வலைத்தமிழ் அக்டோபர், 2019

Page 1

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019

1


2

அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய அளவில் தலைதூக்கியுள்ள ஆங்கில ம�ோகம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பெரும்பாலான ம�ொழிகளைக் க�ொஞ்சம் க�ொஞ்சமாகச் சிதைத்து வருகிறது. ஒருவர் பேசும்போது அவர் பேசுவதில் எத்தனை சதவீதம் அவரது தாய்மொழியில் பேசுகிறார் என்று உற்று ந�ோக்கினால், நாம் எங்கே ப�ோகிற�ோம் என்று விளங்கும். இதே ந�ோக்கில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து ம�ொழி பேசுவ�ோரும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இன்று பெரும்பாலான த�ொலைக்காட்சி ஊடகங்கள் இந்த இழிவிற்கு அடித்தளமிட்டு வளர்த்து வருவது வருந்தத்தக்கது. ஊடகங்களில் ஆங்கிலத்தில் த�ொகுத்து வழங்குவதும், நேர்காணல் செய்வதும், நடிகர் - நடிகைகள் ஆங்கிலம் கலந்து பேசுவதையும் ஒரு கலாச்சாரமாக, நாகரீகமாக மாற்றி அதை இளைய�ோர் பின்பற்ற காரணங்களாக அமைகின்றன. எந்த ம�ொழியையும் உருப்படியாகக் கற்காத ஒரு சமூகமாக இந்திய சமூகம் மாறிவருகிறது என்பது குறித்து இந்திய ம�ொழியியல் வல்லுநர்கள் கவலை க�ொண்டுள்ளனர். இந்தி பேசுவ�ோரும் பாதிக்குமேல் ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள். எந்த ம�ொழிக்கும் முக்கியத்துவம் க�ொடுக்காமல் இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு ம�ொழியையும் வளர்க்க அரசு ப�ோதிய நிதி ஒதுக்கி த�ொடர் கவனம் செலுத்தவேண்டும். அரசு மட்டும் இதைச் செய்யமுடியாது, தனி மனிதர்கள் இதுகுறித்தான விழிப்புணர்வு பெறவேண்டும், ம�ொழி வளர்ச்சிக்கு இயங்கும் அமைப்புகள், அறிஞர்கள் இதற்கான திட்டம் வகுத்து செயல்படுத்தவேண்டும். ஆங்கிலம் பேசுவதில் உள்ள வெற்றுப் பெருமையைக் கைவிடவேண்டும். அதே நேரம் அதன் அடிப்படையை ஆராய்வதும் அவசியம். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், மேலும் கல்லூரியில் ம�ொழிப்பாடமாக ஆங்கிலம் கற்றாலும், மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் பேசத்தெரியாத நிலையும் ஏன் நிலவுகிறது என்று எண்ணிப்பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசத் தயங்கும் நிலையம், அதன் அழுத்தமுமே இந்த சமூகத்தை அந்த ம�ொழி குறித்தான முக்கியத்துவத்தை ந�ோக்கி நகர்த்துகிறத�ோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தாய்மொழியுடன், ஆங்கிலத்தையும் சரளமாகப் பேசும் நிலை ஏற்பட்டால் ஆங்கில வழிக் கல்வியும், ஆங்கில ம�ோகமும் இந்திய சமூகத்தில் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே உணரமுடிகிறது.

ஒவ்வொருவரும் தன் தாய்மொழியில், அதன் அழகுடன், பிறம�ொழி கலப்பின்றி பேசவேண்டும் என்பது அடிப்படை தேவை. ஒவ்வொருவரும் முழு மனிதனாக மாற, சிந்தனை வளம் பெற அவரது தாய்மொழியில் ஆழமாக இருப்பதும், அந்த ம�ொழியில் உள்ள இலக்கியங்களை, வாழ்வியல் கருத்துகளை உள்வாங்குவதும் அவசியம் என்பதை அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அங்கு வசிக்கும் பல ம�ொழி பேசும் மக்கள் குழந்தை மருத்துவரிடம் செல்லும்போது குழந்தையுடன் வீட்டில் என்ன ம�ொழியில் குழந்தையிடம் பேசுகிறீர்கள்? என்று கேட்டு உங்கள் தாய்மொழியில் பேசுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். உங்கள் தாய்மொழி ஆங்கிலமாக இல்லாதப�ோது அதில் பேசாதீர்கள், பள்ளி செல்வதற்கு முன் உள்ள வகுப்பில் அல்லது பள்ளி செல்லும்போது கற்றுக்கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ம�ொழியை, அதன் தனித்துவத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமெரிக்காவில் 230 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி, 60 க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களை உருவாக்கி, தமிழ் ம�ொழிக்காகப் பாடத்திட்டம் உருவாக்க இரு அமைப்புகளை உருவாக்கி, தமிழிசை வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி மிகப்பெரிய அடித்தளத்தைப் பெற்றுள்ளது. வேறு பல நாடுகளிலும் வசிக்கும் புலம்பெயர் www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019

3


தமிழர்கள் இதைப்போன்றே ம�ொழிமேல் அக்கறை க�ொண்டுள்ளதை அறிவ�ோம். தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் ஆங்கிலம், இந்தி அல்லது ம�ொழிச்சிதைவு செய்வதை எந்தத் தமிழ் அமைப்பும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், புலம்பெயர்ந்த ஆந்திர, கேரள, கர்நாடக, இந்தி அமைப்புகள்/ சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சென்று பார்த்தால், அங்கு எத்தனை சதவீதம் அவர்களின் தாய்மொழி இருக்கிறது என்பதும், அது ம�ொழியின் பெயரால் கூடிக் கலையும் அமைப்புகளாக இருப்பதை பலரும் கண்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு தமிழ் புலம்பெயர்ந்த நாடுகளில் இல்லை என்று ஓரளவு நிறைவடையலாம். ஆனால் தமிழகத்தின் நிலை நாளுக்குநாள் மிகவும் கவலை தரத்தக்கப் ப�ோக்கில் செல்வதை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியது அவசியமாகிறது.

அனைவருக்கும் அவரவர் ம�ொழியின் ப�ோக்கு குறித்த ஆங்கில தாக்கம் குறித்த கவலை உள்ளது. அதில் ஓரளவு முன்னோடிகளாகத் தமிழ்பேசும் மக்களும், அமைப்புகளும் , இருந்தாலும் ம�ொழிச்சிதைவு இல்லை என்று கூறமுடியாது. அன்பிற்குரியவர்களே, நீங்களும், உங்கள் குழந்தைகளும் பேசும் ம�ொழியைச் சற்று கவனியுங்கள், அதில் பிறம�ொழி கலப்பு எத்தனை சதவீதம் என்று சிரத்தை எடுத்துச் சிந்தியுங்கள். பெற்றோர்கள்தான் குழந்தைகளை செதுக்கும் முதல் சிற்பிகள். நீங்கள் மம்மி-டாடி என்று குழந்தை அழைப்பதை நினைத்து பெருமைப்படுகிறீர்களா? அப்பா-அம்மா என்று உங்கள் அடையாளத்துடன் தாய்மொழியில் அழைப்பதை வலியுறுத்துகிறீர்களா என்பதைப்பொறுத்தே அடுத்த தலைமுறைக்கான பயணம் த�ொடங்குகிறது. கீழடி குறித்து பெருமை க�ொள்ளும் சமூகமாக நம் வாழ்வியலை மறுபரிசீலனை செய்து தாய்மொழியில் நம்மை தகவமைத்துக்கொள்வோம். ம�ொழி என்பது நம் அடையாளம், அது உயர்வு தாழ்வு க�ொள்ளக்கூடிய ஒன்று அல்ல. ஒரு ம�ொழியை இன்னொரு ம�ொழியுடன் கலந்து பேசுவது அந்த ம�ொழிக்கும், அதன் வளத்திற்கும், அழகிற்கும் செய்யும் இழிவாகப் பார்க்கவேண்டும். நம் விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப, வசிக்கும் இடத்திற்கு ஏற்ப எத்தனை ம�ொழிகளை வேண்டுமானாலும் தாய்மொழியுடன் சேர்த்துக் கற்றுக்கொள்வோம். ஆனால் அந்தந்த ம�ொழியை அதன் சிறப்புடன், உச்சரிப்புடன் கலப்பு இல்லாமல் பேசுவ�ோம். ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசுவ�ோம், தமிழைத் தமிழாகப் பேசுவ�ோம். தேவையான , விருப்பமான அனைத்து ம�ொழிகளையும் கற்போம், நம் அன்னை ம�ொழியைக் காப்போம்.

வாழ்க தமிழ்... மீண்டும் அடுத்த இதழில்

4

அக்டோபர் 2019

சந்திப்போம்.

www.Magazine.ValaiTamil.com


www.Magazine.ValaiTamil.com

சூலை 2019

5


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயம�ோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்

தமிழ்

-விஜய் சத்தியா

இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவருபவர் எழுத்தாளர் ஜெயம�ோகன். அவரது அறம் கதைத்தொகுப்பு பரவலாக வாசிக்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவருடைய ச�ொந்த முயற்சியால் சிறந்த எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தற்போது மகாபாரதத்தை நவீன மறுஆக்கமாக வெண்முரசு என்ற மாபெரும் நாவல் த�ொகுப்புகளை எழுதிவருகிறார். அதில் அனைத்துத் தரப்பின் கதைகளையும், பல இந்திய ஞான மரபின் தரிசனங்களையும், முக்கியமாக ஒடுக்கப்பட்ட குலங்களின் குரல்களையும் பதிவு செய்திருக்கிறார். வெண்முரசு த�ொகுப்பில் வண்ணக்கடல் என்ற நாவலில் இந்தியாவின் அனைத்து த�ொன்ம அசுர குலக் கதைகளையும் இணைத்திருப்பார். அதில் சங்ககாலப் பாணன் மதுரை இளநாகன் மகாபாரத கதைமாந்தர்களின் த�ொன்மத்தை அறியும் ப�ொருட்டு குமரி முதல் இமயம் வரை பல்வேறு இந்திய நிலப்பரப்பில் அலைந்து திரிந்து த�ொன்மக் கதைகளை கண்டடைவதாகக் காவிய நடையில் சித்தரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் சிறப்பு ஆளுமையாக எழுத்தாளர் திரு.ஜெயம�ோகன் அவர்களுடனான ஓர் உரையாடல்:

6

அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


அறம் என்றால் என்ன?

இந்திய சிந்தனை மரபில் ஒரு குறிப்பிடத்தக்க வழி இருக்கிறது. வேர்ச்சொல் எடுத்து ஒரு சிந்தனையைத் த�ொடங்கி முன் செல்வது. இது தமிழ், பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ப�ோன்ற த�ொல் ம�ொழிகளுக்கு மிகவும் ப�ொருந்தும். சைவ, வைணவ, வேதாந்த அறிஞர்களும், உ.வே. சா பாணி பழந்தமிழ் அறிஞர்களும் இந்த முறையை ஆய்வுக்குக் க�ொள்வதைப் பார்க்கலாம். அறம் என்கிற வார்த்தையின் வேர்ச்சொல் எதுவாக இருக்கும்? அறுதல், அற்றம் என்பது வேர். ஆகவே அறுதியாகச் ச�ொல்லுதல், முடிவாகச் ச�ொல்லுதல் என்பது த�ொடக்கம். ஒருவரை அழிக்கும்பொருட்டு, சாபமிடுவதற்கும் அறம் பாடுதல் என்ற வார்த்தை வருகிறது.

நான் அறம் என்ற கதைத் த�ொகுப்பு எழுதியிருக்கிறேன். அதில் முதல் கதையின் தலைப்பே அறம். அந்த கதையில் இந்த இரண்டு அர்த்தத்தில் அறம் வந்திருக்கும். ஆரம்ப காலத்தில் குடி அறம், குல அறம் என்று இருந்தது. பின்னர் குடிகள் இணைந்து நாடுகள் உண்டாகும்போது நாட்டு மக்கள் அனைவருக்குமான அறம், பின்னர் பேரறம் ந�ோக்கிச் சென்றுக�ொண்டிருக்கும். ப�ொதுவான அறம் ந�ோக்கி ஒரு வளர்ச்சி பரிணாமத்தில் இருக்கும். ஆகவே ஆரம்பகால இலக்கியத்தைப் www.Magazine.ValaiTamil.com

பார்த்தால் அகத்துறைப் பாடல்களில் குடி அறமாக மூத்தோரை வழிபடுதல், பாலியல் ஒழுக்கம், களவு, கற்பு என்றும் குல அறமாகச் சடங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என்று த�ொடங்கி மானுடர் அனைவருக்குமான அறம் என்று வளர்ந்து வந்திருக்கும். இந்தப் ப�ொது அறச்சிந்தனைகள் சங்க கால இறுதியில் வந்த சில புறநானூற்றுப் பாடல்களில் குறிப்பாகப் ப�ொருண்மொழிக்காஞ்சி துறைப் பகுதியில் காணலாம். சமூக ஆய்வாளர்கள் சமண, ப�ௌத்த, ஆசீவகர்களின் வருகைக்குப் பிறகே இந்த மானுடருக்கான ப�ொது அறம் வளர்ந்து வந்திருக்கும் என்கிறார்கள். சங்க இலக்கியத்தின் உச்சக்கட்ட அறப்பாடல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆசீவகர்களின் பாடல் என்று ஆய்வாளர் நெடுஞ்செழியன் தன் "ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்" நூலில் குறிப்பிடுகிறார். சங்கம் மருவிய காலத்தில், கிமு ஒன்றாம் நூற்றாண்டில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இதன் நீட்சியாகத் திருக்குறள் மானுடருக்கான அறத்தை முன்வைக்கிறது. பின் சிலப்பதிகாரம் அறத்தை மானுடரை மீறிய ஒன்றாக உருவகிக்கிறது. அறம் என்பது நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்து பின்னர் நம்மை மீறி, வரலாற்றுக்கு அப்பால் நின்று நம்மை ஆட்டுவிக்கும் பெரும் சக்தியாக மாறுகிறது. அக்டோபர் 2019

7


அறம் ஒருவருக்கு ஒருவர், காலத்தினால் மாறுபடுமா?

அறம் மாறுபடுமா என்ற கேள்விக்குக் காலத்திற்குக் காலம் வரும் விளக்கங்கள் மாறுபடும் ஆனால் தமிழ் மரபில் எது ஒன்று மாறாமல் மனிதரை மீறிய ஒன்றாக இருக்கும�ோ அதுவே அறமாகும். அது அருவமாக வெறும் கற்பனையாகத் த�ோன்றும். ஆனால் நாம் யாவருமே நம் உடலுடைய இயல்பை மீறி எதுவும் செய்ய முடியாது. எல்லாச் சுதந்திரமும் மனிதனுக்குக் கிடையாது. அது ப�ோல உள்ளம் செயல்படுவதற்கும் சில நெறிகள் உள்ளன. நாம் மனிதர்களாகப் பிறக்கும்போதே இந்த எல்லைகள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே மனிதரை மீறிய ஒன்றாகவே அறம் இருக்கிறது. நான் அதை நம்பக் கூடியவன். ஏனென்றால், ஆப்பிக்காவில் ஒரு பனை உயரமுள்ள சிதல்(கரையான்) புற்றுக்களைக் கண்டிருக்கிறேன். மண்ணுக்குள்ளே மூன்று மடங்கு ஆழமாக செல்லக்கூடியவை. ஒரு சிதல் புற்றை ஒரு நகரம் என்று க�ொண்டால் நியூயார்க் நகரைப்போல் ஆயிரம் மடங்கு பெரியது. சாலமன் காலத்தில் த�ோன்றியவை. அதன் ப�ொறியியலைப் 8

அக்டோபர் 2019

படிக்க ஆய்வாளர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். வேற்று கிரகத்தில் ஒரு இருப்பிடம் அமைப்பதென்றால் இதையே உதாரணமாக க�ொள்ளலாம். உள்ளே செல்வதற்கு ஒரு வழி, வெளியே வருவதற்கு ஒரு வழி, கழிவுகளை அகற்ற, தட்ப வெட்பத்தைக் கட்டுப்படுத்த காற்றோட்டமாக உள்ள கட்டுமானம், தனித்தனி அறை க�ொண்டது. ஒரு சிதலின் வாழ்நாள் ஒருவாரம் மட்டுமே. ஒரு கல்லை மட்டும் பார்க்க கூடும். அதனால் ஒருப�ோதும் முழு சிதல் புற்றைக் கற்பனையிலும் பார்க்க முடியாது. ஆனால் அந்த சிதல் புற்றை அதுதான் கட்டுகிறது. அதன் கூட்டான அறத்தில் அந்த புற்று அமைகிறது. ஒரு சிதல் அந்த புற்றைச் சிதைக்க நினைத்தால், அந்த கூட்டத்தின் ந�ோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அந்த அறமே அழிக்கும். ஆகவே அந்த அறம் சிதலைக் கட்டுப்படுத்துகிறது. மனிதர்களுக்கும் தனித்தனியாக ஒழுக்கம் இருந்தாலும் மாறாத ஒரு பேரறத்தின்(Greater Intelligence) பகுதியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது என் நம்பிக்கை என்பதைவிட நான் உணர்ந்து தெளிந்தது என்று ச�ொல்லலாம். www.Magazine.ValaiTamil.com


இல்லறத்தாருக்கு விருந்தோம்பலை ஒரு உச்ச அறமாக க�ொள்ளலாமா?

திருக்குறளைப் பார்த்தால் அதில்

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை’

என்று வருகிறது.

திருக்குறளை அதன் பின்னணியில் வைத்து ப�ொருள் க�ொள்ளக்கூடிய மரபு இருக்கிறது. அது முழுக்க நிராகரிக்கப்பட்டு பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் மறுகட்டமைப்பு காலத்தில் உரை ஆசிரியர்களால் தங்களுக்கு அப்போது த�ோன்றக்கூடிய விளக்கங்கள் எழுதப்பட்டன. இயல்புடைய மூவர் யார் என்ற கேள்விக்கு நவீன உரைகளில் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் என்று மேம்போக்காகச் ச�ொல்லப்படுகிறது. இல்லறத்தான் தன் குடும்பத்தினருக்கு நல்லவனாக இருக்கவேண்டும் என்று ச�ொல்வதற்கு குறள் அவசியமில்லை.

குறள் சூத்திரம் என்ற வடிவில் எழுதப்பட்ட நூல். இது சமண அறிவுப்புலத்தில் இருந்து வந்த நூல். சூத்திர நூல் என்பது ஒரு விஷயத்தைச் ச�ொல்லக்கூடியதல்ல. பல்வேறாக ச�ொல்லித் தெளிவுற்று அறுதி உண்மையைச் ச�ொல்வது. ஆகவே, ஒரு காட்டை விதையாக மாற்றியது ப�ோல. மீண்டும் காடாக மாற்றவேண்டியது வாசகனின் ப�ொறுப்பு. ஆகவே, திருக்குறள் ஒரு ஊழ்க நூல். அதைப் படிப்பதற்கு

www.Magazine.ValaiTamil.com

ஒரு மரபிருக்கிறது. அது குறளைப் புரிந்துக�ொள்வதல்ல, தியானிப்பது. அதற்கு முதலில் குறளை மனனம் செய்யவேண்டும். பிறகு ச�ொல் எண்ணிப் படிக்கவேண்டும். ஒரு ச�ொல்லின் கருத்தைக்கூட விடாமல் படிக்கவேண்டும். இரண்டாவதாக, ஒரு ச�ொல்லை எடுத்து வேற�ொரு ச�ொல்லை வைத்துப் படிக்கவேண்டும். அந்த வார்த்தையால் ப�ொருள் எப்படி குறைகிறது என்று பார்க்கவேண்டும். உதாரணமாக, ‘த�ொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு’ என்ற குறளில் மணல் என்பதற்கு பதில் மண் என்றால் ப�ொருள் குறைகிறது. மணலைத் தினந்தோறும் த�ோண்டவேண்டும் மண் என்றால் த�ோண்டவேண்டாம். இப்படி ச�ொல் மாற்றி ப�ொருள் க�ொள்ளவேண்டும். வேறு வேறு சாத்தியங்களைப் புரிந்து க�ொள்ளவேண்டும். இந்த முறையே சுவாத்தியாயம், மீண்டும் மீண்டும் படித்தல் என்பதாகும். பிறகு வாழ்க்கையின் வேற�ொரு தருணத்தில் குறள் நினைவுக்கு வரும்.

அக்டோபர் 2019

9


வேறு எந்த எழுத்தாளரையும் விட இதை ஜெயகாந்தன் அற்புதமாகக் கையாள்வார். அவர் குறளைப் பண்டிதத்தனமாகச் ச�ொன்னது கிடையாது. வாழ்க்கையின் தருணத்திற்கு ஏற்ப குறள் நினைவுக்கு வரும். அப்போது வேற�ொரு குறளாக இருக்கும். முற்றிலும் புதிய அழக�ோடு இருக்கும். அதைத்தான் நான் குறளைப் படிக்கும் வழியாகச் ச�ொல்வேன்.

ஆகவே, இயல்புடைய மூவர் யார் என்ற வரிக்கு நமக்கு த�ோன்றக்கூடிய மூவரைச் ச�ொல்லக்கூடாது. அடுத்த குறளில் விடை வருகிறது. து ‘ றந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை’ அம்மூவர், துறந்தார்- துறவி, சாமியார் அல்ல. இந்த சமூகத்தின் ப�ொருட்டு தன் வாழ்க்கையையே துறந்தவர். துவ்வாதவர் -தான் துறக்காதவர்க்குத்

தன்னால் துறக்கப்பட முடியாதவற்கு, யார் என்றால் இரவினர், இழிய�ோர், ஏழை எளியவர். இறந்தார்க்கு குறளுடைய தரிசனத்தில் மிகவும் முக்கியமானது. இன்று இருப்பவன் நேற்று இருந்தவருடைய கடனை மீட்டுக்கொண்டே இருப்பது. தென்புலத்தார் தெய்வம்.. என்று வருவதில் முதலில் வைக்கக்கூடியது தென்புலத்தார். இறந்தார்க்கு ஈமக் கடன்களைச் செய்யக்கூடியது என்று பரிமேலழகர் ச�ொன்னால்கூட அதை நாம் இன்னும் விரிந்த ப�ொருளில் எடுத்துக்கொள்ளலாம். நேற்று இருந்தவருடைய கனவுகளை, லட்சியங்களை அவர்கள் விட்டுச் சென்றவற்றை வளர்ப்பதை, பேணுவதை எடுத்துக்கொள்ளலாம். ஆகவே, இம்மூன்றும் தான் இல்லறத்தானின் கடமையாக க�ொள்ளலாம். விருந்தோம்புதல் மட்டுமல்ல. விருந்தோம்பலை இதன் ஒரு பகுதியாகக்கொள்ளலாம்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

ப�ொறுத்தான�ோடு ஊர்ந்தான் இடை -என்ற குறளுக்கு அவர் வினைப் பயனுக்கேற்ப

வாழ்க்கை அமையும் என்பதாக சிலர் ப�ொருளுரைக்கிறார்களே? இப்படி படிப்பது சரியா? உங்கள் கருத்து?

நான் ஏற்கனவே ச�ொன்னதுப�ோல திருக்குறளைப் படிப்பது என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்கம். மரபாக நூல்களை இப்படிப் படிப்பது கிடையாது. நான் இந்திய மரபு சார்ந்த, வேதாந்த மரபு சார்ந்த நாராயண குருவினுடைய பள்ளியின் வழி வந்தவன். இதன் ப�ொருட்டு 10 அக்டோபர் 2019

எழுதப்பட்ட நூல்களை நாம் பஸ்ஸில் ப�ோகும்போது புரட்டிப் படிப்பது ப�ோலில்லை. உதாரணமாக பதஞ்சலி ய�ோகசூத்திரத்தை ஒரு பஸ்ஸில் ஏறி இறங்குவதற்குள் படித்துவிடலாம். ஆனால் அது ஒரு பெரிய அறிவுத்தளத்தின் உச்சத்தில் ச�ொல்லப்பட்ட ஒரு வரி. பெரும்பாலான சூத்திரத்திரங்கள் நான்கு www.Magazine.ValaiTamil.com


வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். நான்கு வார்த்தைகளைக் க�ொண்டு ஒரு முழுச்சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய ப�ொறுப்பு அங்கே இருக்கிறது. ஆகவே, திருக்குறள் உட்பட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் சமணர்கள் அறிவுத்தளத்தில் ஆதிக்கம் செலுத்திய த�ொடக்க காலத்தில் உருவானவை. அவர்களுடைய வழிமுறை என்பது கல்விக் க�ொடை, அன்னக் க�ொடை, மருத்துவக் க�ொடை. மூன்றுக்கும் நூல்கள் எழுதினார்கள். கல்விக்கு நெறி நூல்கள், இலக்கண நூல்கள் எழுதினார்கள். இந்தியா முழுக்க அனைத்து ம�ொழிகளிலும் இவ்வாறு நூல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படி எழுதப்பட்ட நெறி நூல்கள் ஏற்கனவே தமிழ்ச் சமூகத்தில் புழங்கப்பட்ட நெறிகளை வகுத்துரைப்பதாகவும் புது நெறிகளைத் த�ொகுத்துச் ச�ொல்லக்கூடியதாகவும் இருக்கும். குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் குறளாசிரியன் நின்றிருந்த ஒரு பின்னணியில் நிறுத்திப்பார்க்காமல் தனியாக எடுக்கும்போது வரும் இடர்கள் இவை. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே பாடலில் பெரிய�ோரை வியத்தலும் இலமே, சிறிய�ோரை இகழ்தல் அதனினும் இலமே ‘ என்று ச�ொல்லி, த�ொடர்ந்து சிவிகை ப�ொறுத்தான�ோடு ஊர்ந்தான் இடை www.Magazine.ValaiTamil.com

என்று சேர்த்துப்பார்க்கும்போது ப�ொருள் வந்துவிடும். ஏனென்றால் திருக்குறள் த�ொடர்ந்து ச�ொல்லக்கூடிய ஊழ், மற்றும் ஊழ் என்பது த�ொடர்ந்து அறநெறியின் பாற்பட்டு ஒழுகும் ஒன்றின் விழைவாக வருவது. இந்த விஷயத்தின் திரிபு உரை முதலில் பரிமேலழகரால், முன்னை வினைப்பயன் ஆகவே சுமக்கிறார் என்று உரைக்கப்பட்டது. இது முழுப்பொய் என்றால் நிற்காது. அரைப்பொய் என்பதால் நின்றுவிட்டது. வள்ளுவர் ச�ொல்ல வருவது என்னவென்றால் அறத்தின் வழி இதுவே என என்னாதே. நீ மேலே இருக்கிறாய் அவன் கீழே இருக்கிறான். இப்போது இப்படி இருக்கலாம். உனக்கு ஒரு ப�ொறுப்பு இருக்கிறது அவனுக்கும் ஒரு ப�ொறுப்பு இருக்கிறது. அறம் எப்போது வேண்டுமானால் உன்னையும் சுமக்க வைக்கும். இத�ோடு இணையக்கூடிய 15 குறள்கள் வேறிடத்தில் இருக்கிறது.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்’

தீயவன் வளர்வதும் நல்லவன் வீழ்வதும் எங்கோ நினைவில் இருக்கும். எங்கு இருக்கும்? அறத்தின் நினைவில் இருக்கும். நீ ஆடக்கூடிய நாடகத்தின் பாத்திரம் மட்டும் உன்னுடையது. திரைக்கதை அறத்தால், ஊழால் எழுதப்படுகிறது. அந்த அறம் நன்மை தீமைகளுக்கு, சிறிய விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது.

அக்டோபர் 2019 11


திருக்குறளில் வருகின்ற ‘நற்றாள் த�ொழாஅர் எனின்’, ‘மாணடி

சேர்ந்தார்,

‘இலானடி

சேர்ந்தார்க்கு’,

‘தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்’

தாள், அடி

என்ற கருத்து சமண மதம் சார்ந்ததாக ச�ொல்லப்படுகிறது. ஆனால் வைணவத்திலும் திருவடி, பரமபதம் என்ற கருத்து

குறள்

இருக்கிறது. இதை எப்படி புரிந்துக�ொள்வது?

பக்தி நூல் அல்ல. திருவாசகம் பக்தி நூல். அது காதலால் கசிந்துருகி படிப்பவர்க்கு வேறு அர்த்தத்தை அளிக்கும். குறள், ஆய்ந்து அறிய வேண்டிய அறிவு நூலே ஒழிய நம்பி ஒழுக வேண்டிய பக்தி நூல் அல்ல. உதாரணமாக ‘சிவிகை ப�ொறுத்தான�ோடு ஊர்ந்தான் இடை’ என்ற குறள் வரியை சமண மெய்ஞானப் பின்புலத்தில் வைத்து பார்த்தால் வரக்கூடிய விழுப்பொருள், மறுபிறப்பு க�ொள்கையை மட்டும் ச�ொல்லும் வைணவ பின்புலத்தில் பார்த்தால் ஒரு குறைவு வரும். ஆகவே எந்த மரபைச் சார்ந்தது என்று வகுத்துக்கொள்வது அவசியம்.

இது சமண நூல் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே சமண ப�ௌத்த மரபை சார்ந்தது, இது கிபி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டில், களப்பிரர் காலத்தில் உருவானது. அந்தக் காலத்தைச் சார்ந்த வேற�ொரு சைவ, வைணவ நூல் இல்லாததும் ஒரு காரணம். குறள் சமணர்களால் கல்வி பின்புலத்தில் இருந்து க�ொண்டுவரப்பட்டது. ‘பள்ளி யானையின் உயிர்த்து’ என்ற கபிலரின் குறுந்தொகைப் பாடலில் வரும் பள்ளி படுக்கையைக் குறிக்கும். சமண முனிவர்கள் படுக்கக்கூடிய இடம் பள்ளி. அந்த இடத்தில் அரசர்கள் அவர்களுக்கு படுக்கை வெட்டி க�ொடுப்பார்கள். அங்கு கல்வி கற்பதால் அதற்குப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது. குறளில் உள்ள பெயர்கள், ஆதிநாதர் த�ொடங்கி நேரடியாகவே சமண முனிவர்களைச் சுட்டுகிறது. ‘ "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி"’

என்ற குறளுக்கு க�ௌதம முனிவர் இந்திரனை சபித்தாகச் சில உரையாசிரியர்கள் ச�ொல்வதை ஏற்க முடியாது. ஐம்புலன்களை அவித்தவன் என்று மனைவிய�ோடு வாழ்ந்த க�ௌதம முனிவரை ச�ொல்லமுடியாது. வைதீகமான மரபில் முனிவர் என்றால் வேறு ப�ொருள். ஐந்தவித்தான் என்பது சமண முனிவர்களைக் குறிக்கும் ஜின்னர் 12 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


என்ற ச�ொல்லின் நேரடி தமிழாக்கம். ஜின்னர் என்றால் ஐம்புலன்களை வெற்றிக�ொண்டவன். முனிவர்களின் தவத்தைக் களைக்கும் இந்திரனுக்கு க�ௌதமர் இட்ட சாபம் என்றால் ப�ொருள் குறைகிறது.

நெடுநாட்கள் குறள் சமண நூலாகவும் வைதீக மதத்திற்கு வெளியே இருக்கக்கூடிய நூலாகவும் இருந்தது. அதனுடைய ஏட்டுச்சுவடி அய�ோத்திதாசரின் தந்தை கட்டப்பண்டிதரிடமிருந்து எல்லிஸ்துரைக்கு கிடைக்கிறது. சைவ மடங்களில் அதைக் கற்பிக்க தடை இருந்தது. முழுமையாக அந்த தடை இருந்ததா என்றால் இல்லை. வெவ்வேறு சைவ மடங்களில் குறள் கற்பிக்கப்பட்டாலும் ப�ொதுவாக அது புற சமய நூலாக கருதப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சி வரும்போது இந்நூல் கண்டடையப்படுகிறது. அப்போதுதான் மதச் சார்பற்ற, ஜனநாயக விழுமியங்கள் வந்து சேர்கின்றன. குறள் இந்த விழுமியங்களுக்கு மிக அருகில் வருவதால் இதை உரிமை க�ொள்ளவேண்டிய ஆசை எல்லோருக்கும் வந்தது. கா.சு.பிள்ளை திருக்குறள் சைவ நூலே என்று விவாதித்து ஒரு பெரிய நூலை எழுதுகிறார். தமிழ் நாவல்கள் சரிதை ப�ோன்ற நூல்களை மேற்கோள்காட்டி மருங்காபுரி ஜமீன்தாரிணி இலட்சுமி அம்மாள் உரையாகிய திருக்குறள் தீபாலங்காரம் என்ற நூல் எழுதப்பட்டது. அதனுடைய முன்னுரையில்தான் வாசுகி அம்மாள், திருவள்ளுவர் நெசவாளர் என்று அனைத்தும் த�ொன்மக் கதைகளும் அச்சேறுகிறது. இன்னொரு காரணம் சமண மரபில் துறவிகளை அடிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. பெருமாள் திருவடி குறிப்பிடப்படுகிறது, சரணம் என்ற அர்த்தத்தில். சமண மதத்தில்தான் மனிதருடைய அடிகள் முக்கியத்துவம் பெறுகிறது. சமணத் துறவிகள் உண்ணாவிரதம் இருந்தது இறப்பதற்கு முன் அவர்களுடைய காலடிகள் அளவெடுக்கப்பட்டு கல்லில் செதுக்கி வழிபடப்படும். இந்தியா முழுவதும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகள் இருக்கின்றன. இன்றும்

www.Magazine.ValaiTamil.com

சிரவணபெலக�ொளாவில் ஏகப்பட்ட சமணத் துறவிகளின் திருவடிகள் பூசைக்கு உள்ளன.

கடைசியாகச் சமணர்களைப் ப�ொறுத்தவரை குந்துகுந்தாச்சாரியர் என்ற சமண முனிவரின் நேரடி மாணவர் திருவள்ளுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் நூல்களிலும் அது ச�ொல்லப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகில் ப�ொன்னூர் என்ற ஊரில் திருவள்ளுவரின் அடிகள் பதிக்கப்பட்டுள்ளன எனச் சிலர் நம்புகிறார்கள். அவர்களுடைய க�ோவில் அங்கே இருக்கிறது. இப்பொழுதும் பூசைகள் நடக்கின்றன. நானும் பலமுறை அங்கே சென்றிருக்கிறேன். ஆகவே திருக்குறள் சமணத்தைச் சார்ந்த நூல். ஆனால் மத நூல் அல்ல, ப�ொது நெறி நூல். இது இந்தியாவின் ஒட்டும�ொத்த அறிவுப்பின்புலத்தில் இருந்து வந்த நூல். இந்த அறை முழுவதும் நீராவியால் நிரம்பியிருக்கும்போது கண்ணாடியில் ஒருதுளி நீர் வருவது ப�ோல ஒரு பெரிய அறிவுத்தளத்தின் பின்னணியில் ஒரு நூல் வருகிறது. அதற்கு பின்னால் பல அறிஞர்கள் இருப்பார்கள். குந்துகுந்தாச்சாரியரே ஒரு பெரிய தர்ம நூலை எழுதியிருக்கிறார். நம்முடைய கல்வெட்டுக்களைப் பார்த்தால் இருபது மேல் சமண முனிவர்களின் பெயர் கிடைக்கிறது. ஆகவே குறள் சமண நூலே. அது தனித்தமிழ் அடையாளத்துடன் இன்பச் சுவையும் க�ொண்டுள்ளது. காமத்துப்பால் இருப்பதால் இது சமண நூல் இல்லை என்பார்கள். ஆனால் முழுக்க இன்பச் சுவை க�ொண்ட சீவக சிந்தாமணி ஒரு சமண நூலே. மேலும் குறளில் வீடு பேறு இல்லை என்பார்கள். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ அதுவே வீடு பேறுக்கு சமானம். ஆகவே, ஒரு வைணவர் குறளை வைணவநூல் என்று ஏற்றுக்கொண்டால் அவரைக் குறைச் ச�ொல்லமாட்டேன். சைவரும் ஏற்றுக்கொண்டால் அதுவும் நன்றே. ஆனால் மதவெறியின் பாற்பட்டு அதை குறுக்க முற்பட்டால் அது கண்டிக்கத்தக்கது. -த�ொடரும்

அக்டோபர் 2019 13


சிறுகதை

கவனம் -இரமா ஆறுமுகம்

அமெரிக்காவில் அது ஒரு அழகான அந்தி சாயும் ப�ொழுது. கதிரவன் தன் செங்கதிர்களை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பரப்பிக் க�ொண்டிருந்தான். கனடிய வாத்துகள் வழக்கம் ப�ோல் ஏக சத்தத்துடன் கூட்டமாகப் பறந்து க�ொண்டிருந்தன. அமுதன் வேலை முடிந்து சாலைய�ோரத்தில் நடந்து க�ொண்டிருந்தான். எதையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் க�ொண்டிருந்தன. அவனது இருபத்தைந்தாம் வயதில் பெண் தேடும் படலம் ஆரம்பித்து முப்பத்து மூன்றாம் வயதில் தான் திருமணம் முடிந்தது. சாதி, மதம், சமூக அந்தஸ்து மற்றும் எல்லா கூட்டல் கழித்தல்களையும் பார்த்து மல்லிகாவை மணப்பதற்குள் அவன் அரைக்கிழவன் ஆகியிருந்தான். அமெரிக்கா வந்த பிறகு சாதி மத பேதங்களினால் கட்டுண்டிருக்கும் இந்தியச் சமூக அமைப்பின் மீது இருந்த வெறுப்பு பன்மடங்கு அதிகரித்திருந்தது. அமெரிக்காவில் இருப்பது ப�ோல் சாதி மத நாடு இன பேதம் இல்லாமல் திருமணம் புரியும் நிலை தன் ஊரில் என்று ஏற்படும�ோ என ஏங்கினான். தன் குடும்பத்தைய�ோ, சமூக அமைப்பைய�ோ எதிர்த்துக் க�ொண்டு வாழும் தைரியத்தை அவனுடைய கல்விய�ோ, வளர்ப்போ, சமூகச் சூழல�ோ க�ொடுத்திருக்கவில்லை.

எப்படிய�ோ அவனுக்கும் தன் நண்பர்களைப் ப�ோலப் பெற்றோர் பெண் பார்த்து திருமணம் நடந்து விட்டது. அவ்வளவு காலம் கடந்து திருமணம் முடித்த மனைவியுடன் அவன் நான்கு வாரங்கள் தான் சேர்ந்து வாழ முடிந்தது. அதற்குள் திருமணத்திற்காக அவன் எடுத்திருந்த ஐந்து வார விடுமுறை முடிந்து அமெரிக்காவில் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மல்லிகாவிற்கு அவனுடன் அமெரிக்கா செல்வதற்கான பயண நுழைவுச்சான்று அதற்குள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கூடுதல்

14 அக்டோபர் 2019

விடுப்பு பெற மேலாளரிடம் எவ்வளவ�ோ மன்றாடிப்பார்த்துத் த�ோல்வியுற்றான். அமெரிக்காவில் வேலை ப�ோய் விடும�ோ என்ற அச்சமும், அதை நம்பி வாங்கி வைத்திருந்த வீட்டுக் கடனும் அவனை ஒருசேர அச்சுறுத்தி அவன் மனைவியுடன் சேர்ந்து வாழும் மகிழ்வான தருணங்களை வென்றன. கனத்த மனதுடன் மல்லிகாவைப் பிரிந்து வந்தான். ஓரிரு மாதங்களில் மல்லிகாவிற்கு பயணச்சான்று கிடைத்து விட்டால் அமெரிக்காவில் வசதியான வாழ்க்கை அமைத்துக் க�ொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கு வந்து சேர்ந்தான். மல்லிகாவுடன் சேர்ந்து களித்திருந்த மகிழ்வான ப�ொழுதுகளை எண்ணி நாட்களை ஓட்டினான். அவர்கள் வாழ்க்கை வாட்ஸப் மற்றும் அலைபேசியில் பேசுவதிலேயே கழிந்தது. பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் அவன் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் ப�ோகும் நல்ல சேதி வந்தது. மணமான ஒரு சில மாதங்களிலேயே அமுதன் தந்தையான செய்தியை அறிந்த குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் நண்பர்கள் சிலர் மனதிற்குள் ப�ொறாமையுடன் இனிக்க இனிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவன் வேலை பார்க்கும் த�ொழில் நுட்பத்துறையில் வேலை அழுத்தத்தினால�ோ, வாழ்க்கை முறையினால�ோ குழந்தைப் பேறின்மை மிகவும் பரவலான பிரச்சினையாக மாறி இருந்தது. எந்த செலவ�ோ, பிரச்சினையும் இல்லாமல் தந்தையாகப் ப�ோவதை எண்ணி மகிழ்ந்தான்.

மல்லிகா கருவுற்றிருக்கும் சமயத்தில் இங்கு வந்து தனியாகத் துன்பப்பட வேண்டாம் என்ற காரணத்திற்காக அவள் குழந்தை பிறந்த பின் இங்கு வரட்டும் என முடிவு செய்தான். மல்லிகா கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் புகைப்படங்களாகவும், காண�ொளிகளாகவும் அனுப்பி வைத்து இவன் ஏக்கத்தைச் சிறிதளவாவது தீர்த்து வந்தாள். குழந்தை பிறக்கும் ப�ோதாவது தாய்நாட்டிற்குச் www.Magazine.ValaiTamil.com


சென்று மனைவியுடன் இருக்கலாம் என நினைத்தான். எவ்வளவ�ோ முயற்சி செய்தான். பணிச்சுமையினால் அதுவும் கைகூடவில்லை. அப்போது இந்தியா சென்றால், அமெரிக்காவிற்குத் திரும்ப வர முடியுமா எனத் தெரியவில்லை. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என அமுதனும் மல்லிகாவும் அலைபேசியிலேயே அடித்துக் க�ொண்டனர். கடைசியில் பெயர் வைப்பதில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என நினைத்து விட்டுக் க�ொடுத்து விட்டான்.

குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. உப்பு சப்பில்லாத தன் வாழ்க்கையையும், தான் சமைத்துச் சாப்பிடும் உணவையும் ந�ொந்து க�ொண்டே வேலை முடிந்து வீட்டிற்கு நடந்தான். பணம் சேமிப்பதற்காகவே மகிழுந்து வாங்குவதை ஒத்திப் ப�ோட்டுக் க�ொண்டே வந்திருந்தான். குளிர் அவனின் மிகக் கனமான கையுறையையும் தாண்டி ஊசி ப�ோல் குத்தியது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் அமுதனின் தந்தை, தன் மகனின் அமெரிக்க வாழ்க்கையைத் தன் நண்பரிடம் பெருமையாகப் பேசிக் க�ொண்டிருந்தார். அமுதனுக்குத் தன் குழந்தையை உடனே பார்க்க வேண்டும் ப�ோல இருந்தது. எப்படியாவது

ஓரிரு மாதங்களில் தாய்நாடு சென்று குடும்பத்தைக் கூட்டி வந்து விட வேண்டும், மகிழுந்து வாங்க வேண்டும் என முடிவு செய்து க�ொண்டான். அலைபேசியில் மல்லிகா அனுப்பியிருந்த குழந்தையின் காண�ொளியை எடுத்துப் பார்க்கத் த�ொடங்கினான். குழந்தை இந்தியாவில் விளம்பரப் படங்களில் வரும் குழந்தை ப�ோலக் க�ொழு க�ொழு வென்றிருந்தது. அவனுக்குக் குழந்தையை எப்போது பார்ப்போம் என ஆயாசமாக இருந்தது. தன்னை மறந்து,காண�ொளியைப் பார்த்துக் க�ொண்டே சாலையின் ஓரத்திலிருந்து விலகி சற்று உள்ளேயே வந்து விட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அமுதன் உயிரை எடுப்பதற்கென்றே வந்த காலன் மகிழுந்து ரூபத்தில் வந்து உயிரைக் கவர்ந்து சென்றான். ஒரு ந�ொடியில், அமுதன் தன்னை நம்பியிருந்தோரின் வாழ்க்கையைப் புரட்டிப் ப�ோட்டு விட்டுச் சென்று விட்டான். அதே நேரத்தில், இந்தியாவில் அமுதனின் குழந்தை, தந்தை பாசத்துடன் யார�ோ தன்னை அணைப்பது ப�ோல் உணர்ந்து சிரித்தது. அமுதனின் ஆத்மா நினைத்தவுடன் தாய்நாடு செல்வதிற்கு இப்போது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

நல்ல தமிழில் எழுதுவ�ோம்

நீங்கள் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு

-ஆரூர் பாஸ்கர்

உருவாகிறது. பதறு என்பது கலங்குதல், முன்பின் ய�ோசனையின்றி அவசரப்படுதல் ரசிகரா? இரசிகரா? ப�ோன்ற ப�ொருளில் வரும் எனப் ரசிகர் மன்ற விவகாரத்துக்குள் ப�ோவதற்கு பார்த்தோம். முன் நாம் மறக்காமல் சென்ற மாதம் என்ன பார்த்தோம் என்பதைக் க�ொஞ்சம் நீங்கள் மறைந்த இயக்குநர் நினைவுபடுத்திக் க�ொள்வோம். பாலுமகேந்திராவின் தீவிர விசிறி என்றால் அவருடைய இயக்கத்தில் வந்த "ராமன் "‘பதட்டம்’ அடையலாமா?" எனத் அப்துல்லா" படத்தைப் பார்த்திருப்பீர்கள். தலைப்பிட்ட முந்தைய கட்டுரையில் "உன் மதமா ? என் மதமா? "எனும் நாகூர் பதட்டம், பதற்றம் பற்றி பார்த்தோம். ஹனிபாவின் புகழ்பெற்ற பாடல் கூட பதட்டம்- இன்று ஆங்கிலத்தில் tension, அதில் இடம் பெற்றிருந்தது. impatient ப�ோன்ற ச�ொற்களின் மாற்றாக பயன்பாட்டில் இருக்கிறது. சரியாக கூடவே அந்தப் படம் வந்த புதிதில் எழுதுவது என்றால் பதட்டம் என்பதைப் தலைப்பிற்காகவே அது பெரிதும் பதற்றம் என்றே எழுத வேண்டும். அது பேசப்பட்டது. இலக்கணப்படி அந்தத் "பதறு" என்ற வினைவேரிலிருந்தே தலைப்பை "இராமன் அப்துல்லா" என www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 15


எழுதுவது சரியாக இருக்கும். ஏனென்றால், தமிழில் ல,ள,ர,ற ப�ோன்ற எழுத்துகள் ச�ொல்லின் முதலில் வராது. அப்படி என்றால் ராமனையும், ராகவியையும் எப்படி எழுதுவதாம்? எனக் கேட்பது காதில் விழுகிறது. அவற்றை அ,இ,உ சேர்ந்தே எழுதவேண்டும். அதனால் (இ) ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்பதே சரி.

இப்போது ச�ொல்லுங்கள் நீங்கள் பாலுமகேந்திராவுக்கு ரசிகரா ? இரசிகரா? அப்படியே இன்னொரு திரைப்படத் தலைப்பையும் சேர்த்து பார்த்துவிடுவ�ோம்.

இயக்குநர் பாக்யராஜ் நடிகை மீனாவுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி".

இலக்கணப்படிப் பார்த்தால் அது "ஓர் ஊர்ல ஒரு இராஜகுமாரி" என இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் vowels எனும் A,E,I,O,U வில் த�ொடங்கும் ச�ொல்லின் முன்னால் (an) சேர்ப்பது மரபு. அதுப�ோல தமிழில் உயிர் எழுத்துக்களில் (அ முதல் ஔ) த�ொடங்கும் ச�ொல்லின் முன்னால் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க "ஓர்" பயன்படுத்த வேண்டும். அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு" நாடகம் நினைவுக்கு வருகிறதா?

"தமிழ் நிலத்தின் பெருமை"

"செந்தமிழ் நாடென்னும் ப�ோதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"என்றார் முண்டாசுக்கவி பாரதி பழந்தமிழ் நாட்டின் நாகரிக வளர்ச்சி எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பதை நாம் உணர்ந்தால் நம் முன்னோர்களின் மீது நமக்கு ப�ொறாமை ஏற்பட்டு நமக்குள் ஒரு உன்னத ஆற்றல் பிறக்கும் என்பது மிகையல்ல. அதெப்படி தானே கேட்கிறீர்கள்.

என்று

மெகசுதனிசு என்ற வரலாற்றுக் குறிப்பாசிரியர் தான் எழுதிய "இண்டிகா" என்னும் நூலில் பழந்தமிழர்கள் இரவில் தங்கள் வீட்டுக் கதவுகளை அடைக்காமலே உறங்கினர் எனக் குறிப்பிடுகின்றார். கள்வர் பயமே துளியும் இல்லை. சேர ச�ோழ பாண்டிய மன்னர்களின் செங்கோல் ஆட்சி செய்தது. தற்காலத்தில் வெளிநாட்டிலிருந்து நம் ஊருக்கு வந்திருக்கும் பல்பொருள் அங்காடிகள் (supermarket) நாமே வேண்டிய ப�ொருட்களை எடுத்து நாமே பட்டியலிட்டுப் பணம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டன. 16 அக்டோபர் 2019

ஆங்காங்கே கண்காணிப்புக் கருவிகள் ப�ொருத்தப்பட்டு, கடைக்கு வரும் வாடிக்கையாளரைக் கண்காணிப்பதை நாம் பார்க்கிற�ோம். இதெல்லாம் ஏத�ோ விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு என நாம் எண்ணுவது இயற்கை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் தமிழ் வாழ்வியலில் நாம் இதுப�ோன்று ஏன் இல்லை? நாம் வெறும் வடை, ப�ோண்டா, இட்லிதான் ப�ோட்டுக் க�ொண்டிருந்தோமா எனப் பலர் கிண்டலும் கேலியுமாக விளையாட்டாக ஏளனம் செய்வதையும் கண்டிருப்போம். நம் வரலாற்றை உணர்ந்தால் இந்த நிலை மாறி உயர்ந்த எண்ணங்கள் எழும்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ச�ோழநாட்டின் தலைநகரான காவிரி பூம்பட்டினத்தை விவரிக்கிறார். அங்கே ‘வெள்ளிடை மன்றங்கள்’ என்ற கடைகள் இருந்தன. ஆச்சரியம் என்னவென்றால் அவைதான் நாம் தற்போது காணும் நவீன பல்பொருள் அங்காடி(supermarket). இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள் www.Magazine.ValaiTamil.com


"வம்ப மாக்கள் தம்பெயர் ப�ொறித்துக் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலுங் கருத்தாழ்க் காவலும் உடைய�ோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போர் உளரெனிற் கடுப்ப தலையேற்றிக் க�ொட்பி னல்லது க�ொடுத்த லீயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்இடை மன்றமும்" வெள்ளிடை மன்றங்களில் ப�ொருட்கள் பெயர்கள் ப�ொறிக்கப்பட்டுப் ப�ொதி ப�ொதியாகக்கட்டி வைக்கப்பட்டிருக்கும். எந்த காவலுமில்லை. காவிரிபூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்கள் செல்வச் செழிப்பால் திளைத்ததால் களவு இல்லை, களவுஎண்ணமுமில்லை. அப்படி எவரேனும் களவு என்று கனவு கண்டால் கூடஅவரை நடுங்கும்படி செய்துவிடும் இவ்வெள்ளிடை மன்றம்.

வாழ்த்துவது வழக்கம். சிலர் ஆங்கிலத்தில் "Bless you"என்பார்கள், சிலர் யெர்மானிய ம�ொழியில் "Gesundheit" எனபார்கள். வெளிநாடு வந்தப�ோது ஆகா என்ன ஆச்சரியம் எவ்வளவு நல்ல பண்பு என பெருமிதம் ஏற்பட்டது. இதிலே வியப்பு என்னவென்றால் தும்மினால் நம் இதயம் சில ந�ொடிகள் ஓய்வெடுக்கும் என்று கூறுவர்.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் அறிவார்கள் இங்கே எவரேனும் தும்மினால் அருகிலிருப்பவர்கள் அவரை

நம் மரபு பல்லாயிரம் வருடங்கள் பழமையானதல்லவா, ஆகவே நம்மிடம் இது ப�ோன்ற பழக்கம் உண்டா என்று தேடினால் ஐயன் வள்ளுவன் 1312வது குறட்பாவில் கூறுவதைக் கண்டவுடன் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நீங்களே காணுங்கள்

இந்த குறட்பாவின் ப�ொருள் இதுதான்: தலைவி தலைவனிடம் ஊடல் க�ொண்டிருந்த ப�ோது அவர் வேண்டும் என்றே தும்மினார் நான் அவரை " நீடு வாழ்க" என்பேன் என்று நினைத்து. இவற்றை இன்னும் நம் மூத்தோர் கடைப்பிடிக்க நாம் கண்டிருப்போம். ஆக நம்மிடம் த�ொன்று த�ொட்டே மிக உயரிய பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.

இவற்றை உணர்ந்து உள்ளம் களித்துப் பெருமிதம் க�ொண்டு உயர் வாழ்வு வாழ நம் இலக்கியங்களைக் கற்கவேண்டியது ஒவ்வொரு தமிழருக்கும் தலையாயக் கடமை. உங்கள் வாழ்வையே உன்னதமாக மாற்றும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. அனைவரும் தேந்தமிழ் இலக்கியங்கள் பல கற்று, பயன்பெற்று, பேரும் புகழுடன் நீடு வாழ்க!!

இப்பொழுது புரிகிறதா இருந்தோமென?.

நாம்

எப்படி

"ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து"

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 17


அமெரிக்கத் தமிழ் த�ொழில் முனைவ�ோர் சங்கம் நடத்திய ஸ்டெம் (STEM) மகேந்திரன் சுந்தர்ராஜ்

அமெரிக்கத்

பென்சில்வேனியா, டெலவர் கிளை ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கத் தமிழ் த�ொழில் முனைவ�ோர் சங்கம்

தமிழ் த�ொழில் முனைவ�ோர் சங்கம் ஒரு லாப ந�ோக்கற்ற, தன்னார்வல அமைப்பு. அமெரிக்கத் தமிழ் மக்களிடையே த�ொழில் நடத்தும் திறனை மேம்படுத்தும் ந�ோக்கில் 2016-ல் த�ொழில் முனைவ�ோர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் சார்பில் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த அமைப்பின் பென்சில்வேனியா டெலவர் பெருநிலக் கிளையின் சார்பில் அண்மையில் 8-16 வயது சிறார்களுக்கான STEM (Science, Technology, Engineering and Math அதாவது அறிவியல், த�ொழில் நுட்பம், ப�ொறியியல் மற்றும் கணிதம்) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் 50 குழந்தைகள் கலந்து க�ொண்டனர். இந்த நிகழ்வின் ந�ோக்கம் நம் குழந்தைகளுக்குத் தகவல் த�ொழில் நுட்பத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும், தகவல் த�ொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதுமாகும்.

எட்டிலிருந்து பன்னிரண்டு வரையிலான குழந்தைகளுக்கு Scratch programming மற்றும் எந்திரனியல் (Robotics) பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டன. இதில் டெலவர், பென்சில்வேனியா மற்றும் நியூஜெர்சியில் இருக்கும் குழந்தைகள் பயன் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட பெற்றனர். இது ப�ோன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்குப் பைத்தான் (Python) இன்னும் பல இடங்களில் நடத்த முடிவு கணினி ம�ொழிப் பயிற்சிப் பட்டறையும், செய்துள்ளோம். 18

அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


ஆழ்ந்த இரங்கல்கள்

இயக்குநர், நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8, 2019 காலமானார்

திரு.ராஜசேகர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, மற்றும் சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். *ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.. ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த குடிசை திரைப்படத்தில் இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து பணியாற்றினார்.

*பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து சுஹாசினி நடிப்பில் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது. இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்: பாலைவனச்சோலை (1981), புதிய சரித்திரம், பறவைகள் பலவிதம் , சின்னப்பூவே மெல்லப்பேசு (1987), மனசுக்குள் மத்தாப்பூ (1988), தூரம் அதிகமில்லை, கல்யாணக் காலம் மற்றும் தூரத்துப் பச்சை. *திரைக்கதை படங்கள்:

எழுத்தாளராகவும்

திகழ்ந்தார்.

அவர்

திரைக்கதை-வசனம்

எழுதிய

வேலும் மயிலும் துணை (1979), திரைக்கதை சின்னப்பூவே மெல்லப்பேசு (1987), திரைக்கதை மனசுக்குள் மத்தாப்பூ (1988), திரைக்கதை, வசனம் பார்வைகள் பலவிதம் (1988), வசனம் பாலைவனச் ச�ோலை, திரைக்கதை www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 19


*நடிகராக இவர் அறிமுகமான நிழல்கள் இவரின் நடிப்பிற்குச் சிறந்த சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் நடிப்பில் "இது ஒரு ப�ொன்மாலைப் ப�ொழுது பாடல்" மறக்க முடியாத இசைப் பெட்டகமாகக் கருதப்படுகிறது. நிழல்கள் (1980), தமிழன், நரசிம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். *சரவணன் மீனாட்சி, தென்றல் ப�ோன்ற சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். *சிக்கல்கள் நிறைந்த திரை உலகில் எந்தச் சிக்கல்களிலும் சிக்கிக் க�ொள்ளாத நடிகர் இவர். *சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் செப்டம்பர் 8, 2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார். வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிற�ோம்.

மூன்றாவது

தமிழ் த�ொழிலதிபர்கள், திறனாளர்கள்

மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் 35 நாடுகளுக்கும் மேலாக த�ொழில் செய்யும் பல த�ொழிலதிபர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக�ொள்ளவிருக்கிறார்கள்.

த�ொழில்

த�ொடர்புகளை, த�ொழிலை விரிவுபடுத்த அருமையான வாய்ப்பு..

இன்றே பதிவுசெய்யுங்கள்

20 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


நீச்சல்காரன்

ம் றியு டி எ னீர் ரண் து ம் க திருத் மு ன டி : தி ை எப்ப ரே? ர் ச கு அர ார மைச்ச ய முது சி அ அர ளின் ்க : உங உண்மையைச் ரி ன் மந்திதுவிட்ட த் மர ச�ொன்னே

அமைச்சர்

: நாட்டில் தடை செய் து விட்டார்க ளா ஏன்?

பேஸ்புக்கை

காவலாளி : மன்னர் ப�ோரில் புறமுதுகு காட்டிய படத்தை யார�ோ ப�ோட்டு வி ட்டார்கல ாம்

www.Magazine.ValaiTamil.com

ஒருவர்: கரண் டு பில்லு கட்டாமல் இருந்தா ல் கரண்ட புடிங்கிருவாங்க லாம் மற்றொருவர் : கரண்டு பெட்டி மாடியில யிருக்குது. கரண்ட புடிங்கி ட்டு லிப்ட்ல கீழ இறங்க முடி யாதுல!

ப்பாக மு: த் த லயா ச�ோ ஆக ்வேர்டை ாக் பாஸ ல க்கு டவை பலத ம் கண ப்படி?சு எ அடிச் : யும் ராமு ன் யூசர்நேமை டிச்சே அ ன் ா ந னே பாதா தப் உங்க நீதி பதி அச்சு மாமிய ார : றுத் துனீ ை பேஸ் ஒப்பு ர்கள் புக்கி க் க�ொ ள்கி என்பதைல் றீர்க ளா? இல்லைமருமக ள் : மாமி , அவ யா ங்க ள�ோட ப�ோட் ர் படத்தைத்தா டு டே க் செய்தே ன் ன்.

அக்டோபர் 2019

21


வள்ளலார் வழியில் காந்திமதி அம்மாள் நேர்காணல்: இரமா ஆறுமுகம்

மதுரை

இரமா: சிறப்பு அம்மா. பதினைந்து வருடங்களாகத் த�ொடர்ந்து இந்த சேவை நடந்து வருவது மிகவும் மகிழ்ச்சி. மதுரையில் பல இடங்கள் இருக்கும் ப�ோது குறிப்பாகக் கீழமாசி வீதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று மதுரை சிம்மக்கல் மூங்கில் கூடைத் க�ொஞ்சம் ச�ொல்ல முடியுமா? தெருவில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் இவர் சரியாக நடக்க காந்திமதி அம்மாள்: அங்கே சாப்பிட முடியாத நிலையில், இந்தப் பணியைத் வழியில்லாத வயதான ஆதரவற்றோர் அதிகமாக இருந்ததால் அங்கே த�ொடர்ந்து செய்து வருகிறார். ஆரம்பிக்கப் பட்டது. உழைக்க இரமா: வணக்கம் அம்மா நீங்கள் முடியாத வயதானவர்களுக்கும், உடல் உள்ளவர்களுக்கும் எப்படி இந்த மகத்தான மக்கள் நலக்குறைபாடு வருகிற�ோம். சேவையில் ஈடுபட ஆரம்பித்தீர்கள் உணவளித்து உழைத்து சாப்பிட வழியிருக்கும் என்று கூற முடியுமா? இளவயதுக்காரர்கள், குடிகாரர்களுக்கு காந்திமதி அம்மாள்: வணக்கம்மா. இந்த நாங்கள் உணவு க�ொடுப்பது இல்லை. சேவையைப் பதினைந்து வருடங்களுக்கு ஆரம்பத்தில் வருகிற அனைவருக்கும் முன் ஆரம்பித்தது சிவ அன்பானந்தம் உணவு க�ொடுத்துக் க�ொண்டிருந்தோம். ஐயா அவர்கள். இதை ஆரம்பித்த ஒரு நூறு பேருக்கு மேல் சாப்பிட்டுக் இருந்தார்கள். இப்போது வருடத்திற்குப் பின் நான் அவருக்கு க�ொண்டு ஆதரவற்றோர் மற்றும் உதவி செய்யத் த�ொடங்கினேன். நாங்கள் வயதான ஊனமுற்றோருக்கு மட்டும் "வாடிய பயிரைக் கண்டப�ோதெல்லாம் உடல் ஒவ்வொரு வாடினேன்" எனப் பாடிய வள்ளலாரைப் உணவளிப்பதால் பின்பற்றுபவர்கள். அவரடியைப் நாளும் எழுபது பேர் வரை இங்கு மீதி முப்பது பின்பற்றி அன்னதானம் செய்யத் சாப்பிடுகிறார்கள். த�ொடங்கின�ோம். அன்பானந்தம் ஐயா பேருக்கான உணவை ப�ொட்டலம் கட்டி அவர்கள் 6 வருடங்களுக்கு முன் உடல் க�ோரிப்பாளையம் பள்ளி வாசலுக்கருகில் ஆதரவற்றோர்களுக்குக் நலக்குறைவால் ஜ�ோதியில் கலந்து இருக்கும் விட்டார்கள். அதன் பிறகு நான் இதைத் க�ொடுக்கிற�ோம். கீழமாசி வீதியில் பல வருடங்களாக ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு ஒவ்வொரு நாளும் உணவளித்து வரும் காந்திமதி அம்மாள் அவர்களுடன் ஓர் சந்திப்பு.

த�ொடர்ந்து நடத்தி வருகிறேன். 22 அக்டோபர் 2019

இரமா: மிகவும் அருமை அம்மா. சாதி www.Magazine.ValaiTamil.com


மத பேதமின்றி ஆதரவற்றோர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு உணவளிப்பது மிகவும் சிறப்பான சேவை. இதற்காக ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்று ச�ொல்ல முடியுமா?

காந்திமதி அம்மாள்: ஒரு நாளைக்குச் சராசரியாக 4000 ரூபாய் செலவாகிறது. இரண்டு நாட்களுக்கு 25 கில�ோ அரிசி தேவைப்படுகிறது. பதினைந்து வருடங்களாக எங்களுக்கு யார் மூலமாகவ�ோ இந்தப் பணம் வந்து விடுகிறது. ஆறு வருடங்களுக்கு முன் அன்பானந்தம் ஐயா அவர்கள் மறைந்தவுடன் இதைத் த�ொடர்ந்து நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. என்னால் சரியாக நடக்க முடியாததால் யாரைப் பார்த்து பணம் கேட்பது என்று மலைப்பாக இருந்தது. அப்போது ஒரு அன்பர் எந்த உதவி கேட்டாலும் செய்கிறேன், இதை நிறுத்தி விடாதீர்கள். இதை மற்றவர்களால் நடத்த முடியுமா என்று தெரியாது என்று தைரியம் கூறித்தொலைபேசி எண்ணைக் க�ொடுத்து விட்டுச் சென்றார்.

மட்டும் தான் எங்களுக்கு. ஒரு சமையல்காரரை வைத்து வீட்டிலேயே சமைத்து ஒரு வாடகை மூன்று சக்கர மிதி வண்டியில் சாப்பாட்டை எடுத்துக் க�ொண்டு நானும் சென்று விடுவேன். அங்கு எல்லோரும் எல்லாமும் பெற்று நலமுடனும், வளமுடனும், இன்புற்று வாழ வேண்டும் என்ற கூட்டுப் பிரார்த்தனையுடன் உணவு பரிமாறி விட்டு வந்து விடுவ�ோம். அது தவிர சிலர் பிறந்தநாள், திருமண நாள் ப�ோன்ற சிறப்பு நாட்களில் அன்னதானம் செய்வதற்காகப் பணம் க�ொடுக்கிறார்கள். அதை வைத்து வேலை செய்பவர்களுக்கு ஊதியம் மற்றும் பிற செலவுகளைக் கவனித்துக் க�ொள்கிற�ோம். நான் மட்டும் ஊதியம் இல்லாமல் என் மருத்துவ செலவிற்கு மட்டும் எடுத்துக் க�ொள்கிறேன்.

இரமா: மிகவும் சிறப்பான பணி அம்மா. சரியாக நடக்க முடியாமல் வயதான நிலையிலும் நீங்கள் செய்யும் பணியைப் பார்க்கும் ப�ோது நாமும் இந்த உலகிற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படுகிறது. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். இதை நடத்த முடியுமா என்ற சந்தேகம் நன்றி அம்மா. அகன்ற பிறகு பலரும் உதவி செய்ய முன் வந்தார்கள். எந்தப் ப�ொருள் ஒரு தலைவருக்கோ, குருவிற்கோ வேண்டுமென்று வள்ளலார் ஐயாவை மரியாதை செய்வதென்பது அவரின் நினைத்தாலும் உடனே கிடைத்து விடும். க�ொள்கைகளைப் பின்பற்றுவது தான். அரிசி, பலசரக்கு, காய்கறி, எண்ணெய், அந்த வகையில் கருணைக் குருவான இலைக்கட்டு எல்லாம் தினசரி வந்து வள்ளலாரைப் பின்பற்றும் காந்திமதி விடுகிறது. மதுரை காய்கறி சந்தையில் அம்மாளின் பணி ப�ோற்றுதலுக்குரியது. கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர் பதினைந்து வருடங்களாகத் த�ொடர்ந்து அவரைத் த�ொடர்பு க�ொண்டு உதவி காய்கறி மற்றும் இலைக்கட்டுகள் செய்யவ�ோ, பாராட்டவ�ோ விரும்புவ�ோர் க�ொடுத்து விடுகிறார். மற்றதை மக்கள் 9442024423 என்ற எண்ணில் த�ொடர்பு க�ொடுத்து விடுகிறார்கள். சமையல் க�ொள்ளலாம். செய்து க�ொண்டு ப�ோகும் வேலை www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 23


கீச்சுச் சாளரம் த�ொகுப்பு: நீச்சல்காரன்

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனிடம்

அதிகாரத்தை க�ொடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும்

அவர்களின் உண்மை முகம்

@gowthamiTta

பிறகு பார்த்துக் க�ொள்ளலாம் என்று தள்ளிப்போடாத ஒரே செயல் @Tamilsel_Twit இப்போதைக்கு ம�ொபைல் சார்ஜிங் மட்டும் தான் எழுந்திரிக்கிறதுக்கு அலாரம்

வச்சு

தூங்குறதுக்கு எழுந்திரிக்க

"மட்டும்"

பழகிட்டோம்...

அலாரம்

அலாரமே

வச்சு தூங்குனா..

தேவைப்படாது...

@Raajavijeyan

நாளை உங்கள் பிணத்தின் மீது நெளியும் புழுக்களைக் கேட்டுப் பாருங்கள்... நீங்கள் என்ன ஜாதி என்று ச�ொல்லும்.

@priyaGurunathan.

குழந்தைகளுக்கு மாறுவேடம் ப�ோட்டால் கிருஷ்ண ஜெயந்தி, கடவுளுக்கே மாறுவேடம் ப�ோட்டால் விநாயகர் சதுர்த்தி

@mohanramko

சிக்னல் சரியா கிடைக்காத இடத்துல "இப்பா கேட்குதா?"ங்கற வார்த்தை மட்டும் துல்லியமா கேட்குறதெல்லாம் என்ன டிசைன�ோ..!!!

24 அக்டோபர் 2019

@Ramesh46025635

www.Magazine.ValaiTamil.com


வெஸ்ட் நைல் காய்ச்சல் நாம்

-ஏற்காடு இளங்கோ, அறிவியல் எழுத்தாளர்,

yercaudelango@gmail.com

இதற்கு முன்பு கேள்விப்படாத காய்ச்சல் ஒன்று இந்தியாவில் நுழைந்து நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. கேரளா மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவனுக்குக் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து போனான். அவனுக்கு ஏற்பட்டது வெஸ்ட் நைல் காய்ச்சல் (West உயிரிழப்பு ஏற்பட்டதன் மூலம் இக்காய்ச்சல் Nile Fever) எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலும் பரவிவிட்டது. இது மிகுந்த முதன் முதலாக வெஸ்ட் நைல் காய்ச்சலால் ஓர் அச்சத்தை நம்மிடம் ஏற்படுத்தி வருகிறது.

கண்டுபிடிப்பு:

இக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு வைரஸ் ஆகும். முதன் முதலாக இந்த வைரஸ் 1937 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உகாண்டா நாட்டின் வெஸ்ட் நைல் என்னும் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) எனப் பெயரிடப்பட்டது. இந்த வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சலை வெஸ்ட் நைல் காய்ச்சல் என அழைத்தனர். 1955 ஆம் ஆண்டில்தான் இக்காய்ச்சல் கொசுவின் மூலமே பரவுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தனர்.

இந்த வைரஸானது பிளேவிவைரடே (Flaviviridae) என்னும் குடும்பத்தில் பிளேவி வைரஸ் (Flavivirus) என்னும் பேரினத்தில் உள்ள ஒரு இனமாகும். ஜப்பானீஸ் என்செபாலிடிஸ், மஞ்சள் காய்ச்சல் மற்றும் செயின் லூயிஸ் என்செபாலிடிஸ் போன்ற வைரஸ்களுடன் நெருங்கிய தொடர் உடையதுதான் இந்த www.Magazine.ValaiTamil.com

வெஸ்ட் நைல் வைரஸ் ஆகும். மற்ற பிளேவிவைரஸ்களின் மூலமே டெங்கு, ஜிகா, குரங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் மனிதர்களிடம் பரவுகிறது.

ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1950 இல் இஸ்ரேல், 1962 இல் ஐரோப்பா என இக்காய்ச்சல் பரவியது. 1999 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இக்காய்ச்சல் பரவியது. பின்னர் அமெரிக்கா நாட்டில் அலாஸ்கா தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இக்காய்ச்சல் பரவிவிட்டது. குறிப்பாக வட அமெரிக்கா நாடுகளில்தான் வெஸ்ட் நைல் காய்ச்சல் அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில்தான் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்டோபர் 2019 25


நோய் பரவுதல்:

கியூலெக்ஸ் (Culex Pipieus) என்னும் கொசுவின் மூலமாகவே இந்த வைரஸ் மனிதர்களைச் சென்றடைகிறது. இந்தக் கொசுக்களை வீட்டு கொசுக்கள் அல்லது வெஸ்ட் நைல் வைரஸ் கொசுக்கள் என்று அழைக்கின்றனர். இக்கொசுக்கள் வீட்டைச் சுற்றி தேங்கிக் கிடக்கும் நீரில் முட்டை இடுகின்றன. வீட்டைச் சுற்றி தேங்கிய நீர் காணப்படுவது சாதாரணம். ஆகவே இங்கு இக்கொசுக்கள் இனப் பெருக்கம் செய்கின்றன. ஆகவேதான் இதை வீட்டுக் கொசுக்கள் என்கின்றனர். காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ், பறவைகளில் இருந்து கொசுவிற்கும், பிறகு கொசுவிலிருந்து மனிதனுக்கும் பரவுகிறது. வைரஸ் பெருகும் இடமாக, விருந்தோம்பியாக பறவையின் உடல் இருக்கிறது. அந்தப் பறவையை கியூலெக்ஸ் கொசு கடித்துவிட்டு, பின்னர் மனிதனைக் கடித்து இரத்தத்தைக் குடிக்கும் போது இந்த வைரஸ் மனிதன் உடலுக்குள் சென்று விடுகிறது. இதன் விளைவாக வெஸ்ட் நைல் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

பறவைகள் மற்றும் பசுக்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பறவைகள் இறக்கவும் நேர்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களில் இந்த வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். நியூயார்க் நகரில் வாழும் சிட்டு குருவிகளின் உடலிலும் இந்த வைரஸ் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிருமி தொற்று ஏற்பட்ட பறவைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டோ அல்லது ஏற்படாமல் கூட இருக்கலாம். ஆனால் அதன் உடலில் வைரஸ் கிருமிகள் அதிகளவில் பெருகும். அப்போது பறவை இறந்துவிடும். பறவைகளின் உடலினுள் சென்ற வைரஸ் கிருமிகள் 5 நாட்களில் அதன் உடலில் பெருகிவிடும். வைரஸ் தொற்று ஏற்பட்டு 5 நாட்கள் கழித்தபிறகு அந்தப் பறவையைக் கொசு கடித்தால், கொசுவின் உடலினுள் வைரஸ் கிருமி சென்று விடுகிறது. அக்கொசு தனக்கு அருகில் உள்ள மனிதர்களைக் 26 அக்டோபர் 2019

கடிக்கும்போது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடுகிறது.

வைரஸ்

ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உண்ணிகளிடம் (Ticks) இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் நைல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவாது. நோய்வாய்ப்பட்டவர் தொடுவதாலோ, முத்தமிடுவதாலோ இது ஒருபோதும் பரவாது. ஆனால் ரத்தமாற்று, உறுப்பு தானம் மூலம் பரவலாம். நோய்த்தொற்று ஏற்பட்ட பறவையைத் தொடுவது அல்லது இறந்த பறவையை அப்புறப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் தொற்று மனிதனுக்கு ஏற்படாது. ஆனால் இறந்த பறவையின் தோல் மனித தோலில் படக்கூடாது என அறிவுரை வழங்கப்படுகிறது. ஆகவே கையுறை அல்லது இரட்டை பிளாஸ்டிக் பை உதவியுடன் அப்புறப்படுத்த வேண்டும்.

www.Magazine.ValaiTamil.com


இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே நோயின் அறிகுறிகள் தெரியும். இவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, வாந்தி, தொண்டை வலி, தசைப்பிடிப்பு, உடல் வலி, மூட்டு வலி, சொறி போன்ற அறிகுறிகள் இருக்கும். இவை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். நோய் தீவிரம் அடையும்போது அது மூளையைப் பாதிக்கும். மூளை அழற்சிக் காய்ச்சல் மற்றும் மூளை உறை அழற்சிக் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிப்புகள் உண்டாகும். சுமார் 1 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றுள்ள கொசுவானது 150 பேரைக் கடித்தால் அதில் ஒருவர் மட்டுமே இறக்க நேரிடுகிறது. மனித உடலில் நுழைந்த வைரஸ் 5 முதல் 15 நாட்கள் வரை இருந்து நோயை ஏற்படுத்தும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, புற்று நோய், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக கோளாறு உடையவர்களுக்கு இந்த வைரஸ் கிருமி அதிக பாதிப்பைக் கொடுக்கிறது. நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாபக மறதி, குழப்பம், மன உளைச்சல் போன்றவை ஏற்படும். இவர்களைக் காப்பாற்றினாலும் சிலருக்குக் காது கேளாண்மை, உடலில் ஊனம் ஆகியவை ஏற்பட்டு விடுகிறது. அறிகுறிகள்:

வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு எனப் பிரத்யேக மருந்துகள் எதுவும் இல்லை. தடுப்பூசியும் இதுவரை க ண் டு பி டி க ்க ப ்ப ட வி ல்லை . சிகிச்சை:

www.Magazine.ValaiTamil.com

காய்ச்சலுக்குக் கொடுக்கும் மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவையே வழங்கப்படுகின்றன. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குதிரைகளுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. செளதி அரேபியாவில் குதிரைக்கு நோய் தடுப்பூசி போடப்படுகிறது. அதையே மனிதர்களுக்கும் அங்கு பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்தில் முழுவதும் குணமடைந்து விடலாம். இக்காய்ச்சல் வருடம் முழுவதும் பரவக்கூடியது. இருப்பினும் மழைக் காலங்களிலேயே அதிகப் பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொசுக்களின் மூலமே பரவுவதால் கொசுக்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இக்கொசுக்கள் இரவு நேரத்திலேயே கடிக்கின்றன. ஆகவே கொசு வலையைப் பயன்படுத்துவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக கொசுக் கடியில் இருந்து தப்பிக்கலாம். வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல், சுகாதாரத்தைப் பராமரித்திட வேண்டும். இதன் மூலமாகக் கொசுவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். தடுப்பூசி நடவடிக்கை:

காய்ச்சல் ஏற்பட்டால் அது எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம், ஆழபுலா, போபால், மனிபால் போன்ற இடங்களில் வெஸ்ட் நைல் வைரஸ்களைக் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இருப்பினும் நாம் விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த வழியாகும். அக்டோபர் 2019 27


வரலாற்றைத் திரும்(ப்)பிப் பார்க்க வைத்த கீழடி

வரலாற்றைத்

ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்து ஆராய்ச்சி செய்ததில் அது கி.மு 580 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிற ஒரு சான்றிதழ் கிடைத்துள்ளது . அதாவது கி.மு 600 ஆம் நூறாண்டுக்கு முன்பே ஒரு மேம்பட்ட நாகரீகம் வளர்ந்து செழித்துள்ளது என்பதற்கு மிகப்பெரிய சான்று அது. அதே மண் அடுக்குகளில் கிடைத்த மண் ஓடுகளில் பிராமிய தமிழ் எழுத்துக்கள் ஆதன், ‘ குவிரன் ஆதன்’ எனப் பெயர்கள் தாங்கியவையாக உள்ளன. ப�ொதுவாக நமது அறிஞர்களின் கருத்தான தமிழ் பிராமிய எழுத்துக்களின் காலம் கிமு 3 நூற்றாண்டு என்பது கி.மு 6 ஆம் நூற்றாண்டு என்று இன்னும் பின்னால் மிகச் சரியாகக் கூற வேண்டுமானால் ப�ோகிறது. கீழடியில் பூமிக்குக் கீழ் 383 சென்டிமீட்டர் ஆழத்தில் கிடைத்த பல ப�ொருட்களில் மேலும் அங்கு கிடைக்கப்பட்ட சுட்ட ஆறு கரிமத்துண்டுகளை கார்பன் டேட்டிங் மட்பானைகளில் எழுதப்பட்ட பல எனச்சொல்லப்படும் கரிமத்தேதியிட எழுத்துக்களில் ஒரே எழுத்து வேறு வேறு அமெரிக்காவில் புள�ோரிடா மாகாணத்தில் வடிவத்தில் எழுதப்பட்டிருந்தது. மியான்மர் நகரத்திலிருக்கும் ‘பீட்டா’ என்ற திரும்(ப்)பிப் பார்க்க வைத்த கீழடியின் நான்காம் கட்ட ஆய்வுப் பணிகள் முடிந்து விட்ட நிலையில், இந்த ஆய்வானது, ‘சங்க கால வரலாற்றை மாற்றி எழுதும் அறிக்கை’ என்று ஒரே வரியில் கூறி பெருமை க�ொள்ளும் அளவிற்குப் பலவிதமான த�ொல்லியல் ப�ொருட்கள் கீழடி அகழ்வாராய்ச்சி 4 ஆம் கட்டத்தில் கிடைத்துள்ளன எனப் பெருமிதம் ப�ொங்கத் தமிழ்நாடு த�ொல்லியல் துறை ஆணையர் திரு. உதயச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

28 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


இது சுடப்பட்ட பானைகளை வாங்கிய பிறகு மக்கள் அவரவர் பெயர்களைப் ப�ொறித்திருக்கலாம். அதனால் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு நிரம்பப் பெற்ற வளர்ச்சி பெற்ற நாகரீகமாக இருந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துக்கள் சித்திர வடிவமானது என்பது நாம் அறிந்ததே. இந்த நான்காம் கட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற 1001 பானை ஓடுகளில் இது ப�ோன்ற குறியீடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அவற்றுள் சில ஓடுகள் அந்த குறியீடுகளை முழுவதும் ஒத்ததாக இருப்பது மிகவும் ஆச்சரியமானது. அத்தகைய ஓடுகள் ஐந்து அல்லது ஆறு உள்ளன. அவைகளை வைத்து சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் இதற்கும் முற்றிலும் த�ொடர்பு இருக்கும் என முழுவதுமாக உடனே ச�ொல்ல முடியாது.

இன்னும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது குஜராத், மகாராஷ்டிரா பகுதியில் கிடைக்கக்கூடிய ‘கார்னீலியன் அகெட்டு’, சூ ‘ து பவளம்’ இது ப�ோன்ற மணிகள் இங்குக் கிடைத்துள்ளன. இது அவர்களுடனான தமிழர்களின் வணிகத் த�ொடர்பை வெளிக்காட்டுகிறது. அது மட்டுமல்லாது உர�ோமானிய நாட்டின் மட்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் என்பது அந்தக் காலத்தில் ஒரு துறை முகமாக இருந்து அதனால் தமிழர்களுக்கும் உர�ோமானியர்களுக்கும் ஒரு வணிகப் ப�ோக்குவரத்து இருந்திருக்கலாம் என்பதையும் இது குறிக்கிறது. இதனால் நேரடியாகவ�ோ மறைமுகமாகவ�ோ ஒரு வெளி நாட்டுத் த�ொடர்பு நம் மூதாதையர்களுக்கு இருந்திருப்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த கண்டுபிடிப்பில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது எதுவெனில் சிந்து சமவெளி நாகரீகத்திலும் பயன்படுத்தப்பட்டு இன்றும் நாம் ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டில் பயன்படுத்தும் ‘பாஸ் இண்டிகஸ்’ என்ற ஒரு வகை திமில் க�ொண்ட காளை இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய த�ொல்லியல் துறை(ASI)அனுமதி க�ொடுத்தால் வரும் ஜனவரி மாதம் அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடிக்கு மிக அருகில் இருக்கின்ற க�ொந்தகை என்ற இடத்தில் உள்ள ஒ ‘ ரு முது மக்கள் தாழி’ பகுதியிலும் அகரம், மணலூர் ப�ோன்ற இடங்களில் த�ொடங்கப்படவுள்ளன எனச் சிறப்பான செய்தியைச் சிறப்பாக எடுத்துரைத்தார். ஆய்வு த�ொடங்கட்டும். தமிழனின் ஆழம் அவயம் அறியட்டும்!! www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 29


மாச்சு பிச்சு பயணம்

மகளிர் மட்டும்

-கவிதா சுந்தர்

கடந்த வருடம் 2018 அக்டோபர் மாதத்தில்

அவசியம். அதனால் நாங்கள் ஜனவரி முதல் வாரத்திலேயே முன் பதிவு செய்து விட்டோம். இதற்காக ஒரு புலனக் குழுவை (WhatsApp குழுவை) உருவாக்கி அதில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம், தினமும் பயிற்சி செய்யும் விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்தோம் முக்கியமாக, நடைப்பயிற்சி, படிகள் ஏறி இறங்குதல், ய�ோகாசனம், மூச்சுப் பயிற்சி ப�ோன்றவற்றை அன்றாடம் செய்தோம். 4-5 படிக்கட்டுகள் ஏறி இறங்குதலே கஷ்டமாக இருக்கும் சூழ்நிலையில், பயிற்சி எடுத்து 40-60 படிக்கட்டுகள் என்று செல்ல முடிந்தது! வெப்பநிலை நன்றாக இருக்கும் வாரயிறுதி நாட்களில் பக்கத்தில் இருக்கும் சிறுமலைகளுக்குச் சென்று மலையேறுதல்,இறங்குதல், அதற்குண்டான மலையேறும் உபகரணங்கள் வாங்குதல் என்று நன்றாகத் திட்டமிட்டோம்.

சில த�ோழிகளின் மனதில், நாம் தினமும் நடக்கிற�ோம், சில செயல்களைத் தைரியமாகச் செய்கிற�ோம், ஏன் நடைப்பயணத்தை ஒரு சவால் நிறைந்த செயலாகச் செய்யக்கூடாது என்று த�ோன்றிய ஒரு தீப்பொறி - 16 பெண்கள் பயிற்சி எடுத்து, இன்கா சாலைகளில் மாச்சு பிச்சுக்கு நடை/மலையேறும் பயணத்திற்கு வித்திட்டது! 4 நாட்கள் (3 நாட்கள் இரவு கூடாரங்களில் தங்குதல்), 45 கில�ோமீட்டர் மலைகளுக்கு ஊடே பயணம் செய்து மாச்சு பிச்சு வந்தடையும் மலையேறும் பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம். இங்குதான் நாம் ப�ோகப்போகிற�ோம் என்று முடிவான பின், 8 பேர் இருக்கும் குழுவாக இருந்தால் தான் தனிச் சுற்றுப்பயணமாகப் ப�ோக முடியும் என்ற விவரம் தெரிந்து அது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து 16 பேர் குழுவாக உருமாறியது! இதற்குமேல் வேண்டாம் என்று பயண விவரங்கள் முடிவுசெய்தோம். நியூயார்க் ஜான்கென்னடி விமான நிலையத்தில் இருந்து பெரு நாட்டு தலைநகரம் லீமாவிற்கு சுற்றுப்பயண நிறுவனம், வானிலை த�ோதாக 7 மணிநேர விமான பயணம். அதன் பிறகு இருக்கும் மாதம் எல்லாம் தேர்வு செய்து, குடியேற்ற வழி முறைகளை முடித்த பிறகு செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி பெட்டிகளை எடுத்துக் க�ொண்டு குஸ்கோ என்று முடிவு செய்து கட்டணம் செலுத்தி முன் என்னும் ஊருக்கு 1 மணிநேர விமான பயணம். பதிவு செய்து க�ொண்டோம்.ஒரு நாளைக்கு குஸ்கோ 11154.86 அடி உயரத்தில் இருப்பதால் 500 பேருக்கு மட்டுமே அனுமதி (சுற்றுலா, அங்கிருக்கும் தட்ப வெட்ப நிலைக்கு நம் வழிகாட்டிகள் மற்றும் சுமை தூக்குபவர்கள் உடல் பழகுவதற்காக, 2-3 நாட்கள் அங்கு அனைவரையும் சேர்த்து) என்பதால் ஆறு தங்கி அங்குள்ள சில சுற்றலா தலங்களுக்குச் மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்வது சென்றோம். இதற்கு அங்கு தரும் க�ோக�ோ, டீ 30 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


அல்லது அந்த இலைகளை வாயில் மடித்து நீண்ட நேரம் மலையேற வேண்டும் என்பதால் வைத்துக்கொள்வது உதவியது. காலை உணவுடன் மதியத்திற்கு சாப்பாடு கட்டிக் க�ொடுத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட குஸ்கோவில் மத்தியில் இருக்கும் கதீட்ரல், 16கில�ோமீட்டர் நடந்து, மழையில் வேறு அடுத்த நாள் புக்கா புக்காரா என்னும் நனைந்து அனைவரும் பத்திரமாக இரவு இடத்தில் இருக்கும் இன்கா க�ோட்டை, லாமா, தங்கும் இடத்திற்கு வந்துவிட்டோம். அல்பாக்க, விக்குனா எனும் விலங்குகளின் முன்பாதி பயணத்தில் படிக்கட்டுகளில் மேலே மீட்பிடங்களைச் சுற்றிப்பார்த்தல் அதன் பிறகு ஏறினால் பின்பாதி முழுக்கப் படிக்கட்டுகளில் கடைகளில் ப�ொருட்கள் வாங்குவது என்று இறங்கின�ோம். சென்றது. அதற்கு அடுத்த நாள் சிஞ்சர�ோ நகர், மார்க்கெட், பிஸாக் சூரிய க�ோவில் மூன்றாவது நாள், இரண்டாம் நாளை விட என்று பல இடங்களுக்குச் சென்றோம். சிரமமானதாக இருந்தது. கால், முட்டி, உடல் எல்லாம் வலியெடுக்க, குறைவான நான்காம் நாள் காலை இன்கா சாலைகள் தூக்கம் (காலை 5:30 மணிக்கு நடக்க வழியாக 4 நாள் பயணமாக மாச்சு பிச்சுக்கு ஆரம்பிக்கவேண்டும்) வேறு. ரன்குரகயே செல்லும் மலையேறும் பயணத்தைத் (Runkuraqay) ப�ோய்விட்டு அங்கிருந்து த�ொடங்கின�ோம். இன்காப் பேரரசு கிபி சையகமார்கா (Sayacmarca) என்னும் ஒரு 1200 முதல் 1533வரை பெரு உட்பட பல சிறு மலைமேல் இன்கா சிதைந்த க�ோட்டை தென்னமெரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. ஒன்று இருக்க, நான் உட்பட எங்களில் சிலர் இன்கா இனத்தவர்கள் தங்களுடைய படை அதை மேலே ஏறி, சுற்றிப்பார்த்தோம். பின்பு வீரர்கள், மக்கள் ப�ோக்குவரத்து மற்றும் தகவல் கீழ் இறங்குவழியாக மூங்கில் காடுகள் வழியே பரிமாற்றத்திற்காக மலைகளுக்கு இடையே சென்று புயூபடமார்கா (Phuyupatamarca) சாலைகளை அமைத்துக்கொண்டார்கள். மதிய உணவு முடித்து பிறகு வின்யாவயான அவர்களின் சாலை அமைப்பு மிகவும் (winyawayana) என்ற இடத்திற்கு இரவுக்குள் மேம்பட்டதும் விரிவானதுமாகும். அதில் வரவேண்டும். கிட்டத்தட்ட 14 மணிநேரம் மாச்சு பிச்சுக்கு ப�ோகும் சாலை அமைப்பு அன்று நடந்தோம், அதாவது படிக்கட்டுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏற்றம் இறக்கம். இருட்ட த�ொடங்க, தலையில் தலைவிளக்கு(headtorch) இப்பயணத்தை ஏற்கனவே ஒரு வழிகாட்டி மாட்டிக்கொண்டு, நிலா வெளிச்சத்தில் வந்து முகவருடன் வேக்கி டிரக் (Wayki Trek) சேர்ந்தது புது அனுபவம். இரண்டு நாட்கள் யில் பதிவு செய்திருந்தோம். 84வது மைல் தாண்டிவிட்டால் இன்கா பயணத்தை என்ன கல்லடியில் இறங்கி நடக்க வேண்டும், நம் சிரமம் என்றாலும் முடித்துவிடலாம். கடவுச் சீட்டு, பயணச் சீட்டு பரிச�ோதனை முடிந்து பாலம் வழியாகக் கீழே உருபாம்பா நதி நான்காம் நாள் காலை 3 மணிக்கு எழுந்து காலை ஓட, மலைக்கு மேல நடக்க பயணமான�ோம். உணவு முடித்து 5:30 மணிக்குள் சன் கேட் (Sun நமக்கு முன்னும் பின்னும் வழிகாட்டிகள் gate) எனும் இடத்திற்கு ப�ோவதற்கு முன்பு நம்முடனேயே வருகிறார்கள். இங்கு இன்கா அங்கிருக்கும் ச�ோதனைச் சாவடிக்குச் சென்று படிக்கட்டுகள் அவ்வளவாக இல்லை, சிறு காத்திருந்தோம். ச�ோதனை முடிந்த பிறகு, சிறு ஊர்களின் வழியாக மலைக்கு மேலே அந்தப் பாதை வழியாக நடந்து சன் கேட் (Inti நடக்க ஆரம்பித்தோம். Punku எனும் இடத்திற்கு) வந்து சேர்ந்தோம். இங்குதான் காலைக் கதிரவன் உதயமாகி மாச்சு இரண்டாம் நாள் மிகவும் சிரமமாக இருக்கும் பிச்சு தூரமாகத் தெரியத் துவங்கும், எங்கள் என்று தெரியும். ஆனால் அவ்வளவு மலையேறுதல் பயணம் முடிவுக்கு வரும் சிரமமாக இருக்கும் என்று நினைத்துக்கூட நாள். சன் கேட்டில் இருந்து கீழே இறங்கி பார்க்கவில்லை. காலை 5:30 எழுந்து அப்படியே மாச்சு பிச்சுக்கு வந்து சேர்ந்தோம். 6:30க்குள் நடக்க ஆரம்பித்தோம். பெரிய அழகான கற்களை க�ொண்டு அடுக்கி ஒரு பெரிய படிக்கட்டுகள் நிறைந்த மலைகளுக்குள் சிறு நகரம் உருவாக்கி மலைகளிடையே இருக்கும் சாலைகள். டெட் உமன் பாஸ் வாழ்ந்த மன்னராட்சியின் மிச்சம் இருந்தது. (Dead Woman pass) என்னும் மலையின் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சி, உச்சியில் இருக்கும் இடத்திற்கு ப�ோய்விட்டு, நிறைவு. மாச்சு பிச்சுவின் அழகு வசீகரித்தது. பின்பு கீழே இறங்கி பக்கமாய�ோ (Pacamayo), நன்றாகச் சுற்றிப் பார்த்து ரசித்தோம். என்னும் இடத்திற்கு வந்து தங்க வேண்டும். www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 31


பின்பு அங்கிருக்கும் உணவகத்தில் மதிய உணவு முடித்து, பேருந்தில் ரயில் நிலையம் வந்து, ரயிலில் இரவு குஸ்கோ வந்து சேர்ந்தோம். இந்த ரயில் பயணம் மிகவும் அருமையான ஒன்று. மலைகளுக்கு நடுவே பயணம். ரயில்களின் ஜன்னல், கூரைகள் கண்ணாடியில். நன்றாக வெளியே இருக்கும் அழகை ரசிக்க முடிந்தது. சாப்பிட உணவும், ஆடை அலங்கார அணிவகுப்பு,நடனம் என்று ப�ொழுதுப�ோக்கு நிகழ்ச்சிகள் இருந்தன. குஸ்கோவில் எங்கள் தங்கும் விடுதிக்கு வந்தவுடன், களைப்பு தீரக் குளித்து, இரவு உணவு முடித்து நன்றாகத் தூங்கின�ோம். அடுத்த நாள் இரவுதான் நாங்கள் ஊர் திரும்ப வேண்டும் என்பதால், காலை உணவு முடித்து, அங்கே சில கடைகளுக்குச் சென்று நினைவுப் பரிசுகள் வாங்கின�ோம், பிறகு நன்றாகச் சாப்பிட்டு விட்டு (பெரு உணவுகள்

நல்ல தரமாக, சுவையாக இருந்தன) மூட்டை முடிச்சுகளுடன் விமான நிலையம் வந்து அமெரிக்காவிற்குப் பயணமான�ோம்.

16 பெண்கள் தனியாகச் சென்று, மலையேற்றம் முடித்துப் பாதுகாப்பாகத் திரும்பி வந்தது மட்டற்ற மகிழ்ச்சி. குஸ்கோ கதீட்ரல், சன் கேட்டில் நாங்கள் புடவை அணிந்து புகைப்படம் எடுத்தது, எங்கள் புடவைகளைப் பார்த்து உள்ளூர் மக்கள் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் க�ொண்டது, JFK விமானநிலையத்தில் எங்கள் விமான வாயிலுக்கருகில் பாலிவுட் பாட்டுக்கு நடனம் ஆடியது, ஒருவருக்கொருவர் உதவி செய்து, தட்டிக் க�ொடுத்து, சிரித்து, ஆண்டியன் மலைகளில் இருக்கும் அழகை ரசித்தது என்று இந்தப் பயணம் என்றும் எங்கள் மனதில் நீங்காமல் இருக்கும். ஒரு சாதனை செய்த நிறைவு... இது மேலும் த�ொடரும்!

(செப்டம்பர் மாதம், 2019) த�ொகுப்பு: இளவழுதி வீரராசு

தாய்மொழியில் படிக்கும் குழந்தையால் தான் நன்றாகப் படிக்க இயலும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா. உச்சநீதி மன்ற நீதிபதியாக ராமசுப்பிரமணியன் பதவி ஏற்பு .

முதல்முறையாக கம்யூனிசத்தைத் தாண்டி, அதிமுகவின் பிரவீனா பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்வு.

தெலுங்கானா ஆளுநராகத் திருமதி தமிழிசை பதவியேற்ற பின்னர் மக்களைச் சந்தித்து குறை கேட்க இருப்பதாக பேட்டி. அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை - ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு. ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது. 32

அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23 ஆம் தேதி இந்திய பிரதமர் ம�ோடியுடன் சந்திப்பு, 24ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்னுடன் சந்திப்பு. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தரப்போகும் பிரதமர் கிஷான் அடுத்த மாதம் முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தில்

மராட்டியம், ஹரியானா மாநிலத் தேர்தலும் தமிழக நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜர்நகர் த�ொகுதிகளுக்கும் அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் அறிவிப்பு. அரசியல் சட்ட வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர அமர்வு. சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தலைமை நீதிபதியாக ஏற்றார்.

வினீத் க�ோத்தாரி பதவி

பெட்ரோல் டீசலை ஜீஎஸ்டி வரம்புக்குள் க�ொண்டுவரக்கூடாது - தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஜீஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தல். க�ொச்சி மராடு பகுதியில் நீர்நிலைகளை ஒட்டி விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வேண்டும், அங்கு குடியிருப்போருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உச்சநீதி மன்றம் தீர்ப்பு. இந்தியாவில் 7 லட்சம் க�ோடி முதலீடு செய்ய ச�ௌதி அரேபியா உறுதி.

வழிகாட்டி மதிப்பைக் குறைத்து, பத்திரப்பதிவு செய்த 6 சார்பதிவாளர்கள் இம்மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம். ப�ொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்களுக்கான நிலுவைத்தொகையை அக்டோபர் 15க்குள் க�ொடுங்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தேசியக்கல்வி க�ொள்கை குறித்து 2 லட்சம் பேர் அரசு இணையத்தில் கருத்து பதிவு.

நாடு முழுதும் 5000 த�ொடரை நிலையங்களில் வைபை இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 565 க�ோடி செலவில் மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் பழனிச்சாமி.

தமிழகம் கேரளா நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு இரண்டு மாதத்தில் தீர்வு - தமிழக முதல்வர் பழனிச்சாமி. ரஜினி, கமல் என்னைப் பார்த்துத் திருந்துங்கள், அரசியல் உங்களுக்கு வேண்டாம் - நடிகர் சிரஞ்சீவி அறிவுரை.

ஜீவசமாதி அடையப்போவதாக கூறி வசூலில் ஈடுபட்ட சிவகங்கை இருளப்பசாமி மற்றும் 7 பேர் மீது வழக்கு பதிவு.

மேற்கு வங்கம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் சிலிகுரி - துப்ரி இடையே ஓடும் இண்டெர்சிட்டி ரயில் ம�ோதிய வேகத்தில் யானை ஒன்று பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி இறந்தது. தமிழக தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு. புதிய க�ொள்கை வெளியிட்டார் முதல்வர்.

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019

33


அறிவியல் தமிழ்

இயல் இசை நாடகம்

என முத்தமிழ் என்ற நிலையைத் தாண்டி இவற்றுடன் அறிவியல் தமிழ், கணினித் தமிழ் இணைந்து ஐந்தமிழ் என்றானது செம்மொழியாம் நம் தமிழ் ம�ொழி.

தமிழ் ம�ொழியும் உண்மை, இலக்கண இலக்கிய வரையறை, ஆழம் இவற்றை உற்று ந�ோக்குகின்ற ப�ோது இம்மொழி நம் வாழ்வியல�ோடு மட்டுமன்றி இயற்கைய�ோடும் அறிவியல் சிந்தனைய�ோடும் இணைந்து ம�ொழி என்பது மறுக்க இயலாத உண்மை.

நவீன உலகில் அறிவியல் உலகில் கடினமான ஆய்வுக்கு உட்பட்ட பல உண்மைகள் தெள்ளத்தெளிவாக மிக எளிமையாக அனைவருக்கும் புரிந்து க�ொள்ளும் வகையில் இரண்டறக் கலந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று முறையாகவும் ஆழமாகவும் தமிழைப் பயில்கின்ற ப�ோது தமிழில் ஒரு அறிவியல் என்று உணர இயலுகிறது நாம் தமிழில் படித்தறிந்து ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த இந்த உண்மைகளை ஆங்கிலத்திலும் பிற ம�ொழிகளிலும் பறை சாற்றியிருக்க வேண்டிய நிலை மாறி; ஆங்கிலத்தில் படித்து அறிந்து பின் தமிழில் ம�ொழிபெயர்க்க வேண்டிய நிலையில் இருப்பது வரலாற்றின் மடை மாற்றம். இதன் விளைவாக, தமிழில் மறைந்து இருக்கின்ற, புதைந்திருக்கின்ற, அறிவியல் உண்மைகளை உய்த்துணர சற்றே மறந்தோம் இவற்றை மீண்டும் மீட்டெடுக்க வேண்டியது நாம் கடமை அன்றோ! ஒரு ம�ொழியில் அத்துணை கூறுகளும் எப்படி ஒளிந்திருக்க இயலும் கற்கக் கற்க தமிழின் ஆழத்திலே எத்துணை அற்புதமான அறிவியல் புதையல்கள் வெளிவருகின்றன எப்படி இது சாத்தியமாகும் என்றால் அதற்கு மறும�ொழி இயற்கைதானே. அறிவியல் என்பது தான் இயற்கை தேடுவதும் அதன் உள்ளார்ந்த உண்மைகளில் இருந்து புதுமைகளைப் புனைவது அறிவியல் என்றால் அது தமிழில் தேடுவதற்கு ஒப்பாகும். இயற்கையாகத் த�ோன்றிய ம�ொழி தானே தமிழ் தமிழில் 34 அக்டோபர் 2019

இயற்கையும் அறிவியல் புதைந்து கிடப்பது எந்த வியப்பையும் தராது. பருவகாலங்கள் விண்மீன்கள் நூல்கள் இவற்றைப் பற்றிய அளப்பரிய செய்திகள் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் விரவிக்கிடக்கின்றன. த�ொல்காப்பிய ப�ொருள் இலக்கணத்தில் நிலத்தை ஐ வகைகளாகப் பிரித்த த�ொல்காப்பியர், ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற காலங்களைப் பிரித்தும் ஓராண்டின் ஆறு பருவங்களாக கார் காலம், கூதிர் காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில், முதுவேனில் என்று பகுத்துள்ளார் .12 ஆண்டுகள் க�ொண்டது ஒரு மாமாங்கம். வியாழன் ப�ோல் வட்டத்தினை ஐந்து முறை சுற்றி வருவது ஐந்து மாமாங்கம் க�ொண்டது. அதாவது 60 ஆண்டுகள் த�ொன்று த�ொற்று வழங்கி வருவதும் இதுதான் இவ்வாறு க�ோள்களின் இயக்கத்தைக் க�ொண்டு ஆண்டுகளைக் கணக்கிடுவதன் மூலம் தமது ஆய்வினை வெளிப்படுத்துகிறார்.

நச்சினார்க்கினியன் கூற்றிலிருந்து சந்திரன் மற்றும் சூரியன் இவற்றின் இயக்கங்கள், அதன�ோடு க�ோள்களின் இயக்கங்கள் இவற்றை எந்த ஒரு த�ொலைந�ோக்கி ப�ோன்ற கருவியும் இல்லாமல், வெறும் உற்றுந�ோக்கல் இயற்கை கூறுகள் இவற்றை மட்டும் க�ொண்டு உணர்ந்து, அதனை ஆண்டு என்றும்; அந்த ஆண்டிற்கு பெயரிட்டு வழங்கியும்; இந்த ஆண்டில் இக் க�ோள்களின் இயக்கம் இவ்வாறு அமையும் கணித்துக் கூறியது வியப்பிலும் வியப்பைத் தருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக், அமெரிக்காவின் எக்ஸ்ப்ளோரர், மனிதனை நிலவில் நடக்கச்செய்த அப்பல்லோ -11, ஜப்பானின் ஆஸியுமி, என்று இந்த வரிசையில் இன்றைக்கு இந்தியாவின் சந்திராயன்! இவற்றையெல்லாம் வியப்பாகப் பார்த்துக் க�ொண்டிருக்கும் நாம், இதை விட வியக்க வேண்டியது இவற்றிற்கெல்லாம் முன்னரே தமிழன் பெற்றிருந்த வானியல் ஆய்வு! தாமே ஒளிரும் விண்மீன்கள் "நாண்மீன்" (Luminous objects), ஒளியை பெற்று ஒளிர்வன. "க�ோள் விண்மீன்கள்" என்றும், சந்திரன் முதல் அனைத்துக் க�ோள்களும் www.Magazine.ValaiTamil.com


"க�ோள் விண்மீன்கள்", ஞாயிறு நாண்மீன் என்றும், புறநானூறு மற்றும் பட்டினப்பாலை பாடல்களில் சான்றுகள் காணக்கிடக்கின்றன. "மதிற் சேர் நாண்மீன் ப�ோல் " - புறம் 100 "நின்று நிலை இயற் நின் நாண்மீன்" - புறம் 124

மேலும் ,வெண்ணிறம் உடையது வெள்ளி, செந்நிறம் உடையது செவ்வாய் என்றும், வெள்ளி விடியலில் த�ோன்றும் என்பதனை, "வெள்ளி த�ோன்ற புல்லுக்கு குறலி ம்ப"

என்கிறது அதே புறநானூறு.. வானியலை கணித்துக் கூறுபவர்களை கணியர் என்றனர். க�ோள்களின் நிலையை இவர்கள் துல்லியமாகக் கணித்ததால், "கணியன் பூங்குன்றனார்", பக்குடுக்கை நன்கணியார்" என்று பெயர் பெற்றார்கள் ப�ோலும்! முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலில், "செஞ்ஞாயிற்றுச் செலவும் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும் வளி திரிதரு திசையும் வரிய து நிலைஇய காயமும் என்றிவை சென்றனர ருந்தார் ப�ோல என்றும் வானியல் குறித்து ஒரு மிகப்பெரிய ஆய்வே நடந்துள்ளதுஇதைத்தான் பாரும் உளரே!

அதாவது ஞாயிற்று இருக்கு ஒரு பாதை உண்டு ஞாயிறு அப்பாதையில் இயங்குகிறது பரிப்பு என்பது இத்தனை நாழிகைக்குள் இவ்வளவு ய�ோசனை அதாவது த�ொலைவு செல்லும் வானம் யாத�ொரு தாக்குதலும் இன்றி நிற்கிறது என்ற உண்மைகளை நேரில் ப�ோல் கூறிச்சென்ற ஆய்வாளர்கள் இருந்துள்ளனர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை மட்டுமன்றி எந்தக் காலத்தில் எந்தப் பகுதியில் இருந்து காற்று வீசும் என்றுணர்ந்து அதற்கேற்பக் கடலில் கலம் செலுத்தினர் என்று வருகிற�ோம் காற்று வீசுகின்ற இசைக்கேற்பக் காற்றிற்கு , வாடை, தென்றல், க�ொண்டல் என்று பெயரிட்டு அழைத்தனர். க�ோள்களின் நிலை மாற்றத்தினால் கிரகணம் த�ோன்றும் என்று கண்டறிந்து எந்தக் கருவியும் இன்றி, எவ்வாறு கண்டறிந்தனர் என்றெல்லாம் சிந்திக்கின்ற ப�ோது தமிழன் அறிவியலின் முன்னோடி தான் என்று உணர முடிகின்றது. உலகம் உருண்டை என்பதைப் அறிந்தனர். ஆனால், இதற்கு பேரண்டத்தின் ஒரு க�ோள் வாசகத்திற்கும் உருகார்" என்று

பதின�ோராம் நூற்றாண்டிற்குப் பிறகே அயல் நாட்டினர் முன்னரே த�ோன்றிய தமிழ் இலக்கியங்கள், இவ்வுலகம் என்று கூறியுள்ளனர். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு புகழப் படுகின்ற ஆன்மீக நூல்,

"அண்டப்பகுதியின் உண்டை பிறக்கம் அளப்பரும் தன்மை வளப் பெரும் காட்சி ஒன்றுக்கொன்று நின்றிடில் பகரின் நூற்றொரு க�ோடியில் மேற்பட விரிந்தன"

என்ற வரிகள் பெருவெடிப்பு க�ொள்கையையும், இப்பேரண்டம் விரிவடைகிறது என்பதையும் உணர்த்துகிறது. உலகம் என்பது வேர்ல்ட் என்பதை குறிக்கும் ச�ொல்லின் அடிப்படை " உலவு". உலவு என்றால் சுற்றுதல் என்று ப�ொருள். உலகம் தன்னையும், ஞாயிற்றையும், சுற்றி வருகிறது என்ற அறிவியல் கருத்து இங்கே புதைந்து கிடக்கிறது. "ஞால்" என்ற ச�ொல்லிலிருந்து பிறந்ததுதான் ஞாலம். ஞால் என்றால் த�ொங்குதல். எந்த பிடிப்பும் இல்லாமல் உலகம் த�ொங்குகிறது என்பதால் ஞாலம் ஆயிற்று. காற்றில்லாப் பகுதி வானில் வெற்றிடம் என்பது அறிவியல் உண்மை. இதைத்தான் " வறிது நிலைஇய காயமும்" என்ற புறநானூற்று வரிகள் ச�ொல்லுகின்றன." வலவன் ஏவா வானூர்தி" என்கிறது அதே புறப்பாடல். விமானி யால் செலுத்தப்படாத வானூர்தி என்று ப�ொருள். ஏன் அன்றைய தமிழர்கள் இன்றைய செயற்கைக்கோள்கள் ப�ோல, ஆளில்லா விமானத்தை செலுத்தி இருக்கக் கூடாது. (இன்னும் வரும்...........)

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 35


சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் க�ோ.அன்புக்கணபதி

தேவையான ப�ொருட்கள்:

செம்பரத்தைப் பூ தேன் இளகம்

எலுமிச்சம்

பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாற்றை 5 லிட். க�ொள்ளளவும், மூடியும் உடைய ஒரு பீங்கான் பாத்திரத்தில் எடுத்துக் க�ொள்ளவும். 50 எலுமிச்சம் பழங்களைச் சாறு பிழிந்து வடிகட்டி அந்த பீங்கான் பாத்திரத்தில் எடுக்கவும் 250 செம்பரத்தைப் பூக்களின் இதழ்களைத் தனியாகப் பிய்த்த எடுத்து பீங்கான் ஜாடியில் உள்ள எலுமிச்சம் பழச்சாற்றில் ப�ோட்டுக் கிளறி மூடி 3-4மணி நேர இடை வெளியில் கிளறி விட்டுக் க�ொண்டே 24 மணிநேரம் மூடியபடியே வைக்கவும். பின்னர் ஜாடியில் உள்ள ஊரலை ஈர அரவைக் கருவியில் (MIXI) ப�ோட்டுக் க�ொஞ்சம் க�ொஞ்சமாக அரைத்து ஒரு எவர் சில்வர் பாத்திரத்தில் எடுத்துக்

செம்பரத்தைப் பூ எலுமிச்சம் பழம் தேன்

-250 -50 -1 லிட்

க�ொள்ளவும்.. ஒரு கெட்டியான வாணலியை அடுப்பிலேற்றிச் செம்பரத்தைப் பூ, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் புளிக்க வைத்து அரைத்து வைத்துள்ள கூழ்மத்தை ஊற்றி சிறு தீயில் அடிப்பிடிக்காமல் ப�ொருமையாய்க் காய்ச்சவும். கெட்டியாய் தயிர் பதத்திற்குத் தளதளவென வரும்போது தேனைச் சேர்த்து அடுப்புத் தீயை அனைத்து ஆறவைத்து எடுத்துக் கண்ணாடி குப்பியில் சேமிக்கவும். தினம் காலை உணவுக்கு முன் ஒரு மேசைக் கரண்டி அளவு தினம் சாப்பிடவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுடன் ( avoiding oily, fatty, deep fried foods) 6 மாதத்திற்கு மேல் சாப்பிடக் குருதி அழல் (BLOOD PRESSURE) இரத்தக்குழாய் அடைப்பு (BLOOD CLOTS) அவதிகள் சீராகும்.

இஞ்சி பூண்டு இதய கல்பம்

"காலையில் இஞ்சி", "இளமை காக்கும் இஞ்சித்தேன்",

"இஞ்சிச் கஞ்சி குஞ்சிக்கு நல்லது" (குஞ்சி - தலை முடி, குடுமி-நரை தடுக்கும்) "நெஞ்சு சளிக்கு இஞ்சி ம�ொரப்பா" என்னும் பழம�ொழிகளும் "க�ொழுப்பெதிர்க்க வெண்பூண்டே", என்னும் அருந்தமிழ் மருத்துவம் 500 வரிகளும் இஞ்சி, பூண்டு களின் மருத்துவச் சிறப்பை பறைசாற்றுகின்றன. மலைப்பூண்டு, நாட்டுப்பூண்டை விடக் காரமானது. இவற்றில் எந்தப் பூண்டை வேண்டுமானாலும் மருந்துக்குப் பயன்படுத்தலாம். தேவையான ப�ொருட்கள்: 1) இஞ்சி (முற்றிய த�ோல் சீவியது)

-1 அங்குலம்

2) பூண்டுப் பல்(த�ோல் நீக்கியது).

-4

3) மிளகு (கரு மிளகு).

-4

4) துளசி (நல்ல துளசி (அ) நாட்டு துளசி (அ) கருந்துளசி.

-9 இலைகள்

5) நாட்டுப் பசும்பால்.

-1/4 க�ோப்பை

36 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


செய்முறை:

பூண்டையும் இஞ்சியையும் 2 மி.மீ அளவு சன்ன மான துண்டுகளாகப் ப�ொடித்துக் க�ொள்ளவும். மிளகை உடைக்காமல் முழுதாக எடுத்துக் க�ொள்ளவும். துளசியைப் ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். அனைத்தையும் பாலில் ப�ோட்டு ஒரு கெட்டியான பாத்திரத்தில் சிறுதீயாக வைத்துக் கிளறிக் க�ொண்டே இருக்கவும். பால் சுண்டி க�ோவா ப�ோல் வந்ததும் சுரண்டி உருட்டி எடுத்துக் க�ொள்ளவும். இரவு சாப்பாட்டுக்குப் பின் இதைச் சாப்பிடவும்.

நாளடைவில் க�ொஞ்சம் க�ொஞ்சமாகப் பாலின் அளவைக் குறைந்துக�ொண்டே வர இஞ்சி, பூண்டு வேகிற நேரம் குறைந்து அரை வேக்காடு கால் வேக்காடு எனக் குறைத்து, சாப்பிட வாயிம் வயிறும் பழகிக் க�ொள்ளும். பிறகு சிரமமின்றி பால் சேர்த்து வேக வைக்காமலே பச்சை இஞ்சி. பூண்டு, மிளகு, துளசியை வாயிலிட்டு மென்று அப்படியே சாப்பிடப் பழகிக் க�ொள்ளலாம். பச்சையாகச் சாப்பிடுவதுதான் சரியான முறை. ஆனால் எடுத்ததும் பச்சையாகச் சாப்பிட்டால்

பலருக்கு வயிறு எரிச்சல் ஏற்பட்டு இதைச் சாப்பிடாது விட்டுவிடுவர். இதை எவரும் சிரமமின்றி சாப்பிட்டுப் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறையைச் ச�ொன்னேன். இந்தத் தயாரிப்பை 30 (அ) 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் வருமுன் காக்கும் நடவடிக்கையாக எடுத்துக் க�ொண்டு இதயத்தைப் பாதுகாத்துக் க�ொள்ளலாம். இதைத் தயாரிக்க அனைத்துப் ப�ொருட்களும் வீட்டிலேயே இருக்கிறது. இதை ஆயுள் முழுதும் எவ்வளவு காலம் சாப்பிட்டாலும் எந்த கெடுதியும் இல்லை. நடந்தால் மூச்சு வாங்குவதும், நெஞ்சு வலி வருவதும் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு த�ொடர்ந்து நடந்தால் சரியாகிப்போவதும், த�ொடர்ந்து படியேறினால் நெஞ்சு வலிப்பதும், மூச்சு வாங்குவதும் இதய ந�ோயின் முன்னறிவிப்புகள். நமது இதயம் தரும் எச்சரிக்கை. இதயம் தனது பிரச்சனையைத் தெரிவிக்கும் சமிக்ஞைகள். எனது அறிவுரையின்படி இந்த நிலையில் இம்மருந்துணவால் நலம்பெற்றவர்கள் பலர்.

உலகத்தமிழ் நிகழ்வுகள்

கம்போடியா நாட்டு கலாச்சார துறை அமைச்சகத்தின் திருவள்ளுவர் விருதை

உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் அத்துறையின் இயக்குனர் ச�ொக்கையா அவர்கள் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், பத்திரிகையாளர் திரு.ரவி குணவதிமைந்தன் அவர்களுக்கு வழங்கினார். அருகில் பாடலாசிரியர் விவேகா, திரு.சித்தர் தணிகாசலம், திரு.சீனிவாசராவ்.

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 37


உலகத் தமிழ்ச் சங்கம் (லண்டன்) பல நாடுகளில் வசிக்கும்

உலகத்’ தமிழ்ச் சங்கம் (லண்டன்), நடத்திய விழாவில் உலகளாவிய ப�ொருளாதார

சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தது.

மேம்பாட்டிற்கான சாதனை விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்புச் செயலாளருமான, மாண்புமிகு. நியா கிரிபித் (NIA GRIFFITH), மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரிட்டனின் இந்திய - பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான திரு. வீரேந்திரா சர்மா த�ொகுத்து வழங்கினார்கள். லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் லார்ட்ஸின் இல்லத்தில் செயற்குழு அறையில் (committee room, house of Lord’s, at the palace of westminister, London) இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கிலாந்து பாராளுமன்றத்தின் மேலவை, ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ், அல்லது ஹவுஸ் ஆஃப் பியர்ஸ் என்று அழைக்கப்படுகின்றது. இது இந்திய மாநிலங்களவைக்கு மேல் சபைக்கு ஒப்பான சபை ஆகும். இந்நிகழ்ச்சியில் திரு.கார்த்திகேய சிவசேனாபதி, வித்யாசாகர் உள்ளிட்ட பலர் விருது பெற்றனர்.

டாக்டர்.வி.ஜி.சந்தோசம்,

கவிஞர்

மத்திய அரசின் ஆட்சிம�ொழி செயலாளர்

திருமதி அனுராதா மித்ரா அவர்களைச் சந்தித்து மாநில அளவில் ஆட்சி ம�ொழிகளாக இருக்கும் 22 ம�ொழிகளில் தமிழ் ப�ோன்ற பிற ம�ொழிகளையும் முன்னிலைப்படுத்தல் குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் விவாதித்தார். இந்திய ம�ொழிகளுக்கு மற்றும் ஆங்கிலத்திற்கு ம�ொழிபெயர்ப்பு செய்யும் மென்பொருள் தயாரிப்பு பணியின் முன்னேற்ற நிலை குறித்து விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார். 38 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


அமெரிக்கா

சிகாக�ோவில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 32வது தமிழ்விழா, 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி (IATR) மாநாடு மற்றும் சிகாக�ோ ப�ொன்விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 50-வது திருவள்ளுவர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அச்சிலை சிகாக�ோவில் ஷாம்பர்க் சர்வதேசச் சிற்பப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது.. எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுவிழா இனிதே நிறைவுற்றது. நான்காயிரம் மாணவர்கள்

மத்தியில் பத்து விருதாளர்கள் ஆறு பதிப்பாளர்கள் க�ௌரவிக்கப்பட்டனர் இவ்வாண்டு விருதுபெற்றனர்.. பல்கலைக்கழகத்தின்

வேந்தர் டாக்டர் .பாரிவேந்தர் தலைமையில்,

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிறப்புரையில் விழா சிறப்பாக நடந்தேறியது.

தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக திருமதி.தமிழிசை ப�ொறுப்பேற்றார்.

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 39


டெல்லியில் 3-வது சர்வதேச திருக்குறள் மாநாடு சிறப்பாக நடந்தேறியது.

தமிழக முதலமைச்சரின் துபாய், லண்டன், அமெரிக்க பயணங்கள் தமிழகத்திற்குத் த�ொழில் முதலீட்டை ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் ஓகம் கற்றுத்தரும் திருமூலர் மூச்சுப் பயிற்சி ஆராய்ச்சியாளர், தென்கர�ோலினா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர்.சுந்தர் பாலசுப்ரமணியன்.

40 அக்டோபர் 2019

www.Magazine.ValaiTamil.com


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் 2019 ஆம் ஆண்டிற்கான "மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்" விருதினை வழங்கினார்.

மூன்றாவது

தமிழ் த�ொழிலதிபர்கள் , திறனாளர்கள்

மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது

யாழ்ப்பாணத்தில் தமிழ்

விக்கிப்பீடியா ஆண்டு விழா கட்டற்ற

கலைக்களஞ்சியமான

தமிழ்

விக்கிப்பீடியா

த�ொடங்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் ஆண்டு விழா யாழ்ப்பாணத்தில்

இந்தாண்டு அக்டோபர் 19,20 நாட்களில்

நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்தும்

பல

தமிழ்

இந்தியாவிலிருந்தும்,

விக்கிப்பீடியர்கள்

கலந்து

க�ொள்ளவுள்ளனர். www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019

41


மதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு!

உலகப்

புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கு அழைப்பு! சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2019 திசம்பர் 14,15 ஆகிய நாட்களில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக உலகத் தமிழிசை மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழிசை இயக்கத் தந்தை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் 1919ஆம் ஆண்டு வரை ஆறு தமிழிசை மாநாடுகளை நடத்தியுள்ளார். 42 அக்டோபர் 2019

அதன்பிறகு 100 ஆண்டுகளாகத் தமிழிசை மாநாடு நடைபெறவில்லை. தமிழிசைக்கு வளம் சேர்த்த அவரின் நூற்றாண்டான இவ்வாண்டில் தமிழிசை மாநாட்டை வெகுசிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழிசைக் கலைஞர்களும் அறிஞர்களும் மாணவர்களும் கலந்துக�ொள்ள உள்ளனர் என தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் க�ோ. விசயராகவன் அவர்கள் www.Magazine.ValaiTamil.com


செய்தியாளர்களிடம்

தெரிவித்தார்.

தமிழிசைப் பாடல்கள், தமிழிசை நடனம், ப�ோன்ற நிகழ்வுகளை நடத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்புச் திட்டமிடப்பட்டுள்ளது. செயலர் முனைவர் கு.சிதம்பரம், உதவிப் பேராசிரியர், உலகத் மேலும், இம்மாநாட்டிற்குத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்கள் தமிழிசையின் த�ோற்றம், வளச்சி, கூறுகையில், தமிழ் ம�ொழி எப்படி தமிழிசை மருத்துவம், தமிழிசை பல்வேறு காலக்கட்டங்களில் நாடகம், தமிழ்சைக் கல்வி, தமிழிசைக் அந்நிய ம�ொழிகளின் தாக்கத்திற்கு கல்வெட்டுகள், தமிழிசைத் தூண்கள், உள்ளானத�ோ அதேப�ோல தமிழிசையும் தமிழிசை சார்ந்த அரசு திட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் அந்நிலை இன்றும் நீடித்துவருகின்றது. வரவேற்கப்படுகின்றன. கட்டுரையின் அந்நிலையிலிருந்து தமிழிசையினை ஆய்வு சுருக்கத்தினை அக்டோபர் மீட்டுருவாக்கம் செய்யும் ந�ோக்கிலும் 15க்குள் 9500 106269 என்ற புலன தமிழிசையின் மேன்மையினையும் எண்ணிற்கு அனுப்பலாம். முழுக் இனிமையினையும் உலகெங்கும் பரப்பும் கட்டுரையினை நவம்பர் 16க்குள் ந�ோக்கிலும் இம்மாநாடு அமையும். isaimanadu2019@gmail.com என்ற இம்மாநாட்டில் தமிழிசையின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் த�ொன்மையினை வெளிப்படுத்தும் விபரங்களை www.IsaiTamilJournal. விதமாக ஆய்வரங்கம், தமிழிசைக் com என்ற இணையத்தளம் வழியாக கருவிகளைக் காட்சிப்படுத்துதல், அறியலாம் என அவர் கூறினார்..

ADVERTISE AND SUPPORT VALAITAMIL MONTHLY MAGAZINE உங்கள் த�ொழிலை

உலக அளவில் விரிவுபடுத்த விருப்பமா?

வேறு நாடுகளில் ஏற்றுமதி / இறக்குமதி த�ொடர்புக�ொள்ள விருப்பமா? பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து பகிர விருப்பமா?

மிகக்குறைந்த கட்டணத்தில் வலைத்தமிழ் மாத இதழில் விளம்பரம் செய்து ஆதரவு தாருங்கள்.. Monthly, Quarterly, Annual advertisement Promotion options are available. Write to us at Magazine@ValaiTamil.Com www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 43


வலைத்தமிழ் ம�ொட்டு அமெரிக்காவில் பயணிக்கும்

தமிழ்

குழந்தைகளுடன்

பதின�ொரு

பேர்

க�ொண்ட

வலைத்தமிழ் ம�ொட்டு ஆசிரியர் குழு இதை

மிக முக்கியத் தேவையாக உணர்ந்து, பலரின் ஆல�ோசனைகளை உள்வாங்கி இந்த இதழை

உங்கள் கைகளில் க�ொண்டு வந்து சேர்க்கிறது. உலகெங்கும் தலைமுறை

வாழும்

தமிழை

தமிழர்களின் பல்வேறு

அடுத்த

வகையில்

ஆர்வமுடன் கற்றுவரும் நிலையில் இவ்விதழ் குழந்தைகளுக்கும்,

தமிழ்ப்பள்ளிகளுக்கும்

தமிழ்ச் சங்கங்களுக்கும், மிகவும்

பயனுள்ளதாக

நம்புகிற�ோம். இது

ஒரு

பெற்றோர்களுக்கும் இருக்கும்

மின்னிதழாக

தேவைப்படும்

தனி

அமைப்புகளுக்குத் அச்சுப்பிரதியை

,

நபர்கள்

அச்சிட்டு

என்று

மட்டுமன்றி மற்றும்

தேவையான வழங்கும்

ந�ோக்கிலும் இது வடிவமைக்கப்படுகிறது.

இதில் சிறுவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு உலகெங்கும் வாழும் தமிழர்களின் குழந்தைகள்

ஆங்காங்கே உள்ள தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் ம�ொழியை ஆர்வமுடன் கற்றுவரும் நிலையில், அவர்களுக்கென்று நம்

தாய்மொழியில்

ஏற்பட்டுள்ளதை

ஒரு

பன்னாட்டு

உருவாக்கும்

அறிந்து,

இதழ்

தேவை

“வலைத்தமிழ்

ம�ொட்டு” என்ற சிறுவர்களுக்கான மாத இதழ் ஏப்ரல்

2019

முதல்

வெளிவருகிறது.

44 அக்டோபர் 2019

வட

விளையாட்டுகள்,

கதைகள்,

படைப்புகள் என்று சிறுவர்களே முழுமையாகப்

படிக்கும் வகையில், அவர்களது தமிழ் கற்றலை மேலும்

செம்மைப்படுத்தும்

ந�ோக்கிலும்

இவ்விதழ் வெளிவரவிருக்கிறது. மின்னிதழை இலவசமாகப் தேவையின்

பெற

விருப்பத்தை

www.Mottu.ValaiTamil.com பதிவுசெய்க.

வும்,

அச்சுப்பிரதி

தெரிவிக்கவும்

இணையத்தளத்தில்

www.Magazine.ValaiTamil.com


ஆன்மிகம் திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் தஞ்சாவூர் மாவட்டம்

திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் க�ோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற ச�ோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் க�ோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் க�ோவில் ஆகும். பசிய�ோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிப�ோக்கிய தலமென்பது த�ொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற ச�ோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும். தல வரலாறு

ஊர்த்தவ

மகரிஷியின்

45 அக்டோபர் 2019

சாபத்தால்

நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது. திருக்களாவூர் என மக்களால் ப�ொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் க�ொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. www.Magazine.ValaiTamil.com


இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜக�ோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி க�ோவிலுக்கு முன்புறம் க�ொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

என்பது சம்பந்தரின் தேவாரப்பாடலாகும்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் க�ொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் த�ொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு என்ற நம்பிக்கையில் தமிழகம் மட்டுமல்லாது வேறு மாநில மக்களும் த�ொடர்ந்து வந்துப�ோகிறார்கள். அதே ப�ோல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி க�ோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் க�ோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

குழந்தைச் செல்வம்:

அமைவிடம்:

தேவாரத் தலம்:

சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், தனது 11 பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ‘திருத்தாண்டக’ப் பாடல்களிலும், சுந்தரர், ‘ஊர்த் த�ொகை’யிலும் இந்தத் திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

‘வெந்தநீறு மெய்பூசிய வேதியன் சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வந்தன் கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம் எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே’.

திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து ப�ோவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனைய�ோ உள்ளன. மருத்துவ உலகம் இதில் எவ்வளவ�ோ முன்னேறி இருக்கிறது என்றுதான் ச�ொல்ல வேண்டும். இருப்பினும், தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனைய�ோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். www.Magazine.ValaiTamil.com

தஞ்சாவூரில் இருந்து கும்பக�ோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கில�ோமீட்டர் த�ொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கில�ோமீட்டர் த�ொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

அக்டோபர் 2019 46


(Land mark : opp . Pheonix mall)

www.Magazine.ValaiTamil.com

அக்டோபர் 2019 47


ஆங்கிலப்புலமையுடன்,

முறையாக

தமிழ்பயின்ற

அனுபவம் வாய்ந்த தமிழாசிரியர்கள் நீங்கள் வசிக்கும் நாட்டின் வாழ்வியலை உள்வாங்கி கற்றலை அதற்கு உகந்த வகையில் திட்டமிட்டு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கைக�ோர்த்து புலம்பெயர் நாடுகளில் பேச, எழுத, புரிந்துக�ொள்ள வழி

கல்வி அமைப்பு.

ச�ோதனை

வகுப்பில்

உருவாகியுள்ள இணைய

இணைந்து

இன்றே பதிவு செய்யுங்கள்…

தமிழில் படிக்க,

பயன்பெறுங்கள்,


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.