Page 1

5-7-2015 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

புகைப்படத்துறையிலும் விளம்பரத்துறையிலும் அசத்தும்

டி.பட்டம்மாளின் பேத்தி!


2

வசந்தம் 5.7.2015


A

ங்கும்... திலும்... ச்சரிக்கை...

ரேஷ்மா கற்–றுத்–த–ரும் பாடம்

ﮬèèO¡

கி

றங்– க – டி க்– கு ம் கண்– க ள். ர � ோ ஸ் நி ற ம் . சு ண் – டி – ன ா ல் சி வ ப் – ப ா ர் . ஒல்–லி–யான உடல்–வாகு, அந்த சி ன் – ன ப் ப ெண ்ணை ந ெ டு – ந ெ – டு – வெ ன க ா ட் டி – ய து . பதி–னேழு வயது. “ஹேய், பார்க்– கு–றது – க்கு மாலா மாதிரி இருக்– கேடி...” என்று த�ோழி–கள் ஏற்–றி– விட்ட–தால் எந்–நேர – மு – ம் சினிமா கனவு. ப ெ ங் – க – ளூ ர் க ல் – ய ா ண் ந க – ரை ச் ச ே ர்ந ்த அ ந ்த பெண்–ணின் உண்–மைப் பெயரே அது–தானா என்று இன்–று–வரை யாருக்–கும் தெரி–யாது. ஆனால், ‘ரேஷ்–மா’ பிர–பல – ம – ா–னவ – ர்–தான். ஒரு–வேளை அவரை உங்–களுக்கு தெரி–யா–மல் இருக்–க–லாம். ஏனெ–னில் அவர் ‘நடித்–த’ நாற்–ப–துக்–கும் மேற்–பட்ட படங்–களில் ஒன்–று கூ – ட ‘U’ சான்–றி–தழ் பெற்–ற–தில்லை. அத–னால் அவரை நீங்–கள் டி.வி– யி– லு ம் பார்த்– தி – ரு க்க வாய்ப்– பில்லை.

பதி–னைந்து ஆண்–டுக – ளுக்கு முன்பு நீங்–கள் சென்–னைக்கு வந்–தி–ருந்–தால், நக–ரெங்–கும் ஒட்டப்–ப–ட்டிருந்த ப�ோஸ்–டர்– களில் ஒரு–வேளை இவ–ரைப் பார்த்–திரு – க்–கல – ாம். மாந–கர – த்– தின் நுழை–வா–யிலி – லேயே – பரங்–கிம – லை – யி – ல் ஒரு தியேட்டர் உண்டு. அப்–ப�ோ–தெல்–லாம் அந்த தியேட்ட–ரில் வாரா– வா–ரம் ரேஷ்மா ரசி–கர்–கள் அலை–ம�ோ–துவ – ார்–கள். அரங்–கம் ஹவுஸ்ஃ–புல் ஆகி, நின்–று–க�ொண்டே படம் பார்ப்–பார்– கள். பெரும்–பா–லும் மலை–யா–ளம்–தான். சில நேரங்–களில் தமி–ழில் டப்–பிங் செய்து ப�ோடு–வார்–கள். இந்–தப் படத்–துக்கு எல்–லாம் ம�ொழியா முக்–கி–யம்? பார்த்–தாலே புரி–யும். சினிமா நடிகை ஆக– வே ண்– டு ம் என்– கி ற லட்– சி – ய ம் மட்டும்–தான் ரேஷ்–மா–வுக்கு இருந்–தது. ஆவ–தற்கு என்ன தகுதி வேண்–டும், யாரை அணுக வேண்–டும் எது–வுமே தெரி–யாது. பெங்–க–ளூ–ரில் இருந்த பிர–பல நடி–கர்–களின் வீட்டுக்கு முன்–பாக ப�ோய் நிற்–பார். காரில் ப�ோகும்–ப�ோ–தும், வரும்– ப�ோ–தும் யதேச்–சை–யாக அந்த ஹீர�ோ பார்த்து, “இந்–தப் பெண் அழ–காக இருக்–கிற – ாளே, நம்ம படத்–தில் ஹீர�ோ–யின் ஆக்–கிட – ல – ா–மே?– ” என்று முடி–வெடு – ப்–பார்–கள் என நினைப்பு. செக்–யூரி – ட்டி–கள், இவரை விரட்டி விரட்டி அடிப்–பார்–கள். அடுத்து சில சினிமா கம்–பெ–னி–களின் முக–வ–ரியை எப்–ப–டிய�ோ பெற்று, ஒவ்–வ�ொரு அலு–வ–ல–க–மாக படி–யேறி இறங்–கி–னார். சினி–மா–வின் இன்–ன�ொரு முகம் தெரிந்–தது. யார�ோ பரி–தா–பப்–பட்டு ச�ொன்–னார்–கள். “இங்– கெ ல்– ல ாம் உனக்கு சான்ஸே கிடைக்– க ாது. நடிக்க வைக்–கி–றேன்னு ச�ொல்லி, அதைத் தவிர்த்து மற்ற எல்– ல ாத்– துக்– கும் பயன்–ப–டு த்–தி ப்–பா–னுங்க. மைசூர்லே நிறைய ஷூட்டிங் நடக்–கும். அங்கே ப�ோய் ட்ரை பண்ணு. துணை நடி–கை–யா–வா–வது நடிக்–க–லாம்...” மைசூ–ரில்–தான் அப்–ப�ோ–தெல்–லாம் நிறைய தமிழ்ப்– ப–டங்–களின் படப்–பி–டிப்பு நடந்–து க�ொண்–டி–ருந்–தது. படப்– பி–டிப்பு நடக்–கும் இடத்–துக்–குப் ப�ோய் வேடிக்கை பார்ப்– பார். படப்–பி–டிப்–புக் குழு–வில் இருக்–கும் யாரைப் பார்த்– தா–லும், “அண்ணா, நான் நல்லா நடிப்–பேண்ணா. உங்க படத்–துலே நடிக்க வைங்–கண்ணா...” என்று கெஞ்–சு–வார். குறைந்–தது ஐநூறு பேரி–ட–மா–வது மன்–றா–டி–யி–ருப்–பார். சில பேர் திட்டி அனுப்பி விடு–வார்–கள். சில பேர் ஜ�ொள்ளு விடு–வார்–கள். சிலர் வேறு ந�ோக்–கத்–துக்–காக அழைப்–பார்–கள். ஆனால் ஒரே ஒரு படத்–தில் கூட கூட்டத்–த�ோடு கூட்ட–மாக நிற்–கும் வாய்ப்பு ரேஷ்–மா–வுக்கு கிடைக்–க–வே–யில்லை. ஒரு–நாள் -

5.7.2015 வசந்தம்

3


ஏத�ோ மலை– ய ாள சினிமா படப்– பி – டி ப்பு. ம லை – ய ா – ள த் – தி ன் பெரிய நடி– க ர் நடித்– து க�ொண்– டி – ரு ந்– தா ர். கக்– கத்–தில் பையை அமுக்– கிக் க�ொண்டு துணை நடி– க ர்– க ளை அதி– க ா– ர – மாக ஆணை– யி ட்டுக் க�ொண்– டி – ரு ந்த ஒரு– வ – னை ப் ப ா ர் த் – தா ர் ர ேஷ்மா . வ ழ க் – க – மாக எல்– ல ா– ரி – ட – மு ம் கே ட் – ப – தை ப் ப� ோ ல அவ–னிட – மு – ம் வாய்ப்பை கேட்டார். ஏற இறங்–கப் பார்த்–தான். கண்–களில் திருட்டுத்– த – ன ம் டால– டித்–தது. “இந்– த ப் படத்– து லே சான்ஸ் இல்லை. ஆனா, வேற ஒரு படத்– து க்கு ஹீர�ோ–யின் தேவைப்–ப– டுது. கேர–ளாவி – லே ஷூட்டிங். அஞ்சே அஞ்சு நாள் நடிச்–சிக் க�ொடுத்தா ப�ோதும்...” விவ– ர ம் புரி– ய ாத ரேஷ்மா, “ர�ொம்ப தேங்க்ஸ்ணா...” என்று நன்–றி–யு–ணர்ச்–சி–யில் நா தழு–த–ழுத்–தார். “இனிமே அண்– ணா ன்னு கூப்– பி – ட ாத. மாமான்னு கூப்– பி – ட – ணு ம். நைட்டு வந்து பாரு...” ச�ொன்–ன–வன், தான் தங்–கி–யி–ருந்த லாட்ஜ் முக–வ–ரியை எழு–திக் க�ொடுத்–தான். ரேஷ்மா, மீள முடி–யாத புதை–கு–ழி–யில் விழுந்த நாள் அன்றுதான். அவன் ச�ொன்ன படத்–துக்–காக கேரளா ப� ோ ன ா ர் . ஐ ந் து நா ட் – க ள் க ா ல் – ஷீ ட் . ஆனால், மூன்றே நாட்–களில் ம�ொத்த படப்– பி–டிப்–பை–யும் நடத்தி முடித்–து–விட்டார்–கள். கேம–ராமே – ன், டைரக்–டர் என்–றெல்–லாம் ஒரு படத்–துக்கு தேவை–யான அத்–தனை பேரும் இருந்–தார்–கள். ஆனால், காஸ்ட்– யூ – ம – ரு க்கு மட்டும் வேலையே இல்லை. முதல் நாள் நடிக்–கும்–ப�ோது ரேஷ்–மா–வுக்கு அழு–கை–யாக வந்–தது. மறு–நா–ளில் இருந்து சக–ஜ–மா–னார். சக–ஜ–மாக்–கப்–பட்டார். தயா– ரி ப்– ப ா– ள – ரு க்– கு ம், இயக்– கு – ந – ரு க்– கும் பர– ம – தி – ரு ப்தி. சம்– ப – ளத ்தை கவ– ரி ல் க�ொடுத்–தார்–கள். பிரித்–துப் பார்த்–தார். ஒரு லட்ச ரூபாய். இது–வரை ரேஷ்மா, கன–வில் கூட நினைத்–துப் பார்த்–தி–ராத த�ொகை... “ஷகிலா மாதிரி பெரிய நடி– கை யா வரு–வேம்மா. மாசத்–துக்கு ரெண்டு பட–மா– வது எடுப்–பேன். ஷூட்டிங் இருந்தா ப�ோன் பண்–ணு–றேன். வந்–துடு...” என்று ஆசீர்–வ–தித்– தார் தயா–ரிப்–பா–ளர்.

4

வசந்தம் 5.7.2015

அ ன் – றி – லி – ரு ந் து அடுத்த சில வரு–டங்– க ளு க் கு ர ேஷ்மா , படப்–பி–டிப்–பி–லேயே பி ஸி – ய ா க இ ரு ந் – தார். ஷகி–லா–வ�ோடு இ ணைந் து இ வ ர் நடித்த பல படங்–கள் வசூ– லி ல் சக்– கை ப்– ப�ோடு ப�ோட்டன. ஆனால் தா ன் ந டி த ்த ஒரு படத்தை கூட ரேஷ்மா தியேட்ட– ருக்கு ப�ோய் பார்த்– ததே இல்லை. திடீ– ரெ ன்று ஒரு நாள் ரேஷ்–மா–வுக்கு ப ட ப் – பி – டி ப்பே இல்லை. மறு– நா ள் ப�ோன் வரும் என்று காத்– தி – ரு ந்– த – வ – ரு க்கு ஏ ம ா ற் – ற ம் . அ த ன் – பி – ற கு அவரை நடிக்க யாருமே கூப்– பி – ட – வில்லை. மலை–யாள சினி–மா–வின் முன்–னணி நடி–கர்–கள், ‘இந்–த’ மாதிரி படங்–க–ளால், தாங்– கள் நடிக்–கும் படங்–கள் ஓடு–வ–தில்லை என்று பிரச்னை செய்–ததா – ல், ‘அந்–த’ மாதிரி படங்–கள் எடுப்–பது முற்–றி–லு–மாக நின்–று–விட்டது. ஆறேழு ஆண்–டு–கள் கழிந்–தன. 2007ம் ஆண்டு. க�ொச்– சி ன் புற– ந – க ர்ப் பகு–தி–யான காக்–க–நாட்டில் இருந்த ஓர் அப்– பார்ட்– மெ ன்– டி ல் ரேஷ்– ம ா– வு ம், இன்– னு ம் சில–ரும் கைது செய்–யப்–பட்டார்–கள். ப�ொது இடத்–தில் பாலு–ற–வுக்கு வற்–பு–றுத்தி மற்–ற–வர்– களை அழைத்–தது உள்–ளிட்ட பிரி–வு–களில் ரேஷ்மா மீது வழக்–குக – ள் த�ொடுக்–கப்–பட்டன. அப்–ப�ோது அவர் மீது நடந்த காவல்–துறை விசா–ரணையே – மிக அசிங்–கம – ாக இருந்–ததா – க, ஒரு வீடிய�ோ இணை–யத்–தில் சுற்–றிக் க�ொண்– டி–ருக்–கி–றது. க�ோர்ட்டில் பெயில் வாங்–கிக் க�ொண்டு பெங்–க–ளூ–ருக்கு ப�ோன–வர்–தான்... இன்– று – வ ரை ரேஷ்மா எங்– கி – ரு க்– கி – ற ார் என்று யாருக்–கும் தெரி–யாது. உயி–ர�ோடு இருக்–கி–றா–ரா? பதி–லில்லை. அவர் தலை–மறை – வ – ான ப�ோது அவ–ருக்கு வயது இரு–பத்–தைந்–துக்–குள்–தான் இருக்–கும். கலைத்– து – றை – யி ல் ஈடு– ப – ட – வே ண்– டு ம் என்–கிற ஆசை யாருக்கு வேண்–டு–மா–னால் வர–லாம். ஆனால் - முறை– ய ான பயிற்– சி ய�ோ, சரி– ய ான வழி– க ாட்டு– தல� ோ, ப�ோது– ம ான பாது–காப்–புப் பின்–னணி – ய�ோ இல்–லா–தவ – ர்–கள் என்ன ஆவார்–கள் என்–ப–தற்கு ரேஷ்–மா–வின் வாழ்க்–கையே பாடம்.

- தமிழ்–ம�ொழி


5.7.2015 வசந்தம்

5


அரிகெலு

ட�ொமட்டோ பண்டு  அன்னம்

சுவையான சமையல் செய்திகளுக்கு: http://www.dinakaran.com/samayalnew

க்–காளி வர–க–ரிசி சாதம்–தான் ஆந்–தி–ரா–வில் அரி–கெலு ட�ொமட்டோ பண்டு அன்–னம். வரகு, த�ொல் பழங்–குடி – க – ளின் பிர–தான உணவு. பூர்– வீ க குடி– க ள் நிறைந்து வாழும் நாடு– க ளில் பெரு– ம – ள வு வரகு புழக்– க த்– தி ல் இருக்– கி – ற து. மூவா–யி–ரம் ஆண்–டு–களுக்கு முன்–பி–ருந்தே தமிழ் மக்–கள் வரகை பயன்–ப–டுத்தி வந்–தது கண்–ட–றி–யப்– பட்டுள்–ளது. கபி–லர் தன் பாடல்–களில் வர–கின் பெரு–மை–யைப் பாடி–யி–ருக்–கி–றார். ‘தானி–யங்–களின் தலை–வன்’ என்று ச�ொல்–லும் அள–வுக்கு வர–கில் ஏரா–ளம – ான புர–தங்–கள் உண்டு. இரும்பு தவிர சுண்–ணாம்–புச் சத்–தும், நார்ச்–சத்–தும் உண்டு. பெண்–களின் மாதாந்–திர பிரச்–னைக – ளுக்கு வரகு இயற்கை மருந்து. அரி–சி–யைப் பயன் –ப–டுத்–திச் செய்–யும் எல்லா உண–வு–க–ளை–யும் வரகை பயன்–ப–டுத்–திச் செய்ய முடி–யும். ஆனால், அரி– சி – யை ப் ப�ோல எளி– ம ை– ய ா– க ப் பக்– கு – வ ப்– ப – டு த்த முடி– ய ாது. இது– த ான் எல்லா சிறு தானி–யங்–களி–லும் இருக்–கும் சிக்–கல். வர– கி ன் மேலே 7 த�ோல்– க ள் உண்டு. அனைத்– தை – யு ம் குத்– தி ப் பிரிக்க வேண்– டு ம். அதன்– பி – றகே சமைக்க முடி–யும். இன்று இதற்கு ஏகப்–பட்ட எந்–தி– ரங்–கள் வந்து விட்டன. ஆனால், அவை த�ோல�ோடு சேர்த்து சத்–து–க–ளை–யும் பிரித்–தெ–டுத்து வரகை சக்–கை–யாக்கி விடு–கின்–றன. ப ழ ங் – கு டி வீ டு – க ளி ன் உ ள் – ம ை – ய த் – தி ல் தரை– யை த் த�ோண்டி ஒரு கற்– கு ழி அமைத்– தி – ருப்–பார்–கள். அந்–தக்– கு–ழி–யில் தானி–யங்–க–ளைக் க�ொட்டி ஒரு கட்டை–யால் குத்–திக் குத்தி த�ோல்

நீங்–களும் செய்–ய–லாம்!

வர–க–ரிசி - ½ கப் தக்–காளி - 2 வெங்–கா–யம் - 1 இஞ்ச- பூண்டு விழுது - ½ டீஸ்–பூன் மஞ்–சள்–தூள் - ¼ டீஸ்–பூன் மிள–காய் தூள் - ¼ டீஸ்–பூன் க�ொத்–த–மல்–லித் தழை - சிறி–த–ளவு உப்பு - தேவை–யான அளவு தாளிப்–ப–தற்கு... கடுகு - ¼ டீஸ்–பூன் பட்டை - சிறி–த–ளவு கிராம்பு - 2 எண்–ணெய் - தேவை–யான அளவு. தக்– க ா– ளி யை மிக்‌–ஸி – யி ல் அரைத்– து க்

6

வசந்தம் 5.7.2015

பிரிப்–பார்–கள். அந்த லாவ–கத்–தில் த�ோல் மட்டும் பிரிந்து சித– று ம். சத்– து – க ள் தானி– ய த்– தி – லேயே தங்–கும். இதில் இரண்டு வகை–யான பலன்–கள். ஒன்று, தானி–யத்–தின் சத்து முழு–மை–யாக கிடைக்–கி–றது. இன்–ன�ொன்று, உடற்–பயி – ற்சி. சத்–தான தானி–யங்–க– ளைச் சாப்–பிட்டு, வியர்க்க வியர்க்க வேலை செய்–த– தால்–தான் அக்–கா–லப் பெண்–கள் கடும் பணி–கள் செய்து, நெடுங்–கா–லம் வாழ்ந்–தார்–கள். இன்– று ள்ள தலை– மு றை வரகு ப�ோன்ற தானி–யங்–களை தேடி–யலை – கி – ற – து. கார–ணம், வாட்டி வதைக்–கும் ந�ோய்–கள். நீரி–ழிவு ந�ோயைக் கட்டுக்– குள் வைக்க வர–கைப் ப�ோல துணை–வன் வேறு எது–வும் இல்லை. நம் சிறு–கு–டல், பெருங்– கு–டல் பகு–தியி – ல் நன்மை தரும் ஏரா–ளம – ான நுண்–ணுயி – ரி – க – ள் உள்–ளன. அவற்றை அழிய விடா–மல் வளர்த்–தெ–டுக்–கும் சக்–தி– யும் வர–குக்கு உண்டு. உடல் பரு–ம– னால் தவிப்–ப–வர்–கள் தின–மும் வரகு சேர்த்–துக் க�ொண்–டால் இளைக்–கல – ாம். அ ரி – கெ லு ட � ொம ட ்டோ ப ண் டு அன்– ன ம் ஆந்– தி – ர ா– வி ன் பாரம்– ப – ரி ய உணவு. தக்–காளி சேர்த்து செய்–யப்–ப–டும் வரகு சாதம். தேங்–காய் சட்னி சைடி–ஷாக தரு–கி–றார்–கள். அவ்–வ– ளவு இத–மாக இருக்–கி–றது. நகர்ப்–புற உண–வ–கங்– களில் காலை, மாலை டிப–னா–க–வும் கிடைக்–கி–றது. அங்கு தயி–ரில் ப�ோட்ட வெங்–கா–யம், ஒரு துண்டு தக்–காளி, 2 பச்சை மிள–காய் தரு–கி–றார்–கள்.

- வெ.நீல–கண்–டன் க�ொள்–ளுங்–கள். வெங்–கா–யத்தை சிறி–தாக நறுக்–கிக் க�ொள்–ளுங்–கள். வர–கரி – சி – யை அரை மணி–நேர – ம் ஊற வையுங்–கள். கடா–யில் எண்– ணெய் ஊற்றி, தாளிப்–பத – ற்கு க�ொடுத்–துள்ள ப�ொருட்–களை சேர்த்து தாளித்து, அதில் வெங்–கா–யம், இஞ்சி-பூண்டு விழுது ப�ோட்டு பச்சை வாசனை ப�ோகும் வரை நன்கு வதக்– குங்–கள். பிறகு தக்–காளி விழுது, மஞ்–சள் தூள், மிள–காய் தூள், க�ொத்–தம – ல்லி தழை சேர்த்து எண்–ணெய் பிரிந்து வரும் வரை வதக்–குங்– கள். பின்–னர், ப�ோதிய அளவு தண்–ணீர் சேர்த்து க�ொதித்–தது – ம் குக்–கரி – ல் வர–கரி – சி – யி – ல், உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்–குங்–கள். ஆந்–திர அரி–கெலு ட�ொமட்டோ பண்டு அன்– ன ம் ரெடி.


5.7.2015 வசந்தம்

7


புகைப்படத்துறையிலும் விளம்பரத்துறையிலும் அசத்தும்

டி. ப ட்ட ம ்மாளின் பேத்தி ! த

லைப்–புத்–தான் மேட்டரே. ஆனால் கேம– ர ாவை முதன் முத– லி ல் பார்– க வி கையில் எடுத்–தது தன் 30வது வய–தில்–தான். அதற்கு முன் அவர் சின்–னத்–திரை நடிகை. யெஸ், இயக்–குந – ர் சிக–ரம் கே.பால–சந்–தர் இயக்– கிய ‘காசளவு நேசம்’ மெகா சீரி–யலி – ல் அவர் நடித்–திரு – க்–கிற – ார். அப்–படி – ப்–பட்ட–வர் இன்று புகழ்– பெற்ற புகைப்– ப ட கலை– ஞ – ர ா– க – வு ம், விளம்–பர – த்–துறை – யி – ல் குறிப்–பிட – த்–தகு – ந்த ஆளு– மை–யா–க–வும், இன்–டீ–ரி–யர் டெக்–க–ரே–ஷ–னில் சர்–வதே – ச நிபு–ணர்–களு–டன் ப�ோட்டிப் ப�ோடும் அள–வுக்–கும் வளர்ந்–திரு – க்–கிற – ார்.

8

வசந்தம் 5.7.2015

இந்த வளர்ச்–சிக்கு பின்–னால் ரத்–த–மும் சதை–யும – ான ஒரு ஃப்ளாஷ்–பேக் இருக்–கிற – து. ‘‘நான் டிபிக்–கல – ான சென்னை ப�ொண்ணு. அப்பா ெதாழி–லதி – ப – ர். சினிமா பார்க்–கக் கூட அனு–ம–திக்–காத அள–வுக்கு கட்டுப்–பா–டான குடும்–பம். கிரேஸி ம�ோகன், எஸ்.வி.சேகர் நாட– கங்–களை பார்த்து வளர்ந்–தேன். கல்–லூரி படிக்– கி–றப்ப கே.பால–சந்–தர் இயக்–கத்–துல ‘காசளவு நேசம்’ மெகா சீரி–யல்ல நடிக்க வாய்ப்பு வந்–தது. அப்பா தயங்–கின – ார். குடும்ப நண்–பர்–தான் பக்–கு வம – ா பேசி அப்–பாவை சம்–மதி – க்க வைச்–சார். இதுக்கு பிறகு நிறைய நிகழ்ச்– சி – களை த�ொகுத்து வழங்க ஆரம்–பிச்–சேன். சினிமா


சான்ஸ் தேடி வந்–தது. ஆனா, எனக்கு நடிக்– கி–றது – ல பெரிய ஈடு–பாடு இல்லை. அத–னால மறுத்–துட்டேன். இந்த நேரத்–துல – த – ான் எங்க வீட்ல எனக்கு வரன் பார்க்க ஆரம்–பிச்–சாங்க...’’ என்று ச�ொல்– லு ம் பார்–க – வி – யி ன் திரு– ம ண வாழ்க்கை மகிழ்ச்–சிக்கு உரி–யத – ாக இல்லை. ‘‘கண– வ – ரு க்கு சிங்– க ப்– பூ ர்ல வேலை. அத– ன ால திரு– ம – ண – ம ா– ன – து மே சிங்– க ப்– பூ ர் ப�ோயிட்டேன். அந்த வய–துல பெண்–களுக்கு என்–ன–வெல்–லாம் கன–வு–கள் இருக்–கும�ோ... அதெல்–லாம் எனக்–கும் இருந்–தது. பட்டாம்– பூச்சி ப�ோல சிங்– க ப்– பூ ர் பறந்– தே ன். ஆனா...’’ சற்று இடை–வெளி விட்ட– வர், பெரு–மூச்–சுட – ன் த�ொடர்ந்–தார். ‘‘நான் எதிர்–பார்த்தா மாதிரி வாழ்க்கை அமை–யலை. ச�ொல்–லப்– ப�ோனா அது வாழ்க்–கைய – ாவே இல்லை. பத்து வரு– ட ங்– க ள் பல்–லைக் கடிச்–சுட்டு ப�ோராடி பார்த்–தேன். அதுக்கு மேல–யும் தாக்–குப் பிடிக்க முடி–யா–துன்னு தெ ரி ஞ் – ச – து ம் உ ற வ ை முறிச்–சுட்டு சென்னை வ ந் – து ட ்டே ன் . . . ’ ’ எ ன் று ச�ொ ல் – லு ம் பார்–கவி, இன்–டீரி – ய – ர் டிசை–னிங் படித்–தது சிங்–கப்–பூரி – ல்–தான். பார்–கவி

‘‘பத்து வரு– ட ங்– க ள் சிங்– க ப்– பூ ர்ல நான் வாழ்ந்–தது – க்கு ஒரே பலன் சர்–வதே – ச ஃபேஷன் டிசை–னிங் கல்–லூரி – ல இன்–டீரி – ய – ர் டெக்–கர – ே– ஷன் படிச்–சது – த – ான். இரண்டு வருட க�ோர்ஸ். முதல் மாண–வியா தேர்–வா–னேன். சின்–னச் சின்ன ப்ரா–ஜெக்ட்டு–களை எடுத்து செய்–தேன். பெய–ரும் புக–ழும் கிடைச்–சது. இந்த நேரத்–துல – த – ான் என் வாழ்க்–கையை புரட்டிப் ப�ோட்ட அந்த சம்– ப – வ ம் நடந்– தது. எல்–லாத்–தை–யும் தூக்–கிப் ப�ோட்டுட்டு சென்–னைக்கு வந்–தேன். இத்–தா–லிக்கு ப�ோய் மேல் படிப்பு படிக்க ஆசை. ஆனா, அப்பா தவ–றிட்டார். அம்–மாவை பார்த்–துக்–கற ப�ொறுப்பு இருந்– த து. அவங்– களை தனியா விட்டுட்டு சுய–ந–லத்–த�ோட இத்– த ாலி ப�ோக விரும்– ப லை. சென்– னை – லயே தங்– கி ட்டேன்...’’ என்று ஃப்ளாஷ்–பேக்கை விவ–ரித்த பார்–க–விக்கு, மேலே படிக்–கா–தது குறித்து எந்த வருத்–தமு – ம் இல்லை. ‘‘சின்ன வய–சுலேந்தே – புகைப்– ப– ட ங்– க ள் எடுக்க எனக்கு பிடிக்– கு ம். அது குறித்து படிக்– க – ணு ம்னு ஆசை– யும் இருந்– த து. சூழ்– நிலை சரிப்– ப – ட ா– த – து – னால விட்டுட்டேன். இந்த நேரத்–து–ல–தான் என் 30வது பிறந்–தந – ாள்

5.7.2015 வசந்தம்

9


வந்–தது. அன்–னிக்கி அம்மா பரிசா ஒரு கேம– ராவை வாங்கி க�ொடுத்–தாங்க. எனக்–குள்ள தூங்– கி ட்டு இருந்த சின்ன வயசு பார்– க வி சட்டுன்னு எட்டிப் பார்த்தா. நுணுக்–கங்–களை தெரிஞ்–சுகி – ட்டு படம் எடுக்க ஆரம்–பிச்–சேன். ஏற்–கன – வே இன்–டீரி – ய – ர் டெக்–கர – ே–ஷன் படிச்– சி–ருந்–தத – ால புகைப்–பட – ம் எடுக்–கற – து சுல–பமா இருந்–தது...’’ என்று பர–வச – ப்–பட்ட–வர், 2011ல் ‘எட்ஜ் டிசை–னிங் ஹவுஸ்’ என்ற நிறு–வன – த்தை த�ொடங்–கியி – ரு – க்–கிற – ார். ‘‘அப்பா, தன் பிசி–னஸை நடத்–தின அதே பில்–டிங்–குல என் நிறு–வன – த்தை ஆரம்–பிச்–சேன். இன்–டீ–ரி–யர் துறை–தான் பிர–தா–னம். முதல் அசைன்–மென்ட் ஆக ஒரு பிர–பல ஹ�ோட்ட– லுக்கு இன்–டீ–ரி–யர் வடி–வ–மைச்சு க�ொடுத்– த�ோம். பாராட்டும் புக– ழு ம் கிடைச்– ச து. அடுத்–தடு – த்து வாய்ப்–புக – ளும் வந்–தது. உற்–சா–கத்–த�ோட செய்ய ஆரம்–பிச்–ச�ோம். ஆனா, ஒரு கட்டத்–துல சலிப்பு ஏற்–பட்டது. ஏ ன்னா , வ ா டி க் – கை – ய ா – ள ர் – க ள் த ங்க இஷ்–டத்–துக்கு டிசைன் கேட்க த�ொடங்–கின – ாங்க. எந்த வேலை– யை – யு ம் பர்ஃ– பெக்ட்டா செய்–யத்–தான் எனக்கு பிடிக்–கும். அதை–யும் அந்– த ந்த இடம், சூழ– லு க்கு ஏற்– ப த்– த ான் செய்– வே ன். ஆனா, இத்– த ாலி மாடலை இந்–திய – ா–வுல செய்–யச் ச�ொன்–னாங்க. ‘நம்–மூர் தட்– ப – வெப்ப நிலைக்கு அது சரிப்– ப ட்டு வராது... இங்–கயே பிரத்–யேகம – ா பல டிசைன்ஸ் அற்– பு – த மா இருக்– கு – ’ ன்னு எடுத்து ச�ொன்– னா–லும் கேட்க மறுத்–தாங்க. இந்த முரண்– பா–ட�ோட த�ொழில் செய்–யணு – ம – ான்னு கேள்வி எழுந்–தது...’’ என்று சிரித்–தவ – ர் இதன் பிற–குத – ான் புகைப்–பட கலையை முழு–நேர – ம – ாக கையில் எடுத்–திரு – க்–கிற – ார். ‘‘குடும்ப உரு– வ ப்– ப – ட ங்– களை எடுக்க ர�ொம்ப பிடிக்–கும். அதுல கவ–னம் செலுத்– தி–னேன். அப்–பத்–தான் க�ோட்டா என்–கிற சம்மந்தம் க�ோதண்–டர – ா–மன் அறி–முக – ம – ா–னார். இவரை 2010ல ஒரு உண–வக – த்–துல சந்–திச்– சேன். விளம்–பர – த் துறைல இவர் புகைப்–பட நிபு–ணர். இவர் எடுக்–கிற படங்–கள் எல்–லாம் அப்–படி உயிர்த் துடிப்–ப�ோட இருக்–கும். ஆனா, முதல்ல இவரை பார்த்– த ப்ப யாருன்னே எனக்கு தெரி–யலை. அதுக்கு பிறகு ஃபேஸ்–புக் மூலமா நண்–பர்–கள – ா–ன�ோம்...’’ என்று பார்–கவி நிறுத்த, அதை ஆம�ோ–தித்–த–படி புன்–ன–கை– யு–டன் க�ோட்டா த�ொடர்ந்–தார். ‘‘பல விளம்–பர நிறு–வ–னங்–கள்ல வேலை பார்த்–துட்டு சலிப்–ப�ோட நான் இருந்த நேரம் அது. சுதந்–திரம – ா எது–வும் செய்ய முடி–யல – ை– யேன்னு ஒரு ஏக்–கம் இருந்–தது. ஃப்ரி–லேன்ஸா படங்–கள் எடுத்–துட்டு இருந்–தேன். அப்–பத்–தான் பார்–கவி அறி–முக – ம் கிடைச்–சது. உண–வ–கத்–துல நான் படம் எடுத்–துட்டு இருந்–ததை இவங்க பார்த்–து–கிட்டே இருந்– தாங்க. அன்–னிக்கி நாங்க பெருசா எது–வும் பேசிக்–கலை. பிறகு முக–நூல் வழியா நண்–பர்–

10

வசந்தம் 5.7.2015

க–ளா–னது – ம் சாட்ல நிறைய பேசி–ன�ோம். ஆனா, சந்–திச்–சது ஒரு வரு–டத்–துக்கு பிற–குத – ான். அப்– ப த்– த ான், தான�ொரு நிறு– வ – ன ம் த�ொடங்கி இருப்–பதை ச�ொல்லி, ‘அதுல சேர முடி–யு–மா–’ன்னு கேட்டாங்க. நேர்ல ப�ோய் ஆபீஸை பார்த்–தேன். அந்த அட்–மாஸ்ஃ–பிய – ர் பிடிச்–சி–ருந்–தது. தவிர ஒரே அலை–வ–ரி–சைல நாங்க சிந்–திக்–கற – த – ால எனக்கு அது நல்ல ஆப்– ஷனா பட்டது. உடனே சேர்ந்–துட்டேன்...’’ என்–றார் க�ோட்டா. இதன் பிறகு இரு– வ – ரு – ம ாக சேர்ந்து விளம்–ப–ரத் துறை–யி–லும் கவ–னம் செலுத்த த�ொடங்–கியி – ரு – க்–கிற – ார்–கள். ‘‘ஏற்–கன – வே நான் ச�ொன்–னா–மா–திரி ‘ஈகா ப�ோர்ட்–ரே–சர்’ என்–கிற குடும்ப உரு–வப்–பட – த்– த�ோட விளம்–ப–ரத்–து–றை–ல–யும் கால் பதிச்– ச�ோம்...’’ என்று த�ொடர்ந்–தார் பார்–கவி. ‘‘சேலம் நகைக்–கடை – க்கு முதல்ல விளம்–ப– ரப் படம் எடுத்து க�ொடுத்–த�ோம். அதைப் பார்த்–துட்டு நிறைய நகைக்–கடை – க – ளிலிருந்து எங்–களை தேடி வந்–தாங்க. மெல்ல மெல்ல எங்க புகழ் பர–விய – து. அப்–பத்–தான் பிராண்–டிங் ப்ரா–ஜெக்ட்– ஸும் எங்–களை அணு–கி–னாங்க. ஆரம்–பத்– துல தயக்–கமா இருந்–தது. சுதந்–திரம – ா நம்–மால என்ன செய்ய முடி–யும்னு கேள்வி எழுந்–தது. சரி, செஞ்– சு ப் பார்ப்– ப�ோ ம்னு களத்– து ல இறங்–கின�ோ – ம். விருப்–பப்பட்டதை அவங்க விரும்–பினா மாதிரி செய்து க�ொடுத்–த�ோம். பாராட்டு கிடைச்–சது. இப்ப மனித வள மேம்–பாடு குறித்து நிறு– வ–னங்–களுக்கு புதுப் புது ய�ோச–னை–களும், படைப்–பு–களும் வழங்–க–ற�ோம். உள்–ளாடை நிறு–வன – ம் ஒன்–றுக்கு நாங்க டிசைன் செய்து க�ொடுத்தோம். இப்–படிபிஸியாஎங்கத�ொழில்ப�ோயிட்டி–ருக்– கி–றப்–பத்–தான் ‘ஆர்ட் அண்ட் எட்ஜ்’ கான்–செப்ட் மன–சுல த�ோணுச்சு. அதா–வது, கர்நாடக கலை துறை சார்ந்த பிர–பல – ங்–களை அலு–வல – க – த்–துக்கு வர– வ – ழை ச்சு அவங்– க – ள�ோட சில மணி நேரங்–கள் உரை–யா–டுவ – து... விவா–திப்–பது. க�ோட்டா– கி ட்ட ச�ொன்– னே ன். ‘டபுள் ஓ.கே... செய்–யல – ாம்–’னு ச�ொன்–னார். களத்–துல இறங்–கின�ோ – ம். என் பாட்டி டி.பட்டம்–மாள் கர்–நாடக சங்– கீ–தத்–துல பெரிய ஆள். அத–னால கர்–நா–டக சங்– கீ – த ம் சார்ந்த வல்– லு – னர்–கள�ோட – எனக்–கும் பழக்–கம் இருந்–தது.

க�ோட்டா


சினி–மான்னா, ஹீர�ோ ஹீர�ோ–யின – ை–தான் நினைக்–கிற– �ோம். ஆனா, வில்–லன்–களும், காமெ–டிய– ன்– களும் கூட ர�ொம்ப முக்–கிய– ம– ா–ன– வங்–கத– ான். இந்த அடிப்– ப – டைல பாட– க ர்– க ள், நட– னக் கலை–ஞர்–கள்னு 65 பேரை வர–வழை – ச்சு ஒவ்–வ�ொ–ருத்–த–ர�ோ–ட–யும் சில மணி நேரங்– கள் செல–விட்டோம். எங்–களை மதிச்சு வந்–த– வங்க தங்–கள�ோட – அனு–பவ – ங்–களை பகிர்ந்–து– கிட்டாங்க. இந்த அனு– ப – வ ம், ‘அர்– ப – ன ா’ என்– கி ற தலைப்– பு ல புகைப்– ப ட கண்– க ாட்– சி யை நட த்– து ம் ய�ோச – னைக்கு வித் – தி ட்ட து. ‘ஆர்ட் அண்ட் எட்–ஜில்’ வந்த பிர–பல – ங்–களை எல்–லாம் மறு–ப–டி–யும் த�ொடர்பு க�ொண்டு விஷ–யத்தை ச�ொன்–ன�ோம். மறுப்பே ச�ொல்– லாம திரும்–பவு – ம் வர சம்–மதி – ச்–சாங்க. ஒவ்– வ�ொ – ரு த்– த – ரு க்– கு ம் தனித்– த – னி யா ப�ோட்டோ ஷூட் நடத்– தி – ன�ோ ம். கடம் வித்–வான் விக்கு விநா–யக்–ராம், சுதா ரகு–நா–தன். மாண்– ட – லி ன் நி– வ ாஸ், மாண்– ட – லி ன் ராஜேஷ்... இப்–படி எல்–லா–ருமே வந்–தாங்க. ஒவ்–வ�ொரு படத்–தையு – ம் ப�ொக்–கிஷ – மா பாது– காக்–கணு – ம் என்–கிற உணர்–வ�ோட எடுத்–த�ோம். சுதா ரகு–நா–தனை த�ொடர்பு க�ொண்–டப்ப, ‘பட்டுப்–புட – வ – ை–யும் தலை நிறைய மல்–லிகை – ப்– பூ–வும்–தான் உங்க அடை–யா–ளமா இருக்கு. இந்த இரண்–டும் இல்–லாம இயல்பா வாங்–க– ’ன்னு வேண்–டுக�ோ – ள் வைத்–த�ோம். முகம் சுளிக்– காம அப்–படி – யே வந்து ப�ோஸ் க�ொடுத்–தாங்க. ‘விக்கு மாமா’–வுக்கு (விக்கு விநா–யக்–ராம்) எங்க நிறு– வ ன ஊழி– ய ர் ப�ோட்டுத் தரும் டீ பிடிக்–கும். அதை குடிக்–கவே அடிக்–கடி வரு–வார். சங்–கர் மகா–தேவ – ன், ர�ொம்ப எளி–மை– யா–னவ – ர். செல்ஃப் டிரை–விங். ஆசை ஆசையா எங்–கள�ோ – டு அமர்ந்து த�ோசை சாப்–பிடு – வ – ார்...’’ கண்–கள் விரிய பேசும் பார்–கவி, இப்–படி எடுத்த புகைப்–ப–டங்–களை கண்–காட்–சி–யில் வைத்–தி–ருக்–கி–றார். அதைப் பார்த்–து–விட்டு புக–ழா–த–வர்–களே இல்லை. இந்த உற்–சா–கத்– தில் இப்– ப�ோ து அடுத்த ப்ரா– ஜ ெக்ட்டில் இறங்–கியி – ரு – க்–கிற – ார். ‘‘சினி–மான்னா, ஹீர�ோ - ஹீர�ோ–யி–னை–

தான் நினைக்–கிற�ோ – ம். ஆனா, வில்–லன்–களும், காமெ–டி–யன்–களும் கூட ர�ொம்ப முக்–கி–ய– மா–ன–வங்–க–தான். இவங்–க–ளை–யும் தனித்–த– னியா படம் எடுத்து கண்– க ாட்சி நடத்– த – ணும்னு ஆசை. இது–வரை ராதா–ரவி, நாசர், டில்லி கணேஷ், தலை–வா–சல் விஜய், சின்னி ஜெயந்த்னு பத்து பேரை வைச்சு ப�ோட்டோ ஷூட் நடத்–தியி – ரு – க்–க�ோம். இன்–னும் 40 பேர் இருக்–காங்க. அவங்–களை – யு – ம் எடுத்–தப் பிறகு கண்–காட்சி நடத்–தணு – ம்...’’ என்று தன் கனவை பகிர்ந்து க�ொண்ட பார்–கவி – யி – ன் அலு–வலக – அலங்–கா–ரம் காண்–பவரை – மயக்–கக் கூடி–யது. ‘ ‘ க்ர – வு ண் ட் ஃ ப்ள ோர்ல எ ங்க ஆபீஸ் இருக்கு. அத–னால மழைக்–கா–லத்–துல சுவற்–றில் தண்–ணீர் ஓதம் கட்டும். பெயின்ட் அடிச்–சா–லும் அங்–கங்க திட்டுத்–திட்டா கரை தெரி–யும். ஸ�ோ, சாதா–ரண சிமென்டைத்–தான் சுவத்–துல பூசி இருக்–கேன். ஓதம் கட்டி–னா–லும், பார்க்க அசிங்–கம – ாக தெரி–யாது. அது–மட்டு– மில்ல... அதுவே ஒரு டிசை–னா–வும் மாறி–டும். சிமென்டையும் மார்–பிள் எஃபெக்ட் க�ொடுக்–க முடியும். இங்க இருக்–கிற கப்–ப�ோர்ட் எல்–லாமே உடைஞ்சு ப�ோன மரக்– க ட்டை– க – ள ால அலங்–கா–ரம் செய்–யப்–பட்ட–துத – ான். எல்லா அறை– யி – லு ம் ஒரு பெரிய மண் பானை இருக்–கும். அதில் கரித்–துண்–டுகளை – ப�ோட்டு வைச்–சிரு – க்–கேன். இப்–படி செஞ்சா அறைல இருக்–கிற ஈரத்–தன்–மையு – ம், கெட்ட வாடை–யும் ப�ோயி–டும். வாசல்ல ச�ோடா பாட்டி–லுக்– குள்ள மணி பிளான்டை வளர்க்–கி–ற�ோம். இந்த பாட்டி–லுக்கு அழகா வர்–ணம் தீட்டிக் க�ொடுத்–தது க�ோட்டா. இப்– ப�ோ – தை க்கு விளம்– ப ர த�ொழில்ல கவ–னம் செலுத்–த–ற�ோம். ‘அர்–ப–னா–’–வுக்–காக ரஜினி - கமலை படம் பிடிக்– க – ணு ம்னு ஆசை. நடக்–கும்னு நம்–பறே – ன்...’’ முகம் மலர சிரிக்–கிற – ார் பார்–கவி.

- ப்ரியா

5.7.2015 வசந்தம்

11


12

வசந்தம் 5.7.2015

கே.என்.சிவராமன்


3

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பலிக�ொண்ட சயாம்-பர்மா மரண ரயில் பாதையின் ரத்த சரித்திரம்

மு

க்–கிய கார–ணம் ஜப்–பா–னின் நில அமைப்பு. பசி–பிக் பெருங்–கட – லி – ன் மேற்–குப் பகு–தியி – ல் இந்–நாடு அமைந்–தி –ருக்–கி–றது. ஆசி–யக் கண்–டத்–தி–லேயே பல தீவு–கள் ஒன்–றி–ணைந்த நாடு, இது–தான். அதா–வது, 6,852 தீவு–களை உள்–ளட – க்–கிய – து. இதில், ஹ�ொக்–கைட�ோ, ஹ�ொன்ஷூ, ஷிக�ொக்கு, கியூஷூ ஆகிய நான்– கும் பெரிய தீவு–கள். ச�ொல்–லப்–ப�ோன – ால் அந்–நாட்டின் 97 சத–விகி – த நிலப்–ப–ரப்பு, இந்த நான்கு தீவி–லும்–தான் அடங்–கி–யி–ருக்–கின்–றன. தவிர, ஜப்–பா–னில் உள்ள எல்–லாத் தீவு–களும் அக–லக்–க�ோடு 24° - 46°வ, நெடுங்–க�ோடு 122° - 146°கி ஆகி–யவ – ற்–றுக்கு (அதா–வது, longitude and latitude) இடையே அமைந்–துள்–ளது. இதன் கார– ண – ம ாக ஜப்– ப ா– னி ன் ம�ொத்த நிலப்– ப – ர ப்– பி ல் 73 சத–வி–கித நிலப்–ப–குதி காடா–க–வும், மலைப்–ப–கு–தி–க–ளா–க–வும் இருக்– கி ன்– ற ன. இவற்றை சீர்– செ ய்து வேளாண்மை செய்ய முடி–யாது. த�ொழில்–து–றையை த�ொடங்க இய–லாது. குடி–யி–ருப்–புப் பகு–தி–களை உரு–வாக்க முடி–யாது. சுருக்–க–மாக ச�ொல்–வ–தென்–றால், கனிம வளங்–கள் உள்–ளிட்ட எந்த மூலப்–ப�ொ–ரு–ளும் ஜப்–பா–னில் இல்லை. ஒவ்–வ�ொன்–றுக்–கும் பிற நாடு–க–ளைத்–தான் சார்ந்–தி–ருக்க வேண்–டும். என–வே–தான் அன்–றும், இன்–றும் ஜப்–பான் இறக்குமதி, ஏற்–று–ம–தியை நம்–பி– யி–ருக்–கி–றது. பிற–நா–டு–களில் இருந்து மூலப்–ப�ொ–ருட்–களை க�ொண்டு வந்து தங்–கள் நாட்டில் ப�ொருட்–களை தயா–ரித்து மீண்–டும் அதை அந்–தந்த நாடு–களி–லேயே விற்–ப–து–தான் அவர்–க–ளது பாணி, வழக்–கம். குறிப்– ப ாக அமெ– ரி க்க சந்– தையை பெரு–ம–ளவு நம்–பி–யி–ருந்–தது.

5.7.2015 வசந்தம்

13


இ து செ வ் – வ னே ந டை – ப ெ ற வே ண் – டு – மா–னால் மூலப்–ப�ொ–ருட்–களை - கனிம வளங்–களை தன்– ன – க த்தே க�ொண்ட பிற நாடு– க ளை தங்– க ள் கால–னி–யாக்க வேண்–டும். உறிஞ்ச வேண்–டும். முதல் அடி சீனா. அரு–கில் இருக்–கும் பிர–தேச – ம் என்–பத – ால் த�ொடக்– கம் முதலே சீனா மீது ஜப்–பா–னுக்கு தனி பாசம் உண்டு. கிட்டத்–தட்ட ஜப்–பா–னின் அந்–நிய முத–லீ–டு– களில் ஐந்–தில் நான்கு பங்கு சீனா–வுக்–குப் ப�ோய் சேர்ந்–தி–ருந்–தது. இங்–கி–லாந்து ப�ோன்ற மேற்–கு–லக நாடு–களு–டன் ப�ோட்டி–யிட்டு அவர்–களுக்கு சம–மான இடத்தை அடை–யும் கன–வில் மிதந்து க�ொண்–டி–ருந்த ஜப்– பான், ப�ொரு–ளா–தார துறை–யில் மட்டு–மல்ல, ராணுவ ரீதி–யி–லும் பலத்தை அதி–க–ரிக்க நினைத்–தது. ஏன் கூடா–து? ஜப்–பா–னும் வல்–ல–ர–சாக வேண்–டும். த�ொடை தட்டி களத்–தில் இறங்–கி–யது. முதல் கட்ட–மாக இங்–கில – ாந்–துக்கு முன் தன் ஆக்–கிர– மி – ப்பை சீனா–வில் முடித்–து–விட திட்ட–மிட்டது. ஏனெ–னில் ஜப்–பா–னுக்கு சம–மாக பிரிட்ட–னும் சீனா–வில் முத–லீடு செய்–திரு – ந்–தது. ப�ோதும் ப�ோதா–த– தற்கு ஜப்–பா–னுக்கு பக்–கத்–தில் இருந்த மலாயா இன்–றைய மலே–சியா - இங்–கி–லாந்–தின் கால–னி–யாக இருந்– த து. எனவே ராணுவ தள– வ ா– ட ங்– க ளை மலா– ய ா– வி ல் நிறுத்தி ஜப்– ப ானை மிரட்டு– வ து இங்–கி–லாந்–துக்கு சுல–ப–மாக இருந்–தது. இவை எல்– ல ாம் ப�ோதாது என்று அன்று வளர்ந்து வரும் வல்–ல–ர–சாக இருந்த; ஜப்–பா–னில் தயா–ரா–கும் ப�ொருட்–களை எதிர்–பார்த்து வழி–மேல் விழி வைத்து காத்–திரு – ந்த; அமெ–ரிக்–கா–வும், சீனா–வில் பங்கு கேட்டது. இப்–படி ‘நான்–தான் அதிக முத–லீடு செய்–தி–ருக்– கி–றேன்... எனவே சீனா எனக்–குத்–தான் ச�ொந்–தம்’ என ஆளா–ளுக்கு பங்கு கேட்டு ப�ோர் த�ொடுத்–தால் விவ–கா–ரம் சிக்–க–லா–கி–வி–டும். ஆகவே உட–னுக்–குட – ன் தன் கட்டுப்–பாட்டுக்–குள் க�ொண்டு வர 1931ம் ஆண்டு சீனா–வுக்–குள் நுழைந்–தது. உண்–மை–யில் இதன் பின்–ன–ணி–யில் இருந்–தது எங்கே உள்–நாட்டு மக்–கள் ப�ோராட்டங்–களில் இறங்–கி– வி–டு–வார்–கள�ோ என்ற ஜப்–பா–னின் அச்–சம்–தான். பசி–பிக் தீ வளை–யத்–தில் உள்ள எரி–மலை பரப்–பில் இந்–நாடு அமர்ந்–தி–ருப்–ப–தால் எப்–ப�ோது எரி–மலை ப�ொங்–கும் - வெடிக்–கும் என அறு–தி–யிட்டு ச�ொல்ல முடி–யாது. ப�ோலவே நில–நடு – க்–கமு – ம். பல லட்– ச ம் ஆண்– டு – க– ள ாக மெல்ல மெல்ல நடந்து வரும் பெருங்–க–டல் நகர்– வு – க ளின் விளை– வ ால் உரு–வா–ன–வைத்–தான் இந்த 6,852 தீவு–களும். நூற்–றாண்– டுக்கு ஒரு–முறை ஜப்–பான், சுனா– மி யை சந்– தி ப்– ப – து ம், ஐந்து ஆண்–டுக்கு ஒரு–முறை பூகம்–பத்–தால் பாதிக்–கப்–படு – வ – – தும் இத–னால்–தான். அப்– ப – டி த்– த ான் 1923ம்

14

வசந்தம் 5.7.2015

ஆண்டு ட�ோக்–கி–ய�ோ–வில் நில–ந–டுக்–கம் ஏற்–பட்டது. இதில் ஒரு லட்–சத்து 40 ஆயி–ரம் பேர் உயி–ரிழ – ந்–தன – ர். ஏற்–க–னவே முதல் உல–கப் ப�ோரால் ப�ொரு–ளா–தார மந்–த–நிலை உரு–வா–கி–யி–ருந்–தது. அத்–தி–யா–வ–சிய ப�ொருட்–களின் விலை விண்–ணைத் த�ொட்டன. அதில் பெட்–ர�ோல் ஊற்–றிய – தை – ப் ப�ோல் இந்த உயிர்ச்–சேத – ம். ப�ொறுக்க முடி–யாத ஜப்–பா–னி–யர்–கள் உணவு வேண்டி ப�ோராட்டங்–களி–லும், கல–வ–ரங்–களி–லும் ஈடு–பட்டார்–கள். ச�ொந்த மக்– க ளை திருப்– தி ப்– ப – டு த்– த – வு ம், ப�ொரு–ளா–தார பாதிப்பை சீர்–படு – த்–தவு – ம் ஆக்–கிர– மி – ப்பு ப�ோர்–தானே எப்–ப�ோ–தும் தீர்–வாக இருக்–கி–ற–து? அதையே ஜப்–பா–னும் மேற்–க�ொண்–டது. இந்த நேரத்–தில் சீனா–வின் நிலை எப்–ப–டி–யி–ருந்–த–து? சன் யாட் சென் மறைந்து சியாங் கை ஷேக், க�ோமிண்–டாங் கட்–சியி – ன் (மன்–னர– ாட்–சியை அகற்–றத் த�ோன்–றிய புரட்–சிக – ர கட்சி) தலை–மையை கைப்–பற்றி இருந்–தார். ஒட்டு–ம�ொத்த நாட்டை–யும் ஆளும் கனவு அவ–ருக்கு இருந்–தது. மன்–னர்–க–ளா–லும் அந்–நிய தேசங்–களின் ஆக்–கி–ர–மிப்–பா–லும் சின்–னா–பின்–ன–மா– கி–யிரு – ந்த சீனா, ப�ொரு–ளா–தார ரீதி–யா–கவு – ம், ராணுவ ரீதி–யா–க–வும் பின்–தங்–கி–யி–ருந்–தது. இதை தனக்கு சாத– க – ம ாக பயன்– ப – டு த்– தி க் க�ொண்ட சியாங் எல்லா சர்– வ ா– தி – க ா– ரி – க ளும் இது– ப�ோன்ற சம–யங்–களில் என்ன செய்–வார்–கள�ோ அதை செய்–தார். ‘அகன்ற சீனா’ கனவை மக்–களி–டம் விதைத்–தார். எதைத் தின்–றால் பித்–தம் தெளி–யும் என்–றி–ருந்த சீனர்–களும் சியாங்–கின் பேச்சை நம்–பி–னார்–கள். அரும்– ப ாக இருந்த சீன கம்– யூ – னி ஸ்ட் கட்சி மட்டும் அவரை சந்– தே – க த்– த�ோ டு பார்த்– த து. அணு–கி–யது. இந்த சூழ–லில்–தான் 1931, செப்–டம்–பர் 18 அன்று சீனா மீது ஜப்–பான் படை–யெ–டுத்–தது. முத–லில் மஞ்–சூ–ரியா. பிறகு ஷாங்–காய். எதிர்ப்பே இல்–லா–மல் ஜப்–பா–னி–யர்–கள் முக்–கி–ய– மான இவ்–விரு பிர–தேச – ங்–களை கைப்–பற்–றின – ார்–கள். சியாங்– க ால் தங்– க ளுக்கு எந்– த ப் பய– னு ம் இல்லை என்–பதை சீனர்–கள் உணர்–வத – ற்–குள் காலம் கடந்–து–விட்டது. ஜப்–பான் அந்த நாட்டில் வலு–வாக கால்– ப–தித்–தது. இதை எதிர்த்து மாவ�ோ தலை– ம ை– யி ல் சீன கம்–யூ–னிஸ்ட் கட்–சி–யின் செம்–படை, Long March எனப்–ப–டும் நெடும்–ப–ய–ணத்தை மேற்–க�ொண்–ட–தும், சியாங்– கை – யு ம் ஜப்– ப ா– னி – ய ர்– க – ள ை– யு ம் அம்– ப – ல ப்– ப–டுத்தி மக்–கள் மத்–தி–யில் பிர–சா–ரம் செய்–த–தும், ஆறா– யி – ர ம் மைல்– க ளை கடந்து முன்– னே றி தங்– க ள் நடைப்– ப – ய – ண த்தை 1935ல் நிறைவு செய்–த–தும் தனிக்–கதை. ஜப்–பா–னின் இந்த சீன ஆக்–கி–ர–மிப்பை தட்டிக் கேட்க இங்–கி–லாந்து முயல்–வ–தற்–குள் பல சம்– ப – வ ங்– க ள் அடுத்– த – டு த்து அரங்– கே – றி – விட்டன. முத–லில் ‘அச்சு நாடு–கள்’ (The AXIS) என வர–லாற்–றில் பதி–வா–கி–யி–ருக்–கும் ஜப்–பான், ஜெர்–மனி, இத்–தாலி கூட்டு.


இந்த மூன்று நாடு–களும் அன்று ‘வல்–ல–ர–சா–க’... ‘கிரேட் பிரிட்டன்’ ப�ோல் உலகை ஆள துடித்–துக் க�ொண்–டி–ருந்–தன. கூ ட்ட – ணி க் கு இ ந ்த பே ர ா சை ம ட் டு ம் கார–ண–மல்ல. ஆணி– வே – ரையே ஆட்டம் காண வைத்த கம்–யூ–னிஸ்ட்டு–களும்–தான். சீன கம்–யூ–னிஸ்ட் கட்சி, மாவ�ோ தலை–மை–யில் வலு– ப ெற்று ஜப்– ப ா– னி ன் ஆதிக்– க த்தை கேள்வி கேட்டுக் க�ொண்–டி–ருந்–தது. த�ொழிற்–பு–ரட்சி ஏற்–பட்டு ஏற்–க–னவே த�ொழிற்– சா–லை–க–ளால் நிரம்–பி–யி–ருந்த ஜெர்–ம–னி–யில் முதல் உல–கப்–ப�ோர் சம–யத்–தில் ர�ோசா லக்–ஸம்–பர்க் ஏற்றி வைத்த கம்–யூனி – ஸ்ட் நெருப்பு, 1930களில் க�ொழுந்–து– விட்டு எரிய ஆரம்–பித்–தி–ருந்–தது. இது ஹிட்–ல–ரின் ‘அகண்ட ஜெர்–மன்’ கன–வுக்கு எம–னாக விளங்–கிய – து. கிராம்சி மூட்டிய தீ, இத்–தா–லியை புரட்டி எடுத்து, முச�ோ–லி–னியை த�ொந்–த–ரவு செய்–தது. எல்– ல ா– வ ற்– று க்– கு ம் மேலாக ஜார் மன்– ன – ரி ன் ஆட்–சியை அகற்–றி–விட்டு ரஷ்–யாவை கைப்–பற்–றி –யி–ருந்த ப�ோல்ஷ்–விக் கட்–சி–யி–னர், ஸ்டா–லின் தலை– மை–யில், ஒவ்–வ�ொரு காலனி நாட்டி–லும் இயங்–கிக் க�ொண்–டிரு – ந்த கம்–யூனி – ஸ்ட் கட்–சிக – ளுக்கு நம்–பிக்கை அளித்–துக் க�ொண்–டி–ருந்–தார்–கள். எனவே இம்–மூ–வ–ரும் - ஜப்–பான், ஜெர்–மனி, இத்–தாலி - கூட்டு சேர்ந்–தார்–கள். தங்–களுக்–குள் உலக நாடு– க ளை பங்– கீ டு செய்– து க�ொள்ள புறப்–பட்டார்–கள். இந்த ‘அச்சு நாடு–க–ளை’ எதிர்த்து இங்–கி–லாந்து, பிரான்ஸ் உள்–ளிட்ட மற்ற நாடு–கள் -

‘நேச நாடு–கள்’ என்–னும் பெய–ரில் கைக�ோர்த்–தன. இரண்–டாம் உல–கப் ப�ோர் வெடித்–தது. இந்த சம–யத்–தில்–தான் ஜப்–பான் ஒரு காரி–யத்தை செய்–தது. தன்–னைப் ப�ோலவே வள– ரும் நாடாக இருந்த; ‘கிரேட் பிரிட்ட–னை’ ப�ோல் உலகை ஆ ள த் து டி த ்த ; க னி ம வளங்–கள் உள்–ளிட்ட மூலப் – ப �ொ– ரு ட்– க ளை அப– க – ரி க்க காலனி நாடு–களில் பங்கு கேட்ட அமெ–ரிக்கா மீது அமெ–ரிக்க துறை–மு–க–மான பியர்ல் ஹார்–பர் (Pearl harbor) மீது டிசம்–பர் 7, 1941 அன்று குண்டை வீசி–யது. அப்–பாடா... இனி அமெ–ரிக்கா வாலை ஆட்டாது... என நிம்–ம–தி–யு–ட–னும் இறு–மாப்–பு–ட–னும் இங்–கி–லாந்– தின் ஆளு–கைக்கு உட்–பட்டி–ருந்த மலாயா என்–கிற மலே–சி–யா–வுக்–குள் ஜப்–பான் நுழைந்–தது. ஆ யி – ர க் – க – ண க் – க ா ன இ ங் – கி – ல ா ந் து ஆஸ்–தி–ரே–லிய ப�ோர்க் கைதி–கள் உயிர் இழக்–க– வும், லட்–சக்–க–ணக்–கான தமி–ழர்–கள் பலி–யா–க–வும் கார–ண–மாக அமைந்த உயிர் எடுத்த உயிர்ப் பாதைக்–கான வித்து இங்–கி–ருந்–து–தான் த�ொடங்–கு–கி–றது.

(த�ொட–ரும்)

பரபரபபபான விறபனனயில்

ðFŠðè‹

ரைட்டர்ஸ் உலா யுேகிருஷ்ோ

u150 எழுதத் துடிக்கும் சபணகளுக்கான எனர்ஜி டானிக்

ஹ�ாம் கார்்டன் ச்தாட்டக்களல நிபுணர்

�ோ.வினதசேனட்

உஙகள் இலலத்்த இனி்ேயாக்கும் அரு்ேயான தாவரஙக்ள வளர்க்க ஒரு ்கடு!

u100

ததும்பி வழியும் ம�ௌனம் அ.தேண்ணிலோ

u160

வாசிபபு சுவாரஸயத்்தத் தாணடிய தீவிரோன ஆழேன உ்ரயாடல

பிரதி வேண்டுவேோர் த�ோடர்புத�ோள்ள: சூரியன் பதிபபகம், 229, �சவசேரி வரோடு, மயிலோப்பூர், தசேன்னை-4. வ�ோன: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதி�ளுக்கு : தசேன்னை: 7299027361 வ�ோ்ே: 9840981884 வசேலம்: 9840961944 மது்ர: 9940102427 திருசசி: 9840931490 தெல்ல: 7598032797 வேலூர்: 9840932768 புதுசவசேரி: 9841603335 ெோ�ர்வ�ோவில: 9840961978 த�ங�ளூரு: 9844252106 மும்்�: 9987477745 தடலலி: 9818325902

புத�� விற�்னையோ்ளர்�ள / மு�ேர்�ளிடமிருந்து ஆர்டர்�ள ேரவேற�ப்�டுகின்றனை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

5.7.2015 வசந்தம்

15


மிதித்து விளையாடு

பாப்பா!

கா

!!

Yes

an

லை– யி ல் அலு– வ – ல – க த்– து க்கு நமக்கு சுவா–சிக்க இல–வச இணைப்பு. இரு–சக்–கர வாக–னத்– மேலை– ந ா– டு – க ள் இதற்கு தீர்– தில�ோ, காரில�ோ வாக சைக்–கிளை காண்–கி–றார்–கள். கிளம்–பு–கி–றீர்–கள். இரு–பது இரு–பத்– வட அமெ–ரிக்கா மற்–றும் ஐர�ோப்– தைந்து கில�ோ மீட்டர் தூரத்–துக்கு பிய நாடு– க ளில் இருப்– ப – வ ர்– க ள் பய–ணிக்க உங்–களுக்கு எவ்–வ–ளவு க�ொஞ்– ச ம் ச�ொகு– ச ா– ன – வ ர்– க ள் நேரம் ஆகி–ற–து? என்– ப – த ால், எலெக்ட்– ரி க் சைக்– இ ந் – தி ய ப ெ ரு – ந – க – ர ங் – க ளி ல் கிள்–களை வாங்–கு–வ–தில் ஆர்–வம் ‘பீக் அவர்ஸ்’ என்று ச�ொல்–லப்–ப– காட்டு–கி–றார்–கள். இயல்–பி–லேயே டும் காலை மற்–றும் மாலை நேரங்– உழைப்–பா–ளி–க–ளான ஆசி–யர்–கள் களில் (அலு– வ – ல – க ம் / கல்– லூ ரி / மிதித்து ஓட்டும் பாரம்–ப–ரி–ய–மான பள்–ளிக்கு செல்ல மற்–றும் திரும்ப) சைக்–கிள்–களையே – விரும்–புகி – ற – ார்–கள். சரா–சரி – ய – ாக 10 கி.மீ. வேகத்–தில்–தான் குறிப்–பாக சீனா. இந்–நாட்டின் பய–ணிக்க முடி–கிற – து என்–கிற – ார்–கள். த ல ை – ந – க – ர ா ன பீ ஜி ங்கை , உங்–களு–டைய பைக் அனா–யச – ம – ாக 80 கி.மீ. ‘சைக்–கிள்–களின் பேர–ர–சு’ என்று செல்–ல– வேகத்– தி ல் பய– ணி க்– க க்– கூ – டி ய சக்தி மாக குறிப்–பி–டு–கி–றார்–கள். சைக்–கிள் e க�ொண்– ட து என்– ற ா– லு ம், நீங்– க ள் வைத்–தி–ருப்–ப–தை–யும், அதை ஓட்டு– C !W உருட்டிக் க�ொண்–டு–தான் செல்ல வ–தை–யும் சீனர்–கள் கவு–ர–வ–மாக வேண்–டி–யி–ருக்–கி–றது. கரு–து–கி–றார்–கள். ஒட்டு–ம�ொத்த இந்–திய – ர்–களுக்கு வாங்–கும் சக்தி மக்– க ள் த�ொகை– ய�ோ டு ஒப்– அதி–கரி – த்–திரு – க்–கிற – து. த�ொழில்–நுட்– பிட்டுப் பார்த்–தால், அங்கே சுமார் பம் வெகு–வாக முன்–னே–றி–யி–ருக்– 40 சத– வி – கி – த ம் பேர் சைக்– கி ள் ï £ † ì è£ கி – ற து . ம�ோ ட ்டா ர் வ ா க – ன ங் – பயன்–ப–டுத்–து–கி–றார்–கள். ¬ களை இன்று கீழ்–ந–டுத்–தர மக்–களும் உல–கில – ேயே மகிழ்ச்–சிய – ான நாடு வாங்–கும் வகை–யில் தவணை முறை–யில் என்று டென்– ம ார்க்கை ச�ொல்– வ ார்– விற்–கப்–ப–டு–கி–றது. இந்த கார–ணங்–க–ளால் கள். அந்– ந ாட்டு மக்– க ள் குறைந்த தூர வாக–னங்–களின் எண்–ணிக்கை அதி–க–ரிக்– பய–ணத்–துக்கு எப்–ப�ோ–தும் சைக்–கி–ளை– கி–றது. எல்–லாம் சரி–தான். தான் பயன்–ப–டுத்–து–கி–றார்–கள். அத–னால்– ஆனா–லும் - – தான் என்–னவ�ோ, அவ்–வ–ளவு மகிழ்ச்–சி– நம் பாட்டன்–களும், முப்–பாட்டன்–களும் யாக இருக்–கி–றார்–கள். சுமார் அரை க�ோடி மாட்டு வண்– டி – யி – லு ம், குதிரை வண்– டி – யி – பேர் வசிக்– கு ம் நாட்டில் த�ோரா– ய – ம ாக லும் என்ன வேகத்– தி ல் ப�ோனார்– க ள�ோ, 45 லட்– ச ம் சைக்– கி ள்– க ள் இருக்– கி ன்– ற ன அதே வேகத்–தில்–தானே நாமும் அன்–றா–டம் என்– ற ால் சும்– ம ா– வ ா? நெதர்– ல ாண்– டெ ல்– பய– ணி க்க வேண்– டி – யி – ரு க்– கி – ற – து ? கூடு– த ல் லாம் இன்–னும் அட்ட–கா–சம். 99 சத–வி–கி–தம் விளை– வ ாக ம�ோட்டார் வாக– ன ங்– க ள் பேரி– ட ம் சைக்– கி ள் இருக்– கி – ற – த ாம். அதா– வெளி–யி–டும் நைட்–ரஸ் ஆக்–ஸைட், கார்–பன் வது, அந்–நாட்டின் குடி–மக்–கள் ஒவ்–வ�ொ–ரு– ம�ோனாக்–ஸைட் ப�ோன்ற நச்–சுப்–பு–கை–களும் வ – ரி – ட – மு ம் ஒ ரு சை க் – கி ள் . ஜ ெ ர் – ம னி ,

‚°

²ˆî

35

16

வசந்தம் 5.7.2015


ஸ்வீ–டன், நார்வே, பின்–லாந்து, ஜப்–பான், சுவிட்– ச ர்– ல ாந்து, பெல்– ஜி – ய ம் நாடு– க ளில் எல்–லாம் சைக்–கிள்–தான் ஹீர�ோ. நாம�ோ நாலு கில�ோ மீட்ட– ரு க்– கு ம் கு றை – வ ா ன தூ ர த் – து க் கு கூ ட க ா ரை கஷ்–டப்–பட்டு பார்க்–கிங்–கில் இருந்து ரிவர்ஸ் எடுத்து, இரண்டு சிக்–னலி – ல் நின்று, பார்க்–கிங் தேடி வண்–டியை உருட்டி கஷ்–டப்–பட்டுக் க�ொண்–டி–ருக்–கி–ற�ோம். அதிக மக்–கள் த�ொகை க�ொண்ட சீனா– தான் சைக்– கி ள் மேட்ட– ரி ல் நம்– ப ர் ஒன். ஐம்–பது க�ோடி சைக்–கிள்–கள். அம்–மா–டிய�ோ – வ். மக்–கள் த�ொகை அடிப்–படை – யி – ல் இரண்–டாம் இடம் நமக்–கு–தான் என்–றா–லும் உல–கி–லேயே சைக்–கிள் அதி–கம் பயன்–படு – த்–தும் நாடு–களின் டாப் 10 பட்டி–ய–லில் இந்–தியா இல்லை. என்ன கார–ணம்? இது ஏழை–களின் வாக–னம் என்று நம்–பு– கி– ற�ோ ம். எனவே சைக்– கி ள் ஓட்டு– வ தை கவு–ர–வக் குறைச்–ச–லாக கரு–து–கி–ற�ோம். நேரத்தை மிச்–சப்–படு – த்–துவ – த – ாக நினைத்து பைக்–கைய�ோ, காரைய�ோ எடுத்து டிராஃ –பிக்கை ஜாம் ஆக்கி ஊர்ந்து செல்–கி–ற�ோம். உழைப்– பு க்கு அஞ்– சு – கி – ற�ோ ம். சைக்– கிளை மிதித்–தால் வியர்வை வரும். டயர்ட் ஆகி–டு–வ�ோம் என்று நம்–பு–கி–ற�ோம். இந்–திய சாலை–களில் சைக்–கிள் ஓட்டு–வது பாது–காப்–பா–ன–தல்ல என்று நமக்கு நாமே ந�ொண்–டிச்–சாக்கு ச�ொல்–லிக் க�ொள்–கிற�ோ – ம். ம�ோட்டார் பைக் மற்–றும் கார் வாங்க ஈ ஸி – ய ா க பை ன ா ன் ஸ் கி டை க் – கி – ற து . தேவைய�ோ தேவை–யில்–லைய�ோ இ.எம்.ஐ. ப�ோட்டு, மாதத்–தவ – ணை கட்ட தாவூ தீர்ந்து, பெட்– ர�ோ ல் ப�ோட்டு டவு– ச ர் கழன்று,

ஹெல்–மெட் (ஜூலை ஒண்–ணாம் தேதி–யி– லி– ரு ந்து பில்– லி – ய – னி ல் உட்– க ா– ரு – வ – ரு க்– கு ம் சேர்த்து), வரு– ட ா– வ – ரு – ட ம் இன்– சூ – ர ன்ஸ்... என்று பர்ஸை காலி– ய ாக்– கி க் க�ொண்– டி – ருக்–கி–ற�ோம். புது–சாக வாங்–கும்–ப�ோ–து–தான் ம�ோட்டார் வாக–னங்–கள் நம் கண்ட்–ர�ோலி – ல் இருக்–கும். பிறகு அதன் கட்டுப்–பாட்டுக்கு நாம் அடி–மை–கள். தேவை–யா? உடல் இளைக்க காலை / மாலை ஓட்டம், ஜிம், டயட் உணவு என்– றெ ல்– ல ாம் ஏன் கஷ்–டப்–பட வேண்–டும்? சைக்–கிள் ஓட்டி–னா– லேயே அதுவே உடற்–ப–யிற்–சி–யாகி நம்மை ஃபிட்டாக வைத்–துக் க�ொள்–ளும் இல்–லை–யா? சைக்–கிள்–க–ளால் sound pollution மற்–றும் காற்–று–மாசு சுத்–த–மாக இல்லை என்–ப–தால் மனச்–ச�ோர்வு குறை–யும் என்று ஆய்–வா–ளர்– கள் சந்–த�ோ–ஷ–மாக அறி–விக்–கி–றார்–கள். நம் காதில்–தான் அவை விழ–வில்லை. நக–ரங்–களின் ப�ோக்–கு–வ–ரத்–துச் சிக்–கலை வெகு–வாக குறைக்–க–லாம். பார்க்–கிங் பிராப்– ளம் சுத்–த–மாக இல்லை. முக்–கி–ய–மாக நாம் கஷ்–டப்–பட்டு சம்–பா–திக்–கும் பணத்தை காவு வாங்–காது. பரா–ம–ரிப்–புச் செலவு ர�ொம்ப ர�ொம்ப குறைவு. தனி– ம – னி – த ர்– க ள் சைக்– கி ள் ஓட்டு– வ – தி ல் ஆர்–வம் காண்–பிக்க வேண்–டும். இத–னால்,

இந்த இரண்டு பக்–கங்–களில் விவ–ரிக்–கப்–பட்டி– ருக்–கும் பிரச்–னை–கள் மட்டு–மின்றி, இதில் இட–வ–சதி கருதி நாம் குறிப்–பி–டா–மல் விட்டி– ருக்–கும் இரண்டு லட்–சம் பக்–கங்–களுக்கு மிகாத பல சிக்–கல்–களுக்–கும் சைக்–கிள் நல்ல தீர்வு. அர–சும் சைக்–கிளை ஊக்–கு–விக்க வேண்–டும். சைக்–கிள் ஓட்டி–களுக்கு சாலை–யில் தனிப்– பாதை அமைத்–துத் தரு–வது ப�ோன்ற ய�ோச– னை–களை பரி–சீ–லிக்க வேண்–டும். சமீ–ப–கா–ல– மாக த�ொழில்–நுட்–ப–ரீ–தி–யாக சைக்–கிள்–களில் எவ்– வ – ள வ�ோ வச– தி – க ள் கூடிக்– க�ொண்டே ப�ோகி– ற து. அதை– யெ ல்– ல ாம் நாம் பயன்– ப–டுத்–திக் க�ொள்ள வேண்–டா–மா? சைக்– கி ள்– த ான் தேசப்– பி தா மகாத்மா காந்தி, நமக்கு பரிந்– து – ரைத்த வாக– ன ம் சார்.

(ஆராய்–வ�ோம்) 5.7.2015 வசந்தம் 17


ஊட்டி–யில் அரசு ப�ோக்–கு–வ–ரத்–துக் கழ–கம் சார்–பி ல் நடந்த புதிய பஸ்–கள் இயக்க விழா–வில் அதி–கா–ரி–கள் மிக–வும் கஷ்–டப்–பட்டு பச்–சைக் கல–ரில் ரவா லட்டு தயா–ரித்து பய–ணி–களுக்கு விநி–ய�ோ–கம் செய்–தார்–க–ளா–மே? - பி.கவிதா நர–சிம்–மன், க�ோவை.

இ த�ோ டு வி ட்டா ர் – க ள் . சி க் – ன ல் விளக்–குக – ள் எல்–லா–வற்–றையு – ம் அம்–மா–வுக்–காக பச்–சை–யாக மாற்–றும் ஐடியா நல்–ல–வேளை யாருக்–கும் வர–வில்லை.

நயன்–தாரா - இயக்–குந – ர் விக்–னேஷ்

சிவன் காதல் திரு–ம–ணத்–தில் முடி–யு–மா? - ப.முரளி, சேலம்.

செல்ஃபி எடுப்–பதை – ய – ெல்–லாம் வைத்து ஒரு முடி–வுக்கு வர முடி–யாது.

ì£

ஒன்றை எடுத்–து–வி–டுங்–க–ளேன்?

- குலசை நஜி–மு–தீன், காயல்–பட்டி–னம்.

‘மாப்–பிள்ளை என்ன பண்–றார்–?’ ‘அட்–மினா இருக்–கார்...’ ‘வெரி–குட். எந்த கம்–பெ–னி–ல–?’ ‘நாலைஞ்சு வாட்ஸ்– அ ப் குரூப்– பு க்கு அட்–மினா இருக்–கார்..!’

‘ வ ா ட் ஸ் – அ ப் – பி ல் தி ட் டி – ன ா ல் ரூ.44 லட்–சம் அப–ரா–தம்’ என்று துபா–யில் புதிய சட்டம் விதிக்–கப்–பட்டுள்–ள–தே? - கணே–சன், சென்னை - 110

‘அத இங்க க�ொண்டு வர–ணுங்–கி–றேன்...’ என முதல் குரல் க�ொடுப்– ப – வ – ர ாக நம் கேப்–டன் இருப்–பார்.

‘ கு ர ங் – கி – லி – ரு ந் – து – த ா ன்

மனி– த ன் பிறந்– த ான்...’ என்– கி–றார்–களே. மீதி குரங்–கு–கள் ஏன் மனி–த–னாகவில்லை?

œ

வாட்ஸ்–அப்–பில் ரசித்த ஜ�ோக்

™è

ð ¬ñ F

- ஸ்டீ–பன், நெல்லை.

டார்– வி ன் இருந்– தி – ரு ந்– த ால் இதை– ய ெல்– ல ாம் கேட்டு நாம் குரங்– க ா– க வே இருந்– தி – ரு க்– க – ல ாம�ோ என்று நினைத்–தி–ருப்–பார்.

ஓர் ஆண் ஒரு பெண்ணை காத– லிக்–கும்–ப�ோத�ோ ஒரு பெண் ஓர் ஆணை காத–லிக்–கும்–ப�ோத�ோ அது ட்ரூ லவ்வா, டைம்–பாஸ் லவ்வா, இன்–பாச்–சு–வே–ஷன் லவ்வா என்று எப்–ப–டிக் கண்–டு–பி–டிப்–ப–து? - டி.திவ்யா தின–க–ரன், கரி–வேடு கிரா–மம்.

முத– லி ல் ஒன்று தெளி– வ ாக்கி விடுங்– கள். நீங்– க ள் காத– லி க்– க ப் ப�ோகி– றீ ர்– க ளா இல்லை காத–லைப் பற்றி பிஎச்டி பண்–ணப் ப�ோகி–றீர்–களா.

தேர்– த ல் கமி– ஷ ன், விசா– ர ணை கமி–ஷன் என்ன வேறு–பா–டு?

- த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம்.

விசா– ர ணை கமி– ஷ ன் விசா– ரி க்– க வே விசா–ரிக்–காது. தேர்–தல் கமி–ஷன் கண்–டுக்–கவே கண்–டுக்–காது.

18

வசந்தம் 5.7.2015


‘கால்– க ளை காப்– ப ாத்– த – ணு ம்னா

செருப்பை ப�ோட–ணும்னு புத்தி இருக்கு. தலையை காப்– ப ாத்– த – ணு ம்னா ஹெல்– மெட்டை ப�ோட–ணும்னு புத்–தி இல்–லைய – ா’ என்று ஆவே–சப்–பட்டி–ருக்–கி–றாரே கமல்? - ச.ஜான்–ரவி, க�ோவில்–பட்டி.

அந்த ‘பாப– ந ா– ச ம்’ குடும்– ப ம் ம�ொத்– த – மும் ஹெல்– மெட்டே ப�ோடா– ம ல் ஒரே ம�ொபட்டில் பய– ணி க்– கி – ற து. அந்த புத்– தி – யில்–லாத குடும்–பத்தை பற்–றித்–தான் காட்ட– மாக பேசி–யி–ருப்–பார்.

‘ ப ல ஆ ண் – ட ா க

ப �ோ ர் பு ரி – ய ா – த – த ா ல் ராணு– வ த்– தி ன் மீதான மரி– ய ாதை குறைந்– து – விட்ட–து’ என அமைச்–சர் மன�ோ–கர் பாரிக்–கர் கூறி– யி–ருப்–பது ஏற்–கத்–தக்–கத – ா?

- ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம்.

ப�ோரும் அதன் க�ொடிய அழி– வு ம் தரு– கி ன்ற துயர் அதை அனு– ப – வி த்– த – வ ர்– களுக்கே நன்கு புரி– யு ம். அமை– தி க்– க ாக உல– க மே ப�ோரா– டி க்– க�ொ ண்– டி – ரு க்– கு ம்– ப�ோது, ப�ோரை ஒரு கவு–ரவ சின்–னம – ாக கரு–து– வதை எந்–தவ – கை – யி – லு – ம் ஏற்–கவே முடி–யாது.

தமிழ்–நாட்டில்

க�ொலை, க�ொள் ளை அதி– க – ரி த்து வரு– வ – த ற்கு கார– ணம் என்–ன? - ரவி, மதுரை.

காவல்–துறை.

ந ரேந் – தி ர

ம�ோ டி எ ன்ற நினைப்–பில் லலித் ம�ோடிக்கு சுஷ்மா உ த வி செ ய் – து – விட்டா–ர�ோ? - உமரி ப�ொ.கணே–சன், மும்பை.

இதைத்–தான் ரூம் ப�ோட்டு ய�ோசிப்– பது என சான்–ற�ோர் கூறு–வர்.

‘நடி–கர் விஷாலை அர–சி–யல்–வா–தி–கள் தூண்–டி–வி–டு–கின்–ற–னர்’ என்–கி–றாரே நடி–கர் சரத்–கு–மார்?

- கே.பிர–பா–வதி, மேல–கி–ருஷ்–ணன்–பு–தூர்.

அர– சி – ய ல்– வ ா– தி – க ள் எல்– ல ாம் விவ– க ா– ர – மா– ன – வ ர்– க ள் என ச�ொல்ல வரு– கி – ற ாரா சமத்–துவ மக்–கள் கட்சி தலை–வர்–?!

நிதீஷ் - லாலு

கூட்டணி தேறு–மா?

- அ.குண–சே–க–ரன், புவ–ன–கிரி.

லாலு–வின் கடந்த கால சரித்– தி – ர த்தை வைத்து பார்த்–தால், அவ–ரு–டன் கூட்டணி என்–பது, எப்–ப�ோ–தும் எது–வும் நடக்–கல – ாம் என்–கிற தலை மேல் கத்தி த�ொங்–கு–கிற நிலை–தான்.

‘எமர்–ஜென்சி பற்றி, தான் கூறிய கருத்து எந்த தனி நப–ரையு – ம் பற்–றிய – து அல்ல. காங்– கி – ர ஸை மன– தி ல் வைத்– து – த ான் ச�ொன்– ன ேன்’ என்ற அத்– வ ா– னி – யி ன் பேச்சு குறித்–து? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.

மன–சில் இருப்–பதை பூட–கம – ாக புரி–யும்– படி ச�ொல்–லி–வி–டு–வது, பிறகு அப்–ப–டிச் ச�ொல்–ல–லையே என மழுப்–பு–வது என்று கழு–வு–கிற மீனில் நழு–வு–கிற மீனா–கத்–தான் இருக்–கி–றார்.

நாட்டா–மை–யாரே எல்லா குழந்–தை– களுமே ப�ொம்–மைக – ளை விரும்–புவ – தே – ன்? - டி.ஸ்டீ–பன் செல்–ல–துரை, தென்–காசி.

எந்–தக் காலத்–தில் இருக்–கிறீ – ர்–கள். ப�ொம்மை எல்– ல ாம் இப்போ எங்கே இருக்– கி – ற து. குஞ்– சு – கு – ளு – வ ான் எல்– ல ாம் ஃபேஸ்– பு க்– கி ல் கேண்டி கிரஷ் விளை–யா–டிக்–க�ொண்–டிரு – க்–கிற – து.

5.7.2015 வசந்தம்

19


84

னால் தன் மனை–வியு – ட – ன் அதி–கப – ட்–சம் ஒரு மாதம் தாவூத் இப்–ரா–ஹிம் பம்– ப ா– யி ல் வாழ்ந்– தி – ரு ந்– த ால் அதி– க ம். வெறும் பதி–னைந்து நாட்–கள்–தான் அவர்– கள் இல்–லற வாழ்க்கை இந்–தி–யா–வில் நடந்–த– தாக ச�ொல்–கி–றார்–கள். அ த ற் – கு ள் க்ரை ம் பி ர ா ஞ் சி ன் பி டி இறு–கி–விட்டது. சபீர் படு– க�ொலை செய்– ய ப்– ப ட்டதை த�ொடர்ந்து பம்–பா–யில் நடந்த நிகழ்–வு–களும், Gang War’sம் காவ–லர்–களின் தூக்–கத்தை கெடுத்– தன. அர–சி–யல் மட்டத்–தி–லி–ருந்து அழுத்–தம்

20

வசந்தம் 5.7.2015

அதி–க–ரித்–தது. மக்–கள் சாலை–யில் கூடிக் கூடி பேச ஆரம்–பித்–தார்–கள். ஊட–கங்–கள் தங்–கள் பேனா முனையை கூர் தீட்டின. காவல்–துறை – யி – ன் கையா–லா–கா–தன – த்தை அம்–ப–லப்–ப–டுத்–தின. இதற்கு மேலும் தங்–கள் முன்–னாள் ஊழி– ய– ர ான இப்– ர ா– ஹி ம் கஸ்– க – ரு க்– க ாக சும்மா இருக்–கக் கூடாது. தாவூத்–தையு – ம், அவன் அடி– யாட்–கள – ை–யும் கைது செய்தே ஆக வேண்–டும் என்ற நிலைக்கு காவல்–துறை தள்–ளப்–பட்டது. சமத் கானின் க�ொலை அந்த முடிவை துரி–தப்–ப–டுத்–தி–யது.


ப ம் – ப ா ய் ப �ோ லீ ஸ் க மி – ஷ – ன – ர ா க டி.எஸ்.ச�ோமன் (D.S.Soman) அப்– ப �ோது இ ரு ந் – த ா ர் . நே ர் – மை – ய ா – ன – வ ர் . வி லை – ப�ோ–கா–தவ – ர் என்ற பெயர் அவ–ருக்கு இருந்–தது. பதான்ஸ்– க ளின் க�ொட்டம் அடங்– கி – யி – ரு ந்– த து, அடக்– க ப்– ப ட்டி– ரு ந்– த து. ஹாஜி மஸ்– த ா– னு ம், கரீம் லாலா– வு ம், வர– த – ர ாஜ முத– லி – ய ா– ரு ம் வயது கார– ண – ம ாக உடல் தளர்ந்து முடங்–கி–யி–ருந்–தார்–கள். ஆட்டம் ப�ோட்டுக் க�ொண்– டி – ரு ந்– த து தாவூத் மட்டுமே. பம்– ப ாய் மட்டு– ம ல்ல... குஜ– ர ாத் துறை– மு – க – மு ம் அவன் கட்டுப்– பாட்டுக்–குள் வந்–திரு – ந்–தது. கடத்–தல் ப�ொருட்– களின் நட–மாட்டத்தை தடுக்க முடி–யவி – ல்லை. இந்–திய ப�ொரு–ளா–தா–ரமே ஆட்டம் கண்–டு க�ொண்–டி–ருந்–தது. இதற்–கெல்–லாம் சூத்–தி–ர–தா–ரி–யாக விளங்– கும் தாவூத்தை கைது செய்– து – வி ட்டால், தேசமே பலப்– ப ட்டு விடும். பம்– ப ா– யு ம், குஜ–ராத்–தும் அமை–திப் பூங்–கா–வா–கி–வி–டும். மக்– க ளும் குற்– ற ம்– ச ாட்டு– வ தை நிறுத்– தி – வி–டு–வார்–கள். டி.எஸ்.ச�ோமன் மட்டு– ம ல்ல, ம�ொத்த காவல்–து–றை–யும் இந்த உண்–மையை உணர்ந்– தி–ருந்–தது. எனவே கமி–ஷ–ன–ருக்கு முழு சுதந்–தி–ரம் க�ொடுத்–தார்–கள். ஏற்–க–னவே சின்–னச் சின்ன வழக்–கு–களுக்– காக தாவூத்– து க்கு ஜாமீன் வழங்– க ப்– ப ட்டி– ருந்–தன. அவை அனைத்–தை–யும் கேன்–சல் செய்– த ார்– க ள். இன்ஸ்– பெக் – ட ர் மதுக்– க ர் ஸின்டே ப�ோன்ற துடிப்–பான, கறை படி–யாத, நாற்–பது வய–துக்கு உட்–பட்ட காவ–லர்–களை தேர்ந்–தெ–டுத்து ரக–சிய குழு ஒன்றை அமைத்– தார்–கள். விஷ–யம் வெளி–யில் கசிந்–து–வி–டக் கூடாது என்–ப–தில் கவ–ன–மாக இருந்–தார்–கள். கார– ண ம், தாவூத்– தி ன் பலம். காவல்– து–றையி – ன் இண்டு இடுக்–கில் எல்–லாம் அவன் ஆட்–கள் ஊடு–ருவி இருந்–தார்–கள். மாத சம்–ப– ளம் அல்ல... வார சம்–ப–ளத்தை அவ–னி–ட– மி–ருந்து பெற்–றுக் க�ொண்–டிரு – ந்த காவ–லர்–களின் எண்–ணிக்கை நூற்–றுக்–க–ணக்–கில் இருக்–கும். என– வே – த ான் டி.எஸ்.ச�ோமன் ரக– சி ய படையை அமைத்–தார். ஆப–ரேஷ – னு – க்கு நாள் குறித்–தார். குறிப்–பிட்ட தினத்–தன்று காவல்– து றை வாக– ன ங்– க ள் முஸாஃ– பீ ர்– கா–னா–வுக்–குள் நுழைந்–தன. அதி– க ா– லை – யி ல் எதற்– க ாக இத்– த னை ப�ோலீ–சார் வந்–தி–ருக்–கி–றார்–கள் என்று யாருக்– கும் புரி– ய – வி ல்லை. பேப்– ப ர் வாங்– க – வு ம், டீ குடிக்–கவு – ம் சென்–று க�ொண்–டிரு – ந்த மக்–கள் வியப்–பு–டன் பார்த்–தார்–கள். சரி–யாக D company இயங்கி வந்த கட்டி–டத்–தின் முன் -

அனைத்து வாக–னங்–களும் நின்–றன. திபு–தி–பு–வென ஆயு–தங்–களு–டன் ஒரு பிரிவு காவ–லர்–கள் நுழைந்–தார்–கள். மறு பிரி–வின – ர் கட்டி–டத்தை சுற்றி வளைத்– தார்–கள். உள்ளே அவர்–கள் கண்ட காட்சி அதிர வைத்–தது. வாரத்– தி ன் 7 நாட்– க ளும், 24 மணி நேரங்–களும் ஓர் அலு–வ–ல–கம் இயங்–கி–னால் எப்–ப–டி–யி–ருக்–கும்? அப்–படி – யி – ரு – ந்–தது தாவூத்–தின் இருப்–பிட – ம். ஜன்– ன ல்– க ளுக்கு சீலை– க ள் அமைக்– க ப்– பட்டி–ருந்–தன. அவை காற்–றில் ஆடின. ஆஷ்ட்– ரே – யி ல் அணை– ய ாத நிலை– யி ல் சிக–ரெட் புகைந்–து க�ொண்–டி–ருந்–தது. நிக்– க�ோ ட்டின் மணம் அறை எங்– கு ம் சூழ்ந்–தி–ருந்–தது. நாற்–கா–லி–கள் அனைத்–தி–லும் குஷன். யார�ோ அதில் அமர்ந்– தி – ரு ந்– த – த ற்கு அடை–யா–ள–மாக நடு–வில் அவை உள்–வாங்–கி– யி–ருந்–தன. ஆனால் மனித நட–மாட்டம் மட்டும் அங்–கில்லை. தாவூத் இப்–ரா–ஹிம் மட்டு–மல்ல... அவ–னது கடைசி அடி– ய ாள் கூட அங்கு தென்– ப – ட – வில்லை. ச�ொல்லி வைத்–தது ப�ோல், ப�ோட்டது ப�ோட்ட–படி சக–ல–ரும் முக்–கி–ய–மான ஆவ– ணங்–களு–டன் தலை–மறை – வ – ா–கிவி – ட்டார்–கள். காவல்–துறை அச–ர–வில்லை. முஸாஃ–பீர்–கா–னா–வில் இருந்த அனைத்து வீடு–களுக்–குள்–ளும் நுழைந்து சலித்–தது. அங்கு வாழ்ந்–தவ – ர்–களை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டது. யாருக்–கும் எந்த பதி–லும் கிடைக்–கவி – ல்லை. தாவூத் எப்–படி தப்–பி–னான்? மறு– ந ாள் இந்– த க் கேள்– வி – யை த்– த ான் ஆப–ரே–ஷ–னில் ஈடு–பட்ட காவ–லர்–களி–டம் டி.எஸ்.ச�ோமன் கேட்டார். அனை–வ–ரும் விடை தெரி–யா–மல் தலை– க–விழ்த்–தார்–கள். ‘‘இப்– ப டி நின்னா என்ன அர்த்– த ம்– ? – ’ ’ டி.எஸ்.ச�ோமன் கத்– தி – ன ார். ‘‘நாம கைது செய்–யப் ப�ோற விஷ–யம், அவ–னுக்கு எப்–படி தெரிஞ்–ச–து–?–’’ ‘‘...’’ ‘‘இந்த ஆப–ரே–ஷன் பத்தி நம்–மைத் தவிர வேற யாருக்– கு மே தெரி– ய ாது... அப்– ப – டி – யி–ருக்–கி–றப்ப நியூஸ் லீக் ஆகி–யி–ருக்–குன்னா... நமக்–குள்ள ஒருத்–தர்–தான் கறுப்பு ஆடு... யார் அந்த ப்ளாக் ஷீப்?’’ ‘‘யாரு–மில்ல சார்...’’ சப் இன்ஸ்–பெக்–டர் வின�ோத் பட், குரல் க�ொடுத்–தார். ‘‘என்ன ச�ொல்–றீங்–க–?–’’

5.7.2015 வசந்தம்

21


‘‘உண்–மையை...’’ ‘‘புரி–ய–லையே...’’ ‘‘இங்க பாருங்க சார்...’’ ஒரு காகி–தத்தை எடுத்து கமி–ஷ–னர் முன்–னால் நீட்டி–னார். ‘‘நாம அவன் இடத்தை சுத்தி வளைக்–கற – து – க்கு 10 நிமி–ஷத்–துக்கு முன்–னாடி ஒரு ப�ோன்–கால் வந்–தி–ருக்கு...’’ அ ங் – கி – ரு ந்த அ ன ை – வ – ரு ம் ப ர – ப – ர ப் – பா–னார்–கள். டி . எ ஸ் . ச�ோ ம ன் அ ந்த க ா கி த த்தை வாங்–கிப் பார்த்–தார். த�ொலை–பேசி எண்–கள் நேர வாரி–யாக அதில் குறிப்–பிட – ப்–பட்டி–ருந்–தன. ‘‘ப�ோன் செய்–தது யாரு?’’ ‘‘நம்ம குழு–வுல யாரும் இல்லை சார்...’’ ‘‘இந்த நம்–பர் எந்த ஏரி–யாவை சேர்ந்–தது...’’ ‘‘...’’ ‘‘உங்–க–ளைத்–தான் வின�ோத் பட்...’’ தைரி– ய – ம ாக இடத்தை ச�ொன்– ன ார் அந்த சப் இன்ஸ்–பெக்–டர். கேட்ட டி . எ ஸ் . ச�ோ ம – னு க் கு த லை சுற்–றி–யது. ஏனெ–னில் அது மண்ட்–ரா–லயா பகு–தியை சேர்ந்–தது. அங்–கி–ருந்த ஒரு சீனி–யர் அர–சி–யல்–வா–தி– தான், தாவூத் கைது செய்–யப்–பட வேண்–டும் என அழுத்–தம் க�ொடுத்–த–வர். ஆப–ரே–ஷன் த�ொடர்–பான விவ–ரங்–களை டி.எஸ்.ச�ோமன் பகிர்ந்து க�ொண்–டது அவ–ரிட – ம் மட்டும்–தான். அந்த அர– சி – ய ல்– வ ா– தி – யு – ட ன் இருக்– கு ம் யார�ோ– த ான் தக– வ லை கசி– ய – வி ட்டி– ரு க் –கி–றார்–கள். அந்த நபரை கண்–டு–பி–டிப்–பது இய–லாத காரி–யம். ‘‘சரி... எல்லா இடத்–து–ல–யும் தாவூத்தை தேடுங்க...’’

22

வசந்தம் 5.7.2015

‘‘வாய்ப்–பில்லை சார்...’’ மதுக்–கர் ஸின்டே முணு–மு–ணுத்–தார். ‘‘ஏன்?’’ ‘ ‘ அ வ ன் து ப ா ய் க் கு த ப் – பி ச் சு ப�ோயிட்டான்...’’ ‘‘வாட்?’’ டி.எஸ்.ச�ோமன் அல– றி – ன ார். ‘‘அவன் பாஸ்– ப �ோர்ட்டை முடக்– கி – யி – ரு க்– க�ோம்...’’ ‘‘தெரி–யும் சார்... க்ரைம் பிராஞ்ச் கஸ்–ட– டில அவன் பாஸ்–ப�ோர்ட் இருக்கு. உய–ர–தி– கா–ரி–யான ராஜா தம்–பட், அதை லாக்–கர்ல வைச்–சி–ருக்–கார்...’’ ‘ ‘ அ ப் – ப – டீ ன்னா ல ா க் – க ர் – லே ந் து பாஸ்–ப�ோர்ட் எப்–படி வெளில ப�ோச்–சு–?–’’ ‘‘எங்–க–யும் அது ப�ோகலை சார்...’’ ‘‘என்–னய்யா ச�ொல்–றீங்–க–?–’’ ‘‘காலைல ப�ோய் செக் பண்–ணி–ன�ோம். ப ா ஸ் – ப �ோ ர் ட் அ தே ல ா க் – க ர் – ல – த ா ன் பாது–காப்பா இருக்கு...’’ ‘‘பிற–கெப்–படி அவன் துபாய் ப�ோனான்–?’– ’ ‘‘ப�ோலி பாஸ்–ப�ோர்ட்...’’ ‘‘...’’ ‘‘பம்– ப ா– யி – லி – ரு ந்து தில்– லி க்கு ப�ோய் அங்–கி–ருந்து துபாய்க்கு பறந்–தி–ருக்–கான்...’’ இ தைக் கே ட் டு இ டி ந் து ப �ோ ன து இந்–திய அரசு மட்டு–மல்ல. ஜெனா பாயும்–தான். மு ம்பை ம ா ஃ பி ய ா ர ா ணி – க ளி ல் மு த ன் – மை – ய ா – ன – வ – ர ா க இ ரு ந்த , ச ர்வ வல்– ல – மை – யு – ட ன் பவனி வந்த அவ– ர து வாழ்க்கை இதன் பிற–கு–தான் ஆட்டம் கண்–டது.

(த�ொட–ரும்)


5.7.2015 வசந்தம்

23


Supplement to Dinakaran issue 5-7-2015 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No.TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licenceTN / PMG (CCR) / WPP- 277/15-17

24

வசந்தம் 5.7.2015

Vasantham  
Vasantham  

Vasantham,Weekly,Books

Advertisement