . க ரு ண ா நி தி அ வ ர்க ளு க் கு அ ஞ ்ச லி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை வெர்ஜீனியாவில் கிரேட் பால்ஸ் ப�ொது நூ ல க த் தி ல் நடை பெ ற ்ற து . நி க ழ் வி ல் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் பங்கு க�ொண்டு தங்களின் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துக�ொண்டார்கள்.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

5


நம் தாய் மடி

மதுரை கீழடித் தடம்!

பன்னீர் செல்வம் இராசமாணிக்கம் த�ொல்குடித் தமிழர் வாழ்வு

கழுதைக்குத் தெரியுமா

வடம் பிடித்து வந்த பாதை

கற்பூர நாற்றம்?

அகழ்வாராய்ச்சி கண்ட உண்மை!

வெந்து சாவதா பெருமை?

அறிவியல் கணிக்கும் இனி

தில்லிக்குத் தெரியமா

த�ொண்மை குடிகள்

உண்மையின் உறைவிடம்?

முகிழ்ந்த களத்தில் மூப்பின் காலத்தை!

தடைக் கற்கள் வடக்கிலிருந்து

புதை குழிகளுக்குள்

தென் மதுரை

பதுங்கிக் கிடப்பது

தேர் ஓடும்

விந்தியத்திற்குத் தெற்கே

உயரிய வாழ்வின்

கீழடியில் - கிழக்கின்

திராவிடம் என்ற பேதம்

உரிமைத் தடங்கள்!

கதிர�ொளி காண

பாராட்டி வந்தது ப�ோதும்

பண்டைய மரபின்

மேற்குலகம்

இந்தியத்திற்கே

பாரிய உறைகள்!

மேலும் விரும்பும்.

மூல நாதம் முழங்குது காண்!

அறியாமல் இல்லை

தென் மதுரையில்

வட தில்லி !

ஒற்றுமை ஒன்றையே பேணுக !

மாண்ட கீழடியில்

கழுதைக்குத் தெரியுமா

தமிழுக்கும் தமிழர்க்கும்

வாழ்ந்த குடிகளின்

கற்பூர நாற்றம் !

பெருமை - த�ொண்மையும்

ஆழ்ந்த பெருமை!

த�ொடர்ச்சியுமே!

பேசி ம�ொழிவது

தெற்கின் தென்றல்

ம�ொழிக தமிழ்

யாவரும் கேளிர் என்ற

வாடைக்குப் ப�ொறுப்பதில்லை

பேசுக தமிழே - பெருமை.

தமிழரின் த�ொண்மை!

ப�ொறாமைத் தீயில்

6

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


கணக்கதிகாரம்

செபாஸ்டின் சூசை அருள்

20 x 6 = 120 கணக்கதிகாரம் 15-ஆம் நூற்றாண்டில் த�ோன்றிய நூல். கணக்கதிகாரம் காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். "இவற்றில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் ப�ொருட்சார்ந்த வாழ்க்கையில் த�ோய்ந்து, தினசரி உழைப்பின் வெளிப்பாடுகளை கணக்கியல் வழியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது." இ ந ்த நூ லி ல் க�ொ டு க்கப்ப ட் டு ள்ள சி ல பு தி ர் களில் ஒன்று. இது பூசணிக்காயை உடைக்காமலேயே அதிலிருக்கும் விதைகளைக் கண்டறியும் முறை. விளக்கம்: ஒரு பூசணிக்காயில் 8 கீற்றுகள் இருப்பதாக வைத்துக் க�ொ ண ்டா ல் கீ ழ்வ ரு ம் மு றைப்ப டி வி த ை க ளி ன் எண்ணிக்கையைக் கண்டறியலாம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. கீற்றுகள்: 8

4 x 6 = 24 ------------- 144 ------------- 144-ன் தசம வரிசைப்படி 5 ஆல் பெருக்க 100 x 5

= 500

40 x 5

= 200

4x5

= 20

---------------------

720

--------------------720 இல் பாதியை எடுத்து அதனை 3ஆல் பெருக்க வருவது விதைகளின் எண்ணிக்கை.

இதனை 3 ஆல் பெருக்க 8 x 3 = 24 2 4 ஐ அ த ன் த ச மங்களை ப் ப�ொ ரு த் து ப் பிரித்தால் இதனை 6 ஆல் தனித்தனியாக பெருக்கி வரும் விடைகளைக் கூட்ட வேண்டும்.

720 / 2 = 360 360 x 3 = 1080 ஆக விதைகளின் எண்ணிக்கை 1080. முயன்று பாருங்களேன்!

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

7


வரலாற்றுச் சிறப்புமிக்க நம் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா! வா

சி ங ்ட ன் வ ட ்டா ர த் தமிழ்ச்சங்கத்தின் 2018 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவானது ஒ ரு வ ர லாற் று ச் சி ற ப் பு மி க ்க , மு த்தாய்ப்பா ன வி ழ ா வ ா கு ம் . இதுவரை வரலாற்றில் இல்லாதவாறு பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு து றை க ளைச் சேர்ந்த சி ற ப் பு விருந்தினர்கள் கலந்துக�ொண்டனர்.

சி ற ப்பா ன த� ொ ரு உ ரை அனைவரையும் கவர்ந்தத�ோடு மட் டு ம ல ்லா து சி ந் தி க ்க வு ம் வைத்தது.

சிறப்பு மிக்க இந்த விழாவானது கடந்த சூலைத் திங்கள் 7-ம் நாள் அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள இராக்வில் நகரத்தில் உள்ள ரிச்சர்ட் மான்ட்கோமரி மேநிலைப் ப ள் ளி யி ல் ஆ யி ர த் தி ற் கு ம் மேற்பட்டோர் அமரக் கூடிய சிறப்பானத்தொரு அரங்கில் பிற்பகல் 12.30 மணியளவில் வாழை இலை விருந்துடன் இனிதே ஆரம்பமானது.

எழுத்தாளர் சு. வெங்கடேசன் கீழடி ஆய்வுக் குறித்து சிறப்புரை ஆ ற் றி ன ா ர் . இ வ ர் எ ழு தி ய முதல் நூலான காவல் க�ோட்டம் எ ன்ற வ ர லாற் று ப் பு தி ன நூ லு க ்கா க 2 0 1 1 ஆ ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு மு ற ்ப ோக் கு எ ழு த்தா ள ர் ச ங்க த் தி ன் ப� ொ து ச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இ ய க ்க த்தி ல் 2 0 1 2 ஆ ம் ஆ ண் டில் வெளி வந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் க�ோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் க�ொண்டது.

சத்யா அறிவுமணி

சைவப் பிரியர்களுக்கு அறுசுவை சைவ விருந்தும், அசைவ பிரியர்களுக்கு நாட்டுக்கோழி பிரியாணியுடன் சுவையான அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது. அ னை வ ரு ம் உ ண் டு க ளி த்த சு வைய�ோ டு நண்பர்களுடன் அளவளாவ மிகச்சரியாக நண்பகல் 2 மணிக்கு இயல், இசை, நாடகம் அன்னைத் தமிழில் க � ொ ண ்டா ட ்ட ம் எ ன்ற த ல ை ப்ப ோ டு வி ழ ா த�ொடங்கியது. இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் ம�ொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் க�ோட்பாடு வெளிப்படுத்தி இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது நமது தமிழ்ச் சங்கம் நம் ம�ொழிக்கு செய்யும் சிறப்பாகும். சிறப்பு விருந்தினர்கள் இந்த மகத்தான விழாவிற்கு, இந்திய ஆட்சிப் பணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகி மகுடம் சூட்டிய திரு. பாலசந்திரன் இ.ஆ.ப அவர்கள் கலந்து க�ொண்டு சிறப்பித்தார். அவரது நகைச்சுவை கலந்த

8

நவம்பர் 2018

ம�ொழி நிகர்மை உரிமை பரப்பியக்கத்தின் செயலர். தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப் பாளர், பதிப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் தமிழ்மொழி உரிமை குறித்து சிறப்புரை ஆற்றினார். மனித நேயம் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர் திருமதி ரேவதி அவர்களின் உரை அரங்கில் உள்ள அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சார்ந்த திரு சுந்தரராசன் அவர்களின் உரையானது உலக மயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி த�ொடர்பான அறிவுவிழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது என்பதை அடிப்படையாக க�ொண்டு பேசியது அனைவருக்கும் விழிப்புணர்வைத் தந்தது.

 thenral.mullai@gmail.com


திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் அறிவுமதியின் க வி த் து ன மா ன பேச் சு ம் , பே ர ா சி ரி ய ர் கு . ஞானசம்பந்தனின் கருத்தாழமிக்க பேச்சும் இந்த விழாவை மெருகூட்டியது. மேலும், கல�ோன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்களின் சிறப்புரை தமிழின் ஆழத்தை மக்களுக்கு உணரச் செய்யும் வகையில் அமைந்தது மிகவும் சிறப்பு. கர்நாடக இசை மேதை திரு. திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்களின் பாடலுடன் கலந்த ச�ொற்பொழிவு இசைப்பிரியர்களுக்கு மட்டுமல்லாது அன்று வருகை தந்திருந்த அனைவரது செவிக்கும் விருந்தாக அமைந்தது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நெறியாளர் முனைவர் கே. சுபாசினி அவர்களின் உரை மற்றும் அவர்களது தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வெ ன் று நி ற ்கக் கூ டி ய ப ா து க ாக் கு ம் மு யற் சி அனைவரையும் பிரமிக்க வைத்தது.

நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் இந்த விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்தது விஜய் த�ொலைக்காட்சி புகழ் திருமதி ஐசுவர்யா பிரபாகர் அவர்களின் அசத்தல் நடனமும், நமது வாசிங்டன் வ ட ்டா ர த மி ழ ்ச ்சங்க த் தி ன் உ ள் ளூ ர் இ சைக் குழுவினருடன் சேர்ந்து தமிழகத்திலிருந்து வருகை

தந்திருந்த பறை இசை கலைஞர்கள் திரு. ஆனந்த் மற் று ம் தி ரு ம தி த மி ழ்ச் செல் வி அ வ ர்க ளி ன் அட்டகாசமான இசை நிகழ்ச்சியும் என்றால் அது மிகையாகாது. இவர்களது நடனம் மற்றும் இசைக்கு ஒட்டு ம�ொத்த அரங்கமும் சேர்ந்து ஆடியதும் மற்றும் நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பலர் இவர்களுடன் சேர்ந்து மேடையில் ஆடிய நடனமும் கண்கொள்ளாக் காட்சியாகும். மேற்கண்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சேர்த்து நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் உள்ளூர் கலை நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடை பெற்றது. தமிழகத்திலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நமது தமிழ்ச் சங்கதின் சார்பாக பட்டம், மலர்க்கொத்து மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. நமது தமிழ்ச்சங்கதின் செயற்குழு மற்றும் நமது சங்கத்தின் முதுகெலும்பான தன்னார்வர்களின் அ ய ர ா த உ ழைப்பா லு ம் இ ந்த வி ழ ா மி க வு ம் நேர்த்தியாக, காலந்தவறாமல் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து முடிந்ததது.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

9


இலக்கியம்

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத க�ோவூர் கிழார்

ச�ோ

ழன் கரிகால் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெ ரு வ ள த் சிறுகுடிக் கிழான் பண்ணன் த ா னு க் கு ஆகிய�ோர் வாழ்ந்த காலத்தில் மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் வாழ்ந்தவர். அவர் ச�ோழன் பெருவிறற் கிள்ளி என்று இரண்டு நல ங் கி ள் ளி யை யு ம் கி ள் ளி மகன்கள் இருந்தனர். கரிகாலன் வ ள வ னை யு ம் பு க ழ் ந் து இ ற ந்த பி ற கு , ச�ோ ழ நா ட ்டை பாடியுள்ளார். நலங்கிள்ளியின் இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி வெற் றி க ளைச் சி ற ப் பி த் து , உறையூரைத் தலைநகரமாகவும், புறநானூற்றுப் பாடல் 31 – இல், வேற்படற்கைப் பெருவிறற் கிள்ளி ” வ ட நாட் டி ல் உ ள்ள பூம்புகாரைத் தலைநகரமாகவும் மன்னர்கள் நீ எப்பொழுது க � ொ ண் டு ச�ோ ழ நாட் டி ன் அ ங்கே உ ன் ப டை யு ட ன் இருபகுதிகளையும் ஆண்டனர். முனைவர் இர. பிரபாகரன் வருவாய�ோ என்று நினைத்து மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி என்று ஒரு மகனும் நற்சோணை உள்ளனர்.” என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் என்று க�ோவூர் கிழார் அவனைப் புகழ்ந்து பெருவிறற்கிள்ளிக்குக் கிள்ளி வளவன், நலங்கிள்ளி, பாடுகிறார். அடுத்த பாடலில் அவர் ச�ோழன் மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். நலங்கிள்ளியின் வள்ளல் தன்மையை வியந்து மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, சேரன் பாடுகிறார். புறநானூற்றுப் பாடல் 41 -இல், க�ோவூர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் கிழார், ”ச�ோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி பு ரி ந்தா ள் . சே ர ன் செ ங் கு ட் டு வ னு ம் , வளவனைக் க�ோபமூட்டியவர்கள், அவர்களின் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் நாடுகளில் நடைபெறும் தீய நிமித்தங்களையும், இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த அவர்களின் கனவில் காணும் தீய நிகழ்ச்சிகளையும் இருபிள்ளைகள். நினைத்து அஞ்சுகின்றார்கள். அவர்கள் தம் ஒரு சமயம், வேற்பஃறடக்கைப் பெருவிறற் அச்சத்தை தம் மகளிர்க்குத் தெரியாதவாறு கிள்ளிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மறைத்துக் கலங்குகின்றனர்.” என்று கிள்ளி இடையே ப�ோர் நடந்தது. அப்போரில் அவ்விரு வ ள வ னி ன் வ லி ம ை யை யு ம் அ வ னு டைய மன்னர்களும் இறந்தனர். வேற்பஃறடக்கைப் பகைவர்கள் அவனுக்கு அஞ்சி வாழ்ந்தையும் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு, தன் தந்தையைப் கு றி ப் பி டு கி ற ா ர் . இ வ ்வா று மன்னர்களை ப் ப�ோல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக் புகழ்ந்தும் பாராட்டியும் பாடிய புலவர் க�ோவூர் க � ொ ண் டு ச�ோ ழ நாட் டி ன் ஒ ரு ப கு தி யை கி ழ ா ர் , அ வ ர்க ள் த வ று செய்த ப� ொ ழு து ஆண்டான். மணக்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் அவர்களைத் தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை. நெடுங்கிள்ளி உறையூரைத் தலைநகராகக் க�ொண்டு நாட்டை விட்டுக்கொடு அல்லது ப�ோரிடு! ச�ோழநாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டான். என்ன காரணத்தால�ோ, நலங் கிள்ளிக்கும் புலவர் க�ோவூர் கிழார், கிள்ளி வளவன்,

10

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


நெடுங்கிள்ளிக்கும் இடையே பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த ப� ொ ழு து , நல ங் கி ள் ளி , ஆ வூ ரை மு ற் று கை யி ட் டு நெ டு ங் கி ள் ளி யை வ ரு த் தி ன ா ன் . நெ டு ங் கி ள் ளி , அ ங் கி ரு ந் து த ப் பி , உ றை யூ ரு க் கு ச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறை யூரை முற்றுகை யிட்டான். நலங்கிள்ளி உ றை யூ ரை மு ற் று கை யி ட ்டா லு ம் , நெடுங்கிள்ளி ப�ோருக்கு வராமல், தன் அரண் மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், க�ோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று, அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல் மறவை ஆயின் ப�ோர�ொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லை ஆகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக உடைத்திது காணுங் காலே! (புறநானூறு, பாடல் 44, 11- 16)

என்று கூறுகிறார். அதாவது, ”நீ அ ற வ ழி யி ல் வ ா ழ வி ரு ம் பி ன ால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் க�ொடு; வீ ர ன ா க வ ா ழ வி ரு ம் பி ன ால் நலங்கிள்ளியுடன் ப�ோர் செய். இந்த இ ர ண் டு செய ல ்க ளி ல் எ தை யு ம் செய்யாமல் , அ ர ண ்மனைக் கு ள் ஒளிந்துக�ொண்டிருப்பது வெட்கத்திற் குரியது” என்று அறிவுரை கூறினார். ஒ ரு அ ர ச னி ட ம் செ ன் று அ வ ன் செயல் சரியன்று என்று கூறுவதும் அவன் செயல் வெட்கத்திற் குரியது என்று கூறுவதும் அவ்வளவு எளிதன்று. க�ோவூர் கிழாரின் மன உறுதிக்கும், நெடுங்கிள்ளிக்கு அவரிடம் இருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இப்பாடல் ஒ ரு சி ற ந்த எ டு த் து க ்கா ட ்டா க த் திகழ்கிறது. த�ோற்பது நும் குடியே! ச�ோழன் நலங்கிள்ளிக்கும் ச�ோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே இருந்த பகை வளர்ந்துக�ொண்டே இருந்தது. ச�ோ ழ ன் நல ங் கி ள் ளி , ச�ோ ழ ன் நெடுங்கிள்ளியை எதிர்த்து மீண்டும் ஒருமுறை ப�ோரிடுவது என்று முடிவு

செய்தான். அதை அறிந்த புலவர் க�ோவூர் கிழார் ச�ோழன் நலங்கிள்ளியிடம் சென்று, “ நீ நெடுங்கிள்ளியுடன் ப�ோர் செய்யப் ப�ோவதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் இருவரில் எவரும் வெண்ணிறமான பனம்பூமாலை அணிந்த சேரனும் இல்லை; கரிய வேம்பின் மாலையை அணிந்த பாண்டியனும் இல்லை. நீங்கள் இருவருமே ஆத்திப் பூக்களாலான மாலையை அணிந்த ச�ோழ மன்னர்கள். உங்கள் இருவரில் ஒருவர் த�ோற்றாலும் த�ோற்பது ச�ோழனின் குடிதான். இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அன்று. ஆ க வே , உ ங்க ள் செயல் உங்க ள் கு டி ப்பெ ரு ம ை க் கு த் தகுந்ததன்று. உங்களைப் ப�ோன்ற மற்ற வேந்தர்கள், இந்தப் ப�ோரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிரிப்பார்கள்.” என்று கூறிச் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். க�ோவூர் கிழாரின் முயற்சியால் சிலகாலம் ப�ோர் தவிர்க்கப்பட்டது. மன்னர்களாக இருந்தாலும் தவறு செய்தால் தயங்காமல் சுட்டிக் காட்டும் இயல்புடையவராக க�ோவூர் கிழார் வாழ்ந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் புறநானூற்றுப் பாடல் (பாடல் 45) உறுதிப்படுத்துகிறது. புலவரைக் காத்த புலவர்! ஒரு சமயம் இளந்தத்தன் என்ற புலவர் உறையூருக்குச் சென்றார். அப்பொழுது அங்கு ஆட்சி செய்து க�ொண்டிருந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவரை ஒரு ஒற்றன் என்று தவறாகக் கருதி அவரைக் க�ொலை செய்ய முடிவு செய்தான். அப்பொழுது அங்குச் சென்ற க�ோவூர் கிழார், ”வரையாது க�ொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து,

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

11


பறவைகள்போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண் டு ம் எ ன் று எ ண் ணி , அ வ ற ்றை ப் பாதுகாக்காமல் உண்டு, பிறர்க்கும் குறையாது க�ொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வாழ்வதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீ ம ை செய்வார்கள�ோ ? பு ல வ ர்க ள் , க ல் வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் வெட்கப்படச் செய்து, அவர்களை வெற்றிக�ொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உ ல க ா ளு ம் செ ல ்வ மு ம் பெ ற ்ற உ ன்னை ப் ப�ோன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர் க ள் . ” எ ன் று பு ல வ ர்க ளி ன் பெ ரு ம ை யை எடுத்துரைத்து இளந்தத்தனைக் காப்பற்றினார் என்று புறநானூற்றுப் பாடல் 47-இல் இருந்து தெரிகிறது. சிறுவர்களைக் காப்பாற்றிய க�ோவூர் கிழார்

மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் க�ொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட க�ோவூர் கிழார், சிறுவர்கள் க�ொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பினார். அவர் கிள்ளி வளவனிடம் சென்று, “ நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அ ளி த்த மாமன்ன ன் சி பி யி ன் ( சி பி ச் சக்கரவர்த்தியின்) வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மல ை யமா னி ன் சி று வ ர்க ள் ; இ வ ர்களை த் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். பிறகு, நீ உன் விருப்பப்படி செய்.’ என்று க�ோவூர் கிழார் முறையிட்டு அந்தச் சிறுவர்களைக் காப்பாற்றினார். பு ல வ ர் க�ோ வூ ர் கி ழ ா ர் இ யற் றி ய பாடல்களிலிருந்து, ச�ோழன் நெடுங்கிள்ளி, ச�ோழன் நலங்கிள்ள்ளி, ச�ோழன் கிள்ளி வளவன் ஆகிய ச�ோழ மன்னர்களிடமும் அவருக்கு இருந்த செல்வாக்கும், தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத அவருடைய மனவுறுதியும் மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.

ஒரு சமயம், கிள்ளிவளவன், தன் பகைவனாகிய

இருபெரும் சுடர்மணிகள் இவ்வாண்டு ந�ோபெல் அமைதிப் பரிசினை அடைந்துள்ள இ ரு பெ ரு ம் சு ட ர்ம ணி க ள் , ப ா லி ய ல் வ ன்க ொ டு மை உள்ளான�ோர்க்கு நீதி பெற்றுத்தரும் பேரார்வலர்கள்! அவர்களை அறிவ�ோம் வருக. டாக்டர். திரு. டெனிஸ் முக்வெகியா, காங்கோ நாட்டு மகளிர் நலவியல் மருத்துவர். அந்நாட்டில் பாலியல் வல்லுறவு ம ற் று ம் வ ன்க ொ டு மை க் கு உ ள்ளா ன ப ல்லா யி ர ம் பெண்களுக்கு, மீளாக்க அறுவைச் சிகிச்சைகள் புரிந்தவர். புகாவு நகரில் பன்சி மருத்துவமனையைத் துவங்கி, அதில் ம ரு த் து வ ர ா க வு ம் ப ணி ய ா ற் றி வ ரு கி ற ா ர் . ப�ோ ர் ப் பகுதிகளில், வரம்பிலாப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். இவருடன் ந�ோபெல் பரிசினைப் பகிர்ந்து க�ொள்ளும் செல்வி. நாடியா முராட், யாசிதி இயக்கத்தின் இளம் ஆர்வலர். ஈராக்கில் ஐசிஸ் ப�ோராளிகளால் இவரே பாலியல் க�ொடுமைக்கு உள்ளாகி மீண்ட வீரர். பெண்களை மனித அடிமைகளாய்க் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்தலுக்கு எதிராக,மீண்டும் மீண்டும் துணிவுடன் ப�ோராடி வருபவர்.

12

நவம்பர் 2018

தனது யாசிதி சிறுபான்மையின நலனுக்காக உலக அரங்கிலும் ப�ோராடுபவர். இந்த இரண்டு ஊக்கமிகு செயல்வீரர்களுக்கும் வெற்றி வாழ்த்துக்கள் உரித்தாகுக!

 thenral.mullai@gmail.com

தகவல்: காவ்யா சுந்தர்


செய்தவர். 200-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியன் இ

வர், செந்தமிழ்ச் செம்மல், நல் அறிஞர், தமிழ் இயக்கச் செம்மல், த�ொல்காப்பியச் செம்மல், சி.பா.ஆதித்தனார் விருது என பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர். 1999-ல் சாகித்ய அகாடமி சார்பாக இவருக்கு ‘பாஷா சம்மான்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இவரிடம் வழி காட்டுதலின் படி முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். கடந்த 4-ம் தேதி தமிழூரில் சாலையைக் கடந்தப�ோது இருசக்கர வாகனம் ம�ோதி, மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், கடந்த 12-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் 1929 டிசம்பர் 31-ம் தேதி, சு.சண்முக வேலாயுதம், ராமலட்சுமி அம்மாள் ஆகிய�ோருக்கு மகனாகப் பிறந்தார் ச.வே.சுப்பிரமணியன். த�ொடக்கக் கல்வியை விக்கிரமசிங்கபுரத்திலும் இளங்கலைப் பட்டத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தை கேரளப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். இ ல க ்க ண ம் , சை வ இ லக் கி ய ம் , வை ண வ இ லக் கி ய ம் , நாட்டுப்புறவியல் என பல துறைகளிலும் தடம்பதித்தவர். ச. வே. சு. ‘சிலப்பதிகாரத்தில் ம�ொழியியல் பார்வை’ எனும் தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். நன்னூல் த�ொல்காப்பியத்தை ஒப்பிட்டு விரிவான ஆய்வு

நவம்பர் 2018

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 1953 ஆம் ஆண்டு முதல் பணியைத் த�ொடங்கிய அ வ ர் , ப ாளையங்க ோ ட ்டை தூ ய சவேரியார் கல்லூரி, திருவனந்தபுரம் ப ல ்கல ை க ்க ழ க ம் ஆ கி ய வ ற் றி ல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். இவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூ லமா க க் க ரு த்த ர ங் கு நட த் தி , அ த ன் மூ ல ம் உ ரு வ ா ன ‘ இ லக் கி யக் க�ொள்கை’ நூல் பல பாகங்களைக் க�ொண்டது. ம�ொழியியல், நாட்டுப் புறவியல், விடுகதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தவர். சங்க இலக்கியங்களைப் பதிப்பித்தார். இவருடைய ‘திராவிட ம�ொழி இலக்கியங்கள்’ முக்கியமான நூ ல் . இ வ ரி ன் நூ ல ்க ள் ப ல ்வே று பல்கலைக்கழகங்களிலும் பாடநூல்களாக உள்ளன. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நி று வ ன த் தி ன் இ யக் கு ந ர ா க வு ம் செயல்பட்டவர். அங்கிருந்து ஓய்வு பெற்று, தென்காசி ஆலங்குளம் சாலை யில், ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தவர் ச.வே.சு. தனது இறுதி மூச்சு வரை ‘உலகத் தமிழ்க் க ல் வி இ ய க ்க ம் ’ எ ன்ற அ ம ை ப்பை நடத்திக்கொண்டு இருந்தார். இவரின் மாணவர்களில் முக்கியமான வ ர்க ள் மு ன்னா ள் து ணைவேந்த ர் க . ப . அ ற வ ா ண ன் , இ ர ா . இ ள வ ர சு ப�ோன்றவர்கள். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969-ல் திருவள்ளுவர் கல்லூரி உருவாகக் காரணமாக இருந்தவர் ச.வே.சு. இ லங்கை , ஜெர்ம னி , ப�ோல ந் து , ஜ ப்பா ன் , த ாய்லா ந் து , சி ங்க ப் பூ ர் , இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடு களுக்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துயும், சிறப்பு ச�ொற்பொழிவு களையும் நிகழ்த்தி உள்ளார். ‘தமிழுக்குத் த�ொண்டு செய்வோன் சாவது இல்லை’ என்பது பாவேந்தர் கூற்று. ச. வே. சு அய்யாவுக்கும் சாவே இல்லை! தகவல்:

ஆசிரியர் குழு

 thenral.mullai@gmail.com

13


இலக்கியம்

தமிழ் இலக்கியத் த�ொடரடைவு (Concordance for Tamil Literature)

த

மிழிலக்கியக் கடலில் நீந்திக் அதன் உண்மைச் சுவையைய�ோ அன்றி கரைசேருவது என்பது நமது க ரு த்தைய�ோ உ ண ர இ ய லு ம் . வாழ்நாளில் ஓர் அரிய செயல். படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் ஆம், ஏதாவது ஒரு தமிழிலக்கியத்தை ஒரு முதன்மையான இணையதளம் ( நூ லி ல�ோ / கூ கு ளி ல�ோ ப டி க ்க பற்றிய சில நல்ல செய்திகளைத் இந்த ஆரம்பித்தால் தான் தெரியும், எவ்வளவு இ த ழி ல் த ங்க ளு ட ன் ப கி ர் ந் து செய்திகள் நம்முன்னோர்கள் நமது க � ொ ள்வ தி ல் பெ ரு ம கி ழ் வு நல்வாழ்விற்கு க�ொடுத்துள் ளார்கள் க�ொள்கிறேன். எ ன் று ! ) த மி ழ் இ லக் கி ய நீ தி க ள் சில வாரங்களுக்கு முன்பாக வட நமக்கெதற்கு என்று ஒதுங்கி நின்றால், க�ொழந்தவேல் இராமசாமி, அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நாம் இழப்பது மிகுதி என்பது விளங்கும். மா த ா ந் தி ர இ லக் கி யக் கூ ட ்ட ம் மேரிலாந்து கற்றது கைமண் அளவு, கல்லாதது (ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு கிழக்கு உலக அளவு என்று உற்ற கலைமடந்தையே கை நேரம் 9:00 மணி முதல் 10:30 வரை வெப்பெக்ஸ் களில் நூல்களை வைதுக் க�ொண்டு ஓதுகிறாள் (WebEX) உதவியுடன்) பல்வழி அழைப்பில் தமிழ் அல்லவா? இலக்கியத் த�ொடரடைவு (Concordance for Tamil எ ன வே நா மு ம் சி ல த மி ழ் இ லக் கி ய த் Literature) என்ற தலைப்பில் நடந்தேறியது. இந்தக் துளிகளையாவது சுவைத்துப் பார்த்தால்தான் கூட்டத்தின் ந�ோக்கம் சங்க இலக்கியங்களில்

14

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


உள்ள ச�ொற்களின் ப�ொருள்களை அறியவும், அ வை க ள் இ லக் கி யங்க ளி ல் எ ங்கெ ல ்லா ம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து பயன்பெரும் வகையில் அமைந்திருந்தது. முனைவர் ப. பாண்டியராஜா (முன்னாள் தலைவர், இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை) அவர்களின் தனிமுயற்சியில் அமைந்திருக்கும் கீழ் உள்ள இணையதளம் “onestop-shopping” ப�ோல!! ஒரு ச�ொல்லினைத் தட்டினால் ப�ோதும், அது எந்த நூலில், எந்த வரியில் உள்ளது என்பதை உடனடியாகக் காட்டும் அருமையான முயற்சி, இது குறித்து மேலதிகச் செய்திகளை :

http://tamilconcordance.in/index.html இணையதளத்தில் காணலாம்.

ச�ொற்களை அறிய உலகத் தமிழர்கள் பயன்படுத் தும் மற்றும�ொரு பயனுள்ள இணையதளம்; முயன்று பாருங்கள்; மனமகிழ்வு அடைவீர்கள்! Tamil lexicon: https://dsalsrv04.uchicago.edu/dictionaries/tamil-lex/ Madras antique photographs: http://dsal.uchicago.edu/images/madrascollege/

மன மகிழ்வோடு நன்றி நவில்கிற�ோம் செந்தில் குமார்: ஆண்டாண்டு காலமாக, நம்

தமிழ்ச் சங்க அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒலி மற்றும் ஒளி உதவியை செய்து வரும் நண்பருக்கு வாழ்த்துகள்.

முனைவர். கண்ணன் குஞ்சிதபாதம். தென்

கர�ோலினாவிலிருந்து நம் பகுதிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை நம் நிகழ்வுகள் அனைத்தையும் ஓளிக் கவிதைகளாக நமக்குத் தரும் நண்பருக்கு வாழ்த்துகள்.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

15


வாசிங்டன் வட்டாரப் பகுதி

தமிழிலக்கியக் கூட்டங்கள் 1. செப்டம்பர் 9: "வள்ளுவர் பார்வையில் நட்பு” என்ற தலைப்பில் முனைவர் இர. பிரபாகரன் அவர்களின் சிறப்புரையுடன் இலக்கிய கூட்டம் நடந்தேறியது. Howard County Central Library, 10375 Little Patuxent Pkwy, Columbia, MD 21044. 2. செப்டம்பர் 30: தமிழ் ச�ொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்களின் பட்டி மன்றம்: ஆஞ்சநேயர் க�ோவில் கலை அரங்கம், மேரிலாந்து. 3. அக்டோபர் 06: வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் இலக்கிய கூட்டம் வழங்கிய: தஞ்சை க�ோ. கண்ணன், தமிழர் வரலாற்றாய்வாளர், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழரின் வரலாறு, ‍ச�ொற்பொழிவு‍வெர்ஜீனியா நூலகம், வெர்ஜீனியா. 4. அக்டோபர் 07: வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் வழங்கிய‌எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் வாசிங்டனில் வாசகர் சந்திப்பு, HCLS Savage Branch, 9525 Durness Lane, Laurel MD 20723. 5. அக்டோபர் 28: வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் வழங்கிய, அறியப்படாத தமிழ்மொழி நூலாய்வுக் கூட்டம், East Columbia Library, 8600, Cradlerock Way, Columbia MD 21045. 6. மாதம் இருமுறை ஞாயிறு பிற்பகல் 4 மணி: வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் வழங்கும் திருமந்திரச் சிந்தனைகள், மணிமேகலை இராமமூர்த்தி, புளாரிடா. ‍(பல்வழி அழைப்பு வழியாக: 712 432 0075; கடவை எண்: 372337#) ‍ 7. மாதம் ஒருமுறை இறுதி ஞாயிறு இரவு 9:00 மணி: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும் தமிழிலக்கியக் கூட்டம் ‍பல்வழி அழைப்பு. (பல்வழி அழைப்பு வழியாக:‍ த�ொடர்பு எண்: (641) 715-3670 கடவை எண்: 873905#) 8. வாரந்தோறும், ஞாயிறு இரவு 9:00 மணி: திருமதி வைதேகி ஹெர்பர்ட், ஹவாயிலிருந்து: த�ொலைபேசியின் வழியாக சங்க இலக்கியம் எளிதாகப் பயில: (பல்வழி அழைப்பு வழியாக:‍ த�ொடர்பு எண்: (712) 770 4010; கடவை எண்: 370880#). ஒவ்வொரு வியாழன் அன்றும் இரவு 9:00 மணிக்கு இதே எண்ணில்‍முதல் நிலை (எளிய) இலக்கிய வகுப்புகள் ‍நடந்து வருகிறது.

த�ொகுப்பு: க�ொழந்தவேல் இராமசாமி

16

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் 9-ம் தமிழிசை விழா அறிவிப்பு

வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் நண்பகல் 1 மணி முதல் 5 மணி வரை வட அமெரிக்க முருகன் க�ோவிலில் நம் குழந்தைகளுக்கானத் தமிழிசைப் ப�ோட்டிகள் மற்றும் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் ப�ோட்டிக்கான முன்பதிவு விரைவில் துவங்கும்... மேலும் த�ொடர்புக்கு : secretary@WahingtonTamilSangam.org நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

17


முத்தமிழ் விழாவில் கீழடி ஆகழாய்வு குறித்து திரு. சு. வெங்கடேசன் அவர்கள் நிகழ்த்திய உரையின் த�ொகுப்பு

அ

ழகிய பெட்டகத்தினுள் இருக்கும் முத்துக் குவியல்களில் எந்த முத்து நன்முத்து எனப் பிரிக்க முடியாதது ப�ோல, பண்பு, அறிவு, அழகு என பல நன்முத்துக்கள் க�ொட்டிக் கிடக்கும் தமிழ் ம�ொழியின் இக்கால எழுத்தாளர்களில் மிகமுக்கியமான ஒருவர் திரு. சு. வெங்கடேசன் அவர்கள். இவரின் முதல் படைப் பான காவல் க�ோ ட ்ட த் தி ற் கு ச ா கி த் தி ய அ க ாட மி வி ரு து வழங்கப்பட்டது. நம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் நிகழ்த்திய உரையின் த�ொகுப்பு கீழ் வருமாறு. காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வந்த மனித இனம் சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த பின்னரே நாகரிகங்கள் த�ோன்றின. வற்றாமல் ஆண்டு முழுதும் ஓடும் நதிக்கரைகளிலே சிந்து, சீனம், மெசப்பட�ோமியா என பல நாகரிகங்கள் த�ோன்றி அங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். இமயத்தின் தென்கோடியிலும் ஒரு மக்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. அம்மக்கள் வரலும் நதியான வைகை நதிக்கரையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் க�ொண்டனர். ஆண்டில் பாதி நாட்கள் நீர் வரத்து குறைந்த நதியை மூலமாகக் க�ொண்டு ஓர் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது என்றால், எத்தகைய சிறப்பான நீர் மேலாண்மையைக் க�ொண்ட அறிவார்ந்த சமூகமாக அப்பெருமக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

கீழடி ஆராய்ச்சி த�ோண்டும் இடமெங்கும் தங்கம் வரும் தமிழகத்தில், இன்று கீழடியில் த�ோண்டியதால் நாம் பல வரலாற்றுப் புதையல்களைப் பெற்றுக் க�ொண்டிருக்கிற�ோம். த� ொ ல ்ப ொ ரு ள் ஆ ர ா ய் ச் சி யா ள ர்க ள் க ரு ப் பு சிவப்பிலான மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டது சுமார் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எனக் கணக்கிடுகின்றனர். கிரேக்க மற்றும் ர�ோம நாடுகளில் இதுப�ோன்ற மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. சில ஆயிரம் சதுர அடிகளே த�ோண்டப்பட்ட கீழடி அகழாய்வில் மட்டும் சற்றேறக்குறைய 1000 கருப்பு

18

நவம்பர் 2018

சிவப்பான மண் பாண்டங்கள் கிடைத்துள்ளன. கீழடி ஆராய்ச்சியில் கிடைத்த ப�ொருட்களில் ஒரு வியப்பான தகவல் உண்டு, அதில் ஒன்றில் கூட மதங்களின் குறியீட�ோ, ஆவணங்கள�ோ இல்லை. பல க ல ை நய மி க ்க ப� ொ ரு ட ்க ள் த ா ன் கிடைக்கப்பெற்றுள்ளன. மதங்கள் த�ோன்றுவதற்கு மு ன்னரே ந ம் த மி ழ்ச் ச மூ க ம் இ த்தகைய செழுமையான அறிவாற்றலையும், கலை நயத்தையும் க�ொண்டிருந்ததை வியந்து க�ொண்டே இருக்கலாம். ம�ொழிகள் த�ோன்றுவதற்கு முன் சத்தங்களிலும், சைகை க ளி லு ம் பே சி வ ந்த ம னி த ன் பி ன் கிறுக்கள்களிலும் பேசத் த�ொடங்கினர். அந்த கிறுக்கல்களே முன்னேற்றமும் தன்மாற்றமும் பெற்று எழுத்தாகவும், ச�ொல்லாகவும், ம�ொழியாகவும் மா றி ய து . ந ம் கீ ழ டி அ க ழ ்வா ய் வி ல் , ப த்த டி ஆ ழ த் தி ற் கு ள்ளா க வே , கி று க ்க ல ்க ளு ம் எழுத்துக்களுக்கான மண் ஓடுகள் பல கிடைத்துள்ளன. கைநிறையப் ப�ொற்காசுகள் இருந்தால், சிந்தியதும் சிதறியதும் பெரியதாகப்படாததைப் ப�ோல, நாமும் நம் த�ொன்மை சார்ந்த பல சிறப்புகளை எளிதாகக் கடந்து செல்வது வேதனையான ஒன்று. பண்பட்ட சமுதாயத்தின் வழிவந்தவர்கள் நாம் என்பதை ஐயன் வள்ளுவனின் ஒரு குறளில் அறியலாம். ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ எனக் கூறும் வள்ளுவரின் கூற்றாக அமைவது, ஒருவர் தான் க�ொண்ட நம்பிக்கையினால் கூட ஒரு செயல் கைகூட முடியாமல் ப�ோனாலும், தன் உழைப்பை நம்பி முயன்றால் எந்தச் செயலும் கைகூடும். ஒருவரின் நம்பிக்கையை புண்படுத்தாமல் அ த ேநே ர த் தி ல் அ வ ரு க் கு ஊ க ்க ம் த ரு வ த ா க வள்ளுவர் கூற முயல்வது பண்பின் உச்சம் த�ொட்ட சமுதாயத்தின் வெளிப்பாடே.

‘ஐ’ எனும் ஓசை! சமீபத்தில் நடைபெற்ற உலக ம�ொழியியல் துறை கருத்தரங்கில் ஒரு சுவையான நிகழ்ச்சி இடம்பெற்றது. ஆங்கிலத்தில் ‘ஐ’ எனும் ஓசை எழுப்பக் கூடிய

 thenral.mullai@gmail.com


எழுத்து 9வது இடத்தில் அமைந் துள்ளது. ஆங்கிலத்தின் அடிப்படையான கிரேக்க இலத்தீன் ம�ொழிகளிலும் ‘ஐ’ என்னும் ஓசை எழுப்பக்கூடிய எழுத்துக்கள் 9வது இடத்தில் அமைந்துள் ளது. தமிழில் உ யி ரெ ழு த் து வ ரி சை யி ல் ‘ ஐ ’ எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்று பார்த்தால், தமிழிலும் 9வது இடத்தில் தான் அமையப்பெற்றுள்ளது. சீ ன ம� ொ ழி யி ன் ஒ ரு எ ழு த் து அ ம ை ப் பி லு ம் கூ ட இ து ப�ோலவே அ ம ை ந் து ள்ள த ாக் கூ ற ப்ப டு கி ற து . இயற்கையை அறிந்து அதை அன்றியே வ ாழ் ந் து வ ந் தி ரு க் கி ற ார்க ள் ந ம் த மி ழ ர்க ள் . ப� ொ து வ ா க ஒ ரு வ ர் ச�ொர்க்கத்திற்குச் செல்ல சமுதாயம் ச ார்ந்த ந ற ்ப ணி க ளைச் செய்ய வேண்டுமென்று நூல்கள் கூறுவதில்லை. ச ங்க இ லக் கி யங்க ளு ள் ஒ ன்றா ன சி று ப ஞ ்ச மூ ல ம் எ ன்ன கூ று கி ற து என்றால், குளம் வெட்டுதல், மரம் நடுதல் கால்வாய் அமைத்தல் ஆகிய செயல்களால் ஒருவர் ச�ொர்க்கத்தை அடையலாம். உலகில் எந்த ஒரு த�ொன்மையான இலக்கியங்களை ஆராய்ந்தாலும் அதில் பெண் இனம�ோ, பெண் புலவர்கள�ோ முன்னிறுத்தப்படுவது அரிதிலும் அரிது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சமசுகிரத இலக்கியங்களில் ஒரு பெண் எழுத்தாளர் கூட இல்லை, அதே காலத்தில் எழுதப்பட்ட கிரேக்க இ லக் கி யங்க ளி ல் ஏ ழு பெண் எழுத்தாளர்கள் இருந்திருக்கின்றனர் என ஐர�ோப்பிய வரலாற்றாய்வுகள் குறிப்பிடுகின்றன. நம் சங்க இலக்கியங் க ளி ல் 4 3 பெண் எ ழு த்தா ள ர்க ள் படைப்புகளை வழங்கியிருக்கிறார்கள். தமிழின் முதல் தத்துவ நாலை இயற்றியது ஒரு பெண். நம் தமிழின் அறிவு மரபுப் பெ ண ்களை உ ச் சி யி ல் வை த் து ப் ப�ோற்றியது. இதை நாம் இக்காலத்தில் எண்ணிப்பார்த்து அத்தகைய சிறப்பான அறிவியல், கல்வி, சமூகச் சிந்தனைகளைக் க � ொ ண ்ட ச ங்க இ லக் கி யங்க ளி ன் சிறப்பை இருக்கப் பற்றிக் க�ொள்ள வேண்டும். அதுவே ஒரு பண்பட்ட சமூகத்தின் அடையாளம்.

தமிழ் மரபு

செல்வக்குமார் விஸ்வநாதன் வேண்டும் என்பதற்குத் தமிழ் மரபு உண்டு. கிராமங்கள் உருவாகச் சரியான இடமாய் அமைவது நீர்ப்பிடிப்பு பகுதியில் கண்மாய்களை உருவாக்க வல்லதான இடம். கிராமம் அமைய தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் மனிதனின் முதல் முயற்சியாக அமைவது, மாடு உரசக் கல் அமைப்பது. கால்நடைகளே கிராமங்களின் பெரும் செல்வம். மாடுகளுக்கு ஏற்படும் பூச்சிக்கடியின் தாக்கத்தைக் குறைக்க மந்தையில் ஒரு கல்லை நட்டால் அவற்றின்மீது தேய்த்துக் க�ொண்டு மாடுகள் தங்கள் துன்பத்தை ப�ோக்கிக்கொள்ளும் என்று உணர்ந்த தமிழனின் மனிதநேயம் எத்தகைய சிறப்பானது. இத்தகைய அறம் சார்ந்த செயல்கள் தான் தமிழை பிற தத்துவங்களில் இருந்து தனித்து உயர்த்திக் காட்டுகிறது. கடந்த 1300 ஆண்டுகளாக ஆட்சி ம�ொழியாக இல்லாத ஒரு ம�ொழியின் சிறப்பு, இன்றைக்கும் சுடர் குன்றாமல் விளங்குவதன் காரணம், தமிழ் அதிகாரம் சார்ந்து இயங்கவில்லை, அறம் சார்ந்து இயங்கியது! உ.வே.சா அவர்கள் ஒருமுறை ஒலைகளை தேடிச் சென்ற ப�ோது, அவர் யாரென்று தெரியாமல் அதிக கட்டணம் கேட்ட மாட்டுவண்டிக்காரர், வழியில் நடந்த உரையாடல் மூலமாக உ.வே.சா அவர்கள் ஆற்றி வந்த பணியை அறிந்தவுடன், “உங்களிடம் கட்டணம் வாங்கினால் அது தமிழுக்கு நான் செய்யும் துர�ோகம்” எனக் கூறினார் அந்த மாட்டுவண்டிக்காரர். அவரைப்போல நாமும் தமிழுக்காக நம்மால் முடிந்தவற்றைச் செய்யவேண்டும். தமிழ்ப்பணி ஆற்றுபவர்களுக்கு நம்முடைய உதவியை வழங்குவ�ோம். அடுத்த தலைமுறையினருக்கானத் தமிழ், பாட்டி கதைகள�ோடு நில்லாமல், தமிழின் த�ொன்மை சார் அ ற த்தை யு ம் , அ றி வி யல ை யு ம் , க ல ை த் தி ற ன்களை யு ம் க�ொண்டதாக இருக்கட்டும்.

ஒ ரு கி ர ாம ம் எ ப்ப டி அ ம ை ய

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

19


இயற்கை வளம் காப்போம்! (மகேந்திரன் பெரியசாமி)

‘ஆற்றினிலே நீர் இல்லை’ என்பதெல்லாம் மாறி

பசுமைகளை அழித்தா- உங்கள் பசுமை வழிச் சாலை?

‘ஆறுகளே காண�ோம்!’ எனும் களவு நிலை தகும�ோ?

ப�ோதுமட்டும் உணவு தந்த உழவருக்கா உம் கல்லறைகள்?

திட்டங்களும் சட்டங்களும் மக்களுக்காய் வேண்டும்-

இயற்கை மீது வன்முறையாய் எரிமலைகள் அமைத்தீர்!

சுற்றுச் சூழல் கெடுத்துச் சாற்றும் சூதுவாது வேண்டாம்!

‘இயற்கை’, ‘இறை’ இரண்டும் ‘ஒன்று’ எனும் உண்மைதனை மறந்தீர்!

நிலப்பகுதி வனப்பகுதி வளம் இழக்க வேண்டாம்பாலைவனமாக்கும் எந்தப் பாதைகளும் வேண்டாம்! பணத்தாளைத் தின்று தின்றா தலைமுறைகள் காப்பீர்? விவசாய நிலம் பறித்தா கானல் வளர்ச்சி காண்பீர்? உயிர்க்காற்றை நச்சுக்காற்றாய் உருக்குலைக்க வேண்டாம்! வாழ்விடத்தை அழித்து எந்த வழித்தடமும் வேண்டாம்! க�ொள்ளை க�ொண்ட மணல் மலைகள் கனிம வளம் இழந்து காடு மலை மரங்கள் நீக்கி எண்வழிச்சாலை வேண்டாம்!

20

நவம்பர் 2018

மழை குறைவு- மழை மிகுதி- மனிதன் செய்த பிழைகள்மாண்ட விவசாயிகள் தற்கொலை அரசு செய்த க�ொலைகள்! மரங்கள் நமது வரங்கள் - மண்ணைக் காக்க வந்த கரங்கள்! மரம் வளர்த்து காடு பெருக்கி மழைப் பெருக்கைக் க�ொணர்வோம்! ‘மாற்றம் மாற்றம்’ என்று ச�ொல்லி ஏ-மாற்றும் வித்தை வேண்டாம்! ‘வளர்ச்சித் திட்டம்’ என்று ச�ொல்வார் ‘வளர்ச்சி யார்க்கு?’ அறிய�ோம்! ‘மதம்’ பிடித்த அரசியலுக்கு ‘மனிதமும்’ பிடிக்க முயல்வோம்! மண் வளங்கள் புன்னகைக்கப் புதுமைப் புரட்சி விதைப்போம்!

 thenral.mullai@gmail.com


சின்னஞ் சிறு கவிதைகள் என்னவளும் கவிதையும்.

(பாலா குப்புசாமி)

இனி ஒரு விதி செய்வோம்.

கவிதை பேசும் ஓவியம், அவளும்….. கவிதை அர்த்தங்களைத் த�ொக்கி வைத்திருக்கும் அவளின் அழகைப்போல்! கவிதை உணர்ச்சியின் வடிகால் அவளும்…

அன்று வெள்ளையரிடமிருந்து வாங்கியதை இன்று க�ொள்ளையராம் அரசியல்வாதிகளிடம் க�ொடுத்து விட்டோம். இனி ஒரு விதி செய்வோம். அதை எந்நேரமும் காப்போம்! ___________________________________

ஹைக்கூ கவிதைகள்

கவிதை புரிந்தும் புரியாமலும் இருக்கும் சில நேரங்களில் அவளின் செய்கையும்! அனுபவமே கவிதை அவளே என் அனுபவம்! ________________________________________

கண்கள்

நெடுநாள் தயக்கத்திற்குப்பின் நானும் அவளும் பேசின�ோம் கண்களால்!

பூக்களைப் பறிக்காதீர்கள்.

கடலலை

பூங்காவில் பூவைப் பறிக்கச் சென்றவன் கண்களில் பட்டது பூக்களைப் பறிக்காதீர்கள். ஒரு நிமிடம் ய�ோசித்தவன் செடிய�ோடு பறித்துக்கொண்டான். ________________________________________

நினைவுகள்

ஆர்வமுடன் எதைய�ோ ச�ொல்ல ஓடி வந்து பின் அமைதியாகிப்போனது கடலலை! என்னவள் தந்தாள் அவளின் நினைவாக அவள் நினைவுகளையே!

அனுபவங்கள்

வேறு என்ன செய்ய முடியும்? சாலையில் “வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்” வாசகம் கண்டவன் சிரித்தான். ஆம். மரத்தையே வீடாகக்கொண்டு வாழும் அவனால் வேறு என்ன செய்ய முடியும்? _________________________________________

அதிக விலை க�ொடுத்து வாங்கினேன் அனுபவங்களை!

நிம்மதி அலைந்து திரிந்த பிறகே கிடைத்தது நிம்மதி!

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

21


முத்தமிழ் விழாவில் பூவுலகின் நண்பர் சுந்தரராஜனின் முத்தாய்ப்பான உரை இளவழுதி வீரராஜு

வா

சி ங ்ட ன் த மி ழ்ச் சங்கத்தின் இயல் இசை நாடக விழாவிற்கு வருகை தந்தமைக்கு, தென்றல் மு ல ்லை இ த ழ் ச ார்பா க வ ர வேற் கி ற�ோ ம் . எ ப்ப டி உணர்கின்றீர்கள்? வ ண க ்க ம் . க டந்த ப ல நாட்களாகவே அமெரிக்காவில் உள்ள தமிழ்க் குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறி இங்கு வாழ்ந்தாலும், தமிழ்ப் ப ண ்பா ற ்றை ப் ப�ோற் றி ப் ப ா து க ாப்ப தி ல் இ ங் கு ள்ள தமிழ்ச் சங்கங்களுக்குப் பெரும் ப ங் கு இ ரு க் கி ற து . த மி ழ் நாட்டிலேயே தமிழில் படிப்பது அ ரி த ா கி க ்க ொ ண் டு இருக்கையில், இங்கு அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழ்ப் பள்ளிக்குச் சென்று படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழர் வாழ்வாதார நலன் சார்ந்து நிறைய ப�ோராட்டங்கள் முன்னெடுத்த நீங்கள், அந்த ப�ோராட்டத்தின் அ னு ப வ த் தி ல் , இ ன்றை ய இளைஞர்கள் மற்றும் மாணவர் களுக்குச் ச�ொல்லும் கருத்துரை. உலகெங்கிலும் உள்ளவர் க ளு க் கு இ ப்ப ோ து நா ம் கண்முன் இருக்கும் பிரச்னை

22

நவம்பர் 2018

என்பது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் தான். 2014 - 15 ஆம் ஆண்டு கலிப�ோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் அமெரிக்காவைத் தாக்கும் புயல் ப�ோன்ற சுற்றுச்சூழல் கேடுகள் இங்கு உடனடையாகத் தீர்வு காண வேண்டியவைகள். நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, அடிப்படையில் சுற்றுச்சூழல் குறித்த புரிதல் இல்லையென்றால், நீங்கள் வேறெந்த செயல்பாடும் செய்யத் தேவை இல்லாமல் ப�ோய்விடும். உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீவன் காக்கிம்ஸ் அவர்கள், “இன்னும் 100 முதல் 200 ஆண்டுகள் மட்டுமே மனித சமுதாயம் வாழத் தகுதியுள்ளதாக இந்த பூமி உள்ளது” என்கிறார். இச் சுற்று சூழலைக் கெடுத்ததில் மிகப்பெரும் பங்காற்றிய தலைமுறையைச் சேர்ந்தவன்

 thenral.mullai@gmail.com


என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அடுத்த தலைமுறை எது செய்தாலும், சூழல் குறித்து , தண்ணீர் குறித்து , ஆற்றல் குறித்து, நீங்கள் தூக்கிப் ப�ோடும் குப்பை முதல் பயன்படுத்தும் ப�ொருள்கள் வரை, அ னைத்தை யு ம் நு க ர் வு த் த ன்மை இ ல ்லாமல் , தேவையானதை மட்டும் வாங்கி, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வை வாழ்வது தான் உங்கள் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்கும்.

தமிழகத்தில் க�ோயம்புத்தூரில் தற்போது ஒரு ஜெர்மன் நாட்டு நிறுவனம் தண்ணீர் தருவதற்காக ஓர் ஒப்பந்தம் ப�ோடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தாமிரபரணி தண்ணீரை இழந்துக�ொண்டிருக்கும் சூழலில், இது நமது வாழ்வுரிமையைப் பாதிக்காதா? அவர்கள் ச�ொல்லுவது தான் குடிக்கும் தண்ணீரின் விலை எனும் ப�ோது இங்கு வாழ்வுரிமை மாறி விடாதா? இதற்காக ஆட்சியாளர்களுக்குப் புரியவைக்கும் ப�ோராட்டங்களை முன்னெடுக்கும் எண்ணமுள்ளதா? இதைப்பற்றிய உங்கள் சிந்தனை ப�ொலிவியா நாட்டில் தண்ணீரைத் தனியார் மயமாக்கினார்கள். “என்றான்” எனும் கம்பெனியின் துணை நிறுவனம் விட்டல் நிறுவனம் அந்த உரிமத்தைப் பெற்று முதலில் குறைந்த விலைக்கு விற்றுப் பின்னர் படிப்படியாக அதிகரித்து விற்றார்கள். அப்போது மக்கள் மழைத்தண்ணீரைப் பிடித்து வைத்துப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போது விட்டல் நிறுவனம், காவல் அலுவலகத்தில் எங்களுக்கு மூல ஆதாரமாக இருக்கும் மழை நீரைப் பயன்படுத்து

கிறார்கள், அதை பயன்படுத்தக்கூடாது என ப�ோலீஸ் மற் று ம் இ ர ா ணு வ த்தை வை த் து அ ந்த நீ ர் த் த�ொட்டிகளை உடைத்தார்கள். அப்போது க�ொச்சைப�ொம்மாவில் ஆரம்பித்தது மிகப்பெரிய மக்கள் புரட்சி, இன்று அந்த நாட்டின் அதிபராக இருக்கும் இவ�ோ மார்லஸ் அவர்கள், கு டி ய ர சு த் த ல ை வ ர ா க ப் ப� ொ று ப்பேற் று , உலகத்திலேயே பூமித்தாயின் சட்டம் இயற்றினார். இந்த சட்டம், இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை பூமிக்கும் உண்டு எனச் சட்டம் இயற்றிய ஒரே நாடு ப�ொலிவியா. இந்த சட்டம் இயற்ற முக்கியக் காரணமான மக்கள் புரட்சியை அந்த நாடு சந்தித்து, எல்லா வளங்களும் ப�ொதுச் ச�ொத்து என்று அறிவிக்கப்பட்டு மக்களுக்குத் தண்ணீர் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழல் தமிழத்துக்கு வந்துவிடக்கூடாது என்றே நாங்கள் ப�ோ ர ா டு கி ற�ோ ம் . த மி ழ க அ ர சு , க�ோவை மாநகராட்சியின் ஒரு பகுதியை சூயஸ் நிறுவனத்துக்கு இந்த உரிமையை வழங்கி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய கவலைக்குரியது. இதைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிற�ோம். தண்ணீர் என்பது ஒரு வளம் அது விற்பனை பண்டம் அல்ல. It’s a basic resource and not a commodity. நிச்சயமாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்கும். இ ளை ஞ ர்க ள் சு ற் று ச் சூ ழ ல ை ப் ப ா து க ா க ்க முன்வாருங்கள். நன்றி.

சிந்திக்க சில‌விடுகதைகள்: 2. 3. 4. 5.

6.

அக்காள் வீட்டுக்குள் தங்கை ப�ோகலாம்; ஆனால் தங்கை வீட்டுக்குள் அக்காள் ப�ோக இயலாது. அவை யாவை? அச்சு இல்லாத சக்கரம்; அழகு காட்டும் சக்கரம். அது என்ன? அடித்தால் வலிக்கும்; கடித்தால் இனிக்கும். அது என்ன? அரிசிப�ோல் பூ பூக்கும் 'அம்மாடி" என்று காய்காய்க்கும். ‍அது என்ன? அடிமேல் அடிபட்டும் அசராத சின்னப் பையன்; குறிவைத்த இடம் பார்த்து தப்பாமல் ப�ோய்ச் சேருவான். அவன் யார்? அலை அலையாய் ஆடிவரும் ‍கடலுமல்ல; நிலையாக நிற்காது நிலவுமல்ல. அது என்ன?

விடை: 1. படி, உழக்கு 2. வளையல் 3. கரும்பு 4. மிளகாய் 5. கடிதம் 6. புகை

1.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

23


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க

இன்பச் சிற்றுலாக்கள்

ஆகஸ்ட் 5 அன்று வர்ஜீனியாவில் "லேக் பேர்ஃபேக்ஸ்" (Lake Fair Fax, Reston, Virginia) பூங்காவிலும் ஆகஸ்ட் 19, 2018 அன்று மேரிலாந்தில்" பிளாக் ஹில்" (Black Hill Regional Park, Boyds, Maryland) ‍பூங்காவிலும், தமிழ்ச்சங்கத்தின் குடும்பச் சிற்றுலாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறின. நூற்றுக்கணக்கான�ோர் கலந்துக�ொண்டனர். குழந்தைகளும், பெரியவர்களும் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து விளையாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் அறிமுகமாக சிறந்த வாய்ப்பாக இருந்தது இந்த இன்பச்சிற்றுலா!

24

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

25


இணையம் வழியாக‌(Skype) குழந்தைகளுக்குத் தமிழிசையைக் கற்றுக் க�ொள்க புதிய வாய்ப்புக்கள்

இ

ன்றைய வ ா ழ ்க்கைச் சூ ழ லி ல் இ சையை யு ம் , நட ன த்தை யு ம் த ா னு ம் கற்று, தன் குழந்தைகளுக்கும் கற்றுக் க�ொடுக்க பெரும்பாலான படித்த பெற்றோர்கள் விரும்புகிறார்கள். கு றி ப்பா க வெ ளி நாட் டு வ ாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள், இ சை யி ல் இ ன் று இ ரு க் கு ம் வ ா ய் ப் பு க ளை ப் ப யன்ப டு த்த வேண்டும், குறைந்தது அவர்கள் வாழ்க்கையை அழகாக்க அவர் களின் குரல்வளம் மேம்படுவது நல்லது என்ற ந�ோக்கில் சிந்திக் கிறார்கள் .

திருமதி லெட்சுமிப்பிரியா, வெர்ஜினீயா

இதற்கு பல்வேறு ஆசிரியர் க ளைத் தேடித்தேடி அலு த் துப் ப�ோ வ தைக் க ா ண மு டி கி ற து . காரணம், முறையாக இசை பயின்று, முழுநேரமாக இதை எடுத்து மேடைகளில் பாடி அனுபவம் பெற்ற நல்ல இசையாசிரியர்கள் கிடைப்பது கடினம். இதனால் தன் இருப்பிடத்தின் அருகில் ப ாட் டு ச�ொல்லி த்த ரும் ஒருவரிட ம் வி ட ்டால் ஆண்டுகள் செல்கிறதே அவர்கள் வாய்விட்டு பாடுவதை பெரும்பாலும் கேட்கமுடிவதில்லை. பெரும்பாலும் அடிப்படையை ச�ொல்லிக்கொடுக்கவே ஐந்து-ஆறு ஆண்டுகள் சென்றுவிடுகிறது. ஒவ்வொரு ஆ ண் டு வி ழ ா வி ற் கு ஓ ரி ரு ப ாட ல ்க ள் அ து வு ம் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை . எட்டு ,ஒன்பது ஆண்டுகள் இசை கற்றுக்கொள்ளும் பல வட அமெரிக்கக் குழந்தைகள் தமிழை உச்சரிக்க முடியாமலும், தமிழில் பாட முடியாமலும், இசையின் அ டி ப்படையை இ வ ்வ ள வு க ால ம் க ற ்றா லு ம் பாடுவதில் சிரமப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இசை பயிற்சிப் பட்டறை பல ஆண்டுகளாக உலகம் முழுதும் சென்று தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்திவரும் திருபுவனம் குரு.

26

நவம்பர் 2018

ஆ த்மநா த ன் அ வ ர்க ள் க�ோடையில் வட அமெரிக்கா வின் ஏழு மாநிலங்களில் இசை பயிற்சிப்பட்டறை நடத்திய ப�ோது, அவர் ச�ொல்லிக்கொடுத்த பல மேடை நுணுக்கங்களை, கு ர ல ்வ ள ப் ப யி ற் சி க ள் ப ல பெற்றோர்களை மிகவும் கவர்ந் த து . ப ல இ சை ச� ொ ல் லி க் க�ொடுக்கும் ஆசிரியர்களும் பயன்பெற்றனர். பெற்றோர்கள் இதை தங்கள் குழந்தைகளுக்கு த�ொடர்ந்து ச�ொல்லிக்கொடுக்க முடியுமா என்று க�ோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்று இசைக்கடல் வலைத்தமிழ் ஒருங்கிணைப்பில் பண்பாட்டு அறக்கட்டளை இணையம் வழியே (Skype), திருபுவனம் குரு.ஆத்மநாதன் தலைமையில் முழுநேர இசைப்பணியைச் செய்யும், ஆய்வு செய்யும் ஆசிரியர்களைக் க�ொண்டு இசை வ கு ப் பு க ள் த� ொ டங்கப்பட் டு மி க ப்பெ ரி ய வரவேற்பைப் பெற்றுள்ளது. நிகழ்கலைக்கழகம். இ தி ல் வ ட அ மெ ரி க ்கா வி ன் ப ல ்வே று மா நி லங்க ளி லி ரு ந் து மா ண வ - மா ண வி க ள் , பெ ரி ய வ ர்க ள் இ சையை ஒ ரு ம ணி நே ர ம் தனிப்பயிற்சியாக கற்று வருகிறார்கள். இதில் தமிழிசை / கர்நாடக இசை அடிப்படையுடன் சேர்த்து ப ா ர தி யா ர் , வ ள்ளலா ர் , ப ா ர தி த ா ச ன் , முத்துத்தாண்டவர், புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை ச�ொல்லிக் க�ொடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் இயங்கும் “நிகழ்கலைக்கழகம்” என்ற அமைப்பின் மு றைப்ப டு த்தப்ப ட ்ட மூ ன் று ஆ ண் டு இ சை பாடத்திட்டத்தை பின்பற்றி வகுப்புகள் ச�ொல்லிக் க�ொடுக்கப்படுகிறது.

 thenral.mullai@gmail.com


இதுகுறித்து இதன் த மி ழி சை கு ரு . ஆ த்மநா த ன் அவர்களுடன் பேசிய ப�ோ து தி ரு மு றை , திருப்புகழ், வள்ளலார், திரையிசை உள்ளிட்ட ப ாட ல ்களை ப் ப ாட வி ரு ப்ப மு டைய பெரியவர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறுகிறார்கள் என்றும், பு ல ம் பெயர்ந்த தமிழர்கள் எந்த நாட்டில் வ சி த்தா லு ம் அ ந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப ஆசிரியர்களின் நேரம் ஒதுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் கு றிப்பி டு கை யில் அமெரிக ்கா வி ல் இ ய ங் கு ம் த மி ழ ்ப்ப ள் ளி க ள் , த மி ழ ்ச ்சங்கங்க ள் தமிழிசை விழாவை, ப�ோட்டிகளை, முத்தமிழ் விழாவை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இயல்-இசைநாடகம் என்ற முத்தமிழில் த�ொய்வடைந்திருக்கும் இசையை ஊ க்குவிக ்க ப ல ்வே று மு யற் சி க ளை மேற்கொள்கிறார்கள். அதில் தன் குழந்தையும் பாடி, இசை மேடைகளில் கிடைக்கும் வாய்ப்புகளைக் கல்வியுடன் சேர்த்து கற்றுத் தேர்ந்து வளரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சங்க இலக்கியங்களை

இசைவழியே கற்க வாய்ப்பில்லாத சூழலில் தங்கள் கு ழ ந்தை க ள் இ தை க ற் று த்தே ர் ந் து ப ா டு வ தை பெருமையாக பார்க்கிறார்கள். மூன்று ஆண்டுகளில் முறையாக இசையின் அ டி ப்படையை க ற் று த மி ழ் ப் ப ாட ல ்களை மேடைகளில் பாட விருப்பமானவர்கள் http://www. valaitamil.com/music/ பதிவுசெய்யலாம் என்று குறிப்பிட்டார். மேலும் முதல் ஒருமணி நேர வகுப்பு ச�ோதனைவகுப்பு என்றும் அதைத்தொடர்ந்து விருப்பமிருந்தால் த�ொடரலாம் என்ற வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார்.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

27


புத்தம் புது பூமி அ

மெரிக்காவில் அடிக்கடி ப ல இ ன் னி சை நி க ழ்ச் சி க ள் நடை பெற் று ள்ள ன . இ து வ ரைக் கு ம் பார்த்திராத தமிழ் மக்களையும், பி ற ம� ொ ழி ம க ்களை யு ம் இ து ப�ோன்ற நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும். அந்த அளவுக்கு மக்களுக்கு இன்னிசை நிகழ்ச்சிகளின் மேல் தீராக் காதல் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஒரு இன்னிசை நிகழ்ச்சி கடந்த 2018 செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. "புத்தம் புது பூமி" என்று அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.

செலீன் பெனடிக்ட்

உன் கண்ணீல் நீர் வழிந்தால்: புலம் பெயர்ந்தாலும், தடம் பெயராமல் வாழ்பவன் தமிழன். இடம் பெயர்ந்தாலும், புலம் பெயர்ந்தாலும் வாழ்ந்த பகுதிக்கும், வாழ்கின்ற பகுதிக்கும் பெருமை சேர்ப்பவன் தமிழன். உலகில், எங்கு துன்பம் நேரிடினும், தாயினும் சாலப் பரிந்து, காலத்தினால் உதவி செய்பவன் ஆயிற்றே! அதுவும், நம் அண்டை மாநிலமான கேரளாவில், அண்மையில் ஏற்பட்ட இன்னல்களைக் கண்டு வாளாயிருந்து விடுவானா என்ன? …!! அத் துயரைக் களையும் வகையில்,

28

நவம்பர் 2018

வெள்ள நிவாரண நிதிக்காக இந் நி க ழ்ச் சி நடத்த ப் பெ ற ்ற து . அ ம்ம ட ்டோ ! வ ா சி ங ்ட ன் பகுதியில் இருக்கும் திறமை வ ாய்ந்த இ ளைய�ோர்க ள் இணைந்து இந் நிகழ்ச்சியை வழங்கியது தான், நிகழ்ச்சியின் த னி ச் சி ற ப் பு . வ ா சி ங ்ட ன் பகுதியில் இயங்கும் கேரளா அ ம ை ப் பி ன் த ல ை வ ரு ம் , செயலாளரும் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்திருந்து வாழ்த்தும், ந ன் றி யு ம் தெ ரி வி த் து க் க�ொண்டனர். பாட்டுப் பாடாவா!!

இசைக் கச்சேரி மாலை ஏழு மணியளவில் துவங்கி, இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது. முன்னாள் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அகத்தியன் பெனடிக்ட் வந்திருந்த மக்களையும் இன்னிசைக் கு ழு வை யு ம் உ ற ்சா க ப்ப டு த் தி வ ர வே ற ்றா ர் . நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்றார் ப�ோல, "புத்தம் புது பூமி வேண்டும்" என்ற சிந்தனை நிறைந்த திரைப்பாடல�ோடு நிகழ்ச்சி துவங்கியது. இப் பாடலுக்கு, திருமதி அபிராமியின் பயிற்சியில் சிறுபிள்ளைகள் நடனமாடினர். "ஆளப்போறான் தமிழன்" பாடலுக்கு மக்களின் ஆரவாரத்தால் அ ர ங்கமே அ தி ர்ந்த து . நி க ழ்ச் சி யி ல் ஒ லி த்த

 thenral.mullai@gmail.com


பாடல்களில் சில: - செம்மொழியாம் தமிழ் ம�ொழி - தமிழா தமிழா (இசை கருவிகள் மீட்டல்)

- ச�ொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் ப�ோல வருமா - மாங்குயிலே பூங்குயிலே - சின்ன குயில் பாடும் பாட்டு - பாட்டு பாடவா - ஜெர்மனியின் செந்தேன் மலரே யாருங்க இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்?

வாசிங்டன் பகுதியில் பிறந்து வளர்ந்த அபிஷேக் ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேரிலாந்தில் வசிக்கும் இவர் நம் த மி ழ ்ச ்சங்க உ று ப் பி ன ர ா ன தி ரு . ஜ ஸ் டி ன் ஜெயக்குமார் மற்றும் திருமதி. ஆட்லின் ஜெயக்குமார் தம்பதியினரின் மகன். ஐந்து வயதில் தானாகவே இசை மீட்டலை ஆர்வத்துடன் ஆரம்பித்து, தனது 12-ஆம் வயதில் 'வாசிங்டன் சுருதி' இசைக்குழுவில் வதிப் பலகை ( keyboard)யை இசைப்பவராகவும்,

மேரிலாந்து மாநில அளவில் கின்னரப் பெட்டி ( Piano) இசைப்பதில் 10-ஆம் நிலை தேர்வையும், டிரினிட்டி கின்னரப் பெட்டி ( Piano) இசைப்பதில் 8-ஆம் நிலை தேர்வையும் பெற்று தனது வெற்றிப் ப ய ண த்தை த் த� ொ ட ங் கி ன ா ர் . அ த் து ட ன் நின்றுவிடாமல் தமிழ் நாட்டிற்கும் சென்று இசைப் புயல் திரு. ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பட்டறையில் முறைப்படி பயிற்சி பெற்று அமெரிக்கா திரும்பினார்! மேலும் பல பாடல்களுக்கும் இசையமைத்து பல விருதுகளையும் வாங்கி குவித்துக் க�ொண்டிருப்பத�ோடு மட்டும் அல்லாமல், பல இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார் நம் இளவல், செல்வன் அபிஷேக் ஜெயக்குமார்! இளைய நிலா ப�ொழிகிறதே இரவும் பகலும் உரசிக் க�ொள்ளும் அந்திப் ப�ொழுதினில், இசைக் கலைஞர்கள் அவரவர் இசைக் கருவிகளை மிகத் துல்லியமாக இசைத்து ஒவ்வொரு பாடலையும் மெருகேற்றினார்கள். பாடகர்களும் தங்கள் இனிமையான குரல்வளத்தால் இசைத் தட்டுகளில் நாம் அன்றாடம் கேட்டு மகிழும் அதே தரத்தை எல்லா பாடல்களிலும் க�ொடுத்தார்கள். "அஞ்சலி அஞ்சலி" பாடலைச் சிறார்கள் மிக

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

29


இசைக் கலைஞர்கள்

அழகான தமிழ் உச்சசரிப்புடன் மழலை மாறாமல், சுதியும் தவறாமல் நேர்த்தியாகப் பாடி அசத்தினார்கள். இருந்தது. ஒவ்வொரு பாடலின் ப�ோதும், அந்த பாடலின் விவரம், பாடுபவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்கள் அனைத்தும் திரையிடப்பட்டது மி க வு ம் வ ர வே ற ்பை பெ ற ்ற து . க ண ்க வ ரு ம் ஒளியமைப்பும் , துல்லியமான ஒலியமைப்பும், நிகழ்ச்சியை மென்மேலும் மெருகூட்டின. நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு, அபிஷேக் மற் று ம் இ சைக் கு ழு வி ன ர் அ னை வ ரு க் கு ம் மலர்க்கொத்து வழங்கிக் க�ௌரவித்தனர். அபிஷேக் ப�ோன்ற இளவல்களை ஊக்குவிக்க தமிழ்ச்சங்கம் எடுக்கும் முயற்சிகள் ப�ோற்றத் தகுந்தன. அபிஷேக்கின் இன்னிசை நிகழ்ச்சி த�ொடக்கத்திலேயே களை கட்டியது. ப�ோகப் ப�ோக, திரு. ஏ.ஆர். ரகுமானின் பட்டறையில் இருந்து வந்தவர் அபிஷேக் என்பது உறுதி ஆனது. வாசிங்டன் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தத�ோ என்று வியக்க வைத்தது என்கிறார் வட அமெரிக்கத் தம்ழ்ச்சங்கத் தலைவர் திரு.சுந்தர் குப்புசுவாமி. அபிஷேக் தலைமையில் நடந்த "புத்தம் புது பூமி" இன்னிசை கச்சேரியும், அதற்கு இரு வாரங்களுக்கு முன் நடந்த ஏ. ஆர். ரஹ்மான் இசை கச்சேரியும் ஏறத்தாழ ஒரே தரத்தில் இருந்ததாக நினைக்கிறேன். இந்த இளம் வயதிலேயே தம்பி

30

நவம்பர் 2018

அபிஷேக்கின் அளப்பரிய திறமை என்னை வியக்க வைத்தது. நீண்ட கால தமிழ் சங்க உறுப்பினரின் மகனான அபிஷேக்கை, இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் ஊக்குவிக்க நமது சங்கம் எடுத்த முயற்சி, ஒரு நல்ல முயற்சி. முன்னாள் தமிழ் சங்கத் தலைவர் என்ற முறையிலும், தமிழ் சமூக ஆர்வலர் என்ற முறையிலும், நமது தமிழ் சங்கம் இது ப�ோன்ற நல்ல நிகழ்ச்சிகளை இன்னும் ஊக்குவிக்க வேண்டும் எ ன்ப த ே எ ன் ஆ சை எ ன் கி ற ா ர் மு ன்னா ள் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பாலகன் ஆறுமுகசாமி. ச�ொல்லத்தான் நினைக்கிறேன்... அன்றைய இசை நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றாலும், அரங்கை விட்டுச் செல்லும்போது, மக்கள் நல்லத�ோர் த ர மா ன இ சை நி க ழ்ச் சி யைக் க ண் டு க ளி த்த திருப்திய�ோடு செல்வதைக் காண முடிந்தது. இது ப�ோன்ற வளரும் குருத்துக்களைக் கண்டு அவர்களின் தனிப் பெரும் ஆற்றல்களைத் தமிழ்ச்சங்கம் ப�ோன்ற அமைப்புகள் ஊக்கப்படுத்தும் அதே வேளையில் இந்த வட்டாரத்தில் உள்ள தமிழர்கள், நிகழ்ச்சியில் நேரில் கலந்து க�ொண்டு நிகழ்ச்சி நடத்துபவர்களையும் ஊக்குவித்து, பாராட்டியும் ஆதரவும் தெரிவித்தால் அவர்களது திறமையை மென்மேலும் வளர்த்துக் க�ொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்!

 thenral.mullai@gmail.com


ஒ

வ ்வ ொ ரு வ ரு ட ம் டிசம் பர் மாதம் 7 ஆ ம் த ே தி யைக் க�ொடி நாளாகக் க�ொண்டாடு கிற�ோம். இது, இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணி யும் தியாகத்தையும் ப�ோற்றும் நாளாகும்.

ப�ோர்களைச் சந்தித்து வந்துள்ளது. இப் ப�ோரில் மற்றும் இல்லாமல் அ ன்றாட மு ம் ப ா து க ா ப் பு ப் பணியிலும் பல வீரர்கள் உயிரை இழக்கின்றனர் பலர் தன் உடல் உ று ப் பு க ளை இ ழ ந் து நடை ப் பி ண மா க வ ாழ் ந் து க � ொ ண் டு இருக்கின்றனர்.

தியாக உணர்வுடன் பணியில் ஆனால் நாம�ோ , தம் அற்ப ஈடுபடும் முப்படை வீரர்களின் மகிழ்விற்காக, காதலுக்கு - காதலர் குடும்ப நலன்களையும் முன் தினம் (Valentines Day , நட்புக்கு ன ா ள் ப டை வீ ர ர்களை யு ம் - Friendship Day , மற்றும் பல (முன்னாள் இராணுவ வீரனின் காக்கும் கடமையை நிறைவேற் தினங்களைக் க�ொண்டாகிற�ோம். றும் வகையில், க�ொடி மற்றும் க�ொண்டாடுவதில் தவறே இல்லை. மகள் திருமதி உமா ராஜேஷ்) தேசிய பற்று ப�ொம்மைகள், மற்ற விழாக்களுக்கு க�ொடுக்கும் அழகு ப�ொருட்கள் இவற்றின் விற்பனையில் வரும் முக்கியத்துவத்தில் க�ொடிநாளுக்காக சிறிது அளவு த�ொகையும் மற்றும் நன்கொடை மூலம் திரட்டப்படும் கூட க�ொடுப்பதில்லை என்பது தான் உண்மை. நி தி யை ப டை வீ ர ர்க ளி ன் கு டு ம்ப த் தி ன ரி ன் நம்மில் பெரும்பால�ோன�ோர் க�ொடிநாள் பற்றி நல னு க ்கா க வு ம் அ வ ர்க ளி ன் கு ழ ந்தை க ளி ன் முற்றும் அறியாமல் இருக்கிற�ோம். கல்விக்காகவும் மாணவியர்களின் மறுவாழ்விற்காகவும் வாருங்கள் முதலில் நாம் அறிந்து க�ொள்வோம் பயன் படுத்தப்படுகிறது. பின்னர் பிறர்க்கு அறிய வைப்போம். நம்மால் முடிந்த மு ப்படை வீ ர ர்க ள் த ன் இ ந் தி ய நா ட ்டை நன்கொடை க�ொடுத்து நமக்காகவும் நம் சந்ததியர்க்கு எதிரிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தன் க�ொடிநாளின் முக்கியத்துவத்தை உணர்த்துவ�ோம். உயிரை துச்சமாகக் கருதி இந்திய எல்லையில் பனி, December 7 ஆம் தேதி மட்டும் இல்லாமல் மற்ற குளிர், வெயில், இரவு, பகல் பாராமல் பணியாற்றி நாட்களிலும் நம்மால் இயன்ற நிதி உதவியைக் வருகின்றனர். இந்திய விடுதலை அடைந்து பல க�ொடுத்து முப்படைக்கு வீர வணக்கம் செலுத்துவ�ோம்.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

31


எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்

வள்ளுவன் தமிழ் மையம் அ

ன் பு த் த மி ழ் நெ ஞ ்சங்க ளி ன் ஆ த ர வு ட ன் வள்ளுவன் தமிழ் மையம் தனது எட்டாம் ஆண்டு தமிழ்க் கல்விப் பணியை 2018, செப்டம்பர் 8 ஆம் த ே தி இ னி த ே து வ ங் கி ய து . விர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஸ்டோன் நடுநிலை பள்ளியில் சல்லி பகுதியின் (Sully District) மேலாளர் திருமதி கேத்தி ஸ்மித் துவங்கிவைத்தார்.

இந்த ஆண்டு திரு.செல்வ ம�ோகன் நீதிராஜ் வள்ளுவன் தமிழ் மையத்தின் மு த ல ்வ ர ா க த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பள்ளியில் ஆரம்ப விதை களை நட்ட வித்தகர்களில் ஒருவர். இவருடன் இணைந்து பணியாற்ற புதிய நிர்வாகக் குழு களத்தில் இறங்கியுள்ளது.

விஜய் சத்தியா

இ க் க ல் வி ஆ ண் டி ல் 6 5 2 மாணவர்கள் தமிழ்ப் பள்ளியில் சேர்த்துள்ளார்கள். தமிழை வரும் தலைமுறைகளுக்குக் க�ொண்டு செல்லும் பேரார்வத் துடன் 113 ஆசிரியர்கள் த ன்னார்வலர்க ள ா க இ ணைத் து ள்ளார்க ள் . ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்துகிறார் கள். வள்ளுவன் தமிழ் மையத்தின் முதுகெலும்பாக விளங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தன்னார் வலர்கள் பல குழுக்களில் இணைந்து பணியாற்று கிறார்கள்.

32

நவம்பர் 2018

இந்த ஆண்டு மாணவர்களுக்கு எளிமையாகத் தமிழ் கற்றுக்கொடுக்க புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன. நிலை 6 மற்றும் நிலை 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விளை யாட் டு மற் று ம் இ சை யி ன் வ ழி யா க த மி ழ் எழுத்துக்கள் மற்றும் வாக்கியங் கள் அமைக்கும் பயிற்சி அளிக்கப் பட்டது. அனைத்து நிலை மாணவர் களுக்கும் பல எளிய, சுவாரசியமான, புதிய முறைகளில் தமிழ் கற்றுக்கொடுக்கும் முயற்சிகளில் பள்ளி இயங்கி வருகிறது.

ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் க�ோடை

 thenral.mullai@gmail.com


விடுமுறையில் வள்ளுவன் தமிழ் மையத்துக்காக நட த் தி ய ஆ சி ரி ய ர் ப யி ற் சி மி க ச் சி ற ப்பா க நடைபெற்றது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத் தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்க நாதன் அயற்சூழலில் படிக்கும் நமது மாணவர் களுக்கு எவ்வாறு தமிழைக் கற்றுக்கொடுக்கலாம் என்பதை தன் அனுபவத்தின் மூலம் சிறப்பாகத் தெளிவுபடுத்தினார். மேலும் இக்கோடை விடுமுறையில் ஹார்வர்டு தமிழ் இருக்கை நடத்திய இரண்டு நாள் ஆசிரியர் பட்டறையில் வள்ளுவன் தமிழ் மையத்தின் ஆசிரியர்கள் பெரும் திரளாகப் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரியும் ஜ�ோனத்தன் ரிப்ளி பலதரப்பட்ட மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் முறைகள், மாணவர்க ளின் தமிழார்வத்தைத் தூண்டும் பலவிதமான பயிற்சிகளைப் பகிர்ந்து க�ொண்டார்.

நூலகங்களில் தமிழ் நூல்கள் தமிழ்ப் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழ் க ற் பி ப்பதை த் த வி ர , வ ர் ஜீ னி ய / அ மெ ரி க ்கச் ச மூ க த் தி ல் த மி ழை நி ல ை நி று த் து ம் ப ல மு யற் சி க ளை யு ம் வ ள் ளு வ ன் த மி ழ் ம ை ய ம்

முன்னெடுத்து வருகிறது. சென்ற கல்வி ஆண்டில் ல�ௌடன் மாவட்ட நூலகங்களில் தமிழ் நூல்கள் வழங்குவதற்காகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது வள்ளுவன் தமிழ் மையம். இந்தத் த�ொடர்ந்த முயற்சிகளின் பயனாக, 2018 டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் ல�ௌடன் பிராம்பிள்டன் புதிய கிளை நூலகத்தில் தமிழ் நூல்கள் மக்களுக்கு வழங்கப்படும் செய்தி தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது. இந்நூலகத்திற்கு 400 குழந்தைகள் நூல்களும் 100 இலக்கிய நூல்களும் வள்ளுவன் தமிழ் மையத்தால் நன்கொடையாக அளிக்கப்பட்டன. வர்ஜீனியா மாநிலத்தில் ப�ொது நூலகத்தில் தமிழ் நூல்கள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதைத் த�ொடர்ந்து பேர்பேக்சு மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் தமிழ் நூல்களை வழங்குவதற் கான முயற்சியைத் தற்போது வள்ளுவன் தமிழ் மையம் முன்னெடுத்து வருகிறது. நமது அடுத்த தலைமுறைக்குத் தமிழ் ம�ொழியைக் கடத்துவதில் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவ�ோம். அனைத்து விவரங்களும் வள்ளுவன் தமிழ் இணையத்தளத்தில் http://www.valluvantamil.org/ காணலாம்.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

33


வி. ஐ. டி. வேந்தர் ஜி. விசுவநாதன் அவர்களின்

தமிழியக்கம்

இ

ந்தியாவின் தலை சிறந்த த�ொழில் நுட்பப் பல்கலைக் க ழ க ங்க ளி ல் ஒ ன் ற ா ன வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் நிறுவன ரும், கல்வியாளருமான வேந்தர் ஜி. விசுவநாதன் அவர்கள் தமிழ் மீதும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மீதும் அளவிலா அன்பும், பற்றும் க�ொண்ட வர். சமீபத்தில் அவர் அமெரிக்கா வந்திருந்த ப�ோது, அவரிடம் ஒரு குறு நேர்காணல் செய்ய வாய்ப்பு கிட்டியது. அத் தருணம், தாம் நிறுவ இருக்கும் தமிழியக்கத்தினைப் பற்றித் தென்றல் முல்லை வாசகர்களுக்காக அறிவித் தார். அதனை அறிந்து க�ொள்வதற்கு மு ன் , வேந்த ர் ஜி . வி சு வ நா த ன் அவர்களின் சிறப்புகளைப் பற்றி மேலும் அறிந்து க�ொள்வோமா?

படிப்பையும் நிறைவு செய்தார். ப� ொ து ச்சேவை யி ல் நா ட ்ட ங் க�ொண்டு, தமிழ்நாடு சட்டமன்ற உ று ப் பி ன ர ா க வு ம் , பி ன் அ ம ை ச்ச ர ா க வு ம் , இ ந் தி ய ப் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். வேலூரில் அவர் நிறுவிய வி ஐ டி பல்கலைக் கழகம், சென்னை, அமரவாதி, ப�ோபால் நகரங்களில் விரிவடைந்து தற்போது 40,000-த்திற்கும் மேல் மாணவ மாணவியர் கல்வி பயில்கிறார்கள்.

ஷ்யாம் கிருஷ்ணன்

வேலூர் அருகே உள்ள க�ோத்தகுப்பம் என்ற சிற்றுரில் பிறந்த திரு. விசுவநாதன், கல்வியின் மேல் சிறு வயது முதற் க�ொண்டே நாட்டம் க�ொண்டவர். தம் அயராத முயற்சியில், சென்னை லய�ோலா கல்லூரியில் படித்து, பின் ப�ொருளாதாரத்தில் அக்கல்லூரியிலேயே முதுகலைப் பட்டம் பெற்றார். த�ொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் ப டி ப்பை நி றை வு செய்த அ வ ர் , 2 0 0 3 ஆ ம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் த�ொழில் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மை திட்டப்

34

நவம்பர் 2018

வேந்தார் விசுவநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடை அளித்து ஊக்குவிக்கிறார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கதின் தமிழ் விழாவிற்கு ஆண்டு த�ோறும் பெருங்கொடை வள்ளலாக ஆதரவு தருகிறார். தென்றல் முல்லை வாசகர்களுக்காக அவரிடம் கண்ட நேர்காணலின் ப�ோது, அவர் கூறியதாவது: “தமிழுக்காக ஒரு இயக்கம் த�ொடங்க இருக்கிற�ோம். அதன் பெயர் தமிழியக்கம். அதன் ந�ோக்கம் ‘உலகத் தமிழர்களே, ஒன்று படுங்கள்’ என்பதுதான். த�ொன்று த�ொட்டு, தமிழர்களாகிய நம்மின் முழக்கம், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது. உலகெங்கும் பல நாடுகளில் தமிழர் வசிக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகள் தமிழ் கற்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா

 thenral.mullai@gmail.com


வி ல் ஆ யி ர க ்க ண க ்கா ன கு ழ ந்தை க ள் த மி ழ் ப் பள்ளிகளில் தமிழ் பயின்று வருவது ப�ோற்றத் தக்கது. ஆனால் பல நாடுகளில் அவர்கள் தமிழ் கற்க ஆர்வம் இருப்பினும், தமிழ் கற்க இயலாத சூழல் உள்ளது. சில நாடுகளில், உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில், தமிழ்ப் பெயர் க�ொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். அவர்களுக்குத் தமிழில் பேசவ�ோ படிக்கவ�ோ தெரியாது. உலகின் பழமையும், த�ொன்மையும் நிறைந்த தமிழ் ம�ொழியைத் தமிழர்கள் மறந்து விடுவார்கள�ோ என்ற சூழ்நிலை காணப்படு கிறது. இ வ ்வா ற ா ன வ ர் த மி ழி ல் ந ன் கு பே ச , ப டி க ்க இவ்வியக்கம் வகை செய்யும். தமிழ் பயிற்றுவிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி த ர ப்ப டு ம் . த ேவை ப் ப டு ம் ப கு தி க ளு க் கு தமிழ்நாட்டிலிருந்து தமிழாசிரியர் களை அனுப்பி இ வ ்வகை ப் ப யி ற் சி அ ல ்ல து ப யி ற் று வி த்தல் மேற்கொள்ளப் படும். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தமிழ் மென்மேலும் தழைத்தோங்கப் பாடுபடும். குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவது முதல், பிழையின்றித் தமிழில் பேச, எழுத, சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் முகாம்கள் மூலம் அளிப்பது என தமிழ் சிறக்க இவ்வியக்கம் முயற்சிகள் மேற்கொள்ளும். அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்! அவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க வட

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மூலம் முயற்சி மேற் க�ொள்ளப் படும்” வேந்தர் திரு. விசுவநாதன் மேற்குறிப்பிட்ட த மி ழி ய க ்க த் தி ன் த� ொ ட க ்க வி ழ ா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 15-ந்தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 6 அமர்வுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், உலகெங்குமுள்ள தமிழ் பிரமுகர்கள் க ல ந் து க � ொ ண ்டார்க ள் . த மி ழ க த் தி லி ரு ந் து , தமிழறிஞர் பெருமக்கள், கு. ஞானசம்பசந்தம், சிலம்பொலி செல்லப்பன், மறைமலை இலக்குவனார், ஈர�ோடு தமிழன்பன், மற்றும், கவிஞர் பெருமக்கள், வைரமுத்து, மு.மேத்தா, ம�ொரிசியஸ் நாட்டின் பிரதமர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் பிரதமர் ம�ோசஸ் வீராசாமி மற்றும் பலர் க ல ந் து க � ொ ண ்டார்க ள் . மு த ன் மு றையா க தமிழகத்தில் 22 கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் – த மி ழ க த் தி ன் து ணை மு த ல ்வ ர் தி ரு . ஓ . பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா. பாண்டியன், மத்திய அமைச்சர் ப�ொன். ராதாகிருஷ்ணன், சுப வீர பாண்டியன், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட – பலர் கலந்து க�ொண்டு சிறப்பித்தனர். வேந்த ர் வி சு வ நா த ன் த� ொ ட ங் கி யு ள்ள தமிழியக்கத்திற்கு, தென்றல் முல்லை சார்பில் வாழ்த்துகள்!!

வாசிங்டன் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு எங்களின் குழந்தைகள் தினவிழா வாழ்த்துகள்

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

35


தமிழ்ச் சங்க சிறப்பு நிகழ்வு:

தமிழர்களின் வாழ்வியல் கண்காட்சி த

மிழ்க் குழந்தைகள், தங்களின் தி ற ம ை க ளைக் க ா ட ்ட , “Poster Session” ஒன்றினைத் தமிழ் கண்காட்சியில் தனியாகவ�ோ, அ ல ்ல து 2 அ ல ்ல து 3 மூ ன் று குழந்தைகள் ஒன்றாக இணைந்தோ தமிழ்/தமிழர் வரலாறு சார்ந்த படங்கள் உள்ள poster-களைத் த யா ரி த் து க � ொ ண் டு வ ர லா ம் எ ன் று த மி ழ ்ச ்சங்க ம் மு த ன் முறையாக அறிவித்திருந்தது. கடந்த 09/16/2018 அன்று மேரிலாந்தில் உ ள்ள வ ா ல ்ட ர் ஜ ான்ச ன் உயர்நிலை பள்ளியில் இந்த தமிழ்க் கண்காட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அங்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து வி ட ்ட ன ர் . அ தி ல் நா ன் கு வயதிலிருந்து 14 வயது வரையில் உ ள்ள கு ழ ந்தை க ள் க ல ந் து க் க�ொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக மு னை வ ர் . வ ா சு , மு னை வ ர் அ ர சு செ ல ்லையா , தி ரு . அகத்தியன் பெனிடிக்ட் திரு. க�ொழந்தவேல் இராமசாமி திரு. செல்வம், திரு. செந்தில் முருகன் வேலுசாமி அனைவரும் கலந்து கவிதா சுப்ரமணியம் க�ொண்டு , மிகப் ப�ொறுமையாக எலிக்காட் சிட்டி தமிழ்ப்பள்ளி ஒ வ ்வ ொ ரு கு ழ ந்தை க ள் ச� ொ ல் லு வ தை ஆ ர்வத்த ோ டு க வ னி த் து , தமிழர் வரலாறு, பண்பாடு மற்றும் ம�ொழி சார்ந்த அ வ ர்க ளு ட ன் க ல ந் து ரையா டி , அ ழ க ா ன ஓவியங்கள், இசை மற்றும் பழமையான ப�ொருட்கள் கே ள் வி க ளை த் த� ொ டு த் து ம் கு ழ ந்தை க ளை தமிழ் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன‌, இதில் ஊ க ்கப்ப டு த் தி யு ம் அ வ ர்களை த மி ழி லேய ே கலந்துக�ொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பேசவைத்த நடுவர்களையும் நாம் பாரட்டியே தீர பாராட்டுச் சான்றிதழ்களும் சிறப்புப் பரிசுகளும் வேண்டும். உண்டு என வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் தமிழ் கண்காட்சியில் ஐவகை நிலங்கள், தஞ்சை அறிவித்திருந்தது. பெரிய க�ோவில் கட்டிடக் கலை, மாமல்லபுரம் சிற்பக் மிக அருமையாகவும் ,நேர்த்தியாகவும் பதாகைகள் கலை, க�ோலங்கள், தமிழர்களின் திருநாள் ப�ொங்கல், (Posters) செய்து எடுத்து வந்து அதை அக் குழந்தைகள் தமிழ் எழுத்துகளின் உணர்வுகள், தமிழர்களின் தமிழில் விளக்கிச்சொல்லி நம்முடன் தமிழில் பேசி

36

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


விளையாட்டு என பல பாதகைகளைக் கண்காட்சி யில் அடுக்கி இருந்தார்கள். அதில் க�ோலங்கள் முதல் பரிசு 125 வெள்ளிகளும், ஐவகை நிலங்கள் இரண்டாம் பரிசு 100 வெள்ளிகளும், தமிழ் எழுத்துக்களின் உணர்வுகள் மூன்றாம் பரிசு 75 வெள்ளி களும் பரிசாக அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம் (ATA) வழங்கியது.. மேலும் பங்கு பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் 25 வெள்ளிகள் வீதம் க�ொடுக்கப்பட்டது. நமது குழந்தைகள் இவைகளை தமிழில் விளக்கிச்சொல்லி நம்முடன் தமிழில் பேசி மகிழ்ந்திட ஓர் அரிய வாய்ப்பாக இந்த கண்காட்சி

அமைந்தது ஒரு சிறப்பு! த மி ழ் ச ங்க ம் மீ ண் டு ம் கு ழ ந்தை க ளு க ்கா க இதேப�ோன்ற கண் காட்சிகளை க�ொண்டுவர இருக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிகளும், பெற்றோர்களும் கு ழ ந்தை க ளை ஊ க ்கப்ப டு த் தி இ து ப�ோன்ற கண்காட்சியில் கலந்து க�ொள்ளச் செய்ய வேண்டும். அமெரிக்க மண்ணில் தமிழை நமது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல இது ப�ோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தித் தந்த நமது வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி ச�ொல்லல் நமது கடமையன்றோ! கடமைப் பட்டிருக்கிற�ோம்.

விழாக் கால வாழ்த்துகள் ஆண்டி சாவித்திரி கிரி & ஜெகதா கிரி ஓவியா கிரி, அகிலன் கிரி, நேயா கிரி SOFTSQUARE LLC, CHENNAI / USA நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

37


â¡ù£À‹ ï‹ ªï…¬ê ÜœÀ‹ ºœOõ£Œ‚裙 G¬ù¾ ºŸø‹ ( அனைவர்க்கும் ஓர் அன்பார்ந்த வேண்டுக�ோள் )

த

ஞ்சாவூர் பெரிய க�ோவிலைச் காணச் செல்லும் தமிழ் மக்களே, அ ரு கி லி ரு க் கு ம் மு ள் ளி வாய்க்கால் நினைவு முற்றத்தையும் பார்த்து வாருங்கள். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் க�ொல்லப்பட்ட, த மி ழீ ழ த் து க ்கா க உ யி ர் வி ட ்ட ப�ோ ர ா ளி க ள் , தி யா கி க ள் மற் று ம் மக்களை நினைவு கூறும் ஒரு நினைவு முற்றம் ஆகும். இதனை நவம்பர் 06, 2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010 இல் த�ொடங்கப்பட்டது. தி ரு . வைக�ோ மற் று ம் அ ய்யா நல்லக்கண்ணுவால் இதன் அடிக்கல்

38

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

நாட்டப்பட்டது. முதலில் ஒரு நினைவுத் தூணாக மட்டுமே அ ம ை க ்க த் தி ட ்ட மி ட ப் ப ட் டி ரு ந்த து . ஆ ன ால் இலங்கையில் தமிழர் நினைவிடங் களுக்கு நிகழ்ந்த அவலங்களால், த மி ழ ர்க ள் அ தி க ள வி ல் அழிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் ப�ோரின் நினைவுச் சின்னமாக இது உருவாக்கத் தீர்மானிக்கப் பட்டது. உலகத் தமிழர் பேரவையால் மே ற ்க ொ ள்ளப்ப ட ்ட இ த் திட்டப்பணி, தலைவர் பழ நெடுமாறனின் மேற்பார்வையில் நடந்தது. கட்டுமானத்திற்கான நி தி ப ல இ டங்க ளி லி ரு ந் து தி ர ட ்ட ப் ப ட ்ட து . த மி ழ் செயற்பாட்டாளர் முனைவர் எ ம் . நட ர ா ஜ ன் நி னை வு


முற்றத்திற்குத் தேவையான நிலத்தையும் உதவிகளையும் வழங்கினார். தி ட ்ட மி டப்ப ட ்ட நாளுக்கு இரு நாட்களுக்கு மு ன்ன த ா க , 2 0 1 3 ஆ ம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தி க தி ய ன் று இ ம் மு ற ்ற ம் திறந்து வைக்கப்பட்டது. அய்யா நல்லக்கண்ணு, திரு. வைக�ோ தமிழ்த் தேசியப் ப�ோியக்க தலைவர் த�ோழா் பெ . ம ணி ய ர ச ன் , தி ரு . சீமான், முனைவர் சு. ப. உதயகுமார் மற்றும் திரு. ப�ொன் இராதாகிருஷ்ணன் ப�ோன்ற த மி ழ க த்தைச் சேர்ந்த பல‌அரசியல்வாதி

களும் செயற்பாட்டாளர்களும் திறப்பு விழாவில் கலந்து க�ொண்டனர். முள்ளி வாய்க்கால் முற்ற வளாகம் தஞ்சாவூரிலிருந்து ஐந்து கில�ோ மீட்டர் த�ொலைவிலுள்ள விளார் கிராமத்தில் 1.75-ஏக்கர் பரப்பளவில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலைய�ோரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விளார் செல்லும் பேருந்துகள் மூலம் இவ்விடத்தை அடையலாம். தஞ்சாவூரின் அண்ணாநகர் சந்தையிலிருந்தும் இந் நினைவு முற்றத்திற்கு எளிதாகச் சென்று வரலாம். தகவல்:

நவம்பர் 2018

ஆசிரியர் குழு

 thenral.mullai@gmail.com

39


நூல் திறனாய்வு: “அறியப்படாத தமிழ் ம�ொழி”

அ

திவேகமான, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையையே பெரும்பாலான�ோர் வாழும் காலகட்டம் இது. ஒரு நல்ல நூல் படிக்கவ�ோ, ஒரு நல்ல இலக்கிய கூட்டத்திற்கு ப�ோகவ�ோ, நேரம் ஒ து க் கு வ து சி ர மமா ன காரியம்தான். சில நேரங்களில் க ரு த் து ச் செ றி வு நி றை ந் து சிந்தனையை தூண்டும் நூல் ஒ ன்றை ப டி த் து ஊ க ்க ம் பெற்றால்; நமது மன அழுத்தத்தை ப�ோக் கி வ ா ழ ்க்கை யி ல் ந ம் பி க ்கை யு ட ன் பீ டு நடை ப�ோடமுடியும்.

முனைவர் அரசு செல்லைய்யா

அ ப்ப டி ப்ப ட ்ட ஒ ரு உ ன்ன த பு த்த க ம் “அறியப்படாத தமிழ் ம�ொழி”. அப்புத்தகத்தையும், அதன் ஆசிரியர் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் பற்றியும் என்னிடம் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மேனாள் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் மிகவும் பாராட்டிப் பேசினார். அதற்கு பிறகு சில நாட்களில் வாசிங்டன் வ ட ்டா ர த் தி ல் இ லக் கி ய நி க ழ் வு க ளை முன்னெடுக்கும் திரு. க�ொழந்தவேல் இராமசாமி; அப்புத்தகத்தின் ஒரு பிரதியையும் க�ொடுத்து தவினார். 278 பக்கங்களில் 14 அத்தியாயங்கள் க�ொண்ட இப்புத்தகத்தை ஒருமுறை படித்தேன், சுவைத்தேன், மல ை த்தே ன் . இ ன் னு ம் தெ ளி வ ா க உ ள்வாங்கவேண் டி மீ ண் டு ம� ொ ரு மு றை யு ம் படித்தேன். எளிய சுவையான நடையில், ஆழமான ஆய்வுக்கருத்துக்களையும், பல சீரிய தகவல்களையும் இப்புத்தகத்தில் ஆசிரியர் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் வழங்கியிருக்கிறார்.

40

நவம்பர் 2018

தமிழ் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் படிக்கவேண்டிய புத்தகம் இது. அமெரிக்காவில் வ ாழ் ந் து வ ரு ம் ஆ சி ரி ய ர் க ண ்ண பி ர ா ன் த� ொ ழி ல நு ட ்பம்ப யி ன் று , வ ங் கி யி ல் பணி யாற்றி வருகிறார். University of California, Berkely – இல் தமிழியலில் முனைவர் பட்டம் பெற்று, பகுதி நேரப்பேராசிரிய ராகவும் பணிபுரிகிறார். தமிழ், வ டம� ொ ழி இ ர ண ்டை யு ம் ந ன் கு ப யி ன்ற வ ர் . ச ங்க இ லக் கி யங்க ள் , ப க் தி இலக்கியம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் நன்கு கற்றவர். த�ொல்காப்பியம் துவங்கி த�ொ.பரமசிவன் வரை தமிழின் அனைத்து முக்கிய இலக்கியங்களையும், இலக்கண நூல்களையும் நன்கு அறிந்தவர். இப்புத்தகத்தின் ந�ோக்கம், அறிஞர் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை தமிழர் வீதிக்கும், வீட்டுக்கும் எடுத்துவருவதே என்கிறார் ஆசிரியர். பு த்த க த்தை இ ரு மு றை ப டி த்த தி லி ரு ந் து , அந்நோக்கத்தில் ஆசிரியர் வெற்றிபெற்றதை உணர்கிறேன். வெகு தமிழ் மக்களிடையே, வட ம�ொழி தெரியாததாலும், அறிவிற்கு ஒத்தாத கருத்துக்களை நம்புவதாலும், நம் மக்கள் தமிழை விட வேற்று ம� ொ ழி க ள் உ ய ர் ந் து எ ன்ற நி ல ை க் கு த் தள்ளப்படுவதையும் மறுப்பதற்கு இல்லை. காலம் காலமாக நடந்துவரும் இந்த தமிழ் மறை ப் பு , ம று ப் பு , தி ரி ப் பு த மி ழ ர்க ளி ல் பெ ரு ம்பான்மை யி ன ர் அ றி யாமலேய ே இருக்கிறார்கள். அறியப்படாத அந்த தமிழ் ம�ொழியை, ஆசிரியர் நமக்கு அறியத் தருகிறார்.

 thenral.mullai@gmail.com


முதல் அத்தியாயத்திலேயே, ”கல்தோன்றி மண் த�ோன்றா” அல்லது “தமிழ்ப் ப�ொய்யா” என்ற வினா எழுப்பி விடை காணுகிறார் ஆசிரியர். இ ர ண ்டா ம் அ த் தி யாய த் தி ல் , தி ரு க் கு ற ளி ல் முரண்பாடுகளாக தெரியும் குறட்பாக்களை தெளிவாக விளக்குகிறார். ”அணுவைத் துளைத்தது” தமிழ் அறிவியலா என கேள்விகேட்டு; எதனிலும் தற்பெருமைஇன்றி, நடந்தவற்றை ஆய்ந்துஅறிய வேண் டு மெ ன மூ ன்றா ம் அ த் தி யாய த் தி ல் வி ள க் கு கி ற ா ர் . “ மு ரு க ன் த மி ழ ்க்கட வு ள ா ? சம்ஸ்கிருதக் கடவுளா?” (அத்தியாயம் 4), ஆறுபடை வீடுகளா? (அத்தியாயம் 5), எது முதல் திணை? (அத்தியாயம் 6), சித்திரையா? தையா?; திராவிடமா? தமிழா? (அத்தியாயம் 8), த�ொல்காப்பியத் திலேயே சாதி உண்டா? (அத்தியாயம் 9) என தமிழர் மனதில் த�ொடர்ந்து அலைம�ோதும் வினாக்களுக்கு ஆழ்ந்து ஆய்வு செய்து, மிகவும் சுவையான நடையில் பதிலளித்திருக்கிறார். சிலப்பதிகார – கம்பராமாயணச் சண்டை (அத்தியாயம் 10) என இரு நூல்களையும் ஒப்பாய்வு செய்து, அக்காலகட்டத்தில் தமிழ்ச்சமுதாய, சமய நிலையையையும் நம்முன்னே நிறுத்துகிறார். இலக்கண அரசியல் (11), நாட்டுப்புறத் தமிழ் (12), ஒரு ப�ொருள் பல ச�ொற்கள் (13) தமிழகத்தின் ஊர்பேர்விகுதிகள் (14) என்று- தமிழ்ச் சுவையை, ஆழ்ந்த ப�ொருளை, ஆய்வுப்பார்வையை பல்வேறு க�ோணங்களில் ஆசிரியர் அலசுகிறார். நூலின் மையக்குவியலான “தமிழ் மறைப்பு அதிகாரம் (7) வைதீக காலம் த�ொட்டு, சமயம் என்ற ப�ோர்வையில் மக்கள் எப்படி மூளைச் சாயம் ஏற்றப்பட்டார்கள் என்பதை விளக்குகிறது. தன் உண்மை வரலாறு, பண்பாட்டு விழுமியங்கள் இதனால் எப்படி திரிக்கப்பட்டன என்பதையும் விளக்குகிறது. அ த் தி யாயங்க ள் ஒ வ ்வ ொ ன் று ம் தனிச்சிறப்புவாய்ந்தவையாக மிளிர்கின்றன. இப்புத்தகத்தை ஆய்வு செய்ய, வாசிங்க்டன் வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பலரும் பங்குக�ொண்டார்கள். படித்து கருத்தினை பகிர்ந்த ஒவ்வொருவரும், இப்புத்தகம் தான் இதுவரை க�ொண்டிருந்த சில அடிப்படை கருத்து கட்டமைப்புகளை புரட்டிப்போட்டதாகவே

கூறினார்கள். தமிழ்பண்பாட்டுவிழுமியங்கள்மறைக்கப்படவ�ோ மறுக்கப்படவ�ோ கூடாது என திண்ணியமான எ ண ்ண மு டைய�ோ ர் ஒ வ ்வ ொ ரு வ ரு ம் இ ப் பு த்த க த்தை ஆ ழ் ந் து ப டி த் து உ ண ்மை உணரவேண்டும். 2000 ம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட த�ொடர்ச்சியான சீரிய பண்பாட்டு மரபுகளுக்கும், இ லக் கி ய இ ல க ்க ண நூ ல ்க ளு க் கு ம் நா ம் ச�ொந்தக்காரர்கள் என்பதை நாம் இப்புத்தகத்தின் வாயிலாக நன்கு உணரமுடியும். இ ப் பு த்த க த்தை ப டி த்த த ன ால் , பு தி ய கரு த்து க ளையு ம், ஆய் வுப்பார்வை க ளை யு ம் , தமிழன் என்ற பெருமிதத்தையும் பெறுகிறேன். இப்பெருமிதம், புத்துணர்ச்சியையும் இனிவரும் நா ட ்க ள் ஏ ற ்ற ம் பெற் று வி க் கு ம் எ ன்ற நம்பிக்கையையும் தருகிறது. இப்புத்தகத்தை Kindle / Amazon (US) தளம் https:// www.amazon.com/dp/B07F5KNFG5 வாங்கி படித்து பலன் பெறுங்கள்.

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

41


தமிழ் மரபுத் திங்கள் ஏன்? (Why Tamil Heritage Month?)

முதலில் க�ொஞ்சம் வரலாறு மனித வரலாற்றின் ஆரம்பக் க ால க ்க ட ்ட மா ன ப ழைய க ற ்கால த் தி ல் ( 2 மி ல் லி ய ன் ஆண்டுகளுக்கு முன்பே) தமிழ் நாட் டி ல் சென்னைக் கு அருகிலுள்ள அத்திரம்பாக்கம் எ ன்ற இ ட த் தி ல் ம னி த மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான ஆ த ா ர ங்களை உ ல கி ன் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சி இதழான சயன்ஸ் இதழ் ஒரு ஆய்வுக்கட்டுரையில் வெளியிட் டது (Science 25 Mar 2011: Vol. 331, Issue 6024, pp. 1596-1599). புதிய கற்காலத்திலும், இரும்புக் கற்காலத்திலும் திராவிடர்களின்/ தமிழர்களின் வாழ்விடங்கள் தென்னிந்தியா முழுவதுமே பரவியிருந்திருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தஞ்சாவூரிலும், திருநெல்வேலி அருகில் ஆதிச்சநல்லூரிலும், மிக அண்மையில் மதுரை அருகில் கீழடியிலும் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்மொழி மற்றும் த�ொல்லியல் தடயங்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் செ ழு ம ை யா ன நா க ரீ க வ ர லா ற ்றைய ே உறுதிப்படுத்தியுள்ளது.

வ ாழ் வி யல் க ரு த் து க ்களை மு ன்வைத்த இ லக் கி யங்க ள் ப டை க ்கப்ப ட ்ட க ால ம் சங்ககாலம். தமிழரின் ஐந்திணை வ ா ழ ்க்கை மு றை க ளை , கலைகளை, பண்பாட்டுக் கூறு பாடுகளை, மன்னராட்சிகளை அழகிய கவிதைகளில் சித்தரிக் கு ம் ச ங்க இ லக் கி யங்க ள் த மி ழ ர்க ளு க ்கெ ன் று ஓ ரு ம ர பைய ே து ல் லி யமா க வரையறுத்து தந்திருக்கின்றன. இ க ்கால த் தி ல் உ ல கி ன் பி ற ம ர பு க ளெ ல ்லா ம் த மக் க ெ ன் று வி ள ங் கு ம் அ ர ச ாட் சி க ளி ன் மூ ல ம் பாதுகாக்கப்பட்டு வரும்பொழுது தனக்கென்று ஓ ர ் நா டி ல ்லா த த மி ழ ்ம ர ப�ோ த ல ை மு றை தலைமுறைகளாக தன் ச�ொந்தக் க�ோட்பாட்டுப் பலத்தின் மூலம் தழைத்து வந்திருக்கின்றது. அந்தமரபை நம் எதிர்காலத் தலைமுறைக்குக் க�ொண்டுசெல்ல வேண்டியது நம் கடமை!

ச�ொ. சங்கரபாண்டி எலிகாட் சிட்டி, மேரிலாந்து

”சங்ககாலம்” என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கி.மு. 300 முதல் – கி.பி. 400 வரையிலான காலக்கட்டம் தமிழர் வரலாற்றின் ப�ொற்காலமென்றே ச�ொல்லலாம். ஏனெனில் உலகெங்கும் மதங்களின் பிடியில் இருந்த அக்காலத்தில் சாதி சமயமற்ற, கடவுள் பரப்புரையற்ற, பெண்ணடிமைத்தனமற்ற உயரிய

42

நவம்பர் 2018

தமிழ்மரபின் அடிநாதம் முந்தையப் பத்தியில் குறிப்பிட்டதுப�ோல் த மி ழ ்ம ர பி ன் ப லமே அ த ன் அ டி ப்படைக் க�ோட்பாடுதான்! உலகமெங்கும் மனித இனம் பிறப்பால் தம்மை உயர்வு-தாழ்வு பாராட்டி பிளவுண்டிருந்த காலத்தில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் கூறி உறுதிப்படுத்தி வந்துள்ளன தமிழ் இலக்கியங்கள். தமிழர்கள் பிற இனங்களால் ஒடுக்கப்பட்டு வந்தப�ொழுதும், வஞ்சிக்கப்பட்டு வந்தப�ொழுதும் அத்தளைகளை உடைக்கப்

 thenral.mullai@gmail.com


ப�ோ ரி டு ம் ப� ொ ழு து ம் கூ ட இ க ்க ோ ட ்பா டு க ளைக் கைவிடாமல் இருப்பதில்தான் இருக்கிறது தமிழ்மரபு! அ த ன ா ல ்தா ன் த ாய க ங்க ளி லு ம் பு லம்பெயர்ந்த அயலகங்களிலும் பல்வேறு இனங்களின் ம�ொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கியும் தம் பண்பாட்டுக்கூறு களை பிறருக்கு வழங்கியும் வந்திருக்கிறது தமிழினம். இக்கலப்புகளைக் காரணமாக்கித் தமிழர் வரலாற்றை ஒ ரு சி ல ர் மறை க ்க மு ற ்ப ட ்டா லு ம் த மி ழ ்ம ர பி ன் தனித்துவமான கூறுகளை கலப்புகளிலிருந்து விலக்கிப் ப ா ர் க் கு ம் ஆ த ா ர மா க இ ரு ந் து வ ரு கி ன்ற ன ச ங்க இலக்கியங்களும், த�ொன்மையான கல்வெட்டுகளும். தமிழரின் உணவு, உடை, மருத்துவம், அணிகலன்கள், இசை, கலை, நடனம், விளையாட்டு, க�ொண்டாட்டங்கள் என அனைத்து மரபுக்கூறுகளும் இன்றும் பிற இனத்து ம ர பு க் கூ று க ளு ட ன் க ல ந் து வ ள ர்ந்தா லு ம் ச ங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் காணப்படும் அவற்றின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களில் அடையாளம் காண முடியும். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஆய்வுப்பார்வையில் கற்று அவற்றை எளிய ஆங்கிலத்தில் ம�ொழிபெயர்த்து உலகம் துய்க்க இலவசமாக வழங்கியுள்ள திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகளைத் த�ொகுத்து வழங்கியுள்ளார் (Vaidehi Herbert (2015), புறநானூற்றுத் துளிகள், Selected Purananooru Poems). அத்தகைய தமிழ்மரபுக் கூறுகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து வலியுறுத்துவதன் மூலமே இன்றைக்குத் தம் தாயகங்களிலேயே ஒடுக்குமுறைக்குள்ளாக்கப் பட்டிருக்கும் தமிழினம் சம உரிமை பெறமுடியும். நமக்கெனச் சம உரிமை க�ோரும் ப�ொழுதுதான் பிறருக்கான சம உரிமைகளை அளிக்கவும் முடியும்! உணவு மலை அரிசி, தினை, வரகு, க�ொள், நெல், அரிசி, துவரம், பச்சைப் பயிறு, உளுந்து, கடலைப்பருப்பு ப�ோன்ற தானியங்களையும், அவரை, கீரைகள், பாகற்காய், பீர்க்கை, கத்திரிக்காய், கருணை, சேம்பு, வள்ளிக்கிழங்கு, முருங்கை, சுரைக்காய், வெள்ளரி ப�ோன்ற காய்கறிகளையும், ஆரல், இறால், கெண்டை, வாளை, அயிரை, வரால், சுறா, குழல் மீன், கெளிறு, க�ோட்டு மீன், பனை மீன் ப�ோன்ற மீன் வகைகளையும், கறி, மிளகு, மூங்கில் விதை, கடுகு, இஞ்சி, உள்ளி, கறிவேப்பிலை, எள், புளி, தேன், வெண்ணெய், நெய், தேங்காய், ஊறுகாய், தயிர் ப�ோன்ற சுவையூட்டிகளையும் பயன்படுத்தியதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தானியங்களை அடிசில், அடை, அமலை (balls), அவிழ்,

நவம்பர் 2018

கூ ழ் , க � ொ ழு க ்க ட ்டை , இ டி யாப்ப ம் , புளிச�ோறு ப�ோன்ற பல்வேறு வடிவங்களில் சமைத்து உண்டதாகக் கூறப்பட்டுள்ளது. வணிகமயமாக்கப்பட்ட வாழ்க்கையில் இந்தத் தலைமுறையினர் இத்தகைய பல்வேறு உணவு முறைகளை மறந்து வெறும் அரிசியை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதால் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைவுகளுக்கும் க�ோளாறுகளுக்கும் ஆ ட ்பட் டி ரு க் கி ற�ோ ம் . க டந்த சி ல ஆ ண் டு க ள ா க இ தை ப் ப ற் றி ய விழிப்புணர்வு ஏற்பட்டு சிறுதானியங்கள் என்ற பெயரில் அனைத்துப் பழமையான தானிய உணவுவகைகளும் மீட்டெடுக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்த விழிப் பு ண ர்வை த மி ழ ்ச ்சங்கங்க ள் கையிலெடுத்துள்ளன. சித்த மருத்துவம் சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் ம�ொழியில் உ ரு வ ாக் கி த் த ந் து ள்ளார்க ள் . பு ல் , பூண்டு,மரம்,செடி, க�ொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலிய இயற்கையில் விளையக்ககூடிய

 thenral.mullai@gmail.com

43


வரலாறு குறித்து பாடமாக வைக்க வேண்டுமென க�ோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்க மண்ணிலும் தமிழ்ச்சங்கங்களும், பேரவையும் சித்தமருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிலரங்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்கத்தமிழர்களின் முனைப்பில் உலக சித்தமருத்துவ அறக்கட்டளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழிசையும் நடனமும்

ப�ொருட்களைக் க�ொண்டும், நவரத்தின, நவல�ோகங்களைக் க�ொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலிய வேதிப்பொருட்களைக் க�ொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், ப�ொடிகள், குளித்தைலங்கள், கசாயங்கள் முதலியவற்றைக் க�ொண்டும், நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் க�ொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியவற்றைக் க�ொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் க�ொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையா கும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான ப�ொருள்களுக்கான சான்றுள்ளன. டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா ப�ோன்ற உயிரைக் க�ொல்லும் த�ொற்று ந�ோய்களுக்கு ஆங்கில மருத்துவத் தில் நல்ல தீர்வு இல்லாமையால், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் நிலவேம்பு கசாயம் மற்றும் பிற சித்த மருந்துகள் பெரும் பங்காற்றியமையால், மக்களிடம் சித்த மருத்துவம் மீதான நம்பிக்கை அதிகரித்துள் ளது. இதைய�ொட்டி, பள்ளிகளில் சித்த மருத்துவ முறைகள் மற்றும் சித்தர்கள்

44

நவம்பர் 2018

இ சை யு ம் நட ன மு ம் ஓ ரி ன த் தி ன் ம ர பை உணர்வுப்பூர்வமாக இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை த�ொன்று த�ொட்டு வழங்கப்பட்டுள்ளது. சங்க நூல்களான த�ொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. சங்கம் மருவிய காலத்து நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றியும், நடனம் ப ற் றி யு ம் ப ல வி ரி வ ா ன ஆ ன ால் நு ணு க ்கமா ன விளக்கங்களைத் தருகிறது. பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், பன்னினு ஆ ழ ்வார்க ளி ன து நாலா யி ர த் தி வ ்ய பி ர ப ந்த மு ம் வளப்படுத்தின. கிபி 14 ம் நூற்றாண்டில் தமிழகத்தை டெல்லி சுல்தான்கள் ஆக்கிரமித்த ப�ொழுதும் அதன்பின் விசயநகரப் பேரரசு காலத்திலும், தமிழிசை புறக்கணிக்கப் பட்டது. 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. 19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் ம�ொழியும் இலக்கியமும் ப�ோன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. 1917 இல் ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து ”கருணாமிர்த ச ா க ர ம் ” எ ன்ற 1 3 4 6 ப க ்கங்க ள் க � ொ ண ்ட நூ ல ை வெளியிட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உ ரு வ ா கி ய நட ன த் தி ன் இ ன்றைய க ல ை வ டி வ மே பரதநாட்டியம். ’சதிர்’ என்று சங்க காலத்தில் அழைக்கப் பட்ட விறலியர் நடனம் பின்னர் கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம் எனப் பல பெயர்களில் அ ழை க ்கப்பட் டு ள்ள து . ஏ ற க் கு றைய க டந்த 7 0 ஆண்டுகளாகத்தான் இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அ ழை க ்கப்ப டு கி ற து . த மி ழ ் நாட் டு க் க�ோ வி ல் களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெ றி மு றைப்ப டு த்தப்ப ட ்ட வ டி வ மே இ ன்றைய ப் பரதநாட்டியம் ஆகும். அண்மைக்காலமாக பேரவையும், தமிழ்ச்சங்கங்களும் அமெரிக்க மண்ணில் தமிழிசையையும், தமிழ் நடனத்தையும் ஊக்குவித்து வருகின்றன.

 thenral.mullai@gmail.com


தமிழர் க�ொண்டாட்டங்களும் விளையாட்டுகளும் த மி ழ ர்க ளி ன் க � ொ ண ்டா ட ்ட ங்க ளி ல் ப ழ ம ை யா ன து ம் , மு த ன்மையா ன து மா ன து ப�ொங்கல் திருநாள். ப�ொங்கல் என்பது வெறுமனே ஒ ரு நா ள் க � ொ ண ்டா ட ்ட மா க இ ல ்லாமல் அறுவடைக்குப் பிந்திய த�ொடர்கொண்டாட்டமா கவும், பழையன கழித்து புதியன புகும் தமிழர் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயமாகவும் இருந்து வந்திருக்கிறது. தமிழர்கள் பண்டைய காலத்தில் பு த்தாண் டு எ ன் று ஒ ன்றை வ ரைய று த் து க் க�ொண்டாடியதற்கு அறிவியல் அடிப்படையிலான ஆதாரமில்லை என்றாலும், இன்றைய கால வரைமுறைகளுடன் தமிழ்ப் புத்தாண்டு என்ற ஒன்றை பழைய வரலாற்றில் தேடினால் அது ப�ொங்கல் திருநாளாகத்தான் இருக்க முடியும். கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமய அடிப்படையிலான வடம�ொழிக் கலப்பினால் சி த் தி ரை யி ல் த� ொ ட ங் கு ம் பு த்தா ண ்டை த் தமிழர்களில் பெரும்பால�ோர் ஏற்றுக்கொண்டிருப் பதைப் புரிந்துக�ொள்ளுதல் வேண்டும். எல்லாத் த ர ப் பி ன ரு மே ஆ ங் கி ல ப் பு த்தா ண ்டைய ே மெய்வாழ் வி ல் ஏ ற் று க ்க ொ ண ்ட ம ை யால் தமிழ்ப்புத்தாண்டு என்பதே வெறும் பண்பாட்டு அடையாளமே. எனவே இரண்டு தரப்புப் பண் ப ாட் டு அ டையா ள த்தை யு ம் அ வ ர வ ர் வி ரு ப்ப த் து க் கு ஏ ற ்ற வ ா று வி ட் டு வி டு த லே சரியானதாக இருக்கும். ப�ொங்கல் திருநாள் உலகெங்கும், தமிழ்நாட்டுக் குள்ளேயே கூட பல்வேறு பகுதிகளிலும் தமிழர் களால் பல்வேறு வகைகளில் க�ொண்டாடப்பட்டு வ ந் தி ரு க் கி ற து . ஆ ன ால் எ ல ்லோ ரு மே அ று வடையைக் க�ொண்டாடுவதையும், இயற்கையை வ ண ங் கு வ தை யு ம் , க ா ல ்நடை க ளை ப் ப�ோற் று வ து மா க ப� ொ ங்கல் தி ரு வி ழ ாவைக் க�ொண்டாடி வந்திருக்கின்றனர். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் ப�ொங்கல், சிறுவீட்டுப் ப�ொங்கல் எனப் பல்வேறு நாட்களில் தமிழ்நாட்டில் சிறப்புக்கொண்டாட்டமாக இன்றும் இருந்து வருகிறது. ப�ொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது காளைகளை மறிக்கும் வீரவிளையாட்டான ச ல் லி க ்கட் டு அ ல ்ல து மஞ் சு வி ர ட் டு த ா ன் . ஏறுதழுவுதல் என்று சங்ககாலம் த�ொட்டே இந்த விளையாட்டு இருந்து வருகிறது. இதுதவிர தமிழ்ச் சிறார்கள் தெருவெங்கும் விளையாடி வந்த ப ல ்வே று வி ளையாட் டு க ள ா ன ச டு கு டு , க�ோலிக்குண்டு, குச்சி-கம்பு (கிட்டிப்புள்), கிளித்தட்டு

ப�ோன்றவை அ றி மு க ப் ப டு த்தப்ப ட ்டால் செலவில்லாத உடற்பயிற்சிக்கு வழிவகுக்கும். முடிவாக, தமிழ்ச்சங்கங்களும், பேரவையும் ”தமிழ்மரபுத் திங்கள்” என்ற குடையின் கீழ் தமிழர்களின் பண்டைய பண்பாட்டுக்கூறுகளை மீட்டெடுப்பதன் மூலம் தமிழ் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். இதனின் அடிப்படையில், நம் வாசிங்டன் தமிழ்ச்சங்கம், கடந்த 2019 சனவரி மாதத்தை, மரபுத் திங்களாக, ப�ொங்கல் விழாவ�ோடு இணைந்து க�ொண்டாடினர் என்பது மகிழ்வு. “Grandmothers and Grandfathers, Thank you for our language that you have saved for us. It is now our turn to save it for the ones who are not yet born. May that be the truth?” (Words of the Maliseet Honour Code, written by Imelda Perley, Maliseet from Manitoba, quoted in Kirkness 2002: 23)

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

45


கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி மறைவு செ

ன்னை யி ல் கூ த் து ப்ப ட ்ட றை நிறுவனர் ந.முத்துசாமி (82) உடல் நலக்குறைவால் அக்டோபர் 24 ஆம் தேதி அன்று காலமானார். கூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. நாடக ஆசிரியர் ந. முத்துச்சாமியால் 1997 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தெ ரு க் கூ த்தை த மி ழ் க ல ை யி ன் மு க் கி ய அ டையா ள மாக் கி ய வ ர் . க ல ை ஞ ர்க ளி ன் பிதாமகனாவார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் ப ல ர் த மி ழ் த் தி ரைப்பட த் து றை யி லு ம் பு க ழ் பெற்றுள்ளனர். இவரது கூத்துப்பட்டறையில் கலை ராணி, பசுபதி, ஜார்ஜ், ஜெயராவ், ஜெயக்குமார், கருணாபிரசாத், விஜய் சேதுபதி, விமல், விதார்த், தேவி, மீனாட்சி, குரு ச�ோமசுந்தரம், ஆனந்த் சாமி, குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு, நாசர், தலைவாசல் விஜய், சண்முகராஜன் ப�ோன்றோர் ஆவர். தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் தமிழின் முக்கியமான நாடக ஆசிரியர்களில் ஒருவராக மதிப்பிடப்படுவர். கசடதபற, நடை ப�ோன்ற இ த ழ ்க ளி ல் இ வ ர து ப டை ப் பு க ள் வெ ளி வ ந்த ன . க ால ம் க ாலமா க , அ ப்பா வு ம் பிள்ளையும், நாற்காலிக்காரர், சுவர�ொட்டிகள், படுகளம், உந்திச்சுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன் என தலைசிறந்த நாடகங்களை தமிழ் நாடக உலகிற்கு

46

நவம்பர் 2018

வழங்கியுள்ளார். சி று க தை க ளு ம் எ ழு தி ய இ வ ர் அ தி லு ம் சாதனைகளை நிகழ்த்தி குறிப்பிடத்தக்கவராக நிலைபெற்றிருப்பவர். இவரது 'நீர்மை' இன்றளவும் தமிழின் சிறந்த சிறுகதைத் த�ொகுதிகளில் ஒன்றாக உள்ளது. தெருக்கூத்து பற்றி 'அன்று பூட்டிய வண்டி' என்ற கட்டுரைத் த�ொகுப்பையும் படைத்துள்ளார். கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வந்தார். கடந்த 1999-ஆம் ஆண்டில் இ ந் தி ய அ ர சி ன் ச ங் கீ த அ க ாட மி வி ரு தை பெற்றுள்ளார். 'ந. முத்துசாமி கட்டுரைகள்' என்ற நூலுக்கு 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நுண்கலை நூலுக்கான பரிசு வழங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மÿ விருது அளிக்கப்பட்டது. நாடகக் கலையை மீட்டெடுப்பதே தனது குறிக்கோள் என்றவர் முத்துசாமி. ‘காலம் காலமாக’ , ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘படுகளம்’ உள்ளிட்ட நாட க ங்களை இ யற் றி வ ர் . மு த் து ச ா மி யி ன் கூ த் து ப்ப ட ்ட றை நாட க அ ம ை ப் பு த மி ழி ல் பரிச�ோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகும். இவரின் மறைவு கலை உலகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அன்னாராது இழப்பிற்கு வாசிங்டன் தமிழ்ச் சங்கம் தமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் க�ொள்கிறது. தகவல்: ஆசிரியர் குழு

 thenral.mullai@gmail.com


நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com

47


48

நவம்பர் 2018

 thenral.mullai@gmail.com


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Thenral Mullai 2018 Volume 17, Issue 3 by Thenral Mullai - Issuu