Page 1

 

 2017

 2

 

Rs.

15

 01  2017 01


www.arumbupublications.in

 .  02

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு  நல்வாழ்த்துகள்

  2017 02  2017


இதழ் 12

மலர் 56

டிசம்பர் 2017

ப�ொறுப்பாசிரியர்கள்

   

முதன்மை ஆசிரியர்

அருள்திரு. முனைவர். ஆ. சிலுவை முத்து, ச.ச. ஆசிரியர்

ஜான் கென்னடி. இணை ஆசிரியர்

பேரா. சூ. குழந்தை இயேசு.

நிர்வாகக் குழு அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச.

17

ஆசிரியர் குழு மரிய லூயிஸ், தைரியம், அந்தோனிசாமி, அந்தோனி கிறிஸ்டி, பேட்ரிக் மத்தியாஸ், ஆன்டோ சகாயராஜ்.

09

பிழைத்திருத்தம் குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச.

05

சந்தா மேற்பார்வை சு. ஸ்டீபன் ராஜ்.

அஞ்சல் வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர் ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம் தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்

30

ரூ. 15 ரூ. 150 ரூ. 300

விளம்பரக் கட்டணம் முழுப்பக்கம் ரூ. அரைப்பக்கம் ரூ. கால்பக்கம் ரூ. பின்அட்டை ரூ. உள்அட்டை ரூ. நடுப்பக்கம் ரூ.



6000 3000 1500 12,000 10,000 10,000

செய்தி மலரில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி:

26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி கெல்லிஸ், சென்னை 600 010, 044 26612138/40 94447 99942, sbtamilssm@gmail.com www.arumbupublications.in

 2017

05 09 13 16 17 21 24 28 30 32

கிறிஸ்துமஸ் தாய்மையின் மேன்மையில் தழைக்குமே மனிதம் த�ோல்வியும் வெற்றிதான் அருளாளர் பிலிஃப் ரினால்டி கருத்தொளி உயிரின் மேன்மை அன்பே அடிப்படை நம்பகத்தன்மையை நமதாக்குவ�ோம் திருமணம் எனும் அருளடையாளம் ஞாயிறு மறையுரைகள்

Printed and Published by Rev. Fr. JOHN KENNEDY, on behalf of Salesian Publishing Society, 45, Landons Road, Kilpauk, Chennai - 600 010. Printed at VELLANKANNI PRINTERS, No. 53, Dr. Besant Road, Royapettah Chennai - 600 014. Editor: Rev. Fr. JOHN KENNEDY.

 ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.

03








“இது முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் ப�ோற்றும்” என்று மரியா முன்னுரைத்தார். சிலர் மரியாவைப் ப�ோற்றுவத�ோடு அமையாமல், அவரைத் தெய்வமாக வழிப்படவும் செய்கின்றனர். இஃது ஒரு வரம்பு மீறிய செயலே! மற்றொரு புறம், மரியா ஒரு வாடகைத் தாயாக, வெறும் கருவியாக இயேசுவைப் பெற்றார். அத�ோடு அவர் வேலை முடிந்துவிட்டது, என்று கூறி மரியாவை வெறுப்போடு ந�ோக்குவதும் வரம்பு மீறிய செயல்தான். மூன்றறிவு எறும்பு முதல் ஆறறிவு மனிதன் வரை, தாய்க்குலம் எதுவும் வெறும் கருவியாகச் செயல்பட்டு மகவளிப்பதில்லை. பெற்ற மகவைப் பேணிக்காப்பதில் உயிரையும் தரத் துணிந்து நிற்பது தாய்க்குலம். மரியா வெறும் கருவி என்றால், “உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊ டு ரு வு ம் ” என்று சிமிய�ோன் எதற்காகக் கூறினார்? ஏர�ோதின் வாளுக்குப் பாலன் இயேசு தாமாகத் தப்பிக்கவில்லை. அவரை மார்போடு அணைத்துக் க�ொண்டு எகிப்துக்கு ஓடியது மரியாதான். எருசலேம் ஆலயத்தில், “என்னை ஏன் தேடினீர்கள். நீங்கள் வெறும் கருவிதான். உங்கள் வேலை முடிந்துவிட்டது நீங்கள் ப�ோகலாம்” என்று இயேசு கூறவில்லை. மாறாக, அவர�ோடு நாசரேத் சென்று. அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.

மட்டும் ச�ொன்னார். “தண்ணீர் இரசமாக மாறுக” என்று அவர் ஒருவேளை உள்ளத்தால் நினைத்திருக்கலாம்! யாருக்குத் தெரியும்? கடவுளால் மட்டுமே இதைச் செய்ய முடியும். ஆதலால் இயேசுவே கடவுள் என்று மரியா, கூறாமல் கூறி, தாம் பெற்ற மீட்பரை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இறை நம்பிக்கையில் மரியா ஆபிரகாமையும் விஞ்சியவர். ஆண்டவரின் வாக்கு நிறைவேறும் என்று ஆபிரகாமும் நம்பினார் (த�ொ.நூ 15:6). மரியாவும் நம்பினார் (லூக். 1:46). தாங்கள் பெற்ற ஒரே மகனைப் பலி தர ஆபிரகாம் கடவுள் காட்டிய மலையிலும், மரியா கல்வாரி மலையிலும் நின்றனர். ஈசாக்கைக் காப்பாற்றிய கடவுள் இயேசுவைச் சிலுவை ம ரணத் தி னி ன் று காப்பாற்ற வி ல்லை . மரியா கடைசிவரைத் த ம து நம் பி க ்கை ய ை இ ழ க ் கா ம ல் சிலுவை அடியில் ம�ௌனமாக நின்றார். தமக்குக் கிடைத்த தாய் ப�ோல் உலகில் வேறு யாருக்குமே கிடைக்கவில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். தாம் பெற்ற அத்தாயன்பை எல்லாரும் பெறவேண்டுமென்று, சீடனிடம் “இத�ோ, உன் தாய்!” என்றார். மரியாவுக்குச் சீடனைக் காட்டி, “இத�ோ உன் மகன்!” என்றார். “ய�ோவானிடம்” என்று பெயர் குறிக்காமல், “சீடனிடம்” என்று ப�ொதுவாகக் கூறப்பட்டதால், இயேசுவுக்குச் சீடனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் இது ப�ொருந்தும். விவிலிய ம�ொழிநடையில் இதற்கு வேறு ப�ொருள் கூற முடியாது. இயேசுவைக் கடவுளாகவும் மரியாவைத் தாயாகவும் பெற்ற அனைவரும் பேறு பெற்றவரே! புத்தாண்டின் முதல் நாளை மரியாவின் தாய்மைக்கு ஒப்புக்கொடுத்துள்ள திருச்சபையும் பேறு பெற்றதே!





திருமுழுக்கு ய�ோவானையும் முந்திக்கொண்டு இயேசுவை உலகுக்கு அறிமுகம் செய்தது மரியாதான். அஃது இயேசுவின் விருப்பமாகவும்வும் இருந்தது. கானாவூர்த் திருமணத்தில், இரசம் தீர்ந்த பிரச்சினைக்கு இயேசுதான் தீர்வு என்பது மரியாவுக்கு மட்டுமே தெரியும். இரசம் இல்லையே என்ற மணமகனின் திண்டாட்டம் மட்டுமா? இயேசுவைப் பின் செல்வதா, வேண்டாமா என்கின்ற சீடர்களின் ஊசலாட்டமும் கூட, மரியாவின் க�ோரிக்கையால் விளைந்த புதுமையால் நின்றுப�ோனது. இயேசுவின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இயேசு தண்ணீரைத் த�ொடவும் இல்லை. தந்தையிடம் மன்றாடவும் இல்லை. “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்,” “இப்போது ம�ொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் க�ொண்டு ப�ோங்கள்” என்று

04

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துகள்

அருட்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச.

 மற்றவர்களைப் ப�ோல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவ�ோடும் இருப்போம்.

 2017


 அமெரிக்க இராணுவத்தில் உயர்ந்த பதவியிலமர்ந்து பணியாற்றி வந்த, தம் ஒரே மகன் சாமுவேல், ‘தீவிரவாதிகளால் க�ொலை செய்யப்பட்டான்’ என்ற செய்தியைக் கேட்டவுடன், அந்தப் பணக்காரத் தந்தை செயலிழந்து ப�ோனார். மனமுடைந்த நிலையில், அவர் தம் ச�ொத்துகளையும் மற்றும், தாம் பாதுகாத்து வந்த ஏராளமான கலைநயம் மிக்கப் ப�ொருட்களையும், ஏலக் கடைக்காரரிடம் ஒப்படைத்தார். ஏலம் த�ொடங்கும் நேரத்தில் அங்கு வந்த பெண் ஒருத்தி, தம்மைச் ‘சான்ரா’ என்று அறிமுகப்படுத்திக் க�ொண்டு, தாம் மரித்த சாமுவேலின் த�ோழியென்றும், உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலியென்றும் கூறி, தமது துயரை வெளிப்படுத்தினார். ஏலம் த�ொடங்கியது. முதலில் மரித்த சாமுவேலின் புகைப்படம் ஏலத்திற்கு வந்தது! இதற்குச் சந்தை மதிப்பு எதுவுமேயில்லாத காரணத்தால், யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை, மாறாகச் சிலர், இது ‘ஜூலியஸ்

 2017

சீசர்’ படம் என்று பேசினார்கள்.

அந்தோணிசாமி

கேலியும்

கிண்டலுமாகப்

அப்போது சான்ரா ஓடிவந்து, “இதை நான் வாங்கிக்கொள்கிறேன்!” என்றார். படத்தை வேறு யாருமே கேட்காத நிலையில், படம் ரூ.1000க்கு ஏலம் ப�ோனதாகக் கூறி, அவளிடம் ஒப்படைக்கப்பட்டது. மறு நிமிடம், ஏலம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது! அதைக் கேட்டவுடன் “இஃது என்ன ஏமாற்று வேலை?” என்று பலரும் கத்தினார்கள். காரணம் கேட்டுச் சிலர் கலகத்திலும்

உலகிற்கு ஒளியாகவும் உப்பாகவும் வாழ அழைக்கப்பட்டவர்கள் நாம். 

என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்.

05


ஈடுபட்டனர். அதற்கு நிர்வாகிகள், “எழுதப்பட்ட விருப்ப ஆவணத்தின்படியும், (உயில்) உரிமையாளரின், விருப்பப்படியும், யார், மகன் சாமுவேலின் படத்தை, விரும்பி வாங்கிக் க�ொள்கிறார்கள�ோ, அவர்களே மற்ற எல்லாச் ச�ொத்துகளுக்கும் உரிமையாளராகி விடுகின்றார். படத்தைச் சான்ரா, வாங்கிக்கொண்ட காரணத்தால், எல்லாப் ப�ொருட்களும் ச�ொத்துகளும் அவருக்கே உரிமையாகிவிட்டன. அதன் காரணமாகத்தான், மேலும் எங்களால் ஏலம்விட முடியவில்லை” என்று கூறினார்களாம். அங்குக் கூடியிருந்தவர்கள், சான்ராவைப் பார்த்து, “நற்பேறாளர், சான்ரா!” என்று கூறி, வாழ்த்திவிட்டுச் சென்றனராம். ஆனால் நீங்களும், நானும் சான்ராவைவிட நற்பேறாளர்கள், உரிமை பெற்றவர்கள்; எப்படித் தெரியுமா? நம் தந்தையாம் கடவுளின் விருப்பப்படி, யாரெல்லாம் தம் மகன் இயேசுவை அன்பு செய்து, நம்புகின்றார்கள�ோ, அவர்கள் அனைவரும் கடவுளுடைய பிள்ளைகளாகும்படி உரிமை தந்திருக்கிறாரல்லவா? (ய�ோவான் 1:12) இறைமகனான இயேசு எவரும் காணக்கூடாத கடவுளின் உண்மையான சாயல் என்று க�ொல�ோசையர் 1:15இல் படிக்கிற�ோமல்லவா, அந்தச் சாயலை, வடிவத்தை நாம் ஏலக் கடையில் அல்ல, நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக, நம் உள்ளத்தில் பெற்றுவிட்டோம். இதன் வழியாக நாம் விண்ணக மகிமையையும், வாக்குறுதிகளையும், ஆசீர்வாதங்களையும், அன்பளிப்பாகப் பெற்றிருக்கிற�ோம். இந்த மகிழ்ச்சியைத்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவிலும் க�ொண்டாடி வருகிற�ோம். இந்த மகிழ்ச்சியின் காரணத்தை நம்மில் சிலர் இன்னும் அறியாதிருக்கிற�ோம் என்பதும் உண்மைதானே! “கிறிஸ்துமஸ், என்றால் என்ன?” என்று நம் பிள்ளைகளிடம் கேட்டுப் பாருங்கள். உடனே “அஃது ஒரு பண்டிகை” என்பார்கள். “அன்று பள்ளி விடுமுறை நாள், புதிய ஆடைகள், புதுவகை இனிப்புகள் கிடைக்கும் நாள். வீட்டிற்கு வரும் 06

ஒப்பனைக்கும், பகட்டுத்தனத்திற்கும் முதலிடம் க�ொடுத்துவிட்டு இறைவனின் நீதியையும் அவரது அரசையும் தேடாமல், புறக்கணித்து விடுகிற�ோம் உறவினர்கள் எங்களுக்கு தருவார்கள்” என்பார்கள்.

அன்பளிப்புகள்

பெண்களிடம் கேட்டால், “நாம் கிறிஸ்தவர்கள் அல்லவா, கண்டிப்பாக ‘கிறிஸ்துமஸ்’ நாளைக் க�ொண்டாட வேண்டும். புதிய புடவைகள், நகைகள், அன்பளிப்புகள் கண்டிப்பாக வேண்டும். அப்பாவிடம் புதிய ‘கைபேசி’ வாங்கித்தரக் கேட்டிருக்கிறேன்” என்பார்கள். இதற்குக் குடும்பத் தலைவர்களின் மறும�ொழி, க�ொஞ்சம் வருத்தம் கலந்து வெளிப்படும். “வீட்டிற்கு வர்ணம் பூசவேண்டும், கிறிஸ்துமஸ் நட்சத்திரம், குடில், மரம் எல்லாம் அமைக்க வேண்டும். எல்லாருக்கும் புதிய ஆடைகளும் இனிப்புகளும் அன்பளிப்புப் ப�ொருட்களும் வாங்க வேண்டும். பிற மத நண்பர்களுக்குப் ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்ய வேண்டும் என்பார்கள்!” இதன்படி நாம் இயேசு உலகில் பிறந்த ந�ோக்கத்தை மறந்து விடுகிற�ோம் அல்லது அசட்டை செய்கிற�ோம்.

 மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

 2017


2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யூதர்கள், நம்மைப் ப�ோலவே, இறைவனால் தெரிந்துக�ொள்ளப்பட்டவர்கள், இறைவனுக்குச் ச�ொந்தமானவர்கள் என்று, மறைநூல் கூறுகிறது (வி.ப. 19:5). அவர்கள் கடவுளையும், அவரது வார்த்தையையும் அசட்டை செய்தார்கள், அதனால் அழிந்து ப�ோனார்கள். அன்று ஏர�ோது அரசனின் அரண்மனையில் ஒருநாள், யூத குருக்கள், மறைநூல் வல்லுனர்கள், மறைநூல் அறிஞர்கள் கூடி, ‘இயேசு எங்கே பிறப்பார்’ என்று இறைவாக்கினரின் நூல்களிலிருந்து கண்டு பிடித்தார்கள். அது யூதேயாவிலுள்ள பெத்லகேம், என்று அறிந்து க�ொண்டார்கள். அங்கு விருந்தினராக வந்து அமர்ந்திருந்த மூன்று ஞானியரின் வாயிலாக, மெசியா பிறந்துவிட்டதையும் உறுதி செய்தனர். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்?

உணவும் ஆடையுமின்றி வாழ்பவர்களுக்கு உதவும் ப�ோதும், ந�ோயுற்றவர்களைச் சந்திக்கும் ப�ோதும், நாம் இயேசுவை அறிவிக்கிற�ோம்.

மன்னன் ஏர�ோதின் ஆணைக்குக் காத்துக்கிடந்தார்களே தவிர, 4000 ஆண்டுகளாக எதிர்பார்த்த மெசியாவைப் பார்க்கவும் அவரை வழிபடவும் ஈடுபாடு காட்டவில்லை. இறைவார்த்தைகளை அசட்டை செய்தார்கள். இன்று நாம் அவர்களைப் ப�ோலல்லாமல், இயேசுவை அன்பு செய்து வழிபடுபவர்களாக இருந்தாலும், அவரது கட்டளைகளை அசட்டை செய்துதானே வாழ்கிற�ோம்! புற இனத்தாரைப் ப�ோலவே,

 2017

 உமது கால் கல்லில் ம�ோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்.

07


ஒப்பனைக்கும், பகட்டுத்தனத்திற்கும் முதலிடம் க�ொடுத்துவிட்டு இறைவனின் நீதியையும் அவரது அரசையும் தேடாமல், புறக்கணித்து விடுகிற�ோம் அல்லவா? (மத். 6:33). ஆகையால்தான், இருளிலிருந்து நம்மை, தமது மேலான ஒளிக்கு அழைத்தவரின் மேன்மை மிக்க செயல்களைப் பிறருக்கு அறிவிக்க வேண்டிய கடமையை, புனித பேதுரு நமக்கு நினைவூட்டுகின்றார் (பேதுரு 2:9). உலகிற்கு ஒளியாகவும் உப்பாகவும் வாழ அழைக்கப்பட்டவர்கள் நாம். அதன்படி அவரது வல்லமையான செயல்களை யாருக்காவது, எப்போதாவது அறிவித்ததுண்டா?

இதை நாம் எப்படி அறிவிப்பது என்று நமக்குள் கேள்வி எழக்கூடும்! உணவும் உடையுமின்றி வாழ்பவர்களுக்கு உதவும் ப�ோதும், ந�ோயுற்றவர்களைச் சந்திக்கும் ப�ோதும், நாம் இயேசுவை அறிவிக்கிற�ோம். இயேசுவை அறியாதவர்களிடம், இயேசு பிறந்த காரணத்தைக் கூறி, அவர்தம் நன்மைகளை எடுத்துச் ச�ொல்லும்போது, அவர்கள் உள்ளத்தில் இயேசு பிறந்து விடுகிறார். இதைத்தான் நாம் இன்று க�ொண்டாடும் ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’ நினைவூட்டுகின்றது. இனியாவது, இதன்படி வாழ முயற்சி செய்வோம்; கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

அருட்தந்தை ர�ோசான�ோ சாலா, ச.ச. இளைஞருக்கான ஆயர்ப் பேரவையின் சிறப்புச் செயலர் நடைபெறவிருக்கும் இளைஞருக்கான ஆயர்ப் பேரவைத் தகவல் த�ொடர்புத் தலைவராக கர்தினால் செர்ஜிய�ோ ர�ோச்சாவையும் சிறப்புச் செயலர்களாக அருட்திரு ஜிய�ோக�ோமா க�ோஸ்டா சே.ச. மற்றும் அருட்திரு ர�ோசான�ோ சாலா ச.ச.வையும் பாப்பரசர் நியமித்துள்ளார். இம்முடிவு நவம்பர் 16,17இல் வத்திக்கானில் நடந்த ஆயர்கள் கூட்டத்தில் எட்டப்பட்டது. பிரசீலியப் பேராயர் செர்ஜிய�ோ, பாப்பரசரின் மூன்றாம் பணி நியமன ஆளுகையில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

08

 அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.

 2017


இதுவன்றோ மனிதம்

    அ. தைரியம், சே.ச. “தம்பி, நல்லா இருக்கியா… என்ன சாப்பிட்டாய்?” இவை எப்போதும் என் தாய் என்னிடம் கேட்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று. என்னை அழைத்துப் பேசும் ப�ோதெல்லாம் என் உடல் நலத்தைப் பற்றிக் கேட்டறியும் என் தாய் என்ன உணவு உண்டேன் என்பதையும், நன்றாய் உண்டு நலம�ோடு இருக்கின்றேனா என்பதையும் மிகுந்த அக்கறைய�ோடு கேட்பார். சின்ன வயதில் என் பசி அறிந்து சுவையாய்ச் சமைத்து எனக்கு உணவிட்ட என் தாய் பற்றி அடிக்கடி நினைப்பேன். தூரத்தில் இருந்தாலும், என் தாயின் நினைவுகளையும், என் தாயிடம் நான் பெற்ற தாயன்பையும், தாய்மையின் மேன்மையையும் பல நல்ல உள்ளங்களிடம் பட்டறிந்து மகிழ்வது வழக்கம். அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் ப�ோல் என் பணிக்காக நான் உறையும் கிழக்கு லண்டன் பகுதியிலிருந்து தெற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள ‘ச�ௌத் ஹால்’ என்ற

 2017

தாய்மையின் மேன்மையால் மனிதம் தழைத்திட உழைப்போம் எம் இயேசு சபை பணித்தளத்திற்குச் சென்றேன். அன்று விடியற்காலை ஏதும் உண்ணாமல் திருப்பலிக்குச் சென்றுவிட்டுத் தெரிந்த உறவுகளைத் திருப்பலி முடிந்ததும் க�ோயிலின் வெளியே சந்திப்பதற்காகச் சென்றேன். அங்கே என் த�ோழர் ஜெனி வழியாக எனக்கு அறிமுகமான அவரின் அத்தை சபீனாவைக் கண்டேன். சபீனா அம்மையார் மிகவும் அன்பான ஓர் உறவு. அடிக்கடி ஆண்டவரின் அருள் நாடி க�ோயிலுக்குப் ப�ோய்ச் செபிப்பத�ோடு அவ்வப்போது அங்குள்ள

 உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்.

09


குருக்களுக்கு உணவு சமைத்துக் க�ொடுத்து மகிழ்பவர். தமிழ் உறவுகளுக்கே உள்ள விருந்தோம்பலும் அன்பும் அவரிடத்தில் மிகுதி. என் தாய் கேட்பது ப�ோலவே, என்னைப் பார்க்கும் ப�ோதெல்லாம் “என்னிடம், என்ன சாப்பிட்டீங்க…?” என்று தவறாமல் கேட்பார்கள். அன்று க�ோயிலின் வெளியே நின்ற என்னைக் கண்டு அதே கேள்வியைக் கேட்காமல், நான் உண்ணாமல் இருந்ததை உணர்ந்தவராய், “ஏன், சாப்பிடாமல் இருக்கீங்க? வாங்க ஏதாவது வாங்கித்தர்றேன். காலையில சாப்பிடாம இருக்கக் கூடாது” என்று ச�ொன்னவாறே என் பசி கண்டு பதறினார். என் பசியறிந்து பதறிய அந்தத் தாயின் நல் மனதை எண்ணி மகிழ்ந்தவாறு த�ொடர்வண்டியில் திரும்பிச் செல்கையில் அன்று கிறுக்கிய ச�ொற்கள் என் இதயத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன.

பண உதவி இல்லையினாலும், செப உதவியே பெரிய உதவி “பசியென்று ச�ொன்னதும் பதறிடும் உள்ளம் நம்மைப் பெற்ற தாய்க்கு மட்டுமன்று நம்மைப் பிள்ளைகளாய்ப் பார்க்கும் ஒவ்வொரு தாய்க்கும்தான்.” இந்த வரிகளை எண்ணி நான் அடிக்கடி மகிழும் ப�ோதெல்லாம் என் வாழ்விலே பல நேரங்களில் நான் கண்டு மகிழ்ந்த தாய்மையின் மேன்மையும், அந்தத் தாய்மையில் மேல�ோங்கியிருக்கும் மனிதத்தின் மாண்பையும் எண்ணிப் பெருமை க�ொள்வது வழக்கம். அன்று நடந்த அந்தப் பட்டறிவிற்குப் பிறகு அடிக்கடி அது பற்றி நினைக்கும் ப�ோதெல்லாம் என் வாழ்வில் என் மனம் கவர்ந்த ஒருசில உயரிய உள்ளங்களும் அவர்களின் தாய்மை நிறை நற்செயல்களும் வந்து செல்லும். சுமந்து பெற்ற 10

பிள்ளைகளை வளர்க்க இயலாமல் வறுமையின் க�ொடுமையால் வீதியிலே விட்டுச்செல்லும் தாய்மார்களின் பிள்ளைகளைத் தம் பிள்ளைகளாய் எண்ணி வளர்த்தார் ஆனந்தியம்மாள். ஆனந்தியம்மாள் ஒரு சமூக ஆர்வலர். நான் சென்னையில் படித்துக் க�ொண்டிருந்த காலங்களில் அறிமுகமானவர். அந்தக் கல்லூரிக் காலங்களில் என் வகுப்புத் த�ோழர்கள�ோடு இணைந்து கிறிஸ்து பிறப்பு விழாவை மாறுபட்ட ந�ோக்கில் க�ொண்டாட வேண்டி இவர் நடத்தி வந்த குழந்தைகள் இல்லத்திற்குச் சென்றோம். அங்கே சென்றப�ோதுதான் ஆனந்தியம்மாள் அவர்களின் வாழ்வைப் பற்றி அதிகம் அறிந்தேன். குழந்தை வரம் இல்லாததால் மலடி என்று பட்டம் சூட்டப்பட்டுத் தமது மணவாழ்வு முடிவுக்கு வந்ததையும், அதை முடிவாகப் பார்க்காமல் தாயின்றித் தவிக்கும் பலருக்குத் தாயாகத் தாம் மாறிய வகையையும் எங்களிடம் எடுத்துச் ச�ொல்லி மகிழ்ந்தார். “நான் சுமந்து பெற்றிருந்தால் எனக்குன்னு ரெண்டோ, மூண�ோ பிள்ளைங்க இருந்திருக்கும். ஆனா, மலடியான எனக்கு, இன்னிக்கி எத்தனைய�ோ பிள்ளைங்கள இறைவன் க�ொடையா க�ொடுத்துருக்கான். சுமந்து பெற்றால் மட்டுமா தாய்? இல்லை…இல்லை… பெற்ற பிறகும் சுமையாகப் பார்க்காமல் இனிமையாய் வளர்ப்பவள்தான் தாய்” என்று ச�ொல்லி மகிழ்வார். வெறும் ச�ொற்கள�ோடு இல்லாமல், வீதியில் தாயின்றித் தவிக்கும் பலருக்கும் தாயாகத் திகழ்ந்தார். தம்மிடமிருந்த சின்னச் சின்ன வண்ண ம�ொட்டுகளை அன்பாய் வளர்த்தார். இவை அனைத்தையும் உடனிருந்து கண்டு பாராட்டும் நற்பேறு எனக்குக் கிடைத்தது. குழந்தைப் பேறு இல்லாத ப�ோதும், தாயாக மாறித் தாய்மையின் மேன்மையைத் தரணியில் தமது வாழ்வால் உணர்த்தினாள். என் அகத்தில் இன்னொரு தாய் முகம் எட்டிப் பார்த்தது. நான் கல்லூரியில் படித்த காலங்களில் நன்னெறிகளை வெறும் பாடமாகக் கற்றுக்கொடுக்காமல் தமது வாழ்வால், எம் வாழ்வை மாற்றியமைத்தார். சமூகப் பணித் துறை பேராசிரியை வேலரி பேட்ரிக் அவர்கள். மிகவும் எளிமையாகப் பழகக்கூடியவர். தம் வாழ்வால் பிறர் வாழ்வு மாற விரும்பியவர். அவரிடம் பல

 ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

 2017


நல்ல குணங்கள் இருந்தன. என் வகுப்பிலே வறுமையில் வாடிய என் த�ோழர் ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற அவர் எடுத்த நல்முயற்சியே என்னைக் கவர்ந்தது. எனக்கு நெருக்கமான அவர், தம் வீட்டின் வறுமையினாலும், தீய நண்பர்களின் தவறான வழிநடத்தலாலும், குடிப்பழக்கத்தில் சிக்கி அதிலிருந்து வெளிவர இன்னலுற்ற நேரம். நாங்கள் எவ்வளவு முயற்சித்தும் அவரை மாற்ற முடியாது என்று முயற்சியைக் கைவிட்டோம். எம் ஆசிரியை வேலரி அவர்கள் தாயன்போடு எம் த�ோழரிடம் பேசி அவரின் வாழ்வில் மாற்றத்தைக் க�ொணர முயன்றார். “அவன் நல்ல பையன்! சூழ்நிலைதான் அவனை இப்படி மாற்றிவிட்டது. கண்டிப்பா அவன் மாறுவான். எனக்குத் தெரிந்த குடிந�ோயாளி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி அவனை மீண்டும் நல்வாழ்வு வாழ வழி செய்கிறேன்” என்று, ச�ொல்லால் மட்டுமன்றி அதன்படியே செய்து என் த�ோழரின் வாழ்விலே ஒளியேற்றினார். என் த�ோழர் தவறிய ப�ோதும், அவரைத் தீர்ப்பிட்டுவிட்டு ஒதுங்கிவிடாமல் அவர் மீது தனிக் கவனம் செலுத்தி ஒரு தாய்போல் அன்பைப் ப�ொழிந்தவர். “பெற்ற தாயைக் காட்டிலும் அக்கறை க�ொண்டு தமது பிள்ளை ப�ோலக் கவனிக்கிறாங்களே மேடம்...” என்று அவரை எண்ணிப் பெருமை க�ொண்டுள்ளேன்.

சுமந்து பெற்றால் மட்டுமா தாய்? இல்லை… இல்லை பெற்ற பிறகும் சுமையாகப் பார்க்காமல் இனிமையாய் வளர்ப்பவள்தான்

தாய்

“மாற்றவே முடியாது என்று எல்லாரும் ஒதுங்கிய பின்னும் மாற்றிட முடியும் என நம்புவ�ோம்” என்று என் த�ோழரின் வாழ்வை மாற்றிட முயன்ற அந்தப் பேராசிரியையின் அன்பான அ ணு கு மு றை யி ல் தாய்மையின் மேன்மையைக் கண்டேன். “பாடம் நடத்துவது மட்டுமன்று என் பணி; அன்பு காட்டுவதும்தான் என் பணி” என்று ஆசிரியர் கூறிடும்போது “வகுப்பறையும் தாயின் கருவறைப�ோல்

 2017

 விண்ணும் மண்ணும் ஒழிந்து ப�ோகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும்.

11


மாறிடுமே” என்றது என் மனம். தாய்மையின் மேன்மையை உணர்த்திய மற்றும�ொரு நிகழ்வு. ஜ�ோசி, ஜெரி இருவரும் என் மாமா செபஸ்டியானின் அன்புப் பிள்ளைகள். என் மாமா இராமநாதபுரத்தில் ‘தாயகம்’ என்ற பெயரிலே குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். கவனிக்க யாருமில்லாது கவலையில் வாழும் குழந்தைகளுக்குக் கல்வியறிவுதனை கருத்தாய் வழங்கி அவர்களின் திறமைகளை இளம் வயது முதல் வளர்த்தெடுக்க என் மாமா, அத்தை, அவரின் குழந்தைகள் யாவரும் முயற்சிகள் மேற்கொண்டனர். 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் என் மாமாவின் பிள்ளைகள் ஜ�ோசி, ஜெரி இருவரிடமிருந்தும் பகிரி வழி எனக்கு ஒரு வேண்டுதல் வந்திருந்தது. தாயகம் இல்லத்தில் உறையும் தேவன்சா என்ற சிறுமியின் இதய அறுவைசிகிச்சைக்கு உதவுமாறு அந்தக் க�ோப்பிலே பரிந்துரை இருந்தது. உடனே, ஜ�ோசியைத் த�ொடர்பு க�ொண்டேன், “ஆமா, மச்சான். நம்ம இல்லத்தில் இருக்கிற பாப்பாதான். ர�ொம்ப வறுமையில் வாடுற குடும்பம். நான், ஹாஸ்பிட்டல்லதான் இருக்கேன். உங்க பிரண்ட்ஸ்க்கும் ச�ொல்லுங்க. பண உதவி

இல்லையினாலும், செப உதவியே பெரிய உதவி…” என்று ச�ொன்னார். “நம்ம மாமா தமது பிள்ளைகளை இவ்வளவு சமூக அக்கறைய�ோடு வளர்த்துருக்காங்களே. யார�ோ பெத்த பிள்ளைகள்னு நினைக்காம இப்படித் தம் ச�ொந்த உறவாய்ப் பார்க்கிறாங்களே” என்று எண்ணிப் பெருமைப்பட்டேன். உதவி கேட்ட அவர்களின் பலருக்கும் பகிரந்தேன். இசை செல்லையா எனக்கு மறும�ொழி ஆன நிதியுதவி செய்வதாகவும், பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பரிந்துரையைப் வல்லுநர். திரு. எழுதி, தம்மால் நேரில் சென்று

யாரென்று அறியாத அந்தக் குழந்தைக்கு ந�ோய் நீங்க உதவிட, நேரில் கண்டிட ஆசித்த அந்தப் பெருமனிதரின் நல்மனமதில் தாய்மையின் மேன்மையைக் கண்டு மகிழ்ந்தேன். பெற்றால் மட்டுமா பிள்ளை? கவலையில் வாடிடும் வறிய�ோர் பலரையும் தம் பிள்ளைகளாய்ப் பார்த்தால் “தாய்மையின் மேன்மையில் தழைக்குமே மனிதம்!” தாய்மையின் மேன்மையால் மனிதம் தழைத்திட உழைத்திடும் ப�ோது உலகம் ச�ொல்லும் “இதுவன்றோ மனிதம்” என்று.

ஓவியம் ச�ொல்லும் காவியம் உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை க�ொண்டுள்ளார். - 1 பேதுரு 5:7

12

 “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?”

 2017


  ஆன்டோ சகாயராஜ், ச.ச. மாலை நேரம். கிராமப்புற வாழ்க்கை அனுபவத்தின் ஒரு பகுதியாக வீடுகளைச் சந்திக்கச் சென்றிருந்தோம். மழை வரப் ப�ோவதை அங்குச் சூழ்ந்த கருமேகம் சுட்டிக்காட்டியது. “இதுதான் கடைசி வீடு, பேசிவிட்டு விரைந்து ப�ோகலாம்” என்றார் என்னோடு வந்த நண்பர். அந்த வீட்டருகில் வந்தப�ோது “வராதீங்க… ப�ோயிடுங்க” என்பது ப�ோல நாய் வலுவாகக் குரைத்தது. வாசலில் நின்றப�ோது அந்த வழியாக வந்த பெரியவர் எங்கள�ோடு பேசினார். “இந்த வீட்ல யாருமில்லைங்க… காலி செய்துட்டு ப�ோய்டாங்க…”

வீட்டைக்

கனமானது. தயங்கிக் க�ொண்டே ஓடின�ோம். சிறுவயதில் தற்கொலை “எதுக்கு?” என்ற கேள்வியை எங்கள் முகத்தில் இந்தச் செய்துக�ொள்ளும் நிலை ஏன் ஏற்படுகின்றது? பார்த்தவர் “இந்த வீட்டுல ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் பதின�ோராம் வகுப்பு படிக்கிற தேர்வில் த�ோல்வியுற்றதால் தற்கொலை, பையன் தற்கொலை செஞ்சிக்கிட்டான். காதலில் த�ோல்வியுற்றதால் தற்கொலை, பாவம்… அவனுடைய அப்பனும் ஆத்தாளும் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை, வேலை இந்த ஊரவிட்டே ப�ோய்ட்டாங்க. அதுக்குமேல கிடைக்காததால், பெற்றோர் அடித்ததால்… அவங்களைப் பத்தி என்ன ஏதுன்னு யாருக்கும் இப்படி, இன்றைய இளைய சமுதாயம், தெரியாது” என்று ச�ொல்லி முடிப்பதற்குள் தற்கொலை செய்துக�ொள்ளப் பல புதிய மழை தூரல் த�ொடங்கினது. எங்கள் மனது காரணங்களை அடுக்கிக் க�ொண்டே ப�ோகிறது.

த�ோல்விகளுக்குத் தற்கொலைதான் முடிவு என்றால் உலகில் வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.  2017

முன்னாள் மாணவர் சங்க விழாவில், ஒரு மாணவன் பேசினான், “நாம் படித்தப�ோது நமது பள்ளி ஆசிரியர்கள் அடித்த அடியை, மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருந்தால், அவர்கள் இன்னும் சிறையில் இருப்பார்கள். ஆனால், அவர்கள்

 இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.

13


இவர்கள் தயாரித்த முயல் கதாபாத்திரம் க�ொண்ட அனிமேஷன் படங்களை அவரது எதிரிகள் சூழ்ச்சி செய்து சட்டப்பூர்வமாகப் பறித்துக்கொண்டார்கள். அவர்கள�ோடு வேலை செய்தவர்களும் பணத்திற்காக எதிரிய�ோடு சேர்ந்துவிட்டார்கள். அவர்கள் கண்முன் இரண்டு வழிகள் தெரிந்தன. ஒன்று, ஓடும் த�ொடர்வண்டியின் முன் பாய்ந்து அங்கேயே தற்கொலை செய்துக�ொள்ளலாம். இரண்டு, திரும்பவும் முதலிலிருந்து கடை நிலை ஊழியனாக உழைக்க வேண்டும். அருகிலிருந்த மனைவி நம்பிக்கைய�ோடு அவர் கைகளைப் பற்ற, “ஒரு கை பார்ப்போம்” என்று தற்கொலை எண்ணத்தைக் க�ொன்று புதிய தெம்போடு புறப்படுகிறார்கள்.

அப்படி அடித்துத் திருத்தாமல் விட்டிருந்தால் நாம் இன்று சிறையில் இருந்திருப்போம்.”

தங்களது கற்பனைத் திறனைக் க�ொண்டு முயலுக்கு மாற்றாகி இந்த முறை எலியைக் கற்பனையில் ஓடவிட்டு அதற்குச் சட்டை, பேண்ட் ப�ோட்டு, டை கட்டி, அதன் தலையைப் பெரிதாக்கி உடலை சிறிதாக்கி இவர்கள் செய்த உருவாக்கம்தான் ‘மிக்கி ம�ௌஸ்’ அனிமேஷன் படம். உலகம் முழுக்க நல்ல வரவேற்பு, முக்கியமாகக் குழந்தைகளிடமிருந்து கிடைத்தது. பிறரால் தமக்கு வந்த த�ோல்வியைத் தமது நம்பிக்கையினால் இரண்டாம் முறை துரத்தியவர்தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘வால்ட் டிஸ்னி’ என்ற நிறுவனத்தின் ச�ொந்தக்காரர் திரு. வால்ட்.

பெற்றோர், பெரிய�ோர் குழந்தைகளைத் தக்க நேரத்தில் திருத்துவதும், வழிகாட்டுவதும் அவர்களது கடமை. அதை இளைய சமுதாயம் எப்படிப் புரிந்துக�ொள்கிறது? அப்படியே பெரியவர்கள் சினமடைந்தால�ோ, குறைகளைச் சுட்டிக்காட்டினால�ோ அதற்குத் தற்கொலைதான் வாழ்க்கையில் த�ோல்வி, இரண்டகம், ஏமாற்றம், தீர்வா? துன்பம் எனப் பல இன்னல்கள் வந்து ப�ோவது வாடிக்கை. ‘அவ்வளவுதான் முடிந்துவிட்டது’ தற்கொலை ஒருப�ோதும் தீர்வாகாது என்று என்று பயந்து, அலறி, தற்கொலைக்கு மெய்ப்பித்த பலரில் இவரும் ஒருவர். அது நியூயார்க் த�ொடர்வண்டி நிலையம். கூட்டத்தின் இரைச்சல் நடுவில் கணவனும் மனைவியும் வேற்று கிரகவாசி ப�ோல அமைதியாக அமர்ந்திருந்தார்கள். “இனி என்ன செய்யலாம்? இதுவரை உழைத்ததை எல்லாம் திருடிவிட்டார்கள். பெயர், பணம், புகழ், தகுதி எல்லாம் ப�ோச்சி…” என்று அவர்களது கலங்கிய கண்ணீர் அமைதியாகப் பேசியது. 14

 நீங்கள் ஆண்டவர�ோடுள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள்.

விரும்பியது கிடைக்காதப�ோது முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். இறுதியில் கிடைக்காது என்று தெரிந்ததும் உடனே கிடைத்ததை விரும்புவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.  2017


வாழ்க்கையில் த�ோல்வி, இரண்டகம், ஏமாற்றம், துன்பம் எனப் பல இன்னல்கள் வந்து ப�ோவது வாடிக்கை. ‘அவ்வளவுதான் முடிந்துவிட்டது’ என்று பயந்து, அலறி, தற்கொலைக்கு ஓடியிருந்தால் ஒவ்வொரு அருஞ்செயலாளனும் ஓராயிரம் முறை இறந்திருக்க வேண்டும்.

பிரிட்டிஷ் தலைமையமைச்சர் கிடைத்திருக்க மாட்டார். க�ொடுமையான சூறைக் காற்றுச் சுழன்று தாக்கினாலும், த�ொடர்ந்து பயணம் செய்து இந்திய துணைக்கண்டத்திற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோட காமா. பயணத்தை முடித்ததும் ‘நீங்களும் நம்பிக்கைய�ோடு ப�ோராடி வாழுங்கள்’ என்பதுப�ோல ஆப்பிரிக்கக் கண்டத்தின் முனையை அடைந்தப�ோது, ‘நன்நம்பிக்கை முனை’ என்று பெயரிட்டார்.

ஓடியிருந்தால் ஒவ்வொரு அருஞ்செயலாளனும் இப்படி உலகில் உள்ள எந்த ஓர் ஓராயிரம் முறை இறந்திருக்க வேண்டும். அருஞ்செயலாளரின் வரலாற்றைத் தூசி தட்டிப் பல ஆண்டுகள் உழைத்துக் கண்டுபிடித்து படித்துப் பார்த்தாலும் அவர்கள் ச�ொல்லுவது எழுதி வைத்த அறிவியல் நுணுக்கங்கள், இதுதான், “தம்பி, தங்கைகளே! வாழ்க்கையில் எதிர்பாராத தீ விபத்தில் சாம்பலானப�ோது, த�ொடர்ந்து ப�ோராடுங்கள்; தற்கொலை எந்தச் இவரும் மனமுடைந்து இறந்து ப�ோயிருந்தால் சிக்கலுக்கும் தீர்வாகாது.” ஐசக் நியூட்டனைப் பற்றியும் அவரது மாணவர்களும் பெற்றோர்களும் கண்டுபிடிப்புப் பற்றியும் உலகம் அறியாமல் புரிந்துக�ொள்ளவேண்டியது இரண்டு. ப�ோயிருக்கும். விரும்பியது கிடைக்காதப�ோது முடிந்தவரை செய்ய வேண்டும். இறுதியில் ‘மனிதனால் பறக்க முடியும்’ என்று மெய்ப்பிக்க, முயற்சி ஊர் முழுக்கக் கடன் வாங்கி, ஒரு குட்டி கிடைக்காது என்று தெரிந்ததும் உடனே வானூர்தியைக் கண்டுபிடித்த ப�ோது அமெரிக்க கிடைத்ததை விரும்புவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். திருமணமானவர்களுக்குத் தெரியும் அரசாங்கமே ரைட் சக�ோதரர்களை எதிர்த்தது. இது எவ்வளவு பெரிய உண்மை என்று. அந்நேரம் ஊர்ப்பட்ட கடனையும் பயமுறுத்தும் “கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு அரசாங்கத்தையும் நினைத்து தற்கொலை கதவைத் திறப்பார்” என்பது நம் அனைவருக்கும் செய்திருந்தால்? உலகப் ப�ோக்குவரத்துக் தெரிந்ததே. ஆனால் நம்மில் சிலர் மூடின கடல�ோடு நின்றுப�ோயிருக்கும். பகல் கதவையே முறைத்துப் முழுவதும் இலண்டன் அருங்காட்சியகத்தில் பார்த்துக்கொண்டிருந்தால்… யாருடைய உள்ள நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தவறு? த�ொடர்ந்து தேட வேண்டும். இரவு முழுவதும் அதை எழுதுவார் இவர். கடைசிவரை வறுமையில் வாழ்ந்தாலும் மனம் தற்கொலை எண்ணத்தை முதலில் க�ொல்ல தளர்ந்து சாக நினைக்கவில்லை. சாதித்தார் வேண்டும். ஏனெனில் இந்த உலகில் யாரும் காரல் மார்க்ஸ், ‘மூலதனம்’ என்ற நூல் த�ோற்பதற்கு வாய்ப்பில்லை. ‘நான் த�ோற்றேன்’ வடிவில். என்று ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே த�ோற்கிறார்கள். த�ோல்விகளுக்குத் இவர் இராணுவப் பயிற்சி கல்லூரியில் சேர தற்கொலைதான் முடிவு என்றால் உலகில் நினைத்தப�ோது, ஒரே தேர்வை நான்கு முறை வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். எழுதிய பிறகே தேர்ச்சி பெற்றார். மூன்று ஏனெனில் அனைவரும் ஏத�ோ ஒன்றில் முறையும் ஒரே தேர்வில் த�ோல்வியா…? எனத் த�ோற்றவர்கள்தான். துவண்டு ப�ோய், வருத்தத்தில் மாண்டிருந்தால் பிரிட்டிஷ் மக்களுக்கு வின்சென்ட் சர்ச்சில் பல நேரங்களில் த�ோல்வியும் வெற்றிதான், என்ற, இரண்டாம் உலகப் ப�ோரை வென்ற அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டால்…

 2017

 காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை.

15




ப�ோஸ்கோவ�ோடு இணைவு:

05 டிசம்பர்

  (1856 – 1931)

சலேசிய உலகத் தலைவர்:

இத்தாலியின் அலக்சாண்டீரியா மாநிலத்திலுள்ள லூ மன்பொராத்தோ என்ற ஊரில் 1856, மே, 28இல் அருளாளர் பிலிஃப் ரினால்டி பிறந்தார். தமது 22ஆம் அகவையில் த�ொன் ப�ோஸ்கோவைச் சந்தித்தப�ோது அவரால் பெரிதும் கவரப்பட்டார். இவர் குருவாகியவுடன், குருமடத்தில் புதிதாகச் சேரும் மாணவர்களின் உருவாக்கப்பணிகளுக்கான ப�ொறுப்புகளை ஏற்றார். 1899இல் ஸ்பெயின் தேசத்துச் சர்ரேயாவின் சலேசியக் குடும்பத்திற்கு இயக்குநராக, இவரைத் தந்தை ரூவா அடிகள் நியமித்தார். த�ொடர்ந்து, அதன் மாநிலத் தலைவராகவும் இவர் ப�ொறுப்பமர்த்தப்பட்டார். இப்பதவியில் இருந்து க�ொண்டு ஸ்பெயின் தேசத்துச் சலேசியச் சபையை வளர்த்தெடுப்பதில் பெரும் த�ொண்டாற்றினார்.

Zeletrici di Maria Ausiliatice என்ற குழுவினர�ோடு சேர்ந்து பணியாற்றி, உலகில் ஓர் புதிய வடிவமான அர்ப்பண வாழ்விற்கான வாய்ப்பிருப்பதை உணர்ந்து, அதனை நடைமுறைச் சாத்தியமாக்கினார். “த�ொன் ப�ோஸ்கோவின் தன்னார்வத் த�ொண்டர்கள்” என்ற பெயரில் பின்நாட்களில் இக்குழுவினர் பெயர் மாற்றம் பெற்றார்கள். 1922இல் சலேசியர்களின் உலகத் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டார். இவர் பற்றி அருட்தந்தை பிரான்செசியா கூறுகையில், “குரல் ஒன்றைத் தவிர மற்றனைத்திலும் இவர் சாட்சாத் த�ொன் ப�ோஸ்கோவே தான்” என்று குறிப்பிட்டார்.

முதன்மை குரு:

தமது காலங்களில் த�ொன் ப�ோஸ்கோவை அப்படியே பின்பற்றி செயல்படுவதில் தமது ஆற்றலனைத்தையும் செலவிட்டார். சலேசியச் சபை பற்றிய படிப்பை வளர்த்தெடுப்பதில் பற்பல முயற்சிகளையும் மேற்கொண்டத�ோடு, ஆன்மீக வாழ்வில் உயர்ந்த தலைவராக விளங்கினார். சலேசிய ஆன்மீகத்தைப் புதுப்பிப்பதில் பெரிதும் ஈடுபட்டார்.

சலேசியச் சபையின் முதன்மை குருவாக இவர் நியமிக்கப்பட்டப�ோது, அருட்தந்தை என்ற வகையில் இவரது திறமைகளும், இவரது செயல் த�ொடக்க நலன்களும் பலரும் ப�ோற்றும்படியாக ஒளிர்ந்தன. வேலை செய்யும் இளம்பெண்களின் ஆன்ம, சமூக நலன்களில் துணை நிற்கும் ப�ொருட்டு உருவாக்க மையங்களை இவர் நிறுவினார். உணர்வுப்பூர்வமான சிக்கல்கள் நிறைந்த காலகட்டங்களில் அச்சகத் த�ொழில்களை நிறுவி, சலேசியச் சக�ோதரிகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் ஆதரவு அளிப்பவராகவும் திகழ்ந்தார். உடன் உழைப்பாளர் இயக்கத்தில் பேரளவில் ஊக்கம் நல்கி, ஆண் பெண் என இருபாலருக்குமான முன்னாள் மாணவ அமைப்பை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்.

16

ஆன்மீக வாழ்வில் அதிஉன்னதர்:

1931ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இறைவனடிச் சேர்ந்த இவரின் புனித உடல், தூரின் கிறிஸ்துவர்களின் சகாய மாதாப் பேராலயத்தில் வழிபடும் வகையில் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. பாப்பரசர் 2ஆம் ஜான் பால் இவரை அருளாளர் என்று அறிவித்தார். இவரது நினைவு நாள் டிசம்பர் 5ஆம் நாள் க�ொண்டாடப்படுகிறது.

 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

 2017




 “அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும், என்ன வேண்டும் என்றோ, அவர�ோடு என்ன பேசுகிறீர் என்றோ, எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குச் சென்று மக்களிடம், “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் ச�ொன்ன மனிதரை வந்து பாருங்கள்! அவர் மெசியவாக இருப்பார�ோ?” என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள் “நான் செய்த அனைத்தையும் என்னிடம் ச�ொன்னார்” என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை க�ொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தப�ோது அவரைத் தங்கள�ோடு தங்குமாறு கேட்டுக் க�ொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலேயே உலகின் மீட்பர் என அறிந்துக�ொண்டோம்” என்றார்கள். (ய�ோவான் 4:39-42) சமாரியாவிலிருந்து

வரும்

 2017

ஒரு

பெண்

என்ற

பெயரில் களத்தில் நுழையும் சமாரியப் பெண், வாழ்வுதரும் தண்ணீர் பற்றித் தனிப்பட்ட வகையில் அறிந்துக�ொண்டவராக வெளியேறுகிறார். அவர் எத்துணை ஆழமாக அறிந்துக�ொண்டார் என்றால், தமக்கு நேர்ந்தவை குறித்து ஊர் மக்களுக்குத் தெரிவிக்க ஓடிச் செல்வது அவசியமானது என்ற நிலைக்கு அவர் ஆளாகிறார். அவர் அளித்த சாட்சியத்தால் பல பேர் இயேசுவை அணுகி வந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அளித்தது ப�ோலவே, இயேசு தாம் சந்தித்த எவருக்கும் சிந்திக்க அல்லது தெரிந்துக�ொள்ள வேண்டியவற்றை அதிகமாகத் தராமல், தங்கள் வாழ்வை மாற்றவும், வளரவும் வேண்டிய வழிமுறைகளையே மிகுதியும் வழங்கினார். மூதாதையரின் சட்ட விதிகள் தந்த ஞானத்தின் அடையாளமாக விளங்கிய யாக்கோபின் கிணறுகூடத் தனது மதிப்பை இழந்து நிற்க, அதன் இடத்தை வாழ்வுதரும் தண்ணீர் நிரப்புகின்றது. இயேசுவைச் சந்திப்பதன் பயனாக வருகை தரும் கடவுளின் சாயல், இங்கே, அசைவற்ற, தூரத்திலுள்ள, தத்துவார்த்தங்களால் குளிர்ந்துப�ோன ஒன்றாக இல்லாமல், வாழ்வு தருவதாக, தந்தை என அழைக்கப்படத்தக்க நெருக்கமானதாக, உறவை துண்டித்துக் க�ொள்ளாத, நிலைநிறுத்தவும் ஆட்கொள்ளவும்

 நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

17


கூடியதான ஆவியாக (உண்மையிலும் ஆவியிலும் த�ொழுது க�ொள்ளுதல்) வெளிப்படுத்தப்படுகிறது. அந்தச் சந்திப்பின் முடிவு வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. இயேசுவைச் சந்தித்தபின் அந்தப் பெண் வழக்கம்போல் தமது குடத்தை நிரப்பிக்கொண்டு வீடு திரும்பவில்லை. தமது குடத்தை வெறுமையாக விட்டுவிட்டு, அக்கம் பக்கத்தாரை அழைத்துவர அவர் ஓடுகிறார். இந்த மாறுபட்ட முடிவை நமதுள்ளம் ஓர் இழப்பாக அல்லாமல் ஓர் ஆக்கமாகவே உணர்கிறது எனலாம்.

இயேசுவைப் ப�ோல் உடன் பயணித்தல்: கடவுள் தாம் தெரிந்துக�ொண்ட மக்கள�ோடு தமது உடன் பயணிப்புக் குறித்து அளித்த வாக்குறுதிகள் பற்றிய எத்தனைய�ோ நிகழ்வுகளை விவிலியம் நமக்குப் பட்டவர்த்தனமாக வழங்குகிறது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சந்திக்கின்ற எல்லையில் வரும் திருமுழுக்கு ய�ோவான், நற்செய்தியின்

முதல் உடன் பயணிப்பவராக, இயேசுவ�ோடும் பயணிப்பவராகத் த�ோன்றுகிறார். தமது இதயத்தில் கடவுள் பேசியதன் அடிப்படையில் மீட்பு குறித்துச் சான்று பகர்ந்து, மீட்பருக்கான வழியை அவர் ஆயத்தம் செய்வார். புதிய ஏற்பாட்டில், கருத்துகளைப் பரிமாறவும், தம் காலத்து மக்களைச் சந்திக்கவும், பற்பல

18

 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்.

சந்தர்ப்பங்களில், இயேசு, அருகில் இருப்பவராகவும் உடன் பயணிப்பவராகவும் தம்மையே வழங்குகிறார். இயேசு சமாரியப் பெண்ணிடம் ஏற்படுத்திய சந்திப்பானது, ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணிடத்திலும் கடவுளின் ஆவி எங்ஙனம் செயலாற்றுகிறது என்பதனை நாம் கண்டறிய உதவுகிறது. மனித இதயம் தனக்கே உரிய பலவீனங்கள் மற்றும் பாவங்களால் குழப்பமுற்று, பிளவுண்டு, வேறுபட்ட, முரண்பட்ட ச�ோதனைகளாலும் ஆல�ோசனைகளாலும் ஈர்ப்புண்டு தவிக்கிறது. எவ்வழியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழலில், விசுவாசிகளுக்கு, கடவுளின் உடனிருப்பை உணரவும், அவரது அழைத்தலின் சவாலை ஏற்கவும் உதவும் வகையில், கையாள வேண்டிய கருவிகள் மற்றும் ஆதாரங்களை வழங்கி, தனிப்பட்டவகையில் அவர்கள�ோடு உடன் பயணித்தல் என்பது, கிறிஸ்துவ ஆன்மீக மரபில் மிகவும் தேவையான ஒன்றாக இருந்து வருகின்றது.

உடன் பயணித்தல் பற்றிய விளக்கம்: ஆயர்கள் மாநாட்டுக்கான தமது பதிவில், பாப்பரசர் பிரான்சிஸ், “வாழ்வை வரவேற்கவும், உடன் பயணிக்கவும் உதவும் வகையில் பயணக் கூட்டாளிகளுக்கிடையே நிகழ வேண்டிய த�ொடர்ச்சியான உரையாடல்” என்ற தலைப்பில் வழங்கியுள்ள செய்திகளை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் க�ொள்ளலாம்.

 2017


உறவுக�ொள்வதற்கு எதிராக, வலுவான இடையூறாக இருக்கும் தடைகளைத் தகர்த்து, தனிப்பட்ட நபர் ஒருவர் கடவுள�ோடு க�ொள்ளும் த�ொடர்பை ஊக்கப்படுத்த உதவும் உரையாடலையும் இதன�ோடு ஒப்பிடலாம். இயேசு பிறர�ோடு ஏற்படுத்திய சந்திப்பு ஒவ்வொன்றிலும், உடன் பயணித்த ஒவ்வொரு அனுபவத்திலும், குறிப்பாக, பன்னிருவரை இறையழைத்தலுக்கு உட்படுத்திய நிகழ்வுகளிலும் (ய�ோவான் 1:35-31) அவருக்குத் தேவைப்பட்டது ப�ோன்ற ஓர் அன்பான பார்வை தேவை. கப்பர்நாவும் த�ொழுகைக் கூடத்தில் இயேசுவுக்குத் தேவைப்பட்டது ப�ோல (லூக். 4:32) உடன் பயணித்தலுக்கு அதிகாரம் ப�ொருந்திய வார்த்தை தேவை. சமாரியப் பெண்ணோடு ஏற்பட்ட சந்திப்பின்போது இயேசு செய்ததுப�ோல், பயணிப்பவரை நெருங்கிச் செல்லும் சாமர்த்தியம் தேவை (ய�ோவான் 4:3-34; 39-42).

• பயணியின் பயணம் குறித்த புரிதல், அவரைச் சந்திக்கின்ற இடம் பற்றிய புரிதல், மற்றும் எங்கே ப�ோகிற�ோம் என்பது பற்றிய தெளிவு. • பயன் கருதாத, மனிதத்தன்மையுள்ள, மனிதமனம் விரும்பத்தக்க ஒரு சந்திப்பிற்கான, உறவுக்கான வாய்ப்புள்ளது என்பது பற்றிய உறுதி. • அவர் எங்கிருந்து பயணப்பட்டு வருகிறார் என்பதை அறிந்துக�ொள்ள, அவர் பேச்சைக் கவனித்துக் கேட்கும் மன�ோநிலை. • இருவரும் த�ொடர்ந்துள்ள பயணம் பற்றிய புரிதல், துன்பங்கள், அவநம்பிக்கைகள், களைப்பு, மற்றும் தேடல் உள்ளிட்ட பயணச் சூழல்பற்றிய தெளிவு.

நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் ச�ொன்ன மனிதரை வந்து பாருங்கள்!

எம்மாவு என்ற ஊருக்குப் ப�ோகும் வழியில் இயேசு தமது சீடர்கள் இருவர�ோடு உடன் பயணித்ததுப�ோல (லூக்கா 24:13-35), பயணிப்பவரின் அருகாமையில் நடந்து செல்லவும், நெடும்பயணக் கூட்டாளியாக இருக்கவும் உறுதியான தீர்மானம் தேவை. ஆகவே, உடன் பயணித்தலில் பின்வருவனவற்றைக் கருத்தில் க�ொள்ள வேண்டும்.

 2017

• தூய ஆவியாரே உண்மையான உடன் பயணி என்பதால், பயணத்தின் இடையிலான சந்திப்பு என்பது தியானத்திற்கான சந்திப்பாகும் என்ற அறிவு. பயணிப்பவர�ோடு குடிக�ொண்டிருக்கும் தூய ஆவியாரின் செயல்பாடுகளுக்கு இருவரும் சான்று பகர்பவர்களாக, பறைசாற்றுபவர்களாக இருக்க

 தேர்ந்தெடுக்கப்பட்ட உம் சக�ோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

19


எந்தச் சந்திப்பிலும் கடவுள்தாமே த�ொடக்கச் செயலியாக இருக்கிறார். வேண்டும் என்பது பற்றிய உணர்வு. சான்று பகர்தலும் பறைசாற்றுதலும் ஓசையின்றி நிகழ்தல் வேண்டும். குறிப்பாக, உடன் பயணிப்பவர் தமக்குத் தரப்பட்டுள்ள இடத்தில் இருந்து க�ொள்வதில் நிறைவடைபவராக இருத்தல் வேண்டும். உண்மையில், ஆன்மீக வாழ்வில் உடன் பயணிப்பவர் ஏற்கனவே ஆண்டவர�ோடு ஏற்பட்ட சந்திப்பின் அனுபவங்களால் உருக்கி வார்க்கப்பட்டவராக இருத்தல் அவசியம். எந்தச் சந்திப்பிலும் கடவுள்தாமே த�ொடக்கச் செயலியாக இருக்கிறார். இதில் உடன் பயணிப்பவரின் பங்கு என்பது ப�ொறுப்புணர்வும் விடுதலை உணர்வும் மட்டுமே. நமது ஆன்மீகப் பாரம்பரிய வரலாற்றில் இவையனைத்துமே செயல்முறைக் க�ோட்பாடுகள். கிறிஸ்துவ வாழ்வு என்பது, தெளிவான, ஆழமான, முழுமையான பரிமாணத்தில் முன்னேற்றத்தை ந�ோக்கியே வளர்ந்து வந்துள்ளது. மகத்தான வளர்ச்சிக்கான வாயிலை அஃது எப்போதும் திறந்தே வைத்துள்ளது. உடன் பயணித்தலின் முன்னேற்றம் என்பது உள்ளும் புறமும் வற்புறுத்தலுக்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும். உடன் பயணித்தல் என்ற செயல்முறை குறித்த செயல்பாடு எதனையும் எவரிடத்திலும் தூய ஆவியாரே கட்டவிழ்த்து விடுகிறார். ஆதலின், உடன் பயணிப்பவர்அச்செயல்பாடுகளைத் தமதாக்கிக் க�ொள்ளல் வேண்டும்.

மனத்தில் இருத்த வேண்டிய மேய்ப்புச் செயல்பாடுகள்: இந்த ஆண்டின் இறுதியில் நான் அளிக்க இருக்கும் கருத்தொளி (Strenna)யின் இறுதிப் பகுதியாக அமையவிருப்பது மேய்ப்புச் செயல்பாடுகள் 20

பற்றிய செய்திதான். ஏனெனில், எனது கருத்தொளியில் இதுவரை ச�ொல்லப்பட்டவை அனைத்தும் மேய்ப்புப் பணியை நடைமுறைப்படுத்துதல் பற்றியனவே. தற்போதைய திருச்சபையின் மேய்ப்புப் பணித் திட்டம் பற்றிய கருத்தியல் குறித்தும், அதில் அடங்கியுள்ள சலேசிய ஆன்மீகம் குறித்தும் நான் குறிப்புகள் தரவுள்ளேன். கீழே தலைப்புகளாகத் தரப்பட்டுள்ளவற்றையே நான் இதன் இறுதிப் பகுதியில் வளர்த்திக் கூறவுள்ளேன். மேய்ப்புப் பணியில் நம்மைப் பின்பற்றி வரவுள்ள இளைய�ோர், அவர்தம் குடும்பங்கள், தந்தையர், தாயார் ஆகிய அனைவர�ோடும் சேர்ந்து பயணித்தல். மேய்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உலகளாவிய நமது சலேசிய குடும்பத்தின் பல்வேறு குழுக்களையும் நம்மோடு இணைத்துக் க�ொள்ளுதல். யாரையும் விலக்கிவிடாமல், இளைய�ோருக்கான வாய்ப்புகள் அனைத்தையும் வழங்கல்; ஏனெனில் ஆவியானவர் ஒவ்வொருவர�ோடும் செயலாற்றுகிறார். புதிய தலைமுறையினரின் கல்வி வளர்ச்சியில் ப�ொறுப்பேற்கும் துறவிகள், இல்லறத்தார், கல்விப் பணி மேய்ப்புச் சமுதாயத்தினர் ஆகிய அனைவரையும் நானிங்கே கருத்தில் க�ொள்கிறேன். மேலும், குறிப்பிடத்தக்கவரும் நம்பிக்கைக்குரியவருமான வயது வந்தோர் அனைவருமே எனது கவனத்திலுள்ளார்கள். சரியான, ப�ோதுமான வழிவகைகள் அனைத்தையும் நாம் கவனத்தில் க�ொள்ள வேண்டும். சமாரியப் பெண்ணுடனான கூட்டுறவில் தாம் நடந்து க�ொண்டதுப�ோலச் செயல்படுமாறு, தமது சீடர்களுக்கு அழைப்பு விடுத்த இயேசு, இன்று நம்மை எத்தகைய குறிக்கோளை ந�ோக்கி வழிநடத்தவுள்ளார்?

ஏஞ்சல் பெர்ணாண்டஸ் ஆர்த்திமே, ச.ச. சலேசியர்களின் உலகத் தலைவர்

 உண்மையின் ப�ொருட்டு உங்கள்மீது அன்பு செலுத்துகிற�ோம். அந்த உண்மை நம்முள் நிலைத்திருக்கிறது. அது என்றென்றும் நம்மோடு இருக்கும்.

 2017


இப்படியும் சிந்திக்கலாமே - 1

  ம. மரிய லூயிஸ், ச.ச.

மனித உயிருக்கு மதிப்பு இருக்கிறதா? மனிதர் எல்லாருமே சமமானவர்களா? பணக்காரரின் உயிருக்குக் க�ொடுக்கப்படும் அதே மதிப்பும் மரியாதையும் ஏழையின் உயிருக்குக் க�ொடுக்கப்படுகிறதா? அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் ஏழைகளின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதா? தனியார் மருத்துவமனைகளில் ஏழைகள் சிகிச்சைப் பெறுவது என்பது எட்டாக் கனியாக அல்லவா உள்ளது! இந்நிலையில், விபத்தில் சிக்குபவர்களின் உயிரைக் காக்கும் ப�ொருட்டு, தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேர இலவசச் சிகிச்சை அளிக்க வேண்டுமென கேரள முதலமைச்சர் மாண்புமிகு. பினராயி விஜயன் 03.11.2017 அன்று உத்தரவிட்டுள்ளார்.

அரசு முன்வந்துள்ளது கவனத்தையும் ஈர்த்துள்ளது பாராட்டையும் பெற்றுள்ளது.

அனைவருடைய மட்டுமல்லாமல்,

கடந்த 10 ஆண்டுகளில், கேரளாவில், சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,233 என்றும், காயமடைந்தோர் எண்ணிக்கை 7,41,687 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே உயிரின் உன்னதத்தை உணர்ந்து, உயிர் காக்கும் அவசர மருத்துவத் திட்டத்தைக் கேரள அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியதாகும்.

நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர் கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ப�ோது, சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அவரை அலைக்கழித்ததால் அவர் உயிரிழந்தார். அதைத் த�ொடர்ந்து, கேரள முதல்வர், “ப�ொருளாதார அடிப்படையில் எவருக்கும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது. விபத்தில் சிக்கி உயிருக்குப் ப�ோராடுபவர் எவராக இருப்பினும், அவருக்கு மருத்துவ உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும். முதல் 48 மணி நேரத்திற்கு அவருக்கு ஆகும் செலவினை அரசு ஏற்று செலுத்தும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக இப்படிய�ொரு திட்டத்தைச் செயல்படுத்த கேரள

 2017

ரஷ்யாவின் கலினிங்க்ராட் உயிரியல் பூங்காவில், பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது பார்வையாளர்கள் மேலிருந்து பார்த்துக் க�ொண்டிருந்தார்கள். ஆண் புலி இருக்கும் கூண்டின் கதவு தவறுதலாகத் திறந்திருந்ததை அந்தப் பெண் கவனிக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தது புலி. பயத்தில்

 நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது.

21


தற்கொலை செய்துக�ொள்வோர் பெரும்பாலும் 15 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவராக உள்ளனர்.

கத்தினார், மேலே இருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கற்களை எடுத்து புலி மீது வீசினர். ஆனாலும் அந்தப் பெண்ணைப் புலி விடுவதாக இல்லை. அருகிலிருந்த உணவகத்திலிருந்து நாற்காலிகளை எடுத்து வந்து வீசினார்கள். புலியின் கவனம் திசை திரும்பியது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வேகமாக வெளியேறினார் அந்தப் பெண். சக பூங்கா ஊழியர்கள் இந்த நிகழ்வின்போது அருகில் இல்லை. பார்வையாளர்களே ஆம்புலன்ஸை வரவழைத்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “இது ம�ோசமான நிகழ்வு. அந்தப் பூங்காத் த�ொடங்கி இத்தனை ஆண்டுகளில் இதுப�ோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதே இல்லை. புலியின் கூண்டைத் திறந்தவர், பூட்ட மறந்துவிட்டார். அந்தப் பெண் மிக ம�ோசமாகப் புலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. குணம் பெற நீண்ட காலம் ஆகும். நிகழ்வு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் புலிக்கு வயது 16. அன்று இது

22

நல்ல மனநிலையில் இல்லை என்று தெரியவந்திருக்கிறது” என்கிறார் பூங்காவின் செய்தித் த�ொடர்பாளர். அப்பெண்ணின் உயிரைக் பாராட்டுக்குரியவர்கள்.

காப்பாற்றியவர்கள்

இயேசு தாம் வாழ்ந்த காலத்தில், யூதச் சட்டங்களுக்கு எதிராகவும், பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் ப�ோன்றோரின் கடின உள்ளத்தை மாற்றவும் வெகுவாகப் ப�ோராட வேண்டியிருந்தது. மாற்கு 3:1-6: “இயேசு மீண்டும் த�ொழுகைக் கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் ந�ோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பியவரை ந�ோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்கள�ோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை ந�ோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏர�ோதியர�ோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்”. உயிரின் மகத்துவத்தை அறிந்திருந்த இயேசு, உயிரைக் காப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் க�ொடுத்தார். ஆகவேதான் “உயிரைக் காப்பதா? அழிப்பதா?” என வினவுகிறார். “இன்றைய உலகைப் பார்க்கின்றப�ோது, உயிருக்கு முக்கியத்துவமே இல்லைய�ோ?” என்ற வினா எழுகிறது. இன்று உலகில் ஒவ்வோராண்டும் 8,00,000 பேர் தற்கொலை செய்து க�ொள்கிறார்கள். அவர்களுள் 1,35,000 பேர் (17 விழுக்காடு) இந்தியாவில் வசிப்பவர்கள். 2012 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவைப் ப�ொறுத்தமட்டில் தற்கொலைச் சாவுகள் மாநில அளவில்:

 உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக் க�ொள்ளக் கவனமாயிருங்கள்.

 2017


• தமிழ்நாடு

– 12.5%

• மகாராஷ்டிரா

– 11.9%

• மேற்கு வங்காளம் – 11%

தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் மற்றும் இறந்தோர் எண்ணிக்கை வருமாறு: • குடும்பப் பிரச்சனைகள் - 28,602 பேர் • உடல் நலக் க�ோளாறுகள் - 23,746 பேர் • மனநலக் க�ோளாறு - 7,104 பேர் • திருமணம் த�ொடர்பான காரணங்கள் - 6,773 பேர்

• காதல் த�ோல்வி - 4,168 பேர் • கடன் த�ொல்லை - 2,308 பேர் • தேர்வில் த�ோல்வி - 2,403 பேர் • வேலை வாய்ப்பின்மை - 2,207 பேர்

தற்கொலை செய்துக�ொள்வோர் பெரும்பாலும் 15 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவராக உள்ளனர். அவர்களுள் 80 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள் என்பது வேதனையளிப்பதாக உள்ளது. பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம் தற்கொலை செய்துக�ொள்கின்றனர் (2 : 1). உயிர் என்பது கடவுளால் மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மாபெரும் க�ொடை. இது இலவசமாக இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது. உயிரை அளித்த இறைவனுக்கே அதை மீண்டும் எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்த அதிகாரத்தை எவரும் தன் கையில் எப்போதும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம் உயிரையும் பிறர் உயிரையும் மதிப்போம். உயிரின் மேன்மையை உணர்வோம்.

ஓவியம் ச�ொல்லும் காவியம்

நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். - யாக்கோபு 5:16  2017

 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் க�ொடுக்கிறேன்.

23


அன்பியம்: புதிய பார்வையில் திருச்சபை -1

 அல்போன்ஸ் லாசர். ச.ச. மனிதனை முழு மனிதனாக்குவது அன்பே! மனிதத்துக்குப் பெருமை சேர்ப்பதும் அன்பே! மனித மாண்புகள் அனைத்திற்கும் உயிரூட்டுவது அன்பு ஒன்றே. குழந்தையாக பிறந்தது முதல் இறக்கும் வரை ஏங்கித் தவிப்பதும் அன்புக்காகத்தான். அன்பு வாழ்ந்து காட்டப்படவேண்டிய வழிமுறை. இன்று நிரந்தரமற்றதைத் நிரந்தரமாகத் தேடி அலைந்துக�ொண்டிருக்கும் பலருக்கு அடிப்படைத் தேவை அன்பே. அன்பை மையமாகக் க�ொண்டு நமது சிந்தனை, ச�ொல், செயல், உறவு பரிமாற்றங்கள் அமையுமே என்றால் நம் வாழ்வில் வசந்தம் வீசும். ஏனெனில் அ ன் பு நிறைவானது. ஆணவம் குறையுள்ளது! அன்பு

ஆண்டவரின் ஒட்டும�ொத்த ப�ோதனையும் அன்பே. 24

எப்போதும் க�ொடுத்துக் க�ொண்டே இருக்கும். ஆணவம் எப்போதும் கெடுத்துக்கொண்டே இருக்கும். கிறிஸ்தவத்தின் ஆணிவேரே அன்புதான்! ஆண்டவரின் ஒட்டும�ொத்த ப�ோதனையும் அன்பே. அன்பு எதையும் சாதிக்குமா? அன்பு எதையும் சாதிக்கும். ஏனெனில் அன்பு எதையும் சந்திக்கும். உண்மையான அன்பால் உலகையே வெல்ல முடியும். அன்பு நிபந்தனையற்றது. கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றி, நம்மையும் பிறரையும், இயற்கை உலகையும் அன்பு செய்ய புறப்படுவ�ோம். அன்பின் ஆற்றலை உணர்வோம்.

நிகழ்வு 1: உலக நாடுகள் அனைத்துமே பங்குக�ொள்கிற விளையாட்டுப் ப�ோட்டிதான் ஒலிம்பிக். சில வருடங்களுக்கு முன்பு ஊனமுற்றவர்களுக்காக மாபெரும் ஒலிம்பிக் ப�ோட்டி நடைபெற்றது. நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்காக ஒன்பது நாடுகளைச் சேர்ந்த ஒன்பது சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட்டுத் திடலில் ஓடுவதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கண்கள் அந்த ஒன்பது பேரையும் பார்த்துக்கொண்டிருந்தன. தங்கப் பதக்கத்தை வெல்லப் ப�ோவது யார்? என்ற ஆர்வத்தோடு அனைவரும் அமைதியில் உறைந்திருக்க ப�ோட்டி த�ொடங்கியது. துப்பாக்கி சத்தம் விண்ணைப் பிளக்க ஒன்பது பேரும் வளைந்தும் நெளிந்தும் ஓட ஆரம்பித்தனர். சிறிது தூரம் ஓடிய ஒரு சிறுமி திடீரென்று கீழே விழுந்தாள். எப்படிய�ோ சக்தியை ஒன்று திரட்டி எழுந்து திரும்பவும் ஓட ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து அதே சிறுமி ஓட முடியாமல்

 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டத�ோ, எவனுடைய பாவம் மூடப்பட்டத�ோ அவன் பாக்கியவான்.

 2017


மீண்டும் கீழே விழுந்தாள். விழுந்த அவள் ‘அம்மா’ என்று வலி தாங்காமல் அழ, அவளை யாரும் பார்க்கவே இல்லை. மற்ற எட்டு பேரும் எல்லைக்கோட்டை நெருங்கி விட்டார்கள். முதலில் ஓடிய சிறுமி ‘அம்மா’ என்ற சத்தத்தைக் கேட்டு அப்படியே திரும்பியவள் கீழே விழுந்த சிறுமியை ந�ோக்கி ஓடிவந்து அவளைத் தூக்கிவிட்டு, “வலிக்குதா, அழாதே நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்றாள். முன்னால் ஓடிய ஏழு பேரும் திரும்பி வந்து அந்த சிறுமியின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரே நேரத்தில் எல்லைக் க�ோட்டைக் கடந்தார்கள்! இதைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவ�ொலி எழுப்பி கண்ணீர்விட்டு அழ அந்த விளையாட்டு மைதானத்தில் சிறிது நேரத்தில் பேரமைதி ஆட்கொண்டது!

நிகழ்வு 2: ‘அன்பை வெளிப்படுத்தும் எதையும் க�ொண்டுவாருங்கள்’ என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியர். ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப் பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவிய�ோ, கடைசியில் வெறுங்கைய�ோடு வந்தாள். கேட்டப�ோது ச�ொன்னாள், “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன், அழகாய் இருந்தது. சுதந்திரமாய் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்.” அந்த மாணவியை அணைத்துக் க�ொண்ட ஆசிரியை ச�ொன்னார், “அன்பு என்றால் இதுதான்”.

சிந்திக்க: நான் எப்படியாவது முந்த வேண்டும். பிறரை த�ோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. நானும் வெற்றி பெற வேண்டும் என்பது இயற்கை. நான் மட்டும்தான் வெற்றி பெற வேண்டும் என்பது தலைக்கனம். வெற்றி பெற ஓடுவதில் தவறில்லை. ஆனால் சுயநலத்தோடு நாம் வாழ்க்கையில் முந்தும்போது பிறர் அழுகுரல் நம் காதில் விழுவதில்லை. பிறர்நலம் க�ொண்டு

 2017

வாழும்போது மட்டுமே பிறர் அழுகுரல் நம் காதில் விழும். அன்பு செய்வதில்தான் நம் வாழ்வு அர்த்தமடைகிறது. அன்பு செய்வதால்தான் நாம் உயிர�ோடு வாழ்கிற�ோம், இல்லையேல் நடைப்பிணம். அன்பு செய்கிறப�ோது கிறிஸ்தவம் உயிர்பெற்று எழுகிறது. கருச்சிதைவு, இரக்கக் க�ொலை, கத்திக் குத்து, ஊழல், தீக்குளிப்பு என்ற அழிவுக் கலாச்சாரம் வளர்ந்து வரும் இந்நாட்களில் மனித உயிருக்கு முக்கியத்துவம் க�ொடுக்கப் ப�ோராடுவது ஒரு சவால். அன்பின் வெளிப்பாடே இச்சவால்! ப�ோதை ப�ொருட்களாலும், குடிப்பழக்கத்தினாலும் தங்கள் வாழ்வை சீரழித்துத் தெருக்களிலும், மூலைமுடுக்குகளிலும் கேட்பாரற்றுக் கிடக்கும் மனிதரை அலட்சியப்படுத்தும் இச்சமுதாயத்தில் நாம் அவர்களுக்கு நல்ல சமாரியனாக அவதரிப்பது ஒரு சவால்.

உண்மையான அன்பின் கூறுகள்: அன்பு தியாகத்தைத் தூண்டும் (தியாகம் அன்பின் உந்துதலால் வெளிப்படும்) அன்பு பணிவிடை புரியும் (நான் பிறருக்கு என்ன செய்தேன் என்பதே மையம்) அன்பு பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்ளும் (வேறுபாடுகள் களையப்படுகின்றன) அன்பு மன்னித்து மறக்கும் (தவறுகள் மன்னிக்கப்பட்டு புது வாழ்வு பிறக்கிறது) அன்பு தீவினையில் மகிழ்வுறாது (வம்புப் பேச்சும் இல்லை. அவதூறும் இல்லை) அன்பு யார் மீதும் பழி சுமத்துவதில்லை (ச�ொல் செயலில் நன்மையைக் காண்கிறது) அன்பு பேரிரக்கம் க�ொள்கிறது (பிறர் குறைகளை ஏற்றுக்கொள்ளும்)

 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்.

25


வாசித்து தியானிக்க: 1 க�ொரி. 13 : 4-8 (அன்பே எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி) மத். 7 : 12 (அன்பின் ப�ொன்விதி) ய�ோவான் 13 : 34-35 (அன்பே நம்மை நண்பராக்குகிறது) ய�ோவான் 15 : 13-17 (நீங்கள் என் நண்பர்கள்) 1 ய�ோ. 4 : 7-10, 19-21 (அன்பே கடவுள்)

விவாதிக்க: 1. 1 க�ொரி 13 : 4-8இல் உள்ள ‘அன்பு’ என்ற வார்த்தைக்குப் பதிலாக உங்கள் பெயரை இணைத்து வாசியுங்கள். எடுத்துக்காட்டாக உங்கள் பெயர் ‘திரு. ராஜன் (அல்லது) திருமதி. லீமா’ என்றால், இப்பகுதியை வாசிக்கும்போது “திரு. ராஜன் ப�ொறுமையுள்ளவன். நன்மை செய்பவன், ப�ொறாமைப்படாதவன். தற்புகழ்ச்சி க�ொள்ளாதவன், இறுமாப்பு அடையாதவன். இழிவானதைச் செய்யாதவன். தன்னலம் நாடாதவன்….” என்று மாற்றி வாசிக்கவும். அன்பின் வெவ்வேறு தன்மைகளில் எவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்? பகிர்வோம். 2. உங்கள் வாழ்க்கையில் மிகவும் துன்ப நிலையில் இருப்போருக்கு துணையாக நின்று அன்பு காட்டிய அனுபவம் உண்டா? நீங்கள் மனம் ச�ோர்ந்து வாடிய நிலையில் உங்களுக்கு துணையாக வந்தவர் யார்? (தனிப் பகிர்வு) 3. எது முக்கியம் அன்பா? பணமா? பணத்துக்கும் ப�ொருளுக்கும் மட்டும் க�ொடுக்கும்போது நம் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? பகிர்வோம்!

26

 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.

முக்கியத்துவம்

 2017


தீர்மானிக்க: நமது பகுதியில் காண்பவை

செயல்பாடு:

அணுகுமுறை

நமது பங்கில் சில ஆண்களும் பெண்களும் தீராத வியாதியினால் அதிகளவில் துன்புறுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்கும்படி, தகவல் பலகையில் எழுதி, பார்வைக்கு வைப்போம். ஏழை எளிய ந�ோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்வோம்.

நமது பங்கிலுள்ள கூலித் த�ொழிலாளர்கள் சரியான வேலையின்றியும் கூலியின்றியும் அதிகமாக புறக்கணிக்கப்படுகின்றனர்.

இவர்களின் உரிமைகளுக்காக குரல் க�ொடுப்போம். த�ொழிலாளர்களை ஒன்றுசேர்த்து த�ொழிற்சங்க உறுப்பினராக்குவ�ோம். “வேலைக்கேற்ற கூலி கேட்க” துணைநிற்போம்.

நமது அன்பியத்தில், வறுமையினால் பாதிக்கப்பட்ட ஏழை இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். கல்விக்கேற்ற வேலையின்றி முடங்கிக் கிடக்கிறார்கள்.

அவர்கள் மேல் அதிக அக்கறையும் பரிவும் நாம் காட்ட வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கிட “முகாம்” நடத்தி உதவிடுவ�ோம்.

நமது பகுதியில் திருச்சபையிலிருந்து விலகி, வேறு சபைகளில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இத்தகைய�ோரை சந்தித்திட பங்கு அளவில் குழு அமைத்து பங்குத் தந்தை துணைய�ோடு இல்லங்களைச் சந்தித்து செபிப்போம். பங்கு அளவிலும் செப ஆராதனை நேரங்களை அதிகப்படுத்துவ�ோம்.

அதிகாரத்திலுள்ளவர்கள், தங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் நமது வாயை மூடி விடுகிறார்கள்.

எவ்வளவு அடக்குகிறார்கள�ோ, அவ்வளவுக்கு அதிகமாய் நாம் நமது கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தோடு இணைந்து நம் உரிமைகளுக்காகக் குரல் க�ொடுப்போம்

புனித பாதையில் “நாம் காணும் ஒவ்வொருவரும் அன்புக்காக ஏங்கி மாறுவேடத்தில் வரும் இயேசு கிறிஸ்து” (அன்னை தெரசா) “அன்பை விதையுங்கள் பேரன்பை அறுவடை செய்வீர்கள்” (புனித பிரான்சிஸ்கு சலேசியார்)

 2017

 நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

27


உறவில் மலர – 5



 நித்தியன், ச.ச.

Being Trustwor thy

சென்ற மாத இதழில் மதிப்புக்குரியவர்களாய் வாழ்வதைப் பற்றிச் சிந்தித்தோம். நம்மை மதிப்புக்குரியவர்களாய் மாற்றும் ஒரு மகத்தான பண்பு நம்பகத்தன்மை. கிரடிபிலிட்டி, ரிலையபிலிட்டி, ட்ரஸ்ட்வொர்த்தி (Credibility, Reliability, Trustworthy) ப�ோன்ற அழகான ஆங்கிலச் ச�ொற்கள் இப்பண்பினைச் சுட்டிக்காட்டுகின்றன. நேர்மையுடனும் உண்மையுடனும் வாழ்ந்து சென்றவர்களை நாம் இன்றும் ப�ோற்றுகின்றோம். அதே வேளையில், உண்மைக்கும் மனச்சான்றுக்கும் எதிராகச் செயல்படுபவர்களை நாம் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றோம். நம்பகத்தன்மை என்னும் பண்பு, உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய காரணி என்று ச�ொன்னால் அது மிகையாகாது.

நம்பகத்தன்மை என்னும் பண்பு, உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய காரணி “அவனை அல்லது அவளை நம்பி ம�ோசம் ப�ோய்விட்டேன்”; “இப்படி நம்பி வந்த என்னைக் கழுத்தறுத்து விட்டார்களே, துர�ோகிகள்” என்று ஆதங்கத்தோடு பேசும் சில நபர்களின் கதறல்களை நாம் கேட்டிருப்போம்; நாமே சில நேரங்களில் ச�ொல்லியிருப்போம். “நம்பின�ோர் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு” என்றொரு கூற்றுண்டு. ஆனால், இன்று அடுத்தவரை ஏமாற்றி ப�ொய்யான வாழ்க்கை வாழ்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. வாழ்வின் பல நிலைகளில் நாம் அனுபவிப்பது ப�ொய்மை, ஏமாற்று மற்றும் நேர்மையின்மை.

28

இந்த விளம்பர உலகில் நம்பத்தகுந்த, நேர்மையான விலையுள்ள, தரம் வாய்ந்த ப�ொருட்களையே நாம் தேடி வாங்குகிற�ோம். “நாம் உபய�ோகிக்கும் ப�ொருட்கள் தரமானவையா?” என்று கவனத்தோடு தேடும் நாம், நம் வாழ்விற்கு மெருகூட்டும் உறவுகளில் நம்பிக்கைக்குரியவர்களாய், தரம் வாய்ந்தவர்களாய் இருப்பது எவ்வளவு முக்கியம்! மக்கள் தரமான ப�ொருட்களைத் தேடி செல்வதைப் ப�ோல, நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ்ந்தால் மக்கள் நம்மையும் தேடி வருவர். உறவுகள் நம்மைத் தாமாகவே தேடி வரும். எனவே, இஃது உறவுகளை நம் பக்கம் ஈர்க்கும் காந்தத் தன்மை வாய்ந்த ஒரு பண்பு. ச�ொற்கள் வாழ்வாகட்டும். ச�ொல்வது செயலாகட்டும். நம்மை நம்பிக்கைக்குரியவர்களாய் மாற்றும் மற்றொரு முக்கியக் கூறு ‘நமது பேச்சுக்கும் நடத்தைக்குமிடையேயுள்ள நெருக்கம்.’ நாம் ச�ொல்வத�ொன்றும் செய்வது வேற�ொன்றுமாக இருக்கும்போது, மற்றவர்கள் நம்மை நம்பமாட்டார்கள். அதனால் நமது மரியாதையையும் அடையாளத்தையும் இழக்க நேரிடலாம். ச�ொற்களை வாழ்வாக்கி உண்மையுடன் வாழ்ந்தால் நிச்சயமாக நாம் தகுதியுடைவர்களாவ�ோம் (Trustworthy). எல்லாச் சூழலிலும் நமது நேர்மையுள்ள செயல்பாட்டால் அடுத்தவர் எவ்வித ஐயமுமின்றி நம்மை நம்புவர் (Worthy of Trust). மிகவும் குறிப்பாக தலைமைப் ப�ொறுப்பில் உள்ளவர்கள் இப்பண்பினைக் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு குழுச் சார்ந்த முடிவுகளை எடுக்கும் நேரத்தில், எல்லாரையும் கலந்தால�ோசித்து செயல்படுவதும், குழுச் சம்பந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து க�ொள்வதும், நம்பிக்கைக்குரிய தலைவரின்

 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் ப�ொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.

 2017


நற்குணங்கள். ச�ொல்வதை, ச�ொன்ன நேரத்தில், ச�ொன்ன விதத்தில் செய்பவராக இருக்க வேண்டும். எப்போதும், ஏதாவது ஒரு காரணம் காட்டித் தம் கடமையிலிருந்து தவறுபவர்களை நம்புவது கடினம். இரண்டாவதாக, அடுத்தவரின் நேரத்தை மதிக்கும் குணம் நம் நேர்மைத்தனத்தைச் சுட்டிக்காட்டும் அறிகுறி. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு செயலை எந்த ஒரு முன்னறிவுப்புமின்றி ரத்து செய்வதை யாரும் எளிதில் ப�ொறுத்துக்கொள்ளமாட்டார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் இவ்வாறு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இதையே பழக்கமாகக் க�ொண்டிருப்பவர்கள் நிச்சயமாக நம்பத்தக்கவர்கள் அல்லர். குறிப்பிட்ட நேரத்தைத் தவிர்த்து, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைத் தாழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, அதனை உரியவரிடம் தெரிவிப்பது நேர்மைத்தனத்தின் அடையாளம். இந்த ஒரு சிறிய நற்பண்பிற்கும், நேர்மைத்தனத்திற்கும் இடையேயுள்ள நெருங்கிய த�ொடர்பினைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் மாறாமல், தமது சுயநல எண்ணங்களை விடுத்து, எப்போதும் உண்மைக்குக் குரல் க�ொடுப்பவர்கள் நிச்சயமாக நம்பிக்கைக்குரியவர்களாவர். அவர்களே உயர்ந்த மாமனிதர்களாய் உருவெடுப்பர். தமது பதவிக்கும் ச�ொகுசான வாழ்விற்கும் ஆசைப்படாமல், அநீதிகளையும்

 2017

தீமைகளையும் எதிர்த்து நிற்கும் மனத் தைரியம், நேர்மையானவர்களிடம் மட்டுமே காணப்படும். நமது உறவுகளில், நம்பிக்கை அல்லது நேர்மை என்பது மிக மிக முக்கியமானத�ொன்று. நாமெல்லாரும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் முக்கிய பண்பு நம்பிக்கை. இதையே மற்றவர்களும் நம்மிடம் எதிர்பார்ப்பர். மனசாட்சிக்கு நேர்மையாய் வாழ்பவர்களிடம்தான் மற்றவர் மனம் விட்டுப் பழக முடியும். முகமூடி இல்லாமல் ஒளிவு மறைவுகளை அகற்றி, உண்மையான சுயரூபத்தோடு பழகுபவர்களே நம்பிகைக்குரியவர்கள். “சத்தியமேவ ஜெயத்தே! உண்மை எப்போதும் வெல்லும்” - சில நேரங்களில் உண்மையைக் கண்டறிய நாட்கள், மாதங்கள், வருடங்கள்கூட ஆகலாம். ஆனால் உண்மை ஒருநாள் நிச்சயம் வெல்லுமென்பது நாமனைவரும் நன்கு அறிந்த ஒன்று. ஏனெனில், உண்மை எப்போதுமே உறங்கிக் கிடப்பதில்லை. நம்பகத்தன்மையைச் சம்பாதிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அப்பண்பை இழப்பது மிக மிக எளிது. ஒருமுறை இழந்தபின் அதைத் திரும்பப் பெறுவது மிக மிக அரிது. எனவே, என்ன நேர்ந்தாலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்பிக்கை என்னும் நற்பண்பினை நமதாக்கி, நேர்மையுடன் வாழ முயற்சிப்போம். நம்மையும் இவ்வுலகம் மாமனிதர்களாய்ப் ப�ோற்றும்.

 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள்.

29


எதிர�ொலி

எனும்

 1. திருமணம் என்பது எல்லாருக்கும் ப�ொதுவானது. எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் திருமணம் செய்து க�ொள்ளுகிறார்கள். அப்படி இருக்கத் திருமணம் எப்படி அருளடையாளமாகும்? – ர�ோச், திருச்சி.

நீங்கள் எழுப்பியுள்ள வினாவை ஒரு வரியில் சுருக்குவ�ோமா? இத�ோ: கிறிஸ்தவத் திருமணத்திற்கும் மற்ற திருமணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே உருவாகும் உறவின் பிணைப்பு என்பது சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உண்மை. இக்காலத்தில் இந்த அடிப்படை நிலைப்பாட்டைக்கூடச் சில

அந்தோணி கிறிஸ்டி, ச.ச.

உடன்படிக்கை என்பது முறிவுறாதது. ஒப்பந்தங்கள் காலக்கெடு, நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ப�ோன்றவற்றைப் ப�ொறுத்து முடிவுறுவதற்கும் முறிவுறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் உடன்படிக்கைய�ோ முறிவுறாதது, அது புதுப்பிக்கப்படுமே தவிர முடிவுறாது. ஒப்பந்தங்கள் இருதரப்பினருக்கிடையே வரையப்படுகின்றன. உடன்படிக்கைய�ோ இருதரப்பினருக்கிடையே வரையப்பட்டாலும், அதில் உடன்படிக்கையின் சாட்சியமாக, உடன்படிக்கையின் ஊடகமாக, உடன்படிக்கையின் சின்னமாக விளங்கும் மூன்றாம் கூறும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் க�ொள்ள வேண்டும்.

கிறிஸ்துவத் திருமணம் என்பத�ோ ஓர் ஒப்பந்தம் அன்று. அஃது ஓர் உடன்படிக்கை.

கிறிஸ்துவத் திருமணம் என்பது வெறும் இரு நபர்களுக்கிடையே நடக்கும் ஒப்பந்தம் அன்று. மாறாக அஃது இறைமக்களின் முன்பாக, ஆண் பெண் இருவருக்கும் இடையே இறைவன் உருவாக்கும் உடன்படிக்கையாகும். ஆதலால்தான் அஃது ஓர் அருளடையாளம். அன்பு, நம்பிக்கை, வளமான, மகிழ்ச்சியான வாழ்வு என்னும் இறையருளை இருவரும் உள்ளார்ந்து பெறுவதற்கான வெளியடையாளம்.

குழுக்களும் இயக்கங்களும் கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதும் உண்மை. ஆனால் நாம் அதில் சிக்காமல், நீங்கள் எழுப்பிய வினாவை அலசுவ�ோம். அவ்வாறு ஓர் ஆணும் பெண்ணுமாக இணைந்து குடும்பம் என்ற புதியத�ொரு அமைப்பை உருவாக்கி தங்கள் வாழ்வைப் பகிர்ந்துக�ொள்ளும் நிகழ்வு சமூகத்தைப் ப�ொறுத்தவரை ஓர் ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவத் திருமணம் என்பத�ோ ஓர் ஒப்பந்தம் அன்று. அஃது ஓர் உடன்படிக்கை.

உங்கள் வினாவில் இன்னும�ொரு விளக்கம் தேவைப்படுகிறது. ‘திருமணம் என்பது எல்லாருக்கும் ப�ொதுவானது’ என்று த�ொடங்குகின்றீர்கள். அங்கேயே ஒரு சிறு தெளிவை ஏற்படுத்திக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடனே ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதும், படிப்படியாய் முன்னேறி, கல்லூரி, பல்கலைக்கழகம் என நுழைந்து வளர்வதும் ப�ொதுவானதே. அதுப�ோன்றே மண வயதை அடையும் ப�ோது ஓர் ஆண�ோ பெண்ணோ திருமணத்தில் நுழைவது என்பதும் ப�ொதுவானதே என்று சமூகம் கருதுகின்றது. ஆனால் திருச்சபைய�ோ

30

 விசுவாச அடிப்படையில் அன்பர்களாயிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக் கூறு.

 2017


அனைவரும் திருமணம் செய்து க�ொள்வதுதான் இயல்பு என்று கற்பிப்பதில்லை. திருமணம் என்னும் அருளடையாளத்தைப் பெற ஒருவர் இறைவனால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். யாருக்கு அந்த அழைப்பு இருக்கிறது, யாருக்கு இல்லை என்று உரிய நபரும், திருச்சபையின் மேய்ப்பர்களும், நம்பிக்கையின் குடும்பமான திருச்சபையும் இணைந்து இறைவனின் ஒளியில் வரையறுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அழைக்கப்பட்டவர்களே இவ்வுறவில் நுழைய ஏற்கப்படுவார்கள். இப்போது உங்களுக்குக் கிறிஸ்தவத் திருமணத்திற்கும் மற்ற திருமணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

2. திருமணங்கள் இந்த நாட்களிலே மிகுதியாக முறிந்துவிடுகின்றன. அதற்குக் காரணம் என்ன? இதற்குத் திருச்சபை எவ்வாறு ப�ொறுப்பேற்க முடியும்? – சூலியட், பெரம்பூர்

நீங்கள் ச�ொல்வது முற்றிலும் சரியே! மிகவும் மனவலித் தரக்கூடிய உண்மை. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இருந்ததைக் காட்டிலும் தற்போது திருமண முறிவுகள் மிகுதி என்பது 2011இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக, இந்து மற்றும் இஸ்லாமியத் திருமணங்களை விடவும் கிறிஸ்துவத் திருமணங்கள் சற்றே மிகுதி என்ற புள்ளி விவரம் நம்மை மலைக்க வைக்கிறது. இந்தியாவில் இப்படியென்றால் மற்ற உலக நாடுகளில், சிறப்பாகக் கிறிஸ்துவ நாடுகள் என்ற அடையாளம் பெற்ற நாடுகளில் திருமணங்களே குறைவாகத்தான்

 2017

நிகழ்கின்றன என்பது வருந்தத்தக்கது. திருமணம் ஆகாமலேயே கூடி வாழ்ந்து குடும்பம் நடத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சமூகவியலாளர், மெய்யியலாளர், உளவியலாளர், இறையியலாளர் எனப் பலரும் இச்சூழலுக்கான காரணத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனிமனிதத்துவம் (Individualism) என்று சமூகவியலாளரும், பின்நவீனத்துவம் (Post modernism) என்று மெய்யியலாளரும், பாதுகாப்பின்மை (Insecurity) என்று உளவியலாளரும், ப�ொருள் முதற்கொள்கை (Materialism) என்று இறையியலாளரும் கூறினாலும், இதில் இன்னும் ஒருமனப்பட்ட தெளிவு ஏதும் எட்டப்படவில்லை. பட்டறிவு ரீதியாகச் ச�ொல்ல வேண்டும் என்றால், தன்னலமான எதிர்பார்ப்புகளும், ஆழமற்ற புரிதல்களும், உண்மையற்ற அன்பும்தான் திருமணங்களின் முறிவுக்குக் காரணமாகின்றன என்பது நமக்குப் புரியும். இதை மனதில் வைத்தே கத்தோலிக்கத் திருச்சபை இக்காலகட்டத்தில் குடும்பங்களுக்கு மிகுதியான முக்கியத்துவம் தருகிறது. 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இருமுறை ஆயர் ப�ொது அமர்வுகளை நடத்தி, குடும்பங்களை இன்று பாதிக்கும் சூழல்கள் பற்றி அலசி ஆராய்ந்து, இன்றைய சூழலுக்கு ஏற்பக் கிறிஸ்தவக் குடும்பங்கள் எப்படி ஒழுக வேண்டும் என்பதை ‘அன்பின் மகிழ்ச்சி’ (Amoris Laetitia) என்னும் சுற்றுமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் மிக விளக்கமாக நமக்கு அறிவுறுத்துகிறார். அதை ஒவ்வொரு கிறிஸ்துவத் தம்பதியரும் அறிந்திருந்தால் நமது ப�ொறுப்பை நம்மால் உணர்ந்து வாழ முடியும்.

 தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு.

31


ஞாயிறு மறையுரைகள்

பேட்ரிக் மத்தியாஸ், ச.ச.

10

டிசம்பர்

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

எசா.40:1-5,9-12/2பேதுரு3:8-14/மாற்கு1:1-18

காத்திருந்த இஸ்ராயேலர்: எசாயா தமது நூலில் இஸ்ராயேல் மக்களின் காத்திருத்தல் இறைவன் வருகையால் நிறைவடையும் என நம்பிக்கை ஊட்டுகிறார். “இத�ோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றல�ோடு ஆட்சிபுரிவார்” என்று அவர் எழுதுகிறார். மீட்பரின் இரண்டாம் வருகை: தூய பேதுரு, கடவுளாம் கிறிஸ்து தாம் வாக்களித்தவாறே தமது மக்களைச் சந்திக்க மீண்டும் வருவார் என்று நம்பிக்கை ஊட்டுகின்றார். ஆண்டவரின் நாள்காட்டியில் ஒருநாள் என்பது நமக்கு ஆயிரம் ஆண்டுகள். ஆகையால், நம் பார்வைக்கு அவர் காலம் தாழ்த்துவதுப�ோல் த�ோன்றும் என்று அவர் ஊக்கப்படுத்துகிறார்.

அவருக்குத் திருமுழுக்கு அளிக்கவும் அவர் பேறு பெற்றார். “இவரே உலகின் பாவங்களைப் ப�ோக்கும் செம்மறி” என்று அவர் சான்று பகர்ந்தார். “மீட்பரின் மிதியடி வாரைத் த�ொடவும் தமக்குத் தகுதி இல்லை” என்று தம்மைத் தாழ்த்திய இவரது கரங்களால்தான் மீட்பர் திருமுழுக்குப் பெற்றார். இறைவனது இரண்டாம் வருகைக்காக நாமும் நம்மைத் தயாரிப்போம். இறைவனின் இரக்கத்தால் கரடு முரடான நம் இதயங்களைச் செம்மையாக்கி, பாவமன்னிப்புப் பெற்று, அவரது வருகைக்காக நம்பிக்கைய�ோடு காத்திருப்போம்.

17

டிசம்பர்

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

எசா.61:1-2,9-11/தெச.5:16-24/ய�ோ.1;6-8:19-28

மீட்பர் என்ன செய்வார்? எசாயா தமது முதல் வாசகத்தில் “மீட்பர் ஒடுக்கப்பட்டோரின் சார்பாகச் செயலாற்றுவார்” என்று இறைவாக்குரைக்கின்றார். சிறைப்பட்டோரும், கட்டுண்டோரும் அவரால் விடுதலைப் பெறுவர். அவர் பேசுவதை எளிய�ோருக்கு நற்செய்தியாகவும் வலிய�ோருக்குத் துர்ச்செய்தியாகவும் அமையும். மீட்பரை எதிர்கொள்ளத் தயாரிப்பு: பவுலடியார் தமது இரண்டாம் வாசகத்தில் மீட்பரின் இரண்டாம் வருகையில் அவரை எதிர்கொள்ளத் தயாராகுமாறு விசுவாசிகளைப் பணிக்கின்றார். தீமைகளை விட்டு விலகவும், நல்லனவற்றைப் பற்றிக்கொள்ளவும், உள்ளம், ஆன்மா, உடலைக் குற்றமின்றிக் காத்துக்கொள்ளவும் அவர் கற்பிக்கிறார்.

மீட்பரின் முதல் வருகை: எசாயாவும் ய�ோவானும் இயேசுவின் முதல் வருகையைக் குறித்துக் கூறுகின்றனர். மீட்பர் ஏற்கனவே பிறந்துவிட்டதை அறியாத ய�ோவான், “என்னை விட வல்லமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருவார்” என்று கூறுகிறார். ஆயினும் அவரை நேரில் காணவும்,

32

ய�ோவானின் நற்சான்று: இன்றைய நற்செய்தியில் ய�ோவான் தம்மைப் ப�ோலியாக உயர்த்திக்கொள்ள எண்ணவில்லை. மக்கள் அவரை எலியா என்றும் மீட்பர் என்றும் தவறாகக் கருதிய நிலையில், தாம் எலியாவ�ோ மெசியாவ�ோ அல்லர் என்று தாழ்ச்சிய�ோடு கூறுகிறார். அதே சமயம் மக்களால்

 புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.

 2017


அறியப்படாமல் மக்களில் ஒருவராக இருக்கும் இயேசுவே மீட்பர் என்று அவர் சுட்டிக்காட்டி அடையாளப்படுத்துகின்றார். ய�ோவானின் தாழ்ச்சியில் நாமும் வளர்வோம். நம்மையே உயர்த்திக்கொள்ளாமல், எல்லாவற்றிலும் ஆண்டவரையே மகிமைப்படுத்தி, ய�ோவானைப் ப�ோல் அவரை புற சாதியினருக்கு அறிமுகம் செய்து, சான்று பகர்வோம்.

உடனிருக்கச் சித்தமாக உள்ளார். நமக்குள் வாசம் புரியும் அவரே கண்டு க�ொள்ளாமல் நாம் இருந்தது ப�ோதும். இனிமேலாவது அவரைக் கண்டு க�ொண்டு மகிமைப்படுத்துவ�ோம்.

25

டிசம்பர்

கிறிஸ்து பிறப்பு இரவுத் திருப்பலி

எசாயா 9:1-6/தீத்து 2:11-14/லூக். 2:1-14

கிறிஸ்துபிறப்பால் விளைந்த நன்மைகள்: உலகில் க�ோடான க�ோடிப் பேர் பிறக்கலாம். ஆனால் இயேசு என்ற ஒருவரின் பிறப்போ உலகுக்கு மீட்புக் க�ொண்டுவந்தது. மனித வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதனாலேயே அறிஞர்கள் உலக வரலாற்றை கி.மு. என்றும் கி.பி. என்றும் அவரது பிறப்பைய�ொட்டி இரண்டாகப் பிரித்தார்கள்.

24

டிசம்பர்

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு

சாமு.7:1-5,8-12,14-16/உர�ோ.16:25-27/லூக்.1:26-28

கடவுளின் உடனிருப்பு: கடவுள் இஸ்ராயேல் மக்கள�ோடு பயணித்து உடனிருக்க விரும்பியவர். அதனாலேயே அவர் இம்மானுவேலாக இருக்கிறார். தாவீத�ோடு சிறுவம் முதல் உடன் இருந்து, அவருக்கு வெற்றியளித்தார் இறைவன். நாத்தான் என்ற இறைவாக்கினர் இதனை வெளிப்படுத்துகின்றார்.

கடவுளைப் பற்றிய சரியான புரிதலை இயேசு ஏற்படுத்தினார். அவர் மக்கள�ோடு மனுமகனாக வாழ்ந்து மனிதரின் இன்ப துன்பங்களில் கலந்துக�ொண்டு, தாமும் துன்புற்று, கடவுள் மனிதர�ோடு வாழ்ந்து, அவர்களுக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பவர் என்று மெய்ப்பித்தார். இயேசு மனித வரலாற்றுக்குள் நுழைந்ததால். மனித வரலாறு புனிதமானது. ந�ோவா காலத்தைப் ப�ோல மனிதர்களை அழிப்பதால் பயனில்லை, அவர்களை மீட்பதாலாயே கடவுளும் நிறைவுகாண முடியும் என்று இயேசு மெய்ப்பித்தார்.

உடனிருப்பின் விரிவாக்கம்: பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள�ோடு, உடனிருந்த கடவுள், இயேசுவின் காலத்தில் உலகின் அனைத்து மக்கள�ோடும் பாரபட்சமின்றி உடன் இருப்பவராக விளங்குவதை பவுலடியார் உறுதிப்படக் கூறுகிறார். கடவுள் மரியாவ�ோடு: கடவுளின் உடனிருப்பு மரியாவுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. “ஆண்டவர் உம்முடனே” என்று அவர் வாழ்த்தப் பெற்றார். அவரது கருவில் உடனிருக்க அவர் சித்தமானார். மரியாவைப் ப�ோன்று “இத�ோ, ஆண்டவரின் பணியாள்” என்று தம்மை அர்ப்பணிப்போர் அனைவர�ோடும் கடவுள்

 2017

 அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.

33


இயேசுவின் துன்பியல் நாடக வாழ்வு துன்பம் பற்றி புதிய சிந்தனையைத் தந்தது. துன்பமும் சிலுவையும் சாபங்கள் அல்ல. அவையே மீட்புப் பாதையின் படிகள் என்று இயேசுவின் பாடுகள் புரிய வைத்தன. உங்கள் விண்ணகத் தந்தை செப்பமுள்ளவராக இருப்பதுப�ோல் நீங்களும் செப்பமுள்ளவர்களாக இருங்கள் என்று கற்பித்த இயேசு, மனிதர்களும் புனிதர்களாக உயர முடியும் என்று நம்பிக்கையூட்டினார். இயேசுவின் வருகையினாலேயே மனிதன் புனிதனாக வாழக் கற்றுக்கொண்டான். எளிமையே வலிமை, தாழ்ச்சியே மாட்சி, வெறுமையே நிறைமை என்ற உண்மைகளை இயேசு தமது தாழ்மையான பிறப்பின் மூலமும், ஏழ்மையான வளர்ப்பின் மூலமும், ப�ொறுமையான பாடுகளின் மூலமும் எண்பித்தார். இனி ஒருக்காலும் மேட்டிமையும் பணத் திமிரும் மக்கள்முன் எடுபடப்போவதில்லை. அன்பு, அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி அனைத்திற்கும் ஊற்றான மீட்பர் வாழ்ந்து காட்டிய பாதையே யாக்கோபு கனவில் கண்ட அதிசய ஏணி. மீட்பரின் பாதை!

31

டிசம்பர்

திருக்குடும்ப விழா

த�ொ.நூ.15:1-6,21:1-3; எபி.11:8,11-12;17-19, லூக். 2:22-40

ஆபிரகாமின் குடும்பம்: திருக்குடும்பத்திற்கு முன்னோடியான குடும்பமாக ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகிய மூவரும் திகழ்கிறார்கள். இறைவனின் ஆற்றல் மனித ஞானத்திற்கும் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மிக உயர்ந்த ஒன்றாக விளங்குகின்றது. அவரது ஆற்றலால் 100 வயது ஆணும் 90 வயது மலடியும் பிள்ளைப் பேறு பெறுவார்கள் என்ற விந்தையை ஆபிரகாம் குடும்பம் மெய்பிக்கிறது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகமும் உண்மையினையே விளக்குகிறது.

திருக்குடும்பமும் காணிக்கையும்: கன்னி ஒருவர் கணவன் இல்லாமல் கருத்தரித்து மீட்பரைப் பெற முடியும். ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை. மீட்பருக்காக ஆலயத்தில் த�ொண்டு கிழங்கள் ஆகும்வரைக் காத்திருந்த சிமிய�ோனும் அன்னாவும், தங்கள் கண்களால் மீட்பரைக் காண முடிந்தது. தமக்காக நம்பிக்கைய�ோடு காத்திருப்போருக்குக் கடவுள் காட்சி தராமல் ப�ோவதில்லை. ஆபிரகாமுக்கும் சூசைக்கும் எத்துணை வேறுபாடுகள்? ஆயினும் விசுவாசத்தில் இருவரும் கடவுள் முன் ஒருவரே! அதனால்தான் சூசையை கடவுள் ‘அப்பா’ என்று அழைக்ககத் தயங்கவில்லை. ஆபிரகாமின் குடும்பமும் சூசையின் குடும்பமும் எத்துணை பேறு பெற்றவைகள்! நமது குடும்பமும் இதுப�ோல் விளங்க நாம் இறையருளை வேண்டுவ�ோம். புத்தாண்டு நமக்குப் புனித ஆண்டாக மாறட்டும்!

S. மைக்கேல் ராஜ் மண்ணில்: 07.07.1935

விண்ணில்: 19.12.2007

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை க�ொள்பவர் இறப்பினும் வாழ்வார். (ய�ோ. 11:25)

நினைவில் வாழும்… இன்னாசியம்மாள் (மனைவி) பிலிப்பு அருள்ராஜ் குடும்பத்தினர் மதிமலர் சென்பராக்கினி குடும்பத்தினர் (மாதாக்கோட்டை) 34

இந்த

 நம் மீட்பராம் கடவுளின் ப�ோதனை எல்லா வகையிலும் சிறப்புப் பெறும்.

 2017


 2017  2017

 35 35 


Date of Publication: First week of every month. Reg. No. TN/CCN/373/15-17 & WPP. No. TN/PMG(CCR)/WPP-398-15-17. Registrar News in India No. 33652/78. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 06.12.2017

Bank Details தங்களது நிதி உதவியை எம் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம்

36

Account Name Account No. Bank Name IFSC MICR

: ANNAI VAILANKANNI SHRINE-BUILDING FUND : 50100209016761 : HDFC Bank Ltd. Chennai - 600 090, Tamilnadu : HDFC0000010 : 600240003

 If undelivered, kindly return to Salesian Seithi Malar, 26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010

 2017 

 2017

36

சலேசியன் செய்தி மலர் - December  

Happy Reading

Advertisement