Skip to main content

Thenral Mullai 2019 January Volume 16, Issue 4

Page 1

ñô˜: 16

Þî›: 4

Thenral Mullai A Publication of Tamil Sangam of Greater Washington Inc. F¼õœÀõ󣇴 2050 சனவரி - 2019

ஒன்பதாவது தமிழிசை நிகழ்ச்சி

Volume: 16 Number:4

உள்ளே.... முன்ோள் I.A.S அதி்கோரி �ோலச்சந்திரன அவர்களுடன ஒரு ்கலந்துரரயோடல்

06

ப�ோற்கோலம் ்கோண�து எபப�ோது? 2018-ல் பவளியோ் �த்து சிறந்​்த ்தமிழ்த் திரரப�டங்கள்

08

பெடுெல்வோரட: ஒரு ்கணபணேோட்டம்

10

லவுடன மோவட்டத்தின பரோம்ப�ல்டன நூல்கத்தில் ்தமிழ் நூல்​்கள்

13

பெல் ப்சயரோமன: ெடு்கல்லோ்க மோறிய விர்தபெல்! என வீடும், என ப்தோரல தூர வீடும்

14 15

09

ஆழி ப்சந்தில்ெோ்தனுடன ஒரு ்கலந்துரரயோடல் என ப்த்சம்... உ்க்கு �ோல்ப்கோவோ வோஙகி ்தபரன.. ்சரியோ? எழுத்​்தோளர பிர�ஞ்சனுக்கு அஞ்சலி குழந்ர்த்கள்ெோள் விழோ! குழந்ர்த்கள்ெோள் விழோவில் திருக்குறள் ்கண்கோட்சி ெம் ்தமிழ்ச்சங்கத்தின ஒன�்தோவது ்தமிழிர்ச விழோ – 2018

ப�ோட்டியோளர்கள் அக்‌ ஷயா‌‌அஞ்சனா‌‌அதிதி‌‌அபர்ா‌‌அலைனா‌‌ஆக்ரிதி‌‌ஆதனா‌‌ஆத்விகா‌ இைக்கியா‌‌இனியா‌‌கவின்‌‌காரத்திக்‌‌ககாதா‌‌ககௌதம்‌‌்சக்திபாைா‌‌்சக்திராஜ்‌ ்சரவண்‌‌்சரகவஷ்‌‌்சஹானா‌‌தருண்‌‌தரஷிணி‌‌தீக்ஷிதா‌‌தீரா்சாய்‌‌நிைாபகரம் நிைா‌பூர்ா‌‌பரியம்வதா‌‌மானஷா‌‌யுவன்‌‌ரவின்‌‌ரிஷப‌‌லியானா‌‌வித்யுத்‌‌ விநாயக்‌‌வீக்‌ ஷனா‌‌கெய்ஹரசினி‌‌ஸவாதிஶ‌‌்ரீஹரஷிதா‌‌ஹரிணிதா‌‌ஹாசினி‌

ஜனவரி 2019

16 19 20 22 23 24 26

்கவிஞர அறிவுமதியின வோழ்க்ர்கப �யணேத்தில் சில ்கோட்சி்கள்...

28

ஒருஙகிரணேந்​்த மருத்துவ முரற ப�ோர்தய்ோரும் பி்தோ்கரஸ் ப்தறறமும் குழந்ர்த்களுக்கு ்கறறுக்ப்கோடுத்​்தல்

31 32 34

்தமிழ் மருத்துவ அறிவுரரப�ோ

36

ப�ோஙகு்க ்தமிழோ(ல்)!

37

்தோவரங்களுணடு வோழ்​்தலினிது!

38

வோசிஙடன வட்டோரத் ்தமிழ்ச்சங்கத்தின ்கஜோமீட்புப �ணி்கள் உ்தவி்கள் ்தமிழ்ச்சங்கச ப்சயல்திட்டங்களில் முத்​்தோயப�ோ் சில ப்சயல்�ோடு்கள் மனி்த பெயம்: புதியப்தோர ்சமநீதி �ரடத்ப்த! ரைக்கூ ்கவிர்த்கள்

 thenral.mullai@gmail.com

40

1

42 45 46


246 2

அக்டோபர் 2018 ஜனவரி 2019 ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com thenral.mullai@gmail.com

 thenral.mullai@gmail.com


ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

47 3


உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் வட அமமரிககத் தமிழ்ச்​்சஙகப் பேரவவ சிகாபகா தமிழ்ச்​்சஙகம்

மற்றும்

இணைந்து நடத்தும்

சூவல 4 - 7, சிகாபகா, அமமரிககா

JULY 4 - 7, Chicago, USA Schaumburg Convention Center, Schaumburg, IL, 60173 USA

கவல நிகழ்ச்சிகள் / Main Cultural Programs – சூவல 4 & 5 தமிழ் ஆராய்ச்சி மாநாடு / Research Conference - சூவல 6 & 7 மதாழில் முவைபவார் கூடடம் / GTEN - சூவல 6 ்சஙகஙகளின ்சஙகமம் / ஊர்வலம் / ேவ்றயாடடம் / Parade - சூவல 6 மாவல பேரவவ விழா விருந்து / Banquet - சூவல 6 இரவு REGISTRATIONS OPEN

http://registration.fetna.org

For more information: www.fetna.org, www.fetnaconvention.org, www.chicagotamilsangam.org

BP

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


தலைவர் மடல் அன்புத் தமிழ் உறவுகளே! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பாரம்பரியமிக்க ஒருங்கிணைந்த தைப் ப�ொங்கல் விழாவில் நிகழ்ச்சியில் சிறப்பு கலந்து க�ொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 2018-ஆம் ஆண்டிற்கான தென்றல் முல்லை ஆசிரியர் குழுவில் சிறப்பாகச் செயல்பட்ட முதன்மை ஆசிரியர் திரு. நாஞ்சில் இ. பீற்றர் அவர்களின் தலைமையிலான ஆசிரியர் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் க�ொள்கிறேன். நமது ஒருங்கிணைந்த தைப் ப�ொங்கல் விருந்தினர்களாகக் கலந்து க�ொண்டு விழாவைச் சிறப்பித்த திருமிகு. உதயசந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கும், திருமதி நிர்மலா பெரியசாமி, இயக்குனர் திருமிகு. மாரி செல்வராஜ் , முனைவர் சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியம் மற்றும் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், மதுரை ஆகிய இரு அரசுக் கலைத்துறையினர் இணைந்து வருகை புரிந்திருக்கும் பதினேழு தமிழக மரபுக்கலை கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த வாசிங்டன் பகுதியில் இருக்கும் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கும், தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் நடப்பதற்காக பெரும் ப�ொருளுதவி அளித்து ஊக்குவிக்கும் க�ொடைவள்ளல்கள், மேலும் எனது அன்புக்குரிய இனிய வாசிங்டன் வட்டாரத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழ்ச் ச�ொந்தங்களுக்கும், தமிழ் உறவுகள்/உணர்வாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மரபுத் திங்கள் மற்றும் தைப் ப�ொங்கல் திருநாள் வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்ச்சியில் நம் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் மரபுக்கலைகளை தமிழக அரசின் உதவியுடன் பதினேழு கலைஞர்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஒரே மேடையில் நமது வாசிங்டன் பகுதியில் அரங்கேற்றியது இதுவே முதல்முறை. இது நமது தமிழ்ச்சங்கதின் மரபுப்பொங்கல் விழாவிற்கு பெருமையன்றோ? வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து கடந்த இரு வருடங்களாகத் தமிழ்ச் சமுதாயப் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்! என் வாழ்நாளில் இந்நாட்கள் மிகவும் மனநிறைவான நாட்கள். நமது தமிழ்ச்சங்கம், அமெரிக்காவில் இருக்கும் ஏனையத் தமிழ்ச்சங்கங்களுக்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்படுகிறது எனலாம். இதற்கு முழுமையான காரணம், நம் தமிழ்ச்சங்கத்தின் முதுகெலும்பாகச் செயல்படும் அனைத்து வாழ்நாள் மற்றும் ஏனைய உறுப்பினர்களான வாசிங்டன் வட்டார ஒன்றுபட்ட தமிழ்ச் சமுதாயத்தையேச் சாரும். இதற்காக நாம் அனைவரும் பெருமை க�ொள்வோமாக! உங்களின் த�ொடர்ந்த ஆதரவை நம் தமிழ்ச்சங்கத்திற்கு என்றென்றும் வழங்கிட வேண்டுகிறேன். 2017-18-ஆம் ஆண்டுகளின் செயற்குழு செவ்வனே செயல்பட்டு, இன்று நம் பகுதியில் ஒரு மிகப்பெரும் தன்னார்வத் த மி ழ் மை ய ம ா க மே ம ்ப டு த் தி க் க ா ட் டி ய செ ய ற் கு ழு உ று ப் பி னர்க ளு க் கு உ ங ்க ள் அ ன ை வ ரி ன் ச ா ர்பா க பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரியப்படுத்திக் க�ொள்கிறேன். நம் பகுதியில் உள்ள அனைத்துத் தமிழர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையிலும், நம் தமிழினத்தின் ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையிலும் நம் சங்கம் பணியாற்றிக்கொண்டு உள்ளது. நம் பகுதியில் வாழும் தமிழ் உறவுகளுக்கானப் பாலமாக நம் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகள்

உங்கள் நண்பன், தலைவர்

இராஜாராம் சீனிவாசன்,

இருந்தது வந்துள்ளன. நம் மரபு, பண்பாடு மற்றும் உணர்வுகளுக்கு ஊன்றுக�ோலாக நம் சங்கத்தின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன எனில் அது மிகையாகா. கடந்த இரண்டு (2017 & 2018) வருட தமிழ்ச்சங்கச் செயல்திட்டங்களில் முத்தாய்ப்பான சில செயல்பாடுகளை தனியாக ஒரு கட்டுரையாக 42-ஆம் பக்கத்தில் எழுதி உள்ளேன். ஆண்டாண்டுகளாக குழந்தைகள்தின விழாவில் தமிழ்ப் பள்ளிகளின் பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நம் வாசிங்டன் பகுதியில் இருக்கும் அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சியாக “பள்ளிகளின் சங்கமம்” நிகழ்ச்சியில் கலந்துக�ொண்டு சிறப்பித்தது நம் அனைவரின் தமிழார்வம் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் மீது நாம் வைத்திருக்கும் உணர்வுபூர்வமான ஈடுபாட்டின் வெளிப்பாடாக இருக்கிறது. அனைத்துத் தமிழ்ப் பள்ளி ப�ொறுப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாகத் தமிழ்ச்சங்க நிகழ்வுகளை மிகச் சிறப்பாக வண்ணமயமாக அலங்கரித்து, மற்றும் குடும்பங்கள் தங்களின் மகிழ்சி தருணங்களைத் துல்லியமாகப் படம்பிடித்து, ஓர் குடும்பத் திருவிழாவாக வரவேற்று, வாழையிலையில் வடை பாயாசத்துடன் விருந்து படைத்ததில் நம் தமிழ்ச்சங்கம் பெருமை அடைகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தமிழ்ச்சங்கச் செயற்குழுவுடன் பல்வழி அழைப்பின் வாயிலாக மாதத்தின் மூன்றாவது செவ்வாய்கிழமைகளில் த�ொலை பேசியில் நேரடியாகத் த�ொடர்பு க�ொண்டு உங்களின் கருத்துக்களை பரிமாறியது ப�ோற்றத்தக்கது. இது நம் தமிழ்ச் சமுதாயத்தோடு இணைந்து உங்களின் எண்ணம் ப�ோல செயல்பட எடுக்கப்பட்ட புதிய முயற்சி. நீங்கள் அனைவரும் தன்னார்வலர்களாகப் பல்வேறு குழுக்களில் த�ொடர்ந்து பணிபுரிய அன்புடன் அழைக்கிறேன். 2019-ஆம் ஆண்டின் புதிய செயற்குழு சிறப்பாகச் செயல்பட உங்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் க�ொள்கிறேன். என்னோடு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கடுமையாக உழைத்து வெற் றி ய டை ய செ ய ்த அ ன ை த் து செ ய ற் கு ழு உ று ப் பி னர்க ள் , தன்னார்வலர்கள், க�ொடை வள்ளல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரியப்படுத்திக் க�ொள்கிறேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, பாரம்பரியமிக்க நமது தலைநகரத்து தமிழ்ச்சங்கத்தை கடந்த இரண்டு வருடங்களாகச் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் க�ொள்கிறேன். த�ொடர்ந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழ்ப்பணி ஆற்றுவ�ோம். ஒன்றாகச் செய்வோம்... அதையும் நன்றாகச் செய்வோம்... இது நமது தமிழ்ச்சங்கம். நாம் அனைவரும் அதன் அங்கம். வாழ்க தமிழ்! வளர்க நம் ஒற்றுமை!! நன்றி கலந்த வணக்கத்துடன்,

தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

இராசாராம் சீனிவாசன், துணைத்தலைவர் நித்திலச் செல்வன் முத்துசாமி, செயலாளர் அறிவுமணி இராமலிங்கம் இணைச் செயலாளர், ேஹமப்பிரியா ப�ொன்னுவேல், ப�ொருளாளர் இந்திராணி இராதாகிருஷ்ணன், இயக்குனர்கள்

க�ொழந்தவேல் இராமசாமி, சுவாமிநாதன் நித்யானந்தம், தீபா செந்தில்நாத், ராதாகிருஷ்ணன் சந்திரகுமார், கவிதா சுப்ரமணியம், விஜயகுமார் சத்யமூர்த்தி, சீனிவாசன் சண்முகம், பாலாஜி ஜெயக்குமார் ஜனவரி 2019  thenral.mullai@gmail.com

3


ஆசிரியரிடமிருந்து.... தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்.தென்றல் முல்லை ப�ொங்கல் இதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்த்திருநாள், ப�ொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக! ‘ குழந்தைகள் நாள் விழா ‘ தென்றல் முல்லை இதழைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், வரவேற்புப் பகுதியில் உள்ள தன்னார்வத் த�ொண்டர்களிடம் கேட்டு வாங்கிக் க�ொள்ளுங்கள். கடந்த திசம்பர் மாதம் நடைபெற்ற ‘தமிழிசை நிகழ்வும்’, ‘குழந்தைகள் நாள் விழா’வின்கண் இடம் பெற்ற சிறார்களால் நடத்தப் பெற்ற திருக்குறள் கண்காட்சியும் நாம் காணும் ப�ோது, இம் மண்ணிலா ‘மெல்லத் தமிழினிச் சாகும்? என்ற வினானை எண்ணிப் பார்க்குங்கால், நம்மால் நகைக்காமல் இருக்க முடியாது. நம்மை நெஞ்சத்தை அள்ளிய இவ்விரு நிகழ்வைகளையும் முன்னெடுத்துச் செய்த தமிழ்ச்சங்க ப�ொறுப்பாளர்களுக்கும், உற்ற துணை புரிந்த அனைத்துத் தன்னார்வத் த�ொண்டர்களுக்கும், இக்குழுவின் சார்பாக நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் க�ொள்கிறேன். இந்த இதழில் இவைகள் குறித்து படங்களுடன் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இர.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முன்னெடுத்து நடத்தும் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் சூலை மாதம் முதல் வாரத்தில் பேரவைத் தமிழ் விழாவ�ோடு சிகாக�ோ நகரில் நடக்கவுள்ளது. அனைவரும் கலந்து மாநாட்டைச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன். பேரவைத் தமிழ்விழாவின் மையக்கருத்து, “கீழடி: நம் தாய்மடி”; தமிழர்களின் த�ொன்மைச் சிறப்புகளை எடுத்து இயம்பும் வழியில் விழா நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சியும், இந்நாட்டில் வளரும் நம் குழந்தைகளுக்கு அவைகள் ஆற்றி வரும் பணிகளும் வெறும் வெற்றுச் ச�ொற்களில் அடங்கா. ஆனால், இக் குழந்தைகள், ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வத்தை, தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தைச் செலுத்துகிறார்களா என எண்ணிப் பார்ப்பின் ‘இல்லை’ என்ற ஒற்றைச் ச�ொல்லத்தானே ச�ொல்ல முடியும்? இன்றைய சூழ்நிலையில், ‘தமிழ் நூல் வாசிப்பு’ குழந்தைகளிடம் ஆர்வம் ஏற்பட அதற்குரிய த�ொடக்கத்தை அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் த�ொடங்க வேண்டும். அவர்கள் தான் இதனை அவரவர்கள், ‘தமிழே’ என்றன் மூச்சு என்பதை உணர்ந்து செயலாற்ற தம்மில்லத்திலிருந்தே முதலில் த�ொடங்க வேண்டும். இதற்கான முயற்சியைத் த�ொடங்குவதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்படுது நம் கடமையன்றோ! முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். என்ற வள்ளுவன் கூற்றுப்படி அயராது முயல வேண்டும். ம�ொழியே ஓர் இனத்தின் அடையாளம்; ம�ொழி அழிந்தால், அந்த இனமும் அழிந்து விடும் என்பது மெய்மை

அறிவு மணி இராமலிங்கம் ேஹமப்பிரியா ப�ொன்னுவேல்

இவ்விதழ�ோடு இவ்வாசிரியர் குழுவின் பணி முடிவடைகிறது. அடுத்த இதழ் புது ஆசிரியர்களுடன் சிறப்பாக வரும்; இந்தக் குழு வேண்டிய உதவிகளை அளிக்கும். ஆசிரியர் குழுவில் என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் இதழுக்குக் கட்டுரைகள் எழுதிச் சிறப்பித்த படைப்பாளிகளுக்கும், தமிழ்ச்சங்கச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் உளங்கனிந்த நன்றி. கேள்வியெனும் வேள்வி செய்! கேட்காத திசையில்கூட முழங்கச் செய்!

உனக்காக வெற்றி உறுதி செய்!

என்ற முனைவர் சித்ரா மகேசின் கவிதைய�ோடு விடைபெறுகிறேன்.

த�ொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றுவ�ோம். அன்புடன்

நாஞ்சில் இ. பீற்றர்

முதன்மை ஆசிரியர், தென்றல் முல்லை ஆசிரியர்க்குழு

4

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


HOUSE FOR IMMEDIATE SALE IN T.NAGAR ,CHENNAI

1 KM FROM PANAGAL PARK/PONDY BAZZAR/JEEVA PARK

USD 1,475,000

GROUND PLUS 2 FLOORS WITH INTERNAL LIFT 7 BEDROOMS WITH ATTACHED BATH, ROOF GARDEN, 2 CAR PARKS PL CALL

949 910 3578

OR EMAIL TO jvramani@yahoo.com

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

5


முன்னாள் I.A.S அதிகாரி பாலச்சந்திரன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்

வா

சிங்டன் தமிழ்ச்சங்கத்தின் தென்றல் முல்லை இதழ் சார்பாக எங்கள் வணக்கம். சமுதாயத்திற்குச் சேவை செய்யும் எண்ணம் எப்போது வந்தது. உங்களின் உந்து சக்தி யார்? அனைவருக்கும் வணக்கம். மிக முக்கியக் காரணம் இருவர். ஒருவர் எனது தாய் மற்றொருவர் எனது தமிழாசிரியர் எனக்குக் கி ட ை த ்த அ த் து ணை ஆ சி ரி ய ர ்க ளு ம் மு த் து க ்க ள ா க வு ம் ம ா ணி க ்க ங ்க ள ா க வு ம் கிடைத்தனர். ஒரு கிராமத்தில் இருந்து வந்த நான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற, எனக்குக் கிடைத்த அனைத்து ஆசிரியர்களும், சரியான பாதையில் செலுத்திய என் தாயும் தான் காரணமானவர்கள்.

அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ப�ோன்ற தலைவர்களின் சமுதாய சீர்திருத்த கருத்துக்கள், வள்ளுவரின் வாழ்வு முறை இப்போது நடைமுறையில் இருக்கிறதா? அதை எவ்வாறு மேம்படுத்துவது? அண்ணா, பெரியார் ப�ோன்ற தலைவர்களின் ச மு த ா ய சீ ர் தி ரு த ்த க ரு த் து க ்க ள் இ ப ்போ து நடைமுறையில் இருக்கிறதா என்றால் இல்லை எ ன்பதே வ ரு த ்தத் தி ற் கு ரி ய உ ண ்மை . இ ந்தத் தலைவர்களின் கருத்துக்களில் நமது சங்க கால தமிழ்ப் ப ண ்பா டு க ளி ன் ம னி த உ ண ர் வு களை த ா ன் குறிப்பிட்டார்கள். தமிழர்கள் தமிழர்களாக இருக்க வேண் டு ம் , ச ா தி ம த கூ று க ள் அ வ ர ்க ளி ன் அடையாளங்களாக இருக்கக் கூடாது. பெண்களுக்கு மரியாதையை இருந்தது. வள்ளுவர் கூறியது ப�ோல, “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.” பிச்சை எடுத்துத் தான் ஒருத்தன் வாழ வேண்டும் என்ற நிலை இந்த உலகில் ஏற்படின் அப்படி ஒரு வாழ்வை உருவாக்கிய இறைவன் அழிந்து ப�ோகட்டும் என்று கூறியுள்ளார். இப்படிப் பட்ட ஒரு உயரிய சமுதாயமாக இருந்த தமிழ் சமுதாயம் ஏறக்குறைய 2000 வருடங்களாகக் க�ொஞ்சம் க�ொஞ்சமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பக்தி இலக்கியங்கள் தமிழைப் பற்றி உயர்வாக அழகாகப் பேசியுள்ளார்கள். ஆனால் மனிதத்துவத்தை முன்வைத்து அந்த மாண்பு மிகுந்த கருத்து மறைந்து

6

ஜனவரி 2019

ப�ோய்விட்டது, அதைப் பெரியார், மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப் பாடுபட்டார். ஆனால் இன்றைய சமுதாயம் மனிதத்தை, தமிழை மறந்து மிகவும் கீழாகத்தான் இருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்கது. இன்று நமக்கு ஏற்பற்றிருக்கும் வீழ்ச்சி மற்றவர்களால் மற்றும் அல்ல, “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. நாம் நம்முடைய தனித்துவ அடையாளத்தை இழந்துவிட்டது நமது வீழ்ச்சிக்கு மிக மிக முதன்மையான காரணம்.

இன்றைய இளைஞர்களுக்கு இல்லாத சமூக உணர்வுகு என்ன காரணம், எவ்வாறு இளைய சமுதாயத்தை மீட்டுக் க�ொண்டு வருவது என்பது பற்றி உங்களின் பார்வை த�ொடக்கக் கல்வியில் பண்பு ச�ொல்லித் தரப்பட வேண்டும். வெளிநாட்டில் குப்பையை யாரும் கீழே ப�ோடுவதில்லை, கீழே ஏதும் குப்பை கிடந்தால் அதை எடுத்து குப்பைத் த�ொட்டியில் ப�ோடுகின்றனர். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. எனவே த�ொடக்கக் கல்வியில் பண்பு, ஒழுக்கம், நேர்மை ப�ோன்றவற்றை கற்றுத் தரவேண்டும். நம் நாடு விடுதலை அடைந்ததற்கு காந்தி, நேதாஜி ப�ோன்ற பல தலைவர்கள் மட்டும் காரணமல்ல, இங்கிலாந்தில் உள்ள இளைய சமுதாயம் ஆள்கின்றவர்களைப் பார்த்து கேட்டார்கள், பாசிச சமுதாயத்தை எதிர்த்து ப�ோரிடுகிற�ோம் என்கிறீர்களே , இந்தியாவில் நீங்கள்

 thenral.mullai@gmail.com


செய்வது என்ன என்று? ச�ொல்வது ஓன்று செய்வது ஓன்று என்று இருக்கும் தலைமையை எதிர்ததுக் கே ள் வி கேட் கு ம் தி ற ன ை அ வ ர ்க ள து க ல் வி அவர்களுக்கு வழங்கி இருந்தது. நமது கல்வி முறை இன்று மாறி விட்டது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும் ப�ோ து சு த ந் தி ர ம் இ ரு ந்த து , ஓ வி ய ம் , நீ ச ்ச ல் , விளையாட்டு என எல்லாம் கற்று தந்து ஒரு நம்பிக்கை உள்ள மனிதர்களாக உருவாக்கும் கல்வி முறை இருந்தது. ஆனால் இன்று படித்தவுடன் ஒரு நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என்பதை மட்டுமே அ டி ப ்பட ை ய ா க க் க�ொ ண ்ட த ா க ம ா றி ய து வருந்தத்தக்கது. மாணவர்கள் மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக இல்லாமல் சமூக அக்கறைய�ோடு, நம் மரபு, பண்புகளை, ஒழுக்கத்தை, வரலாற்றைப் படித்து எதையும் சிந்தித்து வாழ்வியலை எதிர்நோக்கும் சந்ததியாக வரவேண்டும். நமது கல்வி முறையும் இதனை ஒட்டி மாற்றியமைக்கப்படவேண்டும்.

நாட்டுக்காரர் ச�ொன்னார், இ வ ர ்க ள் அ ன ை வ ரு ம் இ ப ்ப டி யே ஒ ரு வ ர் மண்டையை ஒருவர் உடைத்துக் க�ொள்வார்கள், ஏத�ோ நாங்கள் இருப்பதால் இவர்கள் எல்லாருடைய பணத்தையும் பத்திரமாக வைத்திருக்கிற�ோம் என்று. உடனே ஆப்ரிக்கா நாட்டவர் ச�ொன்னார், எங்கள் ம�ொ ழி யை அ ழி த ்தார ்க ள் , எ ங ்க ள் இ ன அடையாளங்களை அழித்தார்கள் ஆனால் எங்கள் இசையை அழிக்க முடியவில்லை, என்றும் இசையின் முடிசூடா மன்னர்கள் நாங்கள் தான் என்று.

உடனே சீனாக்காரர் ச�ொன்னார் 5000 ஆண்டுகளாக அடிமைப்படாத, ஒரே ம�ொழியைச் க�ொண்ட தேசம் எங்களது என்றார். எனது முறை வந்தது, நான் இந்தியாவில் தமிழ்நாடு எனும் மாநிலத்தில் இருந்து வருகிறேன், 300 ம�ொழிகள், 3000 வட்டார ம�ொழிகள், 18 அங்கீகரிக்கப்பட்ட ம�ொழிகள் என்று பறந்து வி ரி ந்த ப ன் மு க த ்தன்மை க�ொ ண ்ட ந ா டு . இ ந் தி ய ா வி ல் நீ ங ்க ள் ப ல இ ட ங ்க ளி ல் இ ந் தி ய எல்லாவற்றையும் ச�ொல்லுவதை விட என் ஆட்சிப்பணியில் பணியாற்றியப�ோது, தமிழனாக மாநிலத்தைப் பற்றிச் ச�ொல்கிறேன், எங்கள் நீங்கள் பெருமைப்பட்ட நிகழ்வு பற்றி எங்களுடன் புலவர் ஒருவர், எறக்குறைய 1800 - 2000 பகிர்ந்து க�ொள்ளுங்கள். வருடங்களுக்கு முன்பு கூறியது, “யாதும் கண்டிப்பாக, நான் பல கூட்டங்களில் ஒரே யாவரும் கேளிர்” (“The whole globe is இதைக் கூறியுள்ளேன். சுற்றுச்சூழல் துறை my village, every living human being my relஇணைச்செயலாளர் ஆக இந்திய அரசில் ative”) என்று கூறியிருக்கிறார். மனிதரையும் பணிபுரியும் ப�ோது, ஐ.நா சபை சுற்றுச்சூழல் விலங்கையும் கூட பிரிக்கவில்லை, யாவரும் துறையின் கூட்டங்களுக்குச் செல்லும் கேளிர் என்று கூறியுள்ளார் என்றேன். ப�ோது பகல் நேரங்களில் கடுமையான உடனே ஆங்கிலேயர் கேட்டர் எப்போது வேலை இருக்கும், முன்னிரவில் விருந்து (இளவழுதி வீரராசு) கூறியது என்று, எவ்வளவு ம�ொழி ஆய்வுக்கு நடனங்கள் ப�ோன்று இருக்கும், ஒருநாள் ஒரு உட்படுத்தினாலும் குறைந்தது 1800 முதல் ஆங்கிலேயர், எப்போதும் ப�ோல இன்றைய மாலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர், அதற்கான ஆதாரமும் ப�ொழுது கழிய வேண்டாம், நமது நாட்டைப்பற்றி இ ரு க் கி ற து எ ன்றே ன் . உ டனே அ வ ர் 1 0 0 0 ஒரு செய்தியை இங்கு பகிர்ந்து க�ொள்வோம் என்று ஆண்டுகளுக்கு முன்னர் 50 மைல் தூரத்துக்கு மேல் ச�ொல்லி, அவரே ஆரம்பித்து கூறினார், எவ்வளவ�ோ பயணம் செய்ய முடியாது என்ற நிலையில் அந்த இருந்தாலும், அந்த இடர்பாடுகளுக்கு மத்தியில் ஒரு புலவர் இவ்வாறு சிந்தித்து உலகம் முழுதும் ஒரு அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டுமென்றால், கிராமம் என்று கூறி இருக்கிறாரே என்றதும், நான் நாங்கள் நிலைநாட்டி விடுவ�ோம், அதனால் தான் அதுமட்டுமல்ல, “தீதும் நன்றும் பிறர் தர வாரா” உலகின் 3- ல் 2 பகுதியை ஆளும் வலிமையை என்றும் கூறி இருக்கிறார்கள். “The good and the bad ப ெ ற் றி ரு ந்த ோ ம் எ ன் று கூ றி ன ா ர் . உ டனே that happened at to you is not because of others it’s beபிரெஞ்சுக்காரர் கூறினார், அரசியல் அதிகாரத்தை cause of your ownself” என்றேன். உடனே அவர் கைப்பற்றியதால் ஆங்கிலத்தை மற்றவர்கள் மீது ச�ொன்னார், “எல்லாரும் எழுந்து நின்று, இந்த உலகின் திணித்தார்கள் என்பது பெருமை கிடையாது, பழமையான பண்பாட்டுக்கு மரியாதை செலுத்துங்கள்,” இவர்கள் ஷேக்ஸ்பியர் பற்றிப் பெருமையாகச் என்று. என் கண்களில் என்னையும் மீறி கண்ணீர் ச�ொல்வார்களே, எங்கள் அலெஸ்சாண்டர் டூமாஸ் எட்டிப்பார்த்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, உடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை எனவே பண்பட்ட செல்வங்களை அளித்தார்களே அந்த இலக்கியத்தில் நாங்களே சிறந்தவர்கள் என்றார். முன்னோர்களுக்கு நாம் செய்கின்ற மரியாதை என்ன உடனே ஜெர்மானியர் ச�ொன்னார், இப்படித்தான் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. எனவே எனக்குப் இருவரும் சண்டைப்போட்டு க�ொண்டு இருப்பார்கள், பெருமிதமும் வருத்தமும் கலந்த ஒரே தருணம் அது ஆனால் மெக்கானிக்கல் என்று வரும் ப�ோது எங்களை தான். மிஞ்ச உலகில் யாருமில்லை என்றார். சுவிச்சர்லாந்து

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

7


இரங்கல் செய்தி

த�ொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்!

ப�ொற்காலம் காண்பது எப்போது? சுப. முத்துக்குமார்

த மி ழ் க ல ்வெட் டு ஆ ர ா ய் ச் சி ய ா ள ரு ம் , த�ொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் நவம்பர் 26, 2018 அன்று இயற்கை எய்தினார். இவர் அக்டோபர் 2, 1930-‍ இல் மண்ணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தன் ஆர்வத்தால், தமிழ் ம�ொழி மற்றும் கல்வெட்டு ஆய்வுகளில் ஈடுபடுத்திக் க�ொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ‌‌ஒருவராகத் திகழ்நதார்.‌‌ த�ொல்லியல் சான்றுகளுடன் சங்ககாலத்தை இந்திய ஆய்வுப்புலத்தில் நிறுவியது அன்னாரின் ஒரு மாபெரும் சாதனை. 1987-1991 ஆண்டுகளில் இவர் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். த�ொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு 2001-இல் டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற பேரவைத் தமிழ்விழாவில் மாட்சிமை விருது வழங்கப்பட்டது. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் க�ொள்கிறது.

8

ஜனவரி 2019

வாழ்க்கை நெறிக்கு வள்ளுவம் வ ழ ங் கி ய த மி ழ ்நா டு இ ன் று அறமற்றுப் ப�ோனது எவ்வாறு?

தன் மகனைத் தேர்க்காலிட்ட மனுநீதிச் ச�ோழன் வாழ்ந்த தமிழ்நாடு, இன்றங்கு பஞ்ச மாபாதகங்கள் நிறைந்திருப்பது எவ்வாறு?

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் ப�ோர்வையும் ஈந்த மன்னர்கள் வாழ்ந்த செந்நாடு, இன்றங்கு நாடாளுபவர் க�ொள்ளையர் கூட்டமாய்த் திகழ்வது எவ்வாறு?

வீட்டுத் திண்ணையிலும் இலவசப்பள்ளிகள் நடத்திய தமிழ்நாடு, இன்றங்கு கல்வி வியாபாரமாகிப் ப�ோனது எவ்வாறு?

தீந்தமிழ் இலக்கியங்கள் தந்த திருநாடு, இன்றங்கு தமிழ் மறக்கப்படுவது எவ்வாறு?

வைகையும் காவிரியும் கரை புரண்டோடிய வளநாடு இன்று முட்காடாகிப் ப�ோனது எவ்வாறு?

நன்செய்யும் புன்செய்யும் செழித்த தமிழ்நாடு இன்று தரிசாய்ப் ப�ோனது எவ்வாறு?

கூவும் குயிலும் அகவும் மயிலுமென கானம் இசைத்த தமிழ்நாடு, இன்றங்கு பறவைகள் அரிதாகிப் ப�ோனது எவ்வாறு?

இறைவன் உறைய புனித ஆலயங்கள் அமைத்த திருநாடு, இன்றவை வணிகக் கூடங்களாகிப் ப�ோனது எவ்வாறு?

அருங்கலைச் சிற்பங்களில் இறைவனைக் கண்ட நன்நாடு, இன்றங்கு சிலைகள் களவாடப்படுவது எவ்வாறு?

ஒன்றுபட்டு தமிழர்களாய் வாழ்ந்த திருநாடு இன்று திராவிடம் ஆரியம் பேசித் திரிவது எவ்வாறு?

மீண்டும் நம் தமிழகம் ப�ொற்காலம் காண்பது எவ்வாறு? அது எப்போது?

 thenral.mullai@gmail.com


திருமதி தாரா சிவாவின் திறனாய்வில்

2018இல் வெளியான‌ பத்து சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் த�ொலைத்த இரு காதலர்களிடையேயான நீண்ட உரையாடல்தான் இந்த மனதை வருடும் திரைப்படம். இயக்குனர் பிரேம் குமாரின் முதல் படம்.

பரி ஏறும் பெருமாள்:

மேல் சாதி, கீழ் சாதிக் காதல் என்றாலே ஆணவக்கொலை, கத்தி, அரிவாள்தான் எ ன்ற க ா ல க ட ்ட த் தி ல் , ச ா தி ஆ ண வ த் தி ல் ஊறியிருப்பவர்களில் கூட ஏத�ோ ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் ஒரு திரைப்படம். தமிழ் சினிமா இதுவரை கண்டிராத நம்பிக்கையூட்டும் ஒர் சிறு சமரச முடிவு மிகுந்த பாராட்டுக்கு உரியது. இயக்குனர் மாரி செல்வராஜுக்கும், இதில் மிகச் சிறப்பாக நடித்த நடிகர் கதிருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துவ�ோம்!

நாச்சியார்: இயக்குனர் பாலாவின் படங்களிலேயே, நமக்கு மனம் உவந்த ஒரு நல்ல முடிவைக் க�ொடுத்திருக்கும் ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்! ஒரு இளம் பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமானவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பெண் காவல் துறை அதிகாரியாக ஜ�ோதிகா மிக அருமையாக நடித்திருக்கிறார்.

மேற்குத் த�ொடர்ச்சி மலை:

ஏலக்காயின் நறுமணம் கமழும் ப�ோதெல்லாம், மடித்துக் கட்டிய லுங்கியுடனும், ரப்பர் செருப்புடனும், மூட்டை தூக்கி மலைப்பாதைகளில் நடந்து வந்த அந்த எளிய மக்கள் நம் நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டத் திரைப்படம் “மேற்குத் த�ொடர்ச்சி மலை! மலையும் மலை சார்ந்த இடமும், மலையையே நம்பியிருக்கும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் அருமையாக காட்சியமைக்கப்பட்டிருக்கின்றன.

ராட்சசன்: தமிழில் பரபரப்பான ஒரு திகில் படம்!. காவல் துறையின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ஒரு த�ொடர் க�ொலையாளியை துரத்தும் ஒரு முயற்சியில் பார்வையாளர்களையும் கூடவே க�ொண்டு செல்லும் ஒரு சுறுசுறுப்பான திரைப்படம். காலா: வயதிற்கேற்ற த�ோற்றத்தில் இயல்பான ரஜினிகாந்த்தை மீட்டெடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சமூக நீதியை உரக்கக் கேட்கும் தீப்பொறி ப�ோன்ற வசனங்கள்: நிறத்தைக் க�ொண்டு அரசியல் பேசுகிற திரைப்படம்.

வட சென்னை: வட சென்னை, அதன் இருண்ட வாழ்க்கை, அதன் தனித்துவம் மிக்க ம�ொழி, கலாச்சாரம், துர�ோகம், அதன் பின் உள்ள நியாயங்கள், சிறைகளுக்கு உள்ளேயும் ஊடுருவி இருக்கும் தாதாக்களின் அரசியல் ஆகியவற்றை மிக விரிவாகவும், விறுவிறுப்பாகவும் இந்தப் படத்தில் க�ொடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

சவரக்கத்தி: ஒரு சவரத் த�ொழிலாளி, அவனைத் துரத்தும் ஒரு க�ொலைகாரன். ஒரே நாளில் இவர்களுக்கிடையே நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டே இந்தப் படம். இயக்குனர் மிஸ்கின் தன் வழக்கமான பாணியில், நெகிழ்ச்சிய�ோடு, நகைச்சுவையும் சேர்த்துக் க�ொடுத்திருக்கிறார்.

60 வயது மாநிறம்: ராதாம�ோகனின் படங்கள் எப்போதுமே ம னி த ர ்க ளு க் கி டையே ய ா ன இ ய ல ்பா ன உ ணர் வு களை ப் பிரதிபலிப்பவையாக இருக்கும். இந்தப் படத்தில் நினைவிழந்துவிட்ட ஒரு வயதான தந்தையைத் தேடி அலையும் ஒரு மகன், சந்திக்கும் அத்தனை பேரின் வாழ்க்கையையும் தன்னை அறியாமலேயே மாற்றி அமைக்கும் அந்தத் தந்தை என்று ஒரு உருக்கமான கதையை இதில் ச�ொல்லியிருக்கிறார்.

க�ோலமாவு க�ோகிலா: விலை உயர்ந்த க�ோட்டு சூட்டு ப�ோட்டு, கறுப்புக் கண்ணாடி ப�ோட்டு, பின்னால் இருபது அடியாட்கள் படை சூழ ஸ்டைலாக நடந்து வந்த ‘காங்ஸ்டர்’ ஹீர�ோ பிம்பங்களை எல்லாம், ஒரே படத்தில் அடித்து ந�ொறுக்கிவிட்டார் நயன்தாரா! பாவாடை சட்டை, ஒற்றை ஜடை, குனிந்த தலை, மையிட்ட பெரிய கண்கள், அப்பாவித்தனம் ச�ொட்டும் முகம், க�ொஞ்சும் குரல் க�ொண்ட ஒரு பெண் எப்படி கடத்தல் செய்கிறாள் என்பது மிக நகைச்சுவையாக அளிக்கப்பட்டிருக்கிறது.

96: 2018 ஆம் ஆண்டில் மிக அதிமான அளவு விவாதிக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன் காதலைத்

இதைத் தவிர, “ஒரு குப்பைக் கதை” திரைப்படத்தையும் 2018 சிறந்த பட வரிசையில் சேர்க்கலாம். - ஆசிரியர்

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

9


இலக்கியம்

ம

நெடுநல்வாடை: ஒரு கண்ணோட்டம்

னித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒ ரு வ ர் க ா த லி க் கு ம் ப�ொ ழு து ம் , அ வ ர ்க ளி ன் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து க�ொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அ க ப ்பொ ரு ளை ப ்பற் றி ப் ப ா டு ம் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். ப�ோர், வீரம், வெற்றி, புகழ், க�ொடை, நிலையாமை முதலிய ப�ொருட்களை மை ய ம ா கக ்கொ ண ்ட ப ா டல ்க ள் புறத்திணையில் அடங்கும். சங்க இலக்கியம் சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் ப�ொதுவாகப்

10

ஜனவரி 2019

பெரும்பால�ோர் ஏற்றுக்கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் த�ொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அ ழைக ்க ப ்ப டு ம் பத் து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் த�ொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற ச�ொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படு கின்றன.

முனைவர் இர. பிரபாகரன்

 thenral.mullai@gmail.com

நெடுநல்வாடை நெ டு ந ல்வாட ை

ம து ரை க்


கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பவரால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடல். நெடுநல்வாடையில் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வ ா ட ை ய ா க வு ம் , ப�ோ ர் வெற் றி யைப் ப ெ ற ்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் ப�ொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. அகத்திணைப் பாடல்களில் தலைவன், தலைவி ஆகிய�ோரின் பெயர்களைக் குறிப்பிடுவது இல்லை. அந்த மரபிற்கேற்ப, இப்பாடலில் தலைவன் தலைவி பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அகத்திணைப் ப ா டல ்க ளி ல் , பி ரி ந் து சென்ற த லை வ னி ன் வருகைக்காகத் தலைவி காத்திருப்பதைப் பற்றிப் பாடும் பாடல்கள் முல்லைத் திணையில் அடங்கும். நெடுநல்வாடையில் தலைவன் தலைவி பெயர் கு றி ப் பி ட ா ம ல் , த லை வி த லை வ னு க்கா க் க ா த் தி ரு ப ்பதைப் பற் றி ப் ப ா டி யி ரு ப ்ப த ா ல் நெடுநல்வாடை முல்லைத்திணையச் சார்ந்த அகத்திணைப் பாடலாகும். சிலர் நெடுநல்வாடை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் க�ொண்டு பாடப்பட்ட பாடல் என்றும் அது புறத்திணையைச் சார்ந்தது என்றும் கூறுவர். நெடுநல்வாடை – ப�ொருட்சுருக்கம் மழைக்கால நிகழ்வுகள் மழைக்காலம் வந்துவிட்டது. மேகங்கள் தவறாமல் மழை ப�ொழிகின்றன. இடையர்கள் தங்கள் ஆடு, மாடு ப�ோன்ற நிரைக் கூட்டங்களை மேட்டு நிலத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் மார்பில் அ ணி ந் தி ரு க் கு ம் செ ங ்காந்த ள் ம ல ர ா ல ா ன மாலையிலிருந்து விழும் நீர்த்துளிகள் அவர்கள் உடலில் படுவதால் அவர்கள் பெருங்குளிரில் நடுங்குகிறார்கள். தங்கள் மேனியின் குளிரைத் தணிக்க, பலரும் கூடித் தங்கள் கைகளை நெருப்பில் காட்டிச் சூடேற்றிக் க�ொண்டாலும் அவர்களின் கன்னங்கள் புடைத்து நடுங்குகின்றன. விலங்குகள் மேய்த்தலை மறந்தன; குரங்குகள் குளிரால் கூனிப் ப�ோயின; பறவைகள் குளிரால் நடுங்கின. இவ்வாறாக, மலையையே குளிர்விப்பது ப�ோல் மழைக் காலத்தின் மாலைநேரம் இருக்கிறது. முசுண்டைக் க�ொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், ப�ொன் ப�ோன்ற பீர்க்கம் பூக்கள�ோடு பு த ர ்க ள்த ோ று ம் ம ல ர் ந் தி ரு க் கி ன்றன . பசுங்கால்களையும், மென்மையான சிறகினையும் க�ொண்ட க�ொக்கின் கூட்டங்கள், கருமை நிறமான வ ண ்ட ல் ம ண் ப ர வி க் கி ட க் கு ம் ஈ ர ம ா ன வெண்மணலில், செவ்வரி படர்ந்த நாரைகள�ோடு நின்று க�ொண்டிருக்கின்றன. மழைநீரின் வேகம்

கு றைந்த வு ட ன் , அ ந் நீ ரி ல் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களிலிருந்து கவர முடியும�ோ, அங்கே நின்று க�ொண்டு நாரைகளும் க�ொக்குகளும் கவர்கின்றன. நன்றாக மழை பெய்ததால், வயல்களில் செழித்து வளர்ந்த நெற்கதிர்கள் முற்றித் தலைகுனிந்து நிற்கின்றன. மலையுச்சியில் பல்வேறு மலர்கள் பூத்திருக்கும் ச�ோலையில் உள்ள மரக் கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது ச�ொட்டிக் க�ொண்டிருக்கின்றன. மாடங்கள் உயர்ந்து விளங்கும் வளமான ஊரின் ஆறுப�ோல் அகன்ற நீண்ட தெருக்களில், தழைகளாலான மாலையணிந்து, பருத்த அழகிய வலிய த�ோள்களும் முறுக்குண்ட வலிமையான உடம்பும் பெற்ற ஆண்கள், கள்ளினை அதிகமாகக் குடித்து, மிகுந்த மகிழ்ச்சிய�ோடு ம ழைத் து ளி த ம் மே னி யி ல் வி ழு வ தை யு ம் ப�ொருட்டுத்தாமல்,பகல் ப�ொழுது கழிந்த பிறகும், விரும்பிய இடங்களிலெல்லாம் சுற்றித் திரிகின்றனர். வெண்மையான சங்குகளால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்த முன்கைகளும், மூங்கில் ப�ோன்ற த�ோள்களும், மென்மையான மேனியும், முத்துப் ப�ோன்ற பற்களும் உடையவர்களாகப் பெண்கள் காட்சி அளிக்கின்றார்கள். அவர்கள், தங்கள் பெண்மைக்குரிய பேதைமைத் தன்மைய�ோடு இருக்கிறார்கள். பூந்தட்டில் வைத்திருக்கும் பிச்சியின் அரும்புகள் மலர்வதைக் கண்டு, இப்பெண்கள் மாலைக் காலம் வந்துவிட்டதை உணர்கிறார்கள். இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் க�ொளுத்தி, நெல்லும் மலரும் தூவித் த�ொழுது, அவர்கள் தெய்வத்தை வழிபடுகின்றார்கள். ப ெ ண ்க ள் த ங ்க ள் அ டர்ந்த க ரி ய கூ ந்த லி ல் பூமாலைகளைச் சூடவில்லை; சில மலர்களையே சூடி உள்ளனர். குளிர்ச்சியைத் தரும் வாசனை மரத்தின் விறகில் நெருப்பை உண்டாக்கி, அகில் மரத்தின் துண்டுகள�ோடு வாசனைப் ப�ொருள்களையும் சே ர் த் து ப் பு கையை மூ ட் டு கி ன்றன ர் . கைவேலைப்பாட்டுடன் அழகாகச் செய்யப்பட்ட வி சி றி க ள் ப ய ன்ப டு த ்த ப ்பட ா ம ல் ஆ ணி க ளி ல் த�ொங்குகின்றன. வானத்தைத் த�ொடுமளவுக்கு உயர்ந்து விளங்கும் மேல்மாடத்தில் தென்றல் வரும் இடங்களில் உலாவுவதைப் பெண்கள் தவிர்த்தனர். சன்னல்களும் கதவுகளும் தாழிட்டுக் கிடக்கின்றன. அங்கிருந்த தூபமூட்டியின் நெருப்பின் வெப்பத்தில் குளிர் காய்ந்துக�ொண்டு, தங்கள் கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் வருத்தத்தோடு காணப்படுகின்றனர். மன்னனின் அரண்மனை கட்டடக்கலைக்கேற்ப, மன்னனின் அரண்மனை அழகாகவும் பெரிதாகவும் கட்டப்பட்டிருக்கிறது. அரண்மனையைச் சுற்றிலும் உயர்ந்த மதில் இருக்கிறது.

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

11


மதிலின் வாயிலில் உள்ள கதவுகள் இரும்பினால் செய்ய ப ்பட் டி ரு க் கி ன்றன . ம தி லி ல் இ ரு ந்த நுழைவாயிலில் புகுவது மலைக்குள் புகுவதுப�ோல் உள்ளது. யானைகள் வெற்றிக்கொடியுடன் அந்த நுழைவாயில் வழியாக செல்லுமளவுக்கு அந்த நுழைவாயில் உயரமாக இருக்கிறது. அரண்மனையின் முற்றத்தில் கவரிமான்கள் அன்னப்பறவைகள�ோடு தாவித் திரிகின்றன. குதிரைகளின் ஒலியும், மயில்கள் கூவும் ஒலியும், மழைநீர் ஓசையும் மலையிலிலிருந்து எழும் ஆரவாரம்போல் உள்ளன. அந்தபுரத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தைப் பார்த்தால் உயரமான மலைகளைப் பார்ப்பதுப�ோல் இருக்கிறது. அந்த மலைகளில் வானவில் த�ோற்றமளிப்பதுப�ோல், அந்தப்புரத்தில் பல நிறமான க�ொடிகள் பறந்து க�ொண்டிருக்கின்றன. அந்தப்புரத்தின் பல இடங்களில் வெண்மையான சாந்து பூசப்பட்டிருக்கிறது. அங்குள்ள வ லி மை ய ா ன தூ ண ்க ள் நீ ல நி ற ம ா க க் க ா ட் சி அளிக்கின்றன. அந்தப்புரத்தின் வெளிச்சுவர் செம்பை உருக்கிச் செய்ததுப�ோல் காட்சி அளிக்கிறது. அந்த நெ டி ய வெ ளி ச் சு வ ரி ல் , பல வி த ம ா ன பூ க ்க ள் ஒருக�ொடியைச் சுற்றி இருப்பதுப�ோல் ஒரு சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்தப்புரம் மிக அழகாகக் காட்சி அளிக்கிறது. தலைவி படுத்திருக்கும் வட்டக்கட்டில் அந்த அழகான அந்தப்புரத்தில், தந்தத்தால் செய்யப்பட்ட, மிக அழகான, வட்ட வடிவமான கட்டில் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிலைச் சுற்றிலும் த�ொங்கும் முத்துமாலைகள் சன்னல்கள்போல் காட்சி அ ளி க் கி ன்றன . பு லி யி ன் வ ரி களைப் ப�ோன்ற நிறமுடைய பூக்கள் நிறைந்த தட்டுகளைப்போல், வடிவமைக்கப்பட்டிருக்கும் தகடுகளால், கட்டிலின் மேலிடம் மறைக்கப்பட்டிருக்கிறது. அன்னத்தின் சிறகுகளாலான மெத்தையும் தலையணைகளும் கட்டிலை அலங்கரிக்கின்றன. அவற்றின் மேல், சிங்கம் வேட்டை வேட்டையாடுவதைப் ப�ோன்ற ஒருசித்திரம் வரையப்பட்ட விரிப்பு இருக்கிறது. அ த ன்மே ல் பல வ கை ய ா ன ம லர ்க ள் பரப்பப்பட்டிருக்கின்றன. படுக்கையில் இருந்த தலைவியின் நிலை அந்த அழகிய கட்டிலில் அந்த நாட்டு அரசி அமர்ந்திருக்கிறாள். அவள் மார்பில் முத்துமாலை அணிந்திருக்கிறாள். அவளுடைய நீண்ட கூந்தல் பின்புறம் தாழ்ந்தும், ஒரு சில மெல்லிய மயிர்கள் நெற்றியில் தவழ்ந்துக�ொண்டும் உள்ளன. அவள் காதுகளில் ப�ொன்னாலான அணிகலன்கள் இல்லை; கைகளில் ப�ொன்னாலான வலையல்களுக்குப் பதிலாக சங்கு வளைல்கள் அணிந்திருக்கிறாள்; விரல்களில் விலை உயர்ந்த ம�ோதிரங்கள் இல்லை;

12

ஜனவரி 2019

வழக்கமாகப் பட்டுப் புடைவையை உடுத்துபவள் ம ா சு ப டி ந்த நூ ல ா ல ா ன பு ட ை வையை அணிந்திருக்கிறாள். தன் கணவன் ப�ோருக்குச் சென்றிருப்பதால், அவள் மிகுந்த வருத்தத்தோடு, ஒப்பனை செய்யப்படாத ஓவியம்போல் காட்சி அளிக்கிறாள். அவள் துயரத்தைக் குறைப்பதற்காக, செவிலியர் பலரும், ”உனக்கு இனிய துணையாய் அமைந்த தலைவர் இப்பொழுதே வருவார்” என்று தலைவியின் மனம் விரும்பும் வகையில் இனிய ம�ொழிகளைக் கூறி, தலைவியைத் தேற்றுகின்றனர். செவிலியர் பலரும் ஆறுதல் கூறினாலும், கணவனைப் பிரியாமல் வாழமுடியவில்லையே என்று தலைவி மனம் கலங்கிக் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறாள். ”அன்பு மிகுந்த தலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில் தலைவனுக்குப் ப�ோரில் வெற்றியைத் தந்து, இப்பொழுதே ப�ோரை முடித்துத் தருக. எம் விருப்பத்தைக் கேட்பாயாக” என்று வெற்றியைத் தரும் க�ொற்றவையை செவிலியர் வேண்டுகின்றனர். மன்னனின் நிலை ப�ோர்க்களத்தில், பகைவர்களின் யானைகளின் நீண்ட திரண்ட கைகளை, நிலத்தில் புரளுமாறு மன்னனின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். ப�ோரில் விழுப்புண்பட்ட வீரர்களைக் காண்பதற்காகப் பாசறையிலிருந்து மன்னன் வெளியே செல்கிறான். அங்கே எரிந்து க�ொண்டிருந்த அகல் விளக்குகளின் பருத்த தலைகள் வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும்பொழுதெல்லாம், அசைந்து தெற்கு ந�ோக்கி எழுந்து சாய்கின்றன. அவ்வொளியில், வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய வலிய க ா ம் பி ன ை யு ட ை ய வே லி ன ை ஏ ந் தி ய ா வ ா று வீரன�ொருவன் முன்னே செல்கிறான். அவன், புண்பட்ட வீரர்களை முறைப்படித் தலைவனுக்குக் காட்டிச் செல்கிறான். ப�ோரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் மன்னன் அவர்கள் முகம் மலர ந�ோக்குகிறான். இவ்வாறு நள்ளிரவிலும் உறங்காது, புண்பட்ட வீரர்களைப் மன்னன் பார்த்து வருகிறான். பல பகைவர்களை எதிர்த்துப் புரியும் இந்தப் ப�ோர், இப்பொழுதே மன்னனுக்கு வெற்றிய�ோடு முடிவடையட்டும். சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அக்கால மக்களின் வாழ்க்கை பழக்க வழக்கங்கள் காண கிடக்கிறது. நெடுநல்வாடையிலும், அன்றைய மன்னரும், மக்களும் வாழ்ந்த வாழ்க்கையை நாம் காணமுடிகின்றது. இது ஒரு புறப்பொருள் நூலாக இருப்பினும் இதில் பெருமளவு அகப்பொருள் தன்மைகள் ப�ொதிந்துள்ளன. நெடுநல்வாடை அகப் ப�ொருளையே பேசினாலும், புறப்பொருள் நூல்கள் வரிசையில்தான் வைக்கப்பட்டுள்ளது.

 thenral.mullai@gmail.com


லவுடன் மாவட்டத்தின் ப்ராம்பெல்டன் நூலகத்தில் தமிழ் நூல்கள் வள்ளுவன் தமிழ் மையத்தின் சீரிய முயற்சியால் விர்ஜினியா மாநிலத்தில் லவுடன் மாவட்டத்தின் (County) ப்ராம்பெல்டன் நூலகத்தில் (Brambleton Library) டிசம்பர் 1, 2018 முதல் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமென்று தமிழ்ப் புத்தகங்கள் தமிழ் மக்களின் பயன்பாட்டிற்கு நூலகத்தின் அலமாரிகளில் அரங்கேறி உள்ளது. அன்றைய நாள் தமிழ் மக்கள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி, அதன் வெளிப்பாடாக தமிழ் ச�ொந்தங்கள் பலர் நூலகத்திற்குச் சென்று அலமாரியின் தமிழ் புத்தகங்களின் அழகைக் கண்டு மகிழ்ந்தார்கள். தமிழ் நாட்டில் அத்தனை நூலகங்களில் தமிழ் புத்தங்களை பார்த்த நாம், அமெரிக்காவில் 523 புத்தகங்களை நமது பகுதி நூலகத்தில் பார்க்கும்போது, பலரின் கண்கள் ஆனந்த கண்ணீரால் குளமாயின என்பதே உண்மை. இந்த மகிழ்ச்சியை க�ொண்டாடும் விதமாக டிசம்பர் 15, 2018 அன்று ப்ராம்பெல்டன் நூலகத்தில் தமிழ் ச�ொந்தங்கள் பலரும் சந்தித்து தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக�ொண்டார்கள் . இந்த நிகழ்ச்சியை ராம் வெங்கடாச்சலம் (Loudoun County Transit Advisory Board member) அவர்கள் நூலகத்தின் அலுவர்களுடனும் வள்ளுவன் தமிழ் மையத்தின் நிர்வாகிகளுடனும் த�ொடர்பு க�ொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவி செய்தார்கள். வாஷிங்டன் தமிழ் சங்க நிர்வாகிகள், சங்கமம் தமிழ் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பல தமிழ் ச�ொந்தங்கள் கலந்து க�ொண்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. அனைவரையும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முன்னாள் தலைவர் பாஸ்கர் குமரேசன் அவர்கள் வரவேற்று பெரும்பான்மையான�ோரை அழைத்து பேசவைத்தார்கள். தமிழ் சங்கத்தின் தலைவர் ராஜாராம் சீனிவாசன், ராம் வெங்கடாசலம், வள்ளுவன் தமிழ் மையத்தின் தலைவர் செல்வம�ோகன் நீதிராஜ் , வள்ளுவன் தமிழ் மையத்தின் முன்னாள் தலைவர் வேல்முருகன் பெரியசாமி, நம் பகுதியில் வசிக்கும் எழுத்தாளர் சத்யராஜ்குமார கிருஷ்ணசாமி, சங்கமம் பள்ளியின் தலைவர் சாந்தகுமார் காளியப்பன் மற்றும் அனைவரும் தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து க�ொண்டார்கள். ப்ரா ம ்பெல ்ட ன் நூ ல க த் தி ன் மே ல ா ள ர் கி றி ஸ் டி ன் தாம்ப்ஸன் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் நம்முடன் இருந்து சிறப்பித்தார்கள் மற்றும் அவர் பேசும்பொழுது, புத்தகங்கள் நூலகத்தில் அரங்கேறிய முதல் 5 நாட்களுள் 127 தமிழ்

புத்தகங்கள் பயன்பாட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட புள்ளி விபரத்தை பதிவு செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை விகடன், வலைத்தமிழ், தமெரிக்கா இணையதளங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன. லவுடன் மாவட்டத்தின் அருகில் இருக்கின்ற மற்ற மாவட்டத்தை சார்ந்தவர்களும் ப்ராம்பெல்டன் நூலகத்தில் தமிழ் புத்தகங்களை எடுத்து பயன் பெறலாம். நமது பகுதியில் இயங்குகின்ற தமிழ்ப் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் ப்ராம்பெல்டன் நூலகத்தில் இருந்து தங்கள் வகுப்பு குழந்தைகளுக்காகப் புத்தகங்களை எடுத்து பயன் பெறலாம். விடுமுறை நாட்களில் குழந்தைகள் எத்தனை புத்தகங்கள் படிக்கிறார்கள் என்ற பதிவையும் பராமரிக்கலாம். ப்ராம்பெல்டன் நூலகத்தில் உள்ள தமிழ் புத்தகங்களை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம். https://catalog.library. loudoun.gov/?section=search&term=tamil அமெரிக்காவில் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி. நாமும் நம் பின் வரும் தலைமுறையும் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நம் ம�ொழியையும் நம் ம�ொழியின் சிறப்புகளையும் நன்றாக அறிந்து க�ொள்ளலாம். அது மட்டுமல்ல நூலகம் என்பது சிறந்த அறிவி கடத்தி என்று ச�ொல்லலாம். தமிழர்கள் மட்டுமன்றி மற்ற ம�ொழி பேசுபவர்களும் நம் ம�ொழியினையும் பண்பாட்டையும் நம் ம�ொழியின் சிறப்புகளையும் அறிந்து க�ொள்வதற்கு நல்ல வாய்ப்புள்ள இடம் நூலகம். ஆங்கிலமும் தமிழும் கலந்த புத்தகங்களை இடம்பெற செய்வதன் மூலம் அனைவரும் நம் ம�ொழியின் சிறப்புகளை அறிந்திட செய்யலாம். ப்ராம்பெல்டன் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் என்று த�ொடங்கிய இந்த பயணம் அமெரிக்காவில் அனைத்து நூலகங்களிலும் தமிழ் புத்தகங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும். சாத்தியப்படும் என்பதில் ஐயமில்லை . “தேமதுரத் தமிழ�ோசை உலகமெல்லாம் பரவும் வழி வகை செய்திடல் வேண்டும்” என்ற ச�ொற்றொடரை உண்மையாக்கும் பணியில் த�ொடர்ந்து வள்ளுவன் தமிழ் மையம் பயணம் செய்து க�ொண்டு இருக்கிறது. வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

13


நினைவஞ்சலி

நெல் செயராமன்: நடுகல்லாக மாறிய

விதைநெல்! (1968-2018)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். (குறள் 35)

திரு. இரா. செயராமன் (நெல் செயராமன்) பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் க�ொண்டு நெடுங்காலமாகச் செயற்பட்டுக் க�ொண்டிருந்தவர். ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் ஓர் இணைச் செயற்பாட்டாளர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் பிறந்த உழவர் இவர். திரு. நம்மாழ்வார் வழியில் பாரம்பரிய நெல் ரகத்தை மீட்டெடுத்த நெல் செயராமன் அவர்கள், விஜய் த�ொலைக்காட்சியின் “இயற்கை விதை நெல் மீட்பாளர்” விருதையும், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், மத்திய அரசின் “இளம் காந்தியத் த�ொழில் நுட்பக் க ண ்ட றி த லு க்கான ச ம்மா ன் ” வி ரு தை யு ம் பெற்றுள்ளார். சுமார் 169 வகையான பாரம்பரிய, அரிய வகை நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு, திசம்பர் 6-ஆம் நாள் இயற்கை எய்தினார். த�ொன்மை வாய்ந்த நமது பயிர்த் த�ொழிலை மீட்ட, நெல் செயராமன் அவர்களின் மறைவுக்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் க�ொள்கிறது.

14

ஜனவரி 2019

இனிய ப�ொங்கல், திருவள்ளுவராண்டு 2050 பிறப்பு திருநாள் நல்வாழ்த்துகள்.

மருத்துவர் இரகுராஜ்

 thenral.mullai@gmail.com

சின்னராஜ் ஆரணி இரகுராஜ் இனியாள், வேந்தன்


என் வீடும், என் த�ொலைதூர வீடும் (Home Far Away From Home)

இந்த சனவரி மாதத்தில், குறிப்பாக இந்த இதமான நாளில், என்னுடைய அலுவலக சாளரத்திலிருந்து நான் பார்க்கும் ப�ோது, அடடா! கடந்த 2018 ஆம் ஆண்டு தான் எவ்வளவு விரைவாக நகர்ந்தது என்று எண்ணினேன். கடந்த வருடப் பிற்பகுதியில், எதிர்பாரா அச்செய்தி வந்தவுடன், எனக்கு ஒரு வித மகிழ்ச்சி, பயம், வருத்தம் கலந்த கலவையாகத்தான் இருந்தது. வாழ்க்கையில், ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. நான், பசிபிக் கடல�ோரப் பகுதிக்கு வந்து ஆறு மாதங்கள் கழிந்த பிறகும் கூட இங்குள்ள வாழ்க்கை முறை, கால நிலை, இன்னும் பிறவற்றவைகள�ோடு வாழக் கற்றுக் க�ொண்டிருக்கிறேன் என்றுதான் ச�ொல்ல இயலும்.

காலத்தில் கூட நீச்சல் குளத்தில் சூரியக் குளியல் எடுப்பதைப் பார்த்தேன். கடந்த க�ோடை காலத்தில் இப்பகுதிக்கு, நான் வந்த ப�ோது இருந்த வெப்பத்தின் அளவு 105 F. இது தமிழகத்திலிருப்பதைப் ப�ோல் உணர்த்தியது. நான் இருக்கும் பகுதியில் தமிழர்களால் நடத்தப்படும் நிறைய உணவகங்கள் உள்ளதால், எப்போதும் சுவையான உணவே கிடைக்கிறது. மேலும், ‘டிஸ்னி லேண்ட்’. யூனிவர்சல் ஸ்டுடிய�ோ, ஹாலிவுட் ஸ்டுடிய�ோ மற்றும் சான்டா மானிகா கடற்கரை ஆகிய சுற்றுத்தலங்களும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது. இது எனக்கு, வார இறுதியில் ப�ொழுது ப�ோக்குவதற்குப் ப�ொருத்தமாக உள்ளது. ஹாலிவுட் பகுதியில் வீடுகளின் விலைகள் மிக அதிகம். நான் இராகுல் மன�ோகரன் வசிக்கும் வீட�ோ, இப்பகுதியில் இருந்தாலும், வாடகை புகழ் பெற்ற இந்திய கணினி நிறுவனத்தின் வழியாக, மிக அதிகமில்லை தான். இது நிதியை எங்ஙனம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கையாள்வது எனக் கற்றுக் க�ொடுத்தாலும், இளைஞனான நான் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிட்டியமையால் , உணவகங்களில் சாப்பிடுவதாலும், ப�ொருட்கள் வாங்குவதாலும் சில பிலடெல்பியா புறநகரப் பகுதியிலிருந்து, நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நேரங்களில், ப�ொறுப்புணர்ச்சியிலிருந்து தவறி விடுகிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தேன். ஒப்பந்தப் பணி என்பது என்னுடன் வசிப்பவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களுடன் நிலையானதன்று. பணி முடிந்தவுடன், நம் அடுத்த பணி எந்த நிறுவனத்துக்காக தமிழிலும் உரையாட முடிகிறது. பெற்றோர்கள், நண்பர்கள், கல்லூரி என்பதும், கணினித்துறையில் எப்பிரிவில் நம் பணி அமர்த்தப்படும் என்பதும், நண்பர்கள் ஆகிய�ோர்கள�ோடு இருந்த நாட்களை விட இப்போது நமக்கான ப�ொறுப்புகள் என்ன என்பதும் தெரியாது. இது ப�ோன்ற வினாக்கள், என்னைப் ப�ொறுத்தளவில் சற்று கடினம் என்றாலும், இந் நாட்டில் கிழக்குக் நான் மிகவும் ப�ொறுப்புள்ளவனாக இருக்கக் கற்றுக் க�ொண்டிருக்கிறேன். கடற்கரைப் பகுதியில் பிறந்தும், கல்வி கற்றும் அதன் பிறகு அப்பகுதியில் இப்போதெல்லாம் சாம்பார் முதல் பிரியாணி வரை சமைக்கவும், பணி செய்ததாலும், இப்பகுதியில் வாழ்வதும், பணிக்குச் செல்வதும் துணிகளைத் துவைத்துக் க�ொள்ளும் ப�ோது அதில் பணம் ஆகியவற்றோடு ஒப்பிடும் ப�ோது மிகப் பெரிய வேறுபாட்டினை உணர்கிறேன். ப�ோன்றவற்றைத் தவற விடாத வகையிலும், சரியான நேரத்திற்குப் ஆனால், அலுவலகத்தில், சென்னையில�ோ, ஐதராபாத்தில�ோ அன்றி படுக்கைச் செல்வதும், குறித்த நேரத்தில் எழுவதும் எவ்வாறு என பெங்களுரில�ோ இருப்பதைப் ப�ோலவே உணர்கிறேன். என்னுடன் நன்கு கற்றுக் க�ொண்டேன். மேலும், குறித்த நேரத்தில் நான் செலுத்த பணியாற்றுபவர்கள் பெரும்பான்மைய�ோர் தென்னிந்தியர்களே. தமிழைத் வேண்டிய கட்டணங்களைச் செலுத்துவதால், ப�ொறுப்புணர்வோடுதான் தாய் ம�ொழியாகக் க�ொண்டதால், என்னால் அலுவலக நண்பர்களுடன் செயல்படுவதாக எண்ணுகிறேன். எளிதாகப் பழகவும், எச்சூழலையும் எளிதாக எதிர்கொள்ளவும் முடிகிறது. இருப்பினும், என் பெற்றோர்கள், தமிழ் நண்பர்கள், பிலடெல்பியா இந்நாட்டில் கல்வி கற்றதால், என்னால் மிக எளிதாக அலுவலகத்தில் உள்ள மற்றும் வாசிங்டன் தமிழ்ச்சங்க நிகழ்வுகள் ப�ோன்றவைகளை விட்டுச் இந்நாட்டினர�ோடு பணி த�ொடர்பான செய்திகளைக் க�ொண்டு சேர்க்க சற்று விலகியது ப�ோன்ற உணர்வு இருப்பதை மறுப்பதற்கில்லை. முடிகிறது. இது, அலுவலகத்தில் உள்ளவர்கள் எனக்கு சற்று முக்கியத்துவம் இருப்பினும், அலுவலக நண்பர்கள், உடன்தங்கிக் க�ொண்டிருப்போர்கள், தர வாய்ப்பாக உள்ளது. கூடைப்பந்து விளையாட்டுத் த�ோழர்கள் ஆகிய�ோர் தமிழர்களாக அலுவலகத்தைத் தவிர, எனக்கு மிகவும் பிடித்தது என்னவெனில், இருப்பதாலும், அவர்கள�ோடு உரையாடுவதாலும் என் தமிழ் ம�ொழி இப்பகுதியில் நிலவும் வானிலைதான். வருடம் முழுவதும் இதமான வளம் மேம்படுகிறது. எதிர் வரும் பணி, எந்த நிறுவனத்துக்கு ஆற்றப் காலம்தான். பனிப்பொழுவு என்பதே இல்லை. குளிர்காலத்திற்கும், ப�ோகிறேன் என்ற எதிர்பார்ப்போடு, இப்பணியைத் த�ொடர்ந்து பனிப்பொழிவுக்கும் பழக்கப்பட்ட நான், இப்பகுதியில் உள்ளவர்கள் குளிர் க�ொண்டிருக்கிறேன்.

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

15


ம�ொழியுரிமைக்கும் நிகர்மைக்குமான பரப்பியக்கம் (Campaign for Language Equality and Rights: CLEAR)

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

ஆழி செந்தில்நாதனுடன் ஒரு கலந்துரையாடல் ஆ

ழி செந்தில்நாதன் தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் அரசியல் செயல்பாட்டாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டுக்குத் தன்னாட்சிக் க�ோரிக்கை, ம�ொழியுரிமை, மாற்றுப் ப�ொருளாதாரம் ப�ோன்ற தளங்களில் செயல்பட்டு வருகிறார். நீண்ட காலம் தமிழ்மொழி சார்ந்த செயல்பாடுகளிலும், ஊடகத்துறை, கணித்தமிழ், பதிப்புத்துறைகளிலும் செயல்பட்டுவந்த ஆழி செந்தில்நாதன் தற்போது அனைத்திந்திய அ ள வி ல் செ ய ல்ப டு ம் ம�ொ ழி யு ரி மை க் கு ம் நிகர்மைக்குமான பரப்பியக்கம் (CLEAR) என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். அறிஞர் அண்ணாவின் அரசியல் க�ோட்பாடுகள் மீது மீள்கவனம் ஈர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டுவரும் ஆழி செந்தில்நாதன் ஆழி பதிப்பகம் என்கிற ப தி ப ்பக த ்தை யு ம் ல ே ங ்க்ஸ்கேப் எ ன் கி ற ம�ொ ழி ப ெ ய ர் ப் பு நி று வ ன த ்தை யு ம் நடத்திவருகிறார். நமது தமிழ்ச்சங்கத்தின் 2018ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர்.]

தமிழைப் படித்தவர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மை ய�ோர் தமிழ் வழியில் படித்தவர்கள். எனவே தமிழைப் படிக்காமல் விடுகிற ப�ோக்கு என்பது மிக சமீபத்திய ப�ோக்கு. அதற்கு அரசியல்தான் காரணம். முதல் ம�ொழியாக ஆங்கிலம், இரண்டாம் ம�ொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று சென்னையில் சில பள்ளிகளில் நிலவி வந்த கலாச்சாரம் தமிழ்நாடு முழுக்க மெல்ல மெல்லப் பரவி வருகிறது என்றால் அதற்கு அரசியல் மட்டுமே காரணம். முதலில் தமிழ் வ ழி க் க ல் வி ஒ து க ்க ப ்ப ட ்ட து . பி ற கு த மி ழ் ஒ ழி க ்க ப ்ப டு கி ற து . இ ப ்போ து த மி ழ்நாட் டி ன் வேலைகள் அனைத்தும் தமிழ்நாட்டவர்களுக்கு

தமிழர்கள் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமலேயே உயர்கல்வி பயின்று தம் வாழ்வை வளப்படுத்தும் சூழல் உள்ளது. இப்போக்கினை களையத் தங்களின் கருத்துக்கள்… உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. முதலில் இது ம�ொழிப் பிரச்சினை மட்டுமல்ல, கல்விப் பிரச்சினை மட்டுமல்ல. அரசியல் பி ர ச் சி ன ை . உ ங ்க ள் கே ள் வி யை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமலேயே உயர்கல்வி பயின்று தம் வாழ்க்கையை வளப்படுத்தும் சூழல் இருக்கிறது என்கிறீர்கள். தமிழைக் கற்காமலேயே வாழ்க்கை வளம் பெறமுடியும் என்றால் ஒரு சமூகம் எதற்காகத் தமிழைக் கற்கவேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் இந்தப் பார்வை ஒரு முழுமையான பார்வை அல்ல. தமிழ்நாட்டில் தமிழைக் கற்காமலேயே வளமான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. எல்லாக் காலத்திலும் சில குறிப்பிட்ட துறைகளுக்குக் கூடுதலான தேவை அதிகரிக்கிறது. கடந்த ஒரு தலைமுறையாக தமிழ்நாட்டில் ஐடி, பிபீஓ துறைகளில் கூடுதல் வேலை வாய்ப்பு இருந்து வருகிறது. இந்தத் துறைகளில் முதலில் நுழைந்தவர்களில் பலரும்கூட

16

ஜனவரி 2019

செந்தில் முருகன் வேலுச்சாமி இல்லாமல் வடநாட்டவர்களுக்குச் செல்கிறது. விரைவில் தமிழர்களும் தமிழ்நாட்டில் வைத்தே அகதிகளாக்கப்படும் நிலை ஏற்படக்கூடும். “நைந்தாய் எனில் நைந்து ப�ோகுமென் வாழ்வு” என்று கதறினான் பாரதிதாசன். தமிழ் நைந்திருக்கிறது. தமிழனும் நசிகிறான். இந்தப் பிரச்சினை மிக மிக ஆழமான பிரச்சினை.

தமிழகப் பயணத்தில், இரயில் நிலையத்திலும் விமான நிலையத்திலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பு செய்கிறார்கள். தமிழில் எப்போது வரும் எனக் காத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால், அங்குள்ள எல்லோரும் இத்தகைய ப�ோக்கை ஏற்றுக்கொண்டு வருகின்றனர். என்ன செய்வது?

 thenral.mullai@gmail.com


சில அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. விமான நிலையங்களில�ோ ரயில் நிலையங்களில�ோ தமிழ் அறிவிப்புகள் முழுமையாக இல்லை என்றுதான் ச�ொல்லமுடியும். ஆனால் சட்டரீதியில் தமிழுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை. நாளை இந்த அ றி வி ப் பு க ளு ம் இ ல்லா ம ல் ப�ோகல ா ம் . வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துப�ோகும் வெ ளி ந ா ட் டு வி ம ா ன ங ்க ள் பல வ ற் றி ல் த மி ழ் இருக்கிறது. தமிழர்களைக் க�ொன்று குவிக்கும் இலங்கையின் விமானத்தில் தமிழ் இருக்கிறது. ஆனால் இந்திய விமானங்களுக்குள் தமிழ் இல்லை. இருக்காது. கேட்டால் இந்தியாவின் ஆட்சி ம�ொழி இந்தியும் ஆ ங் கி ல மு ம்தானே எ ன் கி ற ா ர ்க ள் . இ ந் தி ய அரசாங்கத்தின் அலுவல் ம�ொழி என்கிற அளவில்தான் இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி ம�ொழிகள். ஆனால் அரசாங்கமாக இருந்தாலும் தனியாராக இருந்தாலும் எல்லா மக்கள் ம�ொழிகளிலும் – குறைந்தபட்சம் ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மை ம�ொழியிலும் சேவையை அளிக்கவேண்டும். அதற்கு சட்டம் தடையில்லை. நாங்கள் இந்தியாவின் அரசியல் சாசனத்தின் எட்டாவது பிரிவில் உள்ள அனைத்து ம�ொழிகளையும் ஆட்சிம�ொழி ஆக்குங்கள் என்று கூறுவது இதனால்தான். ஆனால் மக்கள் சேவைகளில் நமது ம�ொழிகளைப் பயன்படுத்துவதற்கு இதுகூடத் தேவையில்லை. ஸ்ரீலங்கனும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் எமிரேட்சும் தங்களுடைய மெனு அட்டையில் தமிழைப் ப�ோட்டிருப்பதற்கு அவர்களுடைய வர்த்தக நடைமுறைகள் மட்டுமே காரணம். அது ஏன் இ ன் டி க�ோ வு க்கோ ஜ ெ ட் ஏ ர்வேஸுக்கோ தெரியவில்லை? அரசியல்தான் காரணம். இந்தியா என்றால் இந்தி என்கிற மன�ோபாவம்தான் காரணம். குறிப்பாக வட இந்திய உயர்சாதிகளும் பனியா த�ொழில்துறையினரும் ஒருப�ோதும் இந்தியைத் தவிர வேறு ம�ொழிகளை ஏற்க மறுத்து வருகிறார்கள். இது நூறாண்டுப் பிரச்சினை.

தமிழ்வழிக் கல்வியின் எதிர்காலம் என்னென்ன? அல்லது தமிழ்மொழிக்கல்வி பயன்படும�ொழியாக ஆகவேண்டுமானால் என்ன மாற்றங்கள் தேவை? த மி ழ்நாட் டி ன் ப�ொ ரு ள ா த ா ர , க ல் வி க் க�ொள்கைகளை தமிழ்நாடு மட்டுமே தீர்மானிக்கும் நிலை ஏற்படாமல், தமிழ்வழிக் கல்வி என்ன, தமிழை ஒ ரு ம�ொ ழி ய ா க ப டி க் கு ம் நி லை கூ ட இ னி சாத்தியமில்லை. குறிப்பாகக் கல்வித்துறையில் தமிழ்நாடு தன்னுடைய சட்டமியற்றும் உரிமையை இழந்துவிட்டது. இந்தியாவின் அரசியல்சாசன ரீதியான கல்வி முதலில் மாநிலப்பட்டியலில் இருந்தது. அவசர நிலைக்காலத்தில் அதைப் ப�ொதுப்பட்டியலுக்கு மாற்றி முதல் அடியைக் க�ொடுத்தார் இந்திரா காந்தி. அதன் பிறகு அது சாராம்சத்தில் ஒன்றியப் பட்டியல் பிரிவாகவே மாறிவிட்டது. இதை மாற்றாமல் க ல் வி ச ா ர்ந்த ம�ொ ழி த் தி ட ்ட மி ட லி ல் எ ந்த

மாற்றத்தையும் செய்யமுடியாது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சமூகநீதி க�ொள்கைக்கும் விரைவில் இதே கதி நேரும் என்கிற அச்சமும் நமக்கிருக்கிறது.

தேசியக்கல்விக் க�ொள்கைகள், தமிழகத்தை எந்தளவில் பாதிப்படையச் செய்யும்? தமிழ்நாட்டின் அடித்தளங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டும். கடந்த நூறாண்டுகளாக நாம் ப�ோ ர ா டி ப் ப�ோ ர ா டி ச் சேர்த்த வைத் தி ரு ந்த உரிமைகளை ஒழித்துக் கட்டும். சமூகநீதி, ம�ொழி, ப�ொதுநலக் க�ொள்கைகள் என பெரியார், காமராசர், அண்ணா ப�ோன்றோரின் வழிகளில் உருவாக்கப்பட்ட ந மது ச மூ க க் கட் டு மா ன ம் கு லைக ்கப ்படும் . இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூக வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்க முடியும�ோ அந்த காரணங்கள் அழிக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இது வெகுவேகமாக நடந்துவருகிறது. நீட் ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் 3000 அரசுப் பள்ளிகளை மூடுவது என்கிற முடிவு மற்றொரு உ தா ர ணம். எட ப ்பாடி ப ழனி ச ்சா மி அ ர சி ன் தலைமையில் தமிழ்நாடு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும். இரண்டாயிரமாண்டு காலமாக இந்த உலகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவு காலனிய காலத்தில் பாழ்பட்டது. திராவிடக் கட்சிகள் மீது ஆயிரம் குறைகள் கூறப்படலாம். ஆனால் அவர்கள் காலத்தில்தான் நாம் மீண்டெழுந்து உலக வர்த்தகத்தில் நமக்கான இடத்தை மீண்டும் சற்றுப் பிடிக்கத் த�ொடங்கின�ோம். அந்த சிறு தலையெடுப்பின்மீது ஒ ரு பட ை யெ டு ப் பு இ ப ்போ து ந ட ந் து க் க�ொண்டிருக்கிறது.

சல்லிக்கட்டுப் ப�ோராட்டம் த�ொடங்கி ஒவ்வொரு நாளும் தமிழகம் ஏதாவத�ொரு ப�ோராட்டத்தைச் சந்தித்துக் க�ொண்டேயிருக்கிறது. ஆனால், தமிழகத்தைத் தவிர வேறெந்த மாநிலமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு ப�ோராட்டங் களைக் களம் கண்டதேயில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக அல்லாமல், இந்தியாவின் காலனியாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துக் க�ொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். ப�ோராடிப் ப�ோராடி சில சிறு உரிமைகளைப் பெற்ற தமிழர்களுக்கு உரிமையின் சுவை தெரிந்திருக்கிறது என்று அதற்கு ப�ொருள். அடிமை மன�ோபாவமே நீண்டிருக்கும் சில

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

17


சமூகங்களில் ப�ோராட்டம் வெடிப் பதே பெரும்பாடாக இருக்கும். ப�ோராட்டத்தின் வெற்றிக்கனிகளைச் சுவைத்த மாநிலம் தமிழ்நாடு. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என நம்மவர்களுக்குத் தெரியும். அ த ன ா ல்தா ன் ப�ோ ர ா டு கி ற ா ர ்க ள் . தி ல் லி வ ல்லா தி க ்க வ ா தி க ளி ன் கு ரூ ர ம ா ன த ா க் கு த ல் தமிழர்களின் மானச்செருக்கைத் தூண்டிவிட்டி ருக்கிறது.

பு ல ம ்பெ ய ர்ந்தோர்க ள் ஹ ா ர்வ ர் டு ப�ோன்ற பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை அமைத்து வருகின்றனர். இத்தமிழிருக்கையின் ஆக்கப் பணிகளுக்குத் தமிழர்கள் எங்ஙனம் கடமையாற்றினால் சிறப்புடையதாக இருக்கும்? தமிழ் ஆய்வுகள் உலகின் தலைசிறந்த கல்வி மையங்களில் இருப்பது என்பது மிக முக்கியமானது. அது தமிழர்களின் மெல்லதிகாரம் (soft power) த�ொடர்புடையது. தமிழர்களின் சர்வதேசிய அதிகார முத்திரைய�ோடு த�ொடர்புடையது. எனவே இத்தகைய ஆக்கப்பணிகளுக்கு துணைசேர்ப்பதும் அதில் ப ங ்கெ டு ப ்ப து ம் த மி ழ ர ்க ளி ன் ப ெ ரு ங ்க டமை . இன்னமும் ப�ொறியியல், மருத்துவம் என்று மட்டும் ஓடாமல் ம�ொழி, கலை, வரலாறு, மானுடவியல், கலாச்சார ஆய்வுகள், ப�ொருளாதாரம், ப�ொருளாதார வரலாறு ப�ோன்ற துறைகளில் நமது குழந்தைகள் படித்து இதுப�ோன்ற பெரும் ஆய்வு மையங்களில் உலக நிபுணர்கள�ோடு இணைந்து செயல்பட வேண்டும். அது மிக முக்கியமானது. நமது சுதந்திரமான எதிர்காலம் இதைச் சார்ந்திருக்கிறது.

அமெரிக்காவில், கடந்த பத்தாண்டு் க ளாகத் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையும், அவைகளின் தரமும் மேல�ோங்கி இருக்கிறது. இருப்பினும், இன்னமும் முன்னெடுத்துச் செல்ல, தங்களின் எண்ணங்கள? இந்த ஆண்டு பேரவை நிகழ்வுக்கு வந்து, பிறகு பல நகரங்களுக்குச் சென்றேன். தமிழைக் கற்றுக் க�ொடுக்கும் ஊக்கமும் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் பெருகி வருகிறது என்பது மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. எங்களுடைய ஒரு க�ோரிக்கை- தயவுசெய்து தமிழ்நாட்டைச் சார்ந்து இப்போது உங்கள் கல்விக்கு திட்டமிடாதீர்கள். தமிழ் அமெரிக் கர்கள் அமெரிக்க கல்விமுறைய�ோடு இசைந்த விதத்தில் தமிழைக் கற்றுக்கொடுப்பது என்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். எண்ணிக்கையும் தரமும் மட்டுமல்ல, ப�ொருத்தப்பாடும் முக்கியம். தமிழைக் கலாச்சார கூறாக மட்டுமே பார்த்து, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் கதைக்கு அதை ஆளாக்காதீர்கள். நமது தமிழ் இலக்கிய, அறிவு மரபில் உள்ள நல்ல அம்சங்களை நமது குழந்தைகளுக்கு மதிப்பீடுகளாகவும், அ றி வ ா க வு ம் , வ ா ழ் வி ய ல ா க வு ம் ந டத் தி ச் செல்லப்படுவதற்கான கல்வி முறையாக அதை மாற்றி முன்னெடுங் கள். நமது கலாச்சார, வரலாற்று அடித்தளம் என்பது புலம்பெயர்ந்த இடத்திலும் நமது

18

ஜனவரி 2019

அடையாள பலமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். சீனர்களிடமிருந்தும் அரபியரிடமிருந்தும் இ தை நீ ங ்க ள் கற் று க ்கொள்ளல ா ம் . ஆ ன ா ல் உ ங ்க ளு க்கானத் தீ ர் வு களை நீ ங ்க ளே த ா ன் தேடவேண்டும். தமிழ்நாடு உங்களுக்குத் துணை நிற்கலாம், நிற்காமல் ப�ோகலாம். உங்களுக்கான கல்வித்திட்டத்தையும் கல்வி வள ஆதாரங்களையும் உ ரு வ ா க ்க த் த மி ழ்நாட் டி ன் அ றி ஞ ர ்க ளை நிபுணர்களைப் பயன்படுத்திக் க�ொள்ளும் அதே நேரம் இறுதி முடிவுகளை நீங்கள் எடுங்கள்.

உங்களுடைய தன்னாட்சித் தமிழகம் அமைப்பு பற்றிக் கூறுங்கள்.. எங்களுடைய ந�ோக்கத்தை மிகவும் எளிமையாக விளக்கி விடலாம். இன்று நாம் தனித்தனியாக பல்வேறு உரிமை களுக்காகப் ப�ோராடிவருகிற�ோம். ம�ொழியுரிமைக்காக, ஜல்லிக் கட்டில் கலாச்சார உரிமைக்காக, நீட்டில் கல்வி உரிமைக்காக, கீழடியில் வ ர ல ா ற் று உ ரி மைக்காக , ஹ ை ட ்ர ோக ா ர்ப ன் , ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை விவகாரத்தில் ப�ொருளாதார உரிமைக்காக, எத்தகைய ப�ொருளாதார முறை நமக்கு வேண்டும் என்கிற அரசியல் உரிமைக்காக, நமது ஐந்திணை களையும் பாதுகாப்பதற்கான சூழலியல் உரிமைக்காகப் ப�ோராடி வருகிற�ோம். வேலைத் து றை யி ல் வ ட இ ந் தி ய ா வி லி ரு ந் து லட்சக்கணக்கானவர்கள் இங்கே புகுந்திருக்கிறார்கள். இ து த மி ழ்நாட் டி ன் ம க ்க ள ்த ொகை யி ய ல்சா ர் நி லையை க டு மை ய ா க ப ா தி க் கு ம் நி லையை உருவாக்கிவருகிறது. இப்படி தனித்தனித்தனியாக நாம் ப�ோராடிக் க�ொண் டி ரு க் கி ற�ோ ம் . இ ந்த உ ரி மைக ளி ன் கூட்டமுழுக்கமாக தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி வேண்டும் என்பதை ஒற்றைக்கூட்டு முழக்கமாக நாம் முன்வைக்கிற�ோம். இந்திய ஒன்றியத்தில் காஷ்மீரைப் ப�ோல ஒரு தனிச்சிறப்பான விதியின் அடிப்படையில�ோ அல்லது கூட்டாட்சி அமைப்பு முறை ஒன்றின் அ டி ப ்பட ை யி ல �ோ இ ந்த த ன்னாட் சி மு றை அமையவேண்டும் என்று நாங்கள் க�ோருகிற�ோம். ந ம து இ றை ய ா ண ்மையை மு ழு மை ய ா க ந ா ம் அனுபவிப்பது மட்டுமே தீர்வு. அதில் சிலவற்றை மட்டும ஒன்றிய அரச�ோடு பகிர்ந்துக் க�ொள்வது நடைமுறைத் திட்டம். இதுதான் தன்னாட்சி. இதுதான் இப்போதைக்கு வரலாற்றுரீதியில் நாம் ய�ோசிக்க முடிகிற தீர்வு. அதை ந�ோக்கித்தான் தமிழகம் பயணப்பட வேண்டும் என நம்புகிறேன்.

அண்மைக்காலமாக நீங்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றி அதிகம் பேசுகிறீர்கள். அவரது நூல்களை வெளியீட்டீர்கள். இவ்விவகாரத்தில் உங்கள் மீது கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. அண்ணாவின் மீது ஏன் இந்த திடீர் பாசம்? ஜாரின் க�ொடுமை தாங்க உருசியம் ஏறுர லெனினை ஈன்றே தீரும் என்று பாவேந்தர் பாடினார்.

 thenral.mullai@gmail.com


அண்ணாவைப் பற்றி மீண்டும் நாங்கள் பேசுவதற்கு காலம்தான் காரணம். அதே சமயம் தமிழ்நாட்டில் மிக ஆச்சரியமான ஒரு ப�ோக்கு நிலவுகிறது. எங்கு ப ா ர்த்தா லு ம் அ ண ்ணா சி லைக ள் , அ ண ்ணா சாலைகள், அண்ணா நகர்கள்... ஆளும் கட்சியின் பெயரிலேயே அண்ணா இருக்கிறார். அண்ணாவின் க�ொடி முகங்கள் க�ோடிக் க�ோடி. ஆனால் அந்த அண்ணாவை இங்கே பலரும் புரிந்துக் க�ொள்ளவில்லை, இன்று மட்டுமல்ல, கடந்த நூறாண்டுக் காலமாகவே நமது ஒரே எதிரி டில்லி வல்லாதிக்கம்தான். அந்த டில்லி வல்லாதிக்கத்தை நன்கு உணர்ந்து, அதை எதிர்கொண்டு, தமிழர்கள் தங்களுடைய தேசிய உரிமைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து முன்வைத்தவர் அறிஞர் அண்ணா. அவர் ப ெ ரி ய ா ரி ன் பி ள்ளை த ா ன் . ஆ ன ா ல் அண்ணாவுக்கென்று தனித்தன்மையும் தனித்த வியூகமும் உண்டு. அந்த வழியை நாம் மறந்துவிட்டோம். தேசியம், ஜனநாயகம், சமதர்மம் என்கிற மூன்று புள்ளிகளில் அண்ணா பேசிய, செயல்பட்ட பல விஷயங்கள் இன்று யாருக்கும் தெரியவில்லை. இன்றைய திமுகவினருக்குக் கூடத் தெரியாது. அவரது அரசியல் தீர்க்க தரிசனமும் வியூகமும் மிகவும் ஆழமானது, உலகளாவிய அறிவின் விளைவு அது. ப ெ ரி ய ா ரை க் கட வு ள் ம று ப ்பா ள ர ா க வு ம் , அண்ணாவை அடுக்கும�ொழி பேச்சாளராகவும் மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஒ ன்றை உ று தி ய ா க ச ்ச ொல்வே ன் . தி ர ா வி ட இ ய க ்க த் தி ன் மி க ப ்பெ ரி ய வி ந்தை அ ண ்ணா . அவர்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தமிழ்த் தேசியத் தலைவர். அவரை மீண்டும் படிக்கத் த�ொடங்கினால் இதை நீங்கள் புரிந்துக் க�ொள்வீர்கள். இ ன் று அ வ ரைப் பற் றி ந ா ங ்க ள் பே ச த் த�ொடங்கும்போது தமிழ்த் தேசியவாதிகள், திராவிட இயக்கவாதிகள் என இருதரப்பிலும் பலர் கடுமையாக எங்களை விமர்சிக்கிறார்கள். மற்ற தலைவர்களை மறைக்கும் முயற்சி என்று நினைக்கிறார்கள். பேதைமை. வேறேதும் ச�ொல்வதற்கு இல்லை. அதே சமயம் நான் அண்ணாயிஸ்டு அல்ல. இன்றைய நமது சூழலுக்கு அவரிடம் பாடம் பயில்வது நல்லது என்பத�ோடு அண்ணாவின் மீதான எங்கள் அரசியல் ந�ோக்கு மு டி ந் து வி டு கி ற து . ஆ ன ா ல் அ ண ்ணாவை ம றை ப ்ப த ற் கு ம் தி ரி ப ்ப த ற் கு ம் பி ன்னா லு ள்ள சக்திகளை அம்பலப்படுத்துவதும் தேவைப்படுகிறது. ச�ொல்லப்போனால் அண்ணா தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு பெரிய அளவுக்கு வலம் வருவார். வராமல் ப�ோனால், அவரைக் கண்டுக�ொள்ளாமல் தவிர்த்தால், தமிழர்களைப் பார்த்து சிரித்துக் க�ொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அண்ணா ஒரு வரலாற்றுப் பேராயுதம். அதைப் பயன்படுத்தும் நிலைமை அன்றும் இல்லை. இன்றும் இருக்காது என்றால் அதை என்ன ச�ொல்வது!

ஜனவரி 2019

என் தேசம்...

பல அடுக்கு மாடி கட்டிடங்கள்... பறந்து விரிந்த பசுமையான தரைத்தளங்கள்.... குப்பை இல்லா தூய்மையானசாலைகள்... சாக்கடை இல்லாத சுத்தமான வீதிகள்... குளு குளு வசதியுடன்பேருந்துகள்... குறித்த நேரத்தில் வரும்ரயில்கள்... நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும் நடைபாதைகள்... விளையாட குறிப்பிட்ட தூரங்களில்இடவசதி... வீதிக்கு ஒரு பூங்கா... வீட்டுக்கு அனுப்ப பணம்... என எல்லா வசதிகளும் இந்த அந்நிய தேசத்தில் இருந்தாலும்.... அன்பாய் நேசம் விசாரிக்க அண்டை வீட்டில் ஆளில்லை!... அக்கறையாய் திட்ட எந்த பெரியவர்களும் இல்லை!... உறவுகளை வீட்டுக்கு கூப்பிட உரிமை இல்லை!... தடுமாறும்போது தூக்கி நிறுத்தும் நண்பர்கள் இல்லை!... அரவணைக்கும் சுற்றம் இல்லை!.. அன்பு க�ொள்ள பெற்றோர் இல்லை!... குப்பையாய் இருந்தாலும்... சாக்கடையில் நடந்தாலும் எங்கள் தேசத்துக்கு நிகராகுமா இந்த அந்நிய தேசம்!...

இளவழுதி வீரராசு

 thenral.mullai@gmail.com

19


சிறுகதை

உனக்கு பால்கோவா வாங்கித் தரேன்.. சரியா? திரும்பவும் ச�ொல்லு .. உனக்கு எத்தனை வயசு?”

“ டே ய் , ப ஸ் சு ல ஏ று ம் ப�ோ து கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன ச�ொல்லணும்?”

“11ப்பா”

“13ப்பா”

“சரி, ஜாக்கிரதையா இரு. நீ மட்டும் சரியா ச�ொன்ன, ராணிபேட்டையில் பஸ் நிக்கும் ப�ோது உனக்கு பால்கோவா வாங்கி தரேன்..சரியா?”

“முட்டா பயலுக்கு பிறந்தவனே, நான் என்ன ச�ொல்லிக் க�ொடுத்தேன்!?” “11ப்பா” “மறந்துடாத, சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ பஸ்சுல ஏறப் ப�ோற” “தம்பி, உனக்கு என்ன வயசு?”

“ஐ! பால்கோவா”

“13 சார்!” “அட பாவி.. 11ன்னு ச�ொல்லுன்னு எத்தனை தடவை ச�ொல்றது...மர மண்டை.. மர மண்டை,

20

ஜனவரி 2019

வே லூ ரி ல் இ ரு ந் து சென்னை ப�ோகும் பஸ்சில் 13 வயதாகிய தன் மகனுக்கு 11 என்று ப�ொய் ச�ொல்ல ச�ொல்லிக் க�ொடுத்துக் க�ொண்டு இருந்தார் ஒரு தகப்பனார். அந்த சிறுவனுக்கு அப்பா ஏன் தன்னை ப�ொய் ச�ொல்லச் ச�ொல்கின்றார் என்று புரியவில்லை. 12 வயது வரை அரை டிக்கட் அதற்கு

(ஜூனியர் விசு)

 thenral.mullai@gmail.com


மேல் முழு டிக்கட் என்று அவனுக்கு எடுத்துச்சொல்ல அந்த தகப்பனுக்கும் நேரம் இல்லை. வண்டியும் வந்தது, வண்டியில் ஏறப் ப�ோன சிறுவன் பதின�ொன்னு. பதின�ொன்னு என்று ச�ொல்லி க�ொண்டபடி சென்றான். கண்டக்டர் அவன் அருகில் வந்து, “தம்பி, இந்த படிக்கட்டுகிட்ட ஒரு அளவு க�ோல் இருக்கு, அங்கே க�ொஞ்சம் நில்.” “சரி சார்” “நீ அந்த 12 வயது பிள்ளைகளுக்குக்கான க�ோட்டை விட உயரமாய் இருக்க .. உனக்கு முழு டிக்கட்.” அப்போது தான் அவனுக்குப் புரிந்தது .. டிக்கட் கட்டணத்தைப் பாதியாக்க தன் தகப்பன் தன்னைப் ப�ொய் ச�ொல்ல ச�ொல்கிறார் என்று.. தகப்பன�ோ, கண்டக்டரிடம், “சார், நான் ஆறு அடி, என் மனைவியும் நல்ல உயரம்..அதனால் தான் பையன் நல்ல உயரம்!” “ஒரு நிமிஷம் சார், நான் பையனிடம் பேசிக் க�ொள்கிறேன்.. நீங்க அமைதி” “தம்பி, உன் பெயர் என்ன?”

வண்டி ஓட ஆரம்பித்தது.. அந்த சிறுவனுக்கோ.. அப்பா ச�ொல்லி க�ொடுத்தை ப�ோல் “பதின�ொன்று” என்று சரியாக ச�ொன்னேனே .. ராணிபேட்டையில் பால்கோவா கிடைக்கும் என்ற ஒரே எண்ணம். தான் ஏழாவது படிக்கின்றோம் என்று ச�ொன்னதில் தான் ச�ொன்ன வயது “உண்மை” தெரியவந்தது கூட அவனுக்கு புரியவில்லை. “அப்பா, ராணிபேட்டையில் பஸ் எவ்வளவு நேரம் நிற்கும்!?” “அதுக்கு என்ன இப்ப?” “இல்ல, சும்மா கேட்டேன்.” “அமைதியா வா” சிறுவன் ப�ொறுமை இழந்து... கண்டக்டரிடம்.. “சார், ராணிபேட்டையில் பஸ் எவ்வளவு நேரம் நிற்கும்!?” “அஞ்சி நிமிஷம்!”

“சந்திரன்”

அவன் நினைவு பால்கோவாவை ந�ோக்கிச் சென்றது.

“உன் வயசு என்ன?” “11” “எங்க? விரல் விட்டு கூட்டாம ச�ொல்லு... 8 + 7 எவ்வளவு?” “15 சார்” “பரவாயில தம்பி.. நீ உண்மையாவே கெட்டிக்காரன் ..ஒரு ஐந்தாவது வகுப்பு பையன் இவ்வளவு சீக்கிரமா இ ந்த ப தி ல ச�ொ ல் லு வே ன் னு ந ா ன் எ தி ர் பார்க்கவில்லை” “சார்.. நான் ஐந்தாம் வகுப்பு !”

வகுப்பு

இல்ல.. ஏழாம்

“அப்படியா தம்பி...ர�ொம்ப சந்தோசம்.. நீ ப�ோய் உள்ள உக்காரு.” அந்த சிறுவன் அங்கு இருந்து நகர்ந்தவுடன்... “ஏன் சார்.. ஒரு அரை டிக்கட்டுக்காக சின்ன பி ள்ளை க் கு ப�ொ ய் ச�ொல்ல ச�ொ ல் லி க�ொடுக்குறிங்களே”. “ ம ன் னி க ்க ணு ம் , தவறாகிவிட்டது”

“நன்றி”

பி ள்ளை

கு ட் டி க்கா ர ன் ,

“இந்த முறை க�ொடுக்குறேன், அடுத்த முறை இந்த மாதிரி பண்ணாதீங்க”

“ அ ப ்பா . . . ந ா ன் ப தி ன�ொ ன் னு ன் னு ச ரி ய ா ச�ொன்னேனே.. பால்கோவா வாங்கித் தருவிங்கதானே!” “டேய், சும்மா இருக்க மாட்ட?” என்று ச�ொல்லும் ப�ோதே...ராணிபேட்டை வந்தது, சிறுவனின் கண்கள�ோ பால்கோவாவை தேட.. சில பயணிகள் இறங்க முயல்கையில். ..டிக்கட் பரிச�ோதனை செய்யும் அரசு அதிகாரிகள் சிலர் படிக்கட்டை மறைத்து அனைவரின் டிக்கட்டையும் பரிச�ோதிக்க ஆரம்பித்தனர்.. ராணிப்பேட்டையில் இறங்குபவரின் டிக்கட்களை பரிச�ோதித்து விட்டு .. அவர்கள் வண்டியின் உள்ளே ஏறி.. அமர்ந்து இருக்கும் அனைவரின் டிக்கட்களைப் பரிச�ோதிக்க ... தகப்பனின் முகம் மாறியது... ஐயக�ோ.. அரை டிக்கட்தானே வாங்கின�ோம். இப்போது மாட்டிக் க�ொள்வோமே.. அனைவரின் எதிரிலேயும் அசிங்கம்.. ஒரு சிறிய லாபத்திற்காக தன் மகனைப் ப�ொய் ச�ொல்லச் ச�ொல்லி... “சார் டிக்கட்” “இந்தாங்க” பரிச�ோதித்துவிட்டு.. “நீங்க நல்ல மனுஷன் சார்,

ஜனவரி 2019

பையனுக்கு முழு

 thenral.mullai@gmail.com

21


டிக்கட் வாங்கி இருக்கீங்க, இந்த வயது பசங்களின் பெற்றோர்கள் எப்போதும் ஏதாவது ஒரு ப�ொய் ச�ொல்லி , பசங்களையும் ப�ொய் ச�ொல்ல ச�ொல்லிக் க�ொடுத்து அரை டிக்கட் வாங்க முயற்சிப்பார்கள்.” “சார்.. நான்” என்று அவர் வாய் திறக்க முயற்சிக்கையில், கண்டக்டர் பரிச�ோதகரிடம், “சார்.. க�ொஞ்சம் சீக்கிரம் ப்ளீஸ்.. ரயில் கேட் .. விழப் ப�ோகுது.” என்று ச�ொல்ல .. பரிச�ோதகர் அந்த இடத்தை விட்டு கிளம்பினார். வண்டி மீண்டும் ஓட .. தகப்பன�ோ அந்த கண்டக்டரைப் பார்க்க.. “உங்கள் குழப்பம் எனக்கு புரியுது. உங்களிடம் அரை டிக்கட்டிற்கு தான் ப ண ம் வ ா ங் கி னே ன் , ஆ ன ா ல் மு ழு டிக்கட்டை தான் க�ொடுத்தேன்.” “அதுக்கு பணம்!?” “இது பெங்களூரில் இருந்து ஆரம்பித்த பஸ்...கிருஷ்ணகிரியில் இறங்கிய ஒருத்தரிடம் சி ல்லறை இ ல்ல ன் னு ச�ொன்னே ன் . பரவாயில்லை ... சில்லறை கிடைத்தவுடன் ஏ த ா வ து ஒ ரு சி ன்ன பு ண் ணி ய ம் பண்ணுங்கன்னு ச�ொன்னார்.. அதை வைச்சிதான்.” “ர�ொம்ப நன்றி.. சார்.” என்று தன் மகனைப் பார்த்தவர்.. “டேய்.. ஏதுடா உனக்கு பால்கோவா”? “ க ண ்டக்ட ர் க�ொடுத்தார்.”

மாமா

வ ா ங் கி க்

“சார்...பால்கோவா!?” “ஓ.. அதுவா? நான் இந்த இடத்திலதான் வளர்ந்தவன்.. வளரும் வயதில் இந்தப் பால்கோவாவிற்காக நான் ஏங்கிய ஏக்கம் எனக்குத்தான் தெரியும். பையன் உங்களிடம் கே ட ்ட து எ ன் க ா து க் கு கேட் டு ச் சி . . அதுதான்.” “நன்றி சார்” என்று அவர் ச�ொல்ல... அந்தப் பஸ்சின் ஒலி பெருக்கியில் SPB “வாழும்மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா “ என்று கண்ணதாசன்-இளையராஜா அவர்களின் உதவிய�ோடு பாடிக் க�ொண்டு இருந்தார்.

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அஞ்சலி (ஏப்ரல் 27, 1945 திசம்பர் 21, 2018) வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‌ க�ொ ள் கி ற து . அ ன்னார் வ ட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) 2004 தமிழ் விழாவில் (Baltimore) கலந்து சிறப்புரை ஆற்றியவர். எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் நாடு மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான ‌ விருதைப் பெற்றவர். ‘’வானம் வசப்படும்’’ என்ற நாவலுக்காக 1995ஆம் ஆண்டு அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் த�ொடங்கி, குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தவர். இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு க�ொண்டிருந்தவர்.

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் பெற்ற விருதுகள்: 1. சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும் 2. பாரதிய பாசா பரிசத்துத் விருது 3. க�ோயம்புத்தூர் கத்தூரி இரங்கம்மாள் விருது – மகாநதி 4. இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும் 5. சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா 6. தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள் 7. தமிழக சிறந்த சிறுகதைத் த�ொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் ஏறத்தாழ 300 கதைகள், இருபத்தைந்திற்கும் மேற்பட்ட புதினங்கள் ஏறத்தாழ இருநூறு கட்டுரைகள் பங்களிப்பாகத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

22

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


குழந்தைகள்நாள் விழா!

வ ா சி ங ்ட ன் வ ட ்டா ர த் த மி ழ்ச்ச ங ்க த் தி ன் குழந்தைகள்நாள் விழா 2018-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று வர்ஜினியா மாகாணத்தின் அலெக்சான்ட்ரியா நகரில் உள்ள T. J. மேநிலைப்பள்ளியில் வெகு சிறப்பாக க�ொண்டாடப்பட்டது. குழந்தைகள்நாள் விழா சிறப்பு நிகழ்ச்சிகளை, நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் அழகான மழலைத் தமிழில் த�ொகுத்து வழங்க, தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் மறை ஒதலுடன் பிற்பகல் 2 மணிக்கு த�ொடங்கியது. அதனைத் த�ொடர்ந்து நமது பகுதி குழந்தைகளின் ம ா று வேடப் ப�ோட் டி க ள் வெ கு அ ழ க ா க‌ நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தப் ப�ோட்டியில் பல்வேறு கண்கவர் வண்ண ஆ ட ை க ள் அ ணி ந் து மேடையில் வந்து மாயங்கள் செய்தது கண் க�ொள்ளா கட் சி ய ா கு ம் . இ ந்த ப�ோட் டி யி ல் கல ந் து க�ொ ண ்ட அ ன ை த் து கு ழ ந்தைக ளு க் கு ம் ந ம து தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இ ந்த வி ழ ா வி ல் முத்தாய்ப்பாக அமைந்தது வ ா சி ங ்ட ன் வ ட ்டா ர ப் பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் குழந்தைகள் கலந்து க�ொண்ட பள்ளிகளின் சங்கமம் நிகழ்ச்சியாகும். இந்த நிகச்சிக்கு அனைத்து பள்ளிகளின் குழந்தைகளும் பல குழுக்களாக வண்ண வண்ண ஆடைகளுடன் பல்வேறு பதாகைகளை ஏந்தி அவர்களது பள்ளிகளின் பாடல் ஒலிக்க, உள்ளூர் இசைக் கலைஞர்களின் இசைக்கேற்ப முழக்கமிட்டு வந்து மேடையை அலங்கரித்தது வெகு சிறப்பாக அமைந்தது. அனைத்து பள்ளிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு பாலமாக அமையும் என்றால் அது மிகையாகாது.

சத்யா அறிவுமணி

இந்த விழாவை மேலும் சிறப்பிக்க தமிழகத்தில் இ ரு ந் து பல்வே ரு சி ற ப் பு வி ரு ந் தி னர ்க ள் கலந்துக�ொண்டனர். திரு. பாலச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் கலந்து க�ொண்டு சிறப்பித்தார். அவரின் நகைச்சுவை கலந்த உரை அரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்தத�ோடு சிந்திக்கவும் வைத்தது. மற்றொரு சிறப்பு விருந்தினர் விஜய் த�ொலைக்காட்சி புகழ் வடிவேல் பாலாஜி அவர்கள், அவர் நமது தமிழ்ச்சங்க உறுப்பினர்களுடன் இணைந்து வழங்கிய நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் ‘சிரிச்சா

ப�ோச்சு நிகழ்ச்சி’ அரங்கத்தையே அதிர வைத்தது. மேலும் விஜய் த�ொலைக்காட்சி புகழ் பாடகர் அரவிந்த் சீனிவாசு மற்றும் உள்ளூர் பாடகர்கள் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி அனைவரையும் மெய் மறந்து ரசிக்க வைத்தது. நமது குழந்தைகளின் பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது. நமது தமிழ்ப் பள்ளி குழந்தைகள் வழங்கிய திருக்குறள் தமிழ்க் கண்காட்சி க�ொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். நமது தமிழ்ச் சங்க செயற்குழுவின் திட்டமிடல் ம ற் று ம் ந ம து ச ங ்க த் தி ன் மு து கெ லு ம்பான த ன்னார்வர ்க ளி ன் அ ய ர ா த உ ழை ப ்பா ல் , குழந்தைகள்நாள் விழா திட்டமிட்டபடி மிகவும் நேர்த்தியாக நடந்து முடிந்தது.

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

23


குழந்தைகள்நாள் விழாவில் திருக்குறள் கண்காட்சி தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.

ஆ ர்வ த ்தை மீ ண் டு ம் தூ ண் டு ம் வி த ம ா க குழந்தைகள்தின விழாவில் திருக்குறள் பற்றி தமிழ் கண்காட்சி வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் உயர்நிலைப் பள்ளி, அ லக்ஸ்சாண் டி ரி ய ா எ ன்ற இ டத் தி ல் நடைபெற்றது.

அதுப�ோல வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் கடந்த முறை தமிழ் கண்காட்சியில் குழந்தைகள் அழகாகத் தங்களது தமிழ் அறிவுத் திறமைகளை த�ொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் பாதகைகள் மூலம் வெளிக்கொணர்ந்து கற்றனைத் தூறும் அறிவு. வி ழ ா வி ற் கு வ ந் தி ரு ந்த ோர ்க ளை வி ய ப் பி ல் ஆ ழ் த் தி ன ா ர ்க ள் . என்பதற்கிணங்க நமது இரண்டாவது தமிழ் ஆங்கிலத்திலேயே பேசியும் படித்தும் கவிதா சுப்ரமணியம் கண்காட்சியில் இருபத்திரண்டு குழுக்கள் வரும் நமது குழந்தைகள், தங்களால் கலந்து க�ொண்டன. இது ஒரு மாபெரும் வெற்றி! தமிழில் அழகாக த�ொகுத்து க�ொடுக்கமுடியும் என்ற வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்திற்கு மட்டும் நம்பிக்கையையும் வளர்த்தனர் என்று ச�ொன்னால் அல்ல, அனைத்துத் தமிழ்ப் பள்ளி்களுக்கும், மற்றும் மிகையாகாது. இக்குழந்தைகளைப் பெற்று எடுத்த பெற்றொர்களுக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் குழந்தைகளின்

24

ஜனவரி 2019

இது ஒரு மாபெரும் வெற்றிதான்.

 thenral.mullai@gmail.com


நடுவர்களாக திரு. பீட்டர் ஐயா, முனைவர் திரு. ச�ொர்ணம் சங்கர், மற்றும் திரு. செந்தில் முருகன் பங்கேற்று கேள்விக்கணைகளைத் த�ொடுக்கத் த�ொடுக்க தங்களது அழகான க�ொஞ்சும் தமிழில் அதற்கான விளக்கங்களை மட மடவென எடுத்துக் க�ொடுத்தார்கள். நடுவர்களும் மிகப் ப�ொறுமையாக, ஊக்கப்படுத்தி, அழகாக எடுத்துக் க�ொடுத்து அவர்களை உற்சாகப் படுத்தினார்கள். இருபத்திரண்டு பாதகைகளையும் ப�ொறுமையாகப் படித்து மதிப்பெண்கள் அளித்த ந டு வ ர ்க ளு க் கு ந ம து வ ா சி ங ்ட ன் வ ட ்டா ர த் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் க�ொள்கிற�ோம். இதில் திருக்குறளைப் பற்றி சுவையான தகவல்கள் அறிந்ததும் அறியாதும் , திருக்குறள் பற்றி சில சிறப்பு தகவல்கள், திருக்குறள் வான்சிறப்பு, திருக்குறள் ஓலைசுவடிமுதல் இணையதளம் வரை, திருவள்ளுவர் சிலைகள், திருக்குறள் அமைப்பு, எனக்கு தெரிந்த திருக்குறள், நட்பாராய்தல், திருக்குறளும் அதன் ப�ொருளும், திருக்குறள் குறிப்புகள் என பல தலைப்பு களில் நம்மை எல்லாம் நமது பள்ளி நாட்களுக்கு கூட்டிச் சென்று விட்டனர்.

கடந்த முறை முதல் ( எலிகாட் தமிழ்ப் பள்ளி), இரண்டாம் ( மேரிலாண்ட் தமிழ்ப் பள்ளி) பரிசு வாங்கிய குழந்தைகள் மீண்டும் அதே இடத்தை பிடித்து விட்டார்கள். ஆதனால் அவர்களுக்குத் தமிழ்ச்சங்க மேடையில் சிறப்பாக எடுத்துச் ச�ொல்லி, அவர்களுக்கு அடுத்து வரும் ப�ோட்டியாளருக்கு முதல் பரிசு ($75), இரண்டாம் பரிசு($50) மற்றும் மூன்றாம் பரிசு ($25) என தமிழ்ச்சங்கம் அளித்தது. இதைப் பார்க்க வந்திருந்த பார்வையாளர்களும், குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.. ஆ ர்வ த ்த ோ டு பங் கு ப ெ ற ்ற அ ன ை த் து க் குழந்தைகளுக்கும் தமிழ்ச்சங்கம் சார்பில் வாழ்த்துகள். இதைப்போல், வரும் தமிழ்ச்சங்க நிகழ்வுகளிலும் கலந்து பெற்றோர்களையும், தமிழ்ப்பள்ளிகளையும், தமிழ்ச்சங்கத்தையும் சிறப்பு படுத்துமாறு நமது வளர்ந்து வரும் தலைமுறையிடம் தமிழ்ச்சங்கம் சார்பாகக் கேட்டுக் க�ொள்கிற�ோம். அமெரிக்க ம ண் ணி ல் த மி ழை வ ள ர் த் து , ந ம து அ டு த ்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இது ப�ோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தித் தந்த நமது வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி!

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

25


நம் தமிழ்ச்சங்கத்தின்

டி

ஒன்பதாவது தமிழிசை விழா – 2018

சம்பர் மாதம் 15ஆம் தேதி ஞாயிறு அன்று த மி ழ்த்தா ய் வ ா ழ் த் து ட ன் , வ ா சி ங ்ட ன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாவது தமிழிசை விழா, முருகன் க�ோயில் கலை அரங்கத்தில் கலகலப்புடன் ஆரம்பித்த து. திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்கள், வாசிங்டன் வட்டார்த் தமிழ்ச்சங்கம் நட த்தி வரும் தமிழிசை விழா பற்றியும், கடந்த ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த 8 தமிழிசை நிகழ்ச்சிகளின் விவரங்களையும் ச�ொல்லி சிற்றுரை ஆற்றினார். வாசிங்டன் வட்டாரத்தின் தமிழ் மரபிசைக்குழு (மரபிசை மீட்டல்) முதன் முறையாக நாதசுரம், தவில் க�ொண்டு இசை நிகழ்ச்சி நட த்தினார்கள். திரு, சிவசங்கர் சுப்ரமணியன், நாதசுரமும், திரு, விஜயகுமார் முத்துசாமி, திரு. சண்முகம் ல�ோகநாதன், திரு. நித்திலசெல்வன் முத்துசாமி ஆகிய�ோர் தவிலும் வாசித்தனர். பேரவைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி அவர்கள் மாலையை எடுத்துக் க�ொடுக்க திருமதி சுனிதா மாதவன் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிள்ளைகளுக்கு வாய்ப்பாட்டு இசைப்போட்டி, செவ்வியல் இசை (classical) மற்றும் மக்களிசை (Semi-classical) என்று இரு பிரிவுகளாக நடைபெற்றது.

26

ஜனவரி 2019

ஒவ்வொரு பிரிவிலும் 5-10 வயதிலும், 11-17 வயதிலும் இரு பிரிவுகளாப் பிரித்து ப�ோட்டிகள் நட த்தப்பட்டன. ம�ொத்தம் 44 பிள்ளைகள் ப�ோட்டியில் பங்கு பெற்று பாடினார்கள் . தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ராஜாரம் சீனிவாசன் அவர்கள் தமிழிசைப்போட்டியின் நடுவர்கள் திரு. பாபு நாயகம், திரு. வாசு சக்கேரா, திருமதி சுனிதா மாதவன் ஆகிய�ோர்களை அறிமுகப்படுத்தினார். ப�ோட்டி விதிமுறைகளை ப�ோட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் திரு. பாபு விநாயகம் அவர்கள் தெளிவுபட விளக்கினார். 9-ஆம் ஆண்டு தமிழிசை விழா – வாய்ப்பாட்டு ப�ோட்டி முடிவுகள்

 thenral.mullai@gmail.com


மக்களிசை - Semi-classical (வயது 5 முதல் 10 வரை) முதலிடம் – நிலா ப்ரேம் இரண்டாமிடம்– ஸ்ரேயா இராஜாராமன் மூன்றாமிடம் – லியானா தெய்வநாயகம் மக்களிசை - Semi-classical (வயது 11க்கும் மேல் ) முதலிடம் – கார்த்திக் முத்துகுமார் இரண்டாமிடம் - தன்யா பாபு மூன்றாமிடம் - பூர்ணா பிரகாஷ்

மரபிசை நிகழ்ச்சி தமிழிசை நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, டி.சிமரபிசைக் குழுவிலிருந்து, முனைவர் விஜயகுமார் முத்துசாமி (தவில்), திரு. சிவசங்கர் சுப்ரமணியன் (நாதசுரம்), திரு. ல�ோகநாதன் சண்முகம் (தவில்), திரு. நித்திலசெல்வன் முத்துசாமி (தவில்) ஆ கி ய�ோ ர் பி ன் வ ரு ம்பாடல ்க ளு க் கு இசைக்கருவிகளை மீட்டி அவைய�ோரை மகிழ்வித்தார்கள்

மல்லாரி - பண்: கம்பீரநாட்டை த�ோடுடையசெவியன் - திருஞானசம்பந்தர்தேவாரம் - பண்: கம்பீரநாட்டை அடிமீதுஅடிவைத்து - பண்: சிந்துபைரவி சென்னிகுளநகர்வாசன் -பண்: காவடிசிந்து அழகுதெய்வமாகவந்து -பண்: காவடிசிந்து

செவ்விசை - Classical (வயது 5 முதல் 10 வரை) முதலிடம் – சஹானா அரவிந்த் இரண்டாமிடம் – க�ோதா அரவிந்தன் மூன்றாமிடம் – தருண் கணேஷ் செவ்விசை Classical (வயது 11க்கும் மேல்) முதலிடம் – சிவானி விஸ்வநாதன் இரண்டாமிடம் – ஹர்ஷினி பரன்டபள்ளி மூன்றாமிடம் – மானஷா ஷான் ப�ோட்டியில் கலந்து க�ொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ப�ோட்டியில் வெற்றி ப ெ ற ்ற வ ர ்க ளு க் கு ப் ப ரி சு க் க�ோ ப ்பைகள�ோ டு சான்றிதழும் வழங்கப்பட்டது. ப�ோட் டி க ள் ந ட ந் து மு டி ந்த வு ட ன் , சி ற ப் பு நிகழ்ச்சியாக, திரு. ரிஷிகேஷ் பாலாஜி வாய்ப்பாட்டு பாட, திரு. ஸ்ரீகார், முழவு /மிருதங்கம், திரு. ச�ௌம்ய நாராயணன், கடம், திரு. சாகேத் பந்துலா, நரம்பிசை/ வயலின் இசைக்க,‌கச்சேரி களைகட்டியது. இசை நிகழ்ச்சி மிக மிகச் சிறப்பாக அமைந்து கேட்போரை மகிழ்வித்தது.

ஜனவரி 2019

தமிழ்ச்சங்கச் செயற்குழு  thenral.mullai@gmail.com

27


கவிஞர் அறிவுமதியின்

வாழ்க்கைப் பயணத்தில் சில காட்சிகள்... த�ொ

ட்டிலூர் சு.கீணனூர். வெள்ளி மலையில் இறங்கி, கிள்ளையில் கட ல் சே ரு ம் ம ணி மு த ்தா நதிக்கரையில் அமைந்த ஊர். பதினாறு வயது வரை மீன்களை விலை க�ொடுத்து வாங்கியறியாத நீர்வளம் சூழ்ந்த வாழ்க்கையன்தான் நான். ஆறு,. ப ெ ரி ய வ ா ய்க்கா ல் , சி ன்ன வ ா ய்க்கா ல் , தட்டான�ோடை, கார்மாங்குடி ஓடை, ஏரி, விளாமரத்துக்குட்டை, கலுங்கு, அணைக்கட்டு இவை எனைச் சூழ்ந்திருந்த நீர்ச் ச�ொற்கள். ஆ ன ா லு ம் , ந ா ன் பு ன ்செ ய் க் க ா ட் டு ப் பிள்ளைதான்! என் அம்மா அப்பாவிற்கு நான், ருக்குமணி, சீதா, இராமசாமி ஆகிய�ோர�ோடு பிறந்த மதியழகன். என் புன்செய்க்காட்டிற்கு, நான் வரகு, தினை, சாமை, காக்காச் ச�ோளம், ம�ோச்சை, துவரை, தட்டைப்பயிறு, உளுந்து, க�ொ ள் ளு , ப ச ்சை ப ்ப யி று , ந ரி ப ்பற் று , மல்லாக�ொட்டை, க�ொம்புத்தேன், க�ொசுத்தேன், பச்சரிகிக்காளான், ம�ொட்டுக்காளான், ஈசல் இவர்கள�ோடுப் பிறந்த கடைசிப் பையன். ப�ொன்னியின் செல்வனில் குதிரை ஒடத் த�ொடங்குமே, வீராணம் ஏரிக்கரை; அதில் வாழைக் க�ொல்லை அம்மா ஊர். கை நாட்டு அம்மா. ஆனால் வயல்வெளி உழைப்புகளால் வடிவமைக்கப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களின் நூலகம் அம்மா! அப்பா நல்ல ஓவியர்; புதினம் எழுதி பெட்டிக்குள் வைதிருந்தவர். 1949- ல் கழகக் க�ொட்டாய் கட்டி, அதையே வள்ளுவர் படிப்பகமாக நடத்தியவர். கை நாட்டிற்கும் கையெழுத்திற்கும் பிறந்த நான், ‘மணிமுத்தா நதி’ ஆற்றுமணல் பரப்பி அதில் ‘அ’ எழுதப் பழகியவன். ஐந்தாம் வகுப்புவரை, ஊரிலேயே உதவிபெறும் த�ொடக்கப்பள்ளியில் படித்தவன். ஆறிலிருந்து, நான்கு கில�ோ மீட்டர் புன்செய்க் காட்டுவழியே... நடந்துப�ோய், கம்மாபுரம் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். அப்பா, எட்டுமைல் பத்துமைல் என்று நடத்தியே அழைத்துப்போய் கேட்க வைத்தத் தலைவர்களின் பேச்சுகளும். அப்பா வாங்கி வந்தத் திராவிட இயக்க இதழ்களும், எனக்குக் கூடுதலான கல்வியாயின. தமிழ்… தமிழ் நீயும் எழுது என்று இந்தக் கூடுதல் கல்வியே என்னை பள்ளி பருவத்திலேயே, வீரனார் க�ோயில் காட்டு நாரத்தை மரத்தடியில் அமர வைத்து எழுதத் தூண்டியது. புகுமுக வகுப்பு, விருந்தாசலம் க�ொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரி. இளங்கலை, முதுகலை தமிழ்

28

ஜனவரி 2019

முனைவர் ெஜயந்தி சங்கர்

அ ண ்ணா ம லைப் பல ்க லை க் க ழ கத் தி ல் ; பெரும்பேராசிரியர்கள் வ. சுப. மாணிக்கம், தண்டபாணி தேசியகர், க. வள்ளைவாரணம் ப�ோன்றோரிடம் தமிழ் குடித்து வளர்ந்த பிள்ளை நான். தமிழ்நாடு அரசு த�ொல்பொருள் ஆய்வுத்துறையில் முதுநிலை பட்டயப் படிப்பு படித்தவன். அதில் குற்றாலம் க�ோயிலை ஆய்வு செய்தவன். திரிகூட ராசப்பகவிராயர் மேலகர இல்லத்திலிருந்து நூற்றூக்கணக்கான பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைக் கண்டெடுத்து, தமிழ்நாடு அரசு த�ொல்பொருள் ஆய்வுத்துறையில் ஒப்படைத்தவன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘முருகன் நடுகல் வீரனே!’ என்று தலைப்பில் ஆய்வுமாணவனாக மூன்று ஆண்டுகள் பேராசிரியர் ச. வே. சுப்ரமணியம் அவர்களிடம் ஆய்வு செய்தவன். ஆ ய் வி ல் உ த வி த ்த ொகை கி ட ை க ்க வி ல்லை ; சென்னை வறுமை, ‘பதினாறு வயதிலே’ படம் நீயும் உள்ளே வரலாம் என்று விரல் பிடித்து இழுக்கிறது. பாக்யராஜ், பாரதிராஜா இருவருமே தங்களிடம் பணியாற்ற ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள். பாக்யராஜிடம் ப�ோகிறேன்; நான்கு படங்கள் திரைகதை, உரையாடல் உதவியாளராக அவரிடம் இருக்கிறேன்.. பாலுமகேந்திரா அவர்களிடம் ஏழு ஆ ண் டு க ள் உ த வி இ ய க் கு ந ர ா க இ ரு க் கி றே ன் . ப ா ர தி ர ா ஜ ா வி ட ம் ஐ ந் து ஆ ண் டு க ள் உ த வி இயக்குநராகப் பணிபுரிகிறேன். ‘புதுநெல்லு புதுநாத்து’, ‘நாட�ோடித்தென்றல்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’,

 thenral.mullai@gmail.com


‘பசும்பொன்’ ப�ோன்ற படங்களில் இத்தனைப் பேர்களிடம் பணிபுரிந்த அனுபவம் இருந்தும் ஏன் இயக்கவில்லை என்றுதானே கேட்கிறீர்கள்? நான்தேடிய தமிழ் முகங்கள் கிடைக்கவில்லை என்கிற வலியால் மட்டுமே. தமிழ்பெண்கள் நடிக்க வருவதில் விருப்பமற்ற ஒரு பண்பாட்டுச் சிக்கல் உள்ளதை என் தேடல் அனுபவத்தில் உணர்ந்தேன். அண்ணன் கலைப்புலி தாணு அவர்கள், “சிறைச்சாலை தி ரை ப ்படத் தி ற் கு உ ரை ய ா ட ல் , ப ா ட ல் எ ன் று உன்பெயரைப் ப�ோடப்போகிறேன். என்ன ச�ொல்கிறாய்?” என்றார். அவரது என்மீதான நம்பிகையை ஏற்றேன். இசைஞானியின் இனித்த மெட்டுகளுக்குத் தமிழ் செய்தேன். செம்பூவே பூவே... உள்ளிட்ட அந்தப் பாடல்கள்தாம் உலகத்தமிழ் உறவுகளிடம் என்னை மிக நெருக்கமாய் அழைத்துப்போய் உறவு செய்தன. இதுவரை இருநூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியிருந்தேன். எங்கே செல்லும் இந்தப் பாதை- சேது மாலைதன் வேதனை கூட்டதடி - சேது அழகூரில் பூத்தவளே - திருமலை ப�ொய் ச�ொல்லக் கூடாது காதலி - ரன் கவிதையே தெரியுமா - ஜெயம் பிரிவ�ொன்றை சந்தித்தேன் - பிரியாதவரம் வேண்டும் விடைக�ொடு விடைக�ொடு உயிரே - பிரியாதவரம் வேண்டும் உதயா உதயா உளறுகிறேன் - உதயா

நூல்கள் 1. என் பிரிய வசுந்தமே, 2. நிரந் தரமனிதர்கள், 3. அன்பான ராட்சசிக்கு, 4. புல்லின் நுனியில் ப னி த் து ளி , 5 . அ ணு த் தி மி ர் அடக்கு, 6. ஆயுளின் அந்திவரை, 7. கடைசி மழைத் துளி, 8. நட்புக் காலம், 9. மணிமுத்தா ஆற்றங்கரையில், 10. வலி, 11. மழைப்பேச்சு, 12. நட்பு ம�ொழி, 13. மழைத் தும்பிகள், 14. வெள்ளைத் தீ- சிறுகதை, 15. தமிழ்முருகன் வரலாறு - ஆய்வு நூல் மனித வாழ்வு உடல் அசைவுகளால் வடிவமைக்கப் பட்டது. குனிந்து நிமிர்கிற உழைப்பு உடல்களில் இ சை யு ம் , ஆ ட லு ம் , இ ய ல்பா ய் இ ரு க் கி ன்றன . ஒலியடுக்குகளே உற்பத்தி செய்து க�ொண்டே உடல்கள் உழைக்க முடியும். பாட்டன் பாட்டி என்ற ச�ொல்லாடலே அதன் அடிப்படையில் த�ோன்றியதுதான். இன்று நாம் பேச்சன், பேச்சிகள். ஆம். உடல் உழைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நாற்காலி மனிதர்கள்! உடலுழைப்புத் த�ொடர்ச்சியின் இசை அதிர்வும், ஆடல் அதிர்வும் உற்பத்தித் தளத்திலிருந்து நுகர்வோர் தளத்திற்கு நம்மைக் குறுக்கியிருக்கிறது. உடலுழைப்பற்ற உடற்பயிற்சி வாழ்வு!ஆயினும், பாடல்களைத் த�ொடர்ந்து கேட்கிற பழக்கத்தாலும் பிடித்த பாடல்களின் மெட்டுகளில் நம் சுய உணர்வில் எழுதிப் பார்க்கும் த�ொடர் முயற்சியாலுமே, நாம் சிறந்த பாடலாசிரியர்களாக வெற்றி செய்ய முடியும். தனனா தனனா தனனானா அடடா அடடா அவள்தானா.. அவ்வளவுதான்... த�ொடங்குகள்.

ப�ோன்ற உங்களுக்கு அறிமுகமான பாடல்கள்...

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நம்மால் எளிதாக என்ன செய்ய முடியும்? Hacks to Going Green

Climate change is a word we often hear in the midst of political argument. The existence of global warming, rising sea levels and toxic air is debated while people around the world are affected by these very realities. These phenomenon often seem insurmountable. However, if each of us takes steps to become more green, we can play a role in improving our environment for generations to come. Here are 5 simple hacks to becoming more environmentally (and financially) friendly: 1.

Reduce Water Waste - Fix the leaky faucet. Turn off the water while brushing your teeth and soaping up your hands. Cut down on your shower time.

2.

Unplug Appliances - Appliances draw energy when plugged in, even when not in use. Unplug the toaster, the treadmill, the charger you left in the outlet etc.

3.

Turn Off the Lights - When you leave a room, turn off the lights. Use natural light whenever possible.

4.

Use Cloth Bags - Buy some cloth bags and leave them in your car. That way you’ll never forget to bring these bags with you to the grocery store.

5.

Use Towels Instead of Paper Towels - When wiping down your table at the end of the day, don’t use paper towels. Using towels allows for reusability.

-Kavya Kumaran

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

29


ஒருங்கிணைந்த மருத்துவ முறை: (INTEGRATIVE MEDICINE):

இதுவே சீரிய வருங்கால மருத்துவ முறை! [முன்னாள் பேராசிரியர் முனைவர் மயிலை செல்வ கிருட்டினமூர்த்தி, பேராசிரியர் மற்றும் தலைவர், மருந்தியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்]

இ

ன்றை ய க ா லக ்க ட ்டத் தி ல் பெரும்பாலான ந�ோயுற்றோர் நாடுவது நவீன மருத்துவமே (Allopathic system). இதன் காரணம் குறிப்பாகச் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து த�ொடர்ச்சியாகச் செம்மை ய ா ன ஆ ய் வு க ள் மூ ல ம் ந�ோய்களைத் துல்லியமாகக் கண்டறியும் அற்புதமான கருவிகளும் (diagnostic devices), தீராத ந�ோய்களுக்குக்கூட ச க் தி வ ா ய்ந்த ம ரு ந் து க ளு ம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதுதான். இதன் பயன்பாடுகளின் விளைவாக நவீன மருத்துவத்தின் மூலம் மனிதனின் ஆயுட்காலம் தற்போது நீண்டிருப்பதுஅனைவரும் அறிந்த உண்மையாகும் . எனினும் இங்ஙனம் நீடிக்கப்பட்ட ஆயுள் பெற்றவர்களின் வாழ்க்கைத்தரம் (quality of life) உகந்ததாக அமையவில்லை என்பதும் உண்மை . அதனால் , அவர்கள் உடல் நலிவுற்று அன்றாடம் பிறரின் உதவியை நாடி வாழும் அவல நிலையில் , உற்றோர் உறவினருக்குப் பாரமாகவே வாழ்கின்றனர் . “ஏன், நாமிங்ஙனம் வாழவேண்டும், “ என்று கூட சிந்திக்கும் அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்படு கின்றனர் . மேற்கூறிய நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் , மிகச்சிறந்த த�ொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின்னும் , இ ன் னும் ந வீன ம ருத்துவத்தால் முழுத்தீர் வுக் காணமுடியாத பல நீண்டகால ந�ோய்நிலைகள் (Chronic ailments) உள்ளன - எடுத்துக்காட்டாக , நீரிழிவு ந�ோய் (Diabetes) , மூட்டு வலி (Joint pain), காக்கா வலிப்பு (Epilepsy) , மீன் செதில் ந�ோய் (Psoriasis), புரையழற்சி (Sinusitis), முதுமை மறதி (Alzheimer”sdisease), மனநிலை பாதிப்புகள் (Psychiatric disorders), சில புற்று ந�ோய்கள் (certain Cancers) முதலியன . இந்நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் உட்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது . இங்ஙனம் பல மருந்துகள் , நீண்ட காலத்திற்கு பயன்படுத்துகையில்

30

ஜனவரி 2019

முன்னமேயே தீராதிருக்கும் ந�ோய்களுடன் , மிகையான மருந்துகள் உபய�ோகத்தினால் மருந்துகளால் விளையும் ந�ோய்களும் - (Drug - induced diseases) சேர்ந்து விடுகின்றன. ஆகவே , இத்தகைய காலக் கட்டங்களில் , ந வீ ன ம ரு ந் து க ளு ட ன் , ஏ ற ்ற இ த ர ம ரு த் து வ மு றை ம ரு ந் து களை யு ம் உடன்பயன்படுத்தி , நவீன மருந்துகளின் மிகையானப் பயன்பாட்டை இயன்றளவு குறைத்துவிடலாம் . மேலும், சளி , காய்ச்சல் , தலைவலி , செரிமானக் குறைபாடு, பல்வித உடல் வலிகள் ப�ோன்ற சின்னஞ்சிறு உடல் ந ல க் கு றைப ா டு க ளு க் கு , ஆ ர ம்ப நிலையிலேயே நவீன மருந்துகளுக்குப் பதிலாக , மிகையானப் பக்கவிளைவுகளற்ற இதர மருத்துவமுறை மருந்துகளைக் கையாண்டு இச்சிறு ந�ோய்கள் மேலும் தீவிரமடையாமல் தவிர்க்கலாம் . இ ந ்நெ றி மு றைகளை க் கை ய ா ண ்டா ல் , ந வீ ன மருத்துவத்தின் மேன்மையின் பயனாகப் பெற்ற நீண்ட ஆயுட்காலத்தில் வாழ்க்கைத்தரம் தாழ்வு அடைவதை வெகுவாகத் தவிர்த்துவிட முடியும் . ஆக , நீ ண்ட ஆயு ள் ப ெ ற்றோ ர் , பிற ரு க் கு பாரமாயில்லாது இயல்பான நல்ல வாழ்கைத்தரத்துடன் வாழ ஒரே வழி ஒருங்கிணைந்த மருத்துவத்தை கடைப்பிடிப்பதேயாகும் . எனவே, வெவ்வேறு மருத்துவ முறைகளுள் எது சிறந்தது / தாழ்ந்தது என்ற விவாதத்தை விடுத்து அனைத்து முறைகளிலுமுள்ள - நவீன , ஓமிய�ோபதி , சித்தா , ஆயுர்வேத , யுனானி மு றைக ளி ன் - ந ல்லம்ச ங ்க ளை யெல்லா ம் ஒருங்கிணைத்து பயன்பாட்டிற்குக் க�ொண்டுவரும் முறையே "ஒருங்கிணைந்தமருத்துவ முறையாகும் ." இதனை நடைமுறைக்குக் க�ொண்டுவர , ஒவ்வொரு மருத்துவமனையிலும் அனைத்து மருத்துவ முறைகளின் நிபுணர்களும் இடம் பெற்றிருக்கவேண்டும் . இவர்கள் ஒருங்கிணைந்து - ந�ோயாளிகளின் ந�ோய்களுக்குத் தீர்வுகண்டு, அவர்களின் உடல் நலம் பேணுவதே ஒருமித்த ந�ோக்கமாகக் க�ொண்டு - செயல்பட

 thenral.mullai@gmail.com


வேண்டும். எந்தெந்த ந�ோய்களில் , எந்தெந்த ந�ோய்நிலைகளில் (stages of diseases), எந்தெந்த மருத்துவமுறை மருந்துகள் உகந்ததாக அமையும் , எந்தெந்த மருத்துவமுறை மருந்துகளைச் சேர்ந்து உட்கொள்ளமுடியும் என்று தீர்மானித்து பரிந்துரைச் செய்யவேண்டும். நிச்சயம், இங்ஙனம் தீர்மானிக்க ஏதுவாக த�ொடர்ந்து ந�ோயாளிகளில் மருத்துவ ஆ ர ா ய் ச் சி க ள் ( C l i n i c a l r e s e a r c h ) மேற்கொள்ளவேண்டும். இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறையை மேற்கொள்வதால் , நவீனமுறை மருந்துகளை அத்தியாவசியமானப�ோது மட்டும் பயன்படுத்தி அவைகளின் நற்பயன்களை மட்டும் ஏற்று , தீய பக்கவிளைவுகளையும் , மருந்துகளால் வி ளை யு ம் ந�ோய ்க ளை யு ம் த வி ர்ப்ப த ா ல் வாழ்க்கைத்தரம் தாழ்வதை வெகுவாகத் தவிர்க்க இயலும் . ஒரு சில ஆண்டுகளாக , உலகம் முழுவதும் "ஒருங்கிணைந்த மருத்துவத்தின் சிறப்பினைப் பற்றிய விழிப்புணர்வு பெருகி வருகிறது . குறிப்பாக , சி ற ப ்பான ப ா ர ம்ப ரி ய ம ரு த் து வ மு றைக ள் நடைமுறையிலுள்ள இந்தியத் துணைக்கண்டத்தில் , இந்திய அரசு ஒருங்கிணைந்த மருத்துவமுறையைச் செ ய ல்ப டு த் து வ தி ல் தீ வி ர மு ன ை ப் பு ட ன் செயல்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும் . இம்ம்மருத்துவ முறையினால் மட்டுமே , உலக உடல்நல நிறுவனத்தின் க�ோட்பாட்டினை - "உடல் நலம் என்பது வெறும் பிணியும் , உடல் நலிவுமற்ற நிலைமட்டுமின்றி , முழுமையான உடல், மன, சமூக நலமும் இணைந்த நிலையே " - முழுமையாக அடைய இயலும் . எனவே, உலகில் மனிதயினம் ஆயுட்காலம் முழுமையும் இயல்பான வாழ்க்கைத் தரத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ , "ஒருங்கிணைந்த மருத்துவ முறையே " வருங்காலத்திற்கு உகந்த மருத்துவ முறையாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை . "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேற�ொன்று அறியேன் பராபரமே ! - தாயுமானவர்

இரங்கல் செய்தி

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவர் முனைவர் நாகராச சேதுராமன் அவர்களின் தாயார் திருமதி இலட்சுமி பாலகதிரேசன் 12/29/2019 சனிக்கிழமை அன்று தனது 78 வயதில் மதுரையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் க�ொள்கிற�ோம். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். தாயாரை இழந்து வாடும் முனைவர் நாகராச சேதுராமன் அவர்களின் குடும்பத்தினருக்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் க�ொள்கிறது.

ஜனவரி 2019

Samyuktha  thenral.mullai@gmail.com

31


ப�ோதையனாரும் பிதாகரஸ் தேற்றமும் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கர்ணம் என்பது. க�ொண்டிருந்த‌ப�ோது, ஒரு நாள் கணிதப் அ த ா வ து மு க்கோ ண த ்த ோட பாடத்தில் வரும் Pythagorean Theorem கர்ணத்தின் நீளம் எப்படி கணக்கிடுவது பற் றி ப டி த் து க ்கொண் டி ரு ந்தே ன் . எ ன்பதை மி க‌எ ளி மை ய ா க அப்போது, என் அப்பா என்னிடத்தில், ச�ொல்லியிருக்கிறார் ப�ோதையனார். அ வ ரி ன் த மி ழ ா சி ரி ய ர் அ வ ர் ப�ோதையனார் க�ோட்பாட்டின் சிறப்பம்சம் படிக்கும்போது, வகுப்பில் ச�ொன்னதைச் ச�ொன்னார். “2500 வருடத்துக்கு என்ன? வர்க்கமூலம் அதாவது Square முன்னால, பிதாகரஸ் அப்படிங்கிற root இல்லாமலேயே, நம்மால் இந்த கணித மேதை இதைக் கணக்கிட்டுச் கணிதமுறையை பயன்படுத்த முடியும். ச�ொன்னாரு. அதனாலதான் அதுக்கு இக்கணித முறையைக் க�ொண்டுதான், அவர் பேரையே வச்சாங்க. ஆனா அந்தக் காலத்தில குன்றுகள�ோட உயரம் அதற்கும் முன்னால ஒரு தமிழ்ப் புலவர் ஷ்யாம் கிருஷ்ணன் மற்றும் உயரமான இடத்தை அடைவதற்கு, ஒரு பாட்டாவே அதப் படிச்சிட்டாரு நாம் நடந்து ப�ோக வேண்டிய தூரம் தெரியுமா?’” என்றார். அவர் கூறியதை என்னால் ப�ோன்றவைகளை கணக்கிட்டிருக்காங்க! வியப்பாக‌ நம்பமுடியவில்லை. “யாரு அந்தப் புலவர்?” என்று இல்லையா? கேட்டேன். “ப�ோதையனார்,” என்று ச�ொன்னார். முதல் எடுத்துக்காட்டு: “அப்போ ஏன் இந்த தேற்றத்திற்குப் ப�ோதையனார் பேர் வரலை?” என்று கேட்டேன். அதற்கு அப்பா, நீளம் 4 மீட்டர், உயரம் 3 மீட்டர் என்றால், “ த மி ழ் இ ல க் கி ய த் து ல இ ப ்ப டி எ த ்த ன ை ய�ோ Pythagorean Theorem மூலமாக புதையல்கள் இருக்கு. அதை உலகத்துக்குத் தெரிய கணக்கிட்டுப் பார்த்தால் வாய்ப்பில்லாம இருந்தது, அவ்வளவுதான். தமிழன் ஒ ரு வேளை க ற ்றலை யு ம் க ல் வி யை யு ம் கர்ணம்= (4^2 + 3^2) = 5 ப�ொதுவுடைமையாக, உலகறியச் செய்து இருந்தால், ப�ோதையனார் க�ோட்பாடு: அவர்கள் தரணி எங்கும் அறியப் பட்டிருப்பார்கள்,” என்று அவருடைய தமிழாசிரியர் ச�ொன்னதாகச் கர்ணம் = (4-(4÷8)) + (3÷2) = 5 ச�ொன்னார். அப்போது அப்பாவுக்கும் அந்தப் பாட்டு சரியாக நினைவில் இல்லை. மறுபடியும் ஒரு முறை அந்தத் தமிழாசிரியரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தப�ோது அவர் அருமையாக‌விளக்கிச் ச�ொன்னாராம்.

இரண்டாவது எடுத்துக்காட்டு:

நீளம் 8 மீட்டர், உயரம் 6 மீட்டர் என்றால், Pythagorean Theorem மூலமாக கணக்கிட்டுப் பார்த்தால், கர்ணம் =6^2+ 8^2=36+64=10

ப�ோதையனார் பாடிய அந்தப் பாடல் இதுதான்:

ப�ோதையனார் க�ோட்பாடு

“ஓடும் நீளம்தனை ஓரேட்டுக் கூறு ஆக்கி, கூறிலே ஒன்றைத்தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால் நிற்பது கர்ணம் தானே”

கர்ணம் =(8-(8÷8))+(6÷2)=10 தமிழ் ம�ொழியை மட்டும் இல்லை, இப்படி தமிழ் இ ல க் கி ய த் தி ல் இ ரு க் கி ற இ ம்மா தி ரி ய ா ன புதையல்களைத் த�ோண்டி எடுத்து உலகத்துக்குக் காட்டுவ�ோம்.

அதன் விளக்கம் இத�ோ: செ ங ்கோ ண மு க்கோ ண த் தி ன் , நீ ள த் தி ல் (அடிப்பாகம்) 8-ல் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே

32

ஜனவரி 2019

படி

 thenral.mullai@gmail.com

புகைப்படங்கள் உதவி:

முனைவர் கண்ணன் குஞ்சிதபாதம், திரு. சங்கர் முத்துசாமி


Agilan

Shashank

Swetha

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

33


குழந்தைகளுக்குக் கற்றுக் க�ொடுத்தல் சங்கீதா கார்த்திக்

அறம் “அறம் செய விரும்பு’’ நம் ஒளவைப் பாட்டி ஆத்திசூடியில் முதலாய் ச�ொன்னது . இதற்குப் ப�ொருளாய் நம் பாட புத்தகத்தில் இருப்பது “தருமம் செய்ய விரும்பவேண்டும்” என்பதே. தருமம் என்பதும் தானம் என்பதும் அறமே!. ஆனால் இவை மட்டுமே அறம் அல்ல. அறம் என்பது மற்ற எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, ஈவு, இரக்கம் காட்டுதல் மற்றும் இன்ன பிற நற்பண்புகள் அனைத்தும் - சுருக்கமாகக் கூறினால் நல்லவை அனைத்தும் அறம். எனவே “அறம் செய விரும்பு “ என்பதின் ப�ொருள் - “நல்லவை(தை) செய்யவிரும்பவேண்டும் “ என்றே இருக்கவேண்டும். அவ்வாறே சிறார்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் . ப ா ரி - த ா ன த ர்ம ம் செய்த வ ள்ளல ா க அறியப்பட்டவன் இன்று அறம் என்ற ச�ொல்லின் ப�ொருளாய் “வேள்பாரியாய்” இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து உயிர் பெற்று உலவக்காரணம் அவன் அறத்தின் வழி நின்று இயற்கை மற்றும் குடிகளைக் காத்ததே!!

மணலை அடித்து வந்து படிமனாக்கி ஆற்றின் வண்டல் மண் உருவாகிறது. இது ஆறு மீண்டும் செழிப்புற ஓட வழி செய்கிறது. ஒரு கைப்பிடி ஆற்று மண் உருவாக நூறு ஆண்டுகள் தேவைப்படுமாம். இதனை த�ொடக்கக் கல்வியில் வளரும் குழந்தைகளுக்கு ச�ொ ல் லி க் க�ொ டு த் து வி ட ்டா ல் நூ று க�ோ டி க�ொடுத்தாலும் ஒரு கைப்பிடி மண் கூட எடுக்கவிடாத தலைமுறை தலைத்துவிடும். சில க�ோடிகளுக்காக ஆற்றை -ஆற்று மணலைத் தின்று விட்டு, ஆற்றில் கட்டியிருக்கும் பாலங்கள் பிடிமானம் இல்லாமல் உடையும் ப�ோது அதே ஆற்று மணலை மூட்டைகளில் கட்டி அண்டக்கொடுக்கும் அநியாயம் நடக்காது. மணல் திருட (எடுக்க) வருபவனிடத்தில் “நான் நூறு க�ோடி தருகிறேன்; மீண்டும் என் ஆற்று மணலை உருவாக்கித் தா” எனக் கேட்கும் உரிமைக்குரல் ஒலிக்க ஆரம்பித்துவிடும். அது மணலுக்கு மாற்று தேட மணி அடிக்கும்; ஆற்றின் மடியில் பால் வார்க்கும் . இன்று ஆரம்பக்கல்வி பயிலும் இம்மாணவக்கூட்டம் தானே அதிகாரி , தலையாரி ,எம்.எல் .ஏ , அமைச்சர் என உருவெடுக்கப்போகிறது . இவர்களுக்கு புரிய வைத்து விட்டால் ஆற்றை, காற்றை, நம் நிலத்தை பாதிக்கும் எதையும் எவ்வளவு பணம் வந்தாலும் செய்யத்துணிவார்களா !! இன்னும் ஒரு விசயம் இந்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டி இருக்கிறது. இது அறத்திலேயே அடங்கி விடும். ஆனால் அறம் என்றால் என்ன என்றே தெரியாத தலைமுறைகளை வளர்த்து எடுத்துவிட்டோம். அத்தலைமுறையால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இன்னும் ஓர் அறத்தை சிறப்பாக - தனியாக வலியுறுத்தி

ஆறு ஆறுகள் இயற்கையின் க�ொடை . மிகப்பெரும் ந ா க ரீ க ங ்க ள் அ ன ை த் து ம் ந தி க ்க ரை யி ல ே த�ோன்றியவை தான் . அத்தகைய ஆறுகள் பற்றி ச�ொல்லித்தரும் பாடம் ஆரம்பக்கல்வியிலேயே குழந்தைகளுக்கு இருக்கவேண்டும். ஆறு ஓடி ஓடி அதன் வழித்தடத்தில் இருக்கும்

34

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


சரியான முறையில் நடந்திருந்தால் -நடத்தியிருந்தால் இப்படி கையூட்டு எல்லா துறைகளிலும் க�ொடி கட்டிப் பறக்காது. லஞ்சப்பணம் உன் பெற்றோரின் வியர்வை அல்ல - சக மனிதனின் ரத்தம் என குழந்தைகளுக்குச் ச�ொல்லிக்கொடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் எப்பதவியில் இருந்தாலும் “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்துவர்”. ஆயிரமாயிரம் சகாயங்கள் உருவாகுவர். மனித இனம் எழுச்சி பெறும்.எனவே வளர் இளம் குழந்தைகளுக்கு அறம் மற்றும் இயற்கையைக் கற்பிப்போம்; நல்ல தலைமுறையிடம் இப்புவியை ஒப்படைப்போம். அறம் வெல்லும் !! கற்பிக்க வேண்டியிருக்கிறது . அது தான் நேர்மை.

நேர்மை படித்துப் பட்டம் பெற்று, பதவியில் உள்ள மக்கள் சம்பளம் வாங்குவதை மறந்து, செய்யும் வேலைக்கு - செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் - கையூட்டு வாங்குகின்றனர். இது எத்தகைய சாபக்கேடு! இவர்கள் எல்லாம் பள்ளியில் என்ன படித்தார்கள்- கூட்டல் ,கழித்தலையா? அந்த கணக்கு அறிவை எல்லாம் பணம் பெற்று சேர்ப்பதில் காண்பிக்கின்றனர் ப�ோலும். இவர்களுக்கு ஆரம்பப் பள்ளியில் “அறம் “ ச�ொல்லிக் க�ொடுத்திருந்தால் - நீதி (Moral) வகுப்புகள்

இரங்கல் செய்தி வ ா சி ங ்ட ன் வ ட ்டா ர த் த மி ழ ்ச்சங்க த் தி ன் செ ய ற் கு ழு உறுப்பினர் திருமதி கவிதா சந்திரசேகர் அவர்களது தந்தையார் 11/19/2018 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் க�ொள்கிற�ோம். தனது தந்தையை இழந்து வாடும் திருமதி கவிதா சந்திரசேகர் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

14159A Robert Paris Ct, Chantilly, VA 20151 Phone : 888.612.6260, Email : info@ajace.com

… for robust solutions www.ajace.com

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

35


இலக்கியத்துளிகள் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா தமிழிலக்கியங்களை (நூலில�ோ/கூகுலில�ோ படிக்க ஆரம்பித்தால்தான் தெரியும், எவ்வளவு செய்திகள் நம்முன்னோர்கள் நமது நல்வாழ்விற்கு க�ொடுத்துள்ளார்கள் என்று! தமிழ் இலக்கிய நீதிகள்/நெறிமுறைகள் நமக்கெதற்கு என்று ஒதுங்கி நின்றால், நாம் இழப்பது மிகுதி என்பது விளங்கும். படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் ‘அருமருந்து 500’ எனும் மருத்துவ குறிப்பேட்டில் படித்துக் கடைபிடிக்க வேண்டிய ஒரு பாடலை தங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

க�ொழந்தவேல் இராமசாமி, மேரிலாந்து

மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை

கருப்பைக்கு அச�ோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி

பல்லுக்கு வேலாலன் பசிக்கு சீரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி

விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைந�ோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் த�ொண்டைக்கு அக்கரகாரம் த�ோலுக்கு அருகுவேம்பு

கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்குவெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு ந�ொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே

முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள்

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி

அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம்சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே!!

உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு க�ொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை

36

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


ப�ொங்குக தமிழா(ல்)! நம்ம தமிழ்நாட்டிலே இல்லை தமிழ் ஏட்டிலே. இல்லை தமிழ் வீட்டிலே. இல்லை தமிழ் நாட்டிலே! என்னத்த ப�ொங்க? எப்படி ப�ொங்க! ச�ோத்துக்கு மானத்த வித்திட்டோமா இங்க? ப�ொல்லா குடி - ப�ோகி மான சூடேற்றி க�ொஞ்சமேனும் உணர்வு உப்பு சேர்த்து வெல்லத் தமிழ�ோடு ஒற்றுமை பானையிலே பச்சரிசி - இறையாண்மை ப�ொங்கட்டும்! தமிழ் நாட்டு இறையாண்மை ப�ொங்கட்டும் - தமிழால்! துள்ளி வரும் சல்லிகட்டு மாடுகளை ஏறி தழுவுதற்கும் தில்லியிடம் உத்திரவா? பன்னீர் மாடுகளா? (மாடு= செல்வம்) பயந்தென்ன

பன்னீர்செல்வம் இராசமாணிக்கம்

ஆடுவதா ஆளுவது? அதிகார நீதிக்கும் நீதி ச�ொல்வோம் நிறை தமிழை நாம் ம�ொழிவ�ோம்! ஆதி குடி பறை அதிர ப�ொங்கு தமிழால்! கல்லணை தஞ்சையிலே காவேரியே காணவில்லை! அணை மேலே அணைகட்ட ஆணையிடும் அதிகாரம் அழியுமட்டும் துஞ்சாது தமிழர் கூட்டம் அஞ்சாது ப�ொங்கு ! எழு! ப�ொங்கல் அது! வரலாறு ப�ொங்காமல் வாயெதற்கு ? ஊமைகளே! அடிமாடா? அடிமைகளா? மணல் அள்ளி மணல் அள்ளி தமிழ் தலையில் ப�ோடுவதா? எட்டு வழி சாலையிலே எமன் ப�ோக ப�ோரார�ோ? எதைபாடி ப�ோரார�ோ? காணிகளை ப�ொங்காதீர்! உங்கள் காலம் முடிந்துவிடும்! வடம் பதித்து வந்த தடம் ம�ோதி மறைத்தாலும்

ஜனவரி 2019

ஆதி தமிழ் - அடியாழம்! அகழ்ந்த த�ொன்மதுரை கீழடியில் - ஆழ்ந்த த�ொண்மை - தமிழ் இனி ஆளுமென ப�ொங்கலிடு பகை அதிர ப�ொங்கி எழு! கிழக்கு செவ்வானம் கீழடியின் தமிழ் வானம்! ஏக் கிந்தி த�ோக்கும் மந்த ப�ோக்கு காட்டுதாம் எம் தமிழ் நாட்டிலே! கட்சி அடையாளம் இல்லாமல் களைந்திடுவ�ோம்! எந்த திணிப்பையும் முந்தி எதிர்த்திடுவ�ோம் முழுதும் அழித்திடுவ�ோம்! காணும் ப�ொங்கலென காட்சிப்படுத்திடுவ�ோம்!

 thenral.mullai@gmail.com

37


தாவரங்களுண்டு வாழ்தலினிது! பழமைபேசி

எ

ல்லா உ யி ரி ன ங ்க ளி லு ம் தனிச்சிறப்பாக இப்புவியில் அமைந்திருப்பவை தாவரங் களே ய ா கு ம் . அ வ ற் று க் கு த ்தா ன் கதிரவனின் ஒளிச்சக்தியை உள்வாங்கி, வேதிச்சத்துடைய ப�ொருட்களாக மாற்றுகின்ற ஆற்றல் உண்டு. மாந்த யி ன ம் , வி லங் கி னமென ஏ ன ை ய இனங்களெல்லாம் இத்தகு வேதிச்சத்திற் காக நேரிடையாகவ�ோ, மறைமுகமா கவ�ோ தாவரங்களைச் சார்ந்தேயிருக் கின்றன. இத்தகு தாவரங்களைப் பலவாறாகவும் பரவலாகவும் உண்டு வாழ்தலென்பது ம ா ந்த னி ன் மெய்நல த ்தை யு ம் ம ன ந ல த ்தை யு ம் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வேதிச்சத்தைக் கட்டமைக்கும் தாவரங்களுக்கும், தாவரம் சார்ந்து இருக்கின்ற பிறயினங்களுக்கும் அ டி ப ்பட ை ய ா க இ ரு ந் து செ ய ல ா ற் று பவை இ ப் பு வி யெங் கு ம் நீ க ்க ம ற நி றை ந் தி ரு க் கு ம் நுண்ணுயிரிகளேயாகும். மனிதனின் உடலெங்கும் நுண்ணுயிரிகள் இருந்தாலும், வயிற்றிலும் நம் குடல்மண்டலத்திலும்தான் பெருவாரியாக இடம் பெற்றிருக்கின்றன அவை. த�ோராயமாக ஒன்றுக்கு மூன்று என்கின்ற விகிதாச்சார அடிப்படையில், 37 டிரில்லியன் உயிரணுக்கள�ோடு 100 டிரில்லியன் நு ண் ணு யி ரி க ளு ம் ந ம் உ ட லி ல் இ ட ம் பெற்றிருக்கலாமென்பது அண்மைய ஆய்வறிக்கையின் கணிப்பாக இருக்கின்றது. இவற்றின் க�ொள்ளளவு என்பது ஒன்றரை லிட்டராகவும், எடையளவு என்பது இரண்டு கில�ோகிராம்கள் வரையிலும் இருக்கக் கூடும். உ ட லி னு ள் அ மை ய ப் ப ெ ற் றி ரு க் கி ன்ற நுண்ணுயிரிகளே நம்மைக் கட்டமைக்கின் றன என்பதைப் புரிந்து க�ொண்டு, நமக்கான உண்ணும் பழக்கத்தைக் கட்டமைத்துக் க�ொள்ள வேண்டியது அவசியமென்கின்றார் பேராசிரியர் சிம�ோன் கார்டிங். வயிற்றின் கீழ்ப் பாகத்திலும் குடல்மண்டலத்திலுமாக இருக்கின்ற இந்த இரண்டு கில�ோகிர�ோம் வரையிலான நுண்ணுயிர்த் த�ொகுதியை மாந்தனின் இரண்டாவது

38

ஜனவரி 2019

மூளையென வர்ணிக்கின்றார் மருத்துவப் பேராசிரியர் சிம�ோன் கார்டிங். ஒவ்வொருவருக்குள்ளும் குறைந்தது முந்நூறிலிருந்து ஆயிரம் வரையிலான நுண்ணுயிர்க் குடும்பங்கள் வசிக்கின்றன. பெருவாரியாகப் பார்க்கின் அவற்றை எ ட் டி லி ரு ந் து பத் து வி த ம ா ன பெருங்குடும்பங்களாக வகைப்படுத்தலாம். இவை ஏன் மனிதனின் ’இரண்டாவது மூ ளை ’ எ ன வ ர் ணி க ்க ப ்ப டு கி ன்ற து ? மனிதனின் மகிழ்ச்சி, வருத்தம், சினம் ப�ோன்ற உணர்வுகளைக் கட்டமைப்பதிலும், எப்போது என்ன உண்ண வேண்டும், தின்ன வேண்டுமென்பதை யெல்லாம் இவை தீர்மானிக்கின்றன. குடலுக்குள் வாழும் இவை, இரத்தத்திலிருக்கும் நியூட்ரான்கள் வாயிலாக மூளைக்கும் சமிக்கை அனுப்புகின்றன. அதற்கேற்றாற்போல மூளையானது செயலாற்று கின்றது, ஆகையினால்தான் இவை இரண்டாவது மூ ளை எ ன ப ்ப டு கி ன்ற து . எ டு த் து க்கா ட ்டாக , மாவுச்சத்து உண்டு வாழும் நுண்ணுயிரிகள் நமக்குள் வெகுவாக இருந்து, அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு நே ரு ம் ப�ோ து அ வை மீ ண் டு ம் மீ ண் டு ம் மாவுப்பொருட்களையே உண்ணச் சமிக்கைகளை அனுப்பும்; மூளையும் திரும்பத் திரும்ப மாவுச்சத்துப் ப�ொ ரு ட ்க ள் உ ண் ணு வ தையே தூ ண் டி க் க�ொண்டிருக்கும். மனிதனின் செயலாக்கத்துக்கும் உடற்கட்டமைப்புக் கும் தேவையான எல்லாச் சத்துகளையும், அதனதன் தேவைக்கொப்ப உட்கொண்டு வாழ்தலென்பது சமச்சீர்த் தன்மையை (balance) நிலைநிறுத்தும். அப்படியான சமச்சீர்த் தன்மைக்கும் உடலில் குடிக�ொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் நேரடித் த�ொடர்பு உண்டு. நாம் குறிப்பிட்ட உணவுகளையே மீண்டும் மீண்டும் உண்ணத் தலைப்படும் ப�ோது, மற்ற சத்துகளைச் சார்ந்து வாழும் நுண்ணுயிர்க் குடும்பங்கள் அருகிப் ப�ோகும். எஞ்சியிருக்கும் நுண்ணுயிர்க் குடும்பங்களின் ஆதிக்கம் மேல�ோங்க, அவற்றுக்குப் பணிந்து அவற்றுக்கு ஏதுவான உணவுகளை உண்ணவே

 thenral.mullai@gmail.com


மூளை தூண்டும். இப்படித்தான், மனிதனுக்கு உணவின்பாற்பட்டு விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டு, சமச்சீரின்மையை உண்டாக்கி, ந�ோய்க்கூறுகளாகவும் குறைபாடுகளாகவும் வடிவெடுக்கச் செய்கின்றது நம் உடலின் நுண்ணுயிர்க்குடும்ப அமைப்பு. இ லை , த ழை , பூ , க ா ய ்க னி க ள் , வி தைக ள் , க�ொட்டைகள், தண்டுகள் முதலான தாவரத்தின் நேரடி உள்ளீட்டினை யாத�ொரு வேதிவினைக்கும் ஆ ட ்பட ா நி லை யி ல் ( u n p r o c e s s e d ) வ ா ங் கி , தழைதாம்பு(salad), ப�ொரியல், அவியல் என அதன் ச த் தி ன ை ச் சி தைக்கா த வ ண ்ண ம் ச மைத் து த் தின்னலாம். அப்படி உட்கொள்ளும் ப�ோது, இல்லாத நுண்ணுயிர்க் குடும்பங்கள் நம்மை வந்து சேரும். நம் மனத்திண்மை யும் செயலாற்று திறனும் வலுப்படும். ச த் தி ன்மை க ா ர ண ம ா க ஏ ற ்பட் டி ரு க் கி ன்ற ந�ோ ய் க் கூ று க ளு ம் கு றைப ா ட் டு க் கூ று க ளு ம் படிப்படியாக இல்லாது ப�ோகும். ஒரேவிதமான காய்கனிகள் உட்கொள்ளப்படுவதும் தவிர்த்தல் நன்று. தாவரப் ப�ொருட்களேயானாலும், அவற்றை மாற்றி மாற்றியும், பருவகாலக் காய்கனிகளாகவும், உள்ளூரில் விளைந்தவற்றுக்கு முதலிடமாகவும் அமைத்துக் க�ொள்தல் மேம்பட்ட பயனைக் க�ொடுக்கும். மாந்தனின் இரண்டாவது மூளையான நுண்ணுயிர்க் கட்டமைப்பு (human microbiota)க்கு ஏதுவாக, தாவரப்பொருட்களைக் க�ொண்டு விதவிதமாகச் செய்து தின்ன நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. ஒருவருக்கு நுண்ணுயிரிகளின் அவசியமும் சமையற்கலை நாட்டமும் இருந்தாலே ப�ோதும், படைப்பாக்க்கம் தானாய் வந்து சேர்ந்து விடும். எடுத்துக்காட்டுக்கு, ச�ோம்புச் செடி, கிளைக்கோசு குழம்பின் செய்முறையானது இங்கே இடம் பிடிக்கின்றது. ஒரு தூர் ச�ோம்பு (fennel plant), ஆறு அல்லது பத்து வரையிலான கிளைக்கோசு(brussels sprouts) எடுத்துக் க�ொண்டு, ச�ோம்புத் தூரினை சிறுகச்சிறுகவும், கிளைக்கோசினை குறுக்கு வெட்டாக இரண்டாகவும் வெட்டி வைத்துக் க�ொள்ள வேண்டும். பின்னர் வாணலியைச் சூடாக்கி, தேவையான அளவு ஆலிவ்

எ ண ்ணெ ய் ஊ ற் றி ச் சூடானதும், கடுகு, சீரகம், வெந்த ய ம் , தேவை ய ா ன அளவு வெங்காயம், பூண்டு, இ ஞ் சி , க றி வேப் பி லை மு த ல ா ன வ ற ்றை இ ட் டு வதக்கிக் க�ொள்க. பின்னர் நறுக்கி வைத்திருந்த தக்காளியையும், ச�ோம்புத் தூர் நறுக்குகளையும் இட்டு, பச்சை மணத்தை நாசியார்ந்து முகர்ந்து க�ொண்டே, பச்சைமணம் நீங்கும் வரையிலும் வதக்கிக் க�ொள்ள வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு நீர் ஊற்றிக் க�ொதி வந்தவுடன், மஞ்சத்தூள், க�ொத்துமல்லித் தூள், மசாலாத் தூள், கடலுப்பு ஆகியவற்றைத் தேவையான அளவு கலந்து க�ொதி விட வேண்டும். நீர் சற்றுக் கெட்டிப்படுவதற்காக, க�ொஞ்சம் வறுத்தகடலையை அரைத்து உலர்மாவாக்கிக் கலந்து க�ொள்ள வேண்டும். கடைசியாக குறுக்கு வெட்டில் வகிர்ந்து வைத்திருக்கும் கிளைக்கோசினையும் ப�ோட் டு அ வை அ ரைவேக்கா டு ம ட் டு மே காணுமளவுக்கு வைத்திருந்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். க�ொத்துமல்லித் தழைகளை மேலாக இட்டுச் சற்று மூடி வைத்திருக்க, ச�ோம்பு கிளைக்கோசு குழம்பு புசிக்க நமக்கும் நேரம் வந்திருக்கும்.

வாசிங்டன் தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கு எங்கள் ப�ொங்கல் விழா வாழ்த்துகள் இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்

நாஞ்சில் இ. பீற்றர், ரஞ்சிதம் பீற்றர் அலக்ஸ்சான்டர் பீற்றர், டயனா மார்டின் ஆர்தர் சாமுவேல், கிளார தீபா ஆர்தர் ரெஞ்சினா மல்லிகை ஆர்தர், பிரயன் கவின் அலக்ஸ் ரயன் அருள் ஆர்தர், ராணிர�ோஸ் ஆர்தர், கேட்லின் அலக்ஸ்

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

39


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின்

‘கஜா’ புயலின் மீட்புப் பணிகளும், உதவிகளும்

க

ஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உ டன டி ய ா க எ ன்ன தேவை என்பதை அறிந்து இரண்டு மரம் ப�ொடியாக்கும் ( wood chipper Machine) இயந்திரங்களை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.

அ தி க ா ரி க ள் உ ள் ளி ட ்டோ ர் கல ந் து க�ொ ண ்டன ர் . இ தை ஒருங்கிணைத்து சரியான தேவையை அறிந்து உரிய கிராமத்திற்கு பகிர்ந்தளிக்கும் ப�ொறுப்பை காவிரி டெல்டா விவசாய ச ங ்க ங ்க ளி ன் கூ ட ்டமைப் பு ப�ொதுச்செயளாளர் திரு.ஆறுபாதி ப கல்யாணம் , த�ொழிலதிபர் மற்றும் எக்ஸ்னோராவின் தலைவர் திரு.செந்தூர் பாரி ஆகிய�ோர் ஏற்றுக்கொண்டனர்.

கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பை அ றி ந் து உ டன டி ய ா க அ றி க்கை வெளியிட்ட வாசிங்டன் வட்டாரத் திருமதி த மி ழ்ச்ச ங ்க த் தி ன் த லை வ ர் தி ரு . லெட்சுமிப்பிரியா, இராசாராம் சீனுவாசன், தமிழ்ச்சங்கத்தின் தமிழகத்தின் கஜா புயல் நிவாரணத்திற்கு சார்பில் சங்கத்தின் செயலாளர் திரு. ஒரு முழுமையான தகவல் தளம் வெர்ஜினீயா அறிவு இராமலிங்கம் தலைமையில் தமிழகத்தில் நவம்பர் 10 த�ொடங்கி தமிழகத்தை கஜாபுயல் மீட்புக்குழு அமைத்து நிவாரண உலுக்கிய கஜா புயல் 69 உயிர் பலிகளுக்கும், உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார். அதனைய�ொட்டி ஆயிரக்கணக்கில் கால்நடைகள் இறப்பதற்கும், கஜா பாதித்த பகுதிகளின் உடனடி தேவைகளை பல்லாயிரம் வீடுகள் தரைமட்டமாவதற்கும், ஒரு அறிந்து ப�ோதிய நிதி திரட்டி சுமார் 3.5 லட்சம் க�ோடி மரங்களுக்கு மேல் விழுந்து காவிரி டெல்டாவே செலவில் இரண்டு மரம் ப�ொடியாக்கும் ( wood chipநிலைகுலையவும் காரணமாக அமைந்தது. per Machine) இயந்திரங்களை மரம் அகற்றவும், வீழ்ந்து இ ந்த து ய ர ம ா ன சூ ழ லி ல் கஜ ா பு ய லி ல் கிடக்கும் பயனற்ற மரங்களை ப�ொடியாக்கி இயற்கை ப ா தி க ்க ப ்ப ட ்ட ம க ்க ளு க் கு உ த வு வ த ற ்காக உரமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் த�ொண்டுள்ளம் க�ொண்டு பலரும் களத்தில் முடிந்ததை உதவும் வகையில் வழங்கப்பட்டது. செய்துவந்தாலும், அவற்றை மேலும் ஒருங்கிணைத்து, இ தை ம க ்க ள் ப ய ன்பாட் டி ற் கு வ ழ ங் கு ம் செம்மையாக க�ொண்டுசெல்வதில் வழக்கம்போல் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் திரு. ஓ.எஸ்.மணியன், ஒருங்கிணைப்பு சிக்கலும், பல்வேறு கேள்விகளும் ம ா வ ட ்ட ஆ ட் சி ய ர் ம ற் று ம் வி வ ச ா ய த் து றை எழுந்தன.

40

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


>>கஜா வில் பாதிக்கப்பட்ட எந்த கிராமங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்று ச�ொல்ல முடியுமா? >>எத்தனைபேர் அந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்? >>நிவாரணத்திற்கு உருவான புதிய சிந்தனையை எப்படி பயனுள்ள வகையில் பகிர்வது? >>நிவாரணப் ப�ொருள்களை விலை குறைவாக ம�ொத்தமாக எங்கே வாங்குவது? எனக்குத் தெரிந்த விலை குறைவான விற்பனையாளரை எப்படி மற்றவர்களுடன் பகிர்வது? > > எ ன் கி ர ா ம த் தி ல் ஏ ற ்ப ட ்ட உ யி ரி ழ ப ்பை எங்காவது பதிவிட முடியுமா? >>எந்த கிராமங்கள் எந்த அமைப்புகளால் உதவப்படுகிறது? >>என்னுடைய தேவைகளை எங்கே ச�ொல்வது?  உதவ விரும்புகிறேன் எப்படி உதவுவது?  நான் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ளேன். உதவிகள் பெற என் த�ொடர்பை எங்கே பதிவுசெய்வது?  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறேன். என் தன்னார்வ அமைப்பை மற்றவர்களுடன் இணைந்து சேவை செய்ய எங்கே பதிவுசெய்வது? பாதிக்கப்பட்ட கிராமங்கள், உதவி கிடைத்த கிராமங்கள், உதவி தேவைப் படும் கிராமங்கள் என்று அனைத்தையும் த�ொகுத்து எளிமையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேடும் வசதியுடன் முதல் முறையாக தமிழ்நாட்டு இயற்கைச் சீரழிவினை செம்மையாகக் கையாள, கிராமங்களைத் தத்தெடுக்க, முடிந்த உதவிகளை செய்ய வலைத்தமிழ் ஒருங்கிணைப்பில் w w w . G a j a H e l p . V a l a i T a m i l . C o m த க வ ல் த ள ம் உருவாக்கப்பட்டு கஜா புயல் வந்த மூன்றே நாளில் செயல்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் தமிழகத்தின் பல்வே று த�ொண் டு அ மைப் பு க ள் , உ த வி தேவைப்படுவ�ோர், உதவி செய்பவர்கள் என்று அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்து சிறப்பாகச் செயல்பட முடிந்தது இதில் பஞ்சாயத்து அளவில் மக்கள்தொகை விவரங்களை சேர்த்ததால் உதவி்களைச் செய்ய எளிதாக அமைந்தது. அவசர காலத்தில் த�ொழில்நுட்பம் (Technology), தரவுகள் (Data) ஒருங்கிணைத்து உதவிகளை எ ப ்ப டி செம்மை ய ா க ்க மு டி யு ம் எ ன்ப த ற் கு எடுத்துக்காட்டாக உருவான இந்தத் தளம் சென்றமுறை வ ந்த சென்னை ப ெ ரு வெள்ளத் தி ல் ஏ ற ்ப ட ்ட இழப்புக்கு நிவாரண நிதி திரட்டும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க மேடையில் அனைத்து தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளைக் க�ொண்டு வெளியிடப்பட்டது. இது மேலும் செம்மையாக வ டி வ மைக ்க ப ்பட் டு கஜ ா பு ய லு க் கு ப ய ன் படுத்தப்பட்டது.

ப�ொங்கல் விழா வாழ்த்துகள்

ஆண்டி s. கிரி & ஜெகதா கிரி ஓவியா கிரி, அகிலன் கிரி, நேயா கிரி SOFTSQUARE LLC, CHENNAI / USA

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

41


கடந்த இரண்டு ஆண்டுகள் (2017- 2018)

தமிழ்ச்சங்கச் செயல்திட்டங்களில் முத்தாய்ப்பான சில செயல்பாடுகள் இராஜாராம் சீனிவாசன், தலைவர் கடந்த இ ர ண் டு வ ரு ட ங ்க ள ா க பல்வே று நிகழ்ச்சிகளை கட்டணமின்றி வழங்கியத�ோடு மட்டும் அல்லாமல், எனது தலைமையில் தமிழ்ச்சங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தியது பெருமைக்குரியது.  2017 -2018-ஆம் ஆண்டுகளில் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழில் இரும�ொழித்திறன் முத்திரை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் மேரிலேண்ட் தமிழ்க்கல்விக் கழகத்துடன் முனைப்புடன் செயல்பட்டு, செயல் படுத்தி காட்டியது எனக்கு மிகவும் மனநிறைவான பணி. அத்துடன், ம�ோண்ட்கோமரி மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அன்னிய ம�ொழிக்கான தமிழில் 0.5 அங்கீகாரம் ஒவ்வொரு வருடமும் கிடைக்க மெரிலேண்ட் தமிழ்க் கல்விக் கழகத்துடன் முனைப்பு டன் செயல்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு அயராது ஒத்துழைப்பு நல்கிய மேனாள் மற்றும் இந்நாள் மெரிலேண்ட் தமிழ்க் கல்விக் கழகம் செயற்குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள். இது நம் அடுத்த தமிழ் சமுதாயத்தின் தலைமுறைக்கான பயனுள்ள ஆக்கப்பூர்வமான பணிகள்.  வெரிஜினியா மாநிலத்தில் கிடைத்ததைப்

ப�ோல , மே ரி ல ே ண்ட் ம ா நி லத் தி ல் தைப் ப�ொங்கலுக்கான அரசு அங்கீகாரம் பெற 2018-ஆம் ஆண்டில் முனைவர். முனைவர் இராஜன் நடராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேரிலேண்ட் தலைமைச் செயலகத்தில் மேல்சபை ஒப்புதல் பெற்று, கீழ்சபைக்கு நமது க�ோப்பு வரும் முன்சபை நிகழ்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த முயற்சி வரும் ஆண்டிலும் த�ொடர்ந்தது செயல்பட்டுத் தைப் ப�ொங்கலுக்கான அரசு அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் நடந்து க�ொண்டுள்ளது. முனைவர் இராஜன் நடராஜன் அவர்களின் இந்த தன்னலமற்ற முயற்சிக்கு எனது நன்றிகலந்த வணக்கங்கள்.  வாசிங்டனில் உள்ள இந்திய தூதரகத்துடன் ந ட் பு ப ா ர ா ட் டி , அ ன ை த் து அ லு வ லர ்க ளி ன் நன்மதிப்பைப் பெற்ற தமிழ்ச்சங்கமாக கடந்த இரண்டு வருடங்களாகச் சிறப்பாகப் பணியாற்றி, நம் தமிழ்ச் சமூகத்தின் அவசரகால உதவிகளைப் பெற்றுத்தந்தது மனமகிழ்வான நிகழ்வுகள்; இந்தப் பிணைப்பு மேலும் த�ொடரும்.  தமிழகத்தில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு வருடாவருடம் $1000 நிதியளித்து தமிழ் வழிப்பள்ளிகளை நம் தமிழ்ச்சங்கம் ஊக்குவித்து வருகிறது. நம் தமிழ்ச்சங்கத்தின் பயன்பாட்டிற்காக, முந்தைய

2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தூதரகத்திற்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. கே. சிங் அவர்களைச் சந்தித்து உரையாடின�ோம்.

42

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


செயற்குழு முன்னெடுத்தத் திட்டத்தின் படி, தமிழ் நாட்டிலிருந்து மரபிசைக் கருவிகள் வருவித்து, தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. மேலும் ப�ொங்கல் திருவிழாவிற்காக ஒரு அருமையானப் ப ா ட ல் எ ழு தி , இ சை ய மைத் து , ந டன ம ா க் கி காண�ொளியாக 2017‍ஆம் ஆண்டு வெளியிட்டப்பட்டது.  நம் பகுதியில் இருக்கும் அனைத்துத் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஆசிரியர் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சியை நம் தமிழ்ச்சங்கம் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தது. ஹார்வர்ட் தமிழ்இருக்கையின் ஒருங்கிணைப்புடன், வெர்ஜீனியா மாகாணத்தில் ஆகஸ்ட் மாதம் ஒரு பயிற்சிபட்டறையும், அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் ஒருங்கிணைப்பு டன், மெரிலேண்ட் மாகாணத்தில் செப்டம்பர் மாதத்தில் ஒரு பயிற்சிப்பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டது. இச் செயல்பாடுகள் நம் பகுதியில் சி றப்பாகத் த மிழ்ப்பணி ஆற்றும் தன்னார்வத் தமிழ் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அனைத்து தமிழாசிரியர்களை யும் மனதார வாழ்த்தி, அவர்களின் தன்னலமற்ற தன்னார்வப் பணியைப் பாராட்டுகிறேன்.  மேலும் நம் பகுதியில் இருக்கும் இ ளை ஞ ர் களை யு ம் , இ சை ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இளைஞர்களின் சிறப்பு இ ன் னி சை நி க ழ் ச் சி ம ற் று ம் அ ன ை த் து த் த மி ழ்ப்ப ள் ளி மாணவர்களுக்கான “தமிழ்க்கல்விக் கண்காட்சி” நிகழ்ச்சி, செப்டம்பர் 15, சனிக்கிழமை, பெத்தஸ்ட்டா, மெரிலேண்ட் மாகாணத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க்கல்வி கண்காட்சியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் சார்பாக சிறப்புப் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப் பட்டனர். இந் நிகழ்வு, நம் இளைய�ோர்களைத் தமிழ் ம�ொழி மற்றும் பண்பாடு சார்ந்து அமெரிக்க மண்ணில் வளர்வதற்கான வழிகாட்டும் முயற்சியாக அமைந்தது.  மேலும், நம் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் கேரளமக்களின் உணர்வில் பங்களிக்கும் விதமாக, கேரள மாநிலத்தில் ஏற்பட்ட ஈடுசெய்வதற்கு இயலாத வெள்ள மீட்புப் பணிகளுக்கு, நம் சங்கம் நிதி திரட்டி, வாசிங்டன் வட்டாரக் கேரளா சங்கத்திடம் நிதி வழங்கியது. நமது அண்டை மாநிலங்களுடன் நட்புப் ப ா ர ா ட் டி பு லம ்பெ ய ர்ந்த இ ந் தி ய ம க ்க ளி ன் ஒற்றுமையை நாம் நிலைநாட்டி வருகிற�ோம். கேரள வெள்ள மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.  சென்னை வெள்ள மீட்பு நிதியை கடலூர்

அருகில் உள்ள ஐந்து கிராமங்களில் பயனுள்ள பல திட்டங்கள் வாயிலாக, திரு. அகத்தியன் பெனடிக்ட் தலைமையில் குழு அமைத்து அனைத்து மீட்புப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டது. இது நம் தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரிய சாதனை! தமிழகத்தில் “கஜா புயல்” பாதிப்பு செய்தி அறிந்து அதனால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் க�ொண்டத�ோடு மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு உதவும் வகையில், குழந்தைகள்தின விழா நிகழ்ச்சியில் நிதி திரட்டும் முயற்சியாக தமிழ்ச்சங்கம் உங்களின் ஆதரவை நாடியது. தம் வ ா ழ்வா த ா ர த ்தை இ ழ ந் து த வி க் கு ம் ந ம் த�ொப்புள்கொடி உறவுகளுக்கு நம் தமிழ்ச்சங்கம் திரு. அறிவுமணி அவர்கள் தலைமையில் குழு அமைத்து, இரண்டு பயனுள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை வலைத்தமிழ்.காம் வ ா யி ல ா க டெல்டா ம ா வ ட ்ட விவசாயிகள் சங்கத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அமைச்சர் மு ன் னி லை யி ல் வ ழ ங ்க ப ்ப ட ்ட து . த ா ர ா ள ம ா க நி தி உ த வி வ ழ ங் கி ய உ ங ்க ள் அ ன ை வ ரு க் கு ம் எ ன து மனமார்ந்த நன்றிகள்.  அமெரிக்காவில் பாரம்பரிய மு ளை ப ்பா ரி வ ள ர்ப்பதை , ந ம் தமிழ்ச்சங்கம் த�ொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. 2018-ஆம் வருடம் அதை மேலும் சிறப்பாக்க, தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் பங்குபெற்ற முளைப்பாரி வளர்ப்பது மற்றும் கிராமிய கும்மிப் பாடல்கள் பற்றிய சிறப்பு பல்வழி அழைப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அ மெ ரி க்கா மு ழு வ து ம் பல ரு ம் ஆ ர்வ ம ா க க் கலந்துக�ொண்டு பயன்பெற்றனர்.  2018-ஆம் உலகத் தாய்மொழிகள் நாள் அன்று, நம்செம்மொழியான தமிழ் ம�ொழியின் பெருமைகளை உலகமறிய பறைசாற்றும் விதமாக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பல்வழி அழைப்பு ஒன்றை பிப்ரவரி 21, 2018 வெகு சிறப்பாக நடத்தியது. சிறப்புப் பேச்சாளர்கள் பலர் கலந்துக�ொண்டு நம் தமிழ் ம�ொழியின் சிறப்பினை எடுத்துரைத்து தமிழ் ம�ொழியின் சிறப்பை ப�ோற்றி 2018-ஆம் உலகத் தாய்மொழிகள் நாளை அமெரிக்கத் தமிழர்கள�ோடு க�ொண்டாடின�ோம்.  “தமிழ்ப் பந்தல்” நிகழ்ச்சி தமிழில் பேசும் கு ழ ந்தைகளை ஊ க ்க ப ்ப டு த் து ம் வி த ம ா க வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழில் இயல்பாக உரையாடிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. 

ஜனவரி 2019

த மி ழ ர ்க ளி ன் ப ா ர ம்ப ரி ய உ ட ை களை

 thenral.mullai@gmail.com

43


ப�ோன்றும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய ஆடைத் திருவிழா 2017-ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவிலும் மற்றும் 2019-ஆம் ஆண்டு தமிழக நெசவாளர்களுக்கு பயன்பளிக்கும் வகையிலும் விழாக்கள் நடைபெற்றது.  நம் மரபுக் கலைகளை ப�ோற்றும் விதமாகவும், முத்தமிழைப் ப�ோற்றிடும் விதமாகவும், இயல், இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகள் சிறப்பாக அரங்கேறியுள்ளது. 2018-ஆம் ஆண்டின் முத்தமிழ் விழா, நம் அனை வருக்கும் மிகச் சிறப்பான ஒரு விழா. நம்முடன் பதினைந்திற்கும் மேற்பட்ட சிறப்பு ஆளுமைகள் தமிழகத்திலிருந்து வருகை தந்து, நம் விழாவில் பங்கேற்றது இதுவே முதன்முறை.  தமிழ்ச்சங்க வரலாற்றில் முதல் முறையாக barcode வசதியுடன் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பதிவு ஏ ற ்பா டு செய்ய ப ்பட் டு ள்ள து . மே லு ம் ந ம் இணையதளத்தை அனைவரும் எளிதில் உபய�ோகிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட் டுள்ளது. முகநூலில் கிட்டத்தட்ட 5000 நபர்களுக்கு உலகளவில், நம் செயல் பாடுகளைக் க�ொண்டு சேர்க்கிற�ோம். இவை அனைத்தும் நம் சங்கத்தை அடுத்த கட்டமாக எடுத்துச் செல்லும் ஒரு த�ொழில் நுட்ப வளர்ச்சியாகும்.  2017-ஆம் வருடம் நம் த மி ழ் ச் ச ங ்க ம் ஏ ற ்பா டு செய்திருந்த இளைஞர்களின் கல்லூரிப் படிப்புக்காகச் சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மிகச் சி ற ப ்பாக ந ட ை ப ெ ற ்ற து . பெற்றோர்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்துக�ொண்டு பயன்பெற்றனர். இது ப�ோன்று பயனுள்ள மேலும் பல நிகழ்ச்சிகளை தமிழ்ச் சங்கம், உங்களுக்காக வரும் காலங்களில் நடத்த வடிவமைத்துக் க�ொண்டுள்ளது.  இளைய�ோர் பாசறைக் குழு அமைத்து இளைய�ோர்கள் நமது மேடைகளில் தமிழ்ப் பேச்சால் அலங்கரிப்பது அடுத்த தலைமுறையினறை நாம் முன்னிலைப்படுத்த எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சி.  2017 & 2018-ஆம் ஆண்டுகளில் க�ோடை விடுமுறையை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் “க�ோடை க�ொண்டாட்டம்” நிகழ்ச்சிகளில் கலந்து க�ொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நம் தமிழ் சமுதாயத்துடன் ஒன்று கலந்து, உள்ளம் மகிழ்ந்து, புது உறவுகளைக் கண்டறிய இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது . இப் பசுமை நிறைந்த நினைவுகள�ோடு உங்கள் அனைவரையும் ஆவலுடன் அடுத்த வருட தமிழ்ச்சங்க க�ோடை க�ொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் சந்திக்க காத்துக் க�ொண்டுள்ளோம். 

திருபுவனம் திரு. ஆத்மநாதன் அவர்களின் நிகழ்ச்சி மெரிலேண்ட் மற்றும் வெர்ஜீனியா மாகாணத்தில் மிகச் சிறப்பாக மற்றும் பயனுள்ளதாக அமைந்தது. முனைவர் திரு. புஸ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி அவர்களின் தமிழிசைக்குழுவை, அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் தமிழிசை நிகழ்சி ஏற்பாடு செய்து தமிழிசையை பறைசாற்றியது நமது தமிழ்ச்சங்கம்.  வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் இனைந்து “பன்னாட்டு குறுந்தொகை மாநாடு” முனைவர் திரு. இரா. பிரபாகரன் அவர்களின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 26, 2017 இராக்வில், மேரிலேண்ட் மி கச் சி ற ப ்பாக ந ட ை ப ெ ற ்ற து . நி க ழ் ச் சி யி ல் கலந்துக�ொண்டு தமிழ் ம�ொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும் தீராக் காதல்வயப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.  2017-ஆம் ஆண்டில் “தமிழ்க் குடில்” எனும் தமிழ் ப�ோற் றி ய அ றி ஞ ர ்க ளை யு ம் க வி ஞ ர ்க ளை யு ம் ந ம் குழந்தைகளுக்கு நினைவூட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டு, அவர்கள் நம் தமிழுக்கு ஆற்றிய பணியைப் புகழ்பாடும் விதமாக அவர் களின் கவிதை, கதை, பாடல்களைக் குழந்தைகளுடன் ப கி ர் ந் து க�ொ ண ்ட உற்சாகமூட்டிய நிகழ்வு, நம் கு ழ ந்தைக ளு க் கு ம் மி கப் பயனுள்ளதாக இருந்தது .  2017-ஆம் ஆண்டின் குழந்தைகள் தினவிழா நி க ழ் ச் சி யை ஹ ா ர்வ ர் ட் த மி ழ் இ ரு க்கை அ மை வ த ற ்கான நி தி தி ர ட் டு ம் நி க ழ் ச் சி ய ா க செ ய ல்ப டு த் தி ய தி ல் , த மி ழ்ச்ச ங ்க ம் மி க வு ம் பெருமையடைகிறது. தமிழ் ம�ொழிக்கான உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைந்தது, நம் தமிழ் ம�ொழிக்கான மற்றும் ம�ொழிவளர்ச்சிக்கான சிறந்த அங்கீகாரம். நம் பகுதியில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் இதற்கான நிதி திரட்டும் பணியில் அயராது பாடுபட்டது மிகவும் பாராட்டுக்குரியது.  வாசிங்டன் வட்டாரத் தமிழ் சங்கத்தின் 8 & 9-ஆம் ஆண்டுகளின் தமிழிசைத் திருவிழாவில் கலந்துக�ொண்டு நம் தமிழ் இசையை புலம்பெயர்ந்த நாட்டில், நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களை உற்சாகமூட்டிய இந் நிகழ்ச்சிகள், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மிகப் பயனுள்ளதாக இருந்தது . 10-ஆம் ஆண்டின் தமிழிசை விழாவை மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு க�ொண்டாடிட நாம் அனைவரும் ஆயத்தமாவ�ோம்.

தமிழிசை பயிற்சி பட்டறை தமிழிசை பாடகர்

44

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com


மனித நேயம்: புதியத�ோர் சமநீதி படைத்தே!

மகேந்திரன் பெரியசாமி ‘மதம்’ பிடித்த மனிதர்கட்கு ‘மனிதமும்’ பிடிக்க வழி வகுக்கலாமே!

உண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை வீணாய்த் துறக்கும் வீரத் துரும்பே! இயற்கை நடத்தும் இலவசப் பாடம் தயக்கம் தவிர்த்துப் பயின்றிட வாராய்! வானும் புவியும் வலம்வரும் கதிரும் தண்மை பரப்பும் வெண்மை நிலவும் விண்ணில் வரப்பிட்டு ம�ோதி நாம் பார்த்ததுண்டா? மண்ணில் மனதில் மட்டும் வரப்புகள் ஏன�ோ? மேற்புவி மண்ணுக்காய் மாய்ந்திடும் மானிடர் உட்புவியைப் பாதியாய் உடைத்திட முடியுமா? ஒளிரும் நிலவை உதிக்கும் கதிரை ஆளுக்குப் பாதியாய்ப் பங்கிட முடியும�ோ? கண்டங்கள் ஆளும் கதிர�ோன் தனது சுற்றும் பரப்பைச் சுருக்கவா நினைப்பான்? மதவெறி பிடித்ததால் மமதையுடன்சிலர் ‘மதம்’பிடி களிறென மாறினரே-இவர்கள் மனிதம் வளர்த்து மா’தவம்’ புரிந்து மா’நிலம்’ பயனுற மாற்றலாமே!

கடவுளர் பெயரால் சாதிகள் பெயரால் எதிரிகள் உலகில் இல்லா வண்ணம் புன்னகை ம�ொழியைப் பிரபஞ்சம் முழுதும் ப�ொதும�ொழி யாக்கும் மனிதங்கள் வேண்டும்! ஒருகுமிழ் காற்று உடல்பிரிமட்டும் ஒன்றாய் இணைந்த குமுகாயம் அமைப்போம்! உலக நாடுகள் ஒன்றென ஒருங்கி உயிர்கள் யாவும் உணர்வால் ஒன்றி ஒருங்கும் வண்ணம் மனிதம் வேண்டும்! ‘இன்று மட்டும்’ வாழ்ந்தாலும் மனிதநேயம் வெளிக்காட்டு; வறிய�ோர் எளிய�ோரின் வாழ்வுக்கு வழிகாட்டு! இப்புவியில் பிறந்ததற்காய் நற்செயல்கள் விட்டுப்போ; இல்லையேல் நல்விதைகள் சிலவேனும் நட்டுப்போ! அன்புச்சூரியன் அகத்தில் உதித்து வேற்றுமை கருதா மாற்றம் நிகழ்த்தி சாற்றுவ�ோம் புதியத�ோர் சமநீதி படைத்தே!

ஜனவரி 2019

 thenral.mullai@gmail.com

45


வேடிக்கை மனிதர்களும் எட்டி நிற்கும் சமூகமும் விடுமுறையில் சுற்றுலாவென ஏழைக் குடும்பம் செல்கிறது,

கடற்கரைக்கு. சம்பளம் தராத முதலாளியின் காரைத் துடைக்கிறார்,

டிரைவர்.

மனைவி இறந்த மூன்றாம் நாள் காலையில் காபி ப�ோடுகிறான்,

கணவன்.

தன் முதல் சம்பளத்தில் தாய்க்கு வாங்கி வருகிறான்,

புடவை.

மழையில் நனைந்திருப்பவர்க்கு இலவசமாகத் தருகிறார்,

டீக்கடைக்காரர். சந்தையில் பிள்ளையை அறிந்து த�ொலைக்கிறார்கள்,

ஏழைப் பெற்றோர்

46

ஜனவரி 2019

ஹைக்கூ

உள்ளாடைகளுடன் சிறுமி கண்ணாடியில் பார்க்கிறாள்,

கவிதைகள்i (ஜெபரத்தினம் அலெக்சாண்டர்)

தலைவர் இறந்த நாளில் டாஸ்மாக்கெல்லாம் அடைப்பு,

உலக அழகியை. நண்பன் இறந்த பிறகு விசாரிக்க வந்தவன் தருகிறான்,

வட்டியைச் ச�ொல்லுமுன் அதிகாரி எட்டிப் பார்க்கிறார்,

கடன்காரியின் நெஞ்சை.

பின் வாசல் தவிர.

பழைய புகைப்படம்.

பாதி உடைந்த குடையில் சிறுமி அழைத்து வருகிறாள்,

கூட்டமில்லாத தியேட்டரில் தனியாக அமர்ந்திருக்கிறார்,

இலை ப�ொறுக்க வந்தவர்களை அமர்த்திப் பரிமாறுகிறார்கள்,

படியேறி பென்சன் ஆபீஸ் வந்த முதியவரிடம் ச�ொல்கிறார்கள்,

இழப்பதற்கு இனி தன்மானம் மட்டும்தானென்கிறார்,

பாட்டியை. தேரிழுக்க ஒன்று சேர்ந்த குடும்பங்கள்

ச�ொல்கின்றன, ஒழித்துவிடுவ�ோமென்று. அன்னதான மீதியை உணவாக எடுத்துச் செல்கிறார்,

பூசாரி.

காய்ச்சல் தீர்ந்த கணவனுக்கு ஜில்லென்று முத்தம் தருகிறாள்,

மனைவி!

இயக்குநர்.

குமாஸ்தா லீவென்று.

வேலை கிடைக்காத மாமனுக்கு சட்டை வாங்கி வருகிறாள்,

மச்சினி.

எல்லோரும் ப�ோனபின் அரங்கத்தில் தனியாயிருக்கிறான்,

நாயகன்.

 thenral.mullai@gmail.com

விருந்து.

ஏழை ஆசிரியர்.

தன் பாவம் அறிக்கையிட வேறு ஆலயம் செல்கிறார்,

பாதிரியார். வசந்த‌கால தளிர்களில் துளிர்விட்டு நிற்கிறது,

நம்பிக்கை!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Thenral Mullai 2019 January Volume 16, Issue 4 by Thenral Mullai - Issuu