Page 1

 

 1

 

Rs.

  20172017   1 1

15


www.arumbupublications.in

 .  22

  2017 2017  


இதழ் 11

மலர் 56

நவம்பர் 2017

ப�ொறுப்பாசிரியர்கள் முதன்மை ஆசிரியர் அருள்திரு. முனைவர். ஆ. சிலுவை முத்து, ச.ச. ஆசிரியர் ஜான் கென்னடி.

   

இணை ஆசிரியர் பேரா. சூ. குழந்தை இயேசு. நிர்வாகக் குழு அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச.

26

16

ஆசிரியர் குழு மரிய லூயிஸ், தைரியம், அந்தோனிசாமி, அந்தோனி கிறிஸ்டி, பேட்ரிக் மத்தியாஸ், ஆன்ட்டோ சகாய ராஜ்.

05

பிழைத்திருத்தம் குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச. சந்தா மேற்பார்வை சு. ஸ்டீபன் ராஜ்.

21

அஞ்சல் வெ. ஆர�ோக்கிய செல்வி.

15

விற்பனை மேலாளர் ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம் தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்

ரூ. 15 ரூ. 150 ரூ. 300

விளம்பரக் கட்டணம் முழுப் பக்கம் ரூ. அரைப் பக்கம் ரூ. கால் பக்கம் ரூ. பின் அட்டை ரூ. உள் அட்டை ரூ. நடுப் ப்பக்கம் ரூ.

6000 3000 1500 12,000 10,000 10,000

செய்தி மலரில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி

26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 600 010. 044 26612138/40, 94447 99942 sbtamilssm@gmail.com www.arumbupublications.in

 05 09 12 15 16 21 26 30

கல்லறையில் தேவை ஒரு மறைக்கல்வி! நட்பு சிறந்தால்… நாளும் சிறப்பே! அருளாளர் ஆர்த்திமிடிஸ் சாத்தி மார்கரெட் ஒக்கியானா உலக ஏழையர் தினம் கருத்தொளி ஞாயிறு மறையுரைகள் மரணம் முடிவன்று, நித்திய வாழ்வின் த�ொடக்கமே!

Printed and Published by Rev. Fr. JOHN KENNEDY, on behalf of Salesian Publishing Society, 45. Landons Road, Kilpauk, Chennai 600 010. Printed at VELLANKANNI PRINTERS, No. 53, Dr. Besant Road, Royapettah, Chennai - 600 914. Editor: Rev. Fr. JOHN KENNEDY.

 2017  3




தூய�ோர் பெருவிழா ஆரிய வேதத்தின் பிற்கால வளர்ச்சிகளான வைணவமும் சைவமும் சராணகதித் தத்துவத்தை முன் நிறுத்துகின்றன. கடவுளைச் சரண் அடைபவர்களுக்குப் பாவ, புண்ணியங்கள் இல்லை. அவர்கள் இறப்புக்குப் பின் கைலாயப் பதவிய�ோ, வைகுந்தப் பதவிய�ோ அடைகிறார்கள். கடவுளைச் சரணடையாத�ோர் எமல�ோகப் பதவியடைகிறார்கள் என்பது சரணாகதித் தத்துவம். மேற்படி மதங்களை எதிர்த்து, கடவுள் மறுப்புக் க�ோட்பாட்டைப் பரப்பிய சமண, ப�ௌத்த மதங்கள் மறுபிறவிக் க�ோட்பாட்டை முன் வைக்கின்றன. பாவமற்ற ஆன்மாக்கள் பிறவாப் பேரின்ப நிலையை அடைகின்றன என்றும், பாவ ஆன்மாக்கள் பிறவிச் சுழற்சிக்கு ஆட்படுகின்றன என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்துவ மறை, மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட செய்தியைப் பரப்புரை செய்கின்றது. வாழ்க்கை என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ப�ோராட்டம் என்றும், முதல் பெற்றோர் நன்மை, தீமை அறிகின்ற கனியை உண்டது முதலே இப்போராட்டம் த�ொடங்கி விட்டது என்றும், நன்மையின்பால் அல்லது கடவுள்பால் சார்ந்து நின்று தீமையை எதிர்த்துக் கடைசிவரைப் ப�ோராடி வெற்றி பெறுகிறவர்கள் சாவுக்குப் பின் முடிவில்லாத பேரின்ப நிலையை

4

 2017 

அடைகிறார்கள், தீமையின் பக்கம் அல்லது சாத்தானின் பக்கம் நின்று நன்மைக்கு எதிராக வாழ்கிறவர்கள் முடிவில்லாத நரகிற்குச் செல்கிறார்கள் என்றும் கிறிஸ்துவ மறை கூறுகின்றது. இயேசு பேசிய கருத்துகளே இதற்கு அடித்தளமாக அமைகிறது. உலக முடிவில், நன்மையின் பக்கம் நின்று வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, “என் தந்தையிடமிருந்து ஆசிபெற்றவர்களே, வாருங்கள்! உலகம் த�ோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகக் க�ொள்ளுங்கள்” என்று இயேசு தெரிவிக்கிறார். (மத் 25:34) அதே சமயம், நன்மையைப் புறக்கணித்துத் தீமையின்பால் வாழ்ந்தவர்களைப் பார்த்து, “சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று ப�ோங்கள்! அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற, என்றும் அவியாத நெருப்புக்குள் செல்லுங்கள்” என்று கூறுகிறார். (மத்:25:41) விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களும் இக்கோட்பாட்டை மையமாக வைத்தே நகர்கின்றன. இக்கோட்பாட்டின்படி, வீடுபேறு அடைந்தவர்களையே தூயவர்கள் என்று கத்தோலிக்க மறை அழைக்கிறது. நவம்பர் முதல் நாளை வீடுபேற்றிலிருக்கும் தூய�ோர் பெருவிழாவாகக் க�ொண்டாடி மகிழ்கிறது. திருமுழுக்குப் பெற்றவுடன் இறந்துப�ோகும் குழந்தை முதல், திருமுழுக்கு ய�ோவான் வரை வீடுபேறடைந்துள்ள அனைவருமே இத்தூய�ோர் கூட்டத்தில் அடங்குகின்றனர். ஆயினும், தூய�ோருள் படிநிலைகள் உண்டு. நன்மைக்குச் சார்பாகவும் தீமையை எதிர்த்தும் ஒவ்வொருவரும் நடத்திய ப�ோராட்டங்களுக்கும், அனுபவித்த பாடுகளுக்கும் ஏற்ப இப்படிநிலைகள் அமையக் கூடும். நன்மையைச் சார்ந்து நின்றதிலும் தீமையை எதிர்த்து நின்றதிலும் திருமுழுக்கு ய�ோவான் கடைசிப் படியில் நிற்கிறார். அதனால்தான் “தாயின் வயிற்றில் பிறந்தவர்களில் திருமுழுக்கு ய�ோவானைவிடு பெரியவர் ஒருவருமில்லை”, என்று சான்று பகர்ந்த இயேசு, விண்ணுலகிலுள்ள மிகச் சிறிய�ோர் கூட அவரிலும் பெரியவர் என்றார். அப்படியெனில் நமது நிலை அங்கே என்னவாக இருக்கும்? இயேசு நம்மை அச்சுறுத்தவில்லை. எச்சரிக்கை விடுக்கிறார்! தூய�ோர் பெருவிழாவைக் க�ொண்டாடும் நாம் எந்தப் பக்கம்? இறப்புக்குப் பின் தூய�ோர் கூட்டத்தில் இடம் பெறக் கடுமையாக முயல்வோம். கரையிலாக் கடவுளின் இரக்கம் நம்மையும் கரைசேர்க்கும்.

அருட்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச.


முன்னுரை: ‘ஒரு பண்பாட்டின் உச்சக்கட்டம் என்பது இறந்த தன் உறுப்பினர்களுக்கு அது தரும் இறுதி மரியாதையில் அடங்கி இருக்கிறது’ என்பார்கள்! வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது எகிப்தியர்களின் ‘பிரமிடுகள்’ நம் நினைவுக்கு வரும். உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலும் ஒரு கல்லறைதானே! 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற மறைக்கலகங்களில், மறைசாட்சிகளாய் மரித்த கிறித்தவர்களைப் புதைத்த இடத்தை இன்றும் ‘கேட்டக�ோம்ஸ்’ (நிலத்தடி கல்லறைகள்) என்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகவும், புனித மண்ணாகவும் கருதுகின்றனர். கிறித்தவ எதிர்நோக்கின் பார்வையில் ‘கல்லறைகள் உயிர்ப்பின் மகிழ்ச்சிக்காகக் காத்திருக்கும் உறைவிடங்களே’ என்றால் அஃது மிகையாகாது! மேலை நாடுகளில் கல்லறைகள் பராமரிக்கப்படும் முறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது! அஃத�ொரு செபக்கூடமாகவே காட்சியளிக்கும். அங்குக் கல்லறைகள் ஆலயத்தைச் சுற்றி இருப்பதும் இதற்கு ஏதுவாக இருப்பதும் உண்மை. அழகுற அமைக்கப்பட்ட கல்லறைகள், அவற்றைச் சுற்றி இருக்கும் மரங்கள், பூச்செடிகள், நம்மையுமறியாமல் ஒரு செபச் சூழலுக்குக் க�ொண்டு செல்லும். நாம் மிகுதியாக அன்பு செய்தவர்கள், நம்மைப் பலவகைத் தியாகங்கள�ோடு அன்பு செய்த நமது பெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இறைவனில் துயில் க�ொள்ளும் புனிதமான இடம் கல்லறைகள். இவற்றை உயிர்த்த இயேசுவின்மேல் கட்டப்பட்டுள்ள கிறித்தவ நம்பிக்கைய�ோடு அணுக வேண்டும்.

    இன்றைய தமிழகத்தின் கல்லறைகளின் நிலை: பெரும்பாலான கிறித்துவக் கல்லறைகள் சீர்கேடாகக் காட்சியளிப்பது கண்கூடான உண்மை! ஆடு மாடுகள் மேய்கின்ற இடமாக, மது அருந்துகின்ற ஒதுக்குப்புறமாக, சூதாடுகின்ற திடலாக, ஏன் அதைவிட அவமானம், மலங்கழிக்கும் ப�ொது இடமாகவும் பயன்படுத்தப்படுவது நம்மைப் பெரிதும் பாதித்ததாகத் தெரியவில்லை. பார்த்தும் பார்க்காததுப�ோல் வாழ்ந்து க�ொண்டிருக்கின்றோம். வருடத்திற்கு ஒருமுறை கல்லறைத் திருவிழாவை முன்னிட்டு நமது உற்றார் உறவினர்களின் கல்லறைகளைத் தூய்மை செய்வது தவிர, மரித்தவர்களின் ஆண்டு நினைவு நாட்களில் விளக்கேற்றுவத�ோடு நின்றுவிடுகிறது! கல்லறைகளைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும் கலாச்சாரம் இன்னும் நம்மை வந்து சேரவில்லை என்பதுதான் உண்மை!

கல்லறையும் கிறித்தவ எதிர்நோக்கும்: இறைவன் வாக்கு மாறாதவர்; அவரது வாக்கின் உச்சக்கட்டமாக நிகழ்ந்த இயேசுவின் மனித உருவெடுத்தல், பாடுகள், மரணம், அடக்கம், உயிர்ப்பு ஆகிய இவற்றின் மேல் கட்டப்பட்டதுதான் கிறித்தவ எதிர்நோக்கு. மரணத்தை வென்றவர் கிறிஸ்து! இயேசுவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்குச் சான்றாக உள்ளது (1 க�ொரி 15 : 20- 22). “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன்

 

 2017  5


எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இத�ோ அவரை வைத்த இடம்” (மாற்கு 19 : 6). உயிர்த்த இயேசு அவரில் மரித்த அனைவருக்கும் முன்னோடியாக இருக்கின்றார்.

   “உலக முடிவில் இயேசு கிறிஸ்து மனிதரைத் தீர்ப்பிட வரும்போது, நாம் நமது உடல�ோடு உயிர்த்தெழுவ�ோம்” என்பது நமது நம்பிக்கை. ‘உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன்’ என்று நாம் அறிக்கையிடும் நம்பிக்கை அறிக்கை ப�ொய்யில்லை என்றால், நமது கல்லறைகள் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் புகலிடங்கள். எனவே அவற்றின் தூய்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவது நமது நம்பிக்கையின் பண்பாடாகும்.

திருஅவைக்கு உட்படாத இறப்புச் சடங்குகள், வீட்டுச் சடங்குகள்: அறியாமல், சிந்திக்காமல் நாம் செய்கின்ற சில சடங்குகளை மட்டும் பார்ப்போம். துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்திற்கு மேளதாளத்தோடு வருகின்ற உறவினர் கூட்டம் எந்த வகையில் தங்கள் ஆறுதலைத் தெரிவிக்க முடியும் என்று தெரியவில்லை. ‘க�ோடித் துணிகள்’ க�ொண்டுவருவதன் ப�ொருள் என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். சில ப�ொருளில்லாச் சடங்குகள் ஆக்கிரமிக்க, செபம் ச�ொல்வதும், பாடல்கள் பாடுவதும் குறைந்துக�ொண்டே ப�ோவதை நாம் உணர்கிற�ோம். இறைவார்த்தைக்கு எத்தகைய முக்கிய இடத்தைத் தந்திருக்கிற�ோம்?

கல்லறைத் த�ோட்டத்திற்குப் பவனி: இறந்தவர் உடலை கல்லறைக்குப் பவனியாக எடுத்துச் செல்லும்போது ஒரு பெரிய க�ொண்டாட்டம்! வாணவேடிக்கைகள�ோடும் மேளதாளத்தோடும் ஆடல் பாடல�ோடும் இறந்தவர் உடலைப் பகட்டுத்தனமாக எடுத்துச் செல்வதன் ப�ொருள் என்ன? தெருமுனையை அடைந்தவுடன் தெருக்களிலே வாடிப்போன மாலையின் 6

 2017 

வதங்கிப்போன பூக்களை எடுத்துப் ப�ோட்டுக்கொண்டு ப�ோவதன் அர்த்தம் என்ன? அதே பூக்களை வீட்டு வாசலிலிருந்தே ஏன் ப�ோடுவதில்லை? தெருமுனையை அடைந்தவுடன் இறந்தவர் உடல் தாங்கிய பாடையைத் தும்பாவிலிருந்து வெளியில் எடுத்துச் சுழற்றுவது அல்லது திசையை மாற்றுவது ஏன்? இவற்றிற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம். அவை காலப்போக்கில் மறைந்து க�ொண்டே வந்து சடங்குகள் மட்டும் நிலைபெறுகின்றன.

அடக்கச் சடங்குகள்: தமிழகத்தின் பல இடங்களில் இறந்தவரின் உடலைத் தாங்கியவர்கள் கல்லறையை அடைந்த உடன் உருவாக்கும் குழப்பமும் க�ொந்தளிப்பும் இறுதிச் சடங்கு செய்யும் குருவானவருக்கு ஒரு பெரும் அறைகூவலாகத்தான் அமைகின்றன. பல ஆண்டுகள் இறையியல் படித்துவிட்டுக் கல்லறையில் அடக்கச் சடங்கு நிறைவேற்ற நின்றுக�ொண்டிருக்கும் அருட்பணியாளரின் பரிதாப நிலையை நினைத்துப் பார்க்கிறேன். இறந்தவருடைய ஆன்மாவை இறைவனுக்குக் கையளிக்கவும் ‘அவர் இறுதி நாளில் உடல�ோடு உயிர்ப்பார்’ என்ற நம்பிக்கைய�ோடு அவரது உடலை நிலத்திற்குக் கையளிக்கவும் காத்திருக்கும் அருட்பணியாளருக்குப் புரிந்துக�ொள்ள முடியாத சடங்குகள் காத்திருக்கும். தலைச்சன் பிள்ளைக்கு ம�ொட்டை அடிப்பார்கள், அந்த முடியைக் கட்டிச் சவப்பெட்டியில் ப�ோடுவார்கள். ஏன், எதற்கு என்ற தெளிவு யாருக்கும் இல்லை! சில இடங்களில் வாயில் பால் ஊற்றுவார்கள், நெல் ப�ோடுவார்கள், மண் உருண்டை செய்து அதைச் சவப்பெட்டியில் வைப்பார்கள். சடங்குகள் இவ்வாறு இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. இவற்றில் எவை ப�ொருளுள்ளவை, எவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பவை என்று இனம் புரிந்துக�ொள்வது அவசியம். திருஅவை நமக்கு அளிக்கும் பரிந்துரையின்படி அடக்கச் சடங்குகள் பலவகையான மரபுகளுக்கேற்ப இருப்பினும், அவை ‘இறந்தவர் உயிர்த்தெழுவர்’ என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மேலும் அவை இயேசுவின் ‘பாஸ்கா’ மறைப�ொருளை அடிப்படையாகக் க�ொண்டிருக்க வேண்டும்.

கல்லறையும் மனிதநேயமும்: 2004ஆம் ஆண்டுப் பிரான்ஸ் நாட்டில் யூத மதத்தைச் சார்ந்த கல்லறைகளை உடைத்து இழிவுபடுத்தினார்கள் நாசிசக் க�ொள்கையில் ஊறித் திளைத்த இளைஞர்கள். இதை ஐர�ோப்பாவின் அனைத்து நாடுகளும் கடுமையாகக் கண்டித்தன.




இதனை ‘ஐர�ோப்பிய பண்பாட்டின் அழிவின் த�ொடக்கம்’ என்று இறை விசுவாசம் இல்லாதவர்களாலும் ச�ொல்லப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் இந்து அடிப்படைவாதத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகள் கிறித்தவக் கல்லறைகளை உடைத்தப�ோது தமிழகத் திருஅவை குரலெழுப்பியது நமது நினைவிலிருக்கும் என்று நினைக்கின்றேன். ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற திரையிசைப் பாடல், கல்லறைகள் ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி நாம் அனைவரும் ஒரே தரமான மனிதர்கள் என்ற மாபெரும் உண்மையைப் பறைசாற்றுகின்றது. எல்லாரும் பாகுபாடு இல்லாமல் ப�ோய்ச் சேர வேண்டிய இடம் கல்லறை மட்டும்தான் என்றால் அது மிகையாகாது. இந்த இடத்திற்கும் சாதிச் சாயம்

வைத்துக்கொண்டு கிறித்தவர்களாக முடியும் என்று சிந்திப்போம்.

எப்படி

வாழ

தமிழகத்தின் பெருவாரியான கிறித்தவப் பங்குகளைச் சார்ந்த கிராமங்களில் பெண்கள் அடக்கச் சடங்கிற்குக் கல்லறை வரை அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் இன்னும் சரியாக விளக்கப்படவில்லை! ‘வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரைப் பிள்ளை, கடைசிவரை யார�ோ…’ என்ற பட்டினத்தாரின் கருத்துகள் மனித மாண்புக்கு எதிராக ஒலிப்பதை நாம் அறிந்தும் அறியாததுப�ோல் இருந்துவிடுகிற�ோம்.

கல்லறையும் கலாச்சாரமும்: கலாச்சார வெளிப்பாடுகள் காலம் கடந்து நம்மைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் வேர்கள். அவற்றை

 !

பூசிவிட்டுக் கிறித்தவர்களாகிய நாமும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிற�ோம் என்பது எவ்வளவு கீழ்மையானது என்பதை நம்மில் பலர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருஅவையும் இதைச் சகித்துக்கொண்டிருப்பதாகத்தான் உணர்கிற�ோம். சாதிக்கொரு கல்லறை என்று

அவ்வளவு எளிதாகப் பிடுங்கி எறிந்துவிட முடியாது. கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளையும் மதக்கோட்பாடுகளின் வெளிப்பாடுகளையும் அவ்வளவு எளிதாகப் பிரிக்கவும் முடியாது. அவை இரண்டும் ஒன்றோட�ொன்று கலந்து எது கலாச்சாரம், எது மதம் என்று அடையாளம் கண்டுக�ொள்ள



 2017  7


முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்துள்ளன. கல்லறைக் கலாச்சாரத்தில் நாம் கடைப்பிடிக்கும் சடங்குகள் எந்த மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்தவை என்பதையும், அதைப் பின்பற்றும் நமக்கு அதைப் பற்றிய புரிதல் உண்டா என்பதையும் அறிய, சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ப�ொருளுள்ள சடங்குகள் இருப்பின் அவற்றைக் கிறித்தவ எதிர்நோக்குக் க�ோட்பாட்டோடு இணைக்க முயலுவ�ோம். நாம் பின்பற்றும் சடங்குகள் ப�ொருளற்றவை எனில் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வோம். மூடப்பழக்கங்கள் இருப்பின் அவற்றைக் களைவ�ோம்.

பன்முக உரையாடலின் அவசியம்: கலாச்சாரத்திற்கும் மதக்கோட்பாடுகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பின் பன்முக உரையாடல் தேவையாகிறது. திருஅவையின் தலைவர்கள், மக்களின் பிரதிநிதிகள், கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நன்கு அறிந்து தெளிந்தவர்கள், ப�ொதுமக்கள் இவர்களுக்கிடையே நமது கிறித்தவ எதிர்நோக்குப் பற்றிய ஒரு நல்ல புரிதல் தேவை. தல ஆயர்கள் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

நாம் தரும் மரியாதை. இவற்றைக் கவனத்தில் க�ொள்ள வேண்டும். ‘தங்களது உயிர்ப்பிற்காகக் காத்திருக்கும் தூய ஆவியின் ஆலயங்கள் துயில்கொள்ளும் புனித பூமிதான் கல்லறைகள்’ என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அசுத்த ஆவிகள் குடிக�ொண்டிருக்கும் இடமாகக் கல்லறைகளைப் பார்த்து அச்சம் க�ொள்கின்ற நிலை, கிறித்துவ நம்பிக்கைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே நமது குழந்தைகளுக்கு இவற்றைப் படிப்பிக்க வேண்டும். இறப்பிற்கு இயேசு தந்த புதிய ப�ொருள், அவரது உயிர்ப்பில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கை, மறு வாழ்வு அல்லது நிறைவாழ்வு பற்றிய இறையியல் புரிதல் ஆகியன நமது அன்றாட வாழ்வின் பட்டறிவில் கலக்க வேண்டும். இறப்பை, அதன�ோடு இணைந்த சடங்குகளைக் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கைய�ோடு க�ொண்டாட வேண்டும். கல்லறை வரையில் கிறித்துவ எதிர்நோக்குப் பார்வையில் மனிதநேயம் காப்போம்.

முடிவுரை: ‘உயிர�ோடு இருப்பவர்களே கூரை வீடுகளில் வாழும்பொழுது இறந்துப�ோனவர்களுக்கு ஏன் ச�ொகுசான இடம்’ என்று கேட்பதில் நியாயம் உண்டு! ஆனால் கூரை வீடுகளில் வாழும் கிராம மக்கள் க�ோடிக்கணக்கில் பணம் திரட்டிக் க�ோவில்கள் கட்டும்போது கல்லறைகளைத் தூய்மையாகவும் அழகுறவும் பாதுகாக்கப் பணம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது! கல்லறைகளின் அவலநிலை நமது நம்பிக்கையின் ஆழமற்ற நிலையையும் மேல�ோட்டமான கிறித்தவ வாழ்வையும் காட்டும் அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டும்.

அன்பான தந்தாய் எம் செட்ரிக் ப�ௌட்டே, நீர் த�ொன் ப�ோஸ்கோ த�ோட்டத்தில் நூறாண்டு மணம் வீசி ப�ொன் ப�ோல ஒளிவீச இறையாசீர் பெற்றாயே! நின் தூய பணி வாழ்வு நெடுங்காலம் நனிவாழ்க!

உயிர்த்த இயேசுவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாகிய நாம் நம் கல்லறைகளின் சூழலை மாற்றி அமைத்தாக வேண்டும். கிறிஸ்துவில் நம்பிக்கைக் க�ொண்டுள்ள நமது உடலைத் தூய ஆவியாரின் ஆலயம் என்று அழைக்கின்றோம். கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட இருக்கும் இறந்தவரது உடல், தூய ஆவியாரின் ஆலயமெனில், அதற்கு நாம் தரும் மரியாதை, அதை அடக்கம் செய்யும் இடத்திற்கு

8

 2017 

தந்தை

செட்ரிக் ப�ௌட், ச.ச.












“தமிழர் திருநாள்… ‘நாம் தமிழர்’ ஐக்கிய இராச்சியம் தங்களை அன்போடு அழைக்கிறது... மண் வாசனைய�ோடு நம் கிராமங்களின் ப�ொங்கல் இலண்டன் மாநகரில்… ஸ்கைப் வழியில் அண்ணன் சீமான்…” என்ற காண�ொளி அழைப்பினை இணையத்தில் கண்டு இதயத்தில் மகிழ்ந்தேன். அந்நிய மண்ணில் அடியெடுத்து வைத்த பிறகு, அது ஏன�ோ எனக்குள்ளே இனம்புரியா தமிழ் உணர்வும், தாய்மண் பற்றும் அதிகரித்திருந்த அந்தத் தருணத்தில் இந்த அழைப்பு எனக்கு மகிழ்வினைத் தந்தது. மண்வாசனைய�ோடு கிராமத்துப் பாணியிலே ப�ொங்கல் வைத்து நம்மவர் மகிழும் அந்த மகிழ்விலே பங்கெடுக்க வேண்டும் என ஆசித்தேன். இன்னொரு புறம், அங்கே உரையாற்றவிருக்கும் அண்ணன் சீமான் அவர்களின் உரையினைக் கேட்க வேண்டும் என்ற ஆவல். அரசியலைப் பற்றிப் பேசுவதே தவறு என்று ஒதுங்கியே இருந்த எனக்குள் அரசியலைப் பற்றிய ஆர்வத்தையும், அரசியலைப் பற்றிய ஒரு மாற்றுப் பார்வையையும் இவரின் பேச்சுக்கள் வழங்கியுள்ளன என்பேன். இவரின் உணர்வுப்பூர்வமான ஆங்கிலம் கலவாத தமிழும், இயற்கை மீதான அக்கறையும், இளைய�ோர் மீதான பாசமும், இனம் காக்க வேண்டும் என்ற வேகமும் என்னை அதிகம் கவர்ந்துள்ளன.

சில மாதங்களில் எனக்குக் கிடைத்த ஓர் அரிய நட்பு, த�ோழர் ஜெனி. இலங்கையில் பிறந்த தமிழ் உறவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் சென்னையில் வளர்ந்தமையால் அவர் பேச்சிலே சென்னைத் தமிழ் வளர்ந்திருந்தது. உதவி என்று கேட்டாலே ஒதுங்கிடும் உறவுகள் மத்தியிலே, எனக்கு உதவிட ஆசிக்கும் ஓரு நல்ல உறவு ஜெனி. உரிமைய�ோடு உதவி கேட்கும் அளவுக்கு ஒரு நல்ல நட்பு. அந்நிய மண்ணைப் பற்றி அதிகம் அறியாது இருந்த என் த�ொடக்கக் காலங்களில் ஆறுதலாய் இருந்த ஓர் அருமையான மனிதர். “நிச்சயம் ப�ோயிட்டு வருவ�ோம். என்ன தேதி, எந்த இடத்தில் நடக்குதுன்னு பார்த்துச் ச�ொல்லுங்க” என்று கூறினார். நானும் இணையத்தில் தேடிக் கண்டறிந்து அவரிடம் தகவலைச் ச�ொன்னேன். “ஒண்ணும் சிரமம் இல்லை. கவலையேபடாதீங்க, ப�ோய்ப் ப�ொங்கல் சாப்பிட்டு வந்துருவ�ோம்” என்றார். அவரின் நல்மனதை எண்ணி அவரின் நட்பிற்காய் இறைவனுக்கு நன்றி நவின்று மகிழ்ந்தேன்.

இலண்டன் மாநகரில் நம் தமிழ் மக்கள் சாதியைக் கடந்து, மதத்தைக் கடந்து, தமிழர்களாய் இணைந்து நின்று க�ொண்டாடும் ப�ொங்கல் விழாவில் எப்படியாவது கலந்துக�ொள்ள வேண்டும் என்ற கனவ�ோடு காத்திருந்தேன். “நண்பா… நம்ம தமிழ் மக்கள் ப�ொங்கல் விழாக் க�ொண்டாடுறாங்களாமே... ப�ோயிட்டு வருவ�ோமா?” என்று என் த�ோழர் ஜெனிமன் அவர்களிடம் கேட்க, எப்போதும் ப�ோல், “நிச்சயமா ப�ோயிட்டு வருவ�ோம்” என உடனே ஒப்புக்கொண்டார். இலண்டன் வந்த

அன்று 2016ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி, தை மாதம் 2ஆம் நாள். காத்திருந்த அந்நாள் வரவே, என் த�ோழர் ஜெனி அவர்களை அழைத்து, “நண்பா…



 2017  9


நான் உங்களை எந்த இரயில் நிலையத்தில் சந்திக்க? ரெண்டு பேரும் சேர்ந்தே ‘பேன்ஸ்டட்’ ப�ோயிடலாம். நான் இதுவரை அங்க ப�ோனதே இல்ல…” எனச் ச�ொல்ல, “எனக்கும் தெரியாது வாங்க இருவரும் சேர்ந்து கண்டுபிடிப்போம். கூகுள் இருக்கப் பயமேன்…” என்று தைரியமாய்ச் ச�ொன்னவர். “ நாளைக்கு ர�ொம்ப குளிராய் இருக்கும். அதுனால கவனமா வாங்க…” என்றார். ஓரளவுக்கு இலண்டன் குளிரை அனுபவித்த நான், “நிச்சயமா… நண்பா, அதெல்லாம் சரியா வந்திடுவேன்” என்றேன். செல்லும் வழியிலே இரயிலில் பல தமிழ் உறவுகளைக் கண்டேன். இந்த அந்நிய கலாச்சாரத்தின் தாக்கத்தால் அவர்களிடம் பேச ஆசையிருந்தும் பேசாமல் தானுண்டு தன் வேலை உண்டு எனப் பார்த்தும் பார்க்காதது ப�ோல் பயணித்தேன்.

    நாங்கள் ஒரு வழியாய் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தோம். “எனக்குள்ளே ஓர் ஐயம், சரியான வழியில ப�ோற�ோமா… இல்ல… வழி மாறிப்போற�ோமானு தெரியலயே…” என ய�ோசித்தேன். என் எண்ணங்களை அறிந்த த�ோழர் ஜெனி, “என்ன த�ோழா, என்ன ய�ோசிக்கிறீங்க. கவலைப்படாதீங்க சரியான வழியில்தான் ப�ோற�ோம்” என்றார். என் த�ோழர் ச�ொன்னபடியே மூன்று அடுக்குக் குளிர் ஆடை அணிந்தும் கூட குளிர் க�ொடூரமாய் இருந்தது. ப�ொங்கல் விழா நடக்கும் இடத்தை மாலை வேளையில் அடைந்த நாங்கள் அங்கிருந்த த�ோரணங்களையும், ப�ொங்கல் பானைகளையும், ஜல்லிக்கட்டு எருதுகளையும் சுமந்த பதாகைகளையும் கண்டு பிரமித்துப் ப�ோன�ோம். “என்ன த�ோழா, உங்க ஊர்ல இருக்கிற உணர்வு இருக்கா?” என்று அவர் கேட்க, “ர�ொம்ப சிறப்பா இருக்கே த�ோழா. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே உள்ளே இன்னும் சிறப்பா இருக்கும். கண்டிப்பா நம்ம மக்கள் பலரைப் பார்க்கலாம்…” என்று ச�ொன்னவாறே சென்றோம்.

அவ்வப்போது நம் தமிழ்ப் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்த நம்மவரைக் காணும் ப�ோதெல்லாம், “இந்தக் குளிரிலும் நம் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்க நம் கலாச்சார உடைகளை அணிந்து பயணிக்கிறார்களே” என்று எண்ணி மகிழ்ந்தேன். நான் சேர வேண்டிய இடத்தைச் சற்றுத் தாமதமாக அடைந்ததும் அங்கும் இங்கும் அலைந்து, அலைபேசி வழியாக என் த�ோழரை அழைத்துச் சந்தித்தேன். “என்னாச்சு த�ோழா… ர�ொம்ப அலைய விட்டுட்டேனா?” என்றார். “ச்சே… ச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நீங்கதான் எனக்காக அலையிறீங்க…” என்றேன். “வாங்க நம்ம இன்னும் க�ொஞ்சம் தூரம் பஸ்ல ப�ோகணும். சரியான நேரத்துக்குப் ப�ோயிடலாம்னு நெனக்கிறேன்” என்று ச�ொன்னார்.

 2017 10 

விழா நடந்த பெரிய அரங்கத்திற்கு அருகிலே கரும்புகளைக் கட்டி அதன் நடுவிலே வரிசையாக பல பானைகளில் ப�ொங்கல் வைத்திருந்த தடயத்தை அங்கிருந்த அடுப்புகளைக் கண்டு அறிந்தேன். “என்ன நண்பா… வாகனங்களையெல்லாம் ஒண்ணும் காண�ோமே… இங்கதான் நடக்குதா?” என்று கேட்டேன். “வாங்க நண்பா அரங்கத்துக்குள்ள ப�ோய் பார்ப்போம்” என்றார். அரங்கத்தை அடைந்த எமக்கு அங்கே மிகப் பெரும் ஏமாற்றம். அரங்கத்தில் ஒரு சிலர் அவர்கள் அமைத்திருந்த ஒலிபெருக்கிகள், மின்விளக்குகள், நாற்காலிகள், இருக்கைகள் என அனைத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டிருந்தனர். “அடடா… ஆசையா வந்தோம். இங்க எல்லாம் முடிந்து எல்லாரும் கெளம்பிட்டாங்காளே… ச்சே…” என்று எண்ணி அரங்கத்தில் இருந்த ஒருவரிடம்




“அண்ணா… இங்க ப�ொங்கல் விழா இருக்குனு ச�ொன்னாங்களே…” என மெல்லிய குரலில் கேட்க, அவர் “நீங்கள் எவ்விடத்த இருந்து வாறீங்கள்? ஒரே குளிரா இருக்கு. ஹீட்டர் ஓன்ல இல்ல. எல்லாருக்கும் சரியான குளிர். அதால கெதியா வெளிக்கிட்டினம். ச�ோரி உங்களுக்குக் க�ொடுக்க எங்கிட்ட ப�ொங்கல் இல்லை… இதிலே க�ொஞ்சம் ச�ோறு இருக்கு, க�ொண்டு ப�ோங்கோ?” என்று இலங்கைத் தமிழ் வாசம் கலந்து அவர் ச�ொன்ன வார்த்தைகளிலே தமிழ் உறவுகளுக்கே உரிய விருந்தோம்பலின் சிறப்பை உணர்ந்தேன். “தமிழர் திருநாளைக் க�ொண்டாட வேண்டும், தமிழ் உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்று ஆவல�ோடு எதிர்பார்த்தவை நடக்கவில்லை” என்று வருந்துகையில் என் நண்பரின் நட்பின் மேன்மையை எண்ணி மகிழ்ந்தேன். நட்பிற்காக நாள் முழுதும் அலைந்து, அன்று மட்டுமன்றி என்றுமே தேவையென்று ச�ொல்கையில், தேடிவந்து உதவிடும் அவரின் உயரிய மனதை

“நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கைக் க�ொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்.”

எண்ணி மகிழ்ந்தவாறு வீடு திரும்புகையில் என் எண்ணமெல்லாம் என் நண்பரைப் பற்றியும் அவரின் நட்பைப் பற்றியுமே மேல�ோங்கியிருந்தது. நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிதான உலகில் நல்ல நட்புகள் நிலைப்பது உயரிய வரமே என உள்மனதில் உணர்ந்தேன். உணர்வோடு உடன் பயணித்து உளமார உரையாடி மகிழ்ந்த என் த�ோழரின் நட்பினை எண்ணி மகிழ்கையில் எனக்குள்ளே எழுந்த எண்ணமெல்லாம் நட்பு சிறந்தால்… நாளும் சிறப்பே… என்பதே. அன்றாட வாழ்வில் நல்ல நட்புகளை வளர்ப்பதும் அந்த நல்ல நட்புகளில் நிலைப்பதும் மனிதம் வளர்க்கும் மகத்தான செயலே என்பதை உணர்ந்தேன். நட்பு சிறந்தால்… நாளும் சிறப்பே… என்பதை அன்றாடம் உணர்ந்து வாழும் ப�ோது நம்மைப் பார்த்து அனைவரும் ச�ொல்வர் நட்பிலே சிறந்து நாளும் சிறந்திடும் “இதுவன்றோ மனிதம்” என்று. நல்ல நட்பிலே நிலைப்போம்; நாளும் பாரிலே சிறப்போம். நட்பின் மேன்மையை நாளும் உணர்த்திடும் நல்லத�ோர் மனிதம் வளர்ப்போம்.

ஓவியம் ச�ொல்லும் காவியம்

த�ொடக்க நூல் 4:7



 2017  11




13

  த�ொடக்க காலச் சலேசிய சக�ோதரரான இவர், இத்தாலியின் ரெக்கிய�ோ எமிலியா மாகாணத்தில், ப�ோரேட்டோ என்ற இடத்தில் 1880, அக்டோபர் 12ஆம் நாள் பிறந்தார். சிறு வயதிலேயே இவர் தாம் பிறந்த குடும்ப வறுமையின் காரணமாகக் கடுமையான தியாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 9 ஆம் அகவை முதலே விவசாயக் கூலி வேலைகள் செய்தார். பிழைப்புத் தேடி, இவரது குடும்பம், 1897இன் த�ொடக்கக் காலத்தில் அர்ஜன்டீனாவுக்குக் குடி பெயர்ந்தது. பாகியா பிளாங்கா என்ற இடத்தில் அக்குடும்பம் குடியமர்ந்த ப�ோது, சிறுவன் ஆர்த்திமிடிஸ், அவ்வூரின் பங்குத் தலத்திற்குச் சென்று வரலானார். சலேசியர்கள் அப்பங்குத் தலத்திற்குப் ப�ொறுப்பேற்றிருந்தார்கள். சலேசியச் சபையில் சேருமாறு அவர்கள் இவருக்கு ஆல�ோசனை வழங்கினார்கள். இறையழைத்தலை ஏற்றுக்கொண்ட இவரை ஆயர் ஜான் கலியேர�ோ இளந்துறவற மடத்தில் சேர்த்துக் க�ொண்டார். பெர்நால் துறவற மடத்தில் இவர் சேர்ந்தப�ோது இவருக்கு வயது 20. இவருக்குத் தரப்பட்ட ப�ொறுப்புகளுள், காச ந�ோயால் அவதியுற்று வந்த ஓர் இளங்குருவானவரைக் கவனித்துக் க�ொள்ளவேண்டும் என்பதும் ஒன்றாக இருந்தது. அப்பணியில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வந்தப�ோது, இவரும் காச ந�ோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக வியேத்மா என்ற இடத்திலிருந்த சான்ஜோஸே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரும் குருவானவருமான அருள்திரு எவாரிஸ்டோ கார�ோனே அடிகளார், இவரைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார். அவர�ோடு  2017 12 




சேர்ந்து தாம் குணம் பெற வேண்டுமென்று கிறிஸ்துவர்களின் சகாய அன்னையிடத்தில் வேண்டிக் க�ொண்டார். தாம் குணம் பெற்றால், தமது எஞ்சிய வாழ்நாட்களை ந�ோயுற்றோரின் சேவைக்காக அர்ப்பணிப்பதாக நேர்ந்து க�ொண்டார். அன்னையின் அருளால் குணமடைந்த இவர், தாம் வாக்களித்தபடியே ந�ோயுற்றோருக்கான பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடலானார். 1908ஆம் ஆண்டு, தமது நித்திய வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்ட ஆர்த்திமிடிஸ் சாத்தியை, சான்ஜோசே மருத்துவமனைக்குச் ச�ொந்தமான மருந்தகத்தைக் கவனித்துக்கொள்ளும் ப�ொறுப்பில் அமர்த்தினர். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மருத்துவமனை முழுவதும் இவரது ப�ொறுப்பின்கீழ் வந்தது. அப்போதிலிருந்து இவர்தம் புனிதத்துவத்திற்கான பயிற்சிக்களமாக அம்மருத்துவமனை திகழலாயிற்று. ந�ோயுற்றோருக்காக ஆர்த்திமிடிஸ் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் க�ொள்ளும் பணித்தலமாகவும் அஃது அமைந்தது. 1913ஆம் ஆண்டு உருவான புதிய மருத்துவமனைக் கட்டடத்தின் பின்னணியிலிருந்து இவர் கடுமையாக உழைத்தார். 1941இல் புதிதாக உருவான வியேத்மா மறைமாவட்டத் தலைமையகக் கட்டடத்தையமைக்க, அந்த மருத்துவமனை இடிக்கப்பட்டது. ஆர்த்திமிடிஸ் மனமுடையவில்லை. மறுபடியும் முயன்று மீண்டும் ஒரு ம ரு த் து வ ம ன ை யை க் கட்டியெழுப்பினார்.

யாரும் உதவி செய்யாத நிலையில் த�ொன் ப�ோஸ்கோவைப் ப�ோன்றே, இறைப்பராமரிப்பிலிருந்தே கட்டடப் பணிகள் முற்றுப்பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் பெற்றுக் க�ொண்டார். கடின உழைப்பின் காரணமாகப் புற்றுந�ோயால் பாதிக்கப்பட்டுத் தமது 70ஆம் வயதில் 1951, மார்ச் திங்கள் 15ஆம் நாள் ஆர்த்திமிடிஸ் சாத்தி இறைவனடிச் சேர்ந்தார். 2002, ஏப்ரல் 14ஆம் நாள், பாப்பரசர் 2ஆம் ஜான் பால் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். இவரது திரு உடலின் பாகங்கள் வியேத்மா சலேசிய ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

 2017  13








  நீங்கள் எல்லாரும் நல்ல உடல்நலம் பெற்றவர்களாய் இருப்பது குறித்து மகிழ்ச்சிய�ோடு கேள்விப்படும் நான், கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றேன். இறைவனைப் புண்படுத்துவதற்கும், ஊழலுக்கு உட்படுவதற்கும் இவ்வுலகில் நமக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளனவே என்று எண்ணும்போதெல்லாம், தகுதியற்ற எனது எளிய செபத்தில், உடல் சார்ந்த, மிகவும் குறிப்பாக, ஆன்மா சார்ந்த நிலைகளில் நீங்கள் நலமும் வளமும் பெற்றுத் திகழ்ந்திட அருளுமாறு இறைவனிடம் மன்றாட நான் மறப்பதில்லை. ஆ! உலகின் இத்தகைய நிலைமை பற்றிய எண்ணம், என்னைப் பெரிதும் வருத்துகின்றது. அதே நேரம், கசப்பான இச்சூழலே எனக்கொரு நல்ல பாடமாகவும் அமைகின்றது என்பேன். எப்படி எனில், கடவுள் என்னை இவ்வுலகிலிருந்து பிரித்தெடுத்து, தாம் தெரிந்துக�ொண்டோர் அனைவருக்காகவும் விண்ணுலகில் தயாரித்து வைத்துள்ளவற்றின் முன்னோட்டமாக விளங்குகின்ற இந்தத் தூய (சலேசிய) சபைக்கு என்னைக் க�ொண்டு வந்தமைக்கு இவ்வுலச் சூழலே காரணமாக இருந்தது என்பதாக நான் உணர்கின்றேன். நீங்கள் ஆசிக்கும் அனைத்து வரங்களையும் நன்மையே உருவான இறைவன் உங்களுக்கு அருள்வார் என நம்புகின்றேன். தூய அலாசியுஸ் விழாவான இன்றுவரையிலும், இனிவரும் நாட்களிலும், நான் பங்கு பெறும் நற்கருணை விருந்துகள் உட்பட, எனது செபங்கள் அனைத்தையும் உங்கள் கருத்துகளுக்காகவே ஒப்புக்கொடுக்கிறேன். இறையருளுக்காக இறைஞ்சுவதில் நீங்கள் அச்சப்படவ�ோ வெட்கப்படவ�ோ கூடாது. கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்; நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறீர்கள�ோ, அவ்வளவு அதிகமாகப் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில்

 2017 14 

அதிகம் கேட்கிற எவரும் அதிகம் பெற்றுக் க�ொள்கிறார்கள். குறைவாகக் கேட்கின்றவர்கள் குறைவாகவே பெற்றுக் க�ொள்கின்றனர். ஒன்றுமே கேட்காதவர்கள், ஒன்றையும் பெற்றுக்கொள்வதில்லை. நமதாண்டவர் இயேசுவே இதனைத் திருவாய்மலர்ந்துள்ளார். நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்ட இந்த அருள் வரங்கள் உங்கள் தகுதிக்காக அருளப்பட்டதல்ல. உங்கள் தகுதி என்பது ஒன்றுமில்லை. உங்களுக்குத் தகுதி உண்டு என நம்புவது பதிதம் (இறை மறுப்பு) ஆகும். இயேசுக் கிறிஸ்துவின் தகுதியினாலும், மிகவும் தூய மரியன்னையின் பரிந்துரையாலும், அவரது மாபெரும் திருத்தொண்டரான தூய அலாசீயசின் வேண்டுதலாலுமே இவை உங்களுக்கு அருளப் பெற்றன. இவ்விடத்தில், நீங்கள் எத்தகைய அருள் வரங்களை கேட்க வேண்டும் என்பதில் நான் குறுக்கிட விரும்பவில்லை. அதுபற்றி நீங்களே நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். இவ்வுலகில் நாமனைவரும் கடவுளை அன்பு செய்து, அவருக்கே ஊழியம் புரிவ�ோமாயின், மறு உலகில், முடிவில்லாக் காலத்திற்கும் அவர�ோடு மகிழ்ந்திருப்போம் என்ற ஒன்றை மட்டுமே உங்களுக்குக் கூற விழைகிறேன். ஓ! மறுபடியும் பிரிவ�ோம் என்ற அச்சமே இல்லாமல், அங்கே நாமனைவரும் ஒன்றாக இருப்போம் என்பது எத்துணை பெரிய இன்பம்! ஆம்! இந்த அருள்வரம் ஒன்றைத்தான் நீங்கள் உண்மையில் கேட்க வேண்டும். சில சமையம் சிலவற்றிற்காக நீங்கள் துன்புற நேர்ந்தால் ப�ொறுமையாக இருங்கள்! நமது பிரிய இயேசுவின் அன்புக்காக நாம் துன்புற்றோம் என்றால், வான்வீட்டில் அதற்கான வெகுமதியைப் பெற்றுக்கொள்வோம். இவ்வுலகத் துன்பங்கள் தற்காலிகமானவை, மறு உலக இன்பங்கள் நிரந்தரமானவை என்பதை நினைவில் இருத்துங்கள்!




 நமது அன்புத் த�ொன் ப�ோஸ்கோவின் அருமை அம்மாவும் அனைத்துச் சலேசியர்களின் மனம் கவர்ந்த மம்மாவுமான அருளாளர் மார்கரெட் ஒக்கியானா, தூரின் நகரில் நிம�ோனியாக் காய்ச்சலால் 1856, நவம்பர் 25ஆம் நாள் இறைவனடிச் சேர்ந்தார்கள். அப்போது அவருக்கு வயது 68. அவர் உயிர் நீத்த செய்தியறிந்த அனாதை இல்லத்து இளைஞர்கள் எல்லாரும் கண்ணீரும் கம்பலையுமாகக் கல்லறையைச் சூழ்ந்து நின்று கதறியழுதார்கள். தங்களின் ச�ொந்தத் தாயை இழந்துவிட்டது ப�ோலவே ஒவ்வொருவரும் உணர்ந்து துயரில் ஆழ்ந்தார்கள். கடந்தகாலச் சலேசிய வரலாறு நெடுகிலும் அக்கருணை வடிவம் ‘மம்மா’ என்றே பாசத்துடன் அழைக்கப்பட்டார், இனியும் அழைக்கப்படுவார். அவரது நினைவாக, நவம்பர் 25ஆம் நாள், சலேசியர்களது இறந்த பெற்றோர்களின் ஆன்ம இளைப்பாற்றியின் நினைவு நாளாகக் க�ொண்டாடப்படுகின்றது. அவர்களின் இறப்பின் நாளாக அல்லாமல், மண்ணுலகில் அவர்கள் நடத்திய புண்ணிய வாழ்வின் நினைவாகவும், தற்போது கடவுள�ோடு அவர்கள் ஒன்றித்திருக்கும் நித்திய

 வாழ்வின் க�ொண்டாட்டமாகவும் இந்தநாள் நினைவுகூரப்படுகின்றது. த�ொன் ப�ோஸ்கோவின் அம்மாவான மம்மா மார்கரெட், தம்முடைய மைந்தன் என்றுமே ஓர் ஏழ்மையான, தூய்மையான குருவாக விளங்க வேண்டுமென்று அறிவுறுத்தி வந்தார். மகன் த�ொடங்கிய ஏழை இளைஞருக்கான பணிகளில் தம்மை முதல் சலேசிய உடன் உழைப்பாளராக இணைத்துக் க�ொண்டார். அது முதல் ஆரட்டரி இளைஞர்கள் தங்களை முழுமையாக அன்பு செய்யவும் தங்களின் தேவைகளில் உதவவும் ஓர் அருமையான தாய் கிடைத்துவிட்டதாகக் குதூகலமுற்றனர். இவ்வன்பு அன்னை, தமது இறுதிமூச்சு வரை, இளைஞர்களுக்கு உணவு சமைத்தல், அவர்களின் உடைகளைத் துவைத்துச் சலவை செய்து தருதல், விடுதி வளாகத்தைச் சார்ந்த அனைத்துப் பணிச்சுமைகளையும் ஏற்று நடத்துதல் எனக் கடின உழைப்பில் தம்மை நாளும் கரைத்து வந்தார். அவர் எழுதப் படிக்கத் தெரியாதவரானாலும், த�ொன் ப�ோஸ்கோ என்ற மாபெரும் கல்வியாளரை அவரால் உருவாக்கித் தர முடிந்தது!

25

 

 2017  15


19





     1 “பிள்ளைகளே, நாம் ச�ொல்லிலும் பேச்சிலுமல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்” (1 ய�ோவான் 3:18). அப்போஸ்தலர் ய�ோவானின் இக்கருத்தைக் கிறிஸ்துவர் எவரும் அலட்சியம் செய்ய முடியாது. அன்புச் செயலுக்கு முன்னோடி என்று எதுவும் தேவையில்லை. குறிப்பாக, ஏழைகளை அன்பு செய்யும் ப�ோது, கிறிஸ்து இயேசு செய்தது ப�ோலச் செய்தலே சரியான வழியாக இருக்கும். இயேசுவின் அன்பு இரு பெரும் தூண்களாக உயர்ந்து நிற்கின்றன. “அவர்தான் முதலில் நம்மை அன்பு செய்தார்” (1 ய�ோவான் 4:19) என்பது ஒன்று. “கிறிஸ்து நமக்காகத்

தம் உயிரைக் க�ொடுத்ததனால் அன்பு இன்னதென்று அறிந்து க�ொண்டோம்” (1 ய�ோவான் 3:16) என்பது மற்றொன்று. இயேசு நம்மீது க�ொண்ட அன்பு நிபந்தனை இல்லாதது. பிரதிபலன் எதிர்பாராதது. ஆயினும் இயேசுவின் அன்பு எத்துணை ஆற்றல் வாய்ந்தது என்றால், அந்த அன்பைச் சுவைத்தவர்கள் அன்பினால் பற்றி எரிகிறார்கள். தங்களின் பலவீனங்களையும் பாவங்களையும் கடந்து சென்று, அந்த அன்புக்குப் பிரதியன்பு காட்டத் துடிக்கிறார்கள். ஏழை எளியவர்மேல் கருணையும் பரிவும் க�ொண்டு அவர்களைத் தங்களின் சக�ோதர, சக�ோதரிகளாக

,  2017 16 

 


ஏற்று, கருணைய�ோடும் பரிவ�ோடும் அவர்களுக்கு உதவுவதன் மூலம் தாங்கள் இயேசுவால் அன்பு செய்யப்பட்டதைத் திருப்பித் தருகிறார்கள். 2 “இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” (திருப்பாடல் 34:6) என்று திருப்பாடல் ஆசிரியர் பறைசாற்றுகிறார். ஏழையின் இந்தக் கூக்குரல் மீது, திருச்சபை த�ொடக்கக் கால முதலே கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகளுக்கு உதவும் பணிக்காக, அதில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் ப�ொருட்டு, ஏழு நபர்களைத் தெரிவு செய்யுமாறு பேதுரு பணித்தார் என்று வாசிக்கிற�ோம் (திருத்தூதர் பணி 6:3). இயேசுவின் சீடர்கள் என்றாலே ஏழைகளுக்கு உதவுபவர்கள் என்றுதான் ஆரம்பக் காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். “நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடைய�ோர் அவற்றை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்பப் பகிர்ந்தளித்தார்கள்” (திருத்தூதர் பணி 2:45) என்ற திருச்சபை வரலாற்றுச் செய்தியும் இதற்கு ஆதாரமாகவுள்ளது. ‘இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியன்று’ என்று நாம் நம்பலாம். இந்தப் பகிர்ந்தளிக்கும் செயல் காலந்தோறும் நடைமுறையாக்கப்பட்டுப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே திருத்தூதர் பணிகளின் ஆசிரியர் இதனைக் குறித்துள்ளார். “ஏழைகளின் தேவைகளில் அவர்களுக்கு உதவி செய்யாமல், வெறும்

வார்த்தைகளால் ப�ோதித்து, மந்திரித்து அனுப்புவது செயல் இல்லாத எதிர்நோக்கு” என்று யாக்கோபு கூறுவதையும் நாம் கவனத்தில் க�ொள்ள வேண்டும். “ஒரு சக�ோதரன் அல்லது சக�ோதரி ப�ோதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும் ப�ோது, அவர்கள் உடலுக்குத் தேவையான எவற்றையும் க�ொடாமல், உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ‘நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து க�ொள்ளுங்கள்; பசியாற்றிக் க�ொள்ளுங்கள்’ என்பார் என்றால், அதனால் பயன் என்ன?” (யாக்கோபு 2:15,16) என்று அவர் கேட்பது நம்மையும் பார்த்துத்தான். 3 அப்போஸ்தலர்களின் இந்த அறைகூவலைக் கிறிஸ்துவர்கள் மறந்திருந்த காலங்களும் உண்டு. ஆயினும், தூய ஆவியானவர் ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளங்களை எக்காலத்திலும் தூண்டி எழுப்பாமல் இருந்ததில்லை. கடந்த ஈராயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், வரலாற்று நூல்களில், கிறிஸ்துவர்கள் ஏழைகள�ோடு ஏழைகளாகத் தாழ்ந்து நின்று ஆதரவற்ற அவர்களின் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் க�ொண்டு வாழ்ந்த நிகழ்வுகள் பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளன என்பது வெள்ளிடை மலை. தூய பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்க்கை இதற்கோர் ஆணித்தரமான சான்றாகும். அவர் த�ொழுந�ோயருக்காகத் தான தர்மங்கள் செய்தத�ோடு

    .   

 2017  17


நின்றுவிடவில்லை. மாறாக, தாமும் ஒரு த�ொழுந�ோயாளராய், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்குப்புறத்திற்கே சென்று, அவர்கள�ோடு தங்கியிருந்து வாழவும் செய்தார். “நான் பாவத்தில் இருந்தப�ோது த�ொழுந�ோயாளர்களை ஏறெடுத்துப் பார்ப்பது என்பது எனக்கு மிகவும் கசப்பாக இருந்தது. ஆண்டவர் தாமே என்னைக் க�ொண்டுப�ோய் அவர்கள் நடுவே அமர்த்தினார். என் உருவில் அவர்களுக்கு இரக்கம் காட்டினார். அவர்களை விட்டு நான் பிரிய நேர்ந்த ப�ோது, முன்பு கசப்பாகத் த�ோன்றியது. இப்போது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் இனிப்பாக மாறியிருப்பதை உணர்ந்தேன்” என்று அவரே சான்று பகர்கின்றார்.

     ஏத�ோ சில நேரங்களில், நமது மனச்சான்றுக்கு அஞ்சியவர்களாய், ஏன�ோ தான�ோ என்று நாம் புரிகின்ற நற்செயல்களின் “பயனாளிகள்” என்பது ப�ோல் ஏழை எளிய�ோரை நாம் தாழ்வாக ந�ோக்குகிற�ோம். அவர்களின் இந்த நிலைமைக்கு நாம்தாம் காரணம் என்பதை வசதியாக மெய்யாகவே மறந்துவிடுகிற�ோம். இவ்வுண்மையை உணர்ந்தவர்களாய், ஏழை எளிய�ோரைத் த�ொட்டு அரவணைத்து, அவர்கள�ோடு நமக்குள்ளவற்றைப் பகிர்ந்துக�ொள்ளும் ப�ோது, நாம் ஆண்டவர் இயேசுவையே த�ொட்டு அரவணைப்பவர்களாகிற�ோம். ஏழைகளை உதாசீனப்படுத்தும்போது, நாம் இ யே சு வைத்தான் உதாசீனப்படுத்துகிற�ோம். புனித கிறிஸ்தோஸ்தம் அருளப்பர் இவ்வுண்மையை இன்னும் ஆழமாகப் புரியவைக்கிறார். “இயேசுவின் உடலை நீங்கள் கண்ணியப்படுத்த விரும்பினால், அது நிர்வாணமாக இருக்கும்போது ஏளனம் செய்யாதீர்கள். நற்கருணைப் பேழையைப் பட்டுப் பீதாம்பரத்தால் அலங்கரித்துவிட்டு, க�ோயிலுக்கு வெளியே ப�ோனதும், நிர்வாணமாய், குளிரால் வருந்தும் இன்னொரு கிறிஸ்துவைக்  2017 18 

கண்டு க�ொள்ளாமல் ப�ோகிறீர்கள்” என்று அவர் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார். 4 ஏழ்மை ஓர் அருள், இயேசுவை அவரது ச�ொந்த வறுமைக்கோலத்தில் பின்செல்வதற்கான அழைப்பு அது என்பதனை மறந்துவிட வேண்டாம். விண்ணரசு ஏழைகளுக்கு உரியது என்று மத்தேயுவிலும் (5:3) லூக்காவிலும் (6:20) கூறப்பட்டுள்ளது, ஏழைகளுக்கு நமது உடைமைகளைப் பகிர்ந்தளிப்பவர்களாய், ஏழைகள�ோடு நம்மை நாம் அடையாளப்படுத்திக் க�ொள்ளும்போது, இயேசுவ�ோடு, அவருக்குப் பின்னும், வலப்புறத்திலும், இடப்புறத்திலும் பயணிப்பவர்களாகின்றோம். ஏழ்மையை விரும்புவது என்பது, பணத்தை, பதவியை, செல்வச் செழிப்பை அடையவேண்டுமென்ற நமது பழைய ந�ோக்கத்திலிருந்து மாறுபட்டு, நமது குறிக்கோளை இயேசுவை ந�ோக்கித் திருப்புவதாகும். தூய பிரான்சிஸ் அசிசியும் அதைத்தான் செய்தார். “ஏழைகளை உற்று ந�ோக்கி, உதவிபுரிவதால் மட்டுமே இயேசுவைப் பின்தொடர முடியும்” என்பதை உணர்ந்து, உலகுக்கும் உணர்த்தினார். 5 இன்றைய சந்தைப் ப�ொருளாதார உலகில் வறுமையின் முகத்தைச் சரியாக அடையாளம் காண்பது கடினமாகத்தான் உள்ளது. வறுமைக்கு ஒரு முகமன்று, பல்வேறு முகங்கள் உள்ளன என்பதுதான் உண்மை. துன்புறுதல், ஓரங்கட்டப்படுதல், நசுக்கப்படுதல், வன்கொடுமை, சித்திரவதை, சிறைவாசம், ப�ோர், சுதந்திரமின்மை, மானமிழப்பு, அறியாமை, எழுத்தறிவின்மை, சிகிச்சை இன்மை, வேலையின்மை, பரத்தமை, அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு உட்படுதல், அகதியாக்கப்படுதல்,




கட்டாயமாக நாடுகடத்தப்படுதல், எதுவுமே இல்லாத நிலை என, நாம் அன்றாடம் சந்திக்கும் எத்தனைய�ோ முகங்கள் அதற்குண்டு. அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுதல், எந்திரமயமாக்கல், அதிகாரம், பண பலம் ஆகிய பற்பல அரக்கர்களின் பிடியில் சிக்குண்டிருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எனப் பல உருவங்கள் அதற்குண்டு. இதில் க�ொடுமை என்னவென்றால், சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுப் ப�ொருள் ஈட்டுபவர்களின் கைகளிலேயே நாட்டின் ச�ொத்து முடங்கி விடுகிற ப�ோது, ஏழைகள், உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு, வறுமை தனது க�ொடுங்கோலாட்சியை உலக முழுவதிலுமாக விரிவுப்படுத்தி நிற்கிறது என்பதாம். இல்லாதவர்களின் வறுமை நிலையானது இருப்பவர்களின் வறுமையால் மேலும் மேலும் ம�ோசமடைகின்றது. வறுமையை ஒழிக்க முன்வராத ஆட்சியாளரின் ப�ொறுப்பின்மை என்னும் வறுமையால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இருப்பவர்களின் கல்நெஞ்ச வறுமையால் இல்லாதவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் நிலையில் வசதிபடைத்தோர் மேலும் சலுகைகளைத் தேடியலைகிறார்கள். நமது குறுகிய மனப்பான்மை என்னும் க�ொடிய வறுமையால் வசதி வாய்ப்புகளில் ஏழை எளியவர்கள் பங்கெடுக்க முடியாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள். நமது சாதி, இன, மத, நாடு பற்றிய அடிப்படைக் க�ோட்பாடு என்னும் சார்பு வெறி வறுமையால் மனிதநேயத்தின் ஊற்றுக்கண்களை முற்றிலுமாக அடைத்துவிட்டோம். உடலை வருத்திப் பாடுபட்டு உழைத்து உற்பத்தியைப் பெருக்குவ�ோரைச் சிறுமைப்படுத்தி, உடலுழைப்பை அறியாத நாம் பெருமையடைகிற�ோம். “நற்செய்தி அறிவித்தல் தருகின்ற உரிமையின்படி வறிய�ோர் அனைவரும் திருச்சபையின் முதன்மைக் குடிமக்கள்” என்று பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் அறிக்கை செய்தார். அதன்படி நாடு, ம�ொழி, இனத் தடைகளைத் தாண்டி. ஏழையர்க்கு உதவ விரியும் கரங்கள் பேறு பெற்றவை. “ஆகுமெனில்,” “ஆனால்”, “ஒருவேளை” என்பன ப�ோன்ற சாக்குப்போக்குகளைக் கைவிட்டு, கைமாறு கருதாமல் ஏழைகளுக்கு உதவும் கரங்கள் பேறு பெற்றவை. உண்மையில் தங்களின் ச�ொந்த சக�ோதர சக�ோதரிகளுக்காகக்

கடவுளின் அருள் வரங்களை கரங்கள் இவைகளே!

அடைந்து

தரும்

6 இரக்கத்தின் ஜுபிலி ஆண்டினை முடித்து வைத்த கைய�ோடு, உலக ஏழையர் தினத்தை, திருச்சபையிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். கிறிஸ்துவச் சமூகங்கள் கிறிஸ்துவால் த�ொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பிறர் அன்புப் பணிகளில் முழு உள்ளத்தோடு ஈடுபடட்டும்! ஏழைகளைத் தனிப்பட்ட அன்போடு அரவணைக்கட்டும்! இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் நமது பணி அப்போதுதான் முழுமை பெறும். ஏழைகள் நமது விண்ணகத் தந்தையால் தமது சாயலாகப் படைக்கப்பட்டு அன்பு செய்யப்படுபவர்கள். இவர்களை, நிராகரிக்கப்படவேண்டியவர்களாய், வீணாய்ப் ப�ோனவர்களாய்க் கருதுகின்ற தீய கலாச்சாரத்தை விலக்கி, இவர்களை ஆர்வத்தோடு ந�ோக்குகின்ற தூய கலாச்சாரத்திற்கு நாம் மாறவேண்டுமென்று “இந்த நாள்” நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவன் வானத்தையும் பூமியையும் எல்லாருக்குமாகத்தான் படைத்தார். பூமியில் வரப்புகளை அமைத்து, சுவர்களை எழுப்பி, வேலிகளை உயர்த்தி அதன் வளங்களை ஒருசில வலியவர்களே உடைமையாக்கிக் க�ொண்டுள்ள நிலைமை மாறவேண்டும்.

  7 ‘உலக ஏழையர் நாள்’ இவ்வாண்டு நவம்பர் 19 ஆக அமைகின்றது. சாதாரண காலங்களில் ஆண்டின் 33ஆம் ஞாயிறன்று அது க�ொண்டாடப்பெறும். ஏழையர் தினத்தன்று திருப்பலிக்கு வசதி வாய்ப்பற்ற வறிய�ோரைச் சிறப்பு விருந்தினர்களாகப் பங்குபெறச் செய்வோம். அவர்கள்பால் நமக்குள்ள நட்புணர்வையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்திட நமக்குள்ளவற்றை அவர்கள�ோடு பகிர்ந்து க�ொள்வேம். திருப்பலி என்பது, மாசற்ற செம்மறியானவர், ஏழையாய், நிர்வாணியாய், ஆடை களையப்பட்டு, அனைத்துமே பறிக்கப்பட்டு, க�ொல்கொதா உச்சியில், சிலுவைய�ோடு சேர்த்து அறையப்பட்டு, உலக மீட்புக்காகத் தம்மையே பலியாகத் தந்ததன் நினைவாகும். இயேசுவின் இந்த ஏழமையே அவரது



 2017  19


செபத்தை ஒருமையில் அமைக்காமல் “நாங்கள்”, “எங்கள்” என்று பன்மையில் அமைத்திருப்பது கவனத்தில் க�ொள்ளத்தக்கது. நமது அன்றாட உணவை நாம் கூட்டாகச் சேர்ந்து கடவுளை மன்றாடிப் பெறுவதும், அதை அனைவர�ோடும், குறிப்பாக, ஏழைகள�ோடு பகிர்ந்து க�ொள்வதும், ஒரு கூட்டு முயற்சியாக இருத்தல் வேண்டும் என்பதை இச்செபம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

அரசின் உண்மையான வெளிப்பாடாகும். அவரது அரசு ஏழையரின் அரசு என்பதை நினைவில் க�ொண்டு, ஏழை எளிய�ோரை இறையரசின் முதன்மைக் குடிமக்களாக அடையாளம் காண்போம். இயேசுவின் உயிர்ப்பு ஏழைகளின் மறுவாழ்வு என்பதை உணர்ந்து க�ொள்வோம். த�ொடக்க நூல் (18:3)இல், ஆப்ரகாம் வழிப்போக்கர்களை ஆர்வத்தோடு அழைத்து விருந்தளித்ததுப�ோல, எபிரேயர் 13:2இல் விருந்து உபசரிப்புக் கலாச்சாரம் நமது கிறிஸ்துவப் பண்பாடாக வலியுறுத்தப்படுவது ப�ோல, ஏழை எளிய�ோரை மனித உருவில் இருக்கும் கடவுளாகப் பாவித்து. நமது இல்லங்களில் அவர்களை வரவேற்போம். “மிகச் சிறிய�ோராகிய என் சக�ோதர சக�ோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று திருவாய் மலர்ந்த இயேசுவின் ச�ொற்கள் நமது நெஞ்சங்களை விட்டு நீங்காதிருக்கட்டும். 8 “விண்ணிலுள்ள எங்கள் தந்தையே….” என்கிற நமதாண்டவர் கற்றுக்கொடுத்த செபம் ஏழையருக்கான செபம் என்பதை நாம் மறத்தலாகாது. “எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்” என்று நாம் செபிக்கும் ப�ொழுது, உணவில்லாத ஏழைகளின் கூக்குரல்கள் நமது குரல�ோடு சேர்ந்து ஒலிப்பது நமது காதுகளில் எதிர�ொலிக்கின்றன. ஆண்டவர் இந்தச்

 2017 20 

9 என் சக�ோதர ஆயர்கள், குருக்கள் மற்றும் டீக்கன் மார்களையும், திருநிலைப் படுத்தப்பட்டுள்ள மற்ற நபர்கள், மன்றங்கள், இயக்கங்கள், தன்னார்வத் த�ொண்டர்கள் ஆகிய அனைவரையும் நான் இந்த நாளில் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். “நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஏழை எளிய�ோருக்குப் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருங்கள். ‘ஏழையர் தினம்’ என்ற இந்த நாளின் செயல்கள், ஒரு நாள�ோடு முடிந்துவிடாமல், இப்பணிகள் நமது சமூக மரபாக மாற வேண்டும் என்றும், நற்செய்திப் பணியின் அர்த்தத்தைப் பறை சாற்றும் வழிமுறையாகத் திகழ வேண்டும் என்றும் உளமார விரும்புகிறேன். நற்செய்தி உண்மைகளின் ஆழத்தை அறிந்துக�ொள்ள, ஏழையர் நலம் காக்கும் பணி த�ொடரட்டும்! ஏழைகள் நமது பிரச்சினைகள் அல்லர்; மாறாக, நற்செய்தியின் சாராம்சங்களை உள்வாங்கி, நாம் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அடித்தளங்கள் அவர்கள் என்பதை இந்த நாள் நமக்கு வெளிச்சம் ப�ோட்டுக் காட்டட்டும்.” வத்திக்கானிலிருந்து, தூய பதுவை அந்தோனியாரின் நினைவாக

பிரான்சிஸ் ஜுன் 13, 2017


Strenna

 2018



     ! 

 2017  21


அசத்தலான சந்திப்பு:- இயேசு அவரைப் பார்த்து, “கடவுளது க�ொடை எது என்பதையும், குடிக்கத் தண்ணீர் க�ொடும் எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால், நீரே அவரிடம் கேட்டிருப்பீர், அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் க�ொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் ம�ொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது; அப்படியிருக்க, வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் அனைவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் க�ொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் தாகம் எடுக்காது” என்றார். அப்பெண் அவரை ந�ோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குத் தாரும்….” என்றார் (ய�ோவான் 4:10-15). ஞானத்தின் முதன்மை ஆசானும் கலந்துரையாடலின் நிபுணருமான இயேசு, மக்கள�ோடு த�ொடர்பு க�ொள்ளும்போது, ச�ொற்கள் வழங்கவல்ல அனைத்து ஆற்றல்களையும், சைகைகள், முகபாவங்கள் என உரையாடலின் அனைத்துப் பரிமாணங்களையும் பயன்படுத்துகிறார்; விவாதிக்கிறார்; விளக்கமளிக்கிறார்; கதைகள் ச�ொல்லுகிறார். பேசுபவரின் உலகத்தோடு ஒன்றித்து, அதில் தாமும் கவனம் செலுத்துகிறார். ஆல�ோசனைகள் வழங்குகிறார். உறுதிபடக் கூறுகிறார். எதிர்வினையைத் தூண்டுகிறார். அந்தச் சமாரியப் பெண், தனது எதார்த்த நிலையை எதிர்கொள்ளவும், ‘எனக்குக் கணவன் இல்லை’ என்ற, அவளது மழுப்பலான பதில் உட்பட, தனது தர்மசங்கடமான பேச்சில் அவள் கவனம் செலுத்தவும் அவர் உதவுகிறார். த�ொடக்கத்தில் அவளின் எதிர்ப்புணர்வை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. முயற்சியைக் கைவிடவில்லை. அவள் தனது குழப்பங்களைச் சரி செய்யவும், தன்னை நேர்மையான முறையில் வெளிப்படுத்தவும் இயேசுவின் உரையாடல் அவளுக்கு உதவுகிறது. அவரது புதிர் நிறைந்த, அச்சமூட்டும் பதில்கள், அவளை அவருக்கு அருகில் வரச் செய்கின்றன. அவள் நம்பிக்கையில் வளர்கிறாள். தனது வியப்பிற்கிடையே தான் திருந்திவாழ உதவக்கூடியது யாதென அறிய விழைகிறாள். தம்மோடு பேசுபவரை நிராகரித்து, அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்து, ஏமாற்றம் விளைவிப்பவர் அல்லர் நம் இயேசு. உடைந்த உள்ளத்தார்க்கு உகந்தது எதுவ�ோ அதனையே முதன்மையாகத் தேடுபவராதலின், அந்த சமாரியப் பெண்ணிடம் தனிப்பட்ட நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் இயேசு வெற்றி காண்கிறார். குறை கூறுவதற்குப் பதிலாக, விவாதித்து ஆல�ோசனை வழங்குகிறார். அவரது ம�ொழிநடையும் ச� ொ ற ்க ளு ம் உ ரை ய ா டு ப வ ரி ன் உள்ளத்தை ந�ோக்கியனவாக உள்ளன. சமாரியப் பெண்ணோடு அவர் நிகழ்த்திய உரையாடல் அவரது ஆளுமைக்கு எடுத்துக்காட்டு. அதாவது, “தாம் ஒருவரே அவளை  2017 22 

  


மாற்றக் கூடியவர்” என்ற உண்மையை வெளியிடுவதில் அவர் அவசரம் காட்டவில்லை. மாறாக, தனித்தன்மை வாய்ந்ததும், முற்றிலும் வேறானதும், உயர்ந்ததுமான, வாழ்வு தரும் தண்ணீரின் மீது அவளது ஆவலைத் தூண்டியெழுப்பும் விதமாக, அவர் அமைதியாகப் பேசுகிறார். மானுட மக்கள் குறித்த புரிதலில் தலைசிறந்த அறிஞரான இயேசு, தம்மோடு உரையாடுபவரின் உள்ளார்ந்த உலகம் குறித்து முழுமையான அக்கறையும் கவனமும் செலுத்துபவராக விளங்குகிறார். அவர்களின் இதயங்களை அவர் வாசிக்கிறார். கற்றறிகிறார்; இதயங்களுக்கு விளக்கமளிக்க வல்லவராகவும் அவர் திகழ்கிறார். சரியான தீர்ப்பு என்ற க�ொடையை நாம் புரிந்திருப்பதன் இன்றியமையாமையை அவரது இந்த அணுகுமுறை நமக்கு உணர்த்துகின்றது. திருச்சபையின் பாரம்பரிய வரலாற்றில் நீதியான தீர்ப்பு வழங்குதல் என்ற நடைமுறை, சில சிக்கலான சூழல்களிலும் கூடக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கால மாறுபாடுகளின் அடையாளங்கள் குறித்தும், நல்லொழுக்கம், தீய�ொழுக்கம் பற்றிய நடைமுறை குறித்தும், வாழ்க்கையில் இயேசுவின் பாதையில் முற்றவும் முழுமையாக நடப்பது எவ்வாறு என்பது குறித்தும், ஒருவர், இல்லற துறவற நெறிகளில் தமக்கான இறையழைத்தலை எங்ஙனம் தெரிந்துக�ொள்வது என்பது குறித்தும் சரியான தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பிரத்தியேகச் சூழல்களில் நீதியான தீர்ப்பு வழங்குவதற்கு உதவியாக, ஆண்டவர�ோடு உரையாடுவதும், தூய ஆவியாரின் குரலை உற்றுக் கேட்டறிவதும் இன்றியமையாதன. எங்ஙனமாயினும், இப்பிரச்சினைகளில் சரியான கண்ணோட்டம் க�ொள்வதற்குச் சில அடிப்படையான க�ோட்பாடுகள் பற்றிய முன்மதியும் முன் அனுபவமும் தேவையாக உள்ளன.

முதற்கண் திருமணமாகாத இளைஞரும் மணத்தம்பதியரும் தங்கள் வாழ்வின் அர்த்தத்தை அறிந்துள்ளனரா? சிறப்பாக, வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தெரிந்துள்ளனரா? என்பது பற்றிய கண்ணோட்டத்திற்கு அவர்களை நெறிப்படுத்தலாம். அப்போது தங்கள் வாழ்வில் ஏத�ோ குறையுள்ளது என்பது அவர்களுக்குத் தெளிவாகலாம். மணமாகாதவர் அல்லது தம்பதியினர் தனியாகவ�ோ, கூட்டாகவ�ோ, தங்கள் வாழ்வு சரியான வழியில் ப�ோகவில்லை என்பதை உணர்வார்களேயானால், அப்போது, அவர்களுக்குள் அகன்றத�ொரு வெற்றிடம் த�ோன்றக்கூடும். இதன் விளைவாக ஆழ்ந்த மனக்குழப்பத்திற்கும், மனப்போராட்டத்திற்கும் அவர்கள் உள்ளாக நேரலாம். நாம் வாழும் இன்றைய சமுதாயம் நம்மைப் புறத்தோற்றத்தில் மட்டும் வாழக் கற்பிக்கிறது. கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்ட நபரைப்போல், குற்றங்குறைகளே இல்லாதவராக, வயதானவராகத் த�ோன்றவும், தங்கள் உண்மை வயதைக் காட்டிக்கொள்ளவும் முடியாமல், கிழமாவதைக் கசப்பாக உணர்பவர்களாக வாழச் செய்கிறது. இத்தகைய�ோர்க்குப் புறத்தோற்ற வாழ்வைவிடவும் ஆழமான, அர்த்தமுள்ள, உள்ளார்ந்த வாழ்வின் பெருமையை உணர்த்தும் ப�ொருட்டு “வழிகாட்டுக் கல்வி” அல்லது “உளவியல் கல்வி” அளிப்பது தேவையாகின்றது. இது ப�ோன்ற சூழல்கள், சரியாகத் தீர்ப்பிடுதலை ந�ோக்கி ஓடுபவரை வழிநடத்துவதில், ஊக்குவித்துத் துணை நிற்பனவாகும். பாப்பரசர் பிரான்சிஸ், ஆயர்கள் மாநாட்டுக்கான தயாரிப்புக் குறித்த தமது சுற்றுமடலில் கூறியுள்ளதுப�ோல், “இனம் காணுதல், விளக்கமளித்தல், தெரிவு செய்தல் என்ற முப்பரிமாணங்களின் படிநிலைகளில், சரியாகத் தீர்ப்பிடுதல்” என்னும் செயல் முறையை ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்லுதல் வேண்டும்.



 2017  23


இனம் காணுதல்: ஆவியானவர் தரும் உண்மையை உணரும் பான்மையால் இது கைகூடும். இதில் நான்கு கூறுகள் அமைந்துள்ளன. வாழ்வின் உயர்வான மற்றும் தாழ்வான தருணங்கள் பற்றிய தெளிவு அடைதல். உள்ளார்ந்த, உண்மையான மனப்போராட்டங்கள் குறித்த தெளிவு பெறுதல். ஒருவரிடம் இருப்பதான உணர்வுப்பூர்வமான, அனைத்துப் பண்புகளாலும் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் அறியும்படி அவருக்கு உதவி செய்தல். அவரது அனுபவத்திற்கும் பிரச்சினைகளுக்கும் பெயர் சூட்டுதல் அல்லது நமக்குள் நாம் எதிர்கொள்வதான பிரச்சினைக்குப் பெயரிடுதல். நடைமுறை அனுபவத்திற்கும் தமது மனத்தின் ஆழத்தில் இருப்பதான எண்ணங்களுக்கும் இடையிலுள்ள ஒருமைப்பாட்டை அல்லது வேறுபாட்டைச் சுவைபட இனம் காணல். இவை யாவும் ஒருவர் ஆண்டவரின் வார்த்தையைத் தியானிக்கும்போதுதான் வெளிச்சத்துக்கு வரும். ஒருவரது கணிக்கும் ஆற்றலை, மயான அமைதி

குறித்தும் அஞ்சாத அவரது துணிச்சலை, மையப் பகுதிக்குக் க�ொண்டுவருதல் இன்றியமையாததாகும். தனிப்பட்ட முதிர்ச்சியை ந�ோக்கிய ஒருவரது பயணத்தின் அனைத்துப் பகுதிகளையும் பதிவு செய்தல் ஆகியன இதில் அடங்கும்.

விளக்கமளித்தல்: இதன் ப�ொருள், ஒருவரது உள்ளத்தைக் ஊடுருவி நிற்பதான உணர்வு வழியாகக் கடவுளின் ஆவி விடுக்கும் அழைப்பினைப் புரிந்துக�ொள்ளுதல் எனலாம். ஒருவர் தம்மைக் குறித்துத் தன்னிலை விளக்கமளித்தல் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான செயல்முறையாகும். ப�ொறுமை, விழிப்புணர்வு, ஓரளவுக்கு நல்ல அறிவு ஆகியன இதற்குத் தேவை. சமூக, உளவியல் ரீதியான பாதிப்புகள் இதில் உள்ளன என்பதையும் கருத்தில் க�ொள்ள வேண்டும். விளக்கமளித்தலில் உண்மை நிலையை எதிர்கொள்வது அவசியம். அதே சமயம், சிறிதளவில் நிறைவடைந்து விடுவத�ோ, எளிதான ஒன்றை மேற்கொண்டு ஒழுகுதல�ோ கூடாது. ஒருவர் தாம் பெற்றுள்ள க�ொடைகள், தரப்பட்டுள்ள வாய்ப்புகள் அனைத்தையும் முழுமையாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். உண்மையில் கூற வேண்டுமாயின், பின்வரும் நிபந்தனைகள் இல்லாமல், ‘விளக்கமளித்தல்’ என்ற செயல்முறை

 2017 24 




ஓர் இறைப்பற்றாளரிடம�ோ, கிறிஸ்துவரிடம�ோ ஏற்பட வாய்ப்பில்லை. அஃதாவது, இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்தது ப�ோல, கடவுள�ோடு உண்மையான உரையாடல் ஏற்படுதல் வேண்டும். அந்தச் சமாரியப் பெண்ணிடம் ஏற்பட்டதுப�ோல் நிகழவிருக்கும் மாற்றம் சிறிதே ஆயினும் அதனைப் புறக்கணியாமல், ஒரு நபர் தம்மிடமுள்ள அனைத்துத் திறமைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுதல் வேண்டும். அந்தச் சமாரியப் பெண்ணுக்கு, எல்லாம் அறிந்தவரான இயேசு தாமே உதவ முன்வந்ததுப�ோல், விளக்கமளித்தலில் தூய ஆவியாரின் ஆல�ோசனையைக் கூர்ந்து கவனித்த, அனுபவம் முதிர்ந்த ஒருவரின் உதவியை நாட வேண்டும்.

தெரிவு செய்தல்: அடுத்து, தனிப்பட்ட ஓர் இளைஞர�ோ, மனைவி அல்லது கணவர�ோ தீர்மானம் எடுப்பதற்கான நேரம் உருவாகின்றது. தீர்மானம் எடுப்பதில் அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ சுதந்திரத்தையும், ப�ொறுப்பையும் கைக்கொள்ளுதல் அவசியம். எடுத்துக்காட்டாக, அந்தச் சமாரியப் பெண், இயேசுவ�ோடு ஏற்பட்ட சந்திப்பை நிராகரித்துவிட்டு, எதுவும் நடக்காததுப�ோல், தனது பழைய வாழ்வையே த�ொடர்ந்திருக்கலாம். அல்லது, தன்னை வியப்பிலாழ்த்தியவரும், தனது அகவாழ்வின் ஆழத்தைத் த�ொட்டவருமான இயேசுவைச் சந்திக்கும்படித் தனது ஊர் மக்களை அழைத்து வருமளவுக்கு, அவரிடத்தில் ஈடுபாடு க�ொண்டவளாய், மனமாற்றமடையத் தீர்மானிக்கலாம்.

தூய ஆவியார் தரும் வெளிச்சத்தில் எடுக்கப்படும் சரியான தீர்மானம் எதுவும், அந்நபர் விடுதலை பெறவும், அக, புற வாழ்வில் ஒருமைப்பாடு ஏற்படவும் உதவுகின்றது. இதன் காரணமாக, ஒரு தனி நபரை, குறிப்பாக இளைஞர்களை, சுதந்திரமாகவும், ப�ொறுப்புள்ள வகையிலும் சரியானத�ொரு தீர்மானம் எடுக்கும்படி நெறிப்படுத்துவது நமது கடைசிக் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். எதிர்நோக்குப் பயணத்திலும் சரி, தனிப்பட்ட வளர்ச்சியிலும் சரி, அல்லது இறையழைத்தல் துறையில் பணி மேற்கொள்ளலாம் என்ற நமது கற்பனையிலும் சரி, தீர்மானித்தல் என்பது, தீவிரமான ஒன்றாகும் என்பதைக் கருத்தில் க�ொள்ளுதல் வேண்டும். “தீமையினின்று காப்பாற்றப்பட வேண்டியதான மனச்சான்றை மாற்றியமைப்பதாகப் பாசாங்கு செய்யாமல், அதனைப் பாதுகாத்திட உதவும் கருவிதான் சரியான தீர்ப்பு” என்று பாப்பரசர் கூறுகிறார். ஏனெனில், நாம் உண்மையில் மனச்சான்றை உருவாக்கப் பணிக்கப்பட்டுள்ளோமேயன்றி, அதனை மாற்றியமைத்திட அன்று. சமாரியப் பெண்ணோடு உரையாடிய இயேசு இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உண்மையைக் கண்டறிய அவள் மேற்கொண்ட பயணத்திலும், தனது உள்ளார்ந்த வாழ்க்கையைக் கண்டடைய வேண்டும் என்ற அவளது தேடலிலும் இயேசு உடன் பயணித்ததுப�ோல, இளைஞர�ோடு நாம் பயணிக்க வேண்டும். (த�ொடரும்)

 2017  25


ஞாயிறு மறையுரைகள் 

12 நவம்பர்

ப�ொதுக்காலம் 32ஆம் ஞாயிறு சா.ஞா.6:12-16, 1தெச.4:13-18, மத்.25:1-133

பத்துக் கன்னியர் உவமை எண்ணெய் மூலம் கலங்கரை விளக்கு எரிந்த காலத்தில், கப்பல் அதிகாரி ஒருவர் தமக்குத் தரப்பட்ட எண்ணெயைக் க�ொண்டு, அக்கலங்கரை விளக்ககை எரியச் செய்து வந்தார். அவர் தாராள மனத்தவராதலின் பக்கத்துக் கிராம மக்கள் அவரிடம் வந்து ஓசியில் எண்ணெய் பெற்றுச் சென்றார்கள். எண்ணெய், இங்ஙனம் தானம் வழங்கியதால் தீர்ந்துப�ோனது. அந்த நேரம் பார்த்துப் புயலடிக்கவே, இருட்டில் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று ம�ோதி விபத்துக்குள்ளாயின. அந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இயேசுவின் பத்துக் கன்னியர் உவமைய�ோடு இக்கதை ஓரளவு ப�ொருந்துகிறது. தமக்குத் தரப்பட்ட கடமையை மறந்து, தாராளத்தில் கவனம் செலுத்திய அந்தக் கப்பல் அதிகாரியும், மணமகனை எதிர்கொள்ளத் தயாராகமல், கடமை தவறிய மதியீனக் கன்னியர் ஐவரும் ஒப்பிடத்தக்கவர்களே. நமது வழக்கத்தில் பெண் அழைப்பு நடப்பதுப�ோல, யூத, இசுலாமிய சமூகங்களில் மாப்பிள்ளை அழைப்போடு திருமணம் த�ொடங்கும். இங்கே மணமகன் என்பவர் இயேசு. கன்னியர் பதின்மரும்

 2017 26 

திருமண நிகழ்வின் முன்னோடிகள். எண்ணெய், இயேசுவின் மணவிழாவில் கலந்து க�ொள்வதற்கான அருள் வாழ்வுநிலை. அருள்வாழ்வில் கவனம் செலுத்தாமல், ஏன�ோ தான�ோ என்று வந்திருந்த மதியில்லாக் கன்னியர் ஐவரும் புறம்பேத் தள்ளுண்டனர். நமக்கும் இஃத�ோர் எச்சரிக்கை.

19 நவம்பர்

ப�ொதுக்காலம் 33ஆம் ஞாயிறு நீதி.31:10-31, 1தெச.5:1-6, மத்.25:14-30

மகா ச�ோம்பேறிகளுக்கான ப�ோட்டியில் முதல் மூன்று ச�ோம்பேறிகளுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றாவதாக வந்தவன், முதல் பரிசு பெறச் சென்றவனிடம், “என் பரிசையும் சேர்த்து வாங்கி வா” என்று கூறினான். ப�ோட்டிக் குழுவினர், அவனது ச�ோம்பேறித்தனத்தை மெச்சி, முதற்பரிசை அவனுக்கே வழங்கினர். நற்செய்தியில், ஒரு தாலந்து பெற்றவனுக்கே ச�ோம்பேறித்தனத்திற்கான முதற்பரிசை வழங்க வேண்டும் எனலாம். ‘தாலந்தோன்’ என்ற கிரேக்கச் ச�ொல்லுக்குச் சிறப்பான மனநிலை என்றுதான் ப�ொருள். நற்செய்தியில் அது பணம் என்ற ப�ொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. மத்தேயுவில், முதலாளி தமது வேலையாட்களுள் மூவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப முறையே 5,2,1 எனத் தலந்துகளைத் தந்து வியாபாரம் செய்யச் ச�ொல்கிறார். லூக்காவில் இது ‘மினார்’ எனப்படுகிறது. மினார் என்பது ‘திராக்மா’ (ஒரு நாளைய கூலித்தொகை) இங்கே உயர்குடிமகன் தமது மூன்று பணியாளருக்கும் தலா பத்துத் தினார்கள் க�ொடுத்து, வணிகம் செய்யச் ச�ொல்கிறார். மத்தேயுவில் முதலிரு பணியாளரும் தமக்குத் தரப்பட்ட தலந்துகளை இரட்டிப்பாக்கினர். லூக்காவில் முதலிரு பணியாளர்களும் தத்தம் திறமைக்கேற்ப முறையே பத்தை இருபதாக்கியும், பத்தைப் பதினந்தாக்கியும் தலைவரிடம் ஒப்படைத்தனர். மூன்றாம் பணியாள்,




மத்தேயுவில்

தாம்

பெற்ற

தலேந்தை

நிலத்தில்

26 நவம்பர்

ப�ொதுக்காலம் 34ஆம் ஞாயிறு எசேக்.34:11-17, 1க�ொரி.15:20-26,2, மத்.25:31-46

கிறிஸ்து அரசர் பெருவிழா

புதைத்து வைத்தான். லூக்காவில் துணியில் முடிந்து வைத்தான். மத்தேயுவில், மூன்றாம் ஊழியன், வாணிகம் செய்யாதத�ோடு, முதல் ப�ோட்ட முதலாளியை, ‘கடின உள்ளத்தினர், விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர், தூவாத இடத்தில் விளைச்சலைச் சேகரிப்பவர்’, என்று மூன்று குற்றச் சாட்டுகளைச் சுமத்துகிறான். லூக்காவில் மூன்றாம் ஊழியன், முதலாளியை, கண்டிப்புள்ளவர், வைக்காத இடத்தில் எடுக்கிறவர், விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்று, ஏறத்தாழ அதே மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறிப் பழிக்கிறான். கடவுள் நம்மை வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு திறமைகள�ோடு படைக்கிறார். நமக்குத் தரப்படுகின்ற வாய்ப்புகளையும் திறமைகளையும் பயன்படுத்தி முன்னேற அழைக்கின்றார். கடவுள் சித்தத்தைப் புரிந்து, தமக்குத் தரப்பட்ட வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி உழைத்தவர்களே தூய�ோர் பட்டத்துடன் விண்ணரசில் அமர்த்தப் படுகின்றனர். பயன்படுத்தாமலும் உழைக்காமலும் ச�ோம்பேறிகளாக இருந்தத�ோடு, கடவுளைப் பழித்தவர்களை அவர் நரகத்தில் தள்ளுகிறார்.

இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்த யூதத் தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுள் ஒன்று, “இவன் தானே மெசியாவாகிய அரசன் என்று ச�ொல்லிக் க�ொள்கிறான் (லூக் 23:2) என்பதாம். இயேசுவின் த�ோற்றத்தைப் பார்த்த பிலாத் அவர் யூதர்களின் அரசராகத்தான் இருக்க வேண்டும். என்று ஒப்புக்கொள்கிறான். அதன் காரணமாக, “யூதரின் அரசரை உங்களுக்கு நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்றும், “யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?” என்றும் கேட்கிறான் (மாற்கு 15:9,12). இயேசுவை அறைந்த சிலுவையின் உச்சியில், “நசரேனாகிய இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதிடக் கட்டளை இட்டான். இது அவரை அவமதித்த செயலாகும். சீசருக்கு எதிராக அரசராக விரும்பும் எவருக்கும் சிலுவை மரணம்தான் கதி என்பதான எச்சரிக்கையாகவும் அவன் அதனைக் கருதினான். யூத மக்கள் கடவுளுக்கு, ஆட்சி செய்பவர் என்ற ப�ொருளில் முதன் முதலில் ஆண்டவர் என்றும் அவர் பெயரிட்டார்கள். (த�ொ.நூ 4:26) விவிலியம் நெடுகிலும் கடவுளை ஆண்டவர் என்றே அழைத்தார்கள். இயேசு தம்மை “அரியணையில் வீற்றிருக்கும் அரசர்” (மத் 25:34) என்று கூறுகிறார். திருவெளிப்பாட்டில் “கடவுளும் ஆட்டுக்குட்டியுமானவர் வீற்றிருக்கும் அரியணை” (தி.வெ.22:3) என்று கூறப்பட்டுள்ளது. “அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லம் ஆண்டவர்” என்ற பெயர் அவரது ஆடையிலும் த�ொடையிலும் எழுதப்பட்டிருந்தது (தி.வெ) 19:16) என்று மேலும் அந்நூலில் எழுதப்பட்டுள்ளது. ஆயினும் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த ப�ோது தம்மை அரசராகக் காட்டிக்கொள்ளவில்லை. தமது விண்ணகத்தந்தைக்கு மாண்பு சேர்க்கவே அவர் வந்தார். தந்தையின் விண்ணரசை இம்மண்ணில் மலரச் செய்வதே அவரது பணியாக இருந்தது. “உமது அரசு வருக!” என்று மக்களைச் செபிக்கும்படிக் கற்பித்தார். இயேசு க�ொண்டு வந்த தமது தந்தையின் விண்ணரசு எத்தகையது என்பதனையே மத்தேயு நற்செய்தி விவரிக்கின்றது. முதல் வாசகத்தில் எசேக்கியேல், “இறைவனின் விண்ணரசில் கடவுள் நல்லாயராகவும், குடிகள்



 2017  27


அவரது மந்தைகளாகவும் இருப்பார்கள்” என்பதை உருவகமாகக் கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், “எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை ஆட்சியில் இருக்கும் கிறிஸ்து இறுதியில் ஆட்சியைத் தம்முடைய தந்தையிடம் ஒப்படைப்பார்” என்று கூறுகிறார். இயேசு அரசர்க்கெல்லாம் அரசர் என்பதைப் பவுலடியார் பிலிப்பையருக்கு எழுதிய திருமுகத்தில், “இயேசுவின் திருப்பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலக�ோர் அனைவரும் மண்டியிடுவர்” என்று எழுதுகிறார்.

03

டிசம்பர்

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு எசா.63:16–17;64:1,3-8, 1க�ொரி.1:3-9, மாற்கு13:33-37

வயதான மூதாட்டி ஒருவர் விறகு சுமை சுமந்து வந்தார். வழிப்போக்கன் ஒருவன், அந்த விறகைத் தானே சுமந்து சென்று அவரது வீட்டில் க�ொண்டுப�ோய்ச் சேர்த்தான். மூதாட்டி அவனுக்கு உணவு வழங்கி, அடிக்கடி வந்துப�ோகச் ச�ொன்னார். ஒரு நாள் அந்த வழிப்போக்கன், அவரிடம், “பாட்டி! உங்கள் ஆசை என்ன?” என்று வினவ, அதற்கு அவர், “இந்த நாட்டு இளவரசனை நான் காணவேண்டும்” என்றார். “நான்தான் பாட்டி இந்த நாட்டு இளவரசன். மாறுவேடத்தில் திரிகிறேன்” என்று அவன் கூறிய பதிலைக் கேட்டு, மூதாட்டி ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.

வருகை பற்றியும் சிந்திக்க அழைக்கப்படுகிற�ோம். அதற்காக நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று க�ோரப்படுகிற�ோம். இன்றைய வாசகங்கள் விழிப்பாய் இருப்பது பற்றிக் கூறுகின்றன. விழிப்பாய் இருத்தல் என்றாலும், காத்திருத்தல் என்றாலும் ஒன்றுதான். முதல் வாசகத்தில் பாவம் செய்த இஸ்ராயேல் மக்கள் விடுதலைப் பெற விரும்பி, இறைவனது வருகைக்காக் காத்திருக்கும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் எசாயா. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார். கிறிஸ்துவின் நட்புறவில் தந்தையாம் கடவுள் நமக்கு அழைப்பு விடுப்பதை நினைவூட்டுகிறார். இந்த அழைப்பின்படி, இயேசு பிறப்பு விழாவில் பங்கு பெறக் காத்திருந்து, செப, தபங்களில் ஈடுபட்டால், இறைப் பிரசன்னத்தை உணர்ந்துக�ொள்ள முடியும். நற்செய்தியில், நெடும்பயணம் சென்ற தலைவர் இன்ன நேரத்தில் வருவர் என்பதறியாத நிலையிலும் பணியாள் எந்நேரமும் விழிப்பாக, அவரது வருகைகாகத் தயார் நிலையில் காத்திருப்பதுப�ோல், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைகாகக் காத்திருக்கப் பணிக்கப்பட்டுள்ளார் என நம்புகின்றேன்.

1875

11 நவம்பர்

2017

ஒருவேளை கடவுள் நம் மத்தியில் அந்த இளவரசன் ப�ோல் பல்வேறு உருவங்களில் நம்மோடு பழகி, நமக்கு உதவி வரலாம். நம்மோடு அன்பாக இருப்பவர்களில் நாம் கடவுளை அடையாளம் காண முயல வேண்டும். திருவருகைக் காலங்களில் இயேசுவின் பிறப்பிற்காக நம்மைத் தயாரிக்கும் ப�ோது, அவரது இரண்டாம்  2017 28 




 

 ""  '' நவம்பர்

2017  2017



 2017  29




  தெய்வ பயத்துடன் வாழ்ந்த கிறிஸ்துவர் ஒருவர் திடீரென்று ஒருநாள் மரித்துப்போனார். பரல�ோக வாசலை அவரது ஆன்மா நெருங்கியப�ோது, அது பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டு “என்ன செய்வது? யாரைக் கேட்பது?” என்று நினைத்துக்கொண்டிருக்கும் ப�ோது, அங்கு வந்த பேதுரு, “ஏன் தயங்குகிறாய்? இரகசிய வார்த்தையைச் ச�ொன்னால் ப�ோதுமே, கதவு தானாகவே திறந்துவிடுமே, இது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்குக் கிறிஸ்துவர், “இரகசிய வார்த்தையா? அதுபற்றி கேள்விப்பட்டதேயில்லையே!” என்றார்.

நான்

       “அப்படியானால் நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் ச�ொல்லி 50 மார்க்குகளைப் பெற்றால் ப�ோதும், நீங்கள் உள்ளே வந்துவிடலாம்!” என்றார் பேதுரு. இங்கேயும் “டெஸ்டா? சரி கேளுங்கள்!” என்றார் கிறிஸ்துவர் சிறிது தயக்கத்துடன். “விண்ணுலகிற்கு வர உமக்கு என்ன தகுதியுள்ளது?” “நான் பரம்பரைக் கிறிஸ்துவன், எல்லா அருட்சாதனங்களையும் பெற்றிருக்கிறேன்!” “நல்லது, இதற்கு உமக்கு 10 மார்க்குகள் உண்டு.  2017 30 

இன்னும் என்ன தகுதியுண்டு?” “தவறாமல் க�ோவிலுக்குச் சென்று ஜெபிக்கிறேன். ஓரளவு தர்மமும் செய்கிறேன்!” “நல்லதுதான், இதற்கு 10 மார்க்குள் தருகிறேன்!” “பத்துக் கற்பனைக்கு செய்ததேயில்லை!”

எதிராகப்

பாவம்

“இதற்கும் 10 மார்க்குகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கூட்டிப் பார்த்தாலும், 30 மார்க்குகள் மட்டும்தான் வருகிறது. நீங்கள் ‘பாஸாக’வில்லை. ஆகையால் உள்ளே வரமுடியாது!” என்றார் பேதுரு. பதறிப்போன கிறிஸ்துவர், “உலகில் நான் வாழ்ந்தப�ோது இறைவனின் இரக்கத்தை நம்பியே வாழ்ந்தேன். இப்போதும், அவரது, இரக்கத்தை நம்பியே நிற்கிறேன்!” என்றார். இதைச் ச�ொன்னவுடனேயே திறந்து க�ொண்டது!

விண்ணகக்

கதவு

“இறைவனின் இரக்கமென்று இப்போது ச�ொன்னாயே, இதுதாம்பா அந்த இரகசிய வார்த்தை. நல்ல கள்ளன் கூட இதைத் தெரிந்து வைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டான். உனக்கு இது தெரியாமல் ப�ோனதெப்படி?” என்று பேதுரு கேட்டதாகக் கூறுவார்கள். இது ஒரு கற்பனை நிகழ்ச்சியானாலும், இதில் பல உண்மைகள் இருப்பதை நாம் காண முடியும். “நம்மில் பலர், கல்வாரியில் நமதாண்டவர், நம் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி மீட்டுவிட்டார்; நாம் செய்யும் பாவங்களுக்குப் பாவ அறிக்கை செய்தாலே ப�ோதுமானதென்று, பிரிவினை சபையாரைப் ப�ோலத் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிற�ோம். தலையான பாவங்கள் எதுவும் நாம் செய்யவில்லையெனக் கவலையின்றியும் இருந்து விடுகிற�ோம். ஆனால்

 


  

நம்மையறியாமலே, தலையான பாவங்களுக்கு இணையான பாவங்களை, துணிகரமாகச் செய்துக் க�ொண்டிருப்பதை அறியாமலிருக்கிற�ோம்.” உதாரணமாக, “ஒருவன் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தாலே, அவன் விபச்சாரம் செய்தாயிற்று” என்று மத். 5:27லும், “கலகம் விளைவிப்பது பில்லி சூனியத்திற்கு இணையென்றும், கீழ்ப்படியாத முரட்டாட்டம், சிலை வழிபாட்டுப் பாவத்திற்கு இணையென்றும்,” 1 சாமு. 15:22லும் எழுதப்பட்டுள்ளது!” “வாசலில் கிடந்த ஏழை லாசரை அசட்டை செய்த செல்வந்தன், பாதாளத்திற்குத் தள்ளப்பட்ட உவமை”யை நமதாண்டவரே நமக்குக் கூறியிருக்கிறார் (லூக். 16:91). மேலும் “பாவத்திற்குத் தண்டனை நரகம் என்றும் அங்கே ஆன்மாக்களைத் தின்னும் புழுக்கள் சாகாது, நெருப்பும் அவியாது”, என்றும் மார்க் 9:48இல் கூறியதை நாம் மறந்துவிடக்கூடாது. இதைப்பற்றி யாரும் அதிகமாகப் ப�ோதிப்பதுமில்லை. நாமும், அறிந்துக�ொள்ள ஆர்வம் காட்டுவதுமில்லை.

தந்தை செயலிழந்து ப�ோனார். மனமுடைந்த நிலையில், அவர் தம் ச�ொத்துக்களையும், தாம் பாதுகாத்து வந்த ஏராளமான கலைநயமிக்க ப�ொருட்களையும், ஏழைகளுக்குக் க�ொடுத்துவிடத் தீர்மானம் செய்து, எல்லாவற்றையும் ஏலக்கடைக்காரரிடம் ஒப்படைத்தார். ஏலம் த�ொடங்கிய நேரத்தில் அங்கு வந்த பெண் ஒருத்தி, தம்மைச் ‘சான்ரா’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் மரித்த சாமுவேலின் த�ோழியென்றும், அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலியென்றும் கூறி, தம் ச�ோகத்தை வெளிப்படுத்தினார். ஏலம் ஆரம்பமானது. முதலில் மரித்த சாமுவேலின் புகைப்படம் ஏலத்திற்கு வந்தது!

‘கிறிஸ்துமஸ்’ நமக்குச் ச�ொல்லும் செய்தி என்ன?

இதற்குச் சந்தை மதிப்பு எதுவுமே இல்லாத காரணத்தால், யாருமே ஏலம் கேட்க முன்வரவில்லை. மாறாகச் சிலர், இது ‘ஜூலியஸ் சீசர்’ படம் என்று கேலியும், கிண்டலுமாகப் பேசினார்கள்.

“அமெரிக்க இராணுவத்தில் உயர்ந்த பதவியிலமர்ந்து பணியாற்றி வந்த தம் ஒரே மகன் சாமுவேல், தீவிரவாதிகளால் க�ொலை செய்யப்பட்டான்” என்ற செய்தியைக் கேட்டவுடன், அந்தப் பணக்காரத்

அப்போது சான்ரா ஓடிவந்து, “இதை நான் வாங்கிக்கொள்கிறேன்!” என்றார். படத்தை வேறு யாருமே ஏலம் கேட்காத நிலையில், படம் ரூ.1000க்கு ஏலம் ப�ோனதாகக் கூறி, அவளிடம் ஒப்படைக்கப்பட்டது.



 2017  31


அத�ோடு, ஏலம் முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது! அதைக் கேட்டவுடன் “இது என்ன ஏமாற்று வேலை?” என்று பலரும் கத்தினார்கள். காரணம் கேட்டு, சிலர் கலகத்திலும் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள்: “எழுதப்பட்ட உயிலின்படியும், உரிமையாளரின், விருப்பப்படியும், யார், மகன் சாமுவேலின் படத்தை விரும்பி வாங்கிக் க�ொள்கிறார்கள�ோ, அவர்களே மற்ற எல்லாச் ச�ொத்துக்களுக்கும் உரிமையாளராகி விடுகின்றனர். படத்தைச் சான்ரா, வாங்கிக் க�ொண்ட காரணத்தால், எல்லாப் ப�ொருட்களும், ச�ொத்துக்களும் அவருக்கே உரிமையாகிவிட்டன. அதன் காரணமாகத்தான், மேலும் எங்களால் ஏலம் விட முடியவில்லை” என்று கூறினார்களாம். ஆனால் நீங்களும், நானும் சான்ராவைவிட அதிர்ஷ்டசாலிகள், பாக்கியம் பெற்றவர்கள், எப்படித் தெரியுமா? நம் தந்தையாம் கடவுளின் விருப்பப்படி, யார், யார் தம் மகன் இயேசுவை அன்புகூர்ந்து, விசுவசிக்கிறார்கள�ோ, அவர்கள் அத்துணைப்பேரும் கடவுளுடைய பிள்ளைகளாகும்படி உரிமை தந்திருக்கிறாரல்லவா? (ய�ோவான் 1:12).

    “இறைமகனான இயேசு. எவரும் காணக்கூடாத கடவுளின் உண்மையான சாயல்” என்று 1 க�ொல�ோ. 1:15 இல் படிக்கிற�ோமல்லவா, அந்தச் சாயலை, வடிவத்தை, நாம் ஏலக்கடையில் அல்ல, நாம் பெற்ற ஞானஸ்நானத்தின் வழியாக, நம் உள்ளத்தில் பெற்றுவிட்டோம். இதன் வழியாக நாம் விண்ணக மகிமையையும், வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும், பரிசாகப் பெற்றிருக்கிற�ோம்.  2017 32 

இந்த மகிழ்ச்சியைத்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவிலும் க�ொண்டாடி வருகிற�ோம். 1917ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் ப�ோர்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் மூன்று குழந்தைகளுக்குக் காட்சி தந்த மரியன்னை, நரகத்தின் க�ொடுமையையும், அதில் விழும் எண்ணற்ற பாவிகளையும், அவர்கள் படும் துன்பங்களையும் அவர்களுக்குக் காட்டி, பாவிகள் மனம் திரும்பும்படி, அவர்களுக்காக ஜெபம் தபம், தர்மம் செய்யும்படி கேட்டதையும் நாமறிவ�ோம். மரித்த சில, புனிதர்கள், பரல�ோகத்தைப் பற்றியும், உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும், தங்களின் நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கு விவரித்துக் கூறியிருக்கின்றனர். பலர் மரித்த பின்பு, மீண்டும் உயிர்பெற்று வந்து, இதைப் பற்றி பேசி எச்சரித்திருக்கின்றனர் (மத். 27:52-53). 693 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த திரிதெம் என்ற செல்வந்தர் திடீரென்று மரித்துப்போனார். அவரை அடக்கம் செய்ய முற்பட்டப�ோது, அவருக்கு மீண்டும் உயிர் வந்துவிட்டதாம்! மரித்துப்போனவர் எழுந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து மனைவியும், பிள்ளைகளும் அஞ்சி ஓடிவிட்டார்களாம். ஆனால், அவர் எழுந்து நேராக ஆலயத்திற்குச் சென்று பல மணிநேரம் அமர்ந்து ஜெபித்துவிட்டு, வீட்டுக்கு வந்து, தம் ச�ொத்துக்கள் அனைத்தையும், மனைவி, மக்கள், மற்றும் ஏழைகளுக்குப் பகிர்ந்து க�ொடுத்துவிட்டு, துறவியாக வாழப் புறப்பட்டாராம். இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து நாட்டு மன்னன், மரித்து உயிர்த்தவரை நேரில் பார்த்து, அவருக்கு என்ன நடந்தது? என்னென்ன அவர் கண்டார் என்று அறிந்துக�ொள்ள அவரை வரவழைத்தாராம். கூடவே மறைமாவட்ட ஆயரையும், பங்குத் தந்தை எம்ஜில் என்பவரையும் அழைத்து வந்தனர். திரிதெம் தாம் இறந்தவுடன் கண்ட காட்சிகளையும் அவர்களுக்கு விவரித்தாராம். இறந்தவுடன், ஒளி வீசும் ஆடைகளை அணிந்திருந்த, அழகிய த�ோற்றம் க�ொண்ட ஒரு இளைஞரின் முன் நிற்பதாக உணர்ந்தாராம். அவரது ஆணையின்படி, ஒரு தூதன் அவரைப் பெரிய பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றாராம். அங்கே, ஒரு பகுதியில்




துன்ப நாட்களைக் குறைத்துவிடும். முழுமையாகத் தூய்மை பெற்றவுடன் இவர்கள் விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்!” என வான தூதர் கூறினாராம். இருதியாக, அவர் கண்ட காட்சி நரகமாம்! பிரமாண்டமான கிணறு வடிவம் ஒன்று, எரிமலையைப் ப�ோல நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்ததாம். த�ொட்டிகளில் குப்பையைக் க�ொட்டுவதைப்போல, எண்ண முடியாத ஆன்மாக்கள், க�ொத்துக் க�ொத்தாக, துறவிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள், ஆண்கள், பெண்கள் என அதனுள் விழுந்து க�ொண்டிருந்தனராம். இப்படிச் ச�ொன்ன எல்லா விபரங்களையும், பங்குத் தந்தை எம்ஜில் குறிப்பெடுத்து அப்போது வாழ்ந்த புனிதர் பீட் என்பவரிடம் பகிர்ந்து க�ொண்டாராம். அவரும் தாம் எழுதிய “ஆங்கில நாட்டுத் திருச்சபை வரலாறு” என்ற நூலில் இவைகளையெல்லாம் எழுதி வெளியிட்டாராம். துறவியாக வாழ்ந்த செல்வந்தர் திரிதெம் புனிதராக வாழ்ந்து புனிதராக மரித்த காரணத்தால், அவருக்குத் திருச்சபை புனிதர் பட்டம் தந்து, செப்டம்பர் முதல் நாளன்று அவருக்கு விழா எடுத்துச் சிறப்பிக்கிறது.

பெரும் நெருப்பும், மறு பகுதியில் பயங்கர பனிப்பொழிவும் பனிப்பாறையுமாக இருந்ததாம். பல ஆன்மாக்கள் நெருப்பின் வெப்பத்தைத் தாளமுடியாமல், பனிப்பாறையை ந�ோக்கி ஓடிவருவதும், பனியின் க�ொடுமைத் தாளமுடியாமல், மீண்டும் வெப்பத்தை ந�ோக்கி ஓடுவதுமாக இருந்தனராம். அவர்களின் நிலை பரிதாபமாக இருந்ததாம். “மரிக்கும் தருவாயில், மீட்புப் பெற்றவர்கள் இவர்கள்! உலகில் தாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, தூய்மை பெறும் வரையில் இங்கே இருப்பார்கள்! பூமியில் இவர்களுக்காகச் செய்யப்படும் ஜெபம், திருப்பலி, தர்மம், இவர்களின்

இப்படியாக மரணத்திற்குப் பின்பு என்ன நடக்குமென்பது இறைவார்த்தையின் வழியாகவும் மரியன்னை தந்த காட்சிகளில் ச�ொல்லப்பட்ட விபரங்கள் வழியாகவும், மரித்த புனிதர்களின் சாட்சிகள் மூலமும் உலகில் வாழும் நமக்கு அறிவிக்கப்படுகிறது. இவையனைத்தையும் அறிந்த பின்பும், “இறைவார்த்தைக்கும், திருச்சபைக்கும் செவிசாய்க்காதவர்கள், இறந்த ஒருவன் எழுந்து வந்து கூறினாலும் நம்பப் ப�ோவதில்லை!” என்று நமதாண்டவர் கூறியதுப�ோல (லூக். 16:27) நாமும் இறந்துவிடப் ப�ோகிற�ோமா? அல்லது, திருந்தி வாழப் ப�ோகிற�ோமா? முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.



 2017  33


“2015ஆம் ஆண்டுக்கும், 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான், கிறிஸ்தவர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்” என்று, உலகளாவிய கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது. “நசுக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகவும் ம�ோசமடைந்து, பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் நடவடிக்கைகளால், சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் 75 விழுக்காட்டினரும், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவர்களில் பாதிப் பேரும்

நாடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். நைஜீரியாவில் ப�ோக்கோ ஹராம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தும் அட்டூழியங்களால், ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர், 200 ஆலயங்கள் வரை சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 15 ஆயிரம் சிறார் தஙகள் பெற்றோரை இழந்துள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு

சீனாவில், திருஅவை அதிகாரிகள், அரசு அதிகாரிகளால் த�ொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர், எரிட்ரியா, வட க�ொரியா ப�ோன்ற சர்வாதிகார நாடுகளிலும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் க�ொண்ட பாகிஸ்தான் ப�ோன்ற நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (வத்திக்கான் வான�ொலி)

பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். - உர�ோமையர் 6:14

ஓவியம் ச�ொல்லும் காவியம்

 2017 34 




                      "'! "'

  20172017   35 35


Date of Publication: First week of every month. Reg. No. TN/CCN/373/15-17 & WPP. No. TN/PMG(CCR)/WPP-398-15-17. Registrar News in India No. 33652/78. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 06.11.2017

 2017  2017  36 36 

If undelivered, kindly return to Salesian Seithi Malar, 26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 10

சலேசிய செய்தி மலர் - November 2017  
சலேசிய செய்தி மலர் - November 2017  

Happy Reading

Advertisement