Page 1

 

 

 2018

  201801

01


நூல் விலைப்பட்டியல் பக்கம்

40

0202

வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு; சாலையைப் பார்த்து ஊருக்கு நட.

   20182018


இதழ் 03

மலர் 61

மார்ச் 2018

ப�ொறுப்பாசிரியர்கள் ஆசிரியர்

ஆ. சிலுவை முத்து, ச.ச.

அருள்திரு முனைவர் இணை ஆசிரியர்

பேரா. சூ. குழந்தை இயேசு. நிர்வாகக் குழு

அருள்திரு முனைவர் கே.எம். ஜ�ோஸ், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச. ஆசிரியர் குழு

அருள் ர�ோசா, அன்பின் அமலன், சுடர்மணி, சூ.ம. ஜெயசீலன், பால்ராஜ் அமல், பிரியசகி, ஜவஹர். பிழைத்திருத்தம்

குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு

சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச. சந்தா மேற்பார்வை

சு. ஸ்டீபன்ராஜ். அஞ்சல்

வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர்

ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம்

தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்

ரூ. 15 ரூ. 150 ரூ. 300

முழுப்பக்கம் அரைப்பக்கம் கால்பக்கம் பின்அட்டை உள்அட்டை நடுப்பக்கம்

ரூ. ரூ. ரூ. ரூ. ரூ. ரூ.

விளம்பரக் கட்டணம்

6000 3000 1500 12,000 10,000 10,000



வேற்றுமைகளைப் ப�ோற்றுவ�ோம்!

04

வேற்றுமைகளை

நயம் மட்டுமன்று நாகரீகமும்கூட

07

நயம் மட்டுமன்று

ஆணவக் க�ொலைகள் ஏன்?

26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை - 600 010. 044 2661 2138/40 94447 99942 arumbu4young@gmail.com www.arumbupublications.in

  2018

காதல் கல்வெட்டுகள்

வெளிநாட்டு உயர் வகை மதுவை...

அரும்பு இதழில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி:

பில் கேட்ஸ்

முதலாம் பாஸ்கரா

பெண்ணின் நிறம் இலை

உண்மையா? அஃது என்ன? நீர்இன்று அமையாது உலகு நான் யார் தெரியுமா?

வேகத்தடை வேண்டும்

வனவலிச் சீற்றம்!

05 08

11

ஆணவக் க�ொல பில் கேட்ஸ்

காதல் கல்வெட்டு

14 வெளிநாட்டு மது 15

முதலாம் பாஸ்கர

22

பெண்ணின் நிற

18 27 31 34

உண்மையா? அஃ

நீரின்றி அமைய

நான் யார் தெரி

வேகத்தடை வே

36 வனவலிச் சீற்றம்

Printed and Published by Rev. Fr. A. Siluvai Muthu, on behalf of Salesian Publishing Society, No. 45, Landons Road, Kilpauk, Chennai-600 010. Printed at Salesian Institute of Graphic Arts (SIGA), No. 49, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Editor: Rev. Fr. A. Siluvai Muthu.

அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் சமைக்கும்.

03


தலையங்கம்

  வேற்றுமைகளில்தான் அழகும் மகிழ்ச்சியும் வளமையும் செழுமையும் உள்ளது. அதனால்தான் படைப்பில் ஒன்று மற்றொன்றைப் ப�ோல இல்லை. படைப்பில் அந்தந்த இனத்திற்கே (ஆண் இனம், பெண் இனம்) உரித்தான வேற்றுமைகள் பல உள. இறைவனின் படைப்பில் உயர்ந்த படைப்பு மனிதன் என்கின்றோம். அறிவும் அறிவியலும் வளர வளர, படைப்பில் உள்ள வேற்றுமைகளைக் களைய மனிதன் முற்படும்போதும், ஒன்றில் இருப்பதை மற்றொன்றுக்கு மாற்றிப் புதியவற்றை உருவாக்க முயல்கையிலும் படைப்பின் சீரமைப்பில் சீற்றம் உருவாகின்றது. மனிதப் பிறவியிலும் ஆண் ஆணாக இருக்க வேண்டும்; பெண் பெண்ணாக இருக்க வேண்டும். இதை அடக்குமுறை/ஏற்றத்தாழ்வு என்று ஏன் கருதுகின்றோம்? அந்தந்த நிலைகளுக்கே உரிய சிறப்புகள் ஏராளம். பெண்ணைப் ப�ோல, ஆண் செயல்பட்டாலும், அல்லது தன் நிலைக்கு மாறாகப் பெண் செயல்பட்டாலும் சமுதாயச் சமநிலை சீர்குலைகின்றது. எடுத்துக்காட்டாக, உடை, உணவு (மது ப�ோன்றவை) ஒப்பனை, த�ொழில் ப�ோன்றவை. இதில் ஒருவர் இன்னொருவரைப் ப�ோல இருக்க முயல்வதால், எவ்வளவ�ோ சிக்கல்கள் இன்று சமுதாயத்தில் பெருகியுள்ளன. வேற்றுமைகளைப் ப�ோற்றியவையே வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ப�ோன்றவையாகும். ஆனால், இன்றோ அவற்றைப் பற்றிப் பேசுவ�ோரை பழமைவாதிகள் என்று முத்திரைக் குத்தி, ஏளனமாகப் பார்க்கும் நிலை உருவாகி வருகின்றது. ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பு நிலையில் நின்று, சிறந்து விளங்குவதே சிறப்பு என்னும் எனது கூற்றைப் பலர் எதிர்க்கலாம். ஆனால் அதன் விளைவுகளைச்

04

சந்திக்கின்றோம் என்பதை மறுக்க முடியாது. அதனதன் நிலையில் இருக்க வேண்டுமென்கையில் சமுதாயத்தில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைய�ோ, குறைபாடுகளைய�ோ நான் கூறவில்லை. படைப்பின் வேற்றுமைகளையே நான் ச�ொல்ல விழைகின்றேன்.

ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பு நிலையில் நின்று, சிறந்து விளங்குவதே சிறப்பு.

மார்ச் மாதம் என்றாலே மகளிர் நாள் நினைவுக்கு வரும். அதே மாதத்தில்தான் நீர் நாளும், வன நாளும் க�ொண்டாடப்படுகின்றன என்பதையும் நினைவில் க�ொள்வோம். படைப்பை அதன் ப�ோக்கில், படைத்தவனின் ந�ோக்கில் வளர்த்தால் செழுமையும் வளமையும் திளைக்கும். ஒன்றை மற்றொன்றாக மாற்ற முயல்கையில் சீரழிவுகளே மிஞ்சும். மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை என்பதே நம் அனைவரின் ந�ோக்கம். அந்த ந�ோக்கில் ஒற்றுமைய�ோடு, படைப்பில் உள்ள வேற்றுமைகளைப் ப�ோற்றுவ�ோம்.

ஆ. சிலுவை முத்து, ச.ச.

அரைக்காசை ஆயிரம் ப�ொன்னாக்குபவளும் ஆயிரம் ப�ொன்னை அறைக்காசு ஆக்குபளும் பெண்.

ஆசிரியர்

  2018


   ஆதிவாசி

“உயர்சாதிப் பெண், தாழ்ந்த சாதி ஆண�ோடு மணம் புரிந்துவிட்டாள்” என்ற ஒரே காரணத்திற்காக நடப்பது ‘ஆணவக் க�ொலை’ என்று முடிவுகட்டி, அதனைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் சற்று ய�ோசிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆணவக் க�ொலைகளில் அறியாமையும் உண்டு. அர்த்தமும் உண்டு என்பது சிந்தித்தால் புலனாகும். அர்த்தம் என்பது இடையில் புகுத்தப்பட்ட ஒன்றாகும். காதல் மணமே, கலப்பு மணமே தமிழரின் வழிவந்த வழக்கம் என்பதனைப் படிக்காத பெற்றோர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தமிழரின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஆரியரின் வருகையால் மறைக்கப்பட்டன. ஆரியர்கள் சாதி மாறி, அல்லது, தாழ்ந்த சாதிப் பெண்களை ஆண்கள் மணப்பதைத் தடுக்கவில்லை. மாறாக, தாழ்ந்த சாதி ஆண்களை உயர்சாதிப் பெண்கள் மணப்பதையே தடுத்து வந்தார்கள். தாழ்ந்த சாதி வள்ளியை ஆண் முருகன் மணந்தார். தாழ்ந்த சாதி நப்பின்னையை ஆண் திருமால் (கிருஷ்ணாவதாரம்) மணந்தார். வண்ணாரப் பெண்ணை அண்ணாமலையார் என்ற ஆண் கடவுள் ஆசை நாயகியாக வைத்துக் க�ொண்டார் என்ற கதைகளையெல்லாம் தடுக்காத ஆரியர்கள், உயர்சாதிப் பெண் கடவுள் தாழ்ந்த சாதி ஆணை மணந்ததாகக் கதை எழுதவில்லை. காதலித்த ஆண�ோடு ஓடிப் ப�ோனவளை ‘ஓடுகாலி’ என்று க�ொச்சைப்படுத்துவதும், ஓடிப் ப�ோனப்

  2018

பெண்ணைப் பெற்ற தாய் தந்தையரைச் சமூகத்தைவிட்டு விலக்கி வைப்பதும் ஆரியர் செய்கை என்பதைச் சுதமதி என்ற பார்ப்பனப் பெண்ணின் கதை (மணிமேகலை) கூறுகிறது. காதலித்த ஆண�ோடு ஓடிப் ப�ோனவளைப் பெருமைய�ோடு ஏற்று வரவேற்பது தமிழர் மரபு என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சங்க இலக்கிய மரபுகளை மறந்து ப�ோனார்கள் தமிழர்கள். திரைப்படங்களில், ஆரிய மரபை உயர்த்திப் பிடித்து, ஓடிப் ப�ோகும் பெண்ணை ‘ஓடுகாலி’ என்று க�ொச்சைப்படுத்தி வசனம் எழுதி, சினிமாக்காரர்கள் ஒருபுறம் உசுப்பேத்தி வருகிறார்கள்; இஃது அறியாமை. இனி இதிலுள்ள அர்த்தம் அர்த்தமுள்ளதா என்று பார்த்தால், ஆணவக் க�ொலை சரியானதுதான�ோ என்று சிந்திக்கத் த�ோன்றும். சங்க காலத்தில் பெற்றோர் பெண்களைப் படிக்க வைக்கவில்லை. நகை நட்டுகள் ப�ோடவில்லை. ச�ொத்துகளில் பங்கு தரவில்லை. பன்னிரண்டு வயது ஆன பெண், காதலன�ோடு ஓடிப் ப�ோனாள். அந்தப் பன்னிரண்டு வயதுவரை அவளுக்காகப் பெற்றோர் செலவழித்தது ஏதுமில்லை. இன்றும் கூட ஏழை உயர்சாதிப் பெற்றோர் தங்கள் பெண் தாழ்ந்த சாதியனை மணப்பதை எதிர்ப்பதில்லை. நடுத்தர, மற்றும் பணக்காரக் குடும்பத்தார், தங்கள் மகள் ச�ொத்து

ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஓர் ஆணும்!

05


பத்து இல்லாத தாழ்ந்த சாதிப் பையனைக் காதலித்து மணப்பதையே எதிர்க்கின்றார்கள். உயர்சாதிப் பெண்ணை மணந்த தாழ்ந்த சாதி மாவட்ட ஆட்சியாளன் க�ொல்லப்படுவதில்லை. கவுரவம் காதலில் இல்லை. சாதிக் கவுரவம் ஏழ்மையில் இல்லை; பணமும் அந்தஸ்தும்தான் கவுரவம் பார்க்கிறது. பணமே எல்லாத் தீமைகளுக்கும் காரணம் என்று ப�ொதுவுடைமைத் தத்துவம் த�ோன்றியது இதனால்தான் என்றும் கூறலாம். “விக்கிற விலைவாசியில், நாங்க ப�ொண்ணை முந்திரியும் பிஸ்தாவும் ஊட்டி ம�ொழு ம�ொழுன்னு வளர்த்து வச்சிருப்போம், நீங்க அஞ்சு ரூபா க�ொடுத்து அயர்ன் பண்ணின சட்டையைப் ப�ோட்டுட்டு வந்து அலாக்கா மடக்கிக் காதலிச்சிக் கூட்டிட்டுப் ப�ோவிகள�ோ?” என்பது ப�ோல ஒரு திரைப்படத்தில் சந்தானம் வசனம் பேசுவார். இந்த வசனம் மேம்போக்காகப் பார்த்தால் நியாயமாகவே படுகிறது. ஆனாலும் காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்த இதுப�ோன்ற காரணங்கள் மட்டும் ப�ோதுமானவையா என்ற கேள்வியும் பிறக்கத்தான் செய்கிறது. “கடலில் முத்துப் பிறக்கிறது. ஆனால் கடலுக்கு அது ச�ொந்தமில்லை. மூழ்கி முத்தெடுத்த ஓர் ஏழை மீனவப் பையன் கழுத்தில் அஃது ஆரமாகிறது. உயர்ந்த மலையில் பிறக்கும் சந்தனம் மலைக்குச் ச�ொந்தமில்லை. விறகு வெட்டியான ஓர் ஏழை வாலிபன் அந்தச் சந்தனத்தை வெட்டியெடுத்துச் சென்று, உராய்த்துத் தன் மார்பில் பூசி மகிழ்கின்றான். பெண்களும் அப்படித்தான்” என்று குறிஞ்சிக் கலியில் கபிலர் கூறுவார். கபிலரின் இந்த வாதம் நியாயமாகப்படவில்லையா? தன் எதிர்கால இன்பமே தன் கண்ணில் முதலில் பட்டு, தன் நெஞ்சில் இடம் பிடித்துவிட்ட அந்தத் தாழ்ந்த சாதி ஏழைப் பையனிடம்தான் உள்ளது என்று ஒரு பெண் முடிவெடுப்பது முதிர்ச்சியான சிந்தனை ஆகுமா? என்று பெண்ணைப் பெற்ற பணக்காரப் பெற்றோர் மறுபுறம் கேட்கின்றார்கள். ஒரே சாதியானாலும் ஏழைப் பையன்களைப் பணக்காரர்கள் நிராகரிக்கவே செய்கின்றனர். ஒரே சாதியைச் சேர்ந்த காதலர்கள், பெற்றோர் ஏற்காததால் தற்கொலை செய்துக�ொண்ட

ஒரே சாதியானாலும் ஏழைப் பையன்களைப் பணக்காரர்கள் நிராகரிக்கவே செய்கின்றனர்.

06

ஆணை அடித்து வளர்; பெண்ணைப் ப�ோற்றி வளர்.

கவுரவம் காதலில் இல்லை. சாதிக் கவுரவம் ஏழ்மையில் இல்லை; பணமும் அந்தஸ்தும்தான் கவுரவம் பார்க்கிறது. நிகழ்வுகளும் நடக்கத்தான் ச ெ ய் கி ன்ற ன . எங்ஙனமாயினும், தமிழரின் வழி வந்த காதல் மணம் என்ற புனித மரபைப் பெண்ணைப் பெற்ற பணக்காரர்கள் மறத்தல் கூடாது; அழிக்கக் கூடாது. “காதல் என்பது பருவக் க�ோளாறு அன்று, கண்மூடித்தனம் அன்று. அறியாமையின் நிகழ்வு அன்று. அது கடவுள் என்ற ஒ ரு வ ர ால் நிச்சயிக்கப்படுகிறது” என்று த�ொல்காப்பியர் தெளிவாகக் கூறுகிறார். ஆகையால், பணம், சாதி, அந்தஸ்து என்ற எதுவும் காதலில் குறுக்கிடத் தமிழர் மரபில் இடமில்லை என்பது மட்டுமே உண்மை.

  2018


சித்த மருந்துச் ச�ொட்டு - 13

   ஜூலியஸ் இதயகுமார். ஒரு பெண்ணைக் காதலித்தது, கடிதம் க�ொடுத்தது, ஊர் எதிர்த்தது, ஓடிப் ப�ோய் திருமணம் செய்து க�ொண்டது, சம்பாதித்தது, சேர்த்தது, அப்புறம்... குழந்தை, அதன் வளர்ப்பு, படிப்பு, மருமகள், பேரன், பேத்தி... அது அதன் காலத்தில் அது அது முக்கியமாகத் தெரிந்தது. இப்போது, எதுவும் முக்கியமாக தெரியவில்லை. ஒரு காலத்தில், ஒவ்வொன்றையும் கை தேடித் தேடிப் பிடித்தது. இப்போது, கை ஒவ்வொன்றாக நழுவ விடுகிறது. நழுவிச் செல்பவையும், இனி, நான் அவசியம் இல்லை என்பது ப�ோல், என் விரல்களின் இடுக்கு வழியே வழியும் நீர் ப�ோல், நழுவுகின்றன. இப்படி அல்லாமல், தன் காலத்தின் கடைசியில், ஈசிச்சேரில் உட்கார்ந்திருக்கும் கிழவனின் எண்ணங்கள் வேறெப்படி இருக்க முடியும்? ப�ொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் ப�ோனதுவே, என்கிற கடைசி வரி, ப�ொன் வரி.

மையாடு கண்ணியும், மைந்தரும், வாழ்வும், மனையும், செந்தீ ஐயா! நின் மாயை உருவெளித் த�ோற்றம் அகிலத்துள்ளே மெய்யாயிருந்தது. நாள் செல, நாள் செல வெட்ட வெறும் ப�ொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் ப�ோனதுவே.

- பட்டினத்தார்.

சின்னப்பிள்ளை அம்மாள் சின்னப்பிள்ளை இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயிடமிருந்து, மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும், ‘ஸ்திரீ சக்தி’ எனும் உயர் விருது பெற்றவர். விருது க�ொடுத்தவுடன் வாஜ்பாய் தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

  2018

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!

07


கற்றபின்…

பில் கேட்ஸ்

சம்பாதிப்பது ஒரு கலை. அதைச் சமூகச் சிந்தனைய�ோடு செலவிடுவதும், பள்ளத்தில் வீழ்ந்தோரைக் கைதூக்கி விடுவதும் அதைவிடப் பெரிய கலை. - பில் கேட்ஸ்

தமிழ் தீபன்

பில் கேட்ஸ் யார் எனக் கேட்டால் உன்னால் உடனே ச�ொல்லிவிட முடியும். ஆம். உலகின் முக்கியமான கணினி நிபுணர். ‘நீ என்ன பெரிய பில்கேட்ஸா?’ என்று நாம் மற்றவர்களை மட்டம் தட்டியிருப்போம். அந்த அளவுக்குக் கடந்த இரண்டு தலைமுறைகளில் உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். உலகின் ப�ோக்கையே மாற்றியமைத்த மைக்ரோசாப்ட் மென்பொருளை உருவாக்கியவர். இன்றுவரை உலகின் முதல் பணக்காரராகவும் உள்ளார். இவர் உருவாக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது 80,000 பேர் வேலை பார்க்கின்றனர். உலகம் முழுவதும் மைக்ரோசாப்டை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நிமிடமும் உனக்கு 2,600 அமெரிக்க டாலர் தரப்படுகிறது என்று வைத்துக் க�ொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும், 21 ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது என்றால், உன்னிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்? இதைக் கணக்கிட உனக்குக் கால்குலேட்டர் ப�ோதாது. ஆச்சரியமில்லை; இந்த விகிதத்தில்தான் பில் கேட்ஸ் கடந்த 21 ஆண்டுகளாகச் சம்பாதித்து வருகிறார். அதனால்தான் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையைத் த�ொடர்ந்து 11 ஆண்டுகளாகத் தக்க வைத்துள்ளார்.

வாழ்க்கையில் நம்பிக்கைய�ோடும் விடாமுற்சிய�ோடும் ப�ோராடினால் நமக்கும் வானம் வசப்படாமலா ப�ோகும்?

1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் அமெரிக்காவில் சியாட்டில் நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ். அவருக்கு 2 சக�ோதரிகள். தந்தை வழக்கறிஞர், தாயார் பள்ளி ஆசிரியை. ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில் கேட்ஸ், தனிமையை அதிகம் விரும்புவார். எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார். சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க, பில் கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்துக் க�ொண்டிருப்பார்; வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குச் சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது. இரவு உணவுக்குப் பின் குடும்பமாகச் சேர்ந்து ‘ஃபிரிட்ஜ்’ என்ற விளையாட்டை ஆடுவார்கள். ஒவ்வோர் இரவும் வெற்றி பெறுவதைப் பற்றியே நினைப்பார் பில் கேட்ஸ். அவருக்கு 13 வயதானப�ோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் க�ொண்டார். ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார். தம் நண்பருடன் 08

இராசா மகளானாலும் க�ொண்டவனுக்குப் பெண்டுதான்.

  2018


சேர்ந்து கணினியில் பல மணி நேரம் செலவிட்டு, மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் பில் கேட்ஸ். 1973இல் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் ‘பேசிக்’ என்ற ம�ொழியை உருவாக்கினார். 2 ஆண்டுகள் கழித்து 1975இல் தம் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து, ‘ஃமைக்ரோசாப்ட்’ என்ற நிறுவனத்தைத் த�ொடங்கினார். 1977ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடிக்காமலேயே ஹாவர்டை விட்டு வெளியேறி, நிறுவனத்தில் முழுக் கவனம் செலுத்தத் த�ொடங்கினார். இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவனம் செலுத்தினர். 1981ஆம் ஆண்டில், ஐ.பி.எம். கணினிகளுக்கான இயங்குதளத்தைச் செய்து க�ொடுத்தார். அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினித் தயாரிப்பாளர்களையும் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார். கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் த�ொடங்கிய 1980ஆம் ஆண்டுக் காலகட்டங்களில், விற்பனையாகும் ஒவ்வொரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான கட்டணம் கிடைக்கத் த�ொடங்கியது. இது இன்றும் நாளுக்கு நாள் உயர்ந்துக�ொண்டே செல்கிறது இப்போதுவரை. ‘மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே’ என்ற ச�ொற்றொடர் கணினி உலகத்திற்குத்தான் மிகவும் ப�ொருந்தும். அதை உணர்ந்து ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் க�ொண்டே இருக்கிறது. ஐ.பி.எம். கணினிகளுக்குப் ப�ோட்டியாக மவுஸ் க�ொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானப�ோது, அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். உலகின் ம�ொத்த கவனமும் ஆப்பிள் பக்கம் திரும்பியப�ோதும் அசரவில்லை பில் கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்; அஃது இமாலய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல், 1990களின் த�ொடக்கத்தில் இணையம் பிரபலமாகத் த�ொடங்கியிருந்தது. இணையத்தில் உலா வர உதவும் (உலவி) ‘நெட் கேப்ஸ்’ (Net Cafe) என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து க�ொண்ட பில் கேட்ஸ், அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார். ஆனால் அதை விற்கவ�ோ ஃமைக்ரோசாப்டுடன் இணையவ�ோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே, மீண்டும் தம் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் பில் கேட்ஸ். நெட் கேப்ஸ்க்கு இணையான ‘இண்டர்நெட் எக்ஸ்புள�ோரர்’ என்ற இணையச் செயலியை உருவாக்கி, அதனைப் புதிய கணினிகளுடன் இலவசமாக விநிய�ோகம் செய்தார். அதனால் விலைக்கு விற்கப்பட்டு வந்த நெட்கேப்ஸின்

  2018

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

09


இணைய ஆதிக்கம் மங்கத் த�ொடங்கியது. அது மாதிரியான விற்பனைத் தந்திரம் முறையற்றது என்று ஃமைக்ரோசாப்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் த�ொடரப்பட்டன. ஆனால் பில் கேட்ஸை அசைக்க முடியவில்லை. என்ன வந்தாலும் பில் கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும். ஏனென்றால் பில் கேட்ஸின் ப�ோட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை. ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பத�ோ சாமானியர்களை. மைக்ரோசாஃப்டின் பயணம் ராஜபாட்டையன்று. பில் சந்தித்த சவால்கள் பல. ப�ோட்டியாளர்களின் மென்பொருட்களைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாஃப்ட் மிரட்டுவதாக வழக்குகள் வந்தன. இவை ஆதாரமுள்ள குற்றச்சாட்டுக்கள் என்று அமெரிக்க, ஐர�ோப்பிய நீதிமன்றங்கள் முடிவு செய்தன. பெரும் அபராதம் சுமத்தின. த�ொட்டதெல்லாம் வெற்றியாக மைக்ரோசாஃப்டுக்கு இருக்கவில்லை. இணைய உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், MSN என்னும் ஈமெயில் சேவை ஆகியவற்றில் மைக்ரோசாஃப்டால் யாஹு, கூகுள் நிறுவனங்களுடன் ம�ோத முடியவில்லை, த�ோல்வியுற்றன.

த�ொட்டதெல்லாம் வெற்றியாக மைக்ரோசாஃப்டுக்கு இருக்கவில்லை

2000ஆம் ஆண்டில், பில் மைக்ரோசாஃப்டின் சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகிக்கொண்டார். பணம் திகட்டிவிட்டத�ோ? சேர்த்த செல்வத்தால் இல்லாத�ோருக்கு உதவ வேண்டும் என்னும் ஆசை பிறந்தது. மனைவி பெயரையும் சேர்த்து, ‘பில் மெலிண்டா’ அறக்கட்டளையைத் த�ொடங்கினார். 2008ஆம் ஆண்டு, நிறுவனத்தின் முக்கியப் ப�ொறுப்புகள் அனைத்திலிருந்தும் முழுமையாக விலகினார். நிறுவனத்தின் தலைமைப் ப�ொறுப்புகளிலிருந்து வெளியேறி, தற்போது சமூகப் பணிகளுக்காகத் தமது நேரத்தையும், ச�ொத்துகளையும் செலவிட்டு வருகிறார். குறிப்பாக உலகச் சுகாதாரம், கல்வி, த�ொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு நன்கொடைகளை அளித்து வருகிறார். வாழ்க்கையில் நம்பிக்கைய�ோடும் விடாமுற்சிய�ோடும் ப�ோராடினால் நமக்கும் வானம் வசப்படாமலா ப�ோகும்?

10

எவனும் தன் மனைவிக்கு வீரனல்லன்.

  2018


ஐ லவ் யூ - 08

பவுல் ராஜ் அமல், ச.ச.



 தான் அவள் மீது க�ொண்ட காதலை மெய்ப்பிக்க இதைவிடத் தகுந்த வழி இல்லை என்று தீர்மானித்தான் ராஜா. புதிதாக வாங்கிய அந்தப் பிளேடின் முனை அவன் கையைப் பதம் பார்க்கத் த�ொடங்கியது. பாடப் புத்தகத்தில்கூட நேர்கோடு இடத் தெரியாதவன் தன் கையில் தெளிவான நேர்கோட்டை வரைந்தான். முதலில் சற்றே வெள்ளை நிறத்தில் இருந்த நேர்கோடு சிவப்பாக மாறி, இரத்தம் ஒழுகத் த�ொடங்கியது. வலியைத் தாங்கிக் க�ொண்டே அடுத்த எழுத்து, அடுத்த எழுத்து… என ஆங்கில எழுத்துகளால் தன் காதலியின் பெயரைக் கையில் ப�ொறித்தான். பெயரை எழுதி முடிக்கும் முன் அவன் கை இரத்தக்களமாக மாறிவிட்டிருந்தது. இரத்தம் ச�ொட்டும் அவளின் பெயரைத் தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்தான். ‘உனக்கு என் காதலை மெய்ப்பிக்க இன்னும் என்ன நான் செய்ய வேண்டும்? என் கையில் உன் பெயரை மட்டும் எழுதவில்லை. என் காதலையும், வலியையும் எழுதியுள்ளேன்’ என்ற குறுஞ்செய்தியைத் தட்டச்சுச் செய்து புகைப்படத்துடன் அவளுக்கு அனுப்பினான். சற்று நேரத்தில் அவன் கைப்பேசி சிணுங்கியது. துயரம் தேம்பிய முகத்துடன் அவள் அனுப்பிய செய்தியைத் திறந்து படித்தான். “ராஜா, என் பெயர் ‘தர்காதேவி’ இல்லை, ‘துர்காதேவி’. தயவு செய்து ஸ்பெல்லிங் மிஸ்டெக் இல்லாம மாற்றி எழுதி அனுப்பவும்…” என்று அவள் அனுப்பியிருந்தாள். ‘உணர்ச்சி வசப்பட்டுத் தன் காதலியின் பெயரைத் தவறாக எழுதிவிட்டேனே!’ என அவன் தன்னையே இன்னும் ந�ொந்து க�ொண்டான். விடலைப் பருவத்தில் ஒருவருக்கு இன்னொருவர் மீது ஏற்படும் ஈர்ப்பினால், தான் அன்பு செய்பவரின் பெயர் முதல் அவர் பயன்படுத்தும் ப�ொருள் வரை அனைத்தும் பிடித்து விடும். பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் மலரும் நட்பிலும், ஈர்ப்பிலும் இதனைக் காண முடியும். புதிதாக வாங்கிய ந�ோட்டுப் புத்தகத்தில், தன் அன்பரின் பெயரை எழுதிப் பார்த்துச் சுவைக்கும் வயது அது. வெற்றுத் தாள் கிடைத்துவிட்டால், மனதில் பித்துப் பிடித்தது ப�ோலத் தனக்குப் பிடித்தவரின் பெயரைத்தான் எழுதிப் பார்க்கத் த�ோன்றும். மையால் தாளில் எழுதினால் ப�ோதாது என, கையில் அவரின் பெயரை எழுதி அழகு பார்க்கும் இளைய�ோரும் உண்டு. இன்னும் ஒருபடி சென்று, தனது அன்பரின் பெயரை நிரந்தரமாகத் தன் உடலில் பச்சைக் குத்திக் க�ொள்வோரும் உள்ளனர். இவையெல்லாம் நட்பு மற்றும் காதல் உறவுகளில் உண்மைதான்.

  2018

எளியவன் மனைவி எல்லாருக்கும் மைத்துனி.

11


அதே ப�ோல, தன் உடலில் வெட்டுக் காயம் ஏற்படுத்தி, ‘உனக்காக நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் என் அன்பை ச�ொல்லும்’ என்றெல்லாம் பேசி, தன் அன்பின் ஆழத்தை மெய்ப்பிக்க முயல்வோரும் உண்டு. குறிப்பாக மலர்ந்த அன்புறவு வாடி மடியும் நிலை வரும்போது, தன் காதலை தக்கவைக்க வழியாகவும், தன்னை அன்பு செய்யாத ஆளை தனக்கென வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் த�ொடங்கி, இறுதியில் காதல் வெற்றி பெறவில்லை என்ற விரக்தியினாலும் சிலர் மேற்கொள்ளும் செயல்பாடுகள் புரிந்துக�ொள்வதற்குச் சற்றுக் கடினமானவையாக உள்ளன. காதலில் உடைபடும் ஆள், உணவு உண்ணாமல் துயரில் ஆழ்ந்திருப்பதும், சற்று வெறித்தனமாகச் செயல்படுவதும், குறிப்பாகத் தன் உடலில் வெட் டு க்கா ய ங்களை ஏற்படுத்துவதும் நிகழ்கிறது. தனது மனதில் உள்ள அடக்க முடியாத, ப�ொறுத்துக்கொள்ள முடியாத, ச�ொற்களால் விளக்க இயலாத இழப்பு உணர்வையும் வலியையும் வெளிப்படுத்த இந்நபர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்தாம் தங்களைக் காயப்படுத்திக் க�ொள்ளும் செயல்கள். உள்ளத்தின் காயத்தை மறைக்கவும், மறக்கவும் எடுக்கும் இந்த விபரீதச் செயல்பாடுகள் தாங்க முடியாத மனவேதனையைத் தற்காலிகமாகத் தாங்க உதவும் தவறான யுக்திகள். வருத்தத்தால் அலைக்கழிக்கப்பட்டு உணர்வுகள் மரத்துப்போன நிலையில், ஏதாவது ஓர் உணர்வைய�ோ, வலியைய�ோ உணருவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை தான் இந்தக் காதல் கல்வெட்டுகள். ‘இஃது என்ன மடத்தனம்? கையை வெட்டிக்கொண்டால் சிக்கல் சரியாகி விடுமா?’ என்றெல்லாம் நாம்

12

உன் அன்பர் இல்லாமல் உன்னால் வாழவே முடியாது என்றோ, இனி உன் வாழ்வில் மகிழ்ச்சிய�ோ, அன்போ இல்லை என்ற எண்ணம�ோ அறவே வரக்கூடாது. எழுப்பும் க�ோபக் கேள்விகள் அவர்களுக்குச் செவிடன் காதில் ஊதியச் சங்காகும். காதல் வலியால் துடிப்பவர் மட்டுமே பிரிவும், இழப்பும் தரும் வெறிச்சோடிய வாழ்க்கையை உணர முடியும். அதுப�ோன்ற நாட்களில் காலை நேரமும் மாலை நேரமும் ஒன்றுதான். எதுவுமே நடக்கவில்லை என்ற ஏமாற்றமும், இனியும் எதுவும் நடக்கப்போவது இல்லை என்ற உணர்வும்தாம் மிஞ்சும். உடைந்த இதயத்தின் வலியும் வேதனையும் அளவு கடந்து ப�ோகும்போது, மிகுதியான மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டு, அந்த வலியை மறப்பதற்காக, தாங்கக் கூடிய வகையில் தன் உடலில் வலியை ஏற்படுத்துவர். இந்த வெட்டுக்காயங்களும், வழிந்தோடும் இரத்தமும் பு ரி ந் து க�ொ ள ்ளப்ப டு வத ற் கு ம் , உதவப்படுவதற்கும் அவர்கள் ஏற்படுத்தும் அபாயச் சிவப்புச் சிக்னல்கள்.

கடல் க�ொதித்தால் விளாவ நீர் ஏது?

இத்தகைய செயல்கள் பெரும்பாலும் பதின்பருவத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது என்றாலும் பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்லர். ஆண்களைவிடப் பெண்கள்தான் காதலுக்காகத் தன் உடலை மிகுதியாகக் காயப்படுத்திக் க�ொள்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. இந்தக் காதல் கல்வெட்டுகள் இறுதியில் கல்லறை கல்வெட்டுகளாக மாற வாய்ப்புகள் மிகுதி. அலைக்கழிக்கும் துன்பத்தில் இருந்து விடுபட, தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டல் ஏற்படுகிறது. காதல் த�ோல்விகள் இருபாலருக்கும் சமம் என்றாலும். பெண்கள் ஆண்களை விட மிகுதியாகக் காதல் த�ோல்வி சார்ந்த தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஆண்கள்தாம், பெண்களை விட மிகுதியாக, தாம் எடுக்கும் தற்கொலை முயற்சியில் வெற்றி பெறுகின்றனர். இந்தக் கல்வெட்டுகள் யார் படிப்பதற்காக? என்ற கேள்வியை இந்தச் சிற்பிகள் சிந்திக்க வேண்டும். தன் காதலின் ஆழத்தை மெய்ப்பிக்க ஒருவர் செதுக்கும் கல்வெட்டுகள் அன்பை அன்று, மாறாக அன்பரின் உள்ளத்தில் அச்சத்தைத்தான் உருவாக்கும். இதனால் கல்வெட்டுகளின் செய்தியும் தவறாகப் புரிந்துக�ொள்ளப்படும். இந்தக் காதல் கல்வெட்டுகள் மற்றவர்களுக்குச் செய்தி பகிர்வதை விட, அதைச் செதுக்கிய சிற்பிக்குத் தான் பல வாழ்வியல் உண்மைகளை உணர்த்துகிறது. “உன்னை நீயே, இரக்கமில்லாமல் எதிர்மறை சுய ஆய்வு செய்வதால்தான் இப்படி உன் உடலைத் தண்டிக்கிறாய். உன் அன்பர் இல்லாமல் உன்னால் வாழவே முடியாது என்றோ, இனி உன் வாழ்வில் மகிழ்ச்சிய�ோ, அன்போ இல்லை என்ற எண்ணம�ோ அறவே வரக்கூடாது. உனக்கு நீயே தண்டனை க�ொடுப்பதற்குப் பதிலாக உன்னையே நீ கனிவுடன் நடத்த

  2018


முயற்சி செய். ஒரு ஆளின் அன்பை இழந்துவிட்டாய் என்பதால் நீ வாழ்க்கையில் த�ோற்றுவிட்டாய் என்று ப�ொருள் அன்று” என்பதுதான் காதல் கல்வெட்டுகள் சிற்பிக்குத் தரும் செய்தி. கூர்மையான ப�ொருளால் உடலை வெட்டும்போது ஏற்படும் வலியும், அதில் ஏற்படும் சிவப்புக் க�ோடும், பீரிடும் இரத்தமும் உள்ளே அடக்கி வைத்துள்ள ம ன வ லி யை யு ம் வேதனையையும் வெளியே க�ொணரும் வாய்க்கால் என காதல் வலியால் வாடுவ�ோர் எண்ணுகின்றனர். இஃது ஒரு தற்காலிக மாய ஆறுதல்தான். மனவேதனை மறுபடியும் அதிகரிக்கும்போது இன்னும் ஆழமாகவும் மிகுதியாகவும் தன் உடலை வெட்டிக் க�ொள்ளத் தூண்டுதல் ஏற்படும். எவ்வளவுதான் தன் உடலையே காயப்படுத்திக் க�ொண்டாலும் அதனால் மனதில் உள்ள வலி குறையாது. உடல் வலிதான் அதிகரிக்கும்.

அன்பு செய்யும் நம்பகமானவர்களிடம் க�ொண்டு உதவி கேட்கலாம்.

உள்ளக்கிடக்கையைப்

பகிர்ந்து

வரலாற்றுக் கல்வெட்டுகள் வெற்றியின் முத்திரைகள். காதல் கல்வெட்டுகள�ோ த�ோல்வியின் சின்னங்கள்! த�ோற்றுவிட்டோம் என்பவருக்கு எதிர்காலமில்லை. ‘வீழ்வேன் என்று நினைத்தாய�ோ!’ என்று பிரிவும், இழப்பும் தரும் எதிர்மறை உணர்வுகளை வீழ்த்திடுங்கள்.

சிந்தனைக்கு 1. நட்பையும், காதலையும் இரத்தத்தினால் மெய்ப்பிப்பது உயர்ந்தது என எண்ணுகின்றேனா? ஆம்/இல்லை. 2. உறவில் பிரிவுகள் ஏற்படும்போது, ‘என் வாழ்வில் இனி அன்பே இல்லை’ என்பது ப�ோன்ற சிந்தனைகள் எழுகின்றனவா? ஆம்/இல்லை. 3. உடலை வருத்திய�ோ அல்லது காயப்படுத்திய�ோ என் நட்பின், உறவின் ஆழத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கின்றேனா? ஆம்/இல்லை. 4. பிரிவையும், தனிமையையும் ஏற்றுக்கொள்ள முடியாத நேரங்களில், தற்கொலை எண்ணங்கள் என்னில் எழுந்ததுண்டா? ஆம்/இல்லை. 5. உறவு சிக்கல்களைச் சந்திக்கும்போது, அதைப் பற்றி நம்பகமானவர்களிடம் பேசத் தயங்குகின்றேனா? ஆம்/இல்லை பெரும்பாலான கேள்விகளுக்கு உங்கள் மறும�ொழி ‘ஆம்’ எனில், நீங்கள் கட்டாயம் ஆல�ோசனைப் பெற வேண்டும்.

‘ஐ லவ் யூ’ த�ொடரும்

காதல் கல்வெட்டுகள் எல்லாமே ‘உதவி வேண்டும்’ என்ற அறைகூவல்கள் தாம். விவரிக்க இயலாத, ஏற்க முடியாத உணர்வுகளையும், வலியையும் பாதுகாப்பான முறையில் வெளிப்படுத்த முடியும். நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உடலில் உள்ள தேக்க நிலையை மாற்றி மனதிலே நேர்மறையான புது எண்ணங்களை ஊற்றெடுக்கச் செய்யும். இன்னும் குறிப்பாக, கவிதை, கதை மூலம�ோ, அல்லது நாட்குறிப்புகள் எழுதுவதன் மூலம�ோ உ ள் ளு ண ர் வு க ளை வெளிப்படுத்தலாம். நம்மை

  2018

கடலாழம் கண்ட பெரிய�ோரும் பெண்கள் மன ஆழம் காணலரிது!

13


மது ப�ொய்யும் மெய்யும் - ப�ொய் 09

    என்பது ப�ொய்.

முனைவர் பிரான்சிஸ் நெல்சன். வெளிநாட்டு மதுவ�ோ உள்நாட்டு மதுவ�ோ, உயர் வகை மதுவ�ோ, சாதாரண மதுவ�ோ எல்லாவற்றிலும் இருப்பது ஆல்கஹால் (சாராயம்) தான். இவற்றின் பெயர், தரம், வகை, அளவு, நிறம், விலை, புட்டியின் வடிவம் மாறுகிறதேய�ொழிய அதிலிருக்கும் சாராயத்தின் வீரியம் மாறாத ஒன்றுதான். பல வெளிநாட்டு மதுபான வகைகளில் மிகுதியான அளவு மதுவின் வீரியம் உள்ளது. மிகுதியான அளவு ஆல்கஹால் இருப்பதால் மிகுதியான அளவு குடிவெறி மயக்கமும் தாக்கமும் அளவுக்கு மீறி ஏற்படுகிறது. எந்தவகை மதுவாக இருப்பினும், மது வாய் வழியாக உட்புகுவதால் வாயில் புற்றுந�ோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்து உணவுக் குழாய் வழியாகச் செல்லும்போது உணவுக் குழாயில் அரிப்பு ஏற்படும். அதன்பின் மது இரைப்பைக்குள் செல்லும்போது இரைப்பையின் சுவர்களில் எரிச்சலும் காயமும் உண்டாகின்றது. மேலும் இரைப்பையில் வாயு ந�ோயை (Gastritis) உண்டாக்குகிறது. இரைப்பை சுருங்கும். உண்ணும் உணவின் அளவு குறையும், பசி எடுக்காது, உண்ட உணவு செரிக்காது, உணவின் மீது வெறுப்பு ஏற்படும். உடலுக்குத் தேவையான ஆற்றல்கள் குறையும். உடல் மெலியும், வைட்டமின்களும், புரதமும் குறைந்து உடல் நலிவுறும். 14

வேதியல்கூடம் ப�ோலச் செயல்படும் கல்லீரல்தான் 90% மதுவை வேதியல் மாற்றத்தால் ஓர் ஆபத்தான, சிக்கலான வேதியல் செயலாக மாற்றுகிறது. இந்த ‘அசெட்டில் டிகைடில், உள்ள ஹைட்ரஜனைப் பிரித்து, அசிட்டிக் ஆசிடாகவும், (Acetic Acid) பின்பு கரியமில வாயுவாகவும், தண்ணீராகவும் மாற்றி விடுகிறது. நாளடைவில் இது கல்லீரல் ந�ோய்க்கு (Cirrohosis) இட்டுச் செல்கிறது. கல்லீரலின் செல்களில் க�ொழுப்பை அதிகரிக்கச் (Fatty Liver) செய்கிறது. அனிமியா, மஞ்சள் காமாலை ப�ோன்ற ந�ோய்கள் வர ஏதுவாகிறது. சிறுநீரகத்திற்கு ‘யூரிக் அமிலத்தை’ (Uric Acid) வெளியேற்றும் ஆற்றல் குறைவதால், இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு மிகுகின்றது. இரத்தத்திற்குத் தேவையான மாங்கனீசியம் மிகுதியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் இரத்த யூரியா மிகுதியாகி, இரத்த மாங்கனீசியம் குறைவாகி ‘ஹைபர்யுரிஸ்மியா’ (Hyperuricemia) ஏற்படுகிறது. இதயத்தின் தசைநார்கள் தாக்கப்படுவதால் திடீரென இதயத் துடிப்பு நின்றுவிடலாம். தசைநார்களின் செல்கள் அழிக்கப்பட்டு அதன் ஆற்றல் குறைவதால் இரத்த ஓட்டத்திற்குத் தேவையான இயந்திர ஆற்றல் குறைகிறது. இதனால் இதய தசை வீங்கி இதய ந�ோய் ஏற்படுகிறது.

கப்பற்காரன் மனைவி த�ொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.

  2018


மகத்தான இந்திய மேதைகள் – 13

இரா. சிவராமன்.

 

அளப்பரிய சாதனைகளைப் படைத்த பிரம்ம குப்தா என்பவர் வாழ்ந்த காலத்தில்தான் பாஸ்கரா (முதலாம் பாஸ்கரா) எனும் கணித அறிஞர் வாழ்ந்தார். இவரது காலம் கி. பி. 600 முதல் கி. பி. 680 வரை எனக் கருதப்படுகிறது.

இன்றைய ஆந்திர மாநிலத்தில், முதல் ஆர்யபட்டாவின் சீடர்கள், ஒரு கணிதப் பள்ளியை நிறுவிப் பல ஆய்வுகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்பள்ளி நிஜாமாபாத் மாவட்டத்தில் இயங்கியது. இதில், முதல் ஆர்யபட்டா விட்டுச் சென்ற கணிதம் மற்றும் வானியல் சார்ந்த படைப்புகளில் பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தியதாக அறியப்படுகிறது. முதல் ஆர்யபட்டாவின் அற்புதப் படைப்பான ஆர்யபட்டீயத்திற்கு முதல் பாஸ்கரா, ‘ஆர்யபட்டீய பாஷ்யா’ என்ற சிறப்பான உரையை வழங்கினார். இந்நூலில் ஆர்யபட்டா ஏற்படுத்திய 33 கணிதச் செய்யுள்களுக்குச் சிறப்பான உரையை வழங்கியுள்ளார். மேலும் சமமில்லாத நான்கு பக்கங்களும், எதிர் பக்கங்கள் இணையில்லாத நாற்கரத்தின் பண்புகளை முதன்முதலில் இதில் வழங்கியிருந்தார். ஆர்யபட்டாவின் மற்ற படைப்புகளுக்கும் முறையே தெளிவான உரையை ஏற்படுத்திய முதல் பாஸ்கரா, ஆர்யபட்டாவின் உண்மைத் த�ொண்டனாக விளங்கினார். இவரது உரைகளின் சிறப்பினால் பலரது பாராட்டுகளைப் பெற்றார். இவர் வழங்கிய செய்திகளில் முக்கியமான கண்டுபிடிப்புகளையும், அதனால் நாம் அடைந்த பயன்களையும் காண்போம். ஆர்யபட்டீயா என்ற நூலில் காணப்பெறும் சைன் மதிப்புகளுக்கு மேலும் துல்லிய மதிப்புகளை 0 டிகிரி முதல் 90 டிகிரி வரை அழகான சூத்திரம் க�ொண்டு வழங்கினார். ஆர்யபட்டா வழங்கிய கணக்கீடுகளை மேலும் துல்லியமாக ஆங்காங்கே வழங்கியதால் இவரைச் சான்றோர் ப�ோற்றினர். ஆனால் மூன்று அல்லது நான்கு தசமப் புள்ளிகள் வரை சரியாக அமைந்த ஆர்யபட்டாவின் சைன் மதிப்புகளுக்கு ஏன் மேலும் துல்லிய மதிப்புகள் தேவைப்படுகின்றன?

  2018

குதிரை இருப்பு அறியும், க�ொண்ட மனைவி குணம் அறிவாள்.

15


மிகத் துல்லியமான சைன் மதிப்புகளை வழங்கியதன் வாயிலாக, வானியல் செய்திகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முதல் பாஸ்கரா வழி வகுத்தார். இயற்பியலில், மூன்று அல்லது நான்கு தசமப் புள்ளிகள் வரைச் சரியாக அமையுமாறு கணக்கீட்டை ஏற்படுத்தினாலே, அதனை அனைவரும் உண்மையென ஏற்றுக்கொள்வர். ஆனால், கணிதம் ஆழமான தன்மையுடன் விளங்குவதால் எத்தனைத் தசமப் புள்ளிகள் வரைச் சென்றாலும் அதற்கென ஒரு பண்பு உருவாகிக் க�ொண்டே இருக்கும். இதனால் அதன் பயன்பாடும் அதிகரிக்கும். உதாரணமாக, ஆர்யபட்டா வழங்கிய சைன் மதிப்புகள், க�ோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் எவ்வளவு காலம் சுழல்கின்றன, பூமியில் சூரியனின் நிழலுக்கு ஏற்றவாறு காலத்தை அறியும் பண்பு, க�ோள்கள் எந்தெந்தக் காலகட்டத்தில் சந்திக்கின்றன ப�ோன்ற, வானியல் சார்ந்த பல வாழ்வியல் செய்திகளை வழங்கும். எனவே, முதல் பாஸ்கரா வழங்கிய துல்லியமான சைன் மதிப்புகள் மூலம் மேற்கூறிய வானியல் செய்திகளை மிகச் சரியாக அறியலாம். இதனால் பருவக் காலத்தின் பண்பை அறிந்து விவசாயிகள் தங்கள் விளைச்சல் காலத்தைச் சரியாக உணர்ந்து அதிக விளைச்சலைப் பெற்றுப் பெரிதும் பயனடைவர். ஆகையால் மிகத் துல்லியமான சைன் மதிப்புகளை வழங்கியதன் வாயிலாக, வானியல் செய்திகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முதல் பாஸ்கரா வழி வகுத்தார். கி. பி. 629ஆம் ஆண்டில், முதல் பாஸ்கரா இயற்றிய “ஆர்யபாட்டீய பாஷ்யா” எனும் நூலே கணிதம் மற்றும் வானியல் சார்ந்த மிகப் 16

பழமையான சமஸ்கிருத உரைநடைத் த�ொகுப்பாக விளங்குகிறது. மகா பாஸ்கரியா (பாஸ்கராவின் பெரியப் புத்தகம்) மற்றும் லகு பாஸ்கரியா (பாஸ்கராவின் சிறிய புத்தகம்) எனும் இரு வானியல் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். மகா பாஸ்கரியா நூலின் ஏழாம் அத்தியாயத்தில் இவர் சைன் சார்பிற்கு விகிதமுறு சார்புகளைப் பயன்படுத்தி, த�ோராயமான சைன் மதிப்புகளை வழங்கியிருந்தார். இச்சூத்திரத்தை இன்றளவும் கணித அறிஞர்கள் ப�ோற்றுகின்றனர்.

sin x =

16 x(π − x) [5π 2 − 4 x(π − x)]

இதைப் பயன்படுத்தி, சைன் மதிப்புகளை 0 டிகிரி முதல் 90 டிகிரி வரை, 9 டிகிரி இடைவெளியில் மிகத் துல்லியமாக அறிய முடிகிறது. மேலும் π என்ற எண் விகிதமுறா எண்ணாகத்தான் இருக்க வேண்டும் எனச் சரியாக யூகித்திருந்தார். லகு பாஸ்கரியா எனும் நூலில், கட்டிடங்களை கணிதக் க�ோட்பாடுகளைக் க�ொண்டு எவ்வாறு அமைக்கலாம் என்றும், பருவக் காலத்திற்குத் தகுந்தவாறு எந்தெந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என்றும் பல செய்திகளையும் வழங்கியுள்ளார். இச்சிந்தனைகள் பிற்கால இந்திய அறிஞர்களுக்குப் பேருதவியாக அமைந்தன. இந்நூல் அக்காலத்தில் தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்று விளங்கியது. பல வாழ்வியல் பயன்பாடுகளை உள்ளடக்கிய இந்நூல், முதல் பாஸ்கராவின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது.

க�ோத்திரம் அறிந்து பெண் க�ொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

  2018


ஆனால், இன்று நாம் முதல் பாஸ்கராவைப் பெரும்பாலும் அறிவது, எண்களுக்கு அவர் ஏற்படுத்திய இடமதிப்புச் சிந்தனை மூலமே! பூஜ்ஜியம் என்ற எண்ணிற்கு வட்ட வடிவத்தை முதன் முதலாகக் குறித்தவர் இவரே! இன்றளவும் நாம் இக்குறியீட்டையே பயன்படுத்துகிற�ோம். இதன் மூலம் இந்தியர்களுக்கு எண்களின் இடமதிப்புச் சிந்தனை கி. பி. 629ஆம் ஆண்டு முதலே தெரிந்திருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. பகா எண்கள் சார்ந்து இவர் வழங்கியத் தேற்றமே இன்று ‘வில்சன் தேற்றம்’ என எண்ணியலில் அழைக்கப்படுகிறது. மேலும் ஒருபடி, இருபடி சமன்பாடுகளுக்கானத் தீர்வு முறைகளைத் தெளிவாக வழங்கியுள்ளார். குறிப்பாக, எண்ணியலில் இன்று காணப்படும் பெல்ஸ் சமன்பாடுகளின் தீர்வு முறைகளை அன்றே ‘குட்டக்கா முறை’ என்ற அரிய முறையில் குறிப்பிட்டுள்ளார். இம்முறையைப் பல நூற்றாண்டுகளாக, பிற்காலத்திய இந்திய கணித அறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இச்சிந்தனைகள் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அறியப்பட்டது என்பது இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாக அமைகிறது. பெல்ஸ் சமன்பாடுகளைக் குறிப்பிடும் ஓரிடத்தில், “ஓ, கணித அறிஞரே, ஒரு வர்க்க எண்ணை எட்டால் பெருக்கி ஒன்றைக் கூட்டினால், வேற�ொரு வர்க்க எண் கிடைக்குமெனில், அவ்விரு எண்களைக் கண்டறிவாயாக?” எனக் குறிப்பிட்டுள்ளார். கணிதச் சமன்பாடு முறைப்படிப் பார்த்தால், 8 x 2 + 1 =y 2 என்ற சமன்பாட்டைப் பெறுவ�ோம். இதற்கு, ( x, y ) = (1,3) என்ற முதல் தீர்வை இவரே வழங்கி, மற்றத் தீர்வுகளுக்குக் ‘குட்டக்கா முறை’யைப் பயன்படுத்தி எண்ணற்றத் தீர்வுகள் அமையும் எனச் சரியாகக் கூறியிருந்தார். உதாரணமாக, குட்டக்கா முறையைக் க�ொண்டு ( x, y ) = (6,17) என்ற மற்றொரு தீர்வைப் பெறலாம். இச்சிந்தனை நவீன எண்ணியல் க�ோட்பாடுகளுக்கு மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. தனக்கு முன்பு ஏற்படுத்தியிருந்த கணிதப் பிழைகளைச் சரிசெய்வதில் இவர் வல்லவராகத் திகழ்ந்தார். கணிதத்தில் நிரூபண முறை க�ொண்டே இயலை ஏற்படுத்த வேண்டும் என்ற கிரேக்கச் சிந்தனையில் தமது படைப்புகளை வழங்கினார். இதுவே, இவர் வழங்கிய சூத்திரங்களின் அதிக துல்லியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. த�ோராய மதிப்புகள் க�ொண்டு கணக்கீடுகளை ஏற்படுத்தியதைத் தவறு என துணிச்சலாக வாதிட்டார். உதாரணமாக, இவர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த அநேக இந்தியக் கணித மேதைகள் π என்ற எண்ணிற்கு பத்தின் மூலவர்க்க மதிப்பையே ( π ≈ 10 = 3.1622... ) த�ோராய மதிப்பாகக் கருதினர். ஆனால், இவர், ஆர்யபட்டா, பிரம்மகுப்தா ஆகிய இருவர் வழங்கிய மதிப்புகளை விட

  2018

தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

சிறந்த π மதிப்பைத் தமது சைன் சூத்திரங்கள் க�ொண்டு மேலும் துல்லியமாகக் கண்டறிந்தார். கணிதக் க�ோட்பாடுகள் ஆழ்சிந்தனை அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளைக் கடைப்பிடித்தார். இவ்வாறு கணிதத்தில் மிகச் சிறந்த பங்களிப்பைத் தந்து, ஐர�ோப்பியர்கள் சிந்திப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது ஆற்றலை வெளிப்படுத்தி, இந்தியக் கணிதம் வளர்வதற்கு, முதல் பாஸ்கரா உறுதுணையாய் விளங்கினார். ஆர்யபட்டாவிற்குப் பிறகு இந்தியக் கணிதம் மற்றும் வானியல் பங்களிப்புகளில் பெரும் சாதனை புரிந்தவர்களில் பிரம்ம குப்தாவும், முதல் பாஸ்கராவும் இடம் பெறுவர். எண்களுக்கு இவர் வழங்கிய இடமதிப்புச் சிந்தனை, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பிப�ோனாச்சி என்பவரால் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் அடிப்படைச் சிந்தனையை, முதல் பாஸ்கரா கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். கணிதம் மற்றும் வானியலில் பல சாதனைகளை வழங்கிய முதல் பாஸ்கரா என்றென்றும் சிறப்புத் தன்மை வாய்ந்த அறிஞராக அனைவராலும் ப�ோற்றப்படுகிறார்.

ஐர�ோப்பியர்கள் சிந்திப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது ஆற்றலை வெளிப்படுத்தி, இந்தியக் கணிதம் வளர்வதற்கு, முதல் பாஸ்கரா உறுதுணையாய் விளங்கினார். 17


நீ இளைஞன்! அது ப�ோதும்! - 06

 

சூ. ம. ஜெயசீலன்.

இனிய இளைஞனே! விதைத்த விதை, படரும் க�ொடி, ப�ொய்த்த மழை, காய்ந்த வயல், ஓய்ந்த புயல், எழும் அலை, விழும் இலை, பாயும் புலி எல்லாம் கதையின் கர்ப்பப் பைகள். கதைகள் கேட்டு நீ வளர்ந்ததால், கதை உன் ஞான விதை. அதனால்தான் கதை கேட்பதும், கதை பேசுவதும் உனக்குப் பிடிக்கிறது. சூரியன் சுட்டாலும், இரவு சூழ்ந்தாலும் எப்பொருள் குறித்தாவது பேசிக்கொண்டே இருக்கிறாய். காரணம் இருந்தாலும், காரியம் மறந்தாலும் பேசுவதை நீ நிறுத்துவதில்லை.

தலைமைப் ப�ொருளாதார ஆல�ோசகராகப் ப�ொறுப்பு வகித்த ரகுராம் ராஜன் தலைமையிலான ஆறு பேர் க�ொண்ட வல்லுநர் குழு சமூக, ப�ொருளாதாரம், மனித வள மேம்பாடு, தனி நபர் வருமானம், நிதி ஆதாரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மாநிலங்களின் வளர்ச்சியை ஆய்வு செய்தார்கள். மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள், குறைவான வளர்ச்சி பெற்ற மாநிலங்கள், வளர்ந்த மாநிலங்கள் என மாநிலங்களைப் பிரித்தார்கள்.

கதைக்குக் கால் இல்லை எனச் ச�ொல்லப்பட்டதால், நதி மூலம், ரிஷி மூலம் பார்க்க யாரும் முனைவதில்லை. கதைகளே உன்னை இன்று ஆளுகின்றன. உண்மை (Fact), கற்பனையாக உருவாக்கப்படும் கதை (Fiction), இரண்டிற்கும் இடையில் உன் வாழ்க்கை ஊடாடுகின்றது. மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரிக்கத் த�ொடங்கிவிட்ட உனக்குக் கதையில் இருந்து உண்மையைப் பிரிக்கத் தெரியாததால், கதையிலுள்ள ப�ொய் உயிர் வாழ்கிறது. 2014, ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடந்தது உனக்கு நினைவிருக்கலாம். நகத்திலும் சதையிலும் ஒருசேர மை தடவியதைச் செல்பி எடுத்து நீ பதிவிட்டிருக்கலாம். “குஜராத் ப�ோன்ற வளர்ச்சி பெற்ற மாநிலம் இந்தியாவில் இல்லை. குஜராத் ப�ோல அனைத்து மாநிலங்களையும் மாற்றுவ�ோம்” என்று எழும்பிய முழக்கங்கள் இன்னும் உன் காதில் ரீங்காரமிடலாம். அரசியல் கட்சி மட்டுமன்றி ஊடகங்களும் சேர்ந்து இதில் சுதி சேர்த்ததை உன் மனம் மறக்காதிருக்கலாம். உண்மையில் குஜராத் வளர்ந்த மாநிலமா? 18

தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!

  2018


ஆய்வின் முடிவு 2013, செப்டம்பர் மாதம் வெளியானது. க�ோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தர்காண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்களாக ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம், கர்நாடகா, திரிபுரா, குஜராத், மிச�ோரம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, நாகாலாந்து, மேற்கு வங்கம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் அறிவிக்கப்பட்டன. வளச்சியடைந்த மாநிலமாக, மூன்றாவது நிலையில் தமிழகம் இருந்ததைப் பெரிதுபடுத்தாத ஊடகங்கள், குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலமான குஜராத் வளர்ந்த மாநிலம் எனவும், அதைப் ப�ோல இந்தியா உருவாக வேண்டும் எனவும் நம் மூளையைச் சலவை செய்தன. படித்த இளைஞர்கள்கூடத் தமிழகம் பின்தங்கிவிட்டதாக நினைத்தார்கள். கதையின் பிடியில் கைதியானீர்கள். உண்மை 2 ஜிகா பைட் வேகத்தில் வருகின்றப�ோது, கதை 4 ஜிகா பைட் வேகத்தில் பரவிவிடுகிறது. உண்மை வேர் விடுவதற்குள் கதை கனி க�ொடுக்கத் த�ொடங்கிவிடுகிறது. ப�ொய்க் கதைகள் தனிமனிதச் சுதந்திரத்தைத் தாக்குகிறது. ஒருவர் மீது சமூகம் வைத்திருக்கும் மரியாதையைச் சிதைக்கிறது. மன அழுத்தம் க�ொடுக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை முடமாக்குகிறது. கிரிக்கெட்டை நேசிக்கும் யாரும் அவ்வளவு எளிதில் பிரணவ் தனவாதே என்னும் பள்ளி மாணவரை மறந்திருக்க முடியாது. 2016ஆம் ஆண்டு 323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் எடுத்து,

  2018

நான்கு இலக்கத்தை எட்டிய முதல் வீரர் என்னும் பெருமையை 15 வயதில் பெற்றார். பாராட்டுகள் குவிந்தன. மும்பை கிரிக்கெட் சங்கம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 10,000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்குத் தருவதாக உறுதி தந்தது. தன் மகனின் வளர்ச்சி கண்டு ஆட்டோ ஓட்டுநரான தந்தை மகிழ்ந்தார். பேருவகைக் க�ொண்ட தந்தை பிரஷாந்த், 2017, நவம்பர் மாதம், “என் மகனால் சரிவர இப்போது ஆட முடியவில்லை. எனவே உங்கள் உதவித் த�ொகை வேண்டாம்” என மும்பைக் கிரிக்கெட் சங்கத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். என்ன நடந்தது? மிகச் சிறந்த வீரராகத் த�ொடர்நடை ப�ோட வேண்டிய பிரணவ், ஏன் ச�ோர்ந்து ப�ோனார்? வளர வேண்டிய குருத்து ஏன் வாடிப்போனது. பிரணவ்வின் பயிற்சியாளர் ம�ொபின் ஷைக், மும்பை ‘மிட் டே’ பத்திரிகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

கதை எது, உண்மை எது எனப் பிரித்துப் பார்த்தால் உண்மை நிலைக்கும்.

தாய்வீடு ஓடிய பெண்ணும் பேய�ோடு ஆடிய கூத்தும் ஒன்று.

19


“பிரணவ் பற்றிப் பல்வேறு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1009 ஓட்டங்கள் எடுத்ததால் அதிகம் பணம் சேர்த்துவிட்டார் என்றும், இனி அவர் கிரிக்கெட் ஆடத் தேவையில்லை என்றும் பலர் அவதூறு பரப்பினார்கள். பாந்த்ராவில் வீடு வாங்கிவிட்டார் எனக் கதை கட்டினார்கள். எங்கே சென்றாலும் பிரணவ் மற்றும் குடும்பத்தினரை வேற்றுக் கிரகவாசிகள் ப�ோலப் பார்த்தார்கள். இத்தனைப் ப�ொய்ப் பேச்சுக்களும் அவர்களைக் காயப்படுத்தின. எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆட முடியவில்லையே என அவருக்கு மன உளைச்சலைக் க�ொடுத்தது. ஊராரின் பேச்சுத் துரத்தியது. எனவே உதவித் த�ொகையைப் பெற்று அதன் மூலம் எந்தவித சமூகக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர்கள் ஆளாக விரும்பவில்லை. “அந்த 1009 ஓட்டம் பற்றிய அனைத்து நினைவுகளையும் நாங்கள் எங்கள் நினைவில் இருந்து அகற்ற விரும்புகின்றோம். உயர்மட்ட கிரிக்கெட் ஆடுவதுதான் இலட்சியம். அதற்காக, மானத்தையும் கவுரவத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றனர். நிகழ்வுகளைச் சுற்றி உருவாக்கப்படும் கதைகள் எவ்வளவு அழுத்தமானவை எனப் பார். திறமை இருந்தும் பிறரது ப�ொறாமையின் வெளிப்பாட்டினால் உருவான கதை ஒரு வீரனின் திறமையை குடும்பத்தின் நிம்மதியைச் சிதைத்திருப்பதைக் கவனி. கதைகளை நம்பியதால் உன் நட்பைத் தூக்கி எறிந்த நண்பன் அல்லது த�ோழி உன் நினைவில் வருகிறார்களா? எத்தனைய�ோ முறை

20

உன்னுடைய நிலையை விளக்கிச் ச�ொல்ல நீ முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல், யார�ோ ப�ொறாமையில், அல்லது நீ தனக்கு மட்டுமே ச�ொந்தம் (Possessiveness) என்னும் எண்ணத்தில் உருவாக்கிய கதைகளை நம்பி உன்னைக் காயப்படுத்திய உறவுகள் நெஞ்சுக் கூட்டைத் தட்டுகிறார்களா? உருவாக்கப்பட்ட கதைகளால் தங்கள் படிப்பை பாதியில் விட்ட அல்லது தங்கள் வாழ்வை அழித்துக்கொண்ட நண்பர்கள் மற்றும் பிரிந்து ப�ோன குடும்பங்கள் கண்கலங்கச் செய்கிறார்களா? “மெய்ப்பொருள் காண்பது அறிவு” (திருவள்ளுவர்), “ஏன், எதற்கு, எனக் கேள்வி கேள்” (சாக்ரடீஸ்), “கண்ணால் காண்பதுவும் ப�ொய், காதால் கேட்பதுவும் ப�ொய், தீர விசாரிப்பதே மெய்” எனப் பட்டறிந்தவர்கள் ச�ொன்னாலும் பல நேரங்களில் நீ கதைகளை நம்புகிறாய். “நெருப்பில்லாமல் புகையாது” எனப் பேசுகிறவர்கள் மத்தியில் அது நெருப்பினால் வந்த புகையா அல்லது சுழன்றடிக்கும் காற்றில் கிளம்பிய தூசியா என ஆய்ந்தறியும் பக்குவம் உனக்கு வேண்டும். தெனாலிராமன் மற்றும் பீர்பால் ப�ோன்ற புத்திசாலிகளின் கதைகளை நூற்றாண்டுகள் கடந்தும் நீ வாசிப்பதன் காரணம் அவை வெறும் கதைகள் என்பதற்காக அல்ல. கதைகளை விலக்கி உண்மையைக் கண்டறிய அவர்கள் செய்த ப�ோராட்டம் அதில் நிறைந்திருக்கிறது. கதையைக் களையெடுக்க அரசனையே அசர வைத்த சூட்சமம் அதில் சூல் க�ொண்டிருக்கிறது.

திட்டாத மனைவியுடன் வாழ்பவர் ச�ொர்க்கத்தில்தான் வாழ்வர்.

  2018


உன்னைப் ப�ோன்ற இளைஞன்தான் தானியேல். அவன் வாழ்ந்த காலத்தில் சூசன்னா என்றொரு குடும்பத் தலைவி வாழ்ந்து வந்தாள். சமுதாயத்தில் குணவதியாகத் திகழ்ந்தாள். எனவே இறைவனின் தனிப்பெருங் கருணை அவளுக்கு இருந்தது. நகரின் நடுவர்கள் இருவர் சூசன்னா மீது காமவயப்பட்டார்கள். த�ோட்டத்துக் கிணற்றில் குளிக்கச் சென்ற சூசன்னாவை நெருங்கி, தங்கள் ஆசைக்கு அடிபணிய வற்புறுத்தினார்கள். மறுத்த அவளை பயமுறுத்தினார்கள். கடவுள் மேல் பாரத்தைப் ப�ோட்டுச் சூசன்னா உரக்கக் கத்தினாள். அவளுக்கு எதிராக நடுவர்களும் கூச்சலிட்டார்கள். கூட்டம் கூடியப�ோது ஒரு கதையை உருவாக்கினார்கள். சூசன்னா ஓர் இளைஞனுடன் தனியாய் இருந்ததாகவும், தாங்கள் பிடிக்க முயன்றப�ோது அவன் தப்பிவிட்டதாகவும் கதை ச�ொன்னார்கள். சிலர் இருக்காது என்றார்கள், சிலர் இருக்கலாம் என்றார்கள். இன்னும் சிலர் நடுவர்கள் ப�ொய் ச�ொல்லுவார்களா? என்றார்கள். ம�ோசே சட்டப்படிக் கல்லெறிந்து அவளைக் க�ொல்ல நடுவர்கள் தீர்ப்பு எழுதினார்கள்.

நெருப்பில்லாமல் புகையாது எனப் பேசுகிறவர்கள் மத்தியில் அது நெருப்பினால் வந்த புகையா அல்லது சுழன்றடிக்கும் காற்றில் கிளம்பிய தூசியா என ஆய்ந்தறியும் பக்குவம் உனக்கு வேண்டும். என் இனிய இளைஞனே! கதை எது, உண்மை எது எனப் பிரித்துப் பார்த்தால் உண்மை நிலைக்கும். அடுத்தவர் பெயருக்கு உண்டான களங்கம் விலகும். முயன்று பார். உண்மையை ஆய்ந்தறியும் ஆர்வமும், அதை உலகுக்கு அறிவிக்கும் கடமையும் உனக்கு இருக்கிறது. காத்திருக்கிற�ோம் நாங்கள் உன்னுடன் கை க�ோர்க்க. (மீண்டும் சந்திப்போம்)

அப்போது தானியேல் என்ற இளைஞன், கூட்டத்தின் நடுவே வந்தார். “இந்த இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை” என்றார். ஆச்சர்யமாக எல்லாரும் பார்த்தப�ோது, “நடுவர்கள் ப�ொய் ச�ொல்லுகிறார்கள், அவர்களைத் தனித்தனியாக விசாரிக்க வேண்டும்” என்றார். மக்கள் சம்மதித்தார்கள். தனித்தனியே அவர்களை அழைத்த தானியேல், “எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கும்போது பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். ஒருவர் விளாமரத்தடியில் என்றார். மற்றவர் கருவாலி மரத்தடியில் என்றார். உண்மை புரிந்த மக்கள் சூசன்னாவுக்குக் க�ொடுக்க இருந்த தண்டனையை நடுவர்களுக்குக் க�ொடுத்தார்கள்.

  2018

தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

21


 

 விவேகப் பிரியன். பி.

மலை, மடு, மரம், புறம், வயல், செடி, பூ, கனி, சிலை, ஓவியம், பாடல், கவிதை, இசை, நடனம், நளினம், பேச்சு, த�ொழில், இலக்கியம், ம�ொழி, பெண் என யாவற்றையும் ஆண் அல்லது ஆணியல் சிந்தனை, அழகு என்ற க�ோட்பாட்டின்படியே பார்த்து, அதைச் சுவைக்க வேண்டும் என்ற ஒரு புறவியல் தாக்கத்தையும் க�ொண்டுள்ளது. பெண்ணியல் சிந்தனை எழும்போதெல்லாம் ஒட்டும�ொத்த ஆணியல் சிந்தனைகளும் தம் த�ோள் வலிமையால் அடக்கியது மட்டுமல்லாமல் மிகப் பெரிய சிந்தனைத் தடைச் சங்கிலியையும் இணைத்துள்ளது. ஆணியல் சிந்தனை பெண்ணுக்குள் இருப்பதும், பெண்ணியல் சிந்தனை ஆணுக்குள் இருப்பதிலும்தான் இயற்கை தன் அழகையும், ஆற்றலையும் அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது. திருவிவிலியத்தின் த�ொடக்கத்திலேயே, கடவுள் மரியாவைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதகுல ஒப்புமையாளாக நியமிக்கின்றார். சாத்தானை அந்தப் பெண்ணின் பகைவனாக அவர் அடையாளப்படுத்துகிறர். ஏனெனில் விடுதலை அல்லது மீட்பு ஒரு பெண்ணின் வழியாகத்தான் உட்புக முடியும் என்பதை கடவுள் அறிந்திருக்கின்றார். த�ொடக்கக் காலம் முதலே, ஒரு பெண்ணின் வழிகாட்டுதல் அல்லது நெறிப்படுத்துதலை விடச் சாவதே மேல் என்ற எண்ணம் நடைமுறையில் இருந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, வரலாற்று நாயகன் ஜூலியஸ் சீசரும் அவர் மனைவி கல்பூர்னியாவுமே என்று, ஷேக்ஸ்பியர் தமது ஜூலியஸ் சீசர் என்ற வரலாற்று நாடகத்தில் பதிவு செய்துள்ளார். ப�ொதுவுடைமையின் வேந்தன் என அழைக்கப்படும் எர்னஸ்ட்டோ சே குவ�ோர், தம்முடைய தந்தையைவிட, தன் தாயினால்தான் மிகுதியாகப் புடமிடப்பட்டார் என்று அவரின் நெருங்கிய நண்பரான கார்லோஸ் கலிகர் தம் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.

  2018 22

22

  2018


ஆணாதிக்கம் உலக வரலாற்றில் தத்துவ ரீதியாக பெண்களின்மேல் ஓர் அமைதிப் ப�ோர் த�ொடுத்துக்கொண்டே இருக்கின்றது. ஹ�ோமர் எழுதிய காப்பியங்கள், அக்காலத்தில் மிகவும் பாராட்டப்பட்டன. இல்லியட் மற்றும் ஒடிஸி என்ற அவ்விரண்டுக் காப்பியங்களும் ஹெலன் என்ற பெண்ணின் அழகை மையப் ப�ொருளாக வைத்தே படைக்கப்பட்டுள்ளன. அவள் அழகு எந்த அளவிற்கு ஈர்ப்புடையது என்றால், பல நூற்றாண்டுகள் கடந்து கிறிஸ்டோஃபர் மார்லோ என்ற ஆங்கில எழுத்தாளன், சாகும் தருவாயில், “ஒருவன் ஹெலனிடமிருந்து ஒரு முத்தத்தை மட்டுமே எதிர்பார்ப்பான்” என்று எழுதும் அளவுக்கு இருந்தது.

  2018

கதைக்களத்தில் ட்ராய் நகர ஹெக்டரும், கிரேக்க நாட்டு அகமெம்னாமையும் ஹெலனை ஒரு பந்தையப் ப�ொருளாகவும், கவுரவத்தைக் காக்கும் திறவுக�ோலாகவும் பார்த்தத�ோடல்லாமல் ஹெலனுக்குத் தன் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் உரிமையில்லாததால், முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இந்தப் ப�ோர் நடந்ததாக வருணிக்கப்படுகின்றது. எக்காரணத்தினாலும் ஒரு பெண் தன் உரிமையை எந்த ஒரு வழியிலும் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக விண்ணை முட்டும் க�ோபுரங்களும், ஆயிரக்கணக்கான நாவாய்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பெண் இனத்திற்காகப் ப�ோராடுவதென்றாலும் அதை ஓர் ஆண்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நம் வரலாறு. 23

 2018

23 


பீஜிங்கின் செச்சுவானில் உள்ள சீனப் பெண்களுக்கு மிகுதியான மரியாதையும், ஊதியமும் தரப்பட்டன. காரணம், அவர்களின் தாய்ப்பால் பணக்காரர்களின் குழந்தைகளுக்கு விற்கப்பட்டது. சீனப் பெண்கள் தாய்ப்பாலை விற்றுத் தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைக் க�ொடுத்த மாண்பிற்காகவே பிப்ரவரி பன்னிரெண்டாம் நாளை, தாய்ப்பால் நாளாக உலகம் க�ொண்டாடுகின்றது. இச்செய்தி பல நூற்றாண்டுகளானாலும் பலருக்கும் ப�ோய்ச் சேராமைக்குக் காரணம் பால் க�ொடுத்தது பெண் இனமன்றோ! 1770களில் பிரேசில், அடிமைகளின் புகலிடமாக இருந்திருக்கின்றது. அந்நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில், பெண்கள் தங்களின் பூர்வீகத் த�ொழில் அல்லது கடமை என்று நம்பப்படும் பணிகளான பிள்ளைப் பெறுதல், சமைத்தல், வீடுகளைத் தூய்மை செய்தல், கணவன்மார்களை மகிழ்வித்தல் ப�ோன்ற பல வேலைகளுக்கிடையே சசீம்பா கம்பா, மரியானா கிரிய�ோலா, ஜெஃப்ரீனா மற்றும் ஃபெலிப்பா மரியா அர�ோன்யா ஆகிய�ோர் பெண் விடுதலைப் ப�ோராட்டத்திற்குத் தலைமை தாங்கி சமூக விடுதலைக்காகப் ப�ோராடினர்.

எந்த ஒரு நேரத்திலும், பெண் என்பவள் வெற்றி என்கிற கனியை எக்காலமும் ருசித்துவிடக் கூடாது என்ற சிந்தனை இன்றைய ஆணாதிக்க சித்தாந்தங்கள் நமக்குப் புரிய வைக்கின்றன. இந்தியாவின் அன்னை மீனாம்பாள், சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே சமூக விடுதலைக்காகப் ப�ோராடினார். ஈ. வெ. ராமசாமியைப் பெரியார் எனப் பிரகடனப்படுத்திய பேராற்றலே மீனாம்பாள்தான் என்று பெரியாரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கே தெரியாமல் இருப்பதற்குக் காரணம், மீனாம்பாள் ஒரு பெண் என்பதால்தான் ப�ோலும். காந்தி, பாரதியார் ப�ோன்ற நாட்டின் பெருமைக்குரியவர்களைக் கூட, பெண் அடக்குமுறையைச் செயல்முறைப்படுத்திய பின்னர்தான் பெண் விடுதலையைக் கையிலெடுத்தனர். உளவியல் அறிஞர்கள் சிலர், 24

த�ொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

பெண் விடுதலையை மிகுதியாகப் பிரகடனப்படுத்தும் ஆண்களின் எண்ணம் கூட ஒருவிதப் பெண்ணடிமைத்தனம்தான் என்கின்றனர். 1923ஆம் ஆண்டு ‘எல்’ என்ற ஒரு புதினத்தை எழுதியதற்காக ஸ்பெயின் நாட்டைவிட்டே துரத்தப்பட்டவர் மெர்த்தேதிஸ் பீந்தோ. அவர் தமது புதினத்தில், திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு என்னென்ன அவலங்களும், இன்னல்களும் நிகழ்கின்றன என்று கூற முற்படுகின்றார். அந்நாட்களில் பெண்கள் அந்த அளவுக்கு இன்னல்களுக்கு ஆளாகியிருக்க வேண்டுமெனில், விவாகரத்து என்ற முடிவு மிகவும் ஆர�ோக்கியமானது என்றும் அவர் வாதிடுகின்றார்.

  2018


ஆணாதிக்கம் உலக வரலாற்றில் தத்துவ ரீதியாக பெண்களின்மேல் ஓர் அமைதிப் ப�ோர் த�ொடுத்துக் க�ொண்டே இருக்கின்றது. அரிஸ்டாடில் எனும் அறிஞர், “முழுமைப் பெறாத ஆண் என்ற உயிரினமே பெண்” என்கிறார். இறையியல் வல்லுநர் புனிதத் தாமஸ் அக்குவினாஸ், “பெண் என்பவள், ஆண் விந்தின் குறைபாட்டால் தவறிப் பிறக்கும் ப�ொருள்” என்று கூறுகின்றார். மார்டின் லூதர் என்பவர், “பெண்களின் நளினமான உடலமைப்பு வீட்டைக் கவனிக்கவும், பிள்ளைப் பெற்றெடுக்கவும் மட்டுமே” என்கின்றார். ஃப்ரான்தீஸ்கோ தே க�ோவாதே என்பவர், “பெண்கள் குழந்தை என்ற முட்டையிடும் பெட்டைக் க�ோழிகள்” என்கின்றார்.

உலகின் புரட்சி வரலாற்றில், அதிகம் மறைக்கப்பட்டவர்கள் பெண்களே. மதங்கள் பெண்களை வேறு வகையில் சித்தரிக்கின்றன. “கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது ப�ோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார்… மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்… மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்” என்கின்றது கிறிஸ்தவம். இஸ்லாம் மதம�ோ, “கீழ்ப்படியக்கூடியவர்கள்தான் ஒழுக்கமான பெண்கள்” என்று அல்லா முகமதுவிடம் கூறியுள்ளதாகவும் அதைப் புனிதக் குரான் நெறிப்படுத்துகின்றது என்றும் விளக்கம் அளிக்கின்றது. இந்து மதம�ோ, உலக வரலாறுகளையெல்லாம் தன்னகத்தே வைத்துள்ளது ப�ோல, ஆடை, அணிகலன்கள், வழிபாட்டு முறைகள், கல்விமுறைகள், த�ொழில் முறைகள், வரவேற்பு முறைகள் என எல்லாத் துறைகளிலும் தனது சித்தாந்தத்தை, வேர்க்காலாக ஊன்றியுள்ளது. அவற்றையெல்லாம் வென்றுள்ள இந்தியப் பெண்கள் உலக வரலாற்றின் மணிமகுடங்கள். இன்றளவும் பல க�ோயில்களுக்குள் நுழைய பெண்கள் மறுக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல கடவுளர்கள் தம் இரு மனைவிகள�ோடும், பெண் பணியாளர்கள�ோடும் இருப்பதைப் பார்த்துக் க�ொண்டுதான் இருக்கின்றனர். சதி, தேவதாசி முறை ப�ோன்றவை பெண்களுக்கு எதிரான தலையாய அடக்குமுறைகள். இத்தகைய

  2018

அடக்குமுறைகளை உடைக்கக் காதல் என்ற ஆயுதத்தை எடுத்ததும் பெண்தான். ஏகாதிபத்திய நாட்களை உடைத்து ‘மூலதனம்’ எனும் ப�ொதுவுடைமை சித்தாந்தத்தை உருவாக்கக் கார்ல்மார்க்ஸுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவருடைய மனைவி ஜெசிக்கா. வரலாற்றில் பிரெஞ்சு அரசு பெண்ணின் தலைமைப் பண்பிற்கு சிறப்புக் க�ொடுத்தவர் பதின்பருவ நாயகி ஜ�ோன் ஆஃப் ஆர்க். அவளின் ப�ோர் திறனையும், தலைமைப் பண்பையும் பார்த்து வியந்து, தற்கொலை செய்து க�ொள்ளவியலாத க�ோழைப் பிடாரிகள் அவளுக்கு அழுக்கு வண்ணம் பூச, ‘மதத் துர�ோகி, குற்றச் செயல்களில் ஈடுபடுபவள், சமயப் பகையுடையவள், சிலை வழிபாடு செய்பவள்’ ப�ோன்ற பல்வேறு வண்ணங்களைக் காரணமாகத் தீட்டினார்கள். உலகின் புரட்சி வரலாற்றில், அதிகம் மறைக்கப்பட்டவர்கள் பெண்களே. பெண்கள் புகைக்கின்றனர்,

நல்ல கணவன் செவிடனாயிருக்க வேண்டும்; நல்ல மனைவி குருடாய் இருக்க வேண்டும்.

25


குடிக்கின்றனர், பரத்தமை செய்கின்றனர், குட்டை ஆடைகளை அணிகின்றனர், ஆண்களைக் கெடுப்பதே இந்தப் பெண்கள்தான் என்றெல்லாம் தம் ஆய்வுக் கட்டுரைகளை விரிவுபடுத்துபவர்கள் ஆணையும், பெண்ணையும் சமமாகப் பார்க்கத் தெரியாத மனந�ோயாளிகள். ஆண் இனமே பல நூற்றாண்டுகளாக ஒரு ந�ோயில் சிக்கி மடிகின்றது. இன்றைய தமிழ்த் திரைப்படங்களான அறம், அருவி, மகளிர் மட்டும், 36ஆம் வயதினிலே ப�ோன்றவையாகட்டும், இந்தி ம�ொழிப் படங்களான தங்கல், பேட்மேன், ஜெக்தே இந்தியா ப�ோன்ற படங்களாகட்டும், இவையெல்லாம் பெண்ணியப் பார்வையை முன்னிறுத்தி வைத்தாலும், நடிகைகளை திரைப்படுத்த விழைந்துள்ளனர். ஆணியல் சிந்தனைகள், பெண்ணியல் சிந்தனைகளை மேலெழும்ப விடாமல், தண்டவாளங்களை மாற்றிச் சிந்தனை ஓட்டத்தைத் திசைதிருப்புகின்றன. பெண் என்ற பாலினம், இலக்கிய வரலாற்றில் வழிந்தோடக்கூடிய காதலுக்கும், தாய்மைக்கும் மட்டுமே பயன்படும் கருதாங்கி ஆகிறாள். பெண்ணுக்கு ஆயிரம் அணிகலன்களைத் தாண்டி அழகு சேர்ப்பது வாள் என்று உணர்த்திய பின்னும், ஆண் ஆதிக்கச் சிந்தனைகள் வெற்றி க�ொள்வதைப்

பல திரைப்படங்கள் வருகின்றன.

திரைக்குக்

க�ொண்டு

ஆண் ப�ோரில் வீழ்வதையும் பெண் சிதையில் வீழ்வதையுமே சரி என்ற சிந்தனையை உளவியல் ரீதியாக அடித்தளம் எழுப்பியுள்ளனர் சமூக ஆதிக்கச் சக்தியினர். எந்த ஒரு நேரத்திலும், பெண் என்பவள் வெற்றி என்கிற கனியை எக்காலமும் ருசித்துவிடக் கூடாது என்ற சிந்தனை இன்றைய ஆணாதிக்க சித்தாந்தங்கள் நமக்குப் புரிய வைக்கின்றன. பெண் என்பவள், ஒரு மரத்தின் இலையைப் ப�ோல, அழகின் அணிகலனாக அறிவிக்கப்படுகிறாள். ஒரே இடத்தில் இருக்கும் மரத்தின் தண்டுப் பகுதி ஆண் எனப் புரிந்து க�ொள்ளப்பட்டு, மரம் என்றாலே, தண்டுப் பகுதிதான், அதை மிஞ்சினால் கிளை என்பத�ோடு சிந்தனை நின்றுவிட்டது. இவற்றை வார்த்தெடுக்கும் இலை என்ற மேற்பகுதிக்கு யாருமே வருவது இல்லை. இலையின் பச்சையம் (பச்சை நிறம்) தான் மரத்தின் வாழ்க்கையைச் செழுமை ஆக்குகின்றது. நீராவியாதல் மற்றும் ஸ்டார்ச் எனப்படும் தாவரவியல் க�ோட்பாடு தெரியாத மூடர்களிடம் இலையின் முக்கியத்துவத்தைப் பேசுவது வீணே.

கூடுதல் நேரம் தூங்கி மகிழலாம்.

...

உடற்பயிற்சிகள் செய்து உடலை வலுவாக்கலாம்.

26

ய�ோகா, தியானம் ப�ோன்ற வகுப்புகளுக்குச் சென்று மனதை மென்மையாக்கலாம். சமைப்பது, துவைப்பது ப�ோன்றவற்றைக் கற்று உதவலாம். விருப்பமான சில புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம். வெளியில் சென்று நண்பர்கள�ோடு விளையாடி இன்புறலாம். செஸ் ப�ோன்ற விளையாட்டுகள் மூலம் மூளைக்கு வேலை தரலாம். உற்றார், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கி உறவை வளர்க்கலாம். கணினி, தட்டச்சு, இசை ப�ோன்றவற்றை முறையாகக் கற்றுத் திறமைகளை வளர்க்கலாம். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ப�ோன்றவற்றைக் கற்று உடலினை உறுதி செய்யலாம். சுற்றுலாச் சென்று புதியவற்றைத் தெரிந்துக�ொள்ளலாம். முதிய�ோர் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், மருத்துவ மனைகள் ப�ோன்றவற்றிற்குச் சென்று துன்புறுவ�ோரின் நிலையினை உணரலாம்.

அருங்காட்சியகங்களுக்குச் சென்று பழமையின் பெருமையை அறியலாம். ம�ொழிகளைக் கற்று பன்மொழித் திறமையை வளர்க்கலாம். சில வேலைகள் செய்து ப�ொருள் ஈட்டலாம்.

தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

  2018


உலக நீர் நாள்

22 மார்ச்

 

 “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” (குறள் - 20) இவ்வுலகு, நீர், நிலம், நெருப்பு, காற்று, வான் எனும் ஐம்மூலங்களால் ஆனது. இந்த ஐந்து மூலங்களும் இல்லையெனில் உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. அதிலும் நீர் இல்லாமல் வாழ்தல் என்பது இயலாத ஒன்றாகும். இந்த நீரின் இன்றியமையாமையையே மேற்கண்ட குறளில் திருவள்ளுவர் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். “நீர்மத் தங்கம்” என்று அழைக்கப்படும் நீரானது, உலகையும் உலகுவாழ் உயிர்களையும் வாழ வைக்கும் அமிழ்தம் ப�ோன்றது. நீர் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது. மக்கள் த�ொகை உயர்ந்து க�ொண்டே ப�ோகும் இன்றைய சூழலில், அவர்களுக்குத் தேவையான நீரின் தேவையும் உயர்ந்து க�ொண்டே வருகிறது. உலக நாடுகளில் 40 விழுக்காடு மக்கள் நீர் இன்றி இன்னலுறுகிறார்கள். பல க�ோடி மக்கள் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக, உலகம் வருங்காலத்தில் பாலைவனமாக மாறும்

  2018

கி. சுடர்மணி. பேரிடரும் உள்ளது. தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையில், பல பகுதிகளில் மக்கள் ஏத�ோ கிடைக்கின்ற மாசடைந்த நீரைப் பயன்படுத்தும் நிலைக்குள்ளாகி, அதன் விளைவாகக் கடுமையான ந�ோய்களுக்குள்ளாகியுள்ளனர். எனவேதான் எதிர்கால நீரின் தேவையைக் கருத்தில் க�ொண்டு, நிலா, செவ்வாய் உள்ளிட்ட க�ோள்களில் மனிதன் உயிர்வாழ முடியுமா, நீர் உள்ளதா என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இத்தகைய சூழலில்தான் நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவதும் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் ந�ோக்கத்துடன் ஆண்டுத�ோறும் மார்ச் மாதம் 22ஆம் நாள் ‘உலக நீர் நாள், க�ொண்டாடப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரைப் பாதுகாத்து, நீர் ஆதாரங்களைக் காப்பாற்றி, நீர் மாசுபடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மனித சமுதாயத்தின் தலையாயக் கடமை என்பதை இந்நாளில் அனைவரும் உணரச் செய்வோம்.

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், பனிக்கட்டி ஆகும் வரைக் காத்திருந்தால்.

27


நீர் நாள் வரலாறு

நீரின் இன்றியமையாமை

1992ஆம் ஆண்டு பிரேசிலின் ரிய�ோ டி ஜெனிர�ோ நகரில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐ.நா. பேரவைக் கூட்டத் த�ொடரில் உரைக்கப்பட்ட 21ஆம் நூற்றாண்டின் செயல்திட்டத்தின்படி, 1993ஆம் ஆண்டுச் சனவரி 18ஆம் நாள் 47ஆவது ஐ.நா. பேரவைக் கூட்டத் த�ொடர் நிறைவேற்றிய சில தீர்மானங்களின்படி, 1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ஆம் நாளை ‘உலக நீர்வள நாளாக’க் க�ொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானத்தின் ந�ோக்கம் நீர்வளத்தின் அனைத்துத் திட்டங்களையும், ஆளுவத்தையும் மேம்படுத்தி, நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் உயர்ந்து க�ொண்டே வரும் நீர்ப் பற்றாக்குறை சிக்கலைத் தீர்ப்பது என்பதே. அந்தந்த நாட்டின் நீர்வளப் பாதுகாப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆண்டுத�ோறும் ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் உலகளாவிய நீர்வளப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர் நாளில் முன்னெடுப்பதும் ஐ.நா. நிறுவனத்தின் திட்டமாகும்.

நிலத்தில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும 70 விழுக்காடும் நீர்ப்பரப்புதான். ஆனால் இன்று அந்த 30 விழுக்காட்டில் உறையும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் சக்தியை பூமி இழந்து வருகிறது. காரணம் மனித இனம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. 70 விழுக்காடு பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 விழுக்காடு கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதம் 2.5 விழுக்காடு அளவிற்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனித்தரையாகவும் மாறிப் ப�ோயிருக்கிறது. எஞ்சியுள்ள 0.26 விழுக்காடு, உலக மக்கள் அனைவரின் தேவையை பகிர்ந்து நிறைவு செய்வது என்பது கேள்விக்குறிதான். கிடைக்கும் குறைந்த அளவு நீரும் ஆண்டுத�ோறும் 40 ஆயிரம் டன் கழிவுகளால் மாசடைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி நீரும் ஆழ்துளைக் கிணறுகள் த�ோண்டுவதால் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. நாள்தோறும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற நீரால் ஏற்படும் த�ொற்றுந�ோய்களால் இறப்பதாகப் புள்ளிவிளக்கங்கள் தெரிவிக்கின்றன. நீரின் இன்றியமையாமையை அனைவரும் உணர்ந்து செயல்படுவ�ோம்.

பண்டைக்கால நீர்ப் பாதுகாப்பு

தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி கற்காதவர்களும் எப்படிச் சிறக்க முடியாத�ோ, அதுப�ோல் வாய் நன்கு அமையாத குளமும் சிறக்காது

“வான்பொழியும் நீரே உயிர்ப்பு” (குறள் - 16) என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தைத் தமிழ் மக்கள் த�ொன்றுத�ொட்டு உயிரினும் மேலானதாகப் ப�ோற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதன் மூலமாகவே தமிழகத்தின் வேளாண்மைப் பெரிதும் சிறந்து விளங்கியது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இலக்கியங்கள் மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றன. “நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறத�ோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர்” என்று புறநானூற்று பாடல் (புறம்18) ஒன்றில் புலவியனார் எனும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறித்துப் பாடியுள்ளார். சிறுபஞ்சமூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றிக் காரியாசான் “ப�ொதுக்கிணறு அமைத்தல்,

28

நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

  2018


வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு ப�ோன்றவற்றை அமைப்பவர் ச�ொர்க்கத்துக்குப் ப�ோவார்” என்று கூறியுள்ளார். திரிகடுகத்தில், “நீர்வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும்” என்பதை, “வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர் நல்குரவு சேரப்படார்” (83)

நீர்நிலைகள் இன்றைக்குக் கு டி யி ரு ப் பு க ள ா க வு ம் , த�ொ ழி ற்சாலை க ள ா க வு ம் மாற்றமடைந்து வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி நீர்நிலைகள் ஏதேனும் இருப்பின் அவற்றில் நீரைக் காண்பது அரிது. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல் உள்ளிட்ட செயல்களால் பருவமழை ப�ொய்த்துப்போய்விடுகிறது. அதையும் என்று தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி மீறி மழை ப�ொழியும்போது வரும் கற்காதவர்களும் எப்படிச் சிறக்க முடியாத�ோ, அதுப�ோல் நீரைச் சேமித்து வைக்கப் ப�ோதுமான வாய் நன்கு அமையாத குளமும் சிறக்காது என்று வழிவகைகள் செய்யப்படுவதில்லை. குறிப்பிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்து நிற்கும் பகுதியைச் கண்மாய்களையும், குளங்களையும் முறையாகப் சார்ந்த அதே மக்கள் க�ோடைகாலம் பராமரித்த செய்தியை, அகநானூற்றுப் பாடல், நெருங்குவதற்கு முன்பே குடிப்பதற்குக்கூட “பெருங்குளக் காவலன் ப�ோல அருங்கடி அன்னையும் நீர் கிடைக்காத ஓர் அவல நிலைக்குக் துயில் மறந்தனளே” (அகம் – 25) என்கிறது. இதன் காரணம் மழைக்காலங்களில் வரும் நீரைச் மூலம் சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை சேமிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இமை காப்பது ப�ோல் காத்த செயலும், அவற்றை முழுமையாகக் கடலில் கலக்க நீர்நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாக விடுவதாலேயாகும். இதன் காரணமாகவே ஏரி, எண்ணப்பட்டு வந்துள்ளதை அறியலாம். இதனால் குளங்கள், ஆறுகள் அனைத்தும் நீரில்லாமல் வேளாண்மை சிறப்படைந்து மேன்மையான வறண்டு ப�ோய்விட்டன. இதனால் உழவிற்குப் வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழ் ப�ோதுமான அளவு நீர் கிடைக்காமல், நமது இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் உழவர்கள் நதிநீர் இணைப்பு உள்ளிட்ட செய்திகள் ஏத�ோ கற்பனையான ஒன்று என்று க�ோரிக்கைகளை வலியுறுத்தி ஓராண்டாகத் கூறிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், தலைநகரில் நடத்தி வரும் பலவகையான அறிவியல் சார்ந்தவையாக இருப்பதைக் ப�ோராட்டங்கள் யாவரும் அறிந்ததே. கல்வெட்டுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. பழைய த�ொழில்நுட்பங்களுடன் புதியவைகளும் செய்ய வேண்டியவை இணைந்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் முற்காலத்தில் க�ோடைகாலம் த�ொடங்கிவிட்டால், இன்னலின்றி இருக்கலாம். வழியில் செல்வோர் குடித்துத் தாகம் தீர்த்துக்

நீரானது, உலகையும் உலகுவாழ் உயிர்களையும் வாழ வைக்கும் அமிழ்தம் ப�ோன்றது.

இன்றைய நிலை நீர் ஆதாரங்களின் இன்றைய நிலையை நினைக்கும்போது மிகவும் வருத்தமளிக்கிறது. நீர்நிலைகள் என்பதைக் கண்ணில் காண்பதே அரிதாக உள்ளது. ஏனெனில் பெரும்பான்மையான

  2018

நீர் விளையாடேல்

க�ொள்ளட்டும் என்ற நல்ல ந�ோக்கத்தோடு வீட்டுக்கு வெளியில் பானைய�ோ அல்லது ஒரு பாத்திரம�ோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். ஆனால் அதுப�ோன்றத�ொரு காட்சியைத் தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? பார்க்க முடியும்; வாசலில் குடங்கள் இருக்கின்றன; ஆனால் அவை நீர் நிரம்பி அல்ல; நீர் நிரப்ப; எப்போதாவது வரும் குழாய் நீருக்கும், குடிநீர்

29


ஊர்திகளுக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை. தற்போது முதலில் நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இருக்கின்ற நீர்நிலைகளையாவது முறையாகப் பராமரித்து அவற்றில் நீர் தேங்கச் செய்வதால் மட்டுமே வாழ்வதற்கான நீரைப் பெற முடியும். நாளும் பயன்படுத்தும் நீரிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்துத் தேவையின்றி நீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் வந்தால் மட்டுமே இது கைகூடலாகும். உலக நீர் நாளைக் க�ொண்டாடும் இத்தருணத்தில், “நீரை மாசுபடுத்தாமல் உயிர் ப�ோலக் காப்போம்” என்ற உறுதிம�ொழியை நிறைவேற்றப் பாடுபடுவ�ோம்.

டஷி மற்றும் நுங்ஷி மாலிக் டஷி மற்றும் நுங்ஷி மாலிக் ஆகிய�ோர் உலகின் ஏழு க�ொடுமுடிகளில் ஏறி சாதனை புரிந்த முதலாவது இரட்டையர் என்ற பெருமையினைப் பெற்ற இந்தியப் பெண்கள் ஆவர். இவர்கள் அரியானா மாநிலத்தைச் சார்ந்தவர்கள். இச்சாதனைகளுக்காகச் சாகசக்காரர்களுக்கான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்கிற விருதினை வென்றுள்ளனர். கின்னஸ் உலகச் சாதனைகள் 60ஆவது பதிப்பில் டஷி - நுங்ஷி மாலிக் சக�ோதரிகளின் சாதனை இடம் பெற்றுள்ளது.

30

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

  2018






பள்ளியிலிருந்து வந்ததும் புத்தகப் பையினைச் ச�ோபா மீது ‘த�ொம்’மென எறிந்துவிட்டுத் தன் அறைக்குள் செல்லும் மகளைக் கண்ட ராதிகா துணுக்குற்றாள். பத்தாம் வகுப்புப் படிக்கும் தன் மகள் கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், ‘எல்லாம் உன்னால்தான்’ என்று சம்மந்தமில்லாத விஷயத்திற்குக் கூடத் தன் மீது க�ோபப்படுவதையும் நினைத்துக் கவலைப்பட்டுக் க�ொண்டிருந்தாள். ‘என்ன ஆச்சு இவளுக்கு? ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா? இன்னைக்கு எப்படியாவது அவகிட்டப் பேசி சரி செய்யணும்’ என்று மனதுக்குள் ச�ொல்லிக் க�ொண்டு, அவள் இருந்த அறைக்குச் சென்றாள் ராதிகா. படுக்கை அறையில் ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு வெறித்துப் பார்த்துக் க�ொண்டிருந்த மகளின் த�ோளைத் த�ொட்டு, “அழகு! என்னம்மா, உனக்கு என்ன பிரச்சினை? இரண்டு நாளாகவே நீ சரியா சாப்பிடலை, டல்லா இருக்க, என்ன ஆச்சு?” என்றாள்.

பிரியசகி, ஜ�ோசப் ஜெயராஜ், ச.ச.

பின் சுதாரித்துக் க�ொண்ட ராதிகா, தன் மகளை அணைத்தவாறு பேசத் த�ொடங்கினாள். “அழகு, உன் மனவேதனை அம்மாவுக்கு நல்லா புரியுதும்மா. நானும் உன் வயசுல இதே மாதிரி வருத்தப்பட்டிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெள்ளையா அழகா இருக்காங்க, நான் மட்டும் ஏன் இப்படி கறுப்பா அசிங்கமா இருக்கேன்னு ர�ொம்ப நாள் அழுதிருக்கேன். அந்தச் சமயத்துலதான், ‘ஆசிய விளையாட்டுப் ப�ோட்டிகள்’ நடந்துகிட்டிருந்துச்சு. அதில் என்னை மாதிரியே கறுப்பா, ஒல்லியா இருந்த பி.டி. உஷா தங்க மெடல் வாங்கியதையும், அவங்களை நியூஸ் பேப்பர், டி வி எல்லாத்துலயும் ‘தங்க மங்கை’னு க�ொண்டாடுனதையும், பார்த்தப் பிறகு என் மனசை மாத்திக்கிட்டேன்.

அவள் பதில் ஏதும் ச�ொல்லாமல் அமைதியாக இருக்கவே, மறுபடியும் அவளைத் தட்டி, ‘அழகு’ எனக் கூப்பிட்டாள். வெடுக்கென அவள் கையைத் தட்டி விட்டு “ம�ொதல்ல என்னை” ‘அழகு’ன்னு கூப்பிடுறத நிறுத்து. பேரப் பாரு அழகாம்… அழகு. சரி ‘அழகு’ன்னு பேரு வெச்சிங்களே, என்னை அழகாப் பெத்துத் த�ொலைச்சிருக்கலாம் இல்ல? கறுப்பா, ஒல்லியா அப்படியே உன்னை மாதிரி பெத்திருக்க. உன்னால என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னைக் கிண்டல் பண்றாங்க தெரியுமா? ‘வர்றாடி அழகு தேவதை’ அவள�ோட இராஜகுமாரன் பின்னாடி குதிரையில் வர்றான் பாருன்னு என்னை எப்புடி கலாட்டா பண்றாங்க தெரியுமா? எல்லாம் உன்னாலதான்,” என மனம் ந�ொந்து அழும் தன் மகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து ப�ோனாள் ராதிகா.

  2018

பூனை சிரிச்சதும் எலி கல்யாணம்பண்ண அழைச்சதாம்.

31


தான் ச�ொல்வதை ஆர்வத்துடன் கவனிக்கும் மகளைக் கண்டுத் தன் பேச்சை மேலும் த�ொடர்ந்தாள் ராதிகா. “ரஜினி, வைரமுத்து இவங்கள்லாம் கூடக் கறுப்புதான். ஆனா அவங்க அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம தன் கிட்ட இருக்கும் திறமையாலதானே பெரிய ஆளா ஆனாங்க. மத்தவங்கள�ோட பாராட்டை, அங்கீகாரத்தைப் பெற நாம அழகா இருந்தா மட்டும்தான் முடியும் என்றெல்லாம் இல்லை. இப்ப நீ ச�ொல்லு, உன்னை எதுக்காக மத்தவங்க பாராட்டுறாங்க?” “ம்… நான் நல்லா படிக்கிறேன், ப�ொறுப்பான லீடரா இருக்கேன்னு என் டீச்சர்ஸ் பாராட்டுவாங்க. டீச்சர் ச�ொல்லிக் குடுத்தும் புரியாத கணக்கு, நான் ச�ொல்லிக் குடுத்தா நல்லா புரியுதுன்னு என் ஃப்ரெண்ட் மீனா ச�ொல்லுவா, நான் பேச்சுப் ப�ோட்டியில பரிசு வாங்கினப்போ நல்லா தெளிவா கணீர்னு பேசினேன்னு ஜட்ஜா இருந்தவங்க பாராட்டினாங்க...” “பாத்தியா, மத்தவங்க பாராட்டும்படி உன்கிட்ட எத்தனைய�ோ நல்ல விஷயங்களை வைச்சுக்கிட்டு, யார�ோ ஏத�ோ ச�ொல்லிட்டாங்கன்னு அழுதுகிட்டிருக்கியேடா!” என்றபடி அவள் கண்ணீரைத் துடைத்தாள் ராதிகா. “நீ ச�ொன்ன எல்லா விஷயத்துலயும் எனக்கு ர�ொம்பப் பிடிச்சது என்ன தெரியுமா? கணக்குப் புரியாத உன் த�ோழிக்கு நீ ச�ொல்லிக் குடுத்து, அவள�ோட பாராட்டை வாங்கினேன்னு ச�ொன்னியே அதுதான். நம்மால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செஞ்சு, அவங்களைச் சந்தோஷப் படுத்துறவங்க எல்லாருமே அழகானவங்கதான். அதிலும் என்னைப் ப�ொறுத்தவரை, இந்த

32

பெண் என்றால் பேயும் இரங்கும்.

உலகத்துலயே ‘அழகு’ என் செல்லக்குட்டி நீதான்” என்றதும், அழகு தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் க�ொடுத்துவிட்டு “ஸாரிம்மா நீ என் மேல எவ்ளோ பாசம் வைச்சிருக்கேன்னு தெரிஞ்சும் யார் மேலய�ோ இருந்த க�ோவத்தை, உன் மேல காட்டிட்டேன். இனிமே அப்படிப் பண்ண மாட்டேன். யார் என்னைக் கிண்டல் செய்தாலும் அதைப் பத்திக் கவலைப்பட மாட்டேன். சரியா,” என்றாள் அழகு. ஏத�ோ பெரிய உலகச் சாதனைப் படைத்த பூரிப்பு ராதிகாவின் முகத்தில். பதின்பருவம் எனப்படும் 13 வயது முதல் 19 வயது வரையில் உள்ள காலம் ஒவ்வொரு மனிதரையும் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ந்த மனநிலைக்கு மாற உதவும் முக்கியமான இடைநிலைப் பருவம். தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டினை உருவாக்கிக் க�ொள்ளும் முக்கியமான பருவம் இது.

மத்தவங்கள�ோட பாராட்டை, அங்கீகாரத்தைப் பெற நாம அழகா இருந்தா மட்டும்தான் முடியும் என்றெல்லாம் இல்லை.

எரிக் எரிக்சன் என்ற உளவியலாளரின் கூற்றுப்படி, நான் யார்? என் பெற்றோர், குடும்பம், நண்பர்கள், ஆசிரியர்களுக்கு நான் எப்படிப்பட்டவனாக இருக்கிறேன்? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? அவர்கள் பாராட்டும்படி நான் இருக்கின்றேனா? என் உடற்கூறுப் பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றனர்? இவர்களுக்கு என்னைப் பிடிக்கிறதா இல்லையா? என்பன ப�ோன்ற கேள்விகள் பதின்பருவத்தினர் எப்போதும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ளும் கேள்விகள். அவர்களின் சுயமதிப்பீட்டிற்கும் மற்றவர்களின் மதிப்பீட்டிற்கும் இடையே உள்ள ப�ோராட்டமே இப்பருவம். ஆகவேதான், தம் உயரம், நிறம், பருமன், முகத் த�ோற்றம் பற்றி மிகவும் கவலைப்படுவதும், அடிக்கடி கண்ணாடிமுன் நிற்பதும் நடக்கிறது. பிறர் தன்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும், மதிக்க வேண்டும், முக்கியமானவராகக் கருத வேண்டும், பிறர�ோடு தம்மை ஒப்பிடக் கூடாது. பிறர் முன்னிலையில் திட்டக் கூடாது, முக்கிய முடிவுகளில் தம்மைக் கலந்தால�ோசிக்க வேண்டும் என்பதெல்லாம் இவர்களது எதிர்பார்ப்புகள்.

  2018


தமக்கென்ற தனித்துவமான அடையாளம் இல்லாததால் தம் நண்பர்களை உள்ளடக்கிய குழு அடையாளத்தையே தமக்கான அடையாளமாகக் கருதுவார்கள். நண்பர்களால், தாம் ஏற்றுக்கொள்ளப்படுவதை மிக மிக முக்கியமாக நினைக்கின்றனர். நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போது அல்லது அவர்களை விட்டுப் பிரிய நேரிடும்போது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 08.02.2018 தேதியிட்ட ‘தினத்தந்தி’யில் படித்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர், தன் நெருங்கிய த�ோழி பேசாமல் புறக்கணித்ததால் தற்கொலை செய்து க�ொண்டதாக அச்செய்தி.

நம்மால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செஞ்சு, அவங்களைச் சந்தோஷப் படுத்துறவங்க எல்லாருமே அழகானவங்கதான். ர�ோல்ஃப் மூஸ் என்ற உளவியலாளர், “எனது பள்ளி நாட்களில் என் நண்பர்களின் முழு அங்கீகாரத்தைப் பெற முடியாத சமயங்களில் தற்கொலை செய்து க�ொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் (Muuss, 1971, 215). எனவே கத்தி மீது நடப்பது ப�ோன்ற சிக்கலான இப்பருவத்தினரை பெற்றோரும் ஆசிரியர்களும் சரியான முறையில் நடப்பிக்க வேண்டும். ராதிகா தன் மகள் அழகு, தன்மீது க�ோவப்பட்டதை அவமானமாக நினைத்துத் தானும் க�ோவப்பட்டுத் திட்டவ�ோ, அடிக்கவ�ோ செய்திருந்தால், அவர்கள் இருவருக்குமிடையே நிரந்தமாக ஓர் இடைவெளி விழுந்திருக்கும். மாறாக, ராதிகாவின் சரியான அணுகுமுறையால், தாயின் பாசத்தைப் புரிந்துக�ொண்ட அழகு, இனி எப்போதும் தன் சுய மதிப்பை இழக்க மாட்டாள். பெற்றோர், பிள்ளைகள் பேசுவதைக் கேட்பவராக, அவர்களுடன் நேரம் செலவிடுபவராக இருந்தால்,

  2018

பெண் பாவம் ப�ொல்லாதது.

தம் மனக்குழப்பங்களைப் பெற்றோரிடமே குழந்தைகள் தெளிவுபடுத்திக்கொள்வர். மாறாக, பெற்றோர் அதிகக் கண்டிப்புடன், குறை ச�ொல்பவராக, கீழ்த்தரமாகப் பேசுபவராக இருந்தால், தம் சுயமதிப்பையும் நம்பிக்கையையும் இழந்து, பெற்றோருடன் பேசுவதையே குழந்தைகள் குறைத்துக்கொள்வர். தம்மை மதிக்கும் நண்பர்கள் அல்லது இணை பாலினத்தவரின் நட்பை இழக்காதிருக்க, அவர்கள் ச�ொல்வது தவறான, முறையற்ற செயலாக இருந்தாலும் தயங்காமல் செய்யத் துணிந்து விடுவர். எனவே பெற்றோரும் ஆசிரியர்களும் நல்ல நண்பர்களாக இருந்து, தாம் அன்பு செய்யப்படுகிற�ோம் என்பதைப் பிள்ளைகள் உணரும்படியும், முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் உடனிருந்து உதவுவதும் மிக மிக இன்றியமையாததாகும்.

33


  

ஆன்டோ சகாயராஜ், ச.ச.



அன்று காலையிலேயே இராமலிங்க நகர் முதல் தெருவில் ஆர்ப்பாட்டம். காரணம், வேகமாகச் சென்ற இரண்டு சக்கர வாகனத்தால் சிறு விபத்து ஏற்பட “எங்கள் தெருவில் ரெண்டு பக்கத்திலும் வேகத்தடை ப�ோட வேண்டும்” என்றார் ஆர்ப்பாடத்தின் ஒருங்கிணைப்பாளர். “இப்பலாம் கண்ணுமண்ணு தெரியாம வண்டிய ஓட்ரானுங்க” என்றார் இன்னொரு பெண். அங்கு அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்த முதியவர் ஒருவர், “ஓட்ர வண்டிக்கு மட்டுமல்ல, நாம வாழர வாழ்க்கையிலும் வேகத்தடை வேண்டும்” என்றார். ஒரு நிமிடம் வித்தியாசமாக அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் “சரியாகச் ச�ொன்னீங்க” என்பது ப�ோலத் தலையசைத்தனர். காலை உணவை அவசரத்தில் முடித்தோம், மதிய உணவை டப்பாக்களில் அடைத்துப் பஸ்ஸைப் பிடித்தோம், மாலை வீடு வந்ததும் த�ொலைக்காட்சி சீரியல�ோடு உணவு, பின் உறக்கம் என்று வாழ்க்கை ஏத�ோ எந்திரமாக இயங்கினால்…? 40

வருடம் கழிந்தாலும் அதே வாடகை வீடும் கடனும்தான் மிஞ்சும். மாற்றம் ஏற்பட அங்குதான் வேகத்தடை வேண்டும். சிறு வயதிலேயே வறுமையில் வாழ்ந்தவர் இவர், வயிற்றை நிரப்பப் பேப்பர் ப�ோடுவதைத் த�ொழிலாகத் த�ொடங்கினார். பின்பு முடிவெட்டுபவராக, ப�ொம்மை செய்பவராக, பழைய துணிகளை ஏலம் விடுபவராக மனம்போன ப�ோக்கில் வேலையை மாற்றிக்கொண்டே வாழ்க்கை நடத்தினார். வறுமையின் சாபம�ோ என்னவ�ோ, பார்ப்பதற்குப் பாவமாக இருப்பார். வளர்ச்சி குன்றிய உயரம், பரட்டைத் தலை, ஓமக்குச்சி உடம்பு, அழகான சராசரி மனிதனுக்கான த�ோற்றம் எதுவுமே இல்லாதவர். நினைத்திருந்தால் கிடைத்ததை உண்டு சாகும்வரை சாலை ஓரங்களில் படுத்து, வாழ்வை முடித்திருக்கலாம். ஆனால் “எப்படியாவது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்” என்று நினைத்ததால், ஒவ்வொரு நாளும், நேரம் எடுத்து, ‘நான் வாழும் வாழ்க்கை சரியா? இது சரியான பாதையில்தான் செல்கிறதா?’ என்று ஆராய்ந்தப�ோதுதான் அறிவுக் கண் திறந்தது. அனைத்துத் த�ொழிலையும் தூக்கியெறிந்துவிட்டு நடிப்புதான் சரி என்று முடிவெடுத்தார். அங்கு ஊற்றெடுத்ததுதான் “சார்லி சாப்ளின்” என்ற மிகப் பெரிய கதாபாத்திரம். இன்று அனைத்தும் இயந்திர மயமாகிக் க�ொண்டு வருகிற உலகில், மனிதர்களும் இரவு பகல் பாராமல், ஓர் இயந்திரமாகி வருகிற�ோம். இன்று நிதானித்து ஆராய்ந்து செயல்பட யாருக்கும் மனமில்லை. இதனால் வாழ்க்கையில் நம் திறமையை நாமே மறந்து ஈர்ப்பு இல்லாமல் திறமைகளைப் புதைத்து வாழ்கிற�ோம்.

34

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்குப் பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

  2018


இதைத்தான், “நான் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தேன் நதிகளையும் மலைகளையும் கண்டுவந்தேன் நெடுந்தூரம் கடந்து சென்று எல்லாவற்றையும் நேரில் கண்டேன், ஆனால் என் வீட்டு வாசலில் முளைத்திருக்கும் புல்லின் நுனியில் படர்ந்திருக்கும் பனித்துளி ஒன்றில் உலகம் தெரிவதைக் காண மறந்தேன்” என்று தாகூர் வியந்து கூறுகின்றார். எவ்வளவு வேகமாக நாம் இயங்கினாலும், சில நேரங்களில் நின்று நிதானமாக வாழ்க்கையைச் சுவைத்துச் செயல்பட வேண்டும். ஏனென்றால் சிறியவற்றில்தான் பெரிய செயல்கள் புதைந்து கிடக்கின்றன. முக்கிய இடங்களில் வேகத்தடை வைப்பது ப�ோல, பல சிக்கல்கள் ஒன்றாக வரும்போதும், முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும் நமது வாழ்க்கையிலும் நமக்கு நாமே வேகத்தடை வைத்து நிதானித்துப் பயணிக்க வேண்டும். “அதெல்லாம் முடியாது, எனக்கு நேரமில்லை” என்று கண்மண் தெரியாமல் பயணித்தால் விபத்துக்குள்ளாகிச் சாலை ஓரம் தூக்கி வீசப்படுவது ப�ோலச் ச�ொந்த வாழ்க்கையிலும் வீசப்படுவ�ோம். ஆராயாமல் பல நேரங்களில் வாழ்க்கையின் அவசரத்தில் ப�ோடும் முடிச்சுகளுக்கும் எடுக்கும் முடிவுகளுக்கும் தீர்வு தேடியே தீர்ந்து ப�ோகிறது மீதமுள்ள வாழ்க்கையும். ஒரு சாதாரணப் ப�ோர்வீரராக இருந்தப�ோது என்னோட வேலை எதிரிகள�ோடு ப�ோரிடுவது, ஓய்வு நேரத்தில் சீட்டாடுவது, மது மாதுவ�ோடு இருப்பது என்று மற்ற வீரர்களைப் ப�ோலச் சராசரி மனிதனாக இருந்திருந்தால் வரலாற்றில் இன்றும் வாழ்ந்திருக்கமாட்டார் இவர். மாறாக உலக வரைபடத்தைப் பிரித்துவைத்து உற்றுப் பார்த்து எந்த நாடு எங்கே இருக்கிறது, அதற்குக் கடல் தரை வழியே எப்படிப் ப�ோவது என்று நுணுக்கமாக ஆராய்ந்துக�ொண்டிருந்தார் மாவீரன் நெப்போலியன். ஒருநாள் உலகமே உற்றுப் பார்த்தது இவரின் வளர்ச்சியை. கண்ணை மூடிக்கொண்டு எத்திசையிலும் ஓடுவது அன்று வாழ்க்கை. கருத்தாய் நின்று நிதானித்து எத்திசை சரி என்று பார்த்துப் பயணித்தால்தான் வெற்றி வாசல் தேடி வரும். அவருக்கு வயது பதினேழுதான். கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு கணக்கராகச் சேர்ந்தார். ஏன�ோ அவருக்கு வாழப் பிடிக்கவில்லை. தற்கொலை செய்துக் க�ொள்ளலாம் என முடிவெடுத்தார். ஆனால் எப்படிச் சாவது என்றுதான் தெரியவில்லை. “துப்பாக்கியால் சுட்டுக் க�ொண்டால்தான் துடிதுடிக்காமல் உடனே சாக முடியும்” என்ற தெளிவான முடிவுக்கு வந்தார். ஒரு நாள் கண்களை மூடிக்கொண்டார், வலது கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு சாகும் முன், “இறைவா, நான் செத்ததும் உடனே என்னை ம�ோட்சத்துக்கு அனுப்பிவிடு” என்று கடைசி வேண்டுதல் செய்துக�ொண்டார். அவர் செய்த புண்ணியம�ோ அல்லது அவர் பெற்றோர் செய்த

  2018

பெண்ணின் க�ோணல், ப�ொன்னிலே நிமிரும்.

புண்ணியம�ோ, துப்பாக்கி செயலிழந்து ப�ோனது. ‘சாகக் கூட முடியவில்லையே’ என ந�ொந்துக�ொண்டார். ‘புதுசா ஏதாவது சிந்திப்போம்’ என்று அவர் இருந்தப�ோது இங்கிலாந்து நாட்டு ஆங்கில அரசாங்கம் அவரைச் சென்னைக்கு அனுப்பியது. “இங்குச் செத்தா என்ன, வெளிநாட்ல செத்தா என்ன” என்று அரை மனதுடன் வந்தவர், இந்தியாவில் ஆங்கில ஆட்சியையே ஆணிவேர்விட வைத்துவிட்டார். அவர்தான் இராபர்ட் கிளைவ். பெயர், ப�ொருள், பணம் சேர்க்கக் க ண் மூ டி த்த ன மா க ஓடிக்கொண்டிருந்தால் ஒரு நாளும் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியாது. வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை, வருடத்திற்கு ஒருமுறை என்று வாழ்க்கையின் வேகத்தை வேகத் தடையிட்டுச் சிந்தித்தாலே ப�ோதும் சிறப்பாக அமையும் நம் வாழ்க்கை.

ஓட்ர வண்டிக்கு மட்டுமல்ல, நாம வாழர வாழ்க்கையிலும் வேகத்தடை வேண்டும்.

35


ப�ொறிகளும்... துளிகளும் - 07 என் இனிய தமிழக அறிவிலிகளே!

- அன்பின் அமலன்.

 



வனவிலங்குகளைப் பற்றிய நூலில் மூழ்கி இருந்த அப்பாவி, வீட்டு விலங்குகளைப் பற்றியச் செய்திகளால் வியப்பில் ஆழ்ந்தார்.

இறந்த யானைக்காக மூன்று உணவருந்தாமல் கண்ணீர்விட்ட கூட்டம்.

தனது எஜமானை காப்பாற்றிக் கரை சேர்த்த நாய்.

இசைக்கும் பாடல�ோடு ஆடிய கரடி.

குழந்தையை யானை.

செல்போன் பேசும் க�ொரில்லா.

மிதிக்காமல்

தாண்டிச்

சென்ற

ஓவியம் வரையும் குட்டி யானை.

பூனைக் குட்டிக்குப் பால் தந்த ஆடு.

பேசும் கிளி! விளையாடும் மைனா!...

சிறுமியைக் காப்பாற்றிய டால்பின் மீன்.

அப்பாவியின் மனதில் விரிய ஆரம்பித்தது.

ப�ோர்க்களத்தில் குதிரை.

மன்னனுக்காக

உயிர்விட்ட

மான் குட்டியைப் பாதுகாத்த சிங்கம். சர்க்கஸ் நிகழ்வில் நடனமாடிய ஒட்டகம்.

யுத்தம் செய்து வெற்றி பெறுவதைவிடப் பண வியாபாரம் செய்து வெல்வது எளிது.

நாட்கள் யானைக்

டார்வினின்

க�ொள்கை

“உயிரினங்கள் வாழ்க்கைக்காகப் ப�ோராடுகின்றன (Struggle for Existence). “வலுவுள்ளது வாழும்” (Survival of the Fittest). அப்பாவி, ஹெர்பர்டின் அடிப்படை தத்துவத்தை நினைவுகூர்ந்தார். “உலகிலுள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் ப�ோராடிக் க�ொண்டே இருக்கின்றன. இந்தப் ப�ோராட்டத்தில் எது வெற்றிக் க�ொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறத�ோ அதையே உலகம் தேர்ந்தெடுக்கிறது.” இஃது அறிவியல் உண்மையென்றால் அடுத்தடுத்த நூற்றாண்டுகள் யுத்தம் தான் மிஞ்சும்! மிருக வாழ்க்கை மனிதனுக்குத் திரும்பும். மனித வாழ்க்கை மிருகத்திற்குத் திரும்புமா? வனம் என்பது என்ன?

36

கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.

  2018


வெறும் இடமா? அல்லது – நுண்ணுயிர்கள் தாவரங்கள் - மரங்கள் விலங்குகள் – பறவைகள்மனிதர்கள் - வாழும் சூழலா? இயைந்து வாழும் கலாச்சாரமா? இணைந்து வாழும் பண்பா? அல்லது அழிக்கும் ப�ோர்க்களமா? அப்பாவியின் மனதில் ஆயிரம் கேள்விகள்! ஒருவேளை – சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு – மனிதனைப் ப�ோலவே விலங்குகள் வாழ முற்பட்டால்…?

வனவிலங்குகளாகிய நம்மை மனித பதர்கள் கெடுத்துவிட்டார்கள். மனிதனுக்கு நாம பாலூட்டுகிற�ோம். எந்த மனித தாயாவது விலங்கிற்குப் பாலூட்டியது உண்டா?

மனிதனின் நேர்மறை எதிர்மறை பண்புகளை விலங்குகள் வாழ்ந்து காட்டினால்…? அரிமா: (சிரிப்பு) மாமா… உங்கள் பார்வைக்கு இவர்கள் வெறும் பெண் பணியாளர்கள். நம் கட்சியின் பார்வையில் இவர்கள் மகளிர் அணி தலைவிகள்.

அப்பாவியின் கற்பனை விரிகிறது. ஆண்டு 4018 இடம் : அடர்ந்த வனம். சூழல் : மனிதனின் பல பண்புகளைத் தாங்கிய வனவிலங்குகள். ம�ொழி: வனவிலங்கு ம�ொழி. தமிழில் : ம�ொழிபெயர்ப்பாளர்: அப்பாவி. உதவி: அம்மாயி. அரியாசனத்தை நாற்காலி.

நினைவுபடுத்தும்

ஒரு

பாறை

கம்பீரத்தோடு வன அரசன் அரிமா (சிங்கம்). இரு பக்கத்திலும் மயில்கள் த�ோகை விரித்துச் சாமரம் வீச…

யானை மாமன்: ஐந்தாண்டு வன ஆட்சியைச் சிறப்பாக நடத்த முயன்று க�ொண்டிருக்கும் அரசன், என் பாசமிகு மருமகன் அரிமாவை வாழ்த்துகிறேன். ப�ொடி

யானை: பின்ன என்ன… மானிடர்களின் கலாச்சாரம் நம்மையும் பாதிப்பதை நான் அறிவேன். உயிருள்ள பெண் பணியாளர் மயில்களை இப்படி 24 மணி நேரமும் வேலை வாங்குவது முறையன்று.

  2018

கழுகு (ஒற்றன்): (காலில் விழுந்து) மன்னா…! எதிர் வனவேந்தன் நம்மீது படையெடுத்து வரப் ப�ோகிறானாம். அரிமா: அறிவு கெட்ட மன்னனாக இருப்பான் ப�ோல. ப�ொதுத் தேர்தல் வருகிறது. கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் என்னை எதிர்த்து ப�ோட்டியிடச் ச�ொல். முடிந்தால், தமிழ்நாட்டுக்குப் ப�ோய்ப் பயிற்சி எடுத்துவிட்டு வரச் ச�ொல். யானை: ஜனநாயகம், தேர்தல் என்ற ப�ோர்வையில் தாங்கள் செய்யும் சர்வாதிகாரச் செயல்களை மக்கள் அறிவார்கள். (வெளியே ஒரே சப்தம் - மாடுகள், மான்கள், முயல்கள், எலிகள், எருமைகள், பன்றிகள்)

அருகில் அமைச்சர்கள்… வீரர்கள்…

காண்டாமிருகம் (அமைச்சர்): ஏத�ோ… வைத்துப் பேசுவது ப�ோலத் தெரிகிறது.

அரசி அரிமா: (மனதுக்குள்) என் பார்வையில் இவர்கள் சக்களத்திகள்.

“நிரந்தர மன்னர் அரிமா வாழ்க!” அரிமா: இதுதான் எனக்குப் பிடிச்ச சப்தம். மாமா: நீங்கதான் எப்போதும் நம்பர் 2. மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் நடைபெறும் ‘புத்துணர்ச்சி யானைகள் முகாமுக்குப்’ ப�ோய் வாருங்கள். (எல்லா விலங்குகளும் வாலை தரையில் தட்டி ஆரவாரம் செய்கின்றன) மகள் அரிமா: அப்பா… புதுக் கட்சி த�ொடங்க முயற்சி நடக்கிறது.

மண்ணாசை, பெண்ணாசை, ப�ொன்னாசை ப�ொல்லாதது.

37


காண்டா மிருகம்: ஆம் மன்னா… ஆடும், மாடும் புதுக்கட்சி த�ொடங்கி… நம்மைத் த�ோற்கடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

அரிமா: சரி. அதற்கும் ஒரு வரியைப் ப�ோட்டுக் கஜானாவை நிரப்புங்கள்.

அரிமா: அவர்களுக்கு என்ன தகுதி?

யானை மாமா: “பணம்” தேர்தல் வெற்றிக்குப் பயன்படலாம். நல்லாட்சிக்கு என்ன உறுதி?

மகள் அரிமா: “ஆட்டுக்கார அலமேலு” படத்துல, “முரட்டுக் காளை” படத்துல நடிச்சிருக்காங்களாம். இதுக்குத்தான் ச�ொன்னேன். நானும் படத்துல நடிக்கிறேன்னு.

காண்டாமிருகம்: பெறுவதைவிடப் வெல்வது எளிது.

நரி: எதிர் கட்சித் தலைவர் (அரசு ஆல�ோசகர்) புலியன் காட்டு வழிப் பயணம் ப�ோகப் ப�ோறாராம். ஓநாய் (அரசுப் ப�ொருளாளர்): வரக்கூடிய தேர்தலை சந்திக்க நமது அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்.

மனிதனும் இயற்கையின் ஓர் அங்கந்தான். இன்றைய நவீன மனிதன் நேற்றைய ஆதிவாசி... அவன்தான் முந்தைய காட்டுவாசி.

அரிமா: நரியாரே! பணத்தைச் சேர்க்க என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறீர்? நரி: தாவர பட்சிகளுக்குப் பலவிதமான வரிகள்… மரத்துக்கு 40 விழுக்காடு, செடிக்கு 20 விழுக்காடு, புல்பூண்டுக்கு 10 விழுக்காடு. ஓநாய்: மாமிச பிரியர்களுக்கு? நரி: தனியாக வேட்டையாடினால் 20 விழுக்காடு, குடும்பமாக வேட்டையாடினால் 30 விழுக்காடு வரி கட்ட வேண்டும். எங்க

மாதிரி

சர்வ

நரி: உங்களுக்கு மாதாந்திர வரி வசூலிக்கப்படும். முயல்: நம்ம வனத்தைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஐ.டி. இருந்தால் நல்லது. நமது வன எல்லையில் வாழும் எங்களுக்குப் பக்கத்து வனத்து நாய்களால் த�ொல்லை; பதட்ட நிலை.

38

வெற்றி செய்து

யானை: இஃது அறத்திற்கு எதிரானது. நரி: இல்லைனு யார் ச�ொன்னா? நம்ம வனத்துல யார் ய�ோக்கியம்? யானை: அரிமா எவ்வழி... மற்றவை அவ்வழி… அரிமா: யானை மாமா, உங்கள மாதிரி நல்லவுங்க எல்லாரும் ஒதுங்கிக்கனும். இன்றைய நடைமுறை சூட்சமம் தெரியாம பேசக் கூடாது. நீதி – நேர்மை – அறம் - தூய்மை – வளமை இதெல்லாம் கடைப்பிடிக்க முடியாது. முடியும்னா... ஆட்சிய பிடிக்க முடியாது.

நரி: “பணம் பதின�ொன்றும் செய்யும்” அதாவது தேர்தல் வெற்றியையும் தரும்.

காக்கை: அப்ப… பட்சிகளுக்கு…?!

யுத்தம் செய்து பண வியாபாரம்

ஏமாற்று – பித்தலாட்டம் - துர�ோகம் - இலவசம் - இலஞ்சம் - ஊழல் இதெல்லாம் அரசியல் வாழ்வில் சகஜம். யானை: வனவிலங்குகளாகிய பதர்கள் கெடுத்துவிட்டார்கள்.

நம்மை

மனித

மனிதனுக்கு நாம பாலூட்டுகிற�ோம். எந்த மனித தாயாவது விலங்கிற்குப் பாலூட்டியது உண்டா? அரிமா: வெற்றி பெறுவதே இலக்கு. வழிமுறைகளைப் பற்றி யார் கவலைப்படப் ப�ோறா? வெல்வது இயற்கை! யானை: அரிமா… ‘மதிகலங்கி பேசுகிறாய்.’ உணவை அடைவது, உயிரைப் பாதுகாப்பது… இவைதாம் விலங்குகளின் அடித்தளச் சுதந்திரம். அடையத் துடிக்கும் இலக்கு. இஃது இயற்கை. அரிமா: நம்மை விட, புத்திசாலிகள் மனிதர்கள். யானை: அவர்களை விட நல்லவர்கள் நாம்! அரிமா: படைப்பின் உச்சம் மனிதன். யானை: தவறு. பரிணாம வளர்ச்சியின் எச்சம் மனிதன்.

மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்.

  2018


அரிமா: மனித மைய சிந்தனையே இன்றைய வாழ்வை ஆட்டி வைக்கிறது.

வாங்கிக்கொள்ள வேண்டும் என்று பணத்தைக் காட்டி ஆசை ஊட்டியது… அமெரிக்க அரசு!

யானை : இயற்கை மைய வாழ்வாக நாளை வரலாறு உருவாகும்.

அதற்குப் பதில் ச�ொன்ன செவ்விந்தியத் தலைவர் கேட்டார்.

மனிதனும் இயற்கையின் ஓர் அங்கந்தான். இன்றைய நவீன மனிதன் நேற்றைய ஆதிவாசி… அவன்தான் முந்தைய காட்டுவாசி… அதாவது நம்மைப் ப�ோல வனவாசி.

“ஆகாயத்தை யாராவது விற்க, வாங்க முடியுமா? காற்றும், தண்ணீரும், நம் தனிப்பட்ட ச�ொத்தா என்ன? இந்தப் பூமியின் ஒவ்வொரு பகுதியும் எல்லா மக்களுக்கும் ச�ொந்தம். எல்லாம் ஒன்றோடு ஒன்று த�ொடர்புடையவை.”

காண்டாமிருகம்: என்னதான் ச�ொல்ல வர்ரீங்க. மனிதன் காட்டிய வழியில் நாம நடப்பதுதான் நல்லது; நமக்குப் பாதுகாப்பு. அரிமா: நான் என்றுமே இந்த வனத்திற்கு அரசனாக இருப்பேன். என் பதவியைத் தக்க வைக்க எதுவும் செய்வேன். என் வழியை வனவாசிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். (வெளியில் வாழ்த்தொலி – “அரிமா... வாழ்க! அரிமா... வாழ்க!!) மாமா… நல்லவரே… அறம் காப்பவரே… விலகிப் ப�ோங்கள். (ஏத�ோ… அறத் திட்டத்தோடு யானை மாமா அவையில் இருந்து வெளியில செல்கிறார்) அரிமா: (க�ோபத்தோடு) இவர் விலகிப் ப�ோவது ப�ோலத் த�ோன்றவில்லை. வெளியில் சென்று வினை செய்பவராகவே செல்கிறார். நரி: வினையை வினையால் முடிப்பதுதானே நமது அரசியல். அடுத்தச் சில நிமிடங்களில்... அலறல் ஓசை. தசைகள் பிய்க்கப்படுகின்றன. எலும்புகள் ந�ொறுக்கப்படுகின்றன! நரம்புகள் துண்டிக்கப்படுகின்றன! இயற்கையின் ஓர் ஆன்மாவின் அலறல் முடிந்து ப�ோகின்றது.… அப்பாவியின் கற்பனை கலைந்தது. அம்மாயி நூலை வாங்கிச் சப்தமாக வாசிக்க ஆரம்பித்தாள்.

“மிருகங்களின் கதி எதுவ�ோ – அதுவே எங்களின் கதி” புத்தகத்தை மூடி வைத்தாள். அப்பாவியைக் கூர்ந்து ந�ோக்கினாள். அதன் அர்த்தம்: “உங்களை இழக்க நான் அப்பாவி புரிந்துக�ொண்டார்.

விரும்பவில்லை;”

“ப�ொறிகளும்… துளிகளும் எதுவாய் இருந்தால் என்ன? யார் மீது விழுந்தால் என்ன? யாரை வீழ்த்தினால் என்ன? சமூக மாற்றத்தைக் க�ொணர நீங்க மாண்டு ப�ோக வேண்டுமா? விலகிப் ப�ோங்க… ஒதுங்கிப் ப�ோங்க… ஓரம் ப�ோங்க…” அப்பாவி வெளியில் வந்தார். இடி... மின்னல்... காற்று… மழை… வனம் என்பது மரங்கள் மட்டுந்தானா? விலங்குகள் மட்டுந்தானா? பறவைகள் மட்டுந்தானா? இல்லை – நீர் - நிலம் - காற்று – நெருப்பு – ஆகாயம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து பேசி – பகிர்ந்து – பழகி – உருகி – ஏற்று – அழிந்து – த�ொடங்கி – முளைத்து – வளர்ந்து... இயற்கையின் மாநாடு! பிரபஞ்சத்தின் க�ொண்டாட்டம்! பரிணாமத்தின் புகுந்த வீடு! வனத்தை அழிக்கும் எந்த அசைவையும் அறம் அனுமதிப்பதில்லை. சீறும் அறச் சீற்றம். வனவலியை ப�ோக்கும் சீற்றம்! வனவலிச் சீற்றம்.

“அமெரிக்க வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. 1855ஆம் ஆண்டு செவ்விந்தியர்களிடம் இருந்து நிலத்தை

  2018

மனைவி வரும்வரையே மகன்; வாழ்நாள் எல்லாம் மகள், மகளே.

39


அரும்புப் பதிப்பக நூல்கள்

40

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் ப�ொன் குடம்.

  2018


,

  2018

மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

41


பிரியசகி

கண்டேன் புதையலை

ஹ�ோவர்ட் கார்டனர் அறிமுகப்படுத்திய பல்முனை நுண்ணறிவுக் க�ோட்பாடு பற்றிய தெளிவினைத் தரும் நூல். என் திறன்களை அடையாளம் காண்பது எப்படி? எந்தத் துறைக்குச் சென்றால் என்னால் பிரகாசிக்க முடியும்? இத்திறன்களைக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துவது எப்படி? உணரப்பட்ட அறிவுத்திறனை பயிற்சிகள் மூலம் த�ொடர் விழிப்புநிலையில் வைத்து, நடைமுறை வாழ்வியல் சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி? உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் தவறான முடிவெடுக்கும் வளர் இளம் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?

ப�ோன்ற பல கேள்விகளுக்குத் தீர்வினைத் தரும் நூல் ‘கண்டேன் புதையலை’. பெற்றோர், ஆசிரியர், மாணவர் அனைவருக்கும் பரிசளிக்க ஏற்ற நூல் இது. பதிப்பகம் - புக்ஸ் ஃபார் சில்ரன், விலை ரூ. 160. த�ொ. எண். 044 24332424 , 9444960935 ஆன் லைனில் பெற thamizhbooks.com

நான் ஏன் பிறந்தேன்?

பல்வேறு சிறுகதைப் ப�ோட்டிகளில் பரிசு வென்ற எழுத்தாளர் பிரியசகியின் பதின்மூன்று சிறுகதைகள் அடங்கிய த�ொகுப்பு ‘நான் ஏன் பிறந்தேன்?’ ஆட்டிசம், மனவளர்ச்சியற்ற குழந்தைகள், கவனச் சிதறல் குறைபாடு, உடலுறுப்புத் தானம், டிமென்ஷியா என்னும் மறதி ந�ோய், திருநங்கையரின் நிலை, இரத்த உறவுக்குள் திருமணம், பாலியல் வன்கொடுமை, நெறிபிறழ் நடத்தை, குடிச் சீரழிவு, வாழ்க்கை இலட்சியம், சகமனித நேசம்… என உளவியல், உடலியல் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு சிறுகதைகள் அடங்கிய நூல் ‘நான் ஏன் பிறந்தேன்?’ அனைவரும் அறிந்துக�ொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களைச் சுவாரஸ்யமான எளிய நடையில் சிறுகதை வடிவில் க�ொண்டுள்ள இந்நூல் வாசகரின் மனதில் நல்ல உணர்வு மாற்றங்களை ஏற்படுத்த வல்லது; பரிசளிக்க ஏற்றது.

மேன்மை வெளியீடு, விலை - ரூ.120/த�ொ. எண் - 044 28472058

42

மீனை விரும்பாத பூனையா? ஆணை விரும்பாத பெண்ணா?

  2018


படம் பார்த்துக் கருத்தெழுதுக

கீழ்க்காணும் வினாக்களுக்கான விடைகளையும் அவற்றின் ஆசிரியர், பக்க எண் ஆகியவற்றையும் எழுதுக.

ப�ோட்டி வினாக்கள் பகுதி 03/18 01) உலக நாடுகளில் எத்தனை விழுக்காடு மக்கள் நீரின்றி வாடுகின்றனர்? 02) அழகுவின் தாயார் பெயர் என்ன? 03) “கடலில் முத்துப் பிறக்கிறது…’’ பாடல் ஆசிரியர் யார்? 04) பில் கேட்ஸின் முழுப் பெயர் என்ன? 05) “ஏன், எதற்கு, எனக் கேள்வி கேள்” கூறியவர் யார்? 06) ‘ஹெலன்’ யாருடைய காப்பியத்தில் வரும் பாத்திரப் படைப்பு? 07) சார்லி சாப்ளின் இளமையில் செய்த த�ொழில்களில் ஒன்றை எழுதுக.

காணப்படும் படத்திற்குப் ப�ொருத்தமான கதை/கவிதை/ கருத்துகளை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தங்களின் ஒளிப்படத்துடன் (ஃப�ோட்டோ) அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பு அடுத்த இதழில் வெளியிடப்படும். வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.03.2018

பிப்ரவரி மாதப் படத்திற்கான சிறந்த கருத்துரை

08) அப்பாவியின் கற்பனை முன்னோக்கி எந்த ஆண்டிற்குச் சென்றது? 09) துர்காவின் காதலன் பெயர் என்ன? 10) நீர் உள்ள மட்டும்…. நிரப்புக.

குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். விடைகளைத் தங்களின் முழு முகவரி, த�ொடர்பு எண் ஆகியவற்றுடன் கடிதம், மின்னஞ்சல், (arumbu4young@gmail.com) கட்செவி அஞ்சல், (வாட்ஸ் அப் - 94447 99942) அல்லது குறுஞ்செய்தி வாயிலாக, மார்ச் மாதம் 20ஆம் தேதிக்குள் அரும்பு அலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பவும்.

ப�ோட்டி வினாக்கள் 02 /18 க்கான சரியான பதில்கள் 01) ‘உலக அலைபேசி நாள்’ எது? பிப்ரவரி 1ஆம் தேதி. சுடர்மணி. பக். 13. 02) ‘பேய்வீடு’ படத்தின் ஹீர�ோ பெயர் என்ன? கலைவேந்தன், அன்பின் அமலன். பக். 07. 03) ரவி எத்தனை நாட்கள் கிராமத்தில் தங்கியிருந்தான்? 45. குரங்குகளும் குல்லாய்களும். க�ௌசல்யா ரங்கநாதன். பக். 19. 04) இடமதிப்புச் சிந்தனையை வழங்கியவர் யார்? பதில் இல்லை. 05) மாலாவின் குழந்தைகள் யாவர்? முத்து, முகிலன். பிரியசகி. பக். 28. 06) ஒட்டுண்ணியை அப்புறப்படுத்துவது எளிது. சரியா? தவறு. பவுல்ராஜ் அமல். பக். 40.

காத்திருப்பு கருவைத் தந்தவரும் கருவறையைத் தந்தவரும் காத்திருந்தனர் எனக்காக அன்று. உறையவும் உறவாடவும் இதயம் தேடி காத்திருக்கின்றனர் இன்று. அவர்களின் காத்திருப்பு ஏமாற்றமாகலாமா? பிப்ரவரி மாதப் படத்திற்கான சிறந்த கருத்துரை எழுதியவர் அறிவர்

திரு. பெர்ணாட்ஷா - மன்னார்குடி படம் பார்த்துக் கருத்தெழுதிய அனைவருக்கும் பாராட்டுகள். – ஆசிரியர்

  2018

07) காதலுக்குக் காரணமாகும் சுரப்பிகள் யாவை? ட�ோப�ோமைன், ந�ோர�ோபைன்பிரைன், செர�ோட�ோனின் – அருள் ர�ோசா. பக். 22 08) சித்ரா எந்த வகுப்பு மாணவி. ஒன்றாம் வகுப்பு, கே. கே. ச�ோபியா. பக். 32 09) உயிர்கள் உடலைச் சார்ந்தவை. உடல்கள்… (நிரப்புக) இன்பத்தை, தலையங்கம். பக். 04 10) அறம் செய்ய விரும்பு – கூறியவர் யார்? ஔவையார், ஜ�ோல்னா ஜவஹர். பக். 36.

சரியான விடையெழுதி குலுக்கல் முறையில் பரிசு பெறுவ�ோர்

ஜா. மேரி ம�ௌசல்யா - மேட்டூர். ரா. விஜயராஜன் - வேலூர். ச. ரெக்ஸிட்டா - காரைக்கால். பலர் சரியான விடையெழுதியுள்ளனர். பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்! – ஆசிரியர்.

வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்.

43


Date of Publication: First week of every month. Regd. No. TN/CCN/477/2018-2020 TN/PMG(CCR)/WPP-400/2018-2020. Registrar of Newspapers for India. 11807/66. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 02.03.2018

NEW RELEASE

கல்வி நிறுவனங்கள், ஆலய அமைப்புகள், ப�ொதுப்பணித்துறை மையங்கள் ப�ோன்ற அமைப்புகளில்… அறிவுரை வழங்க அச்சமா? காலை உரையாற்ற கலக்கமா? மாலையுரை வழங்க மயக்கமா? ஆலய நிகழ்வா? ஆண்டு விழாவா? ஆசிரியர்-பெற்றோர்-பணியாளர்பயனாளர் கூட்டங்களா? உடனடி உதவிக்கு உங்கள் கையில் இருக்க வேண்டிய அருமையான நூல்

கனிவும் அன்பும்.

தங்களின் மேற்பார்வையில் உள்ளவர்களைச் சூழலுக்கும் பருவத்திற்கும் பணிக்கும் ஏற்றவாறு த�ொன் ப�ோஸ்கோவின் கனிவான, அன்பான வழியில் கையாள்வது எப்படி என்பதை உலகியல் நடப்புகள�ோடு விளக்கும் அருமையான நூல்

கனிவும் அன்பும். 3 பெரும் பிரிவுகளில், 12 தலைப்புகளின்கீழ், த�ொன் ப�ோஸ்கோவின் 200 மேற்கோள்களை 40 விரிவுரையாளர்கள், 400க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் க�ொண்டு விளக்கியுள்ள 274 பக்கங்கள் க�ொண்ட நூல்

கனிவும் அன்பும்.

கனிவும் அன்பும்

________________________________ ______

In English With Gentleness and Kindness (Rs.180)

த�ொடர்புக்கு: அரும்பு பதிப்பகம், 26/17, ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 10. 044 2661 2138/40 94447 99942

4444

If undelivered, kindly return to: ARUMBU, 26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010.

 2018

   20182018

Arumbu - March 2018  

Happy Reading

Arumbu - March 2018  

Happy Reading

Advertisement