Page 1

டிசம்பர் 1-15,2016

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

117

117

தீபா ஷ்யாம்–கண்–ணன்

சமையல் கலைஞர்

30  வகை மில்க் ஸ்வீட்ஸ்

டிசம்பர் 1-15, 2016 இதழுடன் இணைப்பு

117


பெ

யின்டிங், கைவேலை, ஜுவல்–லரி மேக்–கிங்–கில் கில்–லா–டி–யா–னவ – ர் தீபா ஷ்யாம் கண்–ணன். திரு–ம–ணத்–திற்–குப் பின் ஓம–னில் வாழ்க்கை. கண–வர், குழந்–தை– க–ளுக்–குப் பிடித்த ஸ்வீட்–களை செய்–வ–தில் ஆரம்–பித்த சமை–யல் ஆர்–வம், தற்–ப�ோது ஃபுட் பிளாக்–கில் பிஸி–யாகி விட்–டார். மில்க் ஸ்வீட்ஸ் என்–றாலே குழந்–தை–க–ளுக்கு எப்–ப�ோ–தும் க�ொண்–டாட்–டம்–தான். மைசூர்–பாகு, ஜிலே–பியை பார்த்து ப�ோர–டிக்–கும் நமக்கு 30 வகை–யான மில்க் ஸ்வீட்–டு–களை க�ொடுத்து அசத்–தி–யி–ருக்–கி–றார். த�ொகுப்பு:

சமையல் கலைஞர்

தீபா ஷ்யாம்–கண்–ணன்

118

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

உஷா–நா–ரா–ய–ணன்


டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


கூட்–டுக்கறி பாஸந்தி

தேவை–யான ப�ொருட்–கள்

பால் - 1 லிட்–டர், சர்க்–கரை - 1/4 கப், முந்–திரி, பாதாம், பிஸ்தா - 1/4 கப், நெய் - 2 டீஸ்–பூன், குங்–கு–மப்பூ - தேவைக்கு, ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன்.

செய்–முறை

கடா– யி ல் நெய் விட்டு பாதாம், 120

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

மு ந் – தி ரி , பி ஸ ்தா பருப்–பு–களை வறுத்– துக் க�ொள்– ள – வு ம். ஒரு அடி– க – ன – ம ான பாத்–திர– த்–தில் பாலை ஊ ற் றி கொ தி க்க வைக்– க – வு ம். நன்கு க�ொதித்–த–தும் தீயை குறைத்து வைத்து, மேலே ப டி ந் து வரும் ஆடை–களை எடுத்து ஒரு பாத்–தி– ரத்– தி ல் ப�ோட– வு ம். இவ்– வா று கடைசி வ ர ை ப ா ல் மீ து படி– யு ம் ஆடையை எடுத்து பாத்– தி – ர த்– தி ல் ப�ோ ட – வு ம் . பின்பு இந்த ஆடை– யி ல் ச ர் க் – க ர ை சே ர் த் து அ டு ப் – பில் வைத்து சர்க்– க ரை கரை– யு ம்– வ ர ை கி ள – ற – வு ம் . பி ன் இ தி ல் வறுத்த முந்–திரி, பாதாம், பிஸ்தா பருப்– பு–கள், குங்–கு–மப்பூ, ஏலக்–காய்த்–தூள் சேர்த்து கிளறி இறக்– க – வு ம். ஃப்ரிட்– ஜில் வைத்து எடுத்து சில்– லெ ன்று பரி–மா–ற–வும்.


மலாய் பேடா

தேவை–யான ப�ொருட்–கள்

வெண்–ணெய் - 250 கிராம், ஸ்வீட்– அண்டு கன்–டென்ஸ்டு மில்க் - 450 கிராம், பாதாம், முந்– தி ரி - தலா 5 (ப�ொடிக்–க–வும்), பால் பவு–டர் - 2 கப், குங்–கு–மப்பூ - தேவைக்கு.

செய்–முறை

வெண்–ணெயை அவ–னில் உருக்கி வைக்–கவு – ம். பின்பு இதில் பாதாம், முந்– தி–ரியை சேர்த்து நன்கு கலக்–க–வும்.

இத்–து–டன் பால் பவு–டர், கன்–டென்ஸ்டு மில்கை சேர்த்து கலந்து, அவ–னில் 3-4 நிமி–டம் வரை வைத்து, ஒவ்–வ�ொரு 30 ந�ொடிக்–கும் ஒரு முறை வெளியே எடுத்து கிளறி விட–வும். சிறிது கெட்–டி– யாக வந்–த–தும் ஆற–வைத்து, விருப்–ப– மான வடி– வ ங்– க – ளி ல் பேடாக்– க – ளா க செய்து குங்–கும – ப்–பூவா – ல் அலங்–கரி – த்து பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


காலா–கன்ட் தேவை–யான ப�ொருட்–கள்

பால் - 2 லிட்–டர், எலு–மிச்–சைப்–பழ – ச்– சாறு - 3 டேபிள்ஸ்–பூன் + தண்–ணீர் - 2 டேபிள்ஸ்–பூன் சேர்த்து கலக்–கவு – ம், சர்க்– கரை - 1/2 கப், பிஸ்தா - தேவைக்கு (4 துண்– ட ாக நறுக்– க – வு ம்), நெய் 1 டீஸ்–பூன்.

செய்–முறை

ஒரு பாத்–திர– த்–தில் 1 லிட்–டர் பாலை ஊற்றி க� ொ தி க் – க – வ ை த் து , எலு–மிச்–சைப்–ப–ழச்–சாறு சேர்த்து நன்கு திரிந்து தண்– ணீ ர் பிரிந்– த – து ம், மெல்– லி ய துணி– யி ல் க�ொட்டி தண்–ணீர் விட்டு கழுவி, வடி–கட்டி நன்கு பிழிந்து அரை மணி நேரம் கழித்து பனீரை எடுத்–துக் க�ொள்–ள–வும். மற்–ற�ொரு பாத்–திர– த்–தில் மீதி பாலை ஊற்றி பாதி– யாக வரும்–வரை சுண்ட காய்ச்சி, அதில் செய்து வைத்– து ள்ள பனீரை சேர்த்து, இரண்– டு ம் கலந்து சப்–பாத்தி மாவு பதத்–திற்கு வரும்–ப�ோது, 122

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

சர்க்–கரை சேர்த்து கிள–றவு – ம். சர்க்–கரை கரைந்து அனைத்–தும் ஒன்–றாக சேர்த்து சாஃப்ட்–டாக வந்–த–தும், நெய் தட–விய தட்–டில் க�ொட்டி ஆறி–ய – தும் துண்– டு – கள் ப�ோட்டு, நறுக்–கிய பிஸ்–தா–வால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


பிஸ்தா க�ோக–னட் லட்டு

தேவை–யான ப�ொருட்–கள்

உலர்ந்த தேங்–காய்த்–துரு – வ – ல் - 550 கிராம், ஸ்வீட்– அண்டு கன்–டென்ஸ்டு மில்க் - 400 கிராம், பிஸ்தா - 50 கிராம் (ப�ொடித்– த து), ஏலக்– க ாய்த்– தூ ள் 1/2 டீஸ்–பூன்.

செய்–முறை

ஒரு பாத்– தி – ர த்– தி ல் 500 கிராம் உ ல ர்ந்த த ே ங் – க ா ய் த் – து – ரு – வ ல் ,

கன்–டென்ஸ்டு மில்க், பிஸ்தா, ஏலக்– காய்த்– தூ ள் சேர்த்து நன்கு கலந்து வைக்–கவு – ம். அடுப்–பில் ஒரு நான்ஸ்–டிக் தவாவை வைத்து, கலந்த கல–வையை க�ொட்டி 5 நிமி–டம் கிள–ற–வும். அனைத்– தும் ஒன்–றாக சேர்ந்து திரண்டு வந்–த– தும் இறக்கி விட–வும். ஆறி–ய–தும் லட்–டு– க–ளாக பிடித்து, மீதி–யுள்ள உலர்ந்த த ே ங் – க ா ய் த் – து – ரு – வ – லி ல் பு ர ட் டி , அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


மினிட்ஸ் மில்க் அல்வா தேவை–யான ப�ொருட்–கள்

வெண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், ஸ்வீட்– அண்டு கன்–டென்ஸ்டு மில்க் 400 கிராம், புளிக்–காத கெட்–டித் தயிர் - 3 டேபிள்ஸ்–பூன், ப�ொடித்த முந்–திரி - 1 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் 1/2 டீஸ்–பூன்.

செய்–முறை

ஒரு பாத்–தி–ரத்–தில் வெண்–ணெய்,

124

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

கன்–டென்ஸ்டு மில்க், தயிர் சேர்த்து நன்கு கலந்து, அவ–னில் 5 நிமி–டங்–கள் வைக்–கவு – ம். ஒவ்–வ�ொரு 30 ந�ொடிக்–கும் ஒரு முறை எடுத்து கிளறி விட–வும். கடைசி ஒரு நிமி–டம் இருக்–கும்–ப�ொ–ழுது பாத்–திரத்தை – வெளியே எடுத்து அதில் முந்– தி ரி, ஏலக்– க ாய்த்– தூ ள் சேர்த்து கிளறி அவ–னில் வைத்து எடுக்–க–வும். ஆறி–ய–தும் பரி–மா–ற–வும்.


சம் சம் தேவை–யான ப�ொருட்–கள்

பனீர் செய்ய... பால் - 1 லிட்–டர், எலு–மிச்– சைப்– ப – ழ ச்– ச ாறு - 3 டேபிள் ஸ்–பூன் + தண்–ணீர் - 2 டேபிள் ஸ்– பூ ன் கலந்– த து, ரவை 1½ டீஸ்– பூ ன், சர்க்– க ரை 1 டீஸ்–பூன். சுகர் சிரப் செய்ய... தண்–ணீர் - 4 கப், சர்க்–கரை - 1¾ கப், ஏலக்–காய்த்–தூள் சிறிது. ஸ்டஃப்–பிங் செய்ய... பால்–க�ோவா - தேவைக்கு, நறுக்–கிய பிஸ்தா - தேவைக்கு.

செய்–முறை

பாலை க�ொதிக்–கவ – ைத்து, எலு–மிச்– சைப்–ப–ழச்–சாறு சேர்த்து நன்கு திரிந்து தண்–ணீர் பிரிந்–த–தும், ஒரு மெல்–லிய துணி– யி ல் க�ொட்டி தண்– ணீ ர் விட்டு கழுவி, வடி–கட்டி நன்கு பிழிந்து அரை மணி நேரம் கழித்து பனீரை எடுத்– துக் க�ொள்–ள–வும். பனீரை 5 நிமி–டம் நன்கு பிசைந்து ரவை, சர்க்– க ரை சேர்த்து மீண்–டும் 5 நிமி–டம் பிசை–ய– வும். பிசைந்த பனீரை நெல்–லிக்–காய் அளவு உருண்– டை – யா க எடுத்து

நீள–மாக உருட்–டிக் க�ொள்–ள–வும். சுகர் சிரப்–பிற்கு குக்–கரி – ல் சர்க்–கரை, தண்–ணீர், ஏலக்–காய்த்–தூள் சேர்த்து க�ொதிக்க விட–வும். தண்–ணீர் க�ொதிக்– கும் ப�ொழுது, பனீரை சேர்த்து 1 அல்–லது 2 விசில் விட்டு இறக்–க–வும். ஆறி– ய – து ம் ஃப்ரிட்– ஜி ல் 30 நிமி– ட ம் வைத்து எடுத்து, நடு–வில் கட் செய்து அத–னுள்ளே பால்–க�ோ–வாவை ஸ்டஃப்– பிங் செய்து பிஸ்–தாவா – ல் அலங்–கரி – த்து பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


கேரட் அல்வா

தேவை–யான ப�ொருட்–கள்

துரு–விய கேரட் - 2 கப், பால் - 2 கப், சர்க்–கரை - 1½ கப், நெய் - 2 டேபிள்ஸ்–பூன், முந்–திரி - தேவைக்கு, ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன்.

செய்–முறை

ஒரு நான்ஸ்–டிக் தவா–வில் நெய் விட்டு உரு–கிய – து – ம் துரு–விய கேரட்டை சேர்த்து 10 நிமி– ட ம் வதக்– க – வு ம். 126

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

இத்–துட – ன் பால், சர்க்–கர – ையை சேர்த்து நன்கு கிள–றவு – ம். மித–மான தீயில் பால் நன்–றாக சுண்–டும் வரை கிளறி விட– வும். பால் சுண்–டி–ய–தும் நெய் விட்டு கிளறி, ஏலக்– க ாய்த்– தூ ள், நெய்– யி ல் வறுத்த முந்–திரி சேர்த்து கிள–ற–வும். நெய் பிரிந்து வந்– த – து ம் அடுப்பை அணைத்து, ஆறி–ய–தும் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


சர்–னா–மிர்த் தேவை–யான ப�ொருட்–கள்

பால் - 3/4 கப், புளிக்–காத கெட்–டித் தயிர் - 3 டீஸ்–பூன், கங்கா தீர்த்–தம் 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1½ டீஸ்–பூன், தேன் - 1/2 டீஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - சிறிது, தாமரை விதை - 5, பாதாம், முந்–திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை தலா 2 (நறுக்–க–வும்), துளசி இலை - 8.

செய்–முறை ஒ ரு

ப ா த் – தி – ர த் – தி ல்

த யி ர் ,

சர்க்–க–ரையை சேர்த்து நன்கு கலக்–க– வும். பிறகு பால் சேர்த்து கலந்து சர்க்– கரை முழு–வ–தும் கரைந்–த–தும் துளசி, கங்கா தீர்த்–தம், தேன், ஏலக்–காய்த்– தூள் சேர்த்து கலக்–கவு – ம். பின் தாமரை விதை–களை இரண்–டாக நறுக்கி சேர்க்–க– வும். கடை–சி–யாக பாதாம், முந்–திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை சேர்த்து கலந்து ஃப்ரிட்–ஜில் வைத்து சில்–லென்று பரி–மா–ற–வும்.

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


ஸ்ட்–ரா–பெரி பன்ன க�ோட்டா தேவை–யான ப�ொருட்–கள்

மில்க் ஜெலட்–டின் செய்ய... பால் - 1 கப், ஹெவி கிரீம் 2 கப், அன்ஃப்–ளே–வர்டு ஜெலட்– டின் - 1 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை 1/3 கப் அல்– ல து தேவைக்கு, வெனிலா எசென்ஸ் - 1 டேபிள் ஸ்–பூன். ஸ்ட்–ரா–பெரி ஜெலட்–டின் செய்ய... ஸ்ட்–ரா–பெரி பியூரி - 1½ கப், தண்–ணீர் - 1 கப், அன்ஃப்–ளேவ – ர்டு ஜெலட்–டின் - 1 டேபிள்ஸ்–பூன்.

செய்–முறை

ஸ்ட்–ரா–பெரி பியூரி ஸ்ட்–ராபெ – ரி பழங்–களை மிக்–சி– யில் அரைத்து வடித்து பியூ–ரியா – க

128

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

செய்து க�ொள்–ள–வும்.

மில்க் ஜெலட்–டின்

ஒரு பாத்–திர– த்–தில் பால், கிரீம், ஜெலட்– டின் ஆகி–ய–வற்றை சேர்த்து கலந்து 10 நிமி–டங்–கள் அப்–ப–டியே வைக்–க–வும். இந்த கல–வையை அடுப்–பில் மித–மான தீயில் வைத்து சர்க்–கரை சேர்த்து கிள–ற–வும். சர்க்–கரை முழு–வது – ம் கரைந்–தது – ம் இறக்கி வெனிலா எசென்ஸ் சேர்த்து ஆற–வைக்–க– வும். கலவை ஆறி–ய–தும் ஃப்ரிட்–ஜில் 4 மணி நேரம் அல்–லது செட்–டா–கும் வரை வைக்–க–வும்.

ஸ்ட்–ரா–பெரி ஜெலட்–டின்

மற்–ற�ொரு பாத்–தி–ரத்–தில் தண்–ணீர், ஜெலட்–டின் சேர்த்து நன்–றாக கலந்து 10 நிமி–டங்–கள் அப்–ப–டியே வைக்–க–வும். மித– மான தீயில் கல–வையை வைத்து, ஜெலட்– டின் கரைந்–தது – ம் இறக்கி ஆற–வைக்–கவு – ம். இந்த ஜெலட்–டின் கல–வையை ஸ்ட்–ராபெ – ரி பியூ–ரி–யில் ஊற்றி நன்கு கலக்–க–வும். முத–லில் செய்து வைத்–துள்ள மில்க் ஜெலட்–டினை ஃப்ரிட்–ஜி–லி–ருந்து எடுத்து அதன் மேல் ஸ்ட்–ரா–பெரி ஜெலட்–டின் கல– வையை ஊற்றி, மீண்–டும் 4 மணி நேரம் செட் ஆகும் வரை ஃப்ரிட்–ஜில் வைத்து சில்–லென்று பரி–மா–ற–வும். குறிப்பு: விரும்–பின – ால் மாம்–பழ பியூரி, ராஸ்– பெ ரி பியூரி, புளூ– பெ ரி பியூ– ரி – யி ல் செய்–ய–லாம்.


பிர்னி

தேவை–யான ப�ொருட்–கள்

பாஸ்–மதி அரிசி - 1/2 கப், சர்க்– கரை - 1 கப், பால் - 1 லிட்–டர், ஏலக்– காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், பாதாம், பிஸ்தா, முந்–திரி - தலா 2, குங்–கு–மப்பூ - தேவைக்கு.

செய்–முறை

பாஸ்–மதி அரி–சியை 2 மணி நேரம் ஊற – வை த் து , பிறகு தண்– ணீ ரை வடித்து, மிக்– சி – யி ல் ப�ோட்டு க�ொர– க�ொ–ரப்–பாக அரைத்து க�ொள்–ள–வும்.

கடா–யில் பாலை ஊற்றி க�ொதித்–தது – ம், அரி– சி யை சேர்க்– க – வு ம். அரிசி பாதி வெந்–தது – ம் சர்க்–கரை சேர்த்து திக்–கான பதத்–திற்கு வரும்–வரை கிளறி விட–வும். ஏலக்–காய்த்–தூள், குங்–கும – ப்பூ சேர்த்து, – ளை பாதாம், முந்–திரி, பிஸ்தா பருப்–புக சேர்த்து கிளறி இறக்– க – வு ம். ஃப்ரிட்– ஜில் வைத்து எடுத்து, சில்– லெ ன்று அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: விரும்– பி – ன ால் மாம்– ப– ழ த்தை மசித்து சேர்த்து மாம்– ப ழ பிர்னி செய்–ய–லாம். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


மில்க் கேசரி தேவை–யான ப�ொருட்–கள்

ரவை - 1 கப், சர்க்–கரை - 2 கப், பால் - 1½ கப், தண்–ணீர் - 1½ கப், நெய் - 50 கிராம், பச்சை ஃபுட் கலர் ஒரு சிட்–டிகை, ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், முந்–திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு, நெய் - 6 டீஸ்–பூன்.

செய்–முறை

ஒரு கடா–யில் சிறிது நெய் விட்டு முந்–திரி, திராட்–சையை வறுத்து தனி– யாக வைக்–க–வும். பின் அதே நெய்–

130

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

யில் ரவையை சேர்த்து நன்கு வறுத்து – ம். மற்–ற�ொரு கடா–யில் பால், க�ொள்–ளவு தண்–ணீரை சேர்த்து க�ொதிக்க விட்டு, ரவையை சிறிது சிறி–தாக சேர்த்து கட்டி – ம். ஃபுட் கலர், தட்–டா–மல் நன்கு கிள–றவு சர்க்–கரை சேர்த்து கலந்து சுருண்டு – ம், மீதி–யுள்ள நெய்யை சேர்த்து வந்–தது கிள–ற–வும். கடை–சி–யாக ஏலக்–காய்த்– தூள், வறுத்த முந்–திரி, திராட்–சையை சேர்த்து கிளறி இறக்கி, அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


பிஸ்தா குல்பி

தேவை–யான ப�ொருட்–கள்

பால் - 1 லிட்–டர், சர்க்–கரை - 1/4 கப், பிரெட் - 1 பெரிய துண்டு, ப�ொடித்த பிஸ்தா - 2 ேடபிள்ஸ்–பூன், ஏலக்–காய்த்– தூள் - 1/2 டீஸ்–பூன், கார்ன்ஃப்–ள�ோர் மாவு - 1 டீஸ்–பூன்.

செய்–முறை

பிரெட்–டின் ஓரங்–களை வெட்–ட–வும். நடுப்–பகு – தி – யை மிக்–சியி – ல் ப�ோட்டு அத்– து–டன் கார்ன்ஃப்–ள�ோர், பால் 1/2 கப் சேர்த்து நைசாக அரைத்–துக் கொள்–ள– வும். மித–மான தீயில் ஒரு பாத்–திர– த்–தில்

மீதி–யுள்ள பாலை ஊற்றி க�ொதிக்க வைத்து, அது பாதி–யாக சுண்டி வரும்– வரை காய்ச்–ச–வும். பால் சுண்–டிய – –தும் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமி– டம் கைவி– ட ா– ம ல் கிள– ற – வு ம். பிறகு சர்க்–கரை, பிஸ்தா, ஏலக்–காய்த்–தூள் சேர்த்து கலந்து சர்க்–கரை கரைந்–த– தும் இறக்–க–வும். ஆற–வைத்து குல்பி அச்சு அல்– ல து டப்– ப ா– வி ல் ஊற்றி மூடி வைத்து, ஃப்ரிட்– ஜி ல் வைத்து செட் செய்து துண்– டு – க ள் ப�ோட்டு அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


ஃபிரைடு மில்க்

தேவை–யான ப�ொருட்–கள்

பால் - 350 மி.லி., சர்க்–கரை - 50 கிராம், வெண்– ண ெய் - 20 கிராம், கார்ன்ஃப்ே– ளா ர் மாவு - 60 கிராம், ஜாதிக்– க ாய்த்– தூ ள் - 1/4 டீஸ்– பூ ன், பட்டை தூள் - 1/2 டீஸ்–பூன், ப�ொடித்த சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், முட்டை - 1, பிரெட் கிரம்ஸ் - தேவைக்கு, ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு.

செய்–முறை

50 மி.லி. பாலில் கார்ன்ஃப்–ள�ோர் மாவை சேர்த்து கரைக்– க – வு ம். ஒரு நான்ஸ்–டிக் கடா–யில் பால் 300 மி.லி., சர்க்–கரை, வெண்ெ–ணய், ஜாதிக்–காய்த்– தூள், கார்ன்ஃப்–ள�ோர் கலவை சேர்த்து 132

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

மித–மான தீயில் கைவி–டா–மல் கிள–றவு – ம். எல்–லாம் சேர்ந்து கெட்–டி–யான பதத்– திற்கு வந்–த–தும், எண்–ணெய் தட–விய தட்–டில் க�ொட்டி ஆற–வி–ட–வும். பிறகு ஃப்ரிட்–ஜில் 1 மணி நேரம் வைத்து கெட்– டி–யா–ன–தும் துண்–டு–கள் ப�ோட–வும். ஒரு பாத்–திர– த்–தில் முட்–டையை ஊற்றி நன்கு அடிக்–கவு – ம். செய்து வைத்–துள்ள துண்– டு–களை முட்–டையி – ல் நனைத்து பிரெட் கிரம்–ஸில் புரட்டி வைத்–துக் க�ொள்–ள– வும். அடுப்–பில் மித–மான தீயில், கடா– யில் எண்–ணெய் ஊற்றி, புரட்–டிய துண்– டு–களை ப�ோட்டு ப�ொரித்–தெ–டுக்–க–வும். துண்–டு–கள் ஆறி–ய–தும் அதன் மேல் பட்டை தூள், சர்க்–கர – ைத்–தூளை தூவி பரி–மா–ற–வும்.


எக்–லெஸ் கேர–மல் கஸ்–டர்டு

தேவை–யான ப�ொருட்–கள்

கேர–மல் செய்ய... சர்க்–கரை - 1/4 கப், தண்–ணீர் - 2-4 டீஸ்–பூன். கஸ்–டர்டு செய்ய... பால் - 3/4 கப், புளிக்–காத கெட்– டித் தயிர் - 3/4 கப், கன்–டென்ஸ்டு மில்க் - 3/4 கப், வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்–பூன், கார்ன்ஃப்–ள�ோர் மாவு 2 டேபிள்ஸ்–பூன்.

செய்–முறை

கேர–மல் ஒரு பாத்– தி – ர த்– தி ல் சர்க்– க ரை,

தண்–ணீர் சேர்த்து அடுப்–பில் வைத்து நன்கு கிள–ற–வும். பிர–வுன் கல–ராக மாறி–ய–தும் இறக்கி எண்–ணெய் தட–விய ஒரு கிண்–ண த்– தில் ஊற்றி கரண்–டியா – ல் பரப்பி விட–வும். கஸ்–டர்டு மற்– ற� ொரு பாத்– தி – ர த்– தி ல் க ஸ் – ட ர் டு செய்ய க�ொடுத்–துள்ள ப�ொருட்–கள் அனைத்– தை – யு ம் ப�ோட்டு நன்கு கலந்து க�ொள்– ள – வும். இந்த கல– வ ையை கேர–மல் ஊற்றி வைத்–துள்ள கிண்– ண த்– தி ல் ஊற்– ற – வு ம். மித– ம ான தீயில் இட்லி பாத்– தி – ர ம் அல்– ல து குக்– க – ரி ல் விசில் ப�ோடா– மல் தண்– ணீ ர் ஊற்றி அதன் மேல் கேர–மல் கஸ்–டர்டு கலந்த கிண்–ணத்தை வைத்து குக்– க ரை மூடி 30 நிமி– ட ம் வே க – வ ை த் து எ டு க் – க – வு ம் . ஆறி– ய – து ம் ஒரு தட்– டி ல் கேர– ம ல் க ஸ் – ட ர் டு கி ண் – ணத்தை தலை – கீ– ழ ாக கவிழ்த்து அனைத்து பக்– க – மும் மெது–வாக தட்–டி–விட்டு கேர–மல் கஸ்–டர்டை வெளியே எடுத்து விட்டு பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ஃப்ரூட் கிரீம் தேவை–யான ப�ொருட்–கள்

விப்–பிங் கிரீம் செய்ய... பால் - 1¼ கப், அன்ஃப்–ளே–வர்டு ஜெலட்–டின் - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடித்த சர்க்–கரை - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்–பூன். ஃப்ரூட் கிரீம் செய்ய... விப்–பிங் கிரீம் - 1½ கப், புளிக்–காத கெட்– டி த் தயிர் - 2 டேபிள்ஸ்– பூ ன், பாதாம், பிஸ்தா, முந்–திரி - தலா 2 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), குங்–கு–மப்பூ

134

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

- தேவைக்கு, ஏலக்– க ாய்த்– தூ ள் ஒரு சிட்–டிகை, ஆப்–பிள், திராட்சை, பைனாப்–பிள், வாழைப்–பழ – ம், மாதுளை - தலா 1/4 கப்.

செய்–முறை விப்–பிங் கிரீம்

ஒரு பாத்– தி – ர த்– தி ல் வெது– வெ – துப்–பான பால் 1/4 கப், ஜெலட்–டின் சேர்த்து 5 நிமி–டத்–திற்கு அப்–ப–டி யே வைக்–க–வும். பின்பு இக்– க – ல–வையை மைக்ே–ரா–வேவ் அவ–னில் 15 ந�ொடி– கள் வைத்து எடுத்து நன்கு கலக்–க–வும். இந்த ஜெலட்–டின் கல–வை–யில் மீதி–யுள்ள 1 கப் பாலை ஊற்றி நன்கு கலந்து ஃப்ரிட்– ஜி ல் வைத்து குளிர வைக்– க – வு ம். பிறகு ஹான்டு பீட்–டர் க�ொண்டு கெட்–டியா – ன பதத்–திற்கு நன்கு அடிக்–க–வும். விப்–பிங் கிரீம் ரெடி. ஒரு பெரிய கிண்– ண த்– தில் ஃப்ரூட் கிரீம் செய்ய க�ொடுத்– து ள்ள ப�ொருட்– க ள் அனைத்–தை–யும் ஒன்–றன் பின் ஒன்–றாக சேர்த்து, ஃப்ரிட்–ஜில் வைத்து எடுத்து சில்–லென்று அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


நியூ–டெல்லா மில்க் பாப்–சிக – ல்ஸ் தேவை–யான ப�ொருட்–கள்

நியூ–டெல்லா - 3/4 கப், பால் - 1 கப், ஹெவி கிரீம் - 1/2 கப், ஸ்வீட்– அண்டு கன்–டென்ஸ்டு மில்க் - 1/2 கப். ஹெவி கிரீம் செய்ய... பால் - 3/4 கப், வெண்–ணெய் 1/4 கப்.

செய்–முறை

மிக்–சி–யில் ஒரு சுற்று சுற்றி இறக்–க–வும். ஹெவி கிரீம் தயார். நியூ–டெல்லா, பால், ஹெவி கிரீம், கன்–டென்ஸ்டு மில்க் ஆகி–ய–வற்றை மிக்–சி–யில் ப�ோட்டு நன்கு அரைத்து க�ொள்–ளவு – ம். இந்த கல–வையை குல்பி அச்–சில் ஊற்றி ஃப்ரீ–சரி – ல் வைத்து செட் செய்து பரி–மா–ற–வும்.

ஹெவி கிரீம் ஒ ரு ப ா த் – தி – ரத்தை சூடு செய்து வெ ண் – ண ெ ய ை உருக்கி ஆற விட– வும். இத்–து–டன் பால் சே ர் த் து ஹா ன் டு பீ ட் – ட ர் க� ொ ண் டு நன்கு அடிக்– க – வு ம். இதை ஃப்ரிட்– ஜி ல் வைத்து 2 நாட்–கள் வரை பயன்–ப–டுத்–த– லாம். அல்–லது ஒரு பாத்–திர– த்–தில் பாலை க�ொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடை–களை எடுத்து ஒரு பாத்– தி – ர த்– தி ல் ப�ோட–வும். சேக–ரித்த பால் ஆடை– க ளை டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


டேட்ஸ், நட்ஸ் பர்பி தேவை–யான ப�ொருட்–கள்

பேரீச்– சை ப்– ப – ழ ம் - 1/2 கில�ோ, கலந்த நட்ஸ் - 200 கிராம், நெய் 1 டேபிள்ஸ்–பூன், கச–கசா - 1 டேபிள் ஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், ஜாதிக்–காய் தூள் - 1/2 டீஸ்–பூன்.

செய்–முறை

பேரீச்– சை ப்– ப – ழ த்தை மிக்– சி – யி ல் அரைக்– க – வு ம். கச– க – ச ாவை வெறும் கடா– யி ல் வறுத்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு நான்ஸ்–டிக் கடா–யில் நெய் விட்டு அரைத்த பேரீச்–சைப்–பழ விழுது, ப�ொடி– யாக நறுக்–கிய நட்ஸ் கலவை, வறுத்த

கச–க–சாவை சேர்க்–க–வும். அனைத்–தும் ஒன்–றாக சேர்ந்து வரும்–வரை நன்கு கிள–ற–வும். கடை–சி–யாக ஏலக்–காய்த்– தூள், ஜாதிக்–காய்–தூள் சேர்த்து கிளறி இறக்–க–வும். ஆறி–ய–தும் நீள–வாக்–கில் உருட்டி ஃப்ரிட்–ஜில் வைத்து, சிறிது கெட்– டி – யா – ன – து ம் வெளியே எடுத்து துண்–டு–கள் ப�ோட்டு பரி–மா–ற–வும்.

மக்னா கீர் த ே வ ை ய ா ன ப�ொருட்–கள்

பால் - 1 கப், சர்க்–கரை - 1 கப், தாமரை விதை - 40 கிராம், நெய் - 4 டேபிள்ஸ்– பூன், ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், நறுக்–கிய பாதாம், முந்–திரி - தேவைக்கு.

செய்–முறை

கடா–யில் நெய் விட்டு தாமரை விதை– களை ப�ொரித்–தெ–டுத்து க�ொள்–ள–வும். பாதாம், முந்–தி–ரியை வறுத்து தனியே 136

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

வைக்– க – வு ம். பின் அதே பாத்–திர– த்–தில் பால் ஊற்றி க�ொதித்–த–தும், சர்க்–கரை சேர்த்து நன்கு க�ொதிக்–க– வி–ட–வும். தாமரை விதை– களை பாலில் சேர்த்து வேக–வி–ட–வும். பால் சிறிது சுண்–டி–ய–தும் ஏலக்–காய்த்– தூள், வறுத்த பாதாம், முந்–திரி பருப்– பு–களை சேர்த்து கிளறி இறக்–க–வும். ஆறி–ய–தும் அலங்–க–ரித்து பரிமா–ற–வும்.


பீனட் பட்–டர், சாக்–லெட் பட்ஜ்

தேவை–யான ப�ொருட்–கள்

பீனட் பட்ஜ் செய்ய... ப�ொடித்த சர்க்–கரை - 1½ கப், பீனட் பட்–டர் - 3/4 கப், வெண்–ணெய் - 4 டேபிள்ஸ்– பூ ன், ஸ்வீட்– அண்டு கன்– டென்ஸ்டு மில்க் - 1/4 கப், பிர–வுன் சுகர் - 3/4 கப், உப்பு - ஒரு சிட்–டிகை. சாக்–லெட் பட்ஜ் செய்ய... இனிப்–பில்–லாத சாக்–லெட் - 1½ கப், ஸ்வீட்– அண்டு கன்–டென்ஸ்டு மில்க் 3/4 கப், ப�ொடித்த சர்க்–கரை - 3/4 கப்.

செய்–முறை

பீனட் பட்ஜ் அடுப்–பில் ஒரு பாத்–திர– த்–தில் தண்– ணீரை ஊற்றி க�ொதிக்க வைக்–க–வும். அதன் மேல் மற்–ற�ொரு பாத்–தி–ரத்தை வைத்து அதில் கன்–டென்ஸ்டு மில்க், வெண்–ணெய், பிர–வுன் சுகர், உப்பு சேர்த்து கிளறி இறக்–க–வும். இத்–து–டன்

பீனட் பட்– ட ர், ப�ொடித்த சர்க்– க ரை சேர்த்து நன்கு கலக்– க – வு ம். இந்த கல–வையை, பாயில் பேப்–ப–ரால் கவர் செய்த தட்– டி ல் அல்– ல து டிரே– யி ல் க�ொட்டி பரப்பி ஃப்ரிட்–ஜில் வைக்–கவு – ம்.

சாக்–லெட் பட்ஜ்

சாக்– லெட்டை மைக்– ர�ோ – வே வ் அவ–னில் 1 நிமி–டம் வைத்து எடுத்து உருக்– கி க் க�ொள்– ள – வு ம் அல்– ல து மேலே கூறி–யது ப�ோல் டபுள் பாயி–லிங் செய்து உருக்–கிக் க�ொள்–ளவு – ம். இதில் கன்–டென்ஸ்டு மில்க், ப�ொடித்த சர்க்– கரை சேர்த்து கலந்து க�ொள்–ள–வும். இந்த சாக்–லெட் பட்ஜ் கல–வையை, பீனட் பட்ஜ் கல–வை–யின் மேல் பரப்பி ஃப்ரிட்– ஜி ல் வைக்– க – வு ம். இரண்– டு ம் செட் ஆன– து ம் துண்– டு – க ள் ப�ோட்டு பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


பாம்பே கராச்சி அல்வா

தேவை–யான ப�ொருட்–கள்

சர்க்–கரை - 200 கிராம், தண்–ணீர் 125 மி.லி., எலு–மிச்–சைப்–ப–ழச்–சாறு - 1 டீஸ்–பூன், ஃபுட் கலர் - ஒரு சிட்–டிகை. கார்ன்ஃப்–ள�ோர் - 50 கிராம், தண்–ணீர் - 100 மி.லி., வெண்–ணெய் அல்–லது நெய் - 100 கிராம், முந்–திரி - 10 (நறுக்– கி–யது), ஏலக்–காய்த்–தூள் - தேவைக்கு.

செய்–முறை

கார்ன்ஃப்–ள�ோ–ரில், தண்–ணீர் 100 மி.லி. சேர்த்து கரைத்து க�ொள்–ள–வும். ஒரு நான்ஸ்–டிக் கடா–யில் சர்க்–கரை, தண்–ணீர் 125 மி.லி. சேர்த்து க�ொதிக்க விட்டு எலு–மிச்–சைப்–ப–ழச்–சாறு சேர்க்–க– 138

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

வும். பிறகு கரைத்து வைத்– து ள்ள கார்ன்ஃப்–ள�ோர் மாவை ஊற்றி கைவி– டா–மல் கிள–ற–வும். சிறிது கெட்–டி–யா–ன– தும் ஃபுட் கலர் சேர்த்து கிள–ற–வும். பின் சிறிது சிறி–தாக நெய்–விட்டு கிள– றிக் க�ொண்டே இருக்–க–வும். நெய்–யில் வறுத்த முந்– தி ரி, ஏலக்– க ாய்த்– தூ ள் சேர்த்து நன்கு கிளறி அனைத்– து ம் ஒன்–றாக சேர்ந்து, கடா–யில் ஒட்–டாத அல்வா பதத்–திற்கு வந்–த–தும் இறக்கி, நெய் தட–விய தட்–டில் க�ொட்டி ஆறி–ய– தும் துண்–டு–கள் ப�ோட்டு பரி–மா–ற–வும்.


சாக்–லெட் புட்–டிங் தேவை–யான ப�ொருட்–கள்

சாக்–லெட் - 50 கிராம், சர்க்–கரை - 1/2 கப், க�ோக�ோ பவு–டர் - 2 டேபிள் ஸ்–பூன், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்–பூன், கார்ன்ஃப்– ள�ோ ர் - 2 டேபிள்ஸ்– பூ ன், உப்பு - 1/4 டீஸ்–பூன், பால் - 2 கப், ஹெவி கிரீம் - 40 மி.லி., அலங்–க–ரிக்க துரு–விய வெள்ளை சாக்–லெட் - சிறிது.

செய்–முறை

சாக்–லெட்டை துருவிக் க�ொள்–ள– வும். ஒரு பாத்–தி–ரத்–தில் பால், சர்க்– கரை, க�ோக�ோ பவு–டர், அரிசி மாவு,

கார்ன்ஃப்–ள�ோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து க�ொள்–ள–வும். மித–மான தீயில், கடா–யில் கல–வையை ஊற்றி கைவி– டா–மல் கிள–ற–வும். சிறிது கெட்–டி–யாக ஆன– து ம், துரு– வி ய சாக்– லெட்டை சேர்த்து கிள–ற–வும். இக்–க–லவை பாதி– யாக வரும்–வரை கைவி–டா–மல் கிளறி, ெஹவி கிரீம், வெனிலா எசென்ஸ் – ம். ஒரு கிண்–ணத்–தில் சேர்த்து இறக்–கவு – வு – ம். ஆறி–யது – ம் ஃப்ரிட்– ப�ோட்டு ஆற–விட ஜில் வைத்து செட் செய்து, துரு–விய – த்து வெள்ளை சாக்–லெட்–டால் அலங்–கரி பரி–மா–ற–வும்.

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


மில்க் ஜெல்லி தேவை–யான ப�ொருட்–கள்

மில்க் ஜெல்லி செய்ய... பால் - 2 கப், சர்க்–கரை - 1/2 கப், சைனா கிராஸ் அல்–லது அகர் அகர் பவு–டர் - 10 கிராம், தண்–ணீர் - 3/4 கப், வெனிலா எசென்ஸ் - 2 டேபிள்ஸ்–பூன். ஃப்ரூட் ஜெல்–லி– செய்ய... ஏதே–னும் ஒரு ஃபுரூட் ஜூஸ் - 1 கப், தண்–ணீர் - 1 கப், சர்க்–கரை 1/4 கப், அகர் அகர் பவு–டர் - 1/2 அல்–லது 1 டீஸ்–பூன், கலர் எசென்ஸ் - விரும்–பி–னால்.

செய்–முறை

மில்க் ஜெல்லி அகர் அகரை தண்–ணீ–ரில் கரைத்– துக் க�ொள்–ள–வும். பாலை க�ொதிக்க வைத்து, அகர் அகர் கல–வையை ஊற்றி கரைந்–த–தும், சர்க்–க–ரை–யைச் சேர்க்–க– வும். சர்க்–கரை கரைந்–தது – ம், வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்–க–வும். பிறகு எண்– ண ெய் தட– வி ய தட்– டி ல் ஊற்றி ஆறி–ய–தும், ஃப்ரிட்–ஜில் வைத்து செட் செய்–ய–வும். செட் ஆன–தும் வெளியே எடுத்து விருப்–ப–மான வடி–வங்–க–ளில் துண்–டு–கள் ப�ோட்டு க�ொள்–ள–வும். ஃப்ரூட் ஜெல்லி அகர் அகரை தண்–ணீ–ரில் கரைத்– 140

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

துக் க�ொள்–ள–வும். அடுப்–பில் பாத்–தி– ரத்தை வைத்து அதில் ஃபிரெஷ் ஜூஸ், அகர் அகர் கலவை, சர்க்–கரை சேர்த்து நன்கு க�ொதிக்க வைத்து இறக்கி, ஆற வைக்–கவு – ம். பிறகு துண்டு செய்–யப்–பட்– டுள்ள மில்க் ஜெல்–லியி – ன் வடி–வத்–தில், ஃபுரூட் ஜெல்லி கல–வையை ஊற்றி நிரப்–ப–வும். இதை ஃப்ரிட்–ஜில் வைத்து, செட் செய்து துண்– டு – க ள் ப�ோட்டு பரி–மா–ற–வும். குறிப்பு: ஃப்ரூட் ஜெல்லி செய்ய உங்–க–ளுக்கு விருப்–ப–மான ஜூஸை பயன்–ப–டுத்–த–லாம். தேவைப்–பட்–டால் வெவ்–வேறு கலர் மற்–றும் எசென்ஸ் பயன்–ப–டுத்–த–லாம்.


ரச–ம–லாய்– த ே வ ை ய ா ன ப�ொருட்–கள்

பனீர் செய்ய... ப ா ல் - 2 லி ட் – ட ர் எலு–மிச்–சைப் பழம் - 3. சுகர் சிரப் செய்ய... தண்– ணீ ர் - 2 லிட்– ட ர், சர்க்–கரை - 2 கப். ரஃப்டி செய்ய... பால் - 1 லிட்–டர், சர்க்– கரை - 1 கப், குங்–கு–மப்பூ - சிறிது, ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்– பூ ன், பாதாம், பிஸ்தா - தலா 3 (நறுக்–க–வும்).

செய்–முறை

ஒரு பாத்–திர– த்–தில் பாலை க�ொதிக்க வைத்து, எலு– மி ச்– சை ப்– ப – ழ ச்– ச ாறு சேர்த்து, பால் நன்கு திரிந்–த–தும் தண்– ணீ– ர ைப் பிழி– ய – வு ம். பின் மெல்– லி ய துணி–யில் கட்டி, தண்–ணீர் விட்டு கழுவி, நன்கு பிழிந்து வடி–கட்–டவு – ம். அரை மணி நேரத்–திற்கு பிறகு பனீரை எடுத்து, 5 நிமி–டத்–திற்கு நன்கு பிசைந்து, நெல்– லிக்– க ாய் அளவு உருண்– டை – க – ளா க உருட்டி தட்–டை–யாக்–கிக் க�ொள்–ள–வும். மற்–ற�ொரு பாத்–தி–ரத்–தில் சர்க்–கரை, தண்–ணீர் சேர்த்து பாகு பதத்–திற்கு க�ொதிக்க ஆரம்– பி த்– த – து ம், செய்து

வைத்–துள்ள பனீரை ப�ோட்டு நன்கு வேக– வ ைக்– க – வு ம். (பனீர் இரண்டு மடங்கு பெரி–ய–தா–கும் வரை வேக–வி–ட– வும்.) மற்–ற�ொரு வாய–கன்ற பாத்–தி–ரத்– தில் பாலை ஊற்றி, பாதி–யாக சுண்டி வரும்– வ ரை காய்ச்சி, சர்க்– க ரை, குங்–கும – ப்பூ சேர்த்து க�ொதிக்க விட–வும். பாகி–லிரு – ந்து பனீரை எடுத்து குளிர்ந்த நீரில் ப�ோட்டு நன்கு பிழிந்து எடுத்– துக் க�ொள்–ள–வும். க�ொதிக்க வைத்த பாலில் பனீரை ப�ோட்டு, மேலும் 5 நிமி–டங்–கள் வேக–வைத்து பாதாம், பிஸ்–தாவை சேர்த்து இறக்–கவு – ம். ஆறி–ய– தும் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


ஃபலூடா தேவை–யான ப�ொருட்–கள்

ர�ோஸ் மில்க் - 1/2 டம்–ளர், ர�ோஸ் சிரப் - சிறிது, ஃபலூடா சேமியா 4 டேபிள்ஸ்–பூன், ஃபுரூட் ஜெல்லி தேவைக்கு, கலந்த நட்ஸ் - தேவைக்கு, கலந்த பழங்–கள் - 1/4 கப், சப்ஜா விதை - 1 டேபிள்ஸ்–பூன், வெனிலா ஐஸ்–கி–ரீம் - 1 ஸ்கூப். ஃபலூடா சேமியா செய்ய... கார்ன்ஃப்–ள�ோர் - 50 கிராம், தண்– ணீர் - 150 மி.லி., சர்க்–கரை - 2 டீஸ்–பூன், இடி–யாப்ப அச்சு, ஐஸ் கட்–டி–கள் - 15. ஜெல்லி செய்ய... தண்–ணீர் - 250 மி.லி., சர்க்–கரை - 100 கிராம், அன்ஃப்–ளே–வர்டு ஜெலட்– டின் - 1½ டீஸ்–பூன், கலர் ஃப்ளே–வர் - விருப்–பத்–திற்கு.

செய்–முறை

அகர் அகர் அல்–லது ஜெலட்–டின் சேர்த்து விருப்– ப த்– தி ற்– கேற்ப ஜெல்– லியை தயார் செய்து க�ொள்–ள–வும். சப்ஜா விதையை 1½ மணி நேரம் தண்– ணீ – ரி ல் ஊற– வ ைத்து, வடித்து க�ொள்–ள–வும். ஃபலூடா சேமியா கார்ன்ஃப்–ள�ோர், தண்–ணீர், சர்க்– கரை ஆகி–ய–வற்றை சேர்த்து நன்கு கரைத்– து க் க�ொள்– ள – வு ம். கடா– யி ல் 142

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

இந்த கல–வையை ஊற்றி மித–மான தீயில் கிள–றவு – ம். அனைத்–தும் ஒன்–றாக கலந்து கெட்–டியா – க வந்–த–தும் இறக்–க– வும். எண்–ணெய் தட–விய இடி–யாப்ப அச்–சில் சூடான மாவை ப�ோட்டு, ஐஸ் தண்–ணீரி – ல் நேர–டியா – க பிழிந்து விட–வும். இதை அப்–ப–டியே எடுத்து ஃப்ரீ–ச–ரில் 15 நிமி–டம் வைத்து ேசமியா செட் ஆன–தும் நீரை வடித்து விட்டு பயன்–ப–டுத்–த–வும். ஒரு உய–ர–மான கண்–ணாடி டம்– ள–ரில் முத–லில் 1 டீஸ்–பூன் ஜெல்லி ேபாட்டு, பிறகு 2 டேபிள்ஸ்–பூன் சப்ஜா விதை ப�ோட–வும். அதன் பின் சேமியா 2 டேபிள்ஸ்–பூன் சேர்க்–க–வும். மீண்–டும் ஜெல்–லியை சேர்க்–கவு – ம். இதில் ர�ோஸ் மில்க்கை ஊற்றி ப�ொடி–யாக நறுக்–கிய பழங்–களை சேர்த்து, சிறி–த–ளவு ர�ோஸ் சிரப் ஊற்–ற–வும். பின் வெனிலா ஐஸ்–கி– ரீம் வைத்து, மீண்–டும் சப்ஜா விதையை சேர்த்து, ப�ொடி– யா க ந று க் – கி ய ப ாதா ம் , பி ஸ ்தா , முந்–திரி பருப்–பு–களை சேர்க்–கவு – ம். கடை–சியா – க 1 ஸ் கூ ப் வெ னி ல ா ஐ ஸ் – கி – ரீ ம் வ ை த் து பரி– ம ா– ற – வும்.


வால்–நட் பிரெட் பர்பி

தேவை–யான ப�ொருட்–கள்

பிரெட் - 2 கப் (அரைத்– த து), சர்க்–கரை - 1 கப், வெண்–ணெய் - 3 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், பால் - 1 கப், வால் நட் - 1 கப்.

செய்–முறை

பிரெட் பெரி–யது - 4 ஸ்லைஸ் அல்– லது சிறி–யது - 6 ஸ்லைஸ் தேவைப்– ப–டும். பிரெட்–டின் ஓரங்–களை வெட்–டா– மல் அப்–ப–டியே துண்–டு–கள் ப�ோட்டு மிக்–சியி – ல் பவு–டரா – க அரைத்–துக் க�ொள்– ள–வும். இதே ப�ோல் வால்–நட்–டை–யும்

மிக்–சி–யில் ப�ோட்டு க�ொர–க�ொ–ரப்–பாக அரைத்– து க் க�ொள்– ள – வு ம். கடா– யி ல் பிரெட் கிரம்ஸ், சர்க்– க ரை சேர்த்து மித–மான தீயில் பிர–வுன் கலர் வரும்– வரை கிள–ற–வும். பின் பால் சேர்த்து கிளறி சுண்–டி–ய–தும், ஏலக்–காய்த்–தூள், வெண்–ணெய் சேர்த்து நன்கு கிளறி, வால்– ந ட்ஸ் ப�ொடியை சேர்க்– க – வு ம். கலவை ஒன்–றாக திரண்டு சப்–பாத்தி மாவு பதத்–திற்கு வந்–த–தும் இறக்கி, வெண்–ணெய் தட–விய தட்–டில் அல்–லது டிரே–யில் கொட்டி பரப்பி, ஆறி–ய–தும் துண்–டு–கள் ப�ோட்டு பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


ஃபிரைடு ஐஸ்–கி–ரீம் தேவை–யான ப�ொருட்–கள்

வெனிலா ஐஸ்–கி–ரீம் - 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் - 1/2 கப் அல்–லது பிரெட் - 3 ஸ்லைஸ், மைதா - 1/2 கப், தண்–ணீர் - தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்–லது கார்ன்ஃ–பி–ளேக்ஸ் 1/2 கப், சாக்–லெட் சாஸ் - 3-4 டீஸ்–பூன், ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு.

செய்–முறை

2 ஸ்கூப் ஐஸ்–கி–ரீம்–களை எடுத்து ஒரு தட்–டில் வைத்து ஃப்ரீ–ச–ரில் 4 மணி நேரம் வைக்–க–வும். நன்கு இறு–கிய – –தும் வெளியே எடுத்து ஸ்பான்ஞ் கேக்–கில் புரட்டி மீண்–டும் ஃப்ரீ–சரி – ல் 2 மணி நேரம் வைக்–க–வும். அல்–லது பிரெட்–டின் ஓரங்– களை நீக்கி விட்டு சப்–பாத்–திக்–கல்–லில் வைத்து மெல்–லிய – தா – க தேய்த்து, ஓரங்–க– ளில் பால் தடவி, அதன் நடுவே ஐஸ்– கி–ரீம்–களை வைத்து நன்கு மூடி, ஃப்ரீ–ச– ரில் 2 மணி நேரம் வைக்–க–வும். மைதா, தண்– ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்– தி ற்கு கரைத்து க�ொள்– ள – வு ம் . பி ரெ ட் 144

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

கிரம்ஸ் அல்–லது கார்ன்ஃ–பி–ளேக்ஸை ந�ொறுக்கி க�ொள்–ளவு – ம்.கேக் அல்–லது பிரெட் உருண்–டை–களை மைதா–வில் முக்கி, பிரெட் கிரம்–ஸில் புரட்டி ஃப்ரீ–ச– ரில் வைத்து, தேவை–யான ப�ொழுது எடுத்து பயன்–ப–டுத்–த–வும். கடா–யில் எண்–ணெயை ஊற்றி மித– மான தீயில் காய–வைத்து, ஐஸ்–கி–ரீம் உருண்–டை–க–ளாக 2-3 நிமி–டத்–திற்–குள் – ம – ாக ப�ொரித்–தெ–டுத்து சாக்– ப�ொன்–னிற லெட் சாஸு–டன் அலங்–கரி – த்து பரி–மாறி, உடனே சாப்–பி–ட–வும். குறிப்பு: சாக்–லெட்டை டபுள் பாயி– லிங் அல்–லது மைக்–ர�ோவே – வ் அவ–னில் வைத்து உருக்–க–வும். தேவை–யா–னால் வெண்ெ–ணய் சேர்த்து உருக்–க–வும். சாக்–லெட் சாஸ் ரெடி.


க�ோக�ோ காஜு–கத்லி

தேவை–யான ப�ொருட்–கள்

முந்–திரி - 250 கிராம், சர்க்–கரை - 250 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், க�ோக�ோ பவு–டர் - 2 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - 125 மி.லி.

செய்–முறை

முந்–தி–ரியை மிக்–சி–யில் ேபாட்டு நைசாக ப�ொடித்–துக் க�ொள்–ள–வும். ஒரு அடி–க–ன–மான

பாத்–திர– த்–தில் சர்க்–கரை, தண்–ணீர் சேர்த்து கம்–பி–ப–தம் வரும்–வரை – ம். இத்–துட – ன் க�ொதிக்க வைக்–கவு ப�ொடித்த முந்–தி–ரியை சேர்த்து கட்–டி–யில்–லா–மல், கைவி–டா–மல் கிளறி, சிறிது கெட்–டி–யா–ன–தும் இறக்–க–வும். இக்–க–லவை சிறிது ஆறி–ய–தும் கைப�ொ–றுக்–கும் சூட்– டில் மாவை நன்கு பிசைந்து, இரண்–டாக பிரித்து க�ொள்–ளவு – ம். ஒரு பாதி மாவை சப்– ப ாத்– தி க் கல்–லில், சப்–பாத்தி ப�ோல் வட்–ட– மாக தேய்த்–துக் க�ொள்–ள–வும். மற்–ற�ொரு பாதி மாவில் க�ோக�ோ ப வு – ட ர் சே ர் த் து பி சை ந் து சப்– ப ாத்தி ப�ோல் தேய்த்– து க் க�ொள்–ள–வும். இரண்டு மாவை– யும் ஒன்– றா க சேர்த்து ர�ோல் செய்து ஃப்ரிட்– ஜி ல் வைத்து எடுத்து துண்– டு – க ள் ப�ோட்டு பரி–மா–ற–வும். குறிப்பு: ஃப்ரிட்–ஜில் வைத்– தால் சுல–பம – ாக துண்–டுக – ள் ப�ோட முடி–யும். பிசை–யும் ப�ோது மாவு காயா– ம ல் இருக்க, கைக– ளி ல் தண்–ணீரை நனைத்து க�ொண்டு மாவை பிசை–ய–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


ஓமானி அல்வா

தேவை–யான ப�ொருட்–கள்

கார்ன்ஃப்–ள�ோர் - 1 கப், பிர–வுன் சுகர் - 1 கப், சர்க்–கரை - 1/2 கப், கலந்த நட்ஸ் - 1 கப், நெய் - 1/2 கப், ஏலக்– க ாய்த்– தூ ள் - 1 டேபிள் ஸ்–பூன், குங்–கு–மப்பூ - 10 துண்–டு–கள், தண்–ணீர் - 2½ கப், ர�ோஸ் வாட்–டர் - 3 டீஸ்– பூ ன், ஜாதிக்– க ாய்த்– தூ ள் 1/4 டீஸ்–பூன், ஆரஞ்சு, சிவப்பு ஃபுட் கலர் - தேவைக்கு, வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்–பூன்.

செய்–முறை

குங்–கு–மப்–பூவை, 1/2 கப் தண்–ணீ– ரில் ஊற–வைக்–க–வும். கார்ன்ஃப்–ள�ோர் 146

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

மாவை 1 கப் தண்–ணீரி – ல் கரைத்து கொள்–ள–வும். பாதாம், பிஸ்தா, முந்–திரி பருப்–புக – ளை ப�ொடி–யாக நறுக்கி க�ொள்– ள – வு ம். அடுப்–பில் ஒரு அடி–க–ன– ம ா ன ப ா த் – தி – ரத்தை வைத்து அதில் பிர–வுன் சுகர், சர்க்– க ரை, மீதி– யுள்ள 1 கப் தண்– ணீ ர் சேர்த்து கிளறி, மேலே படி–யும் அழுக்கை ஸ்பூ– னால் எடுத்து விட–வும். தண்–ணீர் க�ொதித்–த–தும் அடுப்பை மித–மான தீயில் வைத்து கார்ன்ஃப்–ள�ோர் கலவை, ஃபுட் கலர் சேர்த்து கைவி–டா–மல் கிள–ற–வும். சிறிது கெட்– டி – யா – ன – து ம் ஏலக்– க ாய்த்– தூள், சிறிது நெய் விட்டு கிள–றவு – ம். பின் ஊற–வைத்–துள்ள குங்–கு–மப்பூ, ர�ோஸ் வாட்–டர், ஜாதிக்–காய் தூள் சேர்த்து மீதி–யுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிள–ற– வும். கலவை மேலும் கெட்–டியா – –ன–தும் பாதாம், பிஸ்தா, முந்–திரி, வெள்ளை எள் சேர்த்து நெய் தனி–யாக பிரிந்து அல்வா பதத்– தி ற்கு பாத்– தி – ர த்– தி ல் ஒ ட் – ட ா – ம ல் வ ந் – த – து ம் இ ற க் கி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


ரெயின்போ ஜெல்லோ கேக் தேவை–யான ப�ொருட்–கள்

க�ோகனட் மில்க் ஜெல்லி செய்ய... திக்–கான தேங்–காய்ப்–பால் - 2 கப், அன்ஃப்–ளே–வர்டு ஜெலட்–டின் - 4 டீஸ்– பூன், சர்க்–கரை - 5 டேபிள்ஸ்–பூன், உப்பு - ஒரு சிட்–டிகை, வெனிலா எசென்ஸ் - 1½ டீஸ்–பூன். ஜெல்லி செய்ய... ஜெலட்–டின் - 3 டீஸ்–பூன், வெது–வெ– துப்–பான தண்–ணீர் - 500 மி.லி., மஞ்– சள், பச்சை, இளஞ்–சி–வப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒவ்ெ–வாரு துளி, லெமன், கிரேப், ஸ்ட்–ராபெ – ரி, ஆரஞ்சு ஃப்ளே–வர் - தேவைக்கு.

செய்–முறை

ஒரு பாத்–தி–ரத்–தில் வெது–வெ–துப்– பான தண்–ணீரி – ல் ஜெலட்–டினை சேர்த்து 5 நிமி–டத்–திற்கு அப்–படி – யே வைக்–கவு – ம். பிறகு சர்க்–கரை சேர்த்து நன்கு கரைத்– துக் க�ொள்–ள–வும். இந்த கல–வையை நான்கு சம– ப ா– க ங்– க – ளா க பிரித்து (ஒவ்–வ�ொன்–றும் 125 மி.லி.) நான்கு பாத்–தி–ரத்–தில் ஊற்–ற–வும். ஒவ்–வ�ொரு பாத்–தி–ரத்–தி–லும் ஒவ்–வ�ொரு ஃபுட் கலர் மற்–றும் அதற்–கேற்ற ஃப்ளே–வர் சேர்த்து கலக்–க–வும். அடுப்பை மித–மான தீயில் வைத்து ஒவ்–வ�ொரு கல–வை–யை–யும் க�ொதிக்–க–விட்டு இறக்கி ஆற–வி–ட–வும்.

ஆறி– ய – து ம் எண்– ண ெய் தட– வி ய டப்– பாக்–க–ளில் ஊற்றி ஃப்ரிட்–ஜில் வைத்து செட் செய்து, துண்–டு–க–ளாக வெட்–டிக் க�ொள்–ள–வும். தேங்–காய்ப்–பா–லில், ஜெலட்–டின், சர்க்–கரை சேர்த்து நன்கு கரைத்–துக் க�ொள்–ளவு – ம். அடுப்பை மித–மான தீயில் வைத்து, இந்த கல–வையை வைத்து ஒரு க�ொதி வந்–த–தும் உப்பு, வெனிலா எசென்ஸ் சேர்த்து கிளறி இறக்–க–வும். எண்– ண ெய் தட– வி ய கேக் டின்– னி ல் தேங்–காய்ப்–பால் மில்க் ஜெல்லி கல– வையை ஊற்றி, அதில் துண்–டாக்–கிய கலர் ஜெல்–லியை ப�ோட்டு ஃப்ரிட்–ஜில் வைத்து செட் செய்து எடுத்து, கலர் ஃ–புல் ஜெல்–லியை துண்–டு–கள் ப�ோட்டு பரி–மா–ற–வும். டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi December 1-15, 2016. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

ஸ்வீட்– அண்டு கன்–டென்ஸ்டு மில்க்

தேவை–யான ப�ொருட்–கள்

பால் - 500 மி.லி., சர்க்– க ரை 200 கிராம், தேவை–யா–னால் பேக்–கிங் ச�ோடா - ஒரு சிட்–டிகை.

செய்–முறை

ஒரு அடி–க–ன–மான பாத்–தி–ரத்–தில் பால், சர்க்–கரை சேர்த்து க�ொதிக்க விட–வும். பால் க�ொதித்–தது – ம் அடுப்பை மித–மான தீயில் வைத்து சுண்ட காய்ச்–ச– வும். அடி–பி–டிக்–கா–மல் இருக்க இடை இடையே கிளறி விட– வு ம். மேலே 148

°ƒ°ñ‹

டிசம்பர் 1-15,2016 இதழுடன் இணைப்பு

படி–யும் ஆடை–களை எடுத்து விட–வும். பால், சர்க்–க–ரையை ஒன்–றாக சேர்த்து க�ோல்–டன் கல–ரில் வரும். பால் பாதி– யாக குறைந்து கெட்–டி–யாக வந்–த–தும், பேக்–கிங் ச�ோடா சேர்த்து கிளறி இறக்கி ஆறி–ய–தும் பயன்–ப–டுத்–த–வும். குறிப்பு : ஃப்ரிட்–ஜில் 1 வரு–டம் வரை ஸ்டோர் செய்து பயன்– ப – டு த்– த – ல ாம். இனிப்பு அதி–கம் வேண்–டு–மென்–றால் பால் 500 மி.லி. + சர்க்–கரை 250 கிராம் சேர்க்–க–வும்.

Thozhi suppliment  

Thozhi suppliment