Skip to main content

Valluvar's Management Thoughts - 19 Jul 2022

Page 1

த E ONLINE

வள்ளுவரின் மேலாண்மைச் சிந்தனைகள் முனைவர் இர. பிரபாகரன் ஆசிரியர் & பேச்சாளர் TUESDAY, 19 JUL 2022 | 6.00 PM

Dr R Prabhakaran

ONLINE EVENT

Click to join....


சொற்பொழிவின் சுருக்கம் மேலாண்மையைப் பற்றிக் கூறும்பொழுது, பீட்டர் டிரக்கர் (Peter Drucker) என்ற அறிஞர், மேலாண்மை என்பது, “ஒரு குறிக்கோளை நோக்கிப் பலரை உழைக்கும் ஆற்றல் உடையவர்களாக ஆக்குவதுதான்.” என்று கூறுகிறார். இந்த வரையறையின் அடிப்படையில் பார்த்தால், நெடுங்காலமாகவே ”மேலாண்மை” என்ற ஒன்று இருந்துவருகிறது என்பது தெரிகிறது. மேலாண்மை என்பதில் அடங்கிய பணிகள் எவை என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும், கூன்ட்ஸ் மற்றும் ஒ’டானல் (Koontz and O’Donnell) என்ற இருவரும் இயற்றிய Principles of Management: An Analysis of Managerial Functions என்ற நூலில், அவர்கள் ”திட்டமிடுதல் (Planning), ஒழுங்கமைத்தல் (Organizing), பணியமர்த்தல் (Staffing), இயக்குதல் (Directing), கட்டுப்படுத்துதல் (Controlling)” ஆகியவை

ஐந்தும்

மேலாண்மையில்

அடங்கும்

அடிப்படையில்,

வள்ளுவரின்

பணிகள்

என்று

கூறியிருப்பதை

பலரும்

ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த

வரையறையின்

வழங்குவதே இந்தச்சொற்பொழிவின் நோக்கம்.

மேலாண்மைக்

கருத்துக்களைத்

தொகுத்து


PROGRAMME

6:00 PM

Welcome Address

Mr S Mohan Chairman, MMA Salem Chapter

Chairman's Opening Remarks

Mr Suresh Jain D Managing Director, Kesar Gift Mart (P) Ltd

Address by the Speaker

Dr P Prabhakaran Author & Speaker

Chairman's Closing Remarks

Mr Suresh Jain D

Q&A 7:15 PM

Vote of Thanks

Click to join...

Gp Capt R Vijayakumar (Retd), VSM Executive Director, MMA Share your questions by SMS/Whatsapp to 98401 23906


முனைவர் இர. பிரபாகரன்

தற்குறிப்பு

முனைவர் பிரபாகரன் தமிழ் நாட்டில் மன்னார்குடியில் பிறந்தவர். இவர் தமிழ் நாட்டில் கணிதத்துறையில் B.Sc, M.Sc ஆகிய பட்டங்கள் பெற்றார். சில ஆண்டுகள், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியபின், இவர் அமெரிக்காவில் கணினித்துறையில் M.S, Ph.D. மற்றும் MBA பட்டமும் பெற்றார். இவர் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களின் மூலம், NASA, US Army ஆகிய நிறுவனங்களிலும் உயர்ந்த பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். முனைவர் பிரபாகரன் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழரின் நலம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவர் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறக்கட்டளையின் செயலராகவும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துணைத்தலைவராகவும் பணிபுரிந்து, அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றியவர். வாசிங்டன் வட்டாரத்தில் 2003 – ஆம் ஆண்டு, தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் என்ற அமைப்பை நிறுவி, அதன் சார்பாகக் கடந்த பல ஆண்டுகளாகத் திருக்குறள், புறநானூறு, தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம், குறுந்தொகை, நாலடியார், முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களைத் தானும் கற்று, நண்பர்களுக்கும் இவர் அவற்றைக் கற்பித்துவருகிறார். இவர் தொடங்கிய அந்த அமைப்பு, அமெரிக்காவில், பல ஊர்களில் தமிழர்கள் கூடித் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் ஆகியவற்றைப் படிப்பதற்கு முன்மாதிரியாக இருந்துவருகிறது. மேலைநாடுகளில் முதன்முறையாக நடத்தப்பட்ட பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு, உலகின் முதல் பன்னாட்டுப் புறநானூறு மாநாடு, உலகின் முதல் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகிய மாநாடுகளுக்கு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று, அவற்றை மிகவும் வெற்றிகரமாக முனைவர் பிரபாகரன் நடத்தியுள்ளார். இவர் 2005 – ஆம் ஆண்டு, அமெரிக்காவில், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடந்தபொழுது, அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவினார். 2010 – ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு, “வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கினார். இவர் புறநானூறு, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களுக்குத் தன்னுடைய எளிய விளக்கவுரைகளை வலைத்தளத்தில் பதிவு செயதது மட்டுமல்லாமல், அவற்றை மூன்று நூல்களாகவும் (புறநானூறு – மூலமும் எளிய உரையும், பகுதி 1, (புறநானூறு – மூலமும் எளிய உரையும், பகுதி 2, குறுந்தொகை) வெளியிட்டிருக்கிறார். இவர் 2019 – ஆம் ஆண்டு, The Ageless Wisdom (As embodied in Thirukkural) என்று ஆங்கிலத்தில், திருக்குறளைப் பற்றி ஒரு விரிவான நூlலும், 2022- ஆம் ஆண்டு, புதிய பார்வையில் திருக்குறள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் பல கருத்தரங்கங்களை முனைவர் பிரபாகரன் நடத்தியுள்ளார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பல ஊர்களுக்குச் சென்று புறநானூறு மற்றும் திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். அமெரிக்கத் தமிழ் வானொலியில் “திருக்குறள் சிந்தனைகள்” என்ற தலைப்பில் முப்பது சொற்பொழிவுகளும், வலையொளி (வலையொளி -YouTube) வழியாக “புறநானூற்றுப் பூங்காவிலிருந்து சில பூக்கள்” என்ற தலைப்பில், புறநானூற்றில் உள்ள கருத்துக்களைத் தொகுத்துத் தொடர்ச் சொற்பொழிவாற்றியுள்ளார். இந்தச் சொற்பொழிவுகளை வலையொளியில் காணலாம். 2019 – ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒரு அமர்வுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் உள்ள, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம் என்ற அமைப்பின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரகவும் குறள்நெறி மற்றும் Thirukkural Express என்ற மின்னிதழ்களுக்கு சிறப்பு ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறார். திருக்குறளை ‘உலகப் பொதுநூல்’ என்று UNESCO நிறுவனம் அறிவிப்பதற்கான முற்சியில் இவர் இப்பொழுது ஈடுபட்டுள்ளார். முனைவர் பிரபாகரன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை மேலை நாடுகளில் பரப்புவதைத் தன் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டவர்.


CONNECT WITH US

Email mma@mmachennai.org

Website

Phone 044 - 28291133 / 28291166

www.mmachennai.org Mr S Mohan

Mr D Venkateswaran Chairman, MMA Erode Chapter

Chairman, MMA Salem Chapter

Brigadier B Narayanaswamy

Mr M Selvam

Co-Chairman, MMA Trichy Chapter

Mr R Mananathan

Chairman, MMA Attur Chapter

Mr K V Ganesan

Chairman, MMA Puducherry Chapter

Chairman, MMA Namakkal Chapter

Dr Shankar Venugopal Chairman, Chengalpattu Chapter


Turn static files into dynamic content formats.

Create a flipbook