Page 1

ஊர்களும் சினிமா கதைகளும்!

2-12-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு


ÍL¬è CA„¬êò£™

ªê£Kò£Cv Gó‰îñ£è °íñ£è «õ‡´ñ£ ? ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶.

õ£ó‹«î£Á‹

è¬ôë˜ T.V.J™

¹î¡Aö¬ñ 裬ô 9.30 ñE ºî™ 10.00 ñE õ¬ó

«èŠì¡

ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ T.V.J™ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ Fƒè†Aö¬ñ 裬ô 10.00 «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ ñE ºî™ 10.30 ñE õ¬ó «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, T.V.J™ ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ Fùº‹ ñ£¬ô 4.30 ñE àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø ºî™ 5.00 ñE õ¬ó ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹ ÝAò¬õ ªê£Kò£Cv «ï£Œ ÜP°Pè÷£°‹. êKò£ù CøŠ¹ ñ¼ˆ¶õ˜èœ ªê£Kò£Cv «ï£Œ «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ ðŸPò º¿ M÷‚è‹ ÜO‚Aø£˜. î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£íô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. ⽋¹ «îŒñ£ù‹, ͆´èœ «è£íô£A M´‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ îóŠð´‹ ÝJ‡†ªñ¡´èœ, ñ£ˆF¬óè¬÷ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ùJ™ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ£°‹. â‰îMî ð‚èM¬÷¾ Þ™ô£ñ™ Gó‰îóñ£è °íñ£°‹. H¡ù£™ õ£›ï£O™ «ï£Œ F¼Šð õó«õ õó£¶. Í¡Á î¬ôº¬øè÷£è ªê£Kò£Cv «ï£Œ °íñ£è CA„¬ê ÜOˆ¶ õ¼‹ Dr.RMR ªý˜Šv. ñ¼ˆ¶õ è™ÖKJ™ BSMS, BAMS, BNYS ñŸÁ‹ MD «ð£¡ø ñ¼ˆ¶õ ð†ì‹ ªðŸø I辋 ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜èœ ªè£‡´ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. ªõOñ£Gô‹, ªõO®™ Þ¼Šðõ˜èœ 죂ì¬ó ªî£ì˜¹ ªè£‡´ îƒè÷¶ «ï£J¡ ñ °Pˆ¶ ‘õ£†vÜŠ’ Íô‹ «ð£†«ì£ ñŸÁ‹ i®«ò£¬õ ÜŠH 죂ìK™ «è†ìP‰¶, Ý«ô£ê¬ù ªðŸÁ western union money transfer Íô‹ ñ¼‰¶ ªî£¬è¬ò ªê½ˆF ÃKò˜ Íô‹ ñ¼‰¶è¬÷ ªðŸÁ‚ ªè£œ÷ô£‹.

ñ£¬ôºó²

Í¡Á î¬ôº¬øè÷£è ªê£Kò£Cv °íñ£è CA„¬ê ÜOˆ¶ õ¼‹

Dr.RMR ªý˜Šv

ªê£Kò£Cv CA„¬ê‚° CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 26, bùîò£À ªî¼, î¬ô¬ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17

PH: 044- 4350 4350, 4266 4593, Cell: 97100 57777, 97109 07777 á˜

«îF

«õÖ˜ ªðƒèÀ˜ «êô‹ «è£òºˆÉ˜ ñ¶¬ó ï£è˜«è£M™ ªï™¬ô F¼„C °‹ð«è£í‹ 𣇮„«êK

7&‰ «îF 8&‰ «îF 9&‰ «îF 10&‰ «îF 11&‰ «îF 12&‰ «îF 12&‰ «îF 13&‰ «îF 13&‰ «îF 14&‰ «îF

2

«ïó‹ 裬ô 裬ô 裬ô 裬ô 裬ô 裬ô ñ£¬ô 裬ô ñ£¬ô 裬ô

9 & 12 9 & 12 9 & 12 9 & 12 9 & 12 9 & 12 2& 5 9 & 12 2& 5 9 & 12

வெள்ளி மலர் 2.12.2016

嚪õ£¼ ñ£îº‹ ºè£‹ ï¬ìªðÁ‹ Þìƒèœ æ†ì™ ñ¾‡† ð£ó¬ìv, èªô‚ì˜ ÝHv ܼA™. «ïûù™ ªóCªì¡C, 372, «êû£ˆFK «ó£´, ªñüv®‚ «è£«ì ꘂAœ. ü¨è£ ªóCªì¡C, ¹Fò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ H«óñ£ôò£, èMî£ F«ò†ì˜ ܼA™, 裉F¹ó‹. æ†ì™ H«ó‹Gõ£v, üƒû¡ ܼA™, «ñôªð¼ñ£œ «ñvFK iF. æ†ì™ ð«ò£Qò˜ ð£ó¬ìv, ñE‚Ç´ ܼA™. æ†ì™ ܼíAK, 53, ñ¶¬ó «ó£´, ð¬öò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ ÝvH, F¼õœÙ˜ ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ MIM 𣘂, ¹Fò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ êŠîAK, ðvG¬ôò‹ ܼA™.


2.12.2016 வெள்ளி மலர்

3


எனக்கு ரிஸ்க் எடுப்பது பிடிக்கும்! ‘க�ோடிட்ட இடங்–களை நிரப்–பு–’–கி–றார் பார்த்–தி–பன்

4

வெள்ளி மலர் 2.12.2016


தை திரைக்– க தை வச– ன ம் இயக்– கம்’ படத்–திற்கு பிறகு பார்த்–தி–பன் இயக்–கும் படம், ‘க�ோடிட்ட இடங்– களை நிரப்–புக.’ ப�ோர்க்–கால அடிப்–ப–டை– யில் படத்தை எடுத்து முடித்–தி–ருக்–கி–றார். அவ–ச–ரத்–துக்–கான கார–ணத்தை கேட்–டால், சிரிக்–கி–றார். ‘‘‘கதை திரைக்–கதை வச–னம் இயக்–கம்’ படம் வெற்–றிப் படம். அதற்கு பிறகு எனது அடுத்த கதையை தயார் செய்–து–விட்–டேன். ஒரு தயா–ரிப்–பா–ளர் வந்–தார். 3 க�ோடிக்கு செக் க�ொடுத்–தார். அடுத்து இரண்டு பேர் வந்– த – ன ர் ஆளுக்கு ஒரு க�ோடிக்கு செக் க�ொடுத்–தன – ர். மூணு பேருக்–கும் படம் எடுக்க என்–னிட – ம் கதை இருக்–கிற – து, கெத்து இருக்–கி– றது. யாருக்–கா–வது முத–லில் பண்–ணு–வ�ோம் என்று காத்–தி–ருந்–தால் யாரும் வர–வில்லை. அவர்–கள் க�ொடுத்த செக் மட்–டும் வங்–கி– யில் இருந்து பத்–தி–ர–மாக திரும்பி வந்–தது. ரசி–கர்–கள் என்னை நம்–பிய அள–விற்கு தயா– ரிப்–பா–ளர்–கள் நம்–பவி – ல்லை என்று புரிந்–தது. கதை உள்–ளிட்ட மற்ற விஷ–யங்–கள் தயா–ராக இருந்–த–தால் படப்–பி–டிப்பு மட்–டுமே பாக்கி இருந்–தது. அதை திட்–டமி – ட்டு மள–மள – வ – ென முடித்–தேன். படப்–பி–டிப்–பில்–தான் வேகம் இருந்–ததே தவிர, அதன் முன் தயா–ரிப்–புக்கு நிறைய நாட்–கள் ஆனது...’’ என்–கி–றார். க்ர–வுட் ஃபண்–டிங் முறை–யில் எடுக்–கப்–ப�ோ–வ–தா–கச் ச�ொன்–னீர்–களே..? கன்–ன–டத்–தில் க்ர–வுட் ஃபண்–டிங் முறை வெற்றி பெற்–றி–ருக்–கி–றது. அத–னால் முயற்– சித்து பார்ப்–ப�ோம் என்று முடி–வெ–டுத்–தேன்.

என்னை நம்பி வரு–வார்–கள் என்று நினைத்– தேன். ஆளுக்கு 10 லட்–சம், 50 பேர் 5 க�ோடி என திட்–டமி – ட்–டேன். ஆனால், வந்–தது பத்து பேர்–தான். அவர்–கள் என்னை முழு–மைய – ாக நம்–பி–னார்–கள். கதை என்–ன–வென்று கூட அவர்–க–ளுக்கு தெரி–யாது. அவர்–கள் பணத்– து–டன் என்–னுடை – ய சேமிப்–பையு – ம் ப�ோட்டு படத்தை முடித்–தி–ருக்–கி–றேன். ‘க�ோடிட்ட இடங்–களை நிரப்–புக – ’ என்ன மாதி–ரிய – ான படம்? ப�ொது–வாக நான் அட்–வான்–சாக படம் தரக்– கூ – டி – ய – வ ன் என்ற பெயர் உண்டு. ‘ஹவுஸ்ஃ–புல்–’–லும், ‘குடைக்–குள் மழை–யும்’ அந்த மாதிரி படங்–கள். ஆனால், பெரி–தா– கப் பேசப்–பட – வி – ல்லை. இப்–ப�ோது டி.வியில் பார்த்–து–விட்டு பாராட்–டு–கி–றார்–கள். ‘கதை, திரைக்–கதை, வச–னம், இயக்–கமு – ம்’ அப்–படி – ப்– பட்ட படம்–தான். ஆனால், வெற்றி பெற்–றது. கார–ணம் ரசி–கர்–க–ளின் ரசிப்பு தரத்–தில் ஏற்– பட்–டுள்ள மாறு–தல். தர–மா–ன–வற்றை ஏற்க அவர்–கள் தயங்–க–வில்லை. அந்த நம்–பிக்–கை– யில்–தான் இந்–தப் படத்–தை–யும் க�ொடுத்–தி– ருக்–கிறே – ன். படத்–தின் கதையை ஒரு வரி–யில் சொல்– லி – வி ட முடி– யு ம். அதில் பெரி– த ாக ஒன்–றும் இருக்–காது. ஆனால், அதை எப்–படி பிர–சன்ட் பண்–ணியி – ரு – க்–கிறே – ன் என்–பது – த – ான் முக்–கி–யம். அது நிச்–ச–யம் மக்–க–ளுக்–குப் பிடிக்– கும். காமெடி, சென்–டிமெ – ன்ட், ரொமான்ஸ், ஆக்‌ –ஷன், த்ரில்–லர் எல்–லாமே இருக்–கும். எதை–யும் வேண்–டுமெ – ன்று திணிக்–கவி – ல்லை. கதை–ய�ோடு கடந்து ப�ோகும். பாக்–ய–ராஜ் உங்–கள் குரு என்–ப–தற்–கா–கத்–தான் அவர் மகன் சாந்–த–னுவை நடிக்க வைக்–கி–றீர்–க–ளாமே?

2.12.2016 வெள்ளி மலர்

5


நானே ஒரு பேட்–டி–யில் இப்–படி ச�ொல்லி விட்டு வருந்–திக் க�ொண்–டி–ருக்–கி–றேன். குரு பாக்– ய – ர ாஜ் சாருக்கு நான் க�ொடுக்– கி ற குரு காணிக்கை என்–பது நல்ல படங்–களை க�ொடுப்–பது – த – ான். ஆனால், அவர் மகன் சாந்– தனு திற–மை–யான நடி–கர். அவ–ரைப் பயன் –ப–டுத்–திக் க�ொள்ள நினைத்–தேன். அவ–ருக்கு இந்த கேரக்–டர் சரி–யாக அமை–யும் என்று த�ோன்–றி–யது. கேரக்–டர் பற்றி ச�ொன்–ன–தும் ஹேர் ஸ்டைல் மாற்றி, உடலை ஃபிட்–டாக்கி என் எழுத்– தி ல் இருந்த கேரக்– ட ரை கண்– முன் நிறுத்–தி–னார். இந்த உழைப்பை பயன்– ப–டுத்–திக் க�ொண்–டி–ருக்–கி–றேன். கதைப்–படி ஹீர�ோ–யின் மலை–யா–ளிப்–பெண். அத–னால் அச்சு அச–லாக மலை–யா–ளப் பெண்–ணாக தெரி–யும் ஒரு–வ–ரைத் தேடி–னேன். பார்–வதி நாயர் கிடைத்–தார். இந்த ஜ�ோடி க�ொஞ்ச நாளைக்–குப் பேசப்–ப–டும். இது தவ–று–கள் நிறைந்த படம் என்று ச�ொல்–லி–யி–ருக்– கி–றீர்–களே? 100 சத–வி–கி–தம் சரி–யான படங்–கள் இது– வரை வந்–த–தில்லை. எல்லா படங்–க–ளி–லும் தவ–றுக – ள் இருக்–கிற – து. நாளைக்கு இந்–தப் படத்– தை–யும் பார்த்–து–விட்டு தவ–று–க–ளைச் சுட்–டிக் காட்–டப் ப�ோகி–றார்–கள். அதற்–குள் நாமே ஒப்–புக் க�ொள்–வது நல்–லது – த – ானே. அது–மட்டு– மில்–லா–மல் படத்–தில் பல தவ–றான மனி–தர்–க– ளின் கேரக்–டர்–கள் இருக்–கி–றது. அவர்–கள் தவ–றா–ன–வர்–க–ளாக இருப்–ப–தற்கு அவர்–கள் தரப்–பில் சரி–யான கார–ணம் இருக்–கிற – து. அத– னா–லும் இதைத் தவ–று–கள் நிறைந்த படம் என்று கூற–லாம்.

6

வெள்ளி மலர் 2.12.2016

படத்தை ச�ொந்–த–மாக வெளி–யி–டு–வது ஏன்? இன்– றை க்கு வியா– ப ா– ர – ம ா– வ து பெரிய ஹீர�ோக்–க–ளின் படங்–கள்–தான். இது–ப�ோன்ற முயற்–சி–க–ளுக்கு முத–லில் ஆத–ரவு இருக்–காது. ஆனால், ரிலீ–சா–ன–வு–டன் அது–பற்–றிய மதிப்– பீ– டு – க ள் வந்த பிறகு வரு– வ ார்– க ள். மீடியா மூலம் படம் பற்றி தக–வல்–கள் நல்ல வித–மாக வெளி–வரு – ம்–ப�ோது வாங்க வரு–வார்–கள். அந்த நம்–பிக்–கையி – ல்–தான் ரிலீஸ் தேதியை அறி–வித்– துள்–ளேன். அப்–படி வரா–விட்–டா–லும் கூட என்னை நம்–பி–யும், என் கதையை நம்–பி–யும் குறிப்–பிட்ட தேதி–யில் வெளி–யி–டு–வேன். முத்தக் காட்–சி–கள் இருக்–கி–ற–தாமே? இப்–ப�ோதெ – ல்–லாம் முத்–தக் காட்சி பெரிய விஷ–யமே இல்லை. ஆனால், அந்த முத்–தத்தை நோக்கி நக–ரச் செய்–யும் காட்–சிக – ள் சுவா–ரஸ்–ய– மாக இருக்க வேண்–டும். அது–தான் படத்–தில் பிர–தா–ன–மா–கக் காட்–டப்–ப–டு–கி–றது. நடி–கர் பார்த்–தி–பன் எப்–படி இருக்–கி–றார்? அவர் பிசி–யாக இருக்–கி–றார். இப்–ப�ோ–தும் ஏழெட்டு படங்–களி – ல் நடிக்–கிற – ார். நல்ல சம்–ப– ளம் வாங்–கு–கி–றார். ஆனால், அது வலி–யில்– லாத வாழ்க்–கை–யா–யிற்றே. எனக்கு வலி–யு– டன் வாழத்–தான் பிடிக்–கும். நண்–பர்–கள் கூட ‘நடித்து சம்–பா–தித்து ச�ொத்து சேர். படம் தயா–ரிச்சு வீணாப் ப�ோகா–தே’ என்–று–தான் அட்– வை ஸ் பண்– ணு – கி – ற ார்– க ள். ஆனால், எனக்கு எப்–ப�ோது – ம் ரிஸ்க் எடுக்–கணு – ம், அதுல ஜெயிக்–க–ணும்.

- மீரான்

அட்டை மற்–றும் படங்–கள்: ‘க�ோடிட்ட இடங்–களை நிரப்–பு–க’


‘சென்னை டூ பாங்–காக்’ பட த�ொ டக்க விழா–வில் படத்–தின் நாய–கி–கள் ச�ோனி சரிஷ்டா, யாழி னி.

தெலுங்கு படம் ஒன்–றின் த�ொடக்க விழா–வில் நானி, நிவேதா, தாம–சு–டன் ஆதி.

‘2.0’ ஃபர்ஸ்ட் லுக் வெளி– யீ ட்டு விழா–வில் எமி ஜாக்–சன்.

ெ – ளி க் – கு ப் பி ற கு நீ ண ்ட இ டை – வ எண் 150’ படத்– ‘க – வி நடிக்–கும் ைதி சிரஞ்சீ – ப்பு ஐர�ோப்– படப்–பிடி தின் பாடல் காட்சி படப்–பி–டிப்பு இடை பா–வில் நடந்–தது. – ால் – ன் காஜல் அகர்வ – ட – ல் அவரு வெளியி . ார் – ட க�ொண் க் து – ம் எடுத்– – ட புகைப்ப

– மி. இதன் – ார் ராய் லட்சு தில் நடிக்–கிற ‘ஜுலி’ என்ற இந்தி படத்– –ப–டம். ைப் புக ்ட எடுத்–துக்–க�ொண ல�ொகே–ஷ–னில் அவர் 2.12.2016 வெள்ளி மலர்

7


காஷ்மீர் to சென்னை Via கனடா!

‘கா

வி–யத் தலை–வன்’ படத்–தில், ‘ஏ மிஸ்– டர் மைனர்’, ‘ஓகே கண் ம–ணி’– யி – ல் ‘காரா ஆட்–டக்–கா– ரா’, ‘பறந்து செல்–லவ – ா’வில் ‘நானே வரு–கிறே – ன்’ ‘பாயும் புலி’–யில் ‘சிலுக்கு மரமே...’ இந்த சூப்–பர் ஹிட் பாடல் க – ளி ல் , இ சை – யை – யு ம் தாண்டி ஈர்க்– கி – ற து, அந்– தப் பெண்–கு–ரல். மீண்–டும் மீண்– டு ம் கேட்– க த் தூண்– டும் அந்–தக்–கு–ரல், ஷாஷா திருப்–ப–தி–யு–டை–யது. பிறந்– தது காஷ்– மீ ர் என்– ற ா– லு ம்

8

வெள்ளி மலர் 2.12.2016


ஷாஷா வளர்ந்–தது கன–டா–வில். எப்–படி பாட–கி–யா– னார் என்–றால், அவர் ச�ொல்–லும் ஒரே வார்த்தை ஏ.ஆர்.ரகு–மான்ஜி. ‘அவர்–தான் எனக்கு எல்–லா–மே’ என்–கி–றார். எப்–படி? ‘‘சின்ன வய– சு – லயே கன– ட ா– வு க்கு நாங்க ப�ோயிட்–டா–லும் அங்க இசைக் கத்–துக்க ஆரம்–பிச்– சேன். இந்–துஸ்–தா–னி இசையை கத்–துக்–கிட்–டேன். அப்ப எனக்–குப் பிடிச்ச பாடல்–கள், ஏ.ஆர்.ரகு–மா– ன�ோட தமிழ்ப் பாடல்–கள்–தான். அப்ப அவர் இசை அமைச்ச, ‘கண்டு க�ொண்–டேன் கண்டு க�ொண்– டேன்’, ‘திருடா திரு–டா’ மாதி–ரி–யான படங்–க–ள�ோட பாடல்–க–ளைத் தேடி கண்–டு–பி–டிச்சு கேட்–டு–கிட்டு இருப்–பேன். எனக்–குத் தமிழ் தெரி–யா–துன்–னா–லும் அந்–தப் பாடல்–கள் மேலே ஒரு காதல் இருந்–தது. அது–தான் என்னை பாட–கிய – ாக்–கிய – து...’’ என்–கிற – ார் ஷாஷா. க�ொஞ்–சம் விரிவா ச�ொல்–ல–லாமே? கன–டா–வுல இருந்து எங்க குடும்–பம் இந்–தியா வந்–தது. நான், இசை–யில தீவி–ரமா கவ–னம் செலுத்– திக்–கிட்டு இருந்–தேன். 2013-ம் வரு–ஷம் க�ோக் ஸ்டூ–டிய�ோ மூணா–வது மியூ–சிக் செஷன்ல நானும் கலந்–துக் கிட்–டேன். அங்க நடந்த ஆடி–ஷன்ல நானும் செலக்ட் ஆனேன். பிறகு நிகழ்ச்சி முடிஞ்–ச– தும் ஏ.ஆர்.ரகு–மான், ‘இதுல யாரு ஷாஷா?’ன்னு கேட்–டார். எனக்கு பயம். எல்–லாத்–தை–யும் தப்பா பாடிட்– டே – ன�ோ ன்னு உத– ற ல். பயத்– த�ோ – ட யே கையை தூக்–கி–னேன். அவர் ஒண்–ணும் ச�ொல்– லல. மறு–நாள், ‘ஏதும் தப்பா பாடிட்–டேனா?ன்னு கேட்–டேன். ‘இல்ல, உங்க குரல் ஏத�ோ ஒரு மியூ– சிக் இன்ஸ்ட்–ருமென்ட் மாதிரி இருந்–த–து–’ன்னு ச�ொன்–னார். இது என்னை இன்–னும் குழப்–பமா ஆக்–கிடு – ச்சு. அவர் பாராட்–டின – ாரா, இல்லை வேற மாதிரி ச�ொல்–றா–ரான்னு குழப்–பம். அப்–புற – ம் அந்த எபி–ச�ோட் ஒளி–ப–ரப்–பா–ன–துக்கு பிறகு, அவர் ஸ்டூ– டி–ய�ோ–வுல இருந்து ப�ோன். சென்–னைக்கு வரச் ச�ொன்–னாங்க. ப�ோனேன். மறு–நாள், ‘க�ோச்–ச– டையான்’ல வர்ற ‘வாடா வாடா’ பாட–லைப் பாடச் ச�ொன்–னார். பிற–கு–தான் அப்ப அவர் என்னை பாராட்–டி–யி–ருக்–கார்னு புரிஞ்–சது. தமிழ் உச்–ச–ரிப்பு அப்–ப–டியே இருக்–குதே... எப்–படி? எனக்கு க�ொஞ்–சம் தமிழ் தெரி–யும். சில வார்த்– தை–களை – ப் புரிஞ்–சுக்க முடி–யும். சின்ன வய–சுலயே – தமிழ்ப் பாடல்–களை கேட்டு வளர்ந்–தத – ால, எனக்கு எளி–மையா இருக்–குது. இருந்–தா–லும் படத்–த�ோட இயக்–கு–நர்–கள், பாட–லா–சி–ரி–யர்–கள், ரகு–மான் சார் எல்–லா–ருமே வார்த்–தையை தெளிவா ச�ொல்–லித் தந்–தி–ட–றாங்க. அத–னால சரி–யான உச்–ச–ரிப்–புல பாட–றேன்னு நினைக்–கி–றேன். ம�ொழி தெரி–யாம பாட–றது கஷ்–டமா இல்–லையா? இசைங்–க–றது உணர்ச்–சி–யும் அதை வெளிப் ப–டுத்–தும் முறை–யும்–தான். பாடல் வரி–களி – ன் அர்த்– தம் புரிந்து பாடு–றது – த – ான் நல்–லது. நானும் அதைத் தெரிஞ்–சுகி – ட்–டுத – ான் பாட–றேன். எனக்கு ம�ொழி–கள் மேல அலாதி பிரி–யம் உண்டு. எந்த ம�ொழியா இருந்–தா–லும் சரி. பஞ்–சாபி, பெங்–காலி, பார்சி,

உருது, இத்–தா–லி–யன் உட்–பட சில ம�ொழி–களை நானே கத்–துக்–கிட்–டி–ருக்–கேன். அதுல தமி–ழும் இருக்கு. இன்–னும் சில வரு–டங்–கள்ல தெளிவா தமிழ் கத்–துட்டு பாடு–வேன். நீங்க பாடி–ய–தில் சவா–லான பாடல்? ஒவ்–வ�ொரு பாட–லும் ஒவ்–வ�ொரு விதத்–துல சவா–லா–ன–து–தான். ‘ஓகே கண்–ம–ணி’ படத்–துல வர்ற, ‘நானே வரு–கி–றேன்’ பாடல் வெஸ்–டர்ன் மற்–றும் இந்–துஸ்–தானி இசை–யால உரு–வாக்–கப்– பட்ட பாடல். இரண்டு மூன்று விஷ–யங்–க–ளில் கவ–னம் செலுத்தி பாட வேண்–டிய பாடல் இது. ஒரு விஷ–யத்–துல கவ–னம் செலுத்–தினா மற்–றது மறந்து ப�ோகும். அத–னால அதைப் பாடி முடிக்க நாலு மணி நேர–மாச்சு. என் மேல நம்–பிக்கை வச்சு, ரகு–மான் சார் அந்–தப் பாடலை க�ொடுத்–தது பெரிய விஷ–யம். ஏ.ஆர்.ரகு–மான்–கிட்ட பாட–ற–துக்–கும் மற்ற இசை அமைப்–பா–ளர்–கள்–கிட்ட பாட–ற–துக்–கும் என்ன வித்–தி–யா–சம்? ஒவ்–வ�ொ–ருத்–த–ருக்–கும் ஒவ்–வ�ொரு ஸ்டைல் இருக்–கும். அது பாட–கர்–க–ளுக்–கும் அனு–ப–வ–மா– கத்–தான் இருக்–கும். எல்–லாத்–தையு – ம் கத்–துக்–கிற – து எனக்–குப் பிடிக்–கும். எல்லா இசை அமைப்–பா– ளர்–கிட்–ட–யும் எதை–யா–வது ஒரு விஷ–யத்–தைக் கத்–துக்–கி–றேன். இப்ப பாட–ற–வங்–கள்ல யாரை பிடிக்–கும்? ‘தள்– ளி ப்– ப�ோ – க ா– தே ’ சித் ராம், சித்ரா, சின்–மயி, நிகிதா காந்தி. அழகா இருக்–கீங்க... நடிக்க அழைப்பு வந்–தி–ருக்–குமே? ஐயைய�ோ, அதை ஏன் கேட்–கி–றீங்க. நிறைய டைரக்–டர்–கள் கூப்–பிட்–டுட்டே இருக்–காங்க. ‘விளம்– பர படங்–கள்ல நடிங்க. மாட–லிங் பண்–ணுங்–க–’ன்– னும் நிறைய அழைப்–பு–கள். எனக்கு இசை–தான் தெரி–யும். எனக்கு எது தெரி–யும�ோ அது–ல–தான் நான் ப�ோக முடி–யும். இசை–யி–ல–தான் சாதிக்–க– ணும்னு நினைக்–கி–றேன். அத–னால நடிக்க வந்த வாய்ப்–பு–களை நிரா––க–ரிச்–சுட்–டேன்.

- ஏக்ஜி

2.12.2016 வெள்ளி மலர்

9


முதலை வாயில்

சிக்கிய ஹீர�ோ!

சு

மார் இரு– நூ று படங்– க – ளு க்கு கதை. புது–முக – ம் அப்பு கிருஷ்ணா கராத்– மேல் சண்–டைக் கலை–ஞ–ரா–க–வும், தே–வில் பிளாக் பெல்ட் வாங்–கி–ய–வர். சண்டை இயக்–கு–ந–ரா–க–வும் பணி–யாற்–றி– எதற்–கும் துணிந்–தவ – ர். அதற்–கா–கவே இந்– யுள்ள ஸ்டன்ட் ஜெயந்த், ‘முந்–தல்’ படம் தப் படத்–தில் ஹீர�ோ–வாக தேர்–வா–னார். மூலம் இயக்–கு–ந–ராகி உள்–ளார். அந்–த– ருக்‌ஷா என்ற புது–மு–கம் ஹீர�ோ–யின். மான் தீவு–கள், கம்–ப�ோ–டியா, வியட்–நாம் நான் ஸ்டன்ட் மாஸ்–டர் என்–ப–தால் நாடு–க–ளில் பட–மாக்கி திரும்–பி–யி–ருக்–கி– ஒரு ல�ொக்–கேஷ – னு – க்கு பர்–மிஷ – ன் வாங்– றார். ‘முந்–தல் என்–றால் என்ன?’ என்று கு–வ–தில் இருந்து கிடைக்–கும் வச–தியை ஆரம்–பித்–த�ோம் அவ–ரி–டம். வைத்து ஆக்‌ ஷ – னி – ல் பிர–மாண்–டம் காட்–டு– ‘‘‘முந்– த ல்’ என்– ற ால் ‘முந்– து – த ல்’ வது வரை எல்–லாம் தெரி–யும். அத–னால்– என்று ப�ொருள். எல்லா மனி–தனு – க்–குமே ஸ்டன்ட் ஜெயந்த் தான் கம்–ப�ோடி – யா காடு–கள், அங்–க�ோலா முந்–திச் செல்–ல–வேண்–டும் என்–கிற ஆசை இருக்– புலி க�ோயில், அந்–தம – ான் தீவில் அண்–டர்–வாட்–டர், கும். அது–தான் வெற்–றியி – ன் அடிப்–படை. நம் நாட்டு வியட்–நாம் நக–ரங்–க–ளில் என்–னால் படம் எடுக்க சித்–தர்–கள் அபூர்வ மூலி–கை–க–ளைக் க�ொண்டு முடிந்–தது. ஹீர�ோ முதலை வாயில் சிக்கி மீண்–டார். புற்று ந�ோய்க்கு மருந்து கண்–டுபி – டி – த்–துள்–ளார்–கள். நாங்–கள் அன–க�ோண்டா பாம்–பி–டம் சிக்கி சாக அந்த மூலிகை ரக–சி–யம் அடங்–கிய ஓலைச்–சு–வடி இருந்–த�ோம், புலி க�ோயி–லில் படம் எடுக்–கும்–ப�ோது கம்–ப�ோ–டியா நாட்–டில் உள்ள சிவன் க�ோயி–லில் ஒரு புலிக்கு க�ோபம் வந்து துரத்–தி–யி–ருக்–கி–றது. இருக்–கி–றது. இதை அறிந்து க�ொண்ட ஒரு கும்– இப்–படி நிறைய அனு–ப–வம் இருக்–கி–றது. பல், அதைக் கைப்–பற்றி புற்று ந�ோய் மருந்து அதை இப்–ப�ோது ச�ொன்–னால் பில்–டப் மாதிரி தயா–ரி–்த்து விற்று க�ோடி க�ோடி–யா–கச் சம்–பா–திக்–கத் தெரி–யும். படம் வந்–த–பி–ற–கு–தான் நாங்–கள் ச�ொல்– திட்–டமி – டு – கி – ற – து. ஹீர�ோ அதை கைப்–பற்றி அர–சிட – ம் வ–தை–யும் நம்–பு–வார்–கள்...’’ என்–கி–றார் ஸ்டன்ட் ஒப்–பட – ைக்க நினைக்–கிற – ார். இரு–வரி – ல் யார் முந்–திச் ஜெயந்த். சென்று அதை கைப்–பற்–றுகி – ற – ார்–கள் என்–பது – த – ான் - மீரான்

10

வெள்ளி மலர் 2.12.2016


நயன்–தாரா, காஜல் அகர்–வால், கீர்த்தி சுரேஷ் ஆகி–ய�ோ–ரில் அதி–கம் வெள்–ளை–யாக இருப்–ப–வர் யார்..? - ந.ரம்யா, ஆனை–மலை. அது அவர்–கள் பயன்–படு – த்–தும் க்ரீமை ப�ொறுத்து படங்–க–ளில் வெளிப்–ப–டும். கூடவே HD மேக்–கப்–பின் வீரி–யத்தை ப�ொறுத்து கேம–ரா–வில் Reflect ஆகும்!

சமீ–பத்–தில் வசூலை வாரி குவித்த படம்..? - லட்–சுமி செங்–குட்–டு–வன், வேலூர் (நாமக்–கல்). ‘அச்– ச ம் என்– ப து மட– மை – ய – டா ’ என்று ச�ொன்–னால் அடிக்க வரு–வீர்–கள். ஆனால், அது– தா ன் உண்மை. நவம்– ப ர் 9 அன்று திடீ–ரென்று ரூ.500, ரூ. ஆயி–ரம் ந�ோட்–டுக்–கள் செல்–லாது என்று மத்–திய அரசு அறி–வித்–தது. இதனை த�ொடர்ந்து வெளி–யா–வதா – க இருந்த பல படங்– க ள் பின்– வா ங்– கி ன. ரிலீஸ் ஆக வேண்–டிய கட்–டா–யத்–தில் இருந்த ‘அ எ ம’ ஆனது ஆகட்–டும் என்று வெளி–யா–னது. வங்–கி– யை–யும், ஏடி–எம் வாச–லிலு – ம் மணிக்–கண – க்–கில் மக்–கள் நிற்க ஆரம்–பித்–தார்–கள். அடிப்–படை வாழ்–வாதா – ர– மே ஸ்தம்–பித்–தது. இதை–யும் மீறி ‘அச்–சம் என்–பது மட–மை–ய–டா’ பெற்–றி–ருக்–கும் கலெக்–‌–ஷ–னும் சேஃபர் ஸ�ோனுக்–குள் அப் ப – ட ம் நு ழைந் – தி – ரு க் – கு ம் செ ய – லு ம் உண்–மை–யி–லேயே வியப்–பா–ன–து–தான்.

தமி– ழி ல் வில்– ல ன் பற்– ற ாக்– கு – றை க்கு என்ன கார–ணம்? - சங்–கீத சர–வ–ணன், மயி–லா–டு–துறை. ஹீர�ோக்–களே நெக–டிவ் ர�ோல் செய்ய ஆரம்–பித்த பிறகு தனி–யாக வில்–லன் எதற்கு?!

‘அச்–சம் என்–பது மட–மைய – ட – ா’ மஞ்–சிமா ம�ோகன் எப்–படி? - அ.யாழினி பர்–வ–தம், சென்னை - 78. தென்– னி ந்– தி – ய ர்– க – ளு க்கு, குறிப்– பா க தமி– ழ ர்– க – ளு க்கு, பல்–கி–யான பெண்–கள் மீது எப்– ப�ோ–தும் ஒரு க்ரேஸ் உண்டு என்–பது மீண்–டும் நிரூ–பண – ம – ாகி இருக்– கி – ற து. ‘அ எ ம’வில் கவு–தம் வாசு–தேவ் மேன–னின் நிழ– லி ல் ஒதுங்கி இருக்– கி – றார். அடுத்–த–டுத்–த ப–டங்–க–ளில்–தான் மஞ்–சி–மா–வின் தனித்–தி–றமை வெளிப்–ப–டும்.

‘ ப ை ர – வ ா – ’ வை த � ொ ட ர் ந் து வி ஜ ய் யாரு–டைய இயக்–கத்–தில் நடிக்–கி–றார்? - ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம். அட்லி என்று பேச்சு அடி– ப – டு – கி – ற து. ப�ோலவே சூப்–பர் ஸ்டார் ரஜி–னி–யின் புகழ்– பெற்ற படம் ஒன்–றின் சாய–லில் இப்–ப–டத்–தின் கதை இருக்–கக் கூடும் என்ற கிசு–கி–சு–வும். ஏனெ–னில் கடந்த காலங்–களி – ன் சாய–லிலேயே – நிகழ் காலத்தை கடத்–து–ப–வர் அட்லி. ‘மவுன ராகம்’ எப்–படி ‘ராஜா ராணி’ ஆனத�ோ, ‘சத்–ரி– யன்’ எப்–படி ‘தெறி’–யாக உரு–மா–றி–யத�ோ அப்– படி ‘அண்–ணா–ம–லை–’–யின் நவீன வெர்–ஷன் இம்–முறை எடுக்–கப்–பட – க் கூடும் என்–கிற – ார்–கள்.

2.12.2016 வெள்ளி மலர்

11


‘யு

டர்ன்’ என்ற ஒரே ஒரு கன்–ன–டப் படம், தமி–ழில் நான்கு படங்–கள – ைக் க�ொடுத்–தி– ருக்–கிற – து, ஷ்ரத்தா நாத்–துக்கு. ‘எப்–படி கிடைத்–தது இந்த வாய்ப்–புக – ள்?’ - என்று கேட்–ட�ோம் ஷ்ரத்–தா–வி–டம். ‘அதிர்ஷ்–டம்னு ச�ொல்–ல–லாமா?’ என்று கேட்–ட–வாறே ஆரம்–பிக்–கி–றார், ‘யு-டர்ன்’ அடித்–த–படி. ‘‘நான், லாயர். கல்–லூ–ரி–யில இருந்து நாட– கங்–கள்ல நடிச்–சுட்– டி – ரு ந்– தே ன். அந்த நாட– க த்– தைப் பார்த்–துட்டு சினி–மா–வுல நடிக்க வாய்ப்பு கிடைச்–சது. முதல் படம் ஷூட்–டிங் ஆரம்–பிச்–சாங்க. நின்னு ப�ோயி–டுச்சு. அடுத்து ‘க�ோகி–னூர்–’ங்–கற மலை–யா–ளப் படத்–துல செகண்ட் ஹீர�ோ–யின். பிற–குத – ான், ‘யு டர்ன்’ வாய்ப்பு கிடைச்–சது. அந்–தப் பட டைரக்–டர – �ோட முந்–தைய படம், ‘லூசி–யா–’வு – க்கு நல்ல வர–வேற்பு கிடைச்–ச–தால, இந்–தப் படத்–துக்– கும் எதிர்–பார்ப்பு. இண்–டஸ்ட்–ரியி – ல இருக்–கிற – வ – ங்க நிறைய பேர் இந்–தப் படத்–தைப் பார்த்–தி–ருக்–காங்– கன்னு நினைக்–கி–றேன். அதுல என் நடிப்–பைப் பார்த்– து ட்டு இங்க வாய்ப்– பு – க ள் கிடைச்– ச து, அவ்–வ–ள–வு–தான்...’’ என்–கி–றார் ஷ்ரத்தா. மணி–ரத்–னத்–த�ோட ‘காற்று வெளி–யி–டை’..? மணி சார் படத்–துல வாய்ப்பு கிடைச்–சதே எனக்கு விருது கிடைச்ச மாதிரி. ‘காற்று வெளி– யி–டை’ படத்–துல நான் ராணுவ அதி–கா–ரி–ய�ோட மகளா நடிக்–கிறே – ன். மற்–றப – டி வேற எதை–யும் நான் இப்ப ச�ொல்–லக் கூடாது. இந்–தப் பட ஷூட்–டிங்ல முதல் நாள் எனக்கு ஏற்–பட்ட அனு–ப–வத்–தை–யும் ஃபீலிங்–கை–யும் என்–னால விவ–ரிக்க முடி–யாது. அதை உண–ரத்–தான் முடி–யும். அப்–படி ஓர் அனு–ப– வம். இந்–தப் படத்–துல இன்–ன�ொரு ஹீர�ோ–யின் இருந்–தா–லும் எனக்–கும் முக்–கிய – த்–துவ – ம் இருக்–கும். சின்ன ர�ோல�ோ, கெஸ்ட் ர�ோல�ோ? தெரி–யாது. தெரிஞ்–சுக்க வேண்–டிய அவ–சிய – மு – ம் இல்ல. மணி சார் படத்–துல நானும் இருக்–கிறே – ன். இது–ப�ோது – ம்.

கார்த்–தி–ய�ோட நடிச்–சது பற்றி? ‘காற்று வெளி–யி–டை’ ஷூட்–டிங்–ல–தான் கார்த்– தியை பார்த்–தேன். ர�ொம்ப அமை–தி–யா–ன–வர். முதல்ல, ஷாட் முடிஞ்–ச–தும் தனித்–த–னியா ப�ோய் உட்–கார்ந்–துக்–கு–வ�ோம். அப்–பு–றம் சில நாட்–கள் ஆன–தும் நட்–பாச்சு. நிறைய விஷ–யங்–களை ஷேர் பண்–ணிக்–கிட்–டார். அவர் நடிச்ச படங்–களை இன்– னும் பார்த்–த–தில்லை. சீக்–கி–ரமே பார்க்–க–ணும். ‘இவன் தந்–தி–ரன்–’ல என்ன கேரக்–டர்? இன்ஜினி–ய–ரிங் ஸ்டூ–டன்டா வர்–றேன். ப�ோல்– டான ப�ொண்ணு. சில கார–ணங்–கள – ால ஹீர�ோவை சந்–திக்க வேண்டி வருது. பிறகு எங்–க–ளுக்–குள்ள என்ன நடக்–கு–துன்னு கதை ப�ோகும். கவு–தம் கார்த்– தி க் ஹீர�ோ. ஆர்.ஜே.பாலா– ஜி – ய�ோ ட காமெடி படத்–துல அரு–மையா வந்–திரு – க்கு. இதுல ஆக்‌ ஷ – ன், சென்–டிமெ – ன்ட், காதல், ர�ொமான்ஸ்னு எல்–லாமே இருக்கு. பக்–கா–வான கமர்–சி–யல் படத்– துல நடிக்–க–ணுங்–க–றது என் ஆசை. அது இந்–தப் படம் மூலமா நிறை–வே–றி–யி–ருக்கு. ‘ஆஃப் பீட்’ படங்–கள்–தான் உங்–கள் சாய்ஸா? அப்–படி – ச் ச�ொல்ல முடி–யாது. நான் நாட–கத்–துல இருந்து சினி–மா–வுக்கு வந்–தி–ருக்–கேன். யதார்த்–த– மான கேரக்–டர்–கள், நடிக்க அதிக வாய்ப்–புள்ள கேரக்–டர்–கள்–தான் எனக்கு பிடிக்–கும். அதுல நடிக்– கும் ப�ோது இன்–னும் அதி–கமா ஃபீல் பண்ண முடி–யும்னு நம்–பறே – ன். அத–னால கமர்–சிய – ல் படங்–க– ளில் நடிப்–பது எனக்கு கஷ்–டம்–தான். இருந்–தா–லும் அந்த மாதிரி படங்–க–ளில் நடிக்க ஆர்–வ–மா–க–வும் இருக்–கி–றேன். கமர்–சிய – ல் படங்–கள்–தானே இங்க அதி–கமா உருவாகுது..? உண்–மை–தான். பரீட்–சார்த்த முறை–யி–லான படங்–கள் குறை–வு–தான். புதிய அலை சினிமா உரு–வா–னால் அந்த மாதிரி படங்–கள்ல நடிக்க நான் முன்–னு–ரிமை க�ொடுப்–பேன். அதே நேரம் கமர்–சி–யல் படங்–கள்–ல–யும் நடிப்–பேன். இரண்–டை– யும் பேலன்ஸ் பண்ணி நடிக்–க–லாம்னு முடிவு பண்–ணி–யி–ருக்–கி–றேன். நிவின் பாலி–ய�ோட ரசி–கை–யாமே? ஆமா. அவர் நடிச்ச பல படங்–கள – ைப் பார்த்–தி– ருக்–கேன். இப்ப கவு–தம் ராமச்–சந்–தி–ரன் இயக்–கும் படத்–துல அவ–ர�ோட நடிக்–கி–றேன். இதுல கிரைம் ரிப்–ப�ோர்ட்–டர், நான். சீரி–யஸ் பட–மான இதுல காத–லுக்கு முக்–கி–யத்–து–வ–மில்லை. இருந்–தா–லும் எனக்–கும் நிவி–னுக்–கும் சின்ன லவ் ப�ோர்–ஷன் இருக்கு. அது சுவா–ரஸ்–யமா இருக்–கும். ‘விக்–ரம் வேதா’–வில் மாத–வ–னு–டன் நடிக்–கி–றீங்–களே? மாத–வன் திரை–யி–லும் சரி, நிஜத்–தி–லும் சரி, சார்–மிங்–கான ஆள். பல படங்–கள்ல அவ–ரைப் பார்த்து ரசிச்–சி–ருக்–கேன். இப்ப அவ–ர�ோட நடிக்– கி–றேன்–ன–தும் ஆச்–ச–ரி–யமா இருந்–தது. டிசம்–பர், மார்ச்ல அந்–தப் பட ஷூட்–டிங் இருக்கு. இது கிளா–மர் உல–க–மாச்சே..? கண்–டிப்பா. கதை நல்–லா–யி–ருந்தா ப�ோதும். கிளா–மரா நடிக்–கி–ற–துல எனக்கு எந்த வெறுப்–பும் இல்லை.

- ஏக்–நாத்

12

வெள்ளி மலர் 2.12.2016


2.12.2016 வெள்ளி மலர்

13

சிலிர்க்–கி–றார் ஷ்ரத்தா நாத்

மணிரத்னம் படத்துல நடிப்பதே பெருமைதான்


அரியர்ஸ் ஸ்டூடன்ட்களின் பிரச்னையை அலசும்

அதிமேதாவிகள் சி

ன்–னத்–தி – ரை– யி ல் இருந்து சினி– ம ா– வுக்கு வரு–பவ – ர்–களி – ன் எண்–ணிக்கை நாளுக்கு நாள் அதி–கரி – த்து வரு–கிற – து. அந்த வரி–சை–யில் புதி–தா–கச் சேர்ந்–தி–ருக்–கி– றார், ‘அதி–மேத – ா–விக – ள்’ மூலம் இயக்–குந – ர – ாக அறி–மு–க–மா–கும் ரஞ்–சித் மணி–கண்–டன். ‘‘‘சித்து பிளஸ் டூ’ படத்–துல, கே.பாக்–ய– ராஜ் கிட்ட உத–விய – ா–ளரா ஒர்க் பண்–ணேன்.

அப்ப ‘ஸ்கி–ரீன்–பி–ளே’ பற்றி நிறைய விஷ–யங்– கள் கத்–துக்–கிட்–டேன். பிறகு ஜே.டி-ஜெர்ரி கிட்ட உதவி இயக்–கு–நரா ஒர்க் பண்–ணேன். ஆனா, என் படத்– து ல யார�ோட பாணி– யும் இருக்–காது. அவங்–க–கிட்ட கத்–துக்–கிட்ட கலையை, கதை மற்–றும் திரைக்–கதை விஷ–யத்– துல வெச்–சுக்–கிட்–டேன். ஆனா, படம் இயக்– குற விஷ–யத்–துல எனக்–குன்னு தனி பாணியை அமைச்–சுக்–கிட்–டேன். படம் பார்த்தா, அது என்ன பாணின்னு தெளிவா புரி– யு ம்...’’ என்–கி–றார் ரஞ்–சித் மணி–கண்–டன்.

14

வெள்ளி மலர் 2.12.2016


அது என்ன ‘அதி–மே–தா–வி–கள்’? ஒ ரு ப ட த் – து க் கு ஆ டி – ய ன் ஸ் – கி ட ்ட நல்ல அறி–மு–கம் தர்–றதே டைட்–டில்–தான். ப�ொதுவா, புத்–திச – ா–லியா இருக்–கிற – வ – ங்–களை ‘மேதா–வி–’ன்–னும், அதுக்கு எதிரா இருக்–கி–ற– வங்– க ளை ‘அதி– மே – த ா– வி – ’ ன்– னு ம் ச�ொல்– வாங்க. இது காலேஜ் ஸ்டூ–டன்ட்ஸ் பற்–றிய கதை. ரெண்டு இன்ஜினி–ய–ரிங் ஸ்டூ– டன்ட்ஸ் ‘அரி–யர்ஸ்’ வைக்–கி–றாங்க. அதுல இருந்து மீண்டு வர நினைக்– கிற அவங்க, ஒரு ஆள்–கிட்ட உதவி கேட்–கிற – ாங்க. பிறகு என்ன நடக்–கிற – – துன்னு ச�ொல்–ற–து–தான் கதை.

அவ– ரு க்கு அப்பா மது– சூ – த – ன ன். ஹீர�ோ ஃப்ரெண்டா ‘கல்–லூ–ரி’ வின�ோத் வர்–றார். அத�ோட, இந்த படத்–த�ோட வச–னத்–தை–யும் அவர் எழு–தி–யி–ருக்–காரு. ‘ராப்’ பாட்டு இருக்–காமே? பால– சு ப்– ர – ம – ணி – யெ த்– தி ன் அச�ோ– சி – யேட் விஷ்ணு  கேம– ர ாவை பிடிச்சி, ஒவ்–வ�ொரு காட்–சி–யை–யும் கவிதை மாதிரி வரைஞ்–சி–ருக்–காரு. ஏ.ஆர். ரகு– ம ா– ன�ோ ட ஸ்கூல்ல படிச்ச ஸ்டூ– ட ன்ட்ஸ் ஆதித்யா, சூர்யா ரெண்–டு–பே–ரும் சிறப்பா இசை–ய– மைச்–சிரு – க்–காங்க. ஒரு ‘ராப்’ பாட்டு இருக்கு. அதை ‘துப்–பாக்–கீஸ்–’ங்–கிற ராப் டீம் எழுதி, பாடி– யி – ரு க்கு. சண்–டைக் காட்சி கிடை–யாது.

யாரு அவர்–கள்? படத்–த�ோட ஹீர�ோ சுரேஷ் ரவி– யும், ஹீர�ோ–யின் இஷா–ரா–வும்–தான் அந்த அதி–மே–தா–வி–க ள். ரெண்– டு– ரஞ்–சித் மணி–கண்–டன் ஷூட்–டிங்–கில் நடந்த சுவா–ரஸ்–யம்? பே–ரும் காலேஜ்ல அரி–யர்ஸ் வைக்–கி– சென்– னை – யி ல் 45 நாட்– க ள்ல றாங்க. அதுல இருந்து மீண்டு வர தெரி–யாம, ஷூட்–டிங் நடத்தி முடிச்–சேன். அடுத்த வரு– தம்பி ராமை–யா–கிட்ட உதவி கேட்–கி–றாங்க. ஷம் பிப்–ர–வ–ரி–யில் படம் ரிலீ–சா–கும். ஈ.சி. அவர் செய்–யற வேலை, அவங்–கள�ோ – ட எதிர்– ஆர் ர�ோட்–டில் பிர–மாண்–டமா ஒரு செட் கா–லத்தை எப்–படி புரட்–டிப் ப�ோடு–துன்னு ப�ோட்– டி – ரு ந்– த�ோ ம். கல்– ய ா– ண ம் நடக்– கி ற கதை நக–ரும். உடனே இதை சீரி–யஸ் ட்ராக் மாதிரி ஷூட் பண்–ண�ோம். அப்ப நடந்த கதைன்னு நினைச்–சிட – ா–தீங்க. ரெண்டு மணி காமெடி கலாட்–டா–வுல, நிஜ–மாவே அந்த நேரம் வயிறு வலிக்க சிரிச்சி ரசிக்–கிற விதமா, செட் உடைய ஆரம்–பிச்–சது. எங்கே நம்ம சுவா–ரஸ்–யமா பட–மாக்கி இருக்–க�ோம். தலை–யில விழுந்–துடு – ம�ோ – ன்னு, ஆளா–ளுக்கு யாரெல்–லாம் நடிச்–சி–ருக்–காங்க? ஒரு பக்–கம் ஓடி–ன�ோம். ஆனா, ஷூட்–டிங் டி.வியில் ‘விஜே’வா இருக்– கிற சுரேஷ் வேலை பர–ப–ரப்பா நடந்–துக்–கிட்–டி–ருந்–தது. ரவி, ஹீர�ோவா அறி–முக – ம – ா–கிற – ார். அவ–ருக்கு நல்–ல–வேளை, யாருக்–கும் காயம் இல்–லாம அப்பா லிவிங்ஸ்–டன், அம்மா ரேணுகா. தப்–பிச்–ச�ோம். ‘சது–ரங்க வேட்–டை’ இஷாரா ஹீர�ோ–யின். - தேவ–ராஜ்

2.12.2016 வெள்ளி மலர்

15


ராட்–சஷி!

யப்–ப–டா–மல் எப்–படி இருக்க முடி–யும்? ஆச்–சர்–இங்கு வெளி–யாகி இருக்–கும் படங்–க–

ளைப் பாருங்–கள். காட்–சி–ய–ளிப்–ப–வர் தீபிகா படு– க�ோன் என்–றால் நம்ப முடி–கி–றதா? அந்த அர–பிக் குதி–ரை–யே–தான். இந்தி சினி–மா–வின் ம�ோஸ்ட் வான்–டட் லேடி சூப்–பர் ஸ்டார்–க–ளில் ஒரு–வ–ராக உயர்ந்–த–வர் இப்–ப�ோது ஹாலி–வுட் படங்–க–ளி–லும் நடித்து வரு–கி–றார். வின் டிச–லு–டன் அவர் நடித்து வரும் ‘xXx: Return of Xander Cage’ - சுருக்–க–மாக ‘xXx: Reactivated’ ஆங்–கி–லப் படம் அடுத்த ஆண்டு வெளி–யா–கிற – து. கவலை வேண்–டாம். இந்–திய – ா–வில் இருக்–கும் செப்பு ம�ொழி பதி–னெட்–டுடை – ய – ா–ளிலு – ம் இப்–ப–டம் டப் ஆகும். விஷ–யம் அது அல்ல. இந்த ஆங்–கி–லப் படத்–தின் டிரெய்–லர் உல– கெங்–கும் இப்–ப�ோது பட்–டையை கிளப்பி வரு–கி– றது. கார–ணம், தீபி–கா–வின் நீள–மான கால்–க–ளும், விரிந்த நெஞ்–ச–மும். இதைப் பார்த்–துப் பார்த்து மேற்–கத்–தி–யர்–கள் ச�ொக்கி வரு–கி–றார்–கள். இந்–நி–லை–யில்–தான் சட்–டென்று மஜீத் மஜிதி படத்–தில் ஒப்–பந்–த–மாகி நடித்து வரு–கி–றார். வெயிட். வெறும் தக– வ – ல ாக கடக்– கு ம் அள–வுக்கு இது சாதா–ர–ண–மான விஷ–ய–மல்ல. நரம்பு புடைக்க ‘உலக சினி– ம ா’ குறித்து ஜ�ோல்னா பையு–டன் டீ கடை வாச–லில் சவுண்டு விடும் ச�ோடா–புட்டி ‘கலா ரசி–கர்–கள்’ அனை–வரு – மே பேச்–சுக்கு முந்–நூறு முறை ஈரா–னிய சினிமா என்ற பதத்தை உச்–ச–ரிப்–பார்–கள். இது நம்–மூர் நிலை மட்–டு–மல்ல. ஈரேழு உல– கங்–க–ளி–லும் இது–தான் நிலை. அந்–த–ள–வுக்கு தர– மான படங்–கள் என்–றால் அவை ‘ஈரா–னிய படங்–கள்– தான்’ என்ற நம்–பிக்–கையை அந்த இண்–டஸ்–டிரி ஏற்–ப–டுத்தி இருக்–கி–றது. அப்– ப – டி ப்– ப ட்ட ஐஎஸ்ஐ முத்– தி ரை குத்– த ப்– பட்ட தர–மான திரை–யு–ல–கில் பல முடி–சூடா மன்– னர்–கள் இருக்–கி–றார்–கள். அவர்–க–ளில் ஒரு–வர் முக்–கி–ய–மா–ன–வர் - மஜீத் மஜிதி. ‘சில்–ரன் ஆஃப் ஹெவன்’, ‘த கலர் பேர–டைஸ்’, ‘பாரன்’, ‘த ஸாங் ஆஃப் ஸ்பே–ர�ோஸ்’ உள்–ளிட்ட படங்– க ள் காலம் கடந்– து ம் இவ– ர து பெயரை உணர்த்–திக் க�ொண்டே இருக்–கும். இவ–ரது இயக்– கத்–தில் வெளி–யான இந்–தப் படங்–களை பார்த்து வியக்–காத இயக்–கு–நர்–களே இப்–பி–ர–பஞ்–சத்–தில் இல்லை. அப்–ப–டிப்–பட்ட வஸ்–தாது டைரக்ட் செய்–யும் புதிய படத்–தில் இப்–ப�ோது தீபிகா நடித்து வரு– கி–றார். இன்–னும் பெய–ரி–டப்–ப–டாத இப்–ப–டத்–தின் ஷூட்–டிங்–கில் எடுக்–கப்–பட்ட புகைப்–ப–டங்–க–ளை– தான் இங்கு பார்க்–கி–றீர்–கள். இப்– ப�ோ து ச�ொல்– லு ங்– க ள். இச்– செ ய்– தி க்கு சூட்–டப்–பட்ட தலைப்பு சரி–தானே?! 

16

வெள்ளி மலர் 2.12.2016


ஜென–ரல் நாலேஜ்!

து– வ ாக தெலுங்– கு ப் பட ஷூட்– டி ங் ப�ொ ஹைத–ரா–பாத் அல்–லது விசா–கப்–பட்–டி– னத்–தில் நடக்–கும்–ப�ோது சமந்தா ஒன்று பார்க்

ஹையாத் ஹ�ோட்–டலி – ல் தங்–குவ – ார் அல்–லது தனது கெஸ்ட் ஹவு–ஸில் அல்–லது நாக சைதன்–யா–வின் இருப்–பி–டத்–தில். இப்–ப�ோது இதில் மாற்–றம் ஏற்–பட்–டி–ருக்–கி–றது. சமீ–பத்–தில் ஹைத–ரா–பாத்–தில் உள்ள Financial Districtல் மிக காஸ்ட்–லிய – ான ஃப்ளாட் ஒன்றை நாக சைதன்யா வாங்–கி–யி–ருக்–கி–றார். தனி ஹீர�ோ–வாக த�ொடர்ந்து அவர் வெற்–றி பெற்று வரு–வத – ால் தனி– யா–கத்–தான் இங்கு வசிக்–கி–றார். தேவைப்–பட்–டால் தன் அப்பா நாகார்–ஜு–னாவை, சித்தி அம–லாவை, தம்பி அகிலை பார்த்–து–விட்டு வரு–வார். ஆனால், ஸ்டே மட்–டும் தனி–யா–கத்–தான். இந்த ஃப்ளாட்– டு – க் கு– த ான் தனது ம�ொத்த ப�ொருட்–க–ளு–டன் சமந்தா வந்து சேர்ந்–தி–ருக்–கி–றா– ராம். அத்–து–டன் ஷூட்–டிங் இல்–லாத சம–யத்–தில் அந்த ஃப்ளாட்–டின் இன்–டீரி – ய – ரை தன் விருப்–பப்–படி மாற்றி வரு–கி–றா–ராம். இந்த இரு வாக்–கி–யத்–தின் ப�ொரு–ளும் சுருக்–க– மும் ஒன்றே. அது இரு–வரு – ம் லிவிங் டு கெதர் ஆக

பர்–ம–னன்ட்–டாக வசிக்–கத் த�ொடங்–கி–விட்–டார்–கள் என்–பதே. க�ொசுறு: 2017 ஆகஸ்–டில் இரு வீட்–டார் சம்–ம– தத்–து–டன் இரு–வ–ரும் திரு–ம–ணம் செய்து க�ொள்– கி–றார்–கள். கல்–யா–ணத்–துக்கு பிற–கும் சமந்தா நடிப்–பார் என செய்–தி–யா–ளர்–கள் கேட்–கா–ம–லேயே நாக சைதன்யா அறி–வித்–தி–ருக்–கி–றார். 

இதெல்–லாம் பாவ–மில்–லையா மை சன்?!

மு

ட்– டி க் க�ொள்– ள – ல ாம் ப�ோலி– ரு க்– கி – ற து. பிர–ப–லங்–க–ளின் வாரி–சு–க–ளாக பிறந்–தால் இதை–யெல்–லாம் எதிர்–க�ொண்–டுத – ான் ஆக வேண்– டும் என மனதை சமா–தா–னப்–ப–டுத்–தி–விட்டு நகர வேண்–டி–ய–து–தான். பிற–கென்ன? ‘நம்–ம’ மயிலு தேவி–யின் மக–ளாக ஜான்வி கபூர் பிறந்–தது குற்–றமா? ப�ொது இடங்–களி – ல் அவர் நடந்–தால், அமர்ந்–தால், தும்–மி–னால் ப�ோதும். மட–மட – வ – ென்று செல்–ப�ோனி – ல் புகைப்–பட – ம் எடுத்து சமூக வலை–த்த–ளங்–க–ளில் ரசி–கர்–கள் பதி–வேற்றி விடு–கி–றார்–கள். திரைப்–ப–டம் த�ொடர்–பான நிகழ்– வுக்கு தன் அம்மா, அப்பா, தங்கை குஷி கபூர் ஆகி–ய�ோரு – ட – ன் அவர் காட்–சிய – ளி – த்த மறு நிமி–டமே மீடி–யா–வின் கேம–ராக்–கள் சகட்–டுமே – னி – க்கு அவரை ம�ொய்க்–கின்–றன. பாவம். டீன் ஏஜின் விளிம்–பில் நிற்–கும் ஜான்– விக்கு பிரை–வ–சியே இல்–லா–மல் ப�ோய்–விட்–டது.

சமீ–பத்–தில் நடந்–தி–ருக்–கும் நிகழ்வு அதை–தான் உணர்த்–து–கி–றது. ‘டியர் ஜிந்– த – கி ’ ப்ரி– வி யூ ஷ�ோவுக்கு தன் அப்பா ப�ோனி கபூ–ரு–ட–னும் அம்மா தேவி–யு–ட– னும் வருகை தந்–தார். கூடவே ‘ஒரு பைய–னும்’ வந்–த–து–தான் மீடி–யா–வுக்கு தீனி ப�ோட்–டி–ருக்–கி–றது. ஏற்– க – னவே ஜான்வி கபூ– ரு க்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருப்–பத – ாக அச்சு / காட்சி ஊட–கங்–கள் அவ்–வப்–ப�ோது கிசு–கிசு எழுதி வந்–தன. இப்–ப�ோது அவலே கிடைத்–துவி – ட்–டது. விடு–வார்–களா? மென்று தீர்த்–து–விட்–டார்–கள். ‘அந்–தப் பைய–னின்’ பெயர் ஷிகார் பஹா–ரியா என்–றும் இவர்–கள் இரு–வ–ரும்–தான் த�ொடர்ந்து டேட்–டிங் செல்–கி–றார்–கள் என்–றும்... என்–றும்... என்–றும்... ஒரு ஆணும் பெண்–ணும் நட்–பு–டன் பழ–கு–வது அம்–புட்டு குத்–த–மாய்யா? 

2.12.2016 வெள்ளி மலர்

17


‘பூஜை’ ப�ோட்ட புனித் ராஜ்–கு–மார் படப்–பி–டிப்–பில் இருக்–கும் ‘ராஜ்– இறு–கு–மதிா–க்–ரகட்ட ா’ படத்–துக்கு பிறகு கன்–னட திரை–யு–ல–

கின் கமர்–ஷிய – ல் இயக்–குந – ர்–களி – ல் ஒரு–வ– ரான பவன் வாடே–யா–ரின் டைரக்–‌ –ஷ–னில் புனித் ராஜ்–கு–மார் நடிப்–பார் என பேச்சு அடிப்–பட்–டது. இந்–நி–லை–யில் யாரும் எதிர்–பா–ராத வகை–யில் ம�ொத்த திரை–யுல – கு – க்–கும் ஆச்– சர்–யத்தை க�ொடுத்–தி–ருக்–கி–றார் புனித். யெஸ். இந்த டிசம்–பர் மாதத்–தில் அவ– ரது புதுப் பட ஷூட்–டிங் த�ொடங்–குகி – ற – து. இந்–தப் படத்தை இயக்–கப் ப�ோகி–ற–வர் ஹர்ஷா. கன்–னட திரை–யுல – கி – ன் முக்–கிய – ம – ான நடன இயக்–குந – ர்–களி – ல் இவ–ரும் ஒரு–வர். ஆனால், இதற்கு முன் படங்–களை இவர் இயக்–கி–ய–தில்லை. ஆக, டைரக்–ஷ – னி ‌ – ல் இது–தான் ஹர்–ஷா–வுக்கு முதல் படம்.

டைட்–டில் ச�ொல்–லும் கதை

லை–யா–ளப் படங்–களை த�ொடர்ச்–சிய – ாக பார்ப்–ப– வர்–க–ளுக்கு நன்கு அறி–மு–க–மான பெயர், ரன்– ஜித் சங்–கர். ‘பேசன்–ஜர்’, ‘அர்–ஜு–னன் சாட்–சி’, ‘மாலி ஆன்ட்டி ராக்ஸ்’, ‘வர்–ஷம் சு சூ சுதி வத்–மே–கம்’, ‘புண்–யா–லன் அகர்–பத்–திஸ்’ என எல்–லாமே வெவ்– வேறு ஜானர்–களி – ல் இவ–ரால் எடுக்–கப்–பட்ட படங்–கள். அனைத்–துமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்–தவை. தரத்–தி–லும் ச�ோடை ப�ோகா–தவை. இதை–யெல்–லாம் தூக்கி சாப்–பி–டும் வகை–யில் அமைந்–தது, லேட்–டஸ்ட் ஆக இவ–ரது டைரக்–‌–ஷ– னில் வெளி–வந்த ‘ப்ரீத்–தம்’. ஹாரர் காமெ–டி–யான இந்–தப் படம், சற்றே தாழ்ந்–தி–ருந்த க�ோபன் குஞ்– சாக்–கா–வின் மார்–க்கெட்டை தூக்கி நிறுத்–தி–யி–ருக்– கி–றது. இப்–ப–டத்தை ரன்–ஜித் சங்–க–ரும், க�ோபன்

18

இந்தி ‘ஓ மை காட்’ - தெலுங்கு ‘க�ோபாலா க�ோபா– ல ா’ - படத்– தி ன் கன்– ன ட ரீமேக் ஆன ‘முகுந்தா முரா–ரி’ கடந்த மாதம் சுதீப், உபேந்– தி ரா நடிப்– பி ல் வெளி– ய ாகி பம்–பர் ஹிட் அடித்–தி–ருக்–கி–றது. இதன் தயா–ரிப்–பா–ளர்–க–ளான எம்.என்.குமார், ஜெய தேவி ஆகி–ய�ோர்–தான் புனித் ராஜ்– கு – ம ா– ரி ன் புது ப்ரா– ஜெ க்ட்டை தயா–ரிக்–கி–றார்–கள். எல்–லாம் சரி... என்ன கதை என்று கேட்–கி–றீர்–களா? விஷால் நடிப்–பில் ஹரி இயக்–கத்–தில் வெளி–வந்த ‘பூஜை’ நினை–வில் இருக்–கி–றதா? இந்த தமிழ்ப் படத்–தின் கன்–னட ரீமேக்–கில்– தான் அடுத்–த–தாக புனித் நடிக்–கி–றார். ஹர்ஷா இப்–ப–டத்–தை–தான் இயக்–கு–கி–றார்! 

வெள்ளி மலர் 2.12.2016

குஞ்–சாக்–கா–வும் இணைந்து தயா–ரித்–திரு – ந்–தார்–கள். ஒரு மெகா ஹிட்–டுக்கு பிறகு என்ன நடக்–கும�ோ அது–வே–தான் இப்–ப�ோ–தும் அரங்–கே–றி–யி–ருக்–கி–றது. யெஸ். ரன்–ஜித் சங்–கர் தன் அடுத்–தப் படத்தை சில நாட்–க–ளுக்கு முன் அறி–வித்–தி–ருக்–கி–றார். இந்த முறை ர�ொமான்ஸ் ஜானரை ஒரு கை பார்க்–கப் ப�ோகி– ற ா– ர ாம். இந்– த ப் படத்– தை – யு ம் க�ோபன் குஞ்– ச ாக்– க ா– வு ம், இவ– ரு ம் இணைந்து தயா– ரி க் –கி–றார்–கள். படத்–தின் பெயர் ‘ராமன்டே ஈடன்–த�ோட்–டம்’. அதா–வது ராம–னின் ஈடன் த�ோட்–டம். த லை ப் – பி – ல ே யே கதையை ஆ ர ம் – பி க் – கிறார்கள்! 


ஜூனி–யர் என்–டி–ஆ–ரின் இயக்–கு–நர்–களை அப–க–ரிக்–கும் அல்லு அர்–ஜுன்

கு

ழ ப் – ப ம ா அ ல் – ல து உ று – மீ – னு க் – க ா க காத்–தி–ருக்–கும் க�ொக்–கின் நிலையா? தெரி–யாது. ம�ொத்–தத்–தில் எந்–தப் படத்–தி–லும் கமிட் ஆகா– ம ல் இருக்– கி – ற ார் ஜூனி– ய ர் என்– டி – ஆர். ‘டெம்–பர்’, ‘நானாக்கு ப்ரே–மத்–த�ோ’, ‘ஜனதா கேரேஜ்’ என ஹாட்–ரிக் வெற்–றியை தற்–சம – ய – ம் அவர் சுவைத்து வரு–கி–றார். குறிப்–பாக ‘ஜனதா கேரேஜ்’ ரூபாய் நூறு ப்ளஸ் க�ோடி வசூலை கடந்து சாதனை புரிந்–தி–ருக்–கி–றது. எனவே அடுத்து, தான் நடிக்–கும் படம் இந்த வெற்–றியை தக்க வைப்–ப–தாக இருக்க வேண்–டும் என மெனக்–கெ –டு–கி –றார். இத– ன ா– ல ேயே கதை ச�ொல்ல வரும் இயக்–கு–நர்–க–ளுக்கு உரிய பதிலை தரா–மல் அமைதி காக்–கி–றார். இந்த அவ–கா–சத்–தை–தான் தனக்கு சாத–க–மாக அல்லு அர்–ஜுன் பயன்–ப–டுத்–திக் க�ொள்–கி–றார் என ஒன்–றி–ணைந்த ஆந்–தி–ரா–வில் கிசு–கி–சுக்–கி–றார்–கள். இதற்கு ஆதா–ர–மாக அவர்–கள் முன்–வைக்–கும் பட்–டிய – ல், அப்–படி இருக்–கும�ோ என்ற சந்–தேகத்தை – எழுப்–பு–கி–றது. விஷ–யம் இது–தான். ‘நம்– ம ’ லிங்– கு – ச ாமி ஜூனி– ய ர் என்– டி – ஆ ரை சந்–தித்து ஒரு கதையை ச�ொன்–னா–ராம். லைன்

பிடித்து விடவே அதை டெவ–லப் செய்ய ச�ொல்–லி– யி–ருக்–கி–றார். இந்த விஷ–யம் வெளியே கசிந்–த–தும் லிங்–கு–சா–மியை உட–ன–டி–யாக அழைத்து அல்லு அர்–ஜுன் கால்–ஷீட் க�ொடுத்–து–விட்–டா–ராம். ஆக, இப்–ப�ோது லிங்கு கவ–னம் செலுத்–து–வது அல்லு அர்–ஜுன் படத்–தில்–தான். ப�ோலவே தெலுங்கு சினி–மா–வின் ம�ோஸ்ட் வான்–டட் கதா–சி–ரி–ய–ராக இருக்–கும் வக்–கத்–தம் வம்– சிக்கு, இயக்–குந – ர– ா–கும் ஆசை துளிர்–விட்–டிரு – க்–கிற – து. ஜூனி–யர் என்–டி–ஆரை த�ொடர்பு க�ொண்டு ஒன் லைனை ச�ொல்–லி–யி–ருக்–கி–றார். ‘நல்லா இருக்கு. டெவ–லப் பண்–ணுங்க...’ என அவர் பச்–சைக் க�ொடி காட்ட... இவ்–விஷ – ய – ம் அல்லு அர்–ஜுன் செவி–களை எட்ட... ‘2017 ஏப்–ரல் முதல் நாம ஷூட்–டிங் ப�ோக– லாமா?’ என ஒரே தூண்–டிலி – ல் வக்–கத்–தம் வம்–சியை தன் பக்–கம் ஈர்த்து விட்–டா–ராம். இதை– யெ ல்– ல ாம் கேட்– க – வு ம், வாசிக்– க – வு ம் நன்–றா–கத்–தான் இருக்–கி–றது. ஆனால், ஸ்கி–ரிப்ட் உண்–மையா? யாம–றி–ய�ோம் பரா–ப–ரமே.

த�ொகுப்பு :

கே.என்.சிவ–ரா–மன்

2.12.2016 வெள்ளி மலர்

19


ì£ôƒè®

D L ð£ì£L WOO « ™½ ñ

ஊர்களும்

சினிமா கதைகளும்!

ய�ோ

சிக்–கா–மல் சட்–டென்று ச�ொல்–லுங்–கள். ஊர் / நக–ரம் சார்ந்து எடுக்–கப்–பட்ட படங்–க–ளில் எது நினை–வுக்கு வரு–கி–றது? பதிலை பிறகு பார்க்–க–லாம். இப்–ப�ோது ‘கஹா–னி’ இந்–திப் படத்–துக்கு வர–லாம். 2012ல் வெளி–யான இந்–தப் படம் பல வகை–க–ளில் இந்தி(ய) சினி–மா–வில் முக்–கி–ய–மா–னது. குள�ோ–ப–லை–சே–ஷ–னுக்கு முன்–பும் பின்–பும் இந்–திய திரை–யு–லகை ஆள்–வது ஆண்–கள்–தான். ஆண் மைய கதை–யம்–சம் உள்ள படங்–கள்–தான். இதை மீறி பெண்–களை மையப்–படு – த்தி படங்–கள் எடுக்–கப்–பட்– டி–ருக்–கின்–றன. என்–றா–லும் அவை ஆண்–க–ளால் பாதிக்–கப்–பட்ட பெண்–ணின் சரி–தை–யாக இருக்–கும். அல்–லது வில்–லன்–க–ளால் பாலி–யல் வல்–லு–ற–வு–க–ளுக்கு ஆளாகி தன்னை சிதைத்–த–வர்–

20

வெள்ளி மலர் 2.12.2016

களை அப்–பெண் பழி–வாங்–குவ – த – ாக முடி–யும். இவை இரண்–டுக்–கும் அப்–பால் உரு–வான அபூர்–வ–மான சினி–மாக் –க–ளி–லும் குறைந்–த–பட்–சம் காதல் காட்–சி–க–ளா–வது இடம்–பெற்–றி–ருக்– கும். இந்த க்ளி– ஷேவை முதன் முத–லில் உடைத்த படம் ‘கஹா–னி–’–தான். காணா–மல் ப�ோன தன் கண– வனை தேடி கர்ப்–பிணி மனைவி க�ொல்– க த்– த ா– வு க்கு வரு– கி – ற ாள். காவல் நிலை–யத்–தில் புகார் தரு– கி–றாள். தானே தேட–வும் த�ொடங்– கு– கி – ற ாள். நண்– ப – ன ாக அவள் வாழ்க்–கையி – ல் நுழை–யும் ப�ோலீஸ் கான்ஸ்–ட–புள், தன்–னால் முடிந்த அள–வுக்கு உத–வு–கி–றான். க்ளை–மாக்–ஸில்–தான் தெரிய வரு– கி – ற து... தன் கண– வ னை க�ொன்–ற–வர்–களை பழி–வாங்–கவே அவள் க�ொல்– க த்– த ா– வு க்கு வந்– தி– ரு க்– கி – ற ாள் என்– ப – து ம், கண– வன் இறந்து சில ஆண்– டு – க ள் ஆகின்– ற ன... நிஜத்– தி ல் அவள் கர்ப்–பி–ணியே அல்ல என்–ப–தும். வெகு– ஜ ன த்ரில்– ல ர் நாவ– லுக்கு உரிய இந்–தக் கதையை, கமர்–ஷி–யல் அம்–சங்–கள் கலக்–கா– மல் மெச்–சூர்ட் ஆக உரு–வாக்–கி– யி–ருப்–பார்–கள். அத– ன ால்– த ான் ‘கஹா– னி ’ விமர்–சக – ர்–கள – ா–லும் ரசி–கர்–கள – ா–லும் ஒரு–சேர பாராட்–டப்–பட்–டது. மட்–டு– மல்ல நூறு ப்ளஸ் க�ோடி ரூபாயை வசூ–லித்து சாத–னை–யும் புரிந்–தது. இந்த கலெக்–‌–ஷன் ரிப்–ப�ோர்ட்– தான் முக்–கி–யம். ஏனெ– னி ல் இன்று இரண்டு டஜ–னுக்–கும் மேற்–பட்ட ‘உறுப்–பி– னர்–க–ளை’ பெற்–றி–ருக்–கும் இந்த நூறு ப்ளஸ் க�ோடி ரூபாய் க்ளப்– பில், அன்று, 2012ல், ஐந்–துக்–கும் குறை–வா–னர்–கள்–தான் மெம்–பர்ஸ் ஆக இருந்–தார்–கள். ஷாருக் கான், அமீர் கான், சல்–மான் கான்... என கான்–கள் மட்–டுமே மூச்–சு–வாங்க ஓடி இந்த சங்–கத்–தில் மெம்–பர்–ஷிப் வாங்–கி–யி–ருந்–தார்–கள். இந்த சூழ–லில் ல�ோ பட்–ஜெட்– டில் எடுக்–கப்–பட்ட ‘கஹா–னி’ - அது– வும் எந்த முன்–னணி ஹீர�ோ–வும் ஒரு காட்–சியி – லு – ம் த�ோன்–றா–தப – �ோது - கேஷூ–வ–லாக நடந்–த–படி ஆயுட்– கால உறுப்– பி – ன ர் அட்– டையை


பெற்–றது. ஆணா–திக்க இந்தி(ய) திரை–யுல – கு – க்கு விழுந்த முதல் அடி இது. கதை–யின் நாய–கி–யாக ‘கஹா–னி–’–யில் நடித்–தி– ருந்த வித்யா பாலன் ஓவர் நைட்–டில் டாப் ம�ோஸ்ட் நடி–க–ராக உயர்ந்–தார். ஏற்–க–னவே சில்க் ஸ்மி–தா– வின் வாழ்க்–கையை அடி–ய�ொற்றி எடுக்–கப்–பட்–டி– ருந்த ‘டர்ட்டி பிக்–சர்’, அதற்கு முன்பு வெளி–வந்த ‘இஷ்–கி–யா’, ‘ந�ோ ஒன் கில்ட் ஜெசி–கா’ உள்–ளிட்ட படங்–கள் அவர் மீது வெளிச்– சத்தை பாய்ச்–சி–யி–ருந்–தா–லும் கம்– பீ – ர – ம ாக சிம்– ம ா– ச – ன த்– தி ல் வித்யா பாலனை அமர வைத்– த து ‘கஹா–னி–’–தான். ப�ோதாதா? உள்–ளத்–தில் தெளி– வு–டன் இருந்த இயக்–கு–நர்–கள் அடுத் த–டுத்து பெண்–களை மையப்–ப–டுத்தி படம் எடுக்க ஆரம்–பித்–தார்–கள். ப்ரி– யங்கா ச�ோப்ரா, தீபிகா படு–க�ோன், ச�ோன ம் க பூ ர் . . . எ ன க்ளா – ம ர் Dollகளாக மட்–டுமே அறி–யப்–பட்–டவ – ர்–க– சுஜாய் ளுக்கு இதன் பிறகே ‘எங்– க – ளு க்கு இன்– ன�ொ ரு பேரு இருக்கு...’ என தலையை உயர்த்தி கர்–ஜிக்க வாய்ப்பு கிடைத்–தது. இதற்–கெல்–லாம் பிள்–ளை–யார் சுழி ப�ோட்ட ‘கஹா–னி’ ஏன் ரீமேக் செய்–யப்–பட்–ட–ப�ோது த�ோற்–றது? இத்– த – ன ைக்– கு ம் யூனி– வ ர்– ச ல் சப்– ஜெ க்ட். தெலுங்–கில் ‘அனா–மி–கா’ / தமி–ழில் ‘நீ எங்கே

என் அன்–பே’ என ஒரே நேரத்–தில் இந்த ரீமேக்கை டைரக்ட் செய்த சேகர் கமுலா, சாமான்–ய–ரல்ல. படா கில்–லாடி. மசாலா கலக்–கா–மல் ஃபீல் குட் மூவி– களை த�ொடர்ச்–சிய – ாக எடுத்து வரு–பவ – ர். ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் இஸ் பியூட்–டிஃபு – ல்’, ‘ஆனந்த்’ என இவர் இயக்–கிய தெலுங்–குப் படங்–கள் வசூ–லி–லும் தரத்–தி–லும் ச�ோடை ப�ோகா–தவை. ப�ோதும் ப�ோதா–த–தற்கு வித்யா பால–னின் வேடத்தை நயன்– த ாரா இவ்– வி ரு ம�ொழி–க–ளி–லும் ஏற்–றி–ருந்–தார். தனது பெஸ்ட் பெர்ஃ– ப ார்– மெ ன்– ஸ ை– யு ம் வழங்–கி–யி–ருந்–தார். என்– ற ா– லு ம் வர– ல ாறு காணாத த�ோல்–வியை ஏன் ‘அனா–மி–கா’ / ‘நீ எங்கே என் அன்–பே’ சந்–தித்–தது? இதற்–கான விடை–யில்–தான் அடங்– கி–யி–ருக்–கி–றது இக்–கட்–டு–ரை–யின் முத– லில் கேட்– க ப்– ப ட்ட வினா– வு க்– க ான பதில். க�ொ ல் – க த்தா எ ன் – னு ம் ந க – ரத்தை / ஊரை அப்– பு – ற ப்– ப – டு த்தி க�ோஷ் விட்டு ‘கஹா– னி – ’ – யி ன் கதையை / காட்–சியை ய�ோசிக்–கவே முடி–யாது. அந்த நக– ரத்–தின் தன்மை, மூச்சு முட்–டும் மனி–தர்–க–ளின் நட–மாட்–டம், பேருந்–தி–லும் மின்–சார ரயி–லி–லும் நிரம்பி வழி–யும் வியர்–வை–யின் மணம், சைக்–கிள் ரிக்‌ ஷா, டிராம் வண்டி, மார்க்–சிய கருத்–தி–யல்–கள், துர்க்கா பூஜை, எல்.ஐ.சி. ஏஜென்ட்... என கதை மாந்–தர்–கள் மட்–டு–மல்ல; அந்–தந்த கேரக்–டர்–கள்

2.12.2016 வெள்ளி மலர்

21


புழங்–கும் இடங்–களு – ம் வெளி–களு – ம் வாக–னங்–களு – ம் கட்–டி–டங்–க–ளும் கூட முக்–கி–ய–மா–னவை. சுருக்–க–மாக ச�ொல்–வ–தென்–றால் க�ொல்–கத்–தாவை மைய–மாக வைத்து எடுக்–கப்– பட்–ட–தால்–தான் ‘கஹா–னி–’–யின் கதை சக–ல–ரை–யும் வசீ–கரி – த்–தது. ஏனெ–னில் அந்த நக–ரத்–தால் மட்–டுமே இந்–தக் கதையை / காட்–சி–களை / கேரக்–டர்–களை பிர–ச–விக்க முடி–யும். ஏன் தெரி–யுமா? கதைப்–படி க�ொல்–கத்–தா–வுக்கு முதல் முறை–யாக வித்யா பாலன் நுழை–கிற – ார். படத்–தின் முதல் காட்சி / ஃப்ரேம் இது–தான். எனவே க�ொல்–கத்–தா–வின் ஒவ்– வ�ொரு இட–மும் அவ–ருக்கு புதுசு. ஒவ்–வ�ொரு இடத்– துக்கு அவர் செல்–லும்–ப�ோ–தும் க�ொல்–கத்–தா–வின் ஒவ்–வ�ொரு க�ோணத்தை அறிந்து க�ொள்–கி–றார். அதா–வது வித்யா பாலன் வழி–யாக பார்–வை– யா–ளர்–க–ளுக்–கும் இன்ச் பை இன்ச் ஆக இயக்– கு– ந ர் அந்த நக– ர த்தை, அதன் வாழ்– வி – ய லை, கேரக்–டர்–களை அறி–மு–கப்–ப–டுத்–து–கி–றார். இதன் கார– ண – ம ா– க த்– த ான் க்ளை– ம ாக்– ஸி ல் வித்யா பால–னின் செய–லைக் கண்டு மற்ற கதா– பாத்–தி–ரங்–கள் எந்–த–வ–கை–யான அதிர்ச்–சியை / ஆச்–சர்–யத்தை அடைந்–தார்–கள�ோ அதே உணர்வை அதே–நே–ரத்–தில் பார்–வை– யா–ள–னும் அடைந்–தான். சேகர் கமுலா ம�ொத்–த–மாக த�ோற்ற இடம் ‘கஹா–னி’– யி – ன் கதையை வேற�ொரு நக–ரத்–தில் / ஊரில் ப�ொருத்–திய – து – த – ான். இது–ப�ோன்று செய்–யும்– ப�ோது அந்–தந்த நக–ரம் / ஊர் சார்ந்த பண்–பாட்டை / கலா–சா–ரத்தை காட்–சிக – ளி – ல் வெளிப்–படு – த்த வேண்– டும். அப்–ப�ோ–து–தான் கேரக்–டர் உயிர்–பெ–றும். இதற்கு மாறாக தெலுங்கு / தமிழ் பார்–வை– யா–ளர்–க–ளுக்கு நன்கு பழக்–க–மான நக–ரத்–துக்–குள் நயன்–தாரா நுழைந்–தார். எனவே ரசி–கர்–க–ளுக்கு எந்–த–வி–த–மான ஆச்–சர்–யத்–தை–யும் / அதிர்ச்–சி–யை– யும் க்ளை–மாக்ஸ் ஏற்–ப–டுத்–த–வில்லை. குழப்–ப–மாக இருக்–கி–றதா? எளி–மை–யான உதா–ர–ணத்தை பார்ப்–ப�ோம். மணி–ரத்–னம் இயக்–கத்–தில் கமல் நடித்த ‘நாய–கன்’ படத்–தின் கதையை, காட்–சிக – ளை அப்–படி – யே தூக்கி சென்–னை–யில் - சென்னை துறை–மு–கம் சார்ந்த பகு–தி–யில் - ப�ொருத்த முடி–யுமா? மும்பை என்– னும் நக–ரத்–தின் முகம்–தானே அந்–தப் படத்தை

22

வெள்ளி மலர் 2.12.2016

உயர்த்–திப் பிடிக்–கி–றது! தெலுங்கு ‘ஒக்– க – டு – ’ – வி ல் ஹைத– ர ா– ப ாத்– தி ன் சார்–மி–னார் இடம்–பெற்–றி–ருக்–கும். இந்–தப் படத்தை தமி–ழில் ‘கில்–லி–’–யாக ரீமேக் செய்த தரணி, சார்– மி–னாரை லைட் அவுஸ் ஆக மாற்–றி–யி–ருப்–பார். எனவே தமி–ழில் இடை–வே–ளைக்கு பிற–கான காட்– சி–கள் அனைத்–தும் திரு–வல்–லிக்–கேணி சார்ந்து மாற்–றப்–பட்–டி–ருக்–கும். இவ்–வள – வு நீள–மாக பில்–டப் தர ஒரே கார–ணம் சுஜாய் க�ோஷ் எவ்– வ – ள வு முக்– கி – ய – ம ான இயக்–கு–நர் என்று புரிய வைக்–கத்–தான். 2003ல் ‘ஜன்–கர் பீட்ஸ்’ படம் வழியே இயக்– கு–ந–ராக அறி–மு–க–மான இவர், இந்த 13 ஆண்– டு–க–ளில் வெறும் ஐந்து படங்–க–ளைத்–தான் எழுதி இயக்–கி–யி–ருக்–கி–றார். இதில் கடைசி இரண்டு படங்–கள் ப்ளாக்–பஸ்– டர். இதி–லும் இவ–ரது டைரக்––‌ஷ–னில் வெளி–வந்த ஐந்–தா–வது படம், முழு–நீள சித்–தி–ர–மல்ல. ஷார்ட் ஃபிலிம். என்–றா–லும் சர்–வ–தேச அள–வில் பெரும் அதிர்வை ஏற்–ப–டுத்–தி–யது. அது–தான் சென்ற ஆண்டு ரிலீ–சான ‘அகல்–யா’. இது–ப�ோக, தான் இயக்–கா–மல் நான்கு படங்– களை தயா–ரிக்க மட்–டும் செய்–தி–ருக்–கி–றார். அதில் ஒன்று, இந்த ஆண்டு த�ொடக்–கத்–தில் வெளி–வந்த ‘டீன்’. இவை அனைத்– தை – யு ம் விட முக்– கி – ய – ம ான குறிப்பு சுஜாய் க�ோஷ் டைரக்–ஷ ‌– னி – ல் வெளி–வந்த முதல் மூன்று படங்–களு – ம் - ‘ஜன்–கர் பீட்ஸ்’; ‘ஹ�ோம் டெலி– வரி: ஆப்கோ... கர் டக்’; ‘அலா–தீன்’ - படு–த�ோல்வி அடைந்–தவை! நான்–கா–வ–தாக இவர் இயக்–கிய ‘கஹா–னி–’–தான் முதல் வெற்றி. இப்–ப–டி–ய�ொரு கரி–யர் கிராஃப் க�ொண்–ட–வரை எப்–படி சிறந்த இயக்–குந – ர்–களி – ல் ஒரு–வர– ாக குறிப்–பிட முடி–யும்? கார–ணம் ஒன்றே ஒன்–று–தான். அது க�ொல்– க த்தா மீது இவர் க�ொண்– டி – ரு க்– கு ம் காதல். பெயர் உணர்த்–து–வது ப�ோல் சுஜாய் க�ோஷ் வங்–கா–ளத்தை சேர்ந்–த–வர்–தான். பிறந்–தது, வளர்ந்– தது, படித்–தது எல்–லாம் க�ொல்–கத்–தா–வில்–தான்.


அப்பா டாக்ஸி டிரை–வர். அம்மா, டாக்–டர். முற்– றி – லு ம் வேறான குடும்– ப ம். அப்– ப ா– வு – ட ன் இருக்–கை–யில் வங்–காள காமிக்ஸ்–களை படிப்–பார். அம்–மா–வு–டன் இருக்–கை–யில் எனிட் ப்ளைட்–டன், டின் டின் மாதி–ரி–யான ஆங்–கில சிறு–வர் நாவல்– களை வாசிப்–பார். வளர்ந்–தவு – ட – ன் அதுவே ஆங்–கில வெகு–ஜன நாவல்–க–ளை–யும், வங்–காள இலக்–கிய புதினங்–க–ளை–யும் படிக்–கும் கட்–டத்–துக்கு அழைத்– துச் சென்–றது. குறிப்–பாக சத்–யஜி – த்–ரேவி – ன் ‘ஃபெலு– டா’ பாகங்–களை பல–முறை வாசித்–தி–ருக்–கி–றார்; இப்–ப�ோ–தும் படித்து வரு–கி–றார். அப்பா டாக்ஸி டிரை–வர் என்–ப–தால் நேரம் கிடைக்–கும்–ப�ோ–தெல்–லாம் அம்–பா–சிட – ர் காரின் முன் இருக்–கையி – ல் அமர்ந்து க�ொள்–வா–ராம். க�ொல்–கத்– தா–வின் அனைத்து இண்டு இடுக்–கும் இவ–ருக்கு பரீட்–சய – – மா–னது இப்–ப–டி–தான். இந்த ஆளு–மைத் திறந்– தான் இவரை தலை–சி–றந்த இயக்–கு–நர்–க–ளில் ஒரு–வ–ராக உயர்த்–தி–யி–ருக்–கி–றது. ‘கஹா–னி’ குறித்து விரி– வா–கவே பார்த்–து–விட்–ட�ோம். தனக்கு முன் பின் அறி– மு–க–மில்–லாத க�ொல்–கத்தா நக– ர த்– து க்– கு ள் நுழைந்து எப்–படி வித்யா பாலன் தன் திட்– டத்தை நிறை– வே ற்– று – கி–றார் என்–ப–தை–யும். இந்– த ப் படத்– தி ன் நாய– கிக்கு அந்த நக–ரம் புதுசு. எனவே ஒவ்–வ�ொரு இடத்–தை– யும், கட்–டிட – த்–தையு – ம் அவ–ரது கண்–கள் விரிந்–த–படி பார்க்– கும் அல–சும். நிதா–னம – ா–கவே நடப்– ப ார். கர்ப்– பி – ணி – ய ாக அவர் நடிப்–பது இதற்கு வலு சேர்க்–கும். ஆனால் சுஜாய் க�ோஷ் தயா–ரிப்–பில், அமி–தாப் நடிப்–பில் வெளி–வந்த ‘டீன்’ இதற்கு நேர்–மா–றாக இருக்–கும். ஏனெ–னில் கதைப்–படி அமி–தாப் க�ொல்–கத்தா நக–ரத்–தி–லேயே ஆண்–டுக்–கண – க்–கில் வசிப்–பவ – ர். எனவே எந்த இடத்– துக்கு செல்–லும்–ப�ோ–தும் வேக–மாக நடப்–பார். எந்த கட்–டிட – ம் / ப�ொரு–ளையு – ம் உற்–றுப் பார்க்க மாட்–டார். இப்–படி ஒரே–ய�ொரு நக–ரம் / ஊர் ஒவ்–வ�ொ–ரு– வ–ருக்–கும் ஒவ்–வ�ொரு வித–மாக காட்–சி–ய–ளிக்–கி–றது என்–ப–தைத்–தான் தன் படங்–கள் அனைத்–தி–லும் தயா–ரிப்போ இயக்–கம�ோ - உணர்த்தி வரு–கி–றார். இதன் வழி– ய ாக தன் ஊரின் கலா– ச ா– ர த்தை / பண்–பாட்டை / மண்–ணின் மணத்தை அந்–தந்த காலத்–துக்கு ஏற்ப - ஒவ்–வ�ொரு மனி–த–னின் ப�ொரு– ளா–தார வாழ்–விய – ல் பார்–வைக்கு தகுந்–தப – டி - பதிவு செய்து ஆவ–ணப்–ப–டுத்–து–கி–றார். அந்த வகை–யில் ஆறா–வ–தாக இவர் எழுதி,

இயக்கி, தயா–ரித்–தி–ருக்–கும் ‘கஹானி 2: துர்க்கா ராணி சிங்’ பட–மும் க�ொல்–கத்–தாவை மைய–மா–கக் க�ொண்–ட–து–தான். ஆனால் இந்– த ப் படத்– தி ல் க�ொல்– க த்தா நக– ர ம் ஒரு இன்ஸ்–பெக்–ட–ரின் பார்–வை–யில் / நட–மாட்–டத்–தில் பதி–வாகி இருக்–கி–றது. 2012ல் வெளி–யான ‘கஹா–னி–’க்–கும் இதற்–கும் இம்மி அள–வுக்–குக் கூட த�ொடர்–பில்லை. அது வேறு. இது வேறு. இரண்–டி–லும் கதை–யின் நாய–கி–யாக வித்யா பாலன் நடித்–திரு – க்–கிற – ார் என்–பது – ம், இது–வும் த்ரில்–லர் படம்–தான் என்–ப–தும் மட்–டுமே ஒற்–றுமை. ‘கஹா–னி’ வெற்–றிக்கு பிறகு சுஜாய் க�ோஷும், வித்யா பால–னும் சண்–டையி – ட்டு பிரிந்–தார்–கள்... பிரி– யங்கா ச�ோப்–ராவை வைத்து ஒரு படத்தை இயக்–குவ – த – ாக இவர் இருந்– த ார்... என்ன கார– ண த்– தி – ன ால�ோ அது கைவி– ட ப்– ப ட்– ட து... பிறகு ஐஸ்–வர்யா ராயை வைத்து ‘துர்க்கா ராணி சிங்’ படத்– துக்கு பூஜை ப�ோட்–டார்... இந்– நி–லை–யில் ப�ொது இடம் ஒன்– றில் வித்யா பால–னும் சுஜாய் க�ோஷும் இந்த ஆண்டு த�ொடக்–கத்–தில் சந்–தித்–துக் க�ொண்–டார்–கள்... ஈக�ோவை தூக்கி எறிந்–து–விட்டு வித்யா பாலனே நேராக சுஜாய் க�ோஷி–டம் சென்று ‘‘கஹானி 2’ எப்ப ஸ்டார்ட் பண்– ண – ற�ோம்?’ என்று கேட்க... ‘நீங்க கால்–ஷீட் க�ொடுத்–த–துமே...’ என்று சுஜாய் பதி–ல–ளிக்க... ‘அடுத்த மாசமே நான் ஃப்ரீ– த ான்...’ என வித்யா பாலன் ச�ொல்ல... ‘கஹானி 2: துர்க்கா ராணி சிங்’ டேக் ஆஃப் ஆன கதை இது–தான்... ப�ோன்ற டேட்–டாக்–கள் நமக்கு அவ–சிய – மி – ல்லை என்–ப–தால் ஸ்கிப் செய்–து–வி–ட–லாம். உணர வேண்–டி–ய–தும், மன–தில் பதிய வைக்க வேண்–டி–ய–தும் ஒன்றே ஒன்–று–தான். இந்–திப் படங்–களை எடுக்க வட இந்–திய / என். ஆர்.ஐ., கலா–சா–ரங்–கள்–தான் தெரிந்–திரு – க்க வேண்– டும் என்று அவ–சி–ய–மில்லை. சென்–னையை, தூத்– துக்–கு–டியை, ஐத–ரா–பாத்தை, மைசூரை அல்–லது ஏத�ோ ஒரு ஊரை / நக–ரத்தை அறிந்–தி–ருந்–தால் கூட ப�ோதும். அது நீங்–கள் வாழ்ந்து அனு–ப–வித்த / அனு– ப – வி க்– கு ம் ஊர் / நக– ர – ம ாக இருந்– த ால் இன்–னும் சிறப்பு. இதை மைய–மாக வைத்து இதற்–குள் உங்–க– ளுக்கு நன்கு தெரிந்த, நீங்–கள் பார்த்–துப் பழ–கிய கேரக்–டர்–களை நட–மாட விடுங்–கள். அது–ப�ோ–தும். வெற்றி நிச்–ச–யம்.

- கே.என்.சிவ–ரா–மன்

2.12.2016 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 2-12-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

ÍL¬è CA„¬êJù£™

͆´ õL‚°

ñ¼ˆ¶õñ¬ùJ™ Gó‰îó °í‹

º¡ªð™ô£‹ 90 õò¬î ®òõ˜ èÀ‚° Ãì ͆´ õL õó£¶. º¶° á M¿‰¶ 苬ð á¡P ²Á²ÁŠð£è ïìŠð£˜èœ. Ýù£™ ͆´õL â¡Á å¼ ï£œ Ãì Üõ˜èœ ÝvðˆFK‚° ªê¡øF™¬ô. Ýù£™ Þ¡¬øò è£ô è†ìˆF™ 40 õò¬î èì‰î£«ô ͆´ õL õ‰¶ M´Aø¶. ÜF½‹ ªð‡èÀ‚° ͆´õL â¡ð¶ ÜFè Ü÷M™ àœ÷¶. RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ (Cˆî£& Ý»˜«õî£&»ù£Q-&ÞòŸ¬è ñ¼ˆ¶õ‹) ͆´õL‚° ð£ó‹ðKò ÞòŸ¬è ÍL¬è CA„¬ê ÜO‚èŠð´Aø¶. ° î¬ôº¬ø ÜÂðõ‹ I‚è °´‹ðˆF™ Hø‰îõ˜èOù£½‹, 5 ½ ݇´èœ ñ¼ˆ¶õ ð†ìŠð®Š¹ ð®ˆî ñ¼ˆ¶õ˜èOù£™ ñ†´«ñ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. Þƒ° ºöƒè£™ ͆´õL‚° è£óíñ£ù õ½Mö‰î î¬ê, î¬ê èœ

õ½×†ìŠð´Aø¶. ºöƒè£™ ͆´‚° Þ¬ìJô£ù «îŒñ£ù °Áˆªî½‹¹ (Cartilege) õ ÷ ó ª ê Œ ò Š ð ´ A ø ¶ . ͆´èÀ‚° Þ¬ì«òò£ù ð¬ê «ð£¡ø Fóõ‹ (synovial fluid) Yó£‚èŠð´Aø¶. Þîù£™ ͆´õL °íñ£Aø¶. ͆´èœ ðôŠð´ˆîð†´, æK¼ ñ£î CA„¬êJ™ º¿¬ñò£è Gó‰îóñ£è °íñ£Aø¶. Þ´Š¹ õL, 迈¶ õL, 迈¶ Þ´Š¹ ð°FJ™ ãŸð´A¡øù ®v‚ ð™x, ®v‚ è‹Šóê¡, ®v‚ ¹ªó£ô£Šv ÜÁ¬õ CA„¬êJ¡P º¿¬ñò£è °íñ£Aø¶. âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ìõ˜èÀ‚° õ£›ï£O™ e‡´‹ ͆´õL õó£¶. «ñ½‹ âƒè÷¶ CA„¬êJ™ â‰îMî ð‚è M¬÷¾èÀ‹ H¡ M¬÷¾èÀ‹ ãŸð죶. ꘂè¬ó Mò£F, Þ¼îò «è£÷£Á, Þóˆî Ü¿ˆî‹ «ð£¡ø «ï£ŒèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ ܉î ñ¼‰¶èÀì¡

ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶è¬÷»‹ «ê˜ˆ¶ ðò¡ð´ˆîô£‹. âƒè÷¶ CA„¬ê‚° H¡ ñ£®Šð® ãø º®Aø¶. c‡ì Éó‹ ïì‚è º®Aø¶. Þ‰Fò¡ 죌ªô†¬ì ðò¡ð´ˆî º®Aø¶. âƒè÷¶ CA„¬êJ™ ͆´õL º¿¬ñò£è °íñ£A e‡´‹ õ£›ï£O™ õó£ñ™ Ý«ó£‚Aòñ£è ðô ô†ê‚èí‚ è£ùõ˜èœ õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ. ͆´õL ðŸP èõ¬ôŠðì£b˜èœ! RJR ñ¼ˆ¶õñ¬ùèÀ‚° õ£¼ƒèœ..! ÜÁ¬õ CA„¬ê Þ¡P ÞòŸ¬è ÍL¬è CA„¬ê Íô‹ º¿¬ñò£è °í‹ ªðÁƒèœ..! «ñ½‹ MðóƒèÀ‚°:-&

âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô  ²õ£ê «è£÷£Á  ¬êù¬ê†¯v  Üô˜T  Ýv¶ñ£  î¬ôõL  ºöƒè£™ ͆´õL  ®v‚ Hó„C¬ùèœ  º¶°õL  àì™ ð¼ñ¡  ¬î󣌴  °ö‰¬îJ¡¬ñ  «î£™ Üô˜T  ªê£Kò£Cv  è™ô¬ìŠ¹  Íô‹ BSMS, BAMS, BNYS, MD

«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, rjrhospitals@gmail.com

õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17 www.rjrhospitals.com

«ð£¡: 044 - & 4006 4006,4212 4454, ªñ£¬ð™: 80568 55858

T.V.J™ 죂ì˜èœ «ð†® :

嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ 裬ô 9.30 -10.00 êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30 嚪õ£¼ õ£óº‹ Fùº‹ ñ£¬ô Fƒè†Aö¬ñ 3.30 - 4.00 裬ô 9.30 - 10.00

嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ‚Aö¬ñ 裬ô 10.00 - 10.30 Fƒèœ ºî™ ªõœO õ¬ó 裬ô 9.30 - 10.00

«è£òºˆÉ˜ : 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 ñ¶¬ó : 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 F¼„C : 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 «êô‹ : 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 æŘ : 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 ¹¶„«êK : 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 F¼ŠÌ˜ : 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 F‡´‚è™ : 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 F¼ªï™«õL : 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 ñ£˜ˆî£‡ì‹ : 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 °‹ð«è£í‹ : 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 «õÖ˜ : 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 HóF ñ£î‹ ºè£‹ ï¬ìªðÁ‹ ᘠñŸÁ‹ «îF : ñ¶¬ó&1,19, F‡´‚è™&1, F¼ŠÌ˜&2, «è£¬õ&2,17, ß«ó£´&3,17, «êô‹&3, 輘&4,18, F¼„C&4,18, «è£M™ð†®&5, ªï™¬ô&5,19, êƒèó¡«è£M™&6, ªî¡è£C&6, ï£è˜«è£M™&7,20, ñ£˜ˆî£‡ì‹&7,20, Ɉ¶‚°®&8,21, ó£ñï£î¹ó‹&8,21, 裬󂰮&9, ¹¶‚«è£†¬ì&9, ï£èŠð†®ù‹&10, ñ¡ù£˜°®&10, î…ê£×˜&11,22, ñJô£´¶¬ø&11,22, 𣇮„«êK&12,23, M¿Š¹ó‹&12, 23, 装Y¹ó‹--&14, «õÖ˜&15,24, æŘ&15,25, ªðƒèÙ˜&16,25, î˜ñ¹K&16, A¼wíAK&24.

ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹. 24

வெள்ளி மலர் 2.12.2016

Vellimalar  
Vellimalar  

Vellimalar,Weekly,Books

Advertisement