வலைத்தமிழ் நவம்பர், 2019

Page 1

www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019

1


2

நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் உலகமே உற்றுந�ோக்கிய இந்தியப் பிரதமரும் , சீன அதிபரும் சந்தித்த மகாபலிபுரத்தைக் காட்டாதத் த�ொலைக்காட்சிகளே இல்லை எனலாம். உலக அளவில் பிரபலமான அந்த அழகான சிற்பங்கள் நிறைந்த இடத்தை அனைவரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டியது அவசியம்.

சுற்றுலாத்துறை இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அவ்விடத்தைப் ப�ொருளாதார வளர்ச்சிக்காகவும், சிறப்பாக பராமரிக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், நாட்டின் வணிகம் பெருகவும் திட்டமிட்டிருக்கவேண்டும். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்தபிறகு சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவார்கள் என்று எதிர்ப்பார்த்திருக்கவேண்டும். சென்னையில் வசிக்கும் பலருக்கும், அண்டை மாநிலத்தவர்களுக்கும் த�ொலைக்காட்சியைப் பார்த்தே இப்படி ஓர் அழகிய இடம் இருப்பதே தெரிந்திருக்கும். தலைவர்களின் சந்திப்பு முடிந்த அடுத்த நாளிலிருந்தே தமிழ்நாட்டிலிருந்தும், பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மகாபலிபுரம் ந�ோக்கி வரத்தொடங்கிவிட்டார்கள். இனியும் த�ொடர்ந்து வருவார்கள். சீனர்கள் பலர் த�ொடர்ந்து வரும் சாத்தியம் உள்ளது.

மேலைநாடுகளில் இப்படிய�ொரு விளம்பரம் ஒரு சுற்றுலாத் தளத்திற்குக் கிடைத்திருக்குமானால், அதை எப்படி மக்களுக்குப் பிடித்த வகையில் மேம்படுத்திப் பெருளாதாரத்தை , வேலைவாய்ப்பை அதிகரிக்க பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்திருப்பார்கள். மறுநாளே அங்கு பல கடைகள், நினைவுப் பரிசுகள், அதன் வரலாறு குறித்த விளக்கங்கள், தகவல் கையேடு என்று அனைத்தும் உருவாகி அதைப் பெரிய அளவில் மாற்றியிருப்பார்கள்.

ஆனால் நாம் என்ன செய்தோம்? இருநாட்டுத் தலைவர்கள் சந்தித்து சென்றபிறகு மறுநாளே அந்த இடம் முழுக்க குப்பைகளாலும், உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் என்று நிறைந்திருந்ததைத் த�ொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். பல இடங்களில் அழகிற்காகப் ப�ோடப்பட்டிருந்த புல் தரைகள் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டிருந்தது. பல இடங்களில் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தியிருந்தார்கள். இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பிற்குப் பெரும் ப�ொருட்செலவில் செம்மைப்படுத்தப்பட்ட இந்த சுற்றுலாத்தலம் ஏன் அதே தரத்தில் சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் நம்மால் பராமரிக்க முடியவில்லை?. பெரிய எதிர்பார்ப்போடு சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் வாழ்வியலைப் பற்றி, நம் நாட்டைப்பற்றி என்ன நினைப்பார்கள்? இந்திய www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019

3


மக்களே இப்படித்தான் என்று மக்கள்மேல் குறைகூறுவது சரியா?. இதற்கு என்னதான் தீர்வு? இந்தியாவைச் சிங்கப்பூர், அமெரிக்காவுடன் ஒப்பிடும் நாம், அமெரிக்காவில் திட்டமிட்டு ப�ோதிய குப்பைத் த�ொட்டிகள் எங்கும் வைக்கப்படுகிறது என்பதையும், குப்பைப் ப�ோட அலையவேண்டியதில்லை என்பதும், கழிவறை வசதிகள் ப�ோதிய அளவில் கண் எதிரிலேயே உரிய வழிகாட்டுதல்களுடன் இருக்கும் என்பதையும் மறந்துவிடுகிற�ோம். முக்கியத்துவம் இல்லாத இடத்தைக் கூட ஒரு சிலை வைத்து, ஒரு கல்வெட்டு வைத்து, அது குறித்த வரலாற்றை முறையாகத் த�ொகுத்து அச்சடித்து வைத்து, அதன் நினைவாக மக்கள் வாங்க பரிசுப்பொருள்கள் வைத்து,. ப�ோதிய பணியாளர்கள் நியமித்து ,அந்த செலவுகளையும், மேலும் வருமானம் ஈட்டவும் நுழைவுக்கட்டணம் வாங்கி அந்த சுற்றுலாத் தளத்தைத் தூய்மையாக நிர்வகிப்பார்கள். சமீபத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பிய முதலமைச்சர், வெளிநாட்டு சுற்றுலாப் பராமரிப்புக்களைக் கண்டு வியந்ததாகவும், நம் நாட்டில் அதுப�ோல் முக்கியத்துவம் க�ொடுக்கவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுப் பேசினார். இதை வாய்ப்பாகக் க�ொண்டு சுற்றுலாவிற்குத் தமிழகத்தில் உரிய கட்டமைப்புகளைப் பலப்படுத்தி வரலாற்றுச் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்று மூன்று வகையில் திட்டமிட்டுச் சிந்தித்தால் தமிழகத்தின் ப�ொருளாதாரமும், வேலைவாய்ப்பும் பெரிய அளவில் வளர்ச்சியடையும். பிச்சாவரம் உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்கள் ஏற்கனவே சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தமிழக சுற்றுலாவை விளம்பரப்படுத்துவது இதை வளர்த்தெடுக்க பெரிதும் உதவும். உரியவர்கள் சிந்திப்பார்களா? வாழ்க தமிழ்... மீண்டும் அடுத்த இதழில்

4

நவம்பர் 2019

சந்திப்போம்.

www.Magazine.ValaiTamil.com


www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019

5


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில்

எழுத்தாளர் ஜெயம�ோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2

(த�ொடர்ச்சி)

-விஜய் சத்தியா

வெர்ஜினியா, அமெரிக்கா

தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவருபவர் எழுத்தாளர் ஜெயம�ோகன். அவருடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த அறிவுசார் கலந்துரையாடலின் திருக்குறள் சார்ந்த பகுதிகளைச் சென்ற இதழில் பார்த்தோம்.

த�ொடர்ச்சியாக அறிவியல், கலை, பண்பாட்டு வளர்ச்சி, தமிழ்க்கல்வியின் தரம், உலகத் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு ம�ொழியைக்கடத்துதல், தமிழ் அறிஞர்களை அடையாளப்படுத்தல், தர்க்கபூர்வமான விவாத முறை என்று தன் கருத்துகளைப் பகிர்ந்து க�ொள்கிறார்.

இலக்கியங்களிலிருந்து அறிவியல் அறிவை எப்படி கதைகள் மூலம் அறிமுகப் படுத்துவது?

வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு

16ஆம் நூற்றாண்டில் ஐர�ோப்பாவில் பிரான்சிஸ் பேகனுக்குப் பிறகு

6

நவம்பர் 2019

வாழும் நம் குறளிலிருந்து,

முதலில் அறிவியல் என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும். அதுப�ோல அனுபவ அறிதல் மேம்பட்டு வருவதற்கும் அறிவியல் - சயின்ஸ் என்பதற்கும் வேறுபாடு உண்டு.

www.Magazine.ValaiTamil.com


அறிவியல் செயல்பாடு என்ற புதிய சிந்தனைமுறை த�ொடங்கி வந்தது. அனுபவ அறிவென்பது, 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய க�ோயிலின் தூண்கள் மிகப் பெரியவை. 400 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்ட மன்னார்குடி ராஜக�ோபாலசாமி க�ோயில் க�ோபுரம் தஞ்சைக் க�ோயிலைவிட மிகப் பெரியது. ஆனால் அதைத் தாங்கும் தூண்கள�ோ மிகச் சிறியது. நானூறு ஆண்டுகளாகத் த�ொடர்ந்து செய்து செய்து சிற்பிகள் எடைப் பரவலாக்கமூலம் சிறிய தூண்களே ப�ோதும் என்று கண்டடைகிறார்கள். இது அனுபவ அறிவு. நம் சிற்பிகளும், வைத்தியர்களும் இவ்வாறு பலவற்றைச் செய்து அறிந்ததைத் த�ொல் அறிவு என்று ச�ொல்லலாம். ஆனால் அறிவியல் என்பது எடைச் சமன்பாடு என்ற கருதுக�ோளைச் சென்றடைவது. அந்த கருதுக�ோளைக் கண்டடை ந் து வி ட ் டா ல் , அதைப்பொதுவில் நிறுவி அனைவரும் அதை ஒரு க�ொள்கையாக ஏற்றுக்கொண்டால் அது மிக எளிதாக மாறிவரும். நானூறு ஆண்டுகள் தேவைப்படாது. ஆனால் நம்முடைய மரபில் எங்காவது எடைச் சமன்பாடு பற்றி எழுதப்பட்டிருக்கிறதா? சிறிய தூண் ப�ோதும் என்று கண்டறிந்துவிட்டார்கள் ஆனால் ஏன் என்று கண்டறியவில்லை. அந்த ஏன் தான் அறிவியல். தியரி www.Magazine.ValaiTamil.com

(கோட்பாடு)தான் அறிவியல். எகஸ்பரிமென்டேசன் இல்லை. தியரியை முன் வைப்பதும், அதைப் ப�ொய்ப்பித்தலின் வழியாக எதிர்ப்புக் குரல் க�ொடுப்பதும், நிரூபித்தல் வழியாகக் க�ொள்கையைப் புறவயமாக (அப்ஜக்டிவ்) நிறுவுவதே அறிவியல். இது பதினாறாம் நூற்றாண்டில் உருவானது. திருக்குறளை எழுதிவிட்ட நம்மால் ஒரு ஸ்குரூவை, வால்வைக் கண்டுபிடிக்க முடியாதா? அதைப்பற்றி திருக்குறளிலேயே எங்காவது கண்டிப்பாக இருக்கும். நல்லா தேடிப்பாரு என்று ச�ொல்வதில் அர்த்தமில்லை. இந்த வகையாகக் கல்வியை அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்குக் க�ொடுத்தீர்களென்றால் 5 -10 வயது வரை கேட்டுக்கொண்டிருப்பார்கள். 12 வயதுக்கு மேல், உங்களை முட்டாள் என்று நினைத்து, பாவம் இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள், கஷ்டப்பட்டிருக்கிறார்கள், பக்தி சார்ந்து ஏத�ோ ச�ொல்கிறார்கள் என்று மன்னித்து விடுவார்கள். குறள் என்றும் மாறாத கவித்துவத்தை, பேரறத்தை, நீதியைச் ச�ொல்லக்கூடிய நூல் அறிவியலைச் ச�ொல்லக்கூடியதல்ல. நமக்கு மிகப்பெரிய மருத்துவமுறை இருக்கிறது. அனுபவம் சார்ந்தது. தியரி என்ற கருதுக�ோள் இல்லை. நவீன மருத்துவம் புறவயமாக நீங்கள் நிறுவுவதற்கும், மறுப்பதற்கும் வாய்ப்பு க�ொடுக்கும். நவம்பர் 2019

7


அந்த வகையான அறிதல் திருக்குறளில் இல்லை. அதை அறிவியல் நூலாக, மருத்துவ நூலாக முன்னிறுத்துவது தவறான புரிதல்களை உருவாக்கும் அப்படித் தேடிப்போவது தேவையில்லை என்று நினைக்கிறேன். மற்ற தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிவியல் அறிவை மருத்துவ அறிவை எப்படி அறிமுகப் படுத்துவது? ப�ொதுவாக நமது அறிவுப்புலத்தில் ஒரு விடுபடல் ஒரு வெட்டு உள்ளது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் காலனியாதிக்க காலத்திற்கு முன், பெரும்பாலான சிற்பிகள், மருத்துவர்கள், தச்சர்கள் அரசர்களால் பேணப்படாமல் கைவிடப்பட்டு அது அழிந்தது. பின் உ.வே.சா ப�ோன்றவர்களால் கண்டடையப்பட்டது. உ.வே.சா இல்லை என்றால் சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்காது. பல காப்பியங்கள் இன்னும் கிடைக்கவே இல்லை. பல நூல்களில் அப்ஜக்டிவிட்டி என்ற புற வய நிறுவனப்படுத்துதல் இல்லை. மரபாக இருக்கக்கூடிய ஏராளமான மருத்துவ நூல்களில் அதிகாரப்பூர்வமான நூல் எது என்று ச�ொல்லமுடியவில்லை. புகழ்பெற்ற மருத்துவ நூல்களைப் படித்தால் உங்களுக்குத் நகைச்சுவையாக கூட இருக்கும். உதாரணமாகப் ப�ோகரின் அகவல் சித்த மருத்துவத்தின் ஆதி நூல் என்று ச�ொல்கிறார்கள். அதில் பத்தில் எட்டு மருத்துவக் குறிப்புகள் த�ோல் ந�ோயைப் பற்றியது. ச�ோப்பு 8

நவம்பர் 2019

எப்போது வந்தத�ோ அப்போதே இல்லாமல் ப�ோய்விட்டது நம் மருத்துவம். நாம் அதைப் புகழ்ந்து முன் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. நமது அனுபவ அறிவில் குறைவான அறிதல்களே உள்ளன. அந்தந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் அதை ஆராய வேண்டும். உதாரணமாகச் சித்த மருத்துவத்தைப்பற்றி இன்றைய நவீன மருத்துவ அறிஞர்கள் புறவயமாக ஆராய்ந்து அதில் என்ன இருக்கு இல்லை என்று பார்க்க வேண்டும். அதை ஒரு நம்பிக்கையாக நம் குழந்தைகளுக்குக் க�ொண்டுவந்து க�ொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இங்குள்ள குழந்தைகளுக்குத் தமிழ் ச�ொல்லிக்கொடுக்க சிரமமாக உள்ளதே. ஏன் ச�ொல்லிக்கொடுக்க வேண்டும்? அவர்கள் எப்படி நூல்களைப் படிக்க வேண்டும்? ஒரு இலக்கியம் படைக்கும் அளவிற்குச் ச�ொல்லி க�ொடுக்க வேண்டுமா? ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் தெரிந்தால் ப�ோதுமா? நான் குழந்தைகளுக்காகப் பனிமனிதன், வெள்ளிநிலம் என்று இரு நூல்கள் எழுதியிருக்கிறேன். பரவலாக வாசிக்கப்பட்டது. ஆனால் சின்ன குழந்தைகளுக்காகப் புத்தகம் அல்ல. ஏன் எழுதினேன் என்றால் குழந்தைகளுக்குக் கதை எழுதும் மற்ற எழுத்தாளர்கள் நம் குழந்தைகளின் அறிவுத்தளம் எங்கு இருக்கிறது www.Magazine.ValaiTamil.com


என்று தெரியவில்லை. இவர்கள�ோ எட்டாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவனுக்கு "அண்டரண்ட பட்சியும் குருவியும்" ப�ோன்ற கதைகளைச் சிக்கலான ம�ொழியில் எழுதுகிறார்கள். படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவன் அவஞ்சர்ஸ் படம் பார்க்கிறான். என்னுடைய பனிமனிதன் என்ற நூலில் பரிணாம வளர்ச்சி க�ொள்கையைப் பற்றி பேசக்கூடியது. வெள்ளி நிலம் மதங்களின் த�ோற்றம், வளர்ச்சி, உடைவுகள், பிரிவுகள், மறைவைப் பற்றி பேசக்கூடியது. சாகசக் கதை, இமய மலையில் கதை நடப்பதாக இருக்கும். ஒரு வரியில் ஐந்தாறு வார்த்தைகளுக்கு மேல் இருக்காது. எழுவாய் பயனிலை தெளிவாக இருக்கும். வாய்விட்டுப் படித்தால் எளிதில் புரியக்கூடியதாக இருக்கும். அறிவுத்தளத்தில் மேலேயும், ம�ொழியில் கீழேயும், எளிமையாகவும் இருக்கும். ஆனால் அடிப்படையில் தீவிரமான புத்தகம். கலை, அறிவியல் சார்ந்து இருக்கும். பரவலாக வாசிக்கப்படுகிறது. இரண்டாவதாக ஏன் தமிழ் படிக்க வேண்டும்? அமெரிக்க ஜப்பான் சிங்கப்பூர் ப�ோன்ற வெளிநாடுகளில் வசிக்கும் நம் குழந்தைகளுக்கு நான் யார்? என்ற சுய அடையாளத்தை (Self Identity) வரையறுத்துக் க�ொள்வது அவசியமாகிறது. அது சுய பெருமிதம் (Self Esteem) www.Magazine.ValaiTamil.com

சார்ந்தது. நான் யார் என்பதற்கு ஒரு தெளிவான உயர்ந்த வரையறையை நாம் வைத்திருக்கும்போதுதான் மற்றவரை எதிர்கொள்ள முடியும். இதை எப்படி நம் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதென்றே தெரியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். அமெரிக்காவில் உள்ள இந்திய குழந்தைகளுக்கு சுய பெருமிதம் இல்லை. அவர்கள் இங்குள்ள குழந்தைகளை பின் த�ொடர்ந்து செல்ல விரும்புகிறார்கள். ஆனால் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாவிட்டால் கூட சைவம் சார்ந்து ஒரு பெருமிதம் இருக்கிறது. ஒரு பத்தாம் வகுப்பு குழந்தைக்குச் சைவ சித்தாந்தத்தைப் பற்றி ஒரு அரைமணி நேரம் உரையாடமுடிகிறது. அது அவர்களுக்கு ஒரு சுய அடையாளத்தை அளிக்கிறது. நான் ஒன்றும் வேர் அற்றவனல்ல எனக்கும் ஒரு மரபிருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. 1960-70-80 களில் நவீனக் காலகட்டத்தில் உலக மனிதன் என்ற பெரிய கனவு இருந்தது. அவனுக்கு எந்த வேரும் கிடையாது. நாடும் கிடையாது. அதுபற்றி சுந்தர ராமசாமி தரப்பினரெல்லாம் பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்கள். ஒரு மார்க்சிஸ்ட் கற்பனை பண்ணக்கூடிய மனிதன் அவனே. தற்போதைய பின் நவீனத்துவக் (Post Modern) காலத்தில் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாது நவம்பர் 2019

9


என்பதே யதார்த்தம். பின் நவீனத்துவ மனிதனுக்கு அவன் யார் என்பது யூதர்களைப் ப�ோல, பல்வேறு இன மக்களுக்கு இருப்பதைப் ப�ோல ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. தமிழர்களுக்கு அந்த அடையாளத்தை ம�ொழி, மதம் அளிக்க முடியும். அந்த இரு வேர்களை இழந்தார்கள் என்றால் அடையாளமற்ற மனிதர்களாகி ப�ோவார்கள். பெரும்பாலும் வெறும் கன்ஸூமர்களாக, டெக்கீஸாக, கூகுளின் பயனராகவும், முக நூலின் உறுப்பினராகவும் மட்டும் மாறுவார்கள். அந்த அடையாளமின்மையே பெரும் மனச் ச�ோர்வை அளிக்கக்கூடும். ஆகவே தமிழ் அடையாளமாக இருந்தாக வேண்டும். இரண்டாவதாக, தமிழையும் சைவத்தையும் வைணவத்தையும் எல்லாம் பிரிக்க முடியாது. வெறும் சைவத்தை மட்டும் க�ொடுத்தீர்களென்றால் நாளடைவில் சைவம் வெறும் அடையாளமாகப் ப�ோகும். ஆகவே இது ஒரு கூட்டு மரபு தான். இன்று தமிழ் நாட்டிலும் தமிழ் படிங்க என்று தான் ச�ொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சிறு நகர் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களால் கூட தினத்தந்தி வாசிக்க முடியவில்லை. ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ்த்துறை ஆசிரியர் எழுதிய விடுப்பு கடிதத்தைக் காட்டினார். பல பிழைகள் இருந்தன. 10 நவம்பர் 2019

தமிழில் தற்கொலைக் கடிதங்கள் கூட பிரசுரமாகி இருக்கிறது. ஒருவருடைய ஆத்மாவைப் பிழிந்து வைக்கக்கூடிய கடிதங்கள் தப்புத் தப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு பேர் ஐ.ஏஎஸ். பலர் முக நூலில் இருக்கிறார்கள். ஏன் பலர் புகைப்படத்தை மட்டும் ப�ோடுகிறார்கள்? குரங்குப் படத்தைப் ப�ோட்டு, குற்றாலத்திற்குப் ப�ோன�ோம் குரங்கைப் பார்த்தோம் என்று நாலு வரி தமிழில் எழுதமுடியவில்லை. கேரளாவில் சராசரி மலையாளக் கல்வி தரமானதாக இருக்கிறது. த�ொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நடிகர்களும் அரசியல்வாதிகளும் பிழையின்றி தூய மலையாளத்தில் தெளிவாகப் பேசுவதைக் காணலாம். அப்படி தமிழில் பேச கூடிய பிரபல மனிதர்கள் உங்கள் நினைவுக்கு வருகிறதா? நீயா நானா? ப�ோன்ற நிகழ்ச்சிகளில் கல்லூரிகளிலிருந்து நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள�ோ ஐ மீன், டத் மீன்ஸ், ஆக்சுவலி என்றே பேசுகிறார்கள். இது மிகப் பெரிய வீழ்ச்சி. இதற்கு தீர்வுகள் பெரும் அமைப்புகள், அரசுகள் மட்டுமே க�ொடுக்க முடியும். தமிழ்க் கல்வி சுவாரஸ்யமாக, மதிப்பு மிக்கதாக உருவாக வேண்டும். த�ொடரும்...

www.Magazine.ValaiTamil.com


நல்ல தமிழில் எழுதுவ�ோம் -ஆரூர் பாஸ்கர், புள�ோரிடா, அமெரிக்கா.

குருவை மிஞ்சிய சீடன் யார்?

"நீங்கள்

பாலு மகேந்திராவுக்கு ரசிகரா? இரசிகரா? "எனத் தலைப்பிட்ட முந்தைய கட்டுரையில். தமிழில் ல,ள,ர,ற ப�ோன்ற எழுத்துகள் ச�ொல்லின் முதலில் வராது. அதனால் அவற்றை அ,இ,உ சேர்த்து எழுதவேண்டும். ரசிகர் என்பதை இரசிகர் என்றும், (இ)ராமன், (அ) ரங்கன், (இ)லங்கை என்றும் எழுத வேண்டும் எனப் பார்த்தோம். மேலும் ஆங்கில இலக்கணப்படி vowels எனும் A,E,I,O,U வில் த�ொடங்கும் ச�ொல்லின் முன்னால் (an) சேர்ப்பது மரபு. அதுப�ோல தமிழிலும் உயிர் எழுத்துக்களில் (அ முதல் ஔ) த�ொடங்கும் ச�ொல்லின் முன்னால் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க "ஒரு" என்றில்லாமல் "ஓர்" பயன்படுத்த வேண்டும் எனப் பார்த்தோம். சரி, இந்த மாதம் நீங்கள் "குருவை மிஞ்சிய சீடன் யார்?" என பலத்த ய�ோசனை செய்யத் தேவையில்லை. ஏனென்றால் அடிப்படையில் இந்தக் கேள்வியே பிழையானது. www.Magazine.ValaiTamil.com

தனக்கு மிஞ்சிதான் தானதர்மம் எனும் ச�ொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது மிச்சமிருப்பதே மிஞ்சியது. இன்று பலர் மிஞ்சிய , விஞ்சிய எனும் இரண்டு ச�ொற்களையும் சரியான பதத்தில் பயன்படுத்துவதில்லை. குருவை விடச் சிறந்த சீடன் யார் எனும் வினாவை "குருவை விஞ்சிய சீடன் யார்? "எனக் கேட்பதே சரி. "விஞ்சி" அதாவது மேல�ோங்கி நிற்பதை விஞ்சியது என்போம். அதுப�ோல "அவன் தனக்கு மிஞ்சிய வல்லமை படைத்தவன் மூவுலகிலும் இல்லை" எனக் க�ொக்கரித்தான் என எழுதுவதெல்லாம் பிழையானது. மாறாக "...விஞ்சிய வல்லமை உள்ளவன்.." என்பதே சரி. "கற்பில் விஞ்சிய பெருமை கண்ணகிக்கா மாதவிக்கா ? "எனும் பட்டிமன்றத் தலைப்புகளைக் கேள்விப்பட்டிருப்பீர்களே. அதாவது மிஞ்சியது- மீதமிருப்பது. விஞ்சியது- மேல�ோங்கியது. அதனால், குருவை விஞ்சிய சீடன், தந்தையை விஞ்சிய தனயன் எனப் பிழையின்றி எழுதுவ�ோம். பேசுவ�ோம். நவம்பர் 2019 11


விக்கிப்பீடியா விழா

நீச்சல்காரன், தமிழ்நாடு

சமூகத்தளங்களிலும், கணினி விளையாட்டுகளிலும் நேரத்தைச் செலவிடுவ�ோர் மத்தியில் இணையத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவ�ோர்கள் நாடும் முக்கிய இடம் விக்கிப்பீடியா ஆகும். இதில் படிப்பத�ோடு அல்லாமல் கற்றவற்றை எழுதி பங்களிக்கவும் முடியும். அனைவரும் எழுதக்கூடிய, இலவச இணையக் கலைக்களஞ்சியமாக உலகில் அதிகமாகப் பயன்படும் இணையத்தளங்களில் பத்தாவது இடத்திலுள்ளது விக்கிப்பீடியா. இதில் இணையவாசிகளே எழுதிக் க�ொண்டும், அதனைச் சரிபார்த்துக் க�ொண்டும், மேம்படுத்திக் க�ொண்டும் இருப்பதால் தன்னார்வலர்களால் தன்னிறைவான வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை என்று நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இது சர்வதேச அறிவு இயக்கமாகச் செயல்படுகிறது. தமிழ் உட்பட சுமார் முன்னூறு ம�ொழிகளில் விக்கிப்பீடியா செயல்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் இந்த விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு த�ொடங்கப்பட்டு, 12 நவம்பர் 2019

பதினாறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அதனைக் க�ொண்டாடும் விதமாக தமிழ் விக்கிப்பீடியா 16 வது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் அக்டோபர் 19 மற்றும் 20 நாட்களில் நடைபெற்றது. பத்தாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதனால் அடுத்த விழா இலங்கையில் நடத்த முடிவுசெய்யப்பட்டு, ப�ொறியாளர் சிவக�ோசரன், மயூரநாதன், சஞ்சீவி சிவக்குமார் உட்பட இலங்கைப் விக்கிப்பீடியர்களின் ஒ ரு ங் கி ணை ப் பி ல் தி ட ்ட மி டப்ப ட ்ட து . இதில் இருபதிற்கும் மேற்பட்ட விக்கிப்பீடியர்கள் இந்தியாவிலிருந்து கலந்து க�ொண்டனர். முதல் நாள்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா த�ொடர்பான அறிவிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்றன. விக்கிப்பீடியா கடந்து வந்த பாதைகள் குறித்து கி.மயூரநாதன் குறிப்பிடுகையில் த�ொடக்கத்தில் ஒன்றிரண்டு நபர்கள் க�ொண்டு வளர்ந்தாலும் www.Magazine.ValaiTamil.com


இன்று பலரது உழைப்பால் ஒரு லட்சத்து இருபத்து மூன்று ஆயிரம் கட்டுரைகள் அளவிற்கு வ ளர் ந் து ள்ளதை க் கு றி ப் பி ட ் டார் . வி க் கி ப் பீ டி ய ாவை ஒத்த திட்டமாகத் த �ொ ழி ற ்க லைக ள் ஆ வ ண ப்ப டு த் து ம் ஆவணகம் டாட் ஆக்(http://aavanaham. org) குறித்து பிரசாத்

ச�ொக்கலிங்கம் விளக்கினார். தமிழக அரசுடன் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் குறித்து முனைவர் மா.தமிழ்ப்பரிதி பேசினார் விக்கிப்பீடியாவில் படங்களைக் க�ொடையாகக் க�ொடுத்ததன் மூலம் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் குறித்த தனதனுபவத்தை ஏற்காடு இளங்கோ பகிர்ந்து க�ொண்டார். நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து இரவிசங்கர் அய்யாக்கண்ணுவும், நிகழ்படங்கள் குறித்து தகவலுழவனும், பதிப்புரிமை குறித்து த.சீனிவாசனும், த�ொழில்நுட்பம் குறித்து நீச்சல்காரனும் உரையாடினர். தமிழ் விக்கிப்பீடியா ப�ோன்ற தன்னார்வத் திட்டமான நூலகம் டாட் ஆர்க் (www. noolaham.org) அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு மின்னூலாக்கம் குறித்தும், தமிழ் ஆவணமாக்கம் குறித்து குலசிங்கம் ச�ோமராஜ் விளக்கினார். யாழ்நூலக எரிப்பிற்குப் பின்னர் தமிழ் நூல்களை மின்னூலாக்கிப் பாதுகாக்கும் www.Magazine.ValaiTamil.com

தேவை தமிழ்ச் சமூகத்திடம் இருந்தது, அந்தப் பணியைச் செம்மையாக நூலகம் அறக்கட்டளை செய்து வருவது குறிப்பிடத் தக்கது த�ொடர்ச்சியாக மாலை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமுடன் இணைந்து அறிவியல் கருத்தரங்கும் நடந்தது. நிகழ்வில் தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். வாழ்நாள் பேராசிரியர் ப.க�ோபாலகிருஷ்ண ஐயர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் த�ொடக்கவுரையாற்றினார். மூத்த தமிழ் விக்கிப்பீடியர் இ.மயூரநாதன் விக்கிப்பீடியா குறித்த அறிமுகவுரையை ஆற்றினார். தமிழ்ச் சங்கப் ப�ொருளாளர் தி.வேல்நம்பி நிறைவுரையாற்றினார். இதில் விக்கிப்பீடியாவில் நடந்த ப�ோட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் "அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஈழத்தவர்களின் பங்களிப்பு" எனும் தலைப்பில் நவம்பர் 2019 13


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தி.செல்வமன�ோகரன் நீண்ட சிறப்புரையாற்றினார். தேனுவரைப்பெருமாள் த�ொடங்கி அ. முத்துலிங்கம் வரை பாடநூல் ஆக்கம், பதிப்பியல், பத்திரிக்கை, அகராதியியல், வரலாற்றியல், ம�ொழி நடையியல், ம�ொழிபெயர்ப்பியல், கலைக்களஞ்சியம், கலையியல் என அனைத்துத் துறைகளிலும் உள்ள ஈழத்தமிழர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். கணினி யுகத்திலும் ஈழத்தமிழர்களின் விருபா. காம், நூலகம்.ஆர்க் ப�ோன்ற திட்டங்களையும் குறிப்பிட்டார். தமிழ் விக்கிப்பீடியாவைத் த�ொடங்கியவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயூரநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்து இலக்கிய பங்களிப்பு சிலநேரங்களில் பு றக ்க ணி க ்க ப்ப டு வ தை ச் சுட்டிக்காட்டினார். இரண்டாம் நாள் நிகழ்வுகளாக கலாச்சாரச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்து வரலாற்று இடங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சென்றுவந்தனர்.

14 நவம்பர் 2019

சங்கிலியன் சிலை, நல்லூர் கந்தசுவாமி க�ோவில், டச்சு கால மந்திரி மனை, நவுலேஸ்வரம் க�ோவில்கீரிமலை கடற்கரை, யாழ் நூலகம் மற்றும் ப�ோர்க் காலச்சுவடுகள் ப�ோன்றவை குறிப்பிடத்தக்க இடங்களாகும். பிற்பகலில் நடந்த கலந்துரையாடலில் வேங்கைத் திட்டம், பெண்கள் பங்களிப்பு, புதுப் பயனர்கள் ஈர்க்கும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்திய ம�ொழிகளுக்கிடையே நடக்கும் கட்டுரைப் ப�ோட்டியான வேங்கைத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற உறுதிபூண்டனர். இதில் தலைப்புகளில் ஒவ்வொரு ம�ொழியினரும் அதிகபட்சக் கட்டுரைகள் எழுதவேண்டும். அக்டோபர் மாதம்வரை ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் தமிழ் விக்கிப்பீடியா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுப் பயனர்களுக்குப் பயிற்சியளிக்கவும், விக்கிப்பீடியாவை அனைவருக்கும் க�ொண்டு செல்லவும் க�ொள்கை முடிவுசெய்யப்பட்டது.

www.Magazine.ValaiTamil.com


தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க உழைத்துவரும் "ச�ோலைவனம்" அமைப்புடன் ஓர் நேர்காணல்

தமிழ்

நாட்டில் சமீப காலமாக இயற்கைப் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட்டுக் க�ொண்டிருக்கும் அமைப்பு ச�ோலைவனம். அந்த அமைப்பின் நிறுவனர்கள் இளவரசன் மற்றும் ஸ்ரீதர் க�ோபாலன் ஆகிய�ோருடன் ஒரு நேர்காணல். இளவரசன் தமிழ்நாட்டில் அரியலூரைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து க�ொண்டே இந்த சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீதர் க�ோபாலன் 15

நவம்பர் 2019

இரமா ஆறுமுகம்,

டெலவேர்,அமெரிக்கா

சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தகவல் த�ொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறார்.

இரமா: வணக்கம் இளவரசன் மற்றும் ஸ்ரீதர். தமிழ்நாட்டில் ச�ோலைவனம் அமைப்பு எப்பொழுது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூற முடியுமா?

இளவரசன்: வணக்கம் இரமா. நான் என்னுடைய நண்பர்கள் திருநெல்வேலி யைச் சேர்ந்த முருகு பூவலிங்க பாண்டியன், திருச்சியைச் சேர்ந்த முனைவர் சக்திவேல், ஈர�ோட்டைச் சேர்ந்த முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர் க�ோபாலன் ஆகிய�ோர் சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ச�ோலைவனம் அமைப்பைத் த�ொடங்கின�ோம். தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் தமிழகத்தில் வளரக்கூடிய www.Magazine.ValaiTamil.com


அனைத்துச் செலவினங்களையும் சேர்த்து பன்னிரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. இதுவரை இந்தத் திட்டத்தைப் பதினாறு கிராமங்களில் நிறைவேற்றியிருக்கிற�ோம். இதைத் த�ொடர்ந்து செயல்படுத்திக் க�ொண்டிருக்கிற�ோம்.

வேம்பு, புங்கை, மகிழம், செண்பகம், மந்தாரை, அத்தி, இலுப்பை ப�ோன்ற பல்வேறு வகையான நாட்டு மரங்களைப் பாதுகாக்கும் ந�ோக்குடன் இந்த அமைப்பை ஆரம்பித்தோம். எங்கள் அமைப்பில் தற்போது 600 தன்னார்வலர்கள் இருக்கின்றனர்.

இரமா: மிகவும் சிறப்பான முயற்சி இளவரசன். நம் தலைமுறை மற்றும் அடுத்து வரும் தலைமுறையினர் நலனுக்கு மிகவும் அவசியமான ஒரு முயற்சி. உங்கள் அமைப்பின் மூலம் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துகிறீர்கள் என்று ச�ொல்ல முடியுமா ஸ்ரீதர்? ஸ்ரீதர்:

வணக்கம் இரமா இயற்கையைப் பாதுகாப்பதற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிற�ோம். முதலாவதாகச் ச�ோலைவனத்தின் முக்கியத் திட்டமான "மாதம் ஒரு கிராமம் திட்டம்". இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து 500 நாட்டு மரக் கன்றுகளை எங்கள் பண்ணைகளில் வளர்த்து நடுகிற�ோம். எங்களுக்குத் திருநெல்வேலி, கும்பக�ோணம், சேலம் மற்றும் அரியலூரில் நேரடி நாற்றுப் பண்ணைகள் உள்ளன. மரக்கன்றுகளுக்கான செலவு பத்தாயிரம் ரூபாய். ப�ோக்குவரத்து மற்றும் www.Magazine.ValaiTamil.com

இரமா: அருமை ஸ்ரீதர். நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு நாற்றுகளை வளர்த்துக் க�ொடுக்கிறீர்களே இதனால் பயன் பெறுவ�ோர் சரியாகப் பராமரிக்கிறார்களா என்று கண்காணிப்பீர்களா? இளவரசன்: நாங்கள் நாற்றுகள் க�ொடுக்கும் ப�ோதே எளிதில் பட்டுப் ப�ோகாமல் இருக்கக் குறைந்தது மூன்றடி உயரம் வரை வளர்த்துக் க�ொடுக்கிற�ோம். அதன் பிறகு ஆறு மாதத்திற்கொருமுறை நாற்றுகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கிற�ோம்.

இரமா: நன்றி இளவரசன். மரக் கன்றுகளைத் த�ொடர்ந்து கண்காணித்தல் மிகவும் அவசியமான ஒன்று. ச�ோலை வனத்தின் மற்ற திட்டங்களைப் பற்றிக் கூறுங்கள்.

இளவரசன்: "விதை சேகரிப்புத் திட்டம்". இந்தத் திட்டத்தில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் காடுகளுக்குள் சென்று மரங்களின் இலைகள், பட்டைகள், மரத்திற்குக் கீழே கிடக்கும் விதைகள் இவற்றை எடுத்து ஒவ்வொரு மரத்திற்குரியனவையைத் தனித் தனியாகக் கட்டி எடுத்து வந்து விடுவார்கள். இவர்களை "விதை ப�ொறுக்கிகள்" என்று அழைக்கிற�ோம். அத்துடன் மரங்களின் இடத்தையும் உலகளாவிய ப�ொருத்துதல் அமைப்பின் (GPS) மூலம் பதிவு செய்து விடுவார்கள். விதை ப�ொறுக்கிகள் க�ொண்டு வரும்

நவம்பர் 2019 16


மரம் சம்பந்தப்பட்ட ப�ொருட்களை வைத்து மரம் பழனிச்சாமி ஐயா ப�ோன்றவர்கள் ஆய்வு செய்து என்ன மரத்தின் விதை என்பதைக் கண்டறிந்து கூறுவார்கள். இது ப�ோல ஏறத்தாழ 12 லட்சம் விதைகளைச் சேகரித்து வைத்திருக்கிற�ோம். எங்களிடம் தற்போது 51 வகை நாட்டு மரங்களின் விதைகள் உள்ளன. எந்த மரங்கள் எந்த மாதத்தில் விதைகள் தருகின்றன, எந்த இடத்தில் இருக்கின்றன என்ற தகவலைச் சேகரித்து வைத்திருக்கிற�ோம். இவ்வாறு கிடைக்கும் விதைகளை வைத்து பண்ணைகளில் மரக் கன்றுகளை வளர்த்துக் க�ொடுக்கிற�ோம். இரமா: கச்சிறந்த திட்டம் இளவரசன். நல்ல வீரியமான விதைகள் இருந்தால் தான் நல்ல மரக் கன்றுகளை உருவாக்க முடியும். நாட்டு மரங்கள் தமிழர் வாழ்வியல�ோடு பின்னிப் பிணைந்தவை. உங்களின் இந்த முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் கடன் பட்டிருக்கிறது. அடுத்த திட்டத்தைப் பற்றி நீங்கள் கூறுங்கள் ஸ்ரீதர். ஸ்ரீதர்:

அடுத்ததாக, "ஒரு குடும்பம் மூன்று மரங்கள்" திட்டம். இந்த திட்டத்தை இரண்டு கட்டங்களாகச் செயல் படுத்துகிற�ோம் முதல் கட்டமாக, ஒரு தென்னை மரம் ஒரு பழ மரம் மற்றும் ஒரு நாட்டு மரம் ஆக ம�ொத்தம் 3 மரங்களை நேரடியாக வளர்த்தோ, குறைந்த விலையில் வாங்கிய�ோ கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராமத்தினருக்குக் க�ொடுத்தோம். எங்கள் ந�ோக்கம் முதலில் நாட்டு மரக் கன்றுகளை வளர்த்துக் க�ொடுத்துப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வழிவகுத்து இயற்கையைப் பாதுகாப்பதே.ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் கிட்டத்தட்ட 1 க�ோடி தென்னை மரங்கள் www.Magazine.ValaiTamil.com

அழிந்து ப�ோயின. பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி தென்னை விவசாயிகள் பலருக்குத் தென்னை வளர்ப்பைத் தவிர வேறு த�ொழில் தெரியாது. அப்போது தான் வலைத்தமிழ் மூலம் அமெரிக்காவில் டெலவர் மாநிலத்தில் சேரிட்டி க்ராஸிங் (Charity Crossing) என்ற தன்னார்வல அமைப்பை நிறுவி நடத்தி வரும் ஜெயக்குமார் முத்துக் காமாட்சியின் த�ொடர்பு கிடைத்தது. அவர் க�ொடுத்த ய�ோசனையின் பேரில் தென்னை, மா ஆகிய 2 வருமானம் தரும் மரங்கள் மற்றும் இயற்கை வளம் தரும்1 நாட்டு மரத்தை வழங்கின�ோம். இந்த மூன்று மரக் கன்றுகளைக் க�ொடுப்பதற்கு ப�ோக்குவரத்து செலவு உட்பட எங்களுக்கு நூற்றியம்பது ரூபாய் செலவானது.இந்தத் திட்டத்தைச் சேரிட்டி க்ராஸிங், ச�ோலை வனம் உள்ளிட்ட 18 இந்திய மற்றும் அமெரிக்க அமைப்புகள் இணைந்து "நலம் நல்கும் நண்பர்கள்" என்ற பெயரில் கள்ளிமேடு, அவரிக்காடு, செம் ப ோ டை , நாக கு டி ய ான் , தாமரைக்குளம் மற்றும் நாலுவேதபதி என்ற ஆறு கிராமங்களைத் தத்தெடுத்து ஏறத்தாழ 29,880 மரக் கன்றுகளை வழங்கிச் செயல்படுத்தியுள்ளோம் இதில் இரண்டாவது கட்டமாக, தென்னை, மா மற்றும�ொரு பழ மரம் உள்ளிட்ட மூன்று மரக் கன்றுகளைக் க�ொடுத்துக் க�ொண்டிருக்கிற�ோம். இதற்கு நூற்றியெழுபது ரூபாய் செலவாகிறது. இதையும் நலம் நல்கும் நண்பர்கள் மூலம் செயல்படுத்திக் க�ொண்டிருக்கிற�ோம்

இரமா: நன்றி. மிகவும் அருமையான முயற்சி. நலம் நல்கும் நண்பர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. அமெரிக்கத்

நவம்பர் 2019 17


தமிழர்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் மேம்படுத்த ச�ோலைவனத்துடன் இணைந்து த�ொண்டாற்றுவது மிகவும் சிறப்பு. மற்ற திட்டங்களைப் பற்றிச் ச�ொல்லுங்கள்.

இளவரசன்: கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றுவதற்காக அமெரிக்காவில் உள்ள மிசெளரி தமிழ்ச் சங்கத்தினர் எங்களை அணுகினர். அவர்கள் உதவியுடன் பத்து மரம் அறுக்கும் கருவிகளை வாங்கி பாதிக்கப்பட்ட கிராமங்களில் பயன்படுத்தி விழுந்த மரங்களை அகற்றின�ோம். அதன் பிறகு புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக "ஒரு குடும்பம் 5 மரக்கன்றுகள் திட்டம்" மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் 2 தென்னை, 1 மா, 1 பலா மற்றும் ஒரு நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதை வழங்குவதற்குப் ப�ோக்குவரத்து செலவு உட்பட இருநூறு ரூபாய் செலவாகியது. இந்தத் திட்டத்தைப் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எடமேலையூர் கிராமத்தில், மிசெளரி 18 நவம்பர் 2019

த மி ழ ்ச்ச ங ்க த் தி ன் உ த வி யு டன் நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் 700 குடும்பங்கள் ப ய ன ்பெ ற் று ள்ளன . இந்தத் திட்டத்தின் மூலம் ம�ொத்தமாக நான்கு கிராமங்களில் 2250 குடும்பங்களுக்கு 3 மரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீதர்:

அடுத்ததாக "ஏரி தூர்வாரும் திட்டம்". ஆஸ்திரேலியாவில் உள்ள அறம், அமெரிக்காவில் உள்ள நம்பிக்கை விழுதுகள் மற்றும் வேர்கள் அமைப்புகளின் உதவியுடன் அரியலூர் மாவட்டம் ப�ொய்யாதநல்லூரில் உள்ள பெரிய ஏரியை ஐந்து லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரியிருக்கிற�ோம். இதன் மூலம் ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றிருக்கிறார்கள் மற்றும் மூவாயிரம் கிராம் மக்களுக்குக் குடிநீர் வசதி கிடைத்துள்ளது. இதைத் தவிர "பசுமைப் பிறந்தநாள் திட்டம்" என்ற திட்டத்தை அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் மகேந்திரன் www.Magazine.ValaiTamil.com


பெரியசாமி அவர்களின் உதவியுடன் செயல்படுத்திக் க�ொண்டிருக்கிற�ோம். சமூக ஊடகங்கள் வழியாகவும், மற்ற வழிகளிலும், பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பலருடைய உறுதுணையுடன் பல்வேறு பிறந்த நாள், திருமண நாள் க�ொண்டாட்டங்களை #Gift2Earth (#பூமிக்குப்பரிசு) என்னும் tag மூலம் ‘ஓராண்டு இலட்சியம் ஒரு இலட்ச மரங்கள்’ என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், காவல் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருக்கும் உபரி இடங்களில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் என முடிந்த இடங்களில் எல்லாம் அங்கிருக்கும் ஆசிரியர், அலுவலர்கள், மாணவ மாணவியர் மற்றும் அதிகாரிகளையே பராமரிக்கச் செய்து, அவர்களிடம் நீண்ட கால ஒப்புதல் வாங்கி, பல இடங்களில் அடர் வனங்களை ஏற்படுத்தும் ந�ோக்கில் பல்லாயிரக்கணக்கான மரச்செடிகளை, மர விதைகளை நட்டு இலக்கை அடைவதில் தீவிரம் காட்டி செயல்படுத்திக் க�ொண்டிருக்கிற�ோம். இந்தத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் செலவில் ஐநூறுக்கும் மேலான மரக்கன்றுகள் நடுகிற�ோம். நண்பர் மகேந்திரன் பெரியசாமியின் பிறந்த நாள் 6-ஜூன் அன்றுதான் இந்த பூமிக்குப் பரிசளித்துக் க�ொண்டாடும் பசுமை பிறந்த நாள் திட்டம் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இந்தத் திட்டத்தில் பன்னிரண்டாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதம் அமெரிக்க வாழ் தமிழ் நண்பர்கள் மூலம் தான் நிறைவேற்றியிருக்கிற�ோம். இரமா: மிகவும் சீரிய பணி. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் www.Magazine.ValaiTamil.com

உதவியுடன் நீங்கள் செய்யும் பணி மலைக்க வைக்கிறது. இதைத் தவிர கடந்த செப்டம்பர் மாதம், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் 25 லட்சம் பனை விதைகளை விதைத்து உலக சாதனை படைத்திருக்கிறீர்கள். அது குறித்து க�ொஞ்சம் ச�ொல்லுங்களேன். இளவரசன்: நாங்கள் "4 க�ோடி மரம் வளர்ப்புத் திட்டம்" என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிற�ோம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக "எல்லையில்லா பனை விதைப்புத் திட்டம்" என்ற திட்டத்தின் மூலம், இந்த வருடம் செப்டம்பர் 22ம் தேதி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் 25 லட்சம் பனை விதைகளை நட்டோம். இதற்காக ஒரு மாத காலம் பல்வேறு விதங்களில் பனை விதைகளைச் சேகரித்தோம். ச�ோலைவனம் மட்டுமே இதற்காக அரியலூர் மாவட்டத்தில் ஒன்பது லட்சம் பனை விதைகளை நட்டுள்ளது. இதற்காகச் ச�ோலைவனத்துடன் இணைந்து செயல்பட்ட அன்புடன் அறம் செய், ஈர�ோடு சிறகுகள், ஓர் உலகம் ஓர் குடும்பம் அமைப்பு (One world one family) மற்றும் மாரல் வளங்கள் மற்றும் ஆய்வு அறக்கட்டளை (Moral Resources and Research Foundation) ஆகிய 5 அமைப்புகளுக்குத் தமிழ் நாட்டில் அதிகமான மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் பனை விதைகளை நட்டதற்காக எங்களுக்கு அக்டோபர் 20ம் தேதி சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த 25 லட்சம் பனை விதைப்பையும் சேர்த்து நான்கு க�ோடி இலக்கில் இது வரை கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் செப்டம்பர் 22ல் ஆரம்பித்து அப்துல் கலாம் ஐயா பிறந்த நாளான நவம்பர் 2019 19


அக்டோபர் 15 வரை 25 லட்சம் பனை இயற்கையைப் பேணிக் காப்பது விதைப்பையும் சேர்த்து நாற்பது லட்சம் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மரக்கன்றுகளை நட்டிருக்கிற�ோம். நம்மால் இதில் நேரடியாக ஈடுபட முடியாவிட்டால் ச�ோலைவனம் இரமா: மிகவும் அருமையான முன்னெடுப்பு. ப�ோன்ற அமைப்புகளுக்கு உதவி பனை மரம் ப�ோலப் பயன் தரும் மரங்களை செய்தோ இணைந்து பணிபுரிந்தோ தமிழகம் முழுவதும் நட்டு மக்கள் பயன்படுத்த இயற்கையைப் பேணிக் காப்பது ஆரம்பித்துப் பனைப் ப�ொருட்களை நன்கு வருங்கால சந்ததியினருக்குப் பெரும் சந்தைப் படுத்தினால் நம் மக்களின் உடல் நன்மை பயக்கும். நலம் மற்றும் வாழ்வாதாரம் பெருகும். உலகத் தமிழர் உதவியுடன் ச�ோலைவனம் மேலும் ச�ோலைவனம் த�ொடர்பு எண்கள்: பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்த இளவரசன்: +91 6369704673, வாழ்த்துகள். நன்றி இளவரசன் மற்றும் ஸ்ரீதர் க�ோபாலன்: +91 9962 554 594 ஸ்ரீதர்.

கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூட�ோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றது., அக்கட்சியின் சார்பாக ப�ோட்டியிட்ட

கேரி ஆனந்தசங்கரியும் வென்றுள்ளார். 20 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


வாசகர் கருத்து... வணக்கம், தங்களின் அக்டோபர் வலைத்தமிழ் இணைய இதழைப் பார்த்தேன். அத்தனையும் வெகு சிறப்பு. தங்களின் தமிழ்ச்சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஆசிரியர் குழுவிற்கு

எனது

இனிய

வாழ்த்துகள்.

த�ொடர்ந்து

தங்களது

இமயமென உயர்ந்தோங்கட்டும்.

தமிழ்ப்பணி நன்றி. அன்பன்,

கா.ந.கல்யாணசுந்தரம் மேடவாக்கம் ,சென்னை.

வணக்கம் நண்பர்களே வலைத்தமிழ்-

செப்டம்பர்-

அக்டோபர்-

2019

ஆகிய

இரு

இதழ்

வாசிக்கும்

வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. வெளிநாட்டு வாழ்தமிழர்கள் நிலைமை, அவர்களின் இலக்கிய வேட்கை, தகவல்கள், சிறுகதைகள், த�ொடர்கட்டுரை, சமையல் பகுதி, இன்னும் பல்வேறு சுவையான அம்சங்களுடன் இதழ் சிறப்புற தயாரித்து வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள். த�ொடர்ந்து வாசிக்க... நண்பன் ந க துறைவன், வேலூர் இம்மாத இதழ் குறித்த உங்கள் கருத்துகள்

வாசகர் கருத்து பகுதியில்

இடம்பெற எங்களுக்கு எழுதுங்கள்:

Magazine@ValaiTamil.com www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 21


22

நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


விடை தெரியாமல்..

குறுந்தொகையின் தாக்கத்தில் விளைந்த கவிதை. எந்தத் திணையில் வரும் என்று தெரியாது ஆனால் இது காதலில் த�ோல்வியுற்றோரின் "துன்பத்தினை" சேரும் என்று நம்புகிறேன். இது "காலா" காலத்துக் காதல் கதை. வாசித்து அனுபவியுங்கள் அந்த காதல் ஜ�ோடியின் ச�ோகத்தை...

கவிதை

எப்படி இருப்பாள�ோ வந்தவளும் பார்ப்பாள�ோ வந்து அவளும் பார்ப்பாள�ோ வருத்தமாய் இருப்பாள�ோ வார்த்தையால் வதைப்பாள�ோ கேள்விகள் கேட்பாள�ோ வாள்விழியால் துளைப்பாள�ோ க�ோபமாய் க�ொதிப்பாள�ோ ச�ோகமாய் இருப்பாள�ோ... சாதியின் சவக்கிடங்கில் சவமான காதல் கதை வீதியில் வெட்டிச் சரிந்து ரத்தம் சிந்திய சரித்திரம் இனமென்னும் ஈனத்திற்கு பிணமான அன்பின் வரலாறு இன்றும் பசுமரத்தாணியாய் தன்னுள் புதைந்து ப�ோன அந்த நாள்...

நிமிர்ந்து நிற்கும் நிலவும் தலைகுனிந்து நகர்ந்தது தழுவிச் செல்லும் தென்றலும் நழுவிச் சாலைய�ோரம் சென்றது கூவித்திரிந்த குயில்களும் www.Magazine.ValaiTamil.com

கூணிக் குறுகி குரலடைத்து நின்றது ஆடித்திரிந்த மயில்களும் ஓடி ஓரமாய் ஒதுங்கியது வானத்து நட்சத்திரங்கள் வழக்கத்திற்கு மாறாக வெள்ளியை உமிழ்ந்திட வள்ளியவள் வந்தாள் வாசலில் பள்ளி க�ொண்டாள் இதயத்தில் துள்ளி விளையாடும் இதழ்கள் ச�ொல்லி கதை பேசும் விழிகள் தேவதையாய் தேரில் வந்து கதவில்லாக் கருவறையில் நிரந்தமாய் குடிபுகுந்தாள் இரு உயிர் சுமந்தும் இறகாக உணர்ந்தான் சிறகடித்துப் பறந்தான் மடியில் தலை வைத்து க�ொடியின் இடை வளைத்து வடிவை கண் ரசிக்க முடிவை மனம் நினைக்க ந�ொடியாய் பறந்தன நாட்கள் இரவு பகல் மாறாமல் இடைமறிப்போர் பாராமல் இன்பமென்னும் பெருங்கடலில் தினம் முங்கி முத்தெடுத்து மனம் மகிழ்வில் திழைத்திட மணம் புரியத் துணிந்து சம்மதம் வேண்டிட மதம் க�ொண்ட ஓநாய்கள் மதமென்ற ப�ோர்வையில் வதம் செய்ய முயன்றிட குணம் கெட்ட உறவுகள் இனம் என்னும் பெயரால் பிணமாவாயென பயமூட்டி ரணம் செய்தது காதலை

நவம்பர் 2019 23


உளியால் செதுக்கியே உயர்வாய் நிறுத்திட உருவான சிற்பமும் சிதையாய் சிதைந்திட அசைந்தால் ப�ோதுமே வலியால் செதுக்கியே நெஞ்சினில் நிறுத்திட நிறைந்த நினைவுகள் சதைகள் அழிந்திட சிதையாய் ப�ோயினும் கதைகள் பேசியே வதையாய் வதைக்குமே உண்மைக் காதலை உலகுக்கு உணர்த்திட உறவுக்கு இணங்கியே உயிரற்ற உடல் இரண்டு ஊர் கூடி வாழ்த்திட திசைக்கு ஒன்றாய் பிரிந்து திருமணம் என்ற பெயரில் வேறு கூடு ப�ோய் சேர்ந்தது ஊரும் மறந்து ப�ோனது

காலங்கள் கழிந்தது இளமையும் த�ொலைந்தது முதுமையும் அழைத்தது முகம் காணா தேசத்தில் முகமூடி வாழ்க்கையில் முகம் மாறித் திரிகையில் முகநூலில் முளைத்தது முள்ளில்லா மலராக ச�ொல்லில்லா மடலாக நண்பராக இணைய அழைப்பு

நிரந்தரமாய் பச்சைகுத்தினாலும் நிறம் மாறிப் ப�ோகுமே நரம்புகளில் பச்சைகுத்தி நாளங்களில் சுற்றி வரும் நட்பன்றோ இருவருக்கும் வலைத்தளத்தில் வந்தாலும் விலையில்லா அழைப்பன்றோ பிழையாக இருந்தாலும்

24 நவம்பர் 2019

நிலையான நட்பானது\ வருடங்கள் பல கடந்து உருவங்கள் மாறினாலும் உள்ளத்தில் உறங்குகின்ற உயிருக்கு வயதேது சிந்திய கண்ணீரும் சிந்தித்த எண்ணமும் மாசு மலையாக குவிந்து மனதில் புதைந்த சிலையை தூசு தட்டி எடுத்து பாழடைந்த க�ோவிலை தாழ் திறந்து புதுப்பித்து அருள்மிகு உருவாகி கருவறையில் தெய்வமானாள் பிறந்த மண்ணிற்கு இறந்த காலம் காண திறந்த மனத�ோடு பிரிந்த உறவுகள் தேடி திரிந்து அலைகிறான் த�ொலைந்த நாட்களை த�ொலைத்த உறவுகளை த�ொலைத்த இடத்தில் தேடித் திரிகிறான்

முகவரி தெரிந்தும் முகம் காண முடியாமல் மனம் ஏன�ோ தவிக்க தினம் செத்துப் பிழைக்க இனம் என்ற ச�ொல்லை சினம் க�ொண்டு சபித்து பிணமாக நடந்து திரிகிறான் பார்ப்பாள�ோ மாட்டாள�ோ விடை தெரியாமல்...!!!! #வாஞ்சிவரிகள்#

வாஞ்சி க�ோவிந்த், டெக்சாஸ், அமெரிக்கா www.Magazine.ValaiTamil.com


இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர் -இலக்கியன்

உலகின் அதிக மக்கள்தொகையும், மனித வளமும்,

வரலாற்றுத் த�ொடர்புகளும், கலாச்சார நெருக்கமும் உள்ள இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர். இந்தச் சந்திப்பு, இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவும், இருநாட்டு உறவை அடுத்த நிலைக்குக் க�ொண்டுசெல்ல உதவுவதாகவும் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்திர ம�ோதி அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டில் கலந்துக�ொண்டது தமிழகத்தின் கலாச்சாரத்தைப் ப�ோற்றுவதாக அமைந்தது. உலகெங்கும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் சந்திப்பது தமிழகத்தின் பாரம்பரியம், ம�ொழி, உடை, கலாச்சாரம் ஆகியவற்றை உலகம் அறிந்துக�ொள்ள வாய்ப்பாக அமையும். மேலும் மகாபலிபுரம் ந�ோக்கிய வெளிநாட்டினர் வருகை அதிகரிக்கும் என்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெரும் என்றும் நம்பப்படுகிறது. சீன அதிபரை வரவேற்க பிரதமரின் கீச்சுகள் (Tweets) பெரும்பாலும் தமிழில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து ம�ொழிகளுக்கும் உரிய முக்கியத்துவமும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் பலம் என்ற வகையில், பிரதமரின் இந்த நடைமுறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதைய�ொட்டி பிரதமர் அந்தந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்த மாநில மக்களின் ம�ொழி, உடை, கலாச்சா ரத்தைப் பின்பற்றுவது, இந்தியாவின் அனைத்து தனித்தன்மைகளும் பேணிப் பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019

25


அழகான மகாபலிபுரத்தின் புகைப்படங்களைக் காண:

http://www.valaitamil.com/tamilnadu-mahabalipuram-photopg257-302-1

26 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


குளத்தூர் க�ொடுத்த குன்றா விளக்கு -"மாயூரம் வேதநாயகம் பிள்ளை" -சி.கலையரசி

மிச்சிகன், அமெரிக்கா

(அக்டோபர்

11 மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தின நினைவுக் கட்டுரை)

"தமிழில் உரைநடை நூல்கள் இல்லை எனும் குறையை நீக்கும் ந�ோக்கத்துடனும், நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் என ஏற்கெனவே வெளிவந்துள்ள எனது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறநெறிக் க�ொள்கைகளுக்கு உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்" என்ற முன்னுரையுடன் தமிழின் முதல் புதினத்தை (நாவல்) எழுதிய பெருமை ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ அவர்களையேச் சாரும். அவர் 1826ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திருச்சி குளத்தூரில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆர�ோக்கிய மேரி அம்மையார். அவர் தனது த�ொடக்கக் கல்வியைத் தந்தை சவரி முத்துப்பிள்ளையிடமும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையைத் தியாகராச பிள்ளையிடமும் பெற்றார். www.Magazine.ValaiTamil.com

படித்து முடித்து நீதிமன்றங்களில் பதிவாளராகவும் ம�ொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பிறகு சுமார் 13 ஆண்டு காலம் தரங்கம்பாடி நகராட்சி அதிகாரியாகப் பணியாற்றியதால் இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.. நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ம�ொழிபெயர்த்த பெருமையும் இவரையே சேரும். கி பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் இருந்த சதர்ன் க�ோர்ட் தீர்ப்புகளைத் தமிழில் ம�ொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக 1862ல் வெளியிட்டார். பிறகு 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். சட்ட நுணுக்கங்களைப் பற்றித் தமிழிலே வெளிவந்த ஆதி நூல்கள் இவை. இப்படிப்பட்ட சட்ட நூல்கள் அதற்கு முன்பு வெளிவந்ததுமில்லை; அதற்குப் பிறகு வெளிவரவுமில்லை. இவருடைய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பதே தமிழின் முதல் நாவல் ஆகும். அது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் க�ொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப

முதலியார்

என்பவனைக்

நவம்பர் 2019 27


கதாநாயகனாகக் க�ொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றும் எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்கக் கூடியதாகவும் புரிந்துக�ொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்பதே இந்த நாவலுக்குக் கிடைத்த வெற்றி. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற அனுபவத்தை படிப்பது ப�ோன்ற உணர்வு த�ொடர்ந்து க�ொண்டே இருக்கும் . அதுப�ோலத் தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்தத்தின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் க�ொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் த�ொடர்பைப் பற்றி ஆல�ோசிக்கவும் பிரதாப

தமிழ்

முதலியார் சரித்திரம் ஓர் ஆவணமாகிறது. இதில் அறநெறி த�ொடர்பான கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல ம�ொழிகளுக்கும் ம�ொழிபெயர்க்கப்பட்டுள்ளது.அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. சிறந்த வீணை இசைக் கலைஞரான பிள்ளை அவர்கள் 16 புத்தகங்களை எழுதியிருக்கிறார். வெண்மதி மாலை, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி, சர்வ சமயக் கீர்த்தனை, சுகுணசுந்தரி, சத்திய வேத கீர்த்தனை, ப�ொம்மைக் கல்யாணம், பெரியநாயகியம்மன் ப�ோன்ற நூல்கள், நாவல்கள், கீர்த்தனைகள் மற்றும் பல தனிப்பாடல்களை எழுதித் தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். 19ஆம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர், ம�ொழிபெயர்ப்பாளராக வலம் வந்திருக்கிறார். இறுதியாக 1889ம் ஆண்டு சுகுண சுந்திரி என்ற புதினத்தையும் எழுதியிருக்கிறார். அந்த ஆண்டே ஜூலை மாதம் 21ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவர் வடித்த புத்தகத்தால் நம் அகத்தில் என்றும் நிலைத்திருப்பார்.

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய தலைநகர் கன்பரா உள்ளிட்ட ACT பிராந்தியத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புப் பாடமாக தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்டவற்றில் 12ம் வகுப்பில் தமிழைப் பாடமாக எடுக்கமுடியும் நிலையில், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தமிழைக் க�ொண்டுசேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 28 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


நீச்சல்காரன்

்ச டைச கி ல ்ன ழடியி தி என கீ த் வர்: ப் ப ? ை ண க ள றமா க கி டு க் த�ோ நினை : டிசைன்

ஆள்மாறாட்டம் செய்து பைனான்ஸ் க ம்பெனிக்காரர் எங்களை ஏமாத் திவிட்டார்."

"மக்களே! நான் மன்னரில்லை, மன்னரின் சக�ோதரன் "

வி னு மனை ல்லை யி றேன் சரி க்கி னை நி

: ரியர் மீண்டும் சி ஆ டு ஷ்டப்பட் மாதிரி ? க ா ஜ் ந்த விய யுவரா க்கு வ ணு ண் டீமு ாஸ்ப ப ம்ளே ரி சு ர்: கு மாதி படிச் ணவ

"நீங்க சிங்கரா எந்தப் படத்தில?"

மா

டு ப�ோன நீங்க விட் னா ல் ஆ யி வேலையை பெ நான் ? வேலையை ்களா வீங டு வி

"அட நான் டிக்டாக் சிங்கர்"

www.Magazine.ValaiTamil.com

"மன்னரே!

கை

"என க்கு ்னா லுக் து கி வி ம�ோ ட் டுப் திரம் பார்த்தால் இல "ஆம ்லை ாம் எவ்வளவ�ோ யா?" முய ற்சி தப்பி பண்ணி கழட்ட ச்சுடு யும் ட்டா ரு"

நவம்பர் 2019 29


சினிமா

நடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.

30 அக்டோபர் 2019

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி அவர்களுக்கு வாழ்த்துகள். அழகப்பா பல்கலைக் கழகத்தில் இவர் M. Phil., பட்டம் பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா விழாவில் சால்ஸ்டனில் 2011-ல் கலந்துக�ொண்டு சிறப்பித்தவர். 800 படங்களில் நடித்தபின் ஒதுங்கிவிடாமல், தன் 60 வயதில், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்ற சார்லி உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் ‘தவசி, ‘எல்லாம் அவன் செயல்’

உள்ளிட்ட படங்களில் நடித்த

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...! www.Magazine.ValaiTamil.com


அசுரன் -திரை விமர்சனம் -கீதா ரவிச்சந்திரன், சிங்கப்பூர்

அசுரன் அருமையான படம். நிறைவான கதாபாத்திரங்கள். அட்டகாசமான

திறமைகளின்

வெளிப்பாடு.

மிரட்டும்

ஒளிப்பதிவு, மனதை படக், படக் என அடித்து க�ொண்டே வைத்திருக்கும் இயக்கம்.

இசை.

சிந்திக்க

ஆழமான

வைக்கும்

திரைக்கதை

கருத்து.

ரசிக்க

மற்றும்

தூண்டும்

வசனம். இப்படத்தில்

ஒரு

தந்தையாக

தனுஷ்

மின்னுகிறார்.

தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். வெற்றிமாறன் அவரை அழகாக

உருமாற்றுகிறார்,

உருவாக்குகிறார்,

உயிர்

க�ொடுக்கிறார். அவரின் கைகளில் வளைந்து, நெளிந்து ஒத்துழைப்பு

க�ொடுத்து

அழகான

வடிவம்

பெறுகிறார்

தனுஷ். தன் பிள்ளைகளின் நலனுக்காக எப்படித் தான் கட்டிக் காத்த சூடு, ச�ொரணை எல்லாவற்றையும் இழக்கப் பெற்றோர் தயங்குவதில்லை என்ற நிதர்சன உண்மையை அழகாக நடித்துக் காட்டி இருக்கிறார்.

ச�ொத்து, ,சுகம், மானம், மரியாதை, எல்லாவற்றையும் விட ஒருவனுக்குத் தன் குடும்பமே பெரிது என்பது தனுஷ் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அன்பும் அரவனைணைப்பும் மிகுந்த குடும்பங்கள் எப்பேர்பட்டச் சூழ்நிலையிலும் நிலை குலைவதில்லை. இப்படத்தில் மகனுக்காகத் தந்தையும், அண்ணனுக்காகத் தம்பியும், அம்மாவிற்காக மகனும், ஊருக்காகத் தலைவனும், தந்தைக்காக மகனும், தங்கைக்காக அண்ணனும், காதலிக்காக காதலனும், உறவிற்காக உற்றாரும் என்று பிறர் நலனுக்காகவே வாழும் நிறைய கதாபாத்திரங்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சுயநலமில்லா உறவுகளைப் பார்க்கையில் மனம் இளகுகிறது. தனுஷின் மகன்களாக வரும் கென், டிஜே, மஞ்சு வாரியாரின் அண்ணனாக வரும் பசுபதி, ப்ரகாஷ் ராஜ், நரேன், அம்மு அபிராமி, மற்றும் எல்லாக் கதாபாத்திரங்களுமே மிக நன்றாக அவரவர் பங்கைச் செய்து இருக்கிறார்கள்.

வெறுப்பை, ஒரு ரணத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டான் அடிமை, சாதிக்கொடுமைகள் அன்றிருந்த மாதிரி இப்பொழுது இல்லை என்பதை நினைக்கையில் நிம்மதி ஏற்படுகிறது. முற்றிலும் அவை களையப்பட இன்னும் சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதில் முன்னோக்கி ப�ோய்க் க�ொண்டிருக்கிற�ோம் என்பதில் ஓர் எள் அளவு மகிழ்ச்சி. படம் முழுதும் அரிவாளின் உரசலும், கத்திகளிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளும், குத்தீட்டிகளின் பாய்ச்சலும், கிழிக்கப்பட்ட சதையும், சிந்திக் கிடக்கும் ரத்தமும், எரிந்த சாம்பலும், மனிதம் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. படத்தின் முடிவில் ஆழமான கருத்து முன் வைக்கப்படுகிறது. கல்வி ஒன்றே ஒருவனை முன்னேற்றப் பாதையில் க�ொண்டு செல்லும் என்பது வலி உருத்தப்படுகிறது. அதைக் க�ொண்டு வாழ்வில் மேன்மை அடைவது மட்டும் இல்லை முன்னேறுவது என்பது. அதையும் தாண்டி, அந்த உயர் நிலையை அடைந்த பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பிறருக்குச் செய்யாதிருத்தலே படத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக அழகாக உண்மையான சமூக முன்னேற்றம் என்னும் கையாளப்பட்டிருக்கிறது. இப்படி பட்ட கருத்தை இயக்குனர் முன் வைக்கிறார். சமூகத்திலா நாம் வாழ்ந்தோம் , வாழ்கிற�ோம் என்று நினைக்கையில் மனதில் ஓர் வலி "அசுரன்" கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த படம் !!! வலி படம் பார்த்து முடித்து வீடு வந்தும் மனதிலேயே ஊரல் ப�ோட்டு ஓர் சளிப்பை, www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 31


சுற்றுலா

காடு லெட்சுமிப்பிரியா கடலூர் மாவட்டத்தில் உள்ளது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் ஆசியாவில்

கண்ணைக் கவரும் பிச்சாவரம்

இரண்டாவது இடத்தில் உள்ளது . இந்து வங்கக் கடலை ஒட்டிய பகுதியில்

உள்ளது. பித்தர்புரம் என்றே முதலில் இந்தக் காடுகள் அழைக்கப்பட்டது. அதுவே மருவி பிச்சாவரம் என்று மாறியது.

இவ்வூரில்

அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக்காடுகள், மாங்குர�ோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள்அதிகம் உள்ளன.இந்தத் தில்லை மரங்களே சிதம்பரம் க�ோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்குத் தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரைவளர்ந்திருந்தது என்று கூறப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்கள் க�ொண்டதே

32 நவம்பர் 2019

பிச்சாவரம் காடு. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் ப�ோல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பறவைகள் இங்கு வருகை தருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் www.Magazine.ValaiTamil.com


எண்ணிக்கை கணிசமாக உயரும். மேலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்குக் குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது. பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. ம�ொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் ‘கிள்ளை’ என்னும்

ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாகப் பிச்சாவரத்துக்குச் செல்லலாம். பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காண�ொளியைக் காண :www.YouTube.com/ValaiTamilTV

www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 33


கீச்சுச் சாளரம் த�ொகுப்பு: நீச்சல்காரன் தமிழ்நாடு

எங்கோ ஒரு மூலையில் ஒரு"கருப்பு வெள்ளை" டீவி வாழ்க்கை ‘வண்ணமயமாகத்தான்’ இருந்தது....

இருந்தவரை @oorkkavalaan

ம�ொத்த உலகமும் முடியாது என்று ச�ொல்லும்போது, ‘ஒருவேளை

முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே..!! @mugamoodi11 ~நம்பிக்கை துர�ோகம் என்பது இட்லியை ப�ோல வேகுவது தெரியாது வெந்தபின் தான் தெரியும் ..!!

@motheen_farook

ஆண்கள் ரசிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் அலங்காரத்தில் கவனம் செலுத்துகிறார்கள்

ஆண்கள் மதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் நடத்தையில் கவனம் செலுத்துகிறார்கள் ‘குழந்தைகள்’ ஒரு என்பதும்...

சிரிக்காமல் கணக்கிட

நாம்

நாளைக்கு

எத்தனை

முடியாத

@Theva_Maxx

ஒன்று

எத்தனை

முறை

சிரிக்கிறார்கள்

நாட்களை வீணாக்கின�ோம்

என்பதும்… @Raajavijeyan

ரயில்வே ஸ்டேசனில் படப்பிடிப்பு நடத்த முன்பணமாக வைப்புத்தொகை

வாங்குவார்கள். அது எதற்காக எனில் ப�ொதுமக்கள் யாருக்கும் விபத்து

ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவே. பேனருக்கும் அதைப்போல ஒரு பெருந்தொகை முன்பணமாக வாங்கினால்.. பேனர் கலாச்சாரம் குறைய வாய்ப்பிருக்கிறது.

@pachaiperumal23

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 300 க�ோடிக்கு இலக்கை, அரசு

நிர்ணயம் செய்துவிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அளிப்பபத்தெலாம் அடேங்கப்பா ராஜதந்திரம் !!குறைய வாய்ப்பிருக்கிறது.

34 நவம்பர் 2019

@kathir_twits www.Magazine.ValaiTamil.com


"நன்றி" ச�ொல்லி பழகுவ�ோம்.. வெளிநாட்டில் இருக்கும் எங்கள் பிள்ளைகள் தமிழில் "தீபாவளி வாழ்த்துகள்!" என த�ொலைபேசியில் ச�ொன்னால், நீங்கள் அவசரமாக THANKS என ச�ொல்லி முடிக்காமல் "நன்றி" எனச் ச�ொல்லலாமே -ஆரூர் பாஸ்கர், அமெரிக்கா

நவம்பர் 1ஆம் தேதி இனி

"தமிழ்நாடு நாள்"

அரசாணை வெளியிட்டு விழா எடுத்து க�ொண்டாடப்பட்டது.

தமிழக அரசு நவம்பர் 1ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் க�ொண்டாட அரசாணை

வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, தனித்துவத் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அதைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுத�ோறும் விழா எடுத்து சிறப்பாகக் க�ொண்டாடப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் எனச் சிறப்பாகக் க�ொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது. www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 35


சிங்கையில் குடும்ப தினமாக

கலாமின் 88வது பிறந்த நாள்!

இந்தியாவின்

சிங்கப்பூரிலிருந்து ஏபிஆர்.

முன்னாள் அதிபர், அறிவு மேதை அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த நாளை, சிங்கப்பூர் அப்துல் கலாம் விஷன் அமைப்பு குடும்ப தினமாக அன்று காலை முதல் மாலை வரை ப�ொடானிகல் கார்டன் பூங்காவில் க�ோலாகலமாகக் க�ொண்டாடியது. இந்த அமைப்பில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து படைத்த இந்நிகழ்வை, மதிப்பிற்குரிய தலைவர் தூதர் கேசவபாணியும், அன்னாரின் அன்பு துணைவியாரும் முன்னின்று நடத்தினர். ஆடல், பாடல், விளையாட்டுப் ப�ோட்டிகளுடன் பெற்றோர்-குழந்தைகள் கலந்து சிறப்பித்த இதில், குழந்தைகளுக்கு 36

நவம்பர் 2019

நிறையப் பரிசுகள் தந்து ஊக்குவித்ததுடன், சுவையான உணவுகளும், தின்பண்டங்களும் வழங்கப்பட்டன. இதன் சிறப்பம்சம், வாழ்வில் வசதி குறைந்த பல இன முதிய�ோர்களை, ஸ்ரீ நாராயணா முதிய�ோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து நாட்டின் பசுமைப் பகுதிகளை நகரும் வண்டியில் அவர்களுக்குச் சுற்றிக் காட்டியதும், அவர்களின் விருப்ப உணவுகளைத் தந்து மகிழ்வித்ததும் ஆகும். பல நடனங்களும் அவர்கள் முன்னிலையில் படைக்கப்பட்டன. த�ொண்டூழியர்கள் செயலாளர் அருமை சந்திரன், ரஜீத் ராவுத்தர், நிசார், ஜான் ராமமூர்த்தி, முருகன் ப�ோன்றோரின் கடுமையான உழைப்பு நிகழ்ச்சிக்கு நிறைவைச் சேர்த்தது. www.Magazine.ValaiTamil.com


(அக்டோபர் மாதம், 2019) த�ொகுப்பு: நீச்சல்காரன்

2019 அமைதிக்கான ந�ோபல் பரிசை எத்திய�ோப்பியப் பிரதமர் அபிய் அகமதும், வேதியியலுக்கான பரிசை ஜான் பி. குடெனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா ய�ோஷினா ஆகிய மூவரும், இயற்பியலுக்கான பரிசை ஜேம்ஸ் பீப்லெஸ், மிச்செல் மேயார், டிடியர் குயல்ஸ் ஆகிய மூவரும், மருத்துவத்திற்கான பரிசை வில்லியம் கேலின், பீட்டர் இராட்கிளிஃபு, கிரெகு செமென்சா ஆகிய மூவரும், ப�ொருளாதாரத்திற்கான பரிசை அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய மூவரும், இலக்கியத்துக்கான பரிசை பீட்டர் ஹேண்ட்கேவும் பெற்றுள்ளனர் இந்தியாவிலேயே முதல்முறையாக கிண்டி பூங்காவில் புனை மெய்யாக்கத் த�ொழில்நுட்பத்தில் திரையரங்க அமைக்க, பணிகள் நடைபெற்று வருகின்றன

இயக்குநர் மணிரத்னம், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துர�ோக புகாரை நிராகரிக்க பீகார் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அக்டோபர் முதல் வாரம் மலேசியாவில் உள்ள கேடாக் நகரில் ‘உலக சிலம்ப சாம்பியன்ஷிப் ப�ோட்டி’ நடைபெற்றது. இந்தப் ப�ோட்டியில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மலேசியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து க�ொண்டனர். அதில் ஈர�ோடு மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா இரட்டை வாள்வீச்சு மற்றும் குழு கம்பம் வீச்சுப் ப�ோட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்

International Astronomical Union’s Minor Planet மையமானது, சனியைச் சுற்றி வரும் 20 புதிய துணைக்கோள்களை உறுதிப்படுத்தியது. இதனால் ம�ொத்தம் 82 துணைக்கோளுடன் நமது சூரிய குடும்பத்தில் அதிக துணைக்கோளைக் க�ொண்ட கிரகமாக சனி பெயர்பெற்றுள்ளது. அக்டோபர் 11 ஆம் நாள் பிரபல சாக்சப�ோன் இசைக் கலைஞர் கத்ரி க�ோபால்நாத் காலமானார்

இந்தியாவில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ச�ோதனை முயற்சியாக லக்னோடெல்லி இடையே முதல் தனியார் ரயில் சேவை த�ொடங்கப்பட்டது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுள் ஒன்றான ஹாட்ஸ்டார் டிஸ்னியிடம் சென்றதால் தற்போது சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது. www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019

37


ப�ோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 12வது ஆண்டாக முதல் இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.

சக மாணவிகளுக்கு முன்பு வகுப்பு ஆசிரியை திட்டியதால் திருச்சியைச் சேர்ந்த ஏஞ்சலின் லெம�ோ தந்தையின் கண் முன்னே மாடியில் இருந்து குதித்த தற்கொலை செய்துக�ொண்டார் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு த�ொடங்கவுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். கீழடி, ஆதிச்சநல்லூர், க�ொடுமணல், சிவகளை ஆகிய நான்கு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ஹகிபிஸ் புயல் தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்துள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நமக்கல் ஆகிய இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க இந்திய மருத்துவ கவுன்சிலின் த�ொழில்நுட்பக்குழு ஒப்புதல் அளித்துள்ளது தேனி மாவட்டம் மாரியம்மன் க�ோவில்பட்டியில் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்துக்குச் ச�ொந்தமான சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து

பி.சி.சி.ஐ தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ப�ொறுப்பேற்றுள்ளார் உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளை க�ொன்றுள்ளீர்கள்’ – சுபஸ்ரீ விபத்திற்குக் காரணமான பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்

இந்திய த�ொழிலதிபர்களில் நன்கொடை வழங்குவதில் 2018-ம் ஆண்டு ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் ஹெச்.சி.எல் நிறுவனம் ரூ.826 க�ோடி நன்கொடை வழங்கியுள்ளது. டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர் பர்வீனா அஹாங்கெர், பாலின சமத்துவ நிபுணர் சுபலட்சுமி நந்தி, மருத்துவர் பிரகதி சிங், ய�ோகா நிபுணர் நட்டாஷா ந�ோயல், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் வந்தனா சிவா, விண்வெளி த�ொழில்முனைவர் சுஷ்மிதா ம�ொஹந்தி, கவிஞர் ஆரண்யா ஜ�ோஹர் ஆகிய ஏழு இந்தியர்கள் இந்த ஆண்டு பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மறுசுழற்சி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கழிவு நெகிழிப் ப�ொருட்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்திருக்கிறது. க�ோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணை வேந்தராக பி. காளிராஜை ஆளுநர் நியமனம் செய்துள்ளார் 38 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


அமெரிக்காவின் ஹெச்1 பி விசா குறித்த நடைமுறையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கு, அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன. சேலம் மாநகராட்சி சார்பில் ஆறு இடங்களில் இலவச வை ஃபை சேவையை மாநகராட்சி ஆணையாளர் த�ொடங்கிவைத்தார். அரசு இணையதள சேவைகளைப் பார்க்க 24 மணிநேரமும், சமூக வலைதளங்களை ஒரு மணி நேரமும் பயன்படுத்திக் க�ொள்ள வசதி.

மெக்ஸிக�ோ வழியாக அமெரிக்கா நுழைய முயன்ற 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே 4,223 கடல்வாழ் உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.

இலங்கை ஊவா மாகாணத்தில் சிங்களப் பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் ம�ொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் ம�ொழியில் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த த�ொழிலதிபர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இனி அனுமதிச் சீட்டில்லாமல் பிரேசில் நாட்டுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ப�ோன்ற நாடுகளுக்கே இந்தச் சலுகை ஏற்கனவே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் த�ொகுதிகளில் அக்டோபர் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று நாராயணன்(அதிமுக) நாங்குநேரியிலும், முத்தமிழ்ச் செல்வன்(அதிமுக) விக்கிரவாண்டியிலும், ஜான்குமார்(காங்) காமராஜ் நகரிலும் வெற்றிபெற்றனர். திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் வில்சனை நான்கு நாட்களாக மீட்கப் ப�ோராடியும் பலனின்றி பலியானான். தமிழகத்தையே ச�ோகத்தில் ஆழ்த்திய நிகழ்விற்குப் பலர் இரங்கல் தெரிவித்தனர்

அக்டோபர் 25 அன்று நியூஸ்18 தமிழ்நாடு த�ொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு அக்டோபர் 26 அன்று பத்மஸ்ரீ விருது பெற்ற ய�ோகா பாட்டி நானம்மாள் காலமானார்

www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 39


அருள்மிகு ஆதிசெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி

தலச்சிறப்பு: இக்கோவில் திவ்யதேசம் 108 வைணவ சேத்திரங்களில் 44வது ஆகும். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும். புல்லாரண்யம், தர்ப்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. இலக்குவணனின் வடிவமாக ஆதிசேடன் இருப்பதால், இலக்குவனும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க சிறப்புகள்: இராமாயணத்தில் சீதையை ஆல�ோசனை செய்த சூரியன், சந்திரன், இராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் தேவர்கள் இருக்கின்றனர். சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படிச் கருவறையைச சுற்றிலும் செல்வது, கடலைத் தாண்டுவதா? யார் இக்கதை வண்ணப்படங்களாக உதவியை நாடுவது? தெற்கே சென்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. க�ோவிலில் அனுமனையும் காணவில்லையே? என்ற சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை ஆயாசத்துடன் இராமன் ச�ோகமயமாய்த் ப�ோல, சித்திரக் கலைக்கும் சான்றாக தன் தம்பி இலக்குவன் மடியில் விளங்குகிறது. இந்தச் சன்னிதிக்கு தலைசாய்த்து தர்பையைப் பரப்பி உடல் முன்னதாக சந்தான க�ோபாலன் தனிச் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு உபவாசம் கிடந்தார். யானைகளுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் க�ொண்டுள்ள இதன் அடிப்படையில் இங்கு இராமர், ஆதிசேடன் மீது கண்ணன் காட்சி ஆதிசேடன் மீது தர்ப்பை விரித்து, தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் 40 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


க�ொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகத�ோசமும் புத்திரத�ோசமும் விலகும் இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல என்பது நம்பிக்கை. விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து அதன் எதிரே க�ொடிமரத்துடன் கூடிய வேர்வரை மருத்துவக் குணங்கள் நிறைந்த பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. இராவண இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் வதம் முடித்து புஷ்பக விமானத்தில் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. சீதையுடன் திரும்பும் ப�ோது, பக்தர்களின் திருப்புல்லாணி வந்து, கல்யாண வேண்டுக�ோளுக்கு இசைந்து இங்கே செகன்னாதரைக் கும்பிடத் திருமணத் பட்டாபிசேகக் காட்சியை இராமன் தடைகள் நீங்கும் எனவும், சந்தான க�ொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் க�ோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் நின்ற நிலையில் இராமனும், அருகே மழலைப் பேறு கிடைக்கும் எனவும், தம்பி இலக்குவணனும், சீதை உடனிருக்க இராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் த�ோற்றம் தர அனுமன் குவித்த கரங்கள�ோடு குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. நிற்கிறார்.

"க�ொல்லுகின்ற நீரிழிவைக் க�ொல்வோம்" "நீரிழிவை

சித்த மருத்துவம்

எந்த மருத்துவராலும் குணமாக்க சித்தமருத்துவர் க�ோ.அன்புக்கணபதி, முடியாது. எந்த மருந்தாலும் சென்னை குணமாக்க முடியாது. ஆனால் நீரிழிவு ந�ோயாளியால் தானே தன்னைக் குணமாக்கிக் க�ொள்ள முடியும்" 40 வயதுக்கு மேல் உலகம் முழுதும் வாழ்கிற மக்களில் 60 விழுக்காட்டுக்கு மேல் மரனத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிற ந�ோய்களாக அறியப்பட்டுள்ள புற்று ந�ோய், இதயந�ோய், சர்கரைந�ோய் ஆகிய மூன்று ந�ோய்களில் நீரிழிவு முதலிடத்தில் இருக்கிறது. நீரிழிவு ந�ோயாளிகளின் ஏண்ணிக்கை கடந்த 2030 ஆண்டுகளில் முந்தய ஆண்டுகளைவிட பலமடங்கு அதிகரித்திருப்பது பெரும்

www.Magazine.ValaiTamil.com

அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 ந�ோய்களுமே த�ொற்றிப் பறவாத வாழ்வியல் த�ொடர்புடைய நீடுபிணிகளாகும் (Noncommunicable chronic illness). இப்பிணிகளிக்கு வாழ்வியல்தான் தீர்வளிக்க முடியும். நீரிழிவு என்றால் என்ன? நீரிழிவு தன்னை ஒரு ந�ோய் என்று அழைக்கப்படுகிற தன்மைகூட அற்றதாக இருந்து க�ொண்டு ஆனால் ம�ௌனமாக மக்களை பெருமளவிலே க�ொன்று க�ொண்டிருக்கிற க�ொடிய பிணி. நீரிழிவு ஒரு ந�ோயல்லதான். கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தின் பராமரிப்புக் குறைபாட்டால் குருதியில் குளுக்கோஸ் அளவு கூடுவதே நீரிழிவு (Hyperglycaemia) என்று அழைக்கப்படுகிறது.

நவம்பர் 2019 41


திருக்குறளும் நீரிழிவும்

‘தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின் குறள்:947 ந�ோயளவின்றிப் படும். தீ என்பது நாம் உயிர்வாழத் தேவைப்படுகிற சக்தி (Calories). அச்சக்தி நமது செல்களில் குளுக்கோஸ் எரிக்கப்படுவதன் (Oxidation of Glucose) மூலமாக்க் கிடைக்கிறது. ஒருவன் தன் உழைப்புக்குத் தேவைப்படும் அளவுக்கு மேல் அதிகமாக உண்பானேயானால் (Consumes more Glucose) ந�ோய் அளவில்லாமல் ஏற்படும் என்று மருந்து என்னும் அதிகாரத்தில் இக்குறள் கூறுகிறது. நவீன அறிவியல் ச�ொல்லும் நா ‘ ம் தேவைக்கு மேல் கூடுதலாக உட்கொள்ளும் கல�ோரியே ( excess calories) ந�ோய் ஏற்படக் காரணம் ‘ என்ற இக்கருத்தை 2050 ஆண்டுகளுக்கு முன்னமே திருவள்ளுவர் கூறுவது தமிழனின் காலத்தை வென்ற அறிவியல் சிந்தனைக்கு சான்றாக நிற்கிறது.

இருந்தால் நல்லதுதானே எனத்தான் தர்க்கரீதியாக எண்ணத் த�ோன்றும் . அது உண்மைதான். ஆனால் எது பிரச்சனை என்றால் குருதியில் அதிகுளுக்கோஸ் பலந�ோய்களை. சிறு-பெரு இரத்தக்குழாய் சேதம் (Micro and Macro Angiopathy), நரம்பு நுனிகள் உணர்வு சிதைவு (Diabetic Neuropathy), விழிப்படல சேதம் (Retinopathy), ஆண்மை இழப்பு (Impotency), சரும்ப்பிணிகள (Dermatitis) ,சிறுநீரகபாதிப்பு ( Diabetic nephropathy) உருவாக்குவதுதான். எனவேதான் ஆங்கிலத்தில் நீரிழிவை பல "கெட்ட கூட்டாளிகளுடைய நல்ல நண்பன்" (Good friend with bad companions) என்று கூறுகின்றனர். இதே கருத்தை வள்ளுவன் "ந�ோய் அளவு இன்றி படும்"எனக் குறிப்பிடுவது திருவள்ளுவரின் குளுக்கோஸ் உயிர்ச்சக்தியை அளிக்கும் காலத்தை வென்ற அறிவியல் புலமையை மூலப்பொருள். அது குருதியில் கூடுதலாக வெளிப்படுத்துகிறது.

நீரிழிவு ந�ோய்க்குகான காரணங்கள்:

1.நீரிழிவு 85 விழுக்காடு மரபு வழி வருகிறது

2. பெற்றோர்கள் இருவருக்கும் நீரிழிவு இருந்தால் 100 விழுக்காடு பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு உள்ளது 3. இருவரில் நீரிழிவு இருந்தால் 50 பிள்ளைகளுக்கு. வரும் உண்டு 3. உடல் பருமன் 42 நவம்பர் 2019

ஒருவருக்கு விழுக்காடு வாய்ப்பு

4. உடல் உழைப்பு இன்மை 5. தேகப்பயிற்சியின்மை 6. மன அழுத்தம்

7. ப�ோதிய தூக்கம், ஓய்வின்மை

8. பரபரப்பான அவசர வாழ்க்கை 9. தவரான உணவு பழக்கம்

10. உடல் இயக்கம் குறைவான ச�ோம்பலான ச�ொகுசு வாழ்கை ஆகியவையாகும். www.Magazine.ValaiTamil.com


உலகத் தமிழ்

நிகழ்வுகள்

திருக்குறளைத் தாய் (Thai) ம�ொழியில் ம�ொழி பெயர்த்து அதனைத் தாய்லாந்து தமிழ்ச்சங்கம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அதிக ம�ொழிகளில் ம�ொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம்

இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 100 க்கும் மேற்பட்ட ம�ொழிகளில் ம�ொழி பெயர்க்கப்பட்டு, உலகப் ப�ொதுமறை என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் திருக்குறளில் எந்த ஒரு தேசத்தைய�ோ, தலைவரைய�ோ, மதத்தைய�ோ, ஜாதியைய�ோ, ம�ொழியைய�ோ அப்பேர்ப்பட்ட திருக்குறளைத் தாய் (Thai) ம�ொழியில் ம�ொழி பெயர்த்து அதனைத் தாய்லாந்துத் தமிழ்ச்சங்கம் புத்தகமாக வெளியிட உள்ளது. இதற்காகக் கடந்த ஓராண்டுகளாக முயற்சி செய்து, தாய் ம�ொழி படிக்கத் தெரிந்த திரு. சுந்தர குமார், திரு.சாரி, மற்றும் திரு. சங்கர் ஸ்ரீநிவாசன் உதவியுடன், திரு தேவதாஸ் தலைமையில் ஒருங்கிணைத்துப் பணியாற்றி இதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆங்கிலத்திலிருந்து தாய் ம�ொழியில் ம�ொழிபெயர்த்தவர் முனைவர் திரு சுவித் விபுல்ஸ்ரெஸ்த் (Acharn Suvit Vubulshreshth). இவர் எற்கனவே டாக்டர் அப்துல் கலாமின் அக்கினி சிறகுகளைத் தாய் ம�ொழியில் ம�ொழி பெயர்த்துள்ளார்.

இந்நூலை சமீபத்தில் அரசுமுறை பயணமாக தாயலாந்து சென்றிருந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திர ம�ோதி வெளியிட்டார். www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 43


சென்னை- சப்பான் த�ோக்கிய�ோ நரிதா விமான நிலைய நேரடிப் ப�ோக்குவரத்து இனிதே த�ொடங்கியது.

படம்: ANAவிமான நிறுவனத்தின் சென்னைப்பிரிவின் ப�ொதுமேலாளர் திரு. த�ொம்மிட்சு (Mr.Yasuyuki Tommitsu San) அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் காட்சி. பயணிகளை உபசரிப்பதில் சப்பானியர்களுக்கு நிகர் இல்லை, அனைத்துப் பண்பாடுகளையும் மதிப்பவர்கள் சப்பானியர்கள் என்பதை இந்த வரவேற்பின் மூலம் காணலாம். ANA இணையதளத்தில் தமிழ்!...

உலகிலேயே முதல்முறையாக வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் ஒன்று இணையதளத்திலும் தமிழுக்கு இடமளித்திருப்பது பாராட்டுக்குரியது. -சப்பானிலிருந்து சே சதீசுகுமார்

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை த�ொடக்கம்

உள்நாட்டுப் ப�ோர்ச்சூழலால் நிறுத்தப்பட்டிருந்த விமானப் ப�ோக்குவரத்து 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை-யாழ்ப்பாணம் விமானச்சேவை த�ொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பலாலி விமான தளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகப் பெயர்மாற்றப்பட்டு அக்டோபர் 17 ஆம் நாள் முதல் விமானப் ப�ோக்குவரத்து த�ொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டினால் க�ொழும்பு வழியாகத்தான் செல்லவேண்டியிருந்தது. இதன்மூலம் இலங்கை வடக்குப்பகுதியின் ப�ொருளாதாரம் மேம்பாடும், தமிழகத்துடனான உறவும் வலுப்பெறும்.

உலக ராணுவ விளையாட்டுப் ப�ோட்டி: தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் மூன்றாவது தங்கம் வென்று சாதனை!

7-வது உலக ராணுவ விளையாட்டுப் ப�ோட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்தன் தங்கம் வென்றுள்ளார். 44 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


இலங்கை யாழ்ப்பாணத்தில் திருக்குறள் மாநாடு

சிங்கப்பூரில் உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் ம�ொழி பாடம்; சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர் கல்வியமைச்சர் திரு.ஓங் யீ காங் சமீபத்தில் தமிழ்நாட்டுக்குக் கல்விப்பயணம் சென்றிருந்தார். அப்போது அண்ணா பலகலைக்கழகத்தில் தமிழிணையக் கல்விக்கழகத்தினைச் சுற்றிப்பார்த்துக் கலந்துரையாடல் செய்தார். தமிழ்மொழியினை விருப்பப்பாடமாகத் தெரிவு செய்யும் மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தினைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில் அவர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்த ஆழமான அறிவைப் பெற இது மிகவும் பயன்படும் என்று தெரிவித்தார். www.Magazine.ValaiTamil.com

த�ொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டம் அடுத்த ஆண்டுமுதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2019

45


வலைத்தமிழ் கதைச�ொல்லி குழுவில் உலகத் தமிழ் குழந்தைகளுக்கு கதைச�ொல்கிறார் சிறுவர் எழுத்தாளர் திரு.கன்னிக்கோவில் இராஜா

தைவான் தமிழ்ச் சங்கத்தின் மைல்கல் சாதனையாக ஹவாலியன் நகரத்தில் திருவள்ளுவர் சிலை 19/10/2019 அன்று நிறுவப்பட்டது.! தைவான் தமிழ்ச் சங்கத்தில் 20.10.2019 அன்று திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கிய திருவள்ளுவர் சிலையைப் புதுச்சேரி சபாநாயகர்வி. பி.சிவக்கொழுந்து, திறந்து வைத்தார்.டாக்டர் பாரி வேந்தர், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன், மூத்த வழக்கறிஞர் காந்தி, முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் , இந்திய- தைபை சங்க இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன் ,மல்லை சத்தியா, வரலாற்றுபட இயக்குனர் முனைவர் ரவி குணவதி மைந்தன் ஆகிய�ோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் முனைவர் ரவி குணவதி மைந்தன் இயக்கிய திருவள்ளுவர் வரலாறு திரைப்படம் வெளியிடப்பட்டது. 46 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


அக்டோபர் 12, சனிக்கிழமை வாசிங்டனிலுள்ள அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில் மரபுவழி ம�ொழிகள் பயிற்றுவிக்கும் தன்னார்வலர் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் மாநாடு நடந்தது. ஆங்கிலம் தவிர பிற அனைத்து ம�ொழிகளையும் தம் ச�ொந்த முயற்சியால் கற்றுக்கொடுக்கும் குமுகாயப் பள்ளிகளை நடத்துபவர்கள் பலரும் சந்தித்துத் தம் அனுபவங்களையும், முயற்சிகளையும் கலந்தால�ோசிக்கும் மாநாடாக இது விளங்கியது.

சிங்கப்பூர், டென்மார்க், இலங்கை, மலேசியா, குவைத், ம�ொரீசியஸ், பிரான்ஸ் மற்றும் இந்திய தமிழ் படைப்பாளிகள் கலந்து க�ொண்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பன்னாட்டுத்தமிழ் மாநாட்டில், எழுத்தாளர்களின் பிதாமகர் பேராசிரியர் பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.

www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 47


பறம்பு தமிழ்ச்சங்க துவக்க விழாவில்

ம.ப�ொ.சி அவர்களின் 24வது நினைவு தினம் மற்றும் சிலப்பதிகார விழா சிறப்பாக நடந்தேறியது.

ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருது! தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வழங்கினார்.

48 நவம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


ஆசிய நாடுகளில் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு: பன்னாட்டுக்

கருத்தரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் குரு நானக் கல்லூரி இணைந்து ஒருங்கிணைத்து நடத்தியது.

கிருட்டிணகிரியில் தமிழ்ப்பெயரை"

நடந்த

"தமிழியம்"

இரண்டாம் பதிப்பு

நடத்திய

"சூட்டிமகிழ்வோம்

தூய

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய

அமைச்சர்கள், ஒருவரின் பெயரில்தான் எல்லாம் உள்ளது என்று குறிப்பிட்டத�ோடு.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் தமிழக அரசு நூலங்களில் "சூட்டிமகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை" நூலை வாங்கி வைக்க ஏற்பாடு செய்வதாக அறிவித்தனர்.

மதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு!

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2019 திசம்பர் 14,15 ஆகிய நாட்களில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக உலகத் தமிழிசை மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு: isaimanadu2019@gmail.com

49 நவம்பர் 2019

www.IsaiTamilJournal.com

www.Magazine.ValaiTamil.com


நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா சிறப்பாக க�ொண்டாடப்பட்டது.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் த�ொடங்கி 30 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த 30 வருடங்களாகத் தனது தமிழ்ச் சேவையைச் செவ்வனே செய்து வருகின்றது. இயல், இசை, நாடகம், இலக்கியம், ப�ொழுதுப�ோக்கு என்று கலை விருந்துகள் படைப்பத�ோடு மட்டுமின்றி நியுஜெர்சி தமிழ்ச்சங்கம் கடந்த 30 வருடங்களில் தமிழகத்திலும் மற்றும் அமெரிக்காவிலும் பல சமூக நலப் பணிகளுக்காக நிதியுதவிகள் செய்து வருகின்றது.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் அக்டோபர் 19,

2019 சனிக்கிழமை 30ஆம் ஆண்டுவிழாவைச் சிறப்பாகக் க�ொண்டாடியது. ஓய்வுப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளரும் பேச்சாளருமான திரு.கலியமூர்த்தி அவர்களின் சிறப்புப் பேச்சு, திரைப்படப்பாடகி சின்மயி அவர்களின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, நியூ ஜெர்சி மக்களின் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கணிணிப் பயிற்சி மற்றும் கல்லூரியில் சேர்வதற்கான செயல்முறைகள் பற்றிய உரையாடல் என விழா சிறப்பாக நடைபெற்றது.

மூன்றாவது தமிழ் த�ொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் 35 நாடுகளுக்கும் மேலாக த�ொழில் செய்யும் பல த�ொழிலதிபர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக�ொள்ளவிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றே பதிவுசெய்யுங்கள்...

www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 50


"வலைத்தமிழ் ம�ொட்டு" இவ்வாண்டிற்கான மூன்றாவது இதழ் வெளியீடு

சிறுவர்களுக்கான காலாண்டு இதழாக இவ்வாண்டின் மூன்றாவது இதழான "வலைத்தமிழ் ம�ொட்டு" இதழை வெளியிடுவதில் ஆசிரியர் குழு மகிழ்ச்சியடைகிறது. அடுத்த தலைமுறைக்கு நம் தமிழ் ம�ொழியைக் கற்றுக்கொடுக்க உந்துசக்தியாக இவ்விதழை வடிவமைத்துள்ளோம். தமிழ்ப்பள்ளிகள் இதை வகுப்பறையில் பயன்படுத்தி உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுக்கு இவ்விதழைக் க�ொண்டுசேர்க்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிற�ோம். இம்மாத வலைத்தமிழ் ம�ொட்டு இதழில் ....

• • • • • • • • • • • • • • • • •

வள்ளுவர் தாத்தா ச�ொல்வதைக் கேட்போம்

வரைந்து வண்ணம் தீட்டுவ�ோம் தமிழ் எழுத்து விளையாட்டு தாத்தா பாட்டிக்குக் கடிதம் நம் த�ொன்மை அறிவ�ோம் ஒரு ச�ொல் விளையாட்டு

சிறுவர் கதை - க�ோடை மழை

சிறுவர் பாடல் - தங்கமே தங்கம் ..!!

அறிவியல் அறிவ�ோம் - சிறியதை பெரிதாக்கி… கணக்கதிகாரம் - செய்து பார்ப்போமா ?

தமிழிசைக் கதை - "கண்மணியே கேளு…" குறுக்கெழுத்துப் புதிர்

நா பிறழ் பயற்சி (Tongue Twisters) விடுகதையாம் விடுகதை மீம்ஸ் கலாட்டா...

மரபு விளையாட்டு - அஞ்சாங்கல் நூல் அறிமுகம் - நிலா காமிக்ஸ்

To go to Magazine Home page: www.Mottu.ValaiTamil.com

அச்சுப் பிரதி விருப்பத்தை பதிவு செய்ய, த�ொடர்புக்கு mottu@ValaiTamil.com -க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

www.Magazine.ValaiTamil.com

நவம்பர் 2019 51


ஆங்கிலப்புலமையுடன்,

முறையாகத்

தமிழ்

தமிழாசிரியர்கள்,

பயின்ற,

அனுபவம்

வாய்ந்த

நீங்கள்

நாடுகளில்

உள்ள தமிழ் கற்க ஆர்வமானவர்களுக்கு

வசிக்கும் நாட்டின் வாழ்வியலை உள்வாங்கி, புலம்பெயர் படிக்க,

பேச,

எழுத,

ச�ொல்லிக்கொடுக்கும் இணைய வழிக்

புரிந்துக�ொள்ள ந�ோக்கில்

கல்வி அமைப்பு.

எளிதாக

உருவாகியுள்ள

இன்றே ச�ோதனை வகுப்பில் இணைந்து பயன்பெறுங்கள் www.LearnTamil.ValaiTamil.Com